3. நவிலனின் கோதையானாள்
ராணி, “என்னடா ஏதோ அவங்க இஷ்டத்துக்கு அடிச்சி விடுறாங்க
கார்த்திகேயன் சாம்பசிவத்தை பார்க்க உண்மையை தான் சொல்லுறாங்க ராணி அந்த கம்பெனி இவங்களது தான் என்றதும் ராணியின் முகத்தில் அனல் அடிக்க ஆரம்பித்து இருந்தது அந்த அனலோ சாம்பசிவத்தை நோக்கி தான் பாய இருந்தது.
ஆனால் அனல் அடித்ததின் காரணம் என்னவோ எப்படி இவர் நம்ம பொண்ணுக்கு இந்த சம்பந்தத்தை பேசல என்பது போல் பார்க்க அதை புரிந்து தான் இன்று வரை இந்த சம்பந்தத்தை பற்றி எதுவும் சொல்லவே இல்லை.
ராணி முணுமுணுப்பாய் உங்க பையனுக்கு பார்த்த பொண்ணை பத்தி எல்லா விஷயமும் தெரிஞ்சு தானே வந்து இருக்கீங்க?
மங்கை, “ அம்மாடி எல்லாம் நாங்க பேசி முடிச்சிட்டோம் இன்னைக்கு பூ வச்சு மோதிரம் போட்டு உறுதி பண்ண தான் வந்தோம் அதோட கல்யாண தேதி கூட முடிவு பண்ணிட்டு தான் இங்க வந்ததே என்ன அம்சா நான் சொல்லுறது..
சரி தான் மங்க..
என்ன அம்சா ஏற்கனவே இவங்களை உனக்கு தெரியுமா?
இல்ல அண்ணி அவங்க பக்கத்தில் பொண்ணு கேட்டு வரும் போது தான் பழக்கம்..
ஓஓஓ அப்ப எல்லாம் முடிவு பண்ணிட்டு ஒப்புக்கு தான் எங்களை வரச் சொல்லி இருக்கீங்க அப்படித்தானே?
அச்சோ அப்படி எல்லாம் இல்லை அண்ணி என்று தவிப்பாக கார்த்திகேயனை பார்க்க..
அக்கா பொறுமையா பேசலாம் இப்ப உறுதி பண்ணிட்டு அப்புறமா பேசிக்கலாம் என்றதும் படக்கென எழுந்து கொண்டவர் இதுக்கு எதுக்காக நாங்க இருக்கனும் அதையும் நீயே பார்த்துக்க என்றவர் எழுந்து டேய் உள்ள என்ன பண்ணுற வாடா வெளியே கிளம்பலாம் என்று மகனுக்கு குரல் தர
பூம்பனி எந்த பிரதிபலிப்பையும் காட்டாமல் அமைதியாக அமர்ந்து இருக்க
கவிதா தான் குறுகுறுப்பாக பார்த்து இருந்தாள்..விக்னேஷ் வெளியே வரவும் இது யாரு என்றாள் கவிதா..
என் பையன் மா..
ஓஓஓ அப்ப ஏன் வெளியே மாப்ள தேடிட்டு இருந்தீங்க என்று திருப்பி விட பார்க்க..
ராணி, “ இவளை கட்டிக்க என் பையனுக்கு என்ன தலையெழுத்தா..
ஏன் உங்க தம்பி மக தானே?
அதுக்கு என்று ராணி அடுத்து பேசும் முன்..
போதும் நிறுத்துங்க என்ற குரலில் அனைவரின் பார்வையை பார்த்தவள் மன்னிச்சிடுங்க மா உங்களுக்கும் உங்க பையனுக்கும் என்னைய பிடிச்சு இருந்து இருக்கலாம் ஏன் எங்க அம்மா அப்பா கூட இதுக்கு சரின்னு சொல்லலாம் ஆனா எனக்கு விருப்பம் இல்ல
பூவு..
ம்மா ப்ளீஸ் இப்பவே இவ்வளவு பிரச்சினை காலம் முழுக்க இந்த விஷயத்தை தலையில் வச்சுட்டு என்னைய வாழ சொல்லுறியா..
