"அப்பிடி என்னடி கோபம் எங்கள்ல உனக்கு.?
நீ தானேடி எங்களுக்கு துறோகம் செய்த.. என்னடி இது நிஜாயம்.?
நீ உயிரோடு இல்லை என்டுறது எனக்கே இப்பிடி இருக்கே!
அத்தை மாமா நிலமை?
ஐயோ நான் என்ன செய்ய போறன்? எங்கயோ சந்தோஷமா இருக்கிறதா தானே நினைச்சிட்டு இருக்கினம். இது தெரிஞ்சா என்னவாகுமோ?
பிழை செய்திட்டேன் என்ட குற்ற உணர்வில, எப்பவும் திட்டிட்டிருப்பேனே! அந்த திட்டல் தான் உன்னை கொன்டுட்டுதா?
அண்டைக்கு, அந்த கடிதத்தை மறைச்சு, உன்னை கோவிலுக்கு அனுப்பாம இருந்திருந்தா, இப்ப உயிரோட இருந்திருப்பியேடி! என்ன தான்டி உனக்கு நடந்தது.........? எப்பிடியடி நீ இந்த உலகத்தை விட்டு போன? எல்லாம் என்னால தான்....
எல்லாமே நான் தெரியாம பாத்த வேலை தான்.
நான் தான் உன்னை கொண்டுட்டன்.
என்னை மன்னிச்சுடுடி தேவி! நான் நான்........ நான் மட்டுந்தான் உன் சாவுக்கு காரணம்... இருக்கிற குற்ற உணர்வு காணாது என்டு, இந்த இடியையும் என்மேல போட்டு பாவியாக்கிட்டியேட!
எதுக்குடி இந்த பாவத்தை எனக்கு தந்தா....? இதுக்கெல்லாம் பரிகாரமா என்னால என்ன செய்யேலும்.?" நெஞ்சிலே அடித்தபடி அழுதவள்,
இதுக்கல்லாம் பரிகாரமா உன் பொண்ண நான் பாத்துக்கிறேன்டி......! இந்த பாக்கியத்தையாவது கொடு எனக்கு... பாவம் சின்ன பெண்ணு.!
நீங்க ரெண்டு பேரும் தான் உலகம் என்டு வளர்ந்திருப்பா. அவளை கூட யோசிக்காம போயிருக்கிறியேடி!
ஏன்டி! ஒருதருக்கும் உண்மையா இருக்க மாட்டியா நீ...?
உன்னை நம்பின அப்பா, அம்மா, அண்ணா, தம்பி, நான் கடைசியா, உன்ர பொண்ணு எல்லாரையுமே தவிக்க விட்டுட்டு காணமல் போறது தான் உன்ர வேலையா?" ஆற்றாமையோடு அழுதவள்,
இனி அவள் உன்ர பொண்ணில்லடி. யாரை நம்பி அவள இங்க அனுப்பினியோ தெரியாது. அத்தையா இருந்தாலும் அம்மாவா இருந்து அவளை நான் பாத்துக்கிறன். உன்ர பொண்ணை யாரு ஏத்துக்கிறாங்களோ இல்லையோ.
எந்த சந்தர்பத்திலையும் யார்கிட்டையும் அவளை நான் விட்டு கொடுக்க மாட்டன்.
அப்பிடி யாரும் ஏற்கேல என்டாலும், கூடவே நானும் போயிடுறன்." என்று தன் உயிர் தோழி எங்கோ இருந்து தன்னை பார்த்திருப்பதாக நினைத்து அத்தனையையும் மனம் விட்டே புலம்பியவளுக்கு இப்போதே துஷாவை காணவேண்டும் போலிருந்தது. எழுந்து இரண்டடி எடுத்து வைத்தவளுக்கு, இம்முறை உண்மையில் தலை சுற்றல் எடுக்க, கட்டிலிலே சரிந்தாள்.
சிறிது நேரத்தில் அவளை பார்க்க வந்த ஊர்மிளா, அவள் படுத்திருக்கும் விதத்தை பார்த்து,
"அக்கா..." என்று பதறியவளாய், சரியாக படுக்க வைத்தவள்,
"என்னாச்சுக்கா? ஏன் இப்படி படுத்திருந்தீங்கள்?"
"வெளிய வரலாம் என்டு எழும்பினன் ஊர்மி! தலை சுத்திச்சிது.. அப்படியே படுத்திட்டன்." என கண்களை திறவாமலே சொன்னவர் குரலில் தெரிந்த வேறு பாட்டினை உணர்ந்தவளோ.
