• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

32. ப்ரியமுடன் விஜய் - கண்ணீராகி... கசிந்துருகி...!!!

Priyamudan Vijay

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2021
39
34
18
Madurai
20230210_002055.jpg

அது ஒரு அமைதிப் பூங்கா! பொதுவாக நடுத்தர வயதினர் முதல் வயது முதிர்ந்த ஆட்களே நடைப்பயிற்சிக்காக வந்து செல்லும் இடம். இந்த பூங்காவிற்கு வாலிபனோ இளம்பெண்ணோ வருவதே அரிது. அதுவும் ஏதோ ஒரு முதியவருக்குத் துணையாக வந்திருப்பவராய் தான் இருப்பர்.

அப்படி இருக்கும் அந்த அமைதிப் பூங்காவின் மத்தியில், ஒரு மாமரம் கம்பீரமாய் நின்றுக்கொண்டிருந்தது. அதற்கடியில், கல்லால் ஆன மேசை ஒன்றைப் போட்டுவைத்தனர் அப்பூங்கா மீது ப்ரியம் வைத்திருந்த பெரிய இடத்து ஆட்கள்.

அந்தக் கல்மேசையில், முழங்காலை நெஞ்சு வரை மடக்கி அதில் தாடைவரை முகம் புதைத்தபடி ஒரு வாலிபன் கண்கள் சிவக்க அமர்ந்திருந்தான்.

அழுதுக்கொண்டிருந்தான் போலும். மூக்கு உரிஞ்சும் சப்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.

அதுவரை அமைதியாய் இருந்த பூங்கா, காற்று பலமாக வீச... கலவர பூமியானது.

"மழை வரும் அறிகுறி. வாருங்கள்! மழை பெய்வதற்குள் வீட்டிற்கு விரைவோம்" என்று மக்கள் அங்குமிங்குமாய் ஓடிக்கொண்டிருந்தனர்.

காற்று அடித்த வேகத்தில், கீழே கிடந்த குப்பை செத்தைகள் கூட பறக்கத் தொடங்கின. இவ்வளவு கலவரம் நடந்தும் அது எதுவும் அவனைப் பெரிதாய் பாதிக்கவில்லை.

வெகுநேரமாய் அடித்துக்கொண்டிருந்த கைப்பேசியை மெதுவாய் தன் பாக்கெட்டிலிருந்து எடுத்துப்பார்த்தான் அவன்.

"நந்தக்குமார் காலிங்!" என்று அவனது கைப்பேசி திரையில் ஒளிக்க… அந்த அழைப்பை எடுத்தவன், மிக மெதுவாய்…

"ஹலோ!" என்று மட்டும் கூற…

"டேய் ராகேஷ்! எங்கேடா இருந்துத் தொலைக்கிறாய்? இன்று பயங்கர மழை பெய்யும் என்று நேற்றே செய்திகளில் கூறியிருந்தனரே! நீ எங்கே இருக்கிறாய் என்று உன் அம்மா பதட்டமாகி, எனக்கு கால் மேல் கால் அடித்துக்கொண்டே இருக்கிறார்களடா… எங்கே தான் போய் தொலைந்தாய்?" என்று பற்களைக் கடித்துக்கொண்டு அந்த ராகேஷின் நண்பனாகிய நந்தக்குமார் ஏசினான்.

"பயப்பட வேண்டாமென்று சொல்." என்ற பதில் மட்டுமே ராகேஷிடமிருந்து வர… நந்தக்குமாரோ, கோபக்குமாராக மாறினான்.

"வாயைக் கிளறாதே ராகேஷ்! இப்போது நீ எங்கே இருக்கிறாய் என்பதை மட்டும் கூறு. உடனே நான் அங்கே வந்து, உன்னை குண்டுக்கட்டாக தூக்கிக்கொண்டு உன் வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன்" என்று நந்தக்குமார் கொந்தளிக்க…

"இன்றைய தேதி என்ன, நந்தா?" என்று பதிலுக்கு ராகேஷ் கேட்கவும்… நந்தக்குமாருக்கு தலையே வெடித்துவிடும் போன்றிருந்தது.

"எரிச்சலைக் கிளப்பாதே, ராகேஷ்! சம்பந்தமில்லாத கேள்வியையெல்லாம் கேட்டு என் பொறுமையை நீ