கவிதா, “என்ன பேசுற அப்ப நாங்க உனக்கு பிரச்சினையா?
உங்களை பத்தி பேசுற உரிமை எனக்கு எதுவும் இல்லன்னு நான் நினைக்கிறேன் மன்னிக்கனும் ..
என்ன திமிரா…
உண்மையை பேசுறதுக்கு பேர் திமிர் அப்படின்னா அப்படியே இருக்கட்டும அது தவறில்லையே..
அம்மா கிளம்பலாம் என்னடா கிளம்பு என்று நவிலனை பார்க்க..
ஒரு நிமிஷம்
என்ன நவிலா…
அக்கா உன்னை அழைச்சிட்டு வந்தது என் வருங்கால மனைவியை பார்க்க தான் நீ முடிவு பண்ண இல்ல
நவிலா..
ப்ளீஸ் அதே மாதிரி உங்க அட்வைஸ் கேட்கவோ இல்ல உங்களோட விருப்பத்தை கேட்கவோ நான் இங்க வரல என்று ராணியை பார்த்து பேசியவன் ஒரு பெருமூச்சுடன், ஒரு சந்தோஷமா நடக்க வேண்டிய விஷயத்தை மாத்தி மாத்தி உங்க ஈகோவால் தடுக்க நினைக்காதீங்க இது முடிவு பண்ண பந்தம் அதை தடுக்க முடியாது. மாமா, சிவம் அப்பா நான் ஏற்கனவே என் சைடு இருக்க விஷயத்தை சொன்னேன் நீங்களும் உங்க பக்கம் இருக்க சில பலதை சொன்னீங்க அதனால் தான் இவ்வளவு நேரம் இவங்களே பேசி டயர்டு ஆகட்டும் ன்னு விட்டேன் . ஆனா இரண்டு பேரும் முடிக்கிற மாதிரி தெரியல அதான் தப்பா எடுத்துக்காதீங்க என்றவன் பனியை நோக்கி வந்தவன் அம்மா இங்க வாங்க என்று அழைத்தான் மங்கை அருகில் வந்து நிற்கவும் பட்டென சட்டை பாக்கெட்டில் இருந்த செயினை பூம்பனி கழுத்தில் போட்டு விட..
மிஸ்டர் என்று பூம்பனி சத்தமிட்டதை உணரும் நிலையில் யாரும் இல்லை.
சாரி பனி, கிளம்பலாம் ம்மா மாமா நாம பார்த்த நாள்ல கோவில்ல கல்யாணம் வச்சுட்டு ரிசெப்ஷன் வச்சுடலாம் ..
எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்ல..
ஏன் பனி உனக்கு என்னைய பிடிக்கலையா?
ஆமா
என்னைய பார்த்து சொல்லு பனி..
சாரி மிஸ்டர் உங்களுக்கு ஜட்பிகேஷன் தரனும் ன்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை
சரி பனி நீ தர வேண்டாம் இது அரேஞ்ச் பண்ண கல்யாணமா இருந்துட்டு போகட்டும்.
ம்மா என்ன சொன்ன எனக்கு பிடிச்சா தான் கல்யாணம் ன்னு சொன்ன
இல்லன்னு மறுக்கல பூவு என்று வாயை திறந்தார் அம்சா
அப்புறம் இப்படி பேசுறாங்க இவங்க
நாங்க பார்த்து எல்லாம் சரின்னா நீ கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொன்ன தானே என்று அம்சா கேட்க
ம்மா என்று திணறினாள் பூம்பனி..