"என்னக்க... அழுதிருக்கிறீங்களா? அவ்வளவுக்க ஏலாம இருக்கு. ஒருவாட்டி ஆஸ்பத்திரி போய் வரவோமா?" என்றாள்.
"அப்பிடி ஒன்டும் இல்லை ஊர்மி. இவர் வந்திட்டாரா?"
"இப்போ தான்கா அத்தான் வந்தார். குளிச்சிட்டு சாப்பிட தயாராகுறார். அதுக்குள்ள உங்களுக்கு எப்பிடி என்டு பாக்க வந்தன்." என்றார்.
"எல்லாருமே சாப்பிட வந்திட்டினமா ஊர்மி?"
"வந்திட்டினமக்கா..."
"துஷா"
"அவளும் அங்க தான் இருக்காள். அவளை நினைச்சாே இப்பிடி ஆச்சு..
எனக்கும் கஷ்டமா தான் இருக்கு.
சின்ன வயசில அதுவும் பொட்ட புள்ளைக்கு பெத்தவேன்ர இழப்பு என்டா, எவ்வளவு கொடுமை! நல்ல வேளை அத்தை கண்ணில பட்டா, இல்லட்டி அவள்ர வாழ்க்கையே மாறி போயிருக்கும். அவளுக்கு யாரும் இல்ல என்டு நினைக்காம, நாங்க பாத்துப்பம். கவலையை விடுங்கோ." என்றவள் வாசலை நோக்கி திரும்ப,
"என்னையும் பிடிச்சிட்டு போறியா?"
"நீங்களே தலை சுத்தி, விழுந்து கிடக்கிறீங்கள். இப்ப என்னக்கா..?
ஓன்டும் வேண்டாம். பேசாம படுங்கோ.
நான் சாப்பாடு எடுந்து வாறன்." என்றவள் பேச்சை கேட்க்காமல் எழுந்து நின்றாள் மல்லி.
"சின்ன பிள்ள மாதிரி அடம்பிடிக்கிறீங்கக்கா." என்றவள் அவளை தாங்கலாக கூட்டி சென்றாள்.
எல்லோரும் ஒவ்வொரு தட்டுக்களுடன் சபையில் இருப்பது போல் தரையில் அமர்ந்திருந்தனர்.
நடுவில் தாத்தா அமர்ந்திருக்க, அவரது இரு புறமும் ஸ்ரீநாத்தும், பப்லுவும் அமர்ந்திருந்தனர். தினமும் தாத்தாவோடு யார் அமர்வது என்று போட்டி நடக்கும்.
அது ஏன் என்றால் சாப்பிடும் போது பக்கத்தில் இருக்கும் பேர பிள்ளைக்கு ஊட்டி விட்டு சாப்பிடுவது அவர் வழக்கம்.
அவரது கையால் ஒருவாய் சாப்பிட்டால் தான் அவர்களுக்கு திருப்தி.
இன்றும் பப்லு தாத்தா அருகில் எப்படியோ இடத்தை பிடித்து விட்டாள்.
அவள் அருகில் இருந்த ஜெகனோ,
"எப்பிடி உனக்கு தாத்தா தீத்தி விடுறார் என்டு நானும் பாக்கிறன்" என்றவன் சாப்பாடு பரிமாறும் வரை பார்த்துக்கொண்டிருந்தான்.
தாத்தாவும் வழமை போல முதல் வாயை பப்லுக்கு ஊட்டி விடுவதற்காக, அவள் வாயருகே கொண்டு செல்லும் சமயம், பின்புறமாக அவளை சுறண்டியவன், அவள் திரும்பிப் பார்க்கும் சந்தர்பத்தை பயன் படுத்தி, அதை அவன் வாங்கி கொண்டான்.
வழமைபோல் கத்தலில் அவளும் இறங்கினாள்.
அவள் கத்தலை கவனித்து கொண்டிருந்த இளா, பொறுமை இழந்தவனாக,
"என்ன பழக்கம் இது? அடக்க ஒடுக்கமா இருக்கத் தெரியுதா உனக்கு...? எல்லாத்துக்கும் கத்தல். அவங்களோட சண்டைக்கு நிக்கிற....
உனக்கும் தானே சாப்பாடு போட்டிருக்கு... அதை சாப்பிடு!" என்று அவன் எரிந்து விழ. அந்த இடமே இளாவின் கர்ஜனையில் அமைதியாகியது.
பப்லு மட்டும் உதட்டை பிதுக்கி சத்தம் வெளிவராமல் கண்ணீரை வெளியேற்றிக்கொண்டிருந்தாள்.
"அவளை ஏன் திட்டுற? இனி இப்பிடி என் பேத்திய திட்டி பாரு, அப்ப தெரியும்" என்றவர்,
அவள் முதுகினை தடவிக்கொடுத்து.
"எல்லாம் உன்னாலை தான்டா! கேட்டிருந்தா உனக்கும் தீத்திருப்பன். அவளை அழவைக்கிறதே உனக்கு வேலை" என்றவாறு மறுபடியும் சாதத்தை பிசைந்து பப்லுக்கு ஊட்டிவிட,
"எங்களுக்கு தாத்தா!" என்று அனைவரும் ராகம் படினர்.
"எல்லாம் வா!" என்று அனைவருக்கும் ஊட்டி விட்டவரையே பாத்துக்கொண்டிருந்தவளுக்கும் ஏக்கமாக இருந்தது.
எப்போது தனக்கும் இதே உரிமை கிடைக்கும் என்று.
'அம்மா மட்டும் சரியாக இருந்திருந்தா தன் நிலமையே வேறு' என்று நினைத்தவள், அந்த அன்புக்கு ஏங்கினாள்.
திடீரென அவள் வாயருகே சாதத்தோடு ஓர் கை நீண்டது. அது யாரன நிமிர்ந்து பார்த்தவள், புன்னகை முகமாய் நின்றிருந்த மல்லியை கண்டாள்.
"அவங்களை ஏன் ஏக்கத்தோட பாக்கிற... நீயும் உரிமையா வாங்கி சாப்பிட வேண்டியது தானே! இது உன்ர வீடு.
நாளையில இருந்து தாத்தாவும் உனக்கு ஊட்டி விடுவார். இன்டைக்கு இந்த அத்தை கையால சாப்பிடு!' என்று ஊட்டி விட்டாள்.
அவள் பாசத்தில் நெகிழ்ந்தே போனாள் துஷா.
இவர்கள் பேச்சை கேட்டுக்கெண்டிருந்த ஜெகன், பக்கத்தில் இருந்த காவியாவின் காதை கடித்தான்.
"என்ன காவியா. சித்தி எதுக்கு துஷாவை வளைக்கிறா? அவங்களுக்கு தன் பசங்களை கட்டி வைக்கிற நினைப்போ. சாெல்லி வை! அவ எனக்கு தான். வேறை யாராச்சும் இங்க அவளை கொத்த பாத்தாங்க... கொண்ணுடுவேன்" என்றான்.
"ச்சீ போ.... உன் மூஞ்சக்கு அவள் கேக்குதா? அவள்ர கலர பாத்தியா நீ..... ? எரிஞ்ச கொள்ளி கட்டைய மாதிரி இருந்து கொண்டு, உனக்கு அவள்? அவளுக்கு மட்டும் இந்த விஷயம் தெரியோணும், இது தான் அவள் இங்க தங்கிற கடைசி நாளா இருக்கும்.
எதுக்கு உனக்கு இந்த பாவத்தை?" என்றவள் சாப்பிட ஆரம்பிததாள்.
"என்ர அருமை விளங்கேல உனக்கு... அது தான் இப்பிடி! காலம் பதில் சொல்லும்" என்றவனும் சாப்பிட ஆரம்பித்தான்.
துஷாவின் விழிகள் மட்டும் இளாவையே அடிக்கடி மேய்ந்தது. இதைக் கண்ட மல்லியோ,
"அவனை ஏன்ம்மா பாக்குற, பேசாம சாப்பிடு!' என்றாள்.
இளாவும் நன்கு அறிவான் துஷாவின் விழிகள் தன்னை மேய்ந்ததை. ஆனால் அதை அவனும் காட்டிக் கொள்ளவில்லை.
சாப்பிட்டுது சிறுது நேரம் உரையாடியவர்கள்... தூங்குவதற்காக தமது அறையினை நாடினார்கள்.
படுக்கையில் விழுந்தவளுக்கு ஏதோ ஓர் நின்மதி உள்ளே பரவலானது. கூட்டு குடும்பம் என்றாள் இத்தனை நிகழ்வுகளுக்கு பின்பும், நிம்மதியாக தூங்கும் நிறைவு இருக்குமா?