இந்த கல்யாணத்தில் எங்களுக்கு பரிபூரண சம்மதம் நீ இதுக்கு மேல என்ன பண்ணணும் சொல்லு என்று அம்சா அமைதியாகி விட
பூம்பனி தந்தையையும் மாமனையும் பார்க்க
அவளுக்கு தான் விருப்பம் இல்லையே அதை கழட்டி வீச சொல்லுங்க என்று ராணி பேச
சாம்பசிவம், “நீ வாயை மூடு ராணி”
நவிலன் கழுத்தில் செயின் போட்ட மறு நொடியே வெளியேறி இருந்த கவிதா கணவனுக்கு அழைத்து பொரிய, அவனோ அந்த பக்கம் இப்ப என்னைய என்ன பண்ண சொல்லுற
என்ன இப்படி பேசுறீங்க நான் என்ன நினைச்சுட்டு இருந்தேன் எதாவது நீங்க உதவி இருந்தா இதெல்லாம் நடக்குமா?
இங்க பாரு கவி கல்யாணம் அவனோட விருப்பம் நீ உன் விருப்பத்தை சொல்லலாம் ஆனா செயல்படுத்த வேண்டியது அவன் ஏன்னா இது அவனோட வாழ்க்கை
என்னங்க
எனக்கு வேலை இருக்கு என்று அவன் துண்டித்து விட
கார் அருகில் அடுத்து என்ன என்ன என்று யோசித்து கொண்டிருந்தவளை அக்கா லாக் ஓபன் பண்ணிட்டேன் உள்ள உட்காரு என்றவன் தாய்க்கு கதவை திறந்து விட்டு காரை உயிர்ப்பிக்க,வேண்டா வெறுப்பாய் ஏறினாள் கவிதா
வரேன் மாமா அவளை சரி பண்ணிக்கிறேன் நீங்க எதுவும் கவலைப்பட வேண்டாம்
சரிங்க மாப்ள..
மாமா நீங்க சாதாரணமா பேசுங்க இந்த மரியாதை எல்லாம் வேணாம் என்னைக்கும் நான் உங்களுக்கு நேயன் தான்
சரி சரி என அவர் மண்டையை ஆட்ட சரி உள்ள போங்க அங்க சமாளிக்க வேண்டியது இருக்கே என்று சிரித்தவன் வண்டியை கிளப்பி இருந்தான்.
அடி ஆத்தி ஊர் உலகத்தில் இப்படியுமா ஒரு கல்யாணம் உன் பொண்ணு என்ன பண்ணா? வந்தான் பேசாமலே உட்கார்ந்து இருந்தான் பட்டுன்னு தாலியை கட்டிட்டு போய்டான் உன் பொண்ணும் அவன் போடுற வரை அவனை தானே பார்த்து இருந்தா அப்ப என்னவோ இருக்கும் போல
அண்ணி அப்படி எல்லாம் பேசாதீங்க அவ வாழ வேண்டிய பொண்ணு பெரியவங்க நீங்க அவளை போய்..
ஹேய் போதும் அம்சா, அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியல அதுக்கு அப்புறம் ஆறு மாசம் பைத்தியமா இருந்தா என்று முடிக்கும் முன்னே கத்தி இருந்தார் கார்த்திகேயன்..
என்னடா நான் சொன்னது எதுவும் இல்லன்னு ஆகிடுமா?
எதுவும் இல்லன்னு நாங்க சொல்லல ஆனா அதுல என்பொண்ணு தப்பு எதுவும் இல்ல அப்ப என் பொண்ணை பத்தி தப்பா பேசுறதுக்கு யாருக்கும் உரிமை இல்லை
ஓஓ உரிமை இல்ல அப்ப எதுக்கு என்னைய கூப்பிட்ட தனியா எல்லாத்தையும் பார்த்துக்க வேண்டியது தானே என்றவர் வினிதா கை பிடித்து கிளம்பி விட,மாமா நான் போறேன் கூட அப்பா இங்க இருப்பார் நீங்க ஆக வேண்டியதை பாருங்க என்று விக்னேஷ் உடன் கிளம்பிவிட..மழை அடித்து ஓய்ந்தது போல் இருந்தது..
உள்ளே அறைக்குள் அறை மட்டும் அல்ல அவள் மனமும் புழுங்கி கொண்டு இருந்தது.. எப்படி இவங்க இந்த மாதிரி பண்ணலாம் அம்மா அப்பா இரண்டு பேரும் அமைதியா இருந்தாங்களே அப்ப அவங்களுக்கு,எப்படி என்னோட சம்மதம் தேவையில்லையா அப்ப நான் அவங்க அவங்களுக்கு பாரமா இருக்கேனா என்று போட்டு குழப்பி கொண்டே இருக்க மெல்ல தலைவலி ஆரம்பித்து இருந்தது. எவ்வளவு முயன்றும் அவளை கட்டுபடுத்த அவள் மூளை ஏற்கவில்லை எப்படி ஏன் அவ்வளவு தூரம் தாழ்ந்து போய்விட்டேனா இன்னமும் எவ்வளவு அவமானம் என்று நினைக்க நினைக்க அவளால் முடியவில்லை ..

நீர் இன்றி அமையாது உலகு
அழகு தான்
இந்த வார்த்தை
நிர்மலமாய் உருவாகி
மேலிருந்து வெண்ணிற வைரமாய்
சிதறிய எனை
நிலமகள் அவளுக்கு ஏற்ப
அத்தனை இடங்களிலும்
வளைத்து விட்டாள்
வளைந்தேன்
நெளிந்தேன்
செம்புலத்தில் செம்மையாய் கலந்தேன்
மருதத்தில் வளமையானேன்
இடைப்பட்ட இடத்தில் பாழானேன்
முடிவில்
அனைத்தையும் என்னுள்
இழுத்துச் சென்று
ஆழியில் ஆழ்ந்துவிட்டேன்…
அழகு தான்
இந்த வார்த்தை
நிர்மலமாய் உருவாகி
மேலிருந்து வெண்ணிற வைரமாய்
சிதறிய எனை
நிலமகள் அவளுக்கு ஏற்ப
அத்தனை இடங்களிலும்
வளைத்து விட்டாள்
வளைந்தேன்
நெளிந்தேன்
செம்புலத்தில் செம்மையாய் கலந்தேன்
மருதத்தில் வளமையானேன்
இடைப்பட்ட இடத்தில் பாழானேன்
முடிவில்
அனைத்தையும் என்னுள்
இழுத்துச் சென்று
ஆழியில் ஆழ்ந்துவிட்டேன்…
நீரைப் போல என்னையும் இப்படி ஆழ்ந்து போகச் சொல்கிறாயே வாழ்வே என்று அவள் நினைக்க நினைக்க அழுத்தம் தாளாமல் அலறி இருந்தாள் பூம்பனி
சத்தம் கேட்டு அம்சா உள்ளே வர முற்று முழுதுமாய் துவண்டு மயங்கி சரிந்து இருந்தாள்…
பூவு என்று அம்சா கத்த என்னாச்சு அம்மு அம்மு என்று கார்த்திகேயன் உள்நுழைய மகளின் நிலை கண்டு துடித்தவர் மறுநொடி அழைத்து விட்டார் நவிலனுக்கு..
முழுதாய் அனைவரையும் தவிக்க விட்டு கண்மூடியே இருந்தாள் பூம்பனி அவள் எப்போது விழிப்பாள் என்று தெரியவில்லை விழிப்பாளா என்றே புரியவில்லை நம்பிக்கை வைத்தவன் மட்டும் காத்து இருக்க நாட்களும் காலங்களும் காத்து இருக்குமா என்ன?
திருமண பேச்சு ஆரம்பித்து பூம்பனி அறியும் முன்னே மண்டபம் வரை அனைத்தையும் ஏற்பாடு செய்த பிறகே இந்த பெண் பார்க்கும் படலமே ஆனால் மணப்பொண்ணோ மனதை மட்டும் அல்ல மூளையை கூட செயல்படுத்த தயாராக இல்லை இதோ அதோவென இவர்கள் திருமணத்திற்கு என்று குறித்த நாளும் நெருங்கி இருந்தது ..
மணவறையிலும் மகிழ்விலும் இருக்க வேண்டியவளோ மனக்குழப்பத்தில்…
தொடரும்