தன்வாழ்க்கையில் இப்படி ஒரு மாற்றம் அவள் எதிர் பார்க்கவில்லை. இவர்கள் காட்டும் அன்பில் மீண்டும் குழந்தையாக மாறி, எதற்கும் அடம் அழுகை என்று மாறி விடுவோமோ என்று தோன்றியது.
இவற்றை சிந்தித்து கொண்டிருந்தவள் திடீர் என கேட்ட சத்தத்தில் திடுக்கிட்டே போனாள்.
காலையில் வாசன் தந்த போனின் அலறல் தான் அது.
அலுமாரியில் பத்திரப் படுத்தியிருந்த அந்த செல்லினை எடுத்தவள் திரையில் தெரிந்த இலக்கத்தை கவனியாமலே,
ஆன் செய்து "ஹலோ என்றாள்." மறு புறம் எந்தப் பதிலும் இல்லை.
எங்கே தான் பேசுவது மறுபுறம் இருப்பவர்களுக்கு கேக்கவில்லையோ என நினைத்தவள்,
"ஹலோ.." என்றாள் மீண்டும்.
"புது போன் போல இருக்கு, இருந்தும் ஏன் எதுவும் கேக்குதில்லை." என்று அழைப்பை துண்டித்தவள்,
'எதுக்கும் சைலுக்கு அடிச்சு பாத்திடலாம்' என்று அவள் இலக்கத்தை அழுத்தினாள். இரண்டாவது ரிங்கிலே "ஹலோ.." என்றாள் அவள்.
"சைலு.... எப்பிடிடி இருக்கிற? சாப்பியா?"
"துஷா.... நீயா...? உனக்கு அங்க ஒன்டும் பிரச்சினை இல்லையே! எல்லாரும் சாதாரணமா பழகிறாங்களா?" என அடுக்கிக்கொண்டு போனவளை இடை மறித்தவள்,
"இவ்வளவு கேள்வியா? ஒவ்வொன்டா கேள்!
இங்க எனக்கு எந்த பிரச்சினையும் இல்லடி.
நல்ல படியா வந்து சேந்தாச்சு. அங்கிளே எல்லாம் சொன்னதால, பெருசா எந்த கேள்வியும் கேக்கேல. அவங்க குடும்பத்தில ஒருத்தியாவே நினைக்கானம். இன்னொன்டுடி... பாட்டி தாத்தாவுக்கு அம்மா மேல கோவமில்லை.
மாமாக்கள் மட்டுந்தான் கோபமா இருக்கினம் போல. அதிலையும் சின்ன மாமா சொல்லவே தேவையில்லடி. என்னன்டு சமாளிக்க போறனோ!" என்றாள் சலித்தவாறு.
"அதெல்லாம் நீ சமாளிச்சிடுவா... கதையிலயே மயக்கிறவள் நீ... நீ கவலை படலாமோ" என்றவளுக்கு அப்போது தான் நினைவே வந்தது.
"இந்த போன் யாரோடதுடி... வீட்டுக்காரங்களோடது என்டா, எல்லாத்தையும் இதில சொல்லாத... ரெக்காட் பண்ண போயினம்" என்றாள் எச்சரிப்பதாய்.
" புத்தி போறதை பார்.... அங்கிள் தான் குடுத்துட்டு போனார். நீ சாப்பிட்டியா என்டு கேட்டன்"
"பெரிய சாப்பாடு...! உயிர் தோழிய விட்டுட்டுபோனியே! ஒரு நாளைக்கு தேவையானத சமைச்சிட்டு போனியாடி.? பழையபடி நாக்கை அடக்கம் பண்ண வேணும் போல இருக்கு, மைனா வீட்டு சமையலால."
"இவ்வளவு நாள் வீட்டில ஒருத்தி இருந்தாளோ.. சமைச்சு பழகுவோம் என்டு நினைச்சியா... நல்லா கொண்டு போய் அடக்கம் பண்ணு. வேணும் என்டா.. பெட்டிக்கு நான் ஏற்பாடு பண்ணுறன்"
"நீ ஏன்டியம்மா சொல்ல மாட்ட.... மூன்டு வேளையும் அத்தமார் இதமா சமைச்சு தருவினம். சாப்பிட்டு நல்லாவே சொல்லுவ" என்று அவள் பேசிக்கொண்டிருந்த நேரம், அவளர்களை குழப்புவது போல், மீண்டும் முன்னர் வந்த இலக்கத்திலிருந்து அழைப்பு வந்தது.
"சைலு கொஞ்சம் வை! ஒரு கோல் வருது... கதைச்சிட்டு நாளைக்கு உன்னை கூப்பிடுறன்." என்றாள்.
"சரிடி பைய்.." என அவளும் வைத்து விட்டாள்.
'யாரோட நம்பர் இது?' ஆன் செய்து ஹலோ என்றவள் பேச்சுக்கு மீண்டும் அதே அமைதி..
'இந்த நம்பர்ல வரும் கோல் மட்டும் விளங்கிதில்லையே! யாராய் இருக்கும்..? அங்கிளோ...!' என்று கட் பண்ணி அதே இலக்கத்திற்கு திரும்ப அழைத்தாள்.
அழைப்பு என்னவோ ஏற்கப்பட்டது தான், ஆனால் பேசுவது புரிய வேண்டுமே!
'நல்ல நெட்வேர்க்' என்று கட்செய்தவள் போனை வைத்து விட்டு தூங்கதயாரானாள்.
வழக்கம் போல் விடிந்தாலும், அன்றைய நாள் இனிமையாகவே விடிந்தது துஷாவுக்கு.
வழக்கமாக சண்டை சர்சரவுகளுடனும், ஜெகன் துஷாவை வம்புகள் இழுத்தாலும், அது அவளுக்கு முறைப் பையன் சீண்டலாகவே பட்டது.
பாட்டி தாத்தா மல்லி என அவளுக்கு சொந்த வீட்டு நினைவு வராதது போல் பாசத்தை வாரி வழங்க ,அன்றைய நாளையுப் இனிமையாக கழித்தாள்.
விடிந்தால் வேலை செல்ல வேண்டுமென்று நினைத்தவள், அனைவரும் கூடி இருந்த வேளை மெதுவாக ஆரம்பித்தாள்.
"பாட்டி நாளைக்கு வேலைக்கு போகோணும்" என்றாள் மெதுவாக. அந்த வீட்டு ஆண்களுக்கு அவள் வேலைக்கு செல்வதில் உடன் பாடில்லை.
அவளுக்கும் அவர்கள் தயவில் இருக்கும் போது அவர்கள் பேச்சை மீற மனம் வரவில்லை,
ஆனால் அவளே நினைத்தாலம் வேலையை விட முடியாதே!
இப்போது எந்த விதம் கூறி இவர்களுக்கு புரிய வைப்பதென தடுமாறியவள்.
முடிந்த அளவு தன் நிலமையை கூறினாள்.
"எனக்கும் உங்க யார் சொல்லையும் மீற விருப்பமில்லை தான்.....
ஆனா இப்ப உங்கட சொல்லை கேட்டா நாளைக்கு என்னை போலீஸ் கூட்டிட்டு போயிடும், வேலையில சேரேக்க அவங்கட நிபர்ந்தனைக்கு கட்டுப்பட்டு தான் பாட்டி சேர்ந்தன்.
நிபர்ந்தனை படி, ஒரு வருஷம் கட்டாயம் போகோணும்.
ஒருவருஷம் தானே பாட்டி! அது முடிய உங்களோட தான் பாட்டி இருப்பன். நீங்களே போ என்னடாக்கூட போக மாட்டன்." என்றாள்.
அவள் கூறுவது புதுசாக இருந்தாலும், போலீஸ் என்றதும் பயந்தவர்,
"சரிம்மா.... ஒரு வருஷம் தானே! அதுக்கு பிறகு வேலை என்னடா அடி தான் விழும்" என்றவர், மக்களிடம்,
"போகட்டும்டா! ஒரு வருஷத்துக்கு தானே!" என்றார். அவர்களும் வேறு வழியின்றி சம்மதித்தனர்.
பாட்டிகை கட்டி அணைத்தவள்,
"தாங்க்ஸ் பாட்டி! நாளைக்கு வேலைக்கு போகோணும்.. அதால தூங்க போறன்" என்று எழுந்து கொண்டாள்.
நாளை ரதனை சந்திக்க போகிறோம் என்ற எண்ணமே அவள் உடலில் ஒரு விதமான குளிர்மையை ஏற்படுத்தியிருந்தது.
'இது எந்த விதமான உணர்வு? எதுக்கு ரதனை நினைச்சாலே உள்ளுக்குள்ள ஏதோதோ பண்ணுது. அவனை ஒரு வாட்டி பார்த்தா நல்லா இருக்கும் என்டு ஏன் தோன்றுது.' கேள்விகள் மாத்திரமே அவளுள்.
நாளைய விடுயலை எதிர்பார்த்து விளக்கை அணைக்க போகும் நேரம், போன் மின்னுவதை கண்டவள், எடுத்து பார்த்தாள்.
நேற்று வந்த அதே நம்பர் தான்.
எடுத்து காதில் வைத்தவள், தானும் அதே அமைதி காக்கலானாள். இரண்டு நிமிடங்கள் நீடித்த அழைப்பு, தானாகவே அணைந்தது.
'யாராக இருக்கும்? அங்கிள் புது நம்பராக தானே வாங்கி தந்து இருக்கோணும். யார் என்னோவ விளையாடுறது.? நேற்றும் இதே நேரம் தானே கால் வந்திச்சு.
நான் தூங்குற நேரம் தெரிஞ்சவங்க யாரோ தான் விளையாடினம். ஒருவேளை இங்க இருக்கிறவங்களா இருக்குமோ?
இல்லையே..! நேற்று அலுமாரியில தானே போனை பூட்டி வைச்சேன். என்னட்ட போன் இருக்கிறதே இங்க இருக்கிறவங்களுக்கு தெரிய வாய்பில்லை...
நிச்சயமா இது வெளியாற்களாக தான் இருக்கும். யாரென்டு சொல்ல வேண்டாம்... குரலையாவது காட்டலாமே! என்னடா இது புரியாத பதிராவே இருக்கு..
ஒரு வேளை ரதனா இருக்குமோ!' என்ற எண்ணம் வரும்போது, எங்கு ஒரு தடவை அவனாக இருந்தால் குரலை காட்டிருக்கலாமே?,இரண்டு நாட்கள் ஆகிவிட்டது அனை பார்த்து. அவன் குரல் கேட்காது என்னமோ போல் இருக்க.
'லூசாடி நீ....? உங்னட்ட போன் இருக்கிறது, நேற்று தான் உனக்கே தெரியும். அவனுக்கு எப்படி தெரியும்? அவனாக இருக்க வாய்ப்பே இல்லை.
சரி யாரா இருந்தாலும் கதைக்கோணும் என்டா எடுக்கட்டும்' என்று நினைத்தவள், போனை மேசை மீது வைக்க. மீண்டும் அதே இலக்கம் திரையில் மின்னியது.
'இந்த முறை கதைக்கேல என்டா இருக்கு..' என்றவள் ஹலோ என்றாள்.
மறு புறம் அமைதி மாத்திரமே பதிலாக கிடைக்க.
"என்ன விளையாடுறிங்களா? இங்க என்ன இங்க வேலை வெட்டி இல்லாமலா இருக்கம்.... சும்மா சும்மா எடுத்திட்டு இருக்கிறீங்கள். கதைச்சா கதைக்கிறீங்கள் இல்லை.... ஊமையா நீங்க? கதைக்க ஏலாட்டி எதுக்கு தொல்லை பண்றீங்கள்? நானே விடிஞ்சதும் வேலை.
இந்த குளிரிலையும் எழும்போணுமே என்டு இருக்கன்.
உங்களுக்கு பொழுது போகேல என்டா, வீட்டில யாரயைாச்சும் புடிச்சு வைச்சு, பாட்டி எப்பிடி வடை சுட்டாங்கனு கேளுங்கோ... வந்திட்டினம் மற்றவேன்ர நித்திரைய கெடுக்க..."
கடைசி வார்த்தை சொல்ல தொடங்கும் முன்னரே அழைப்பு துண்டிக்கப்பட்டதை துஷா கவணிக்கவில்லை.
சொல்லி முடிந்ததும் தான் பார்த்தவள்,
"நான் தான் தனிய கதைச்சுக் கொண்டிருந்தனா.? அந்த பக்கம் எப்போ
கட்டாச்சு.. விசரியடி நீ....
திட்டினது தான் திட்டினா... அந்த பக்கம் வைச்சது கூடவா தெரியேல.."
ஈஈஈஈஈஈ என்று தானே கடுப்பில் சிரித்து விட்டு படுத்துக்கொண்டாள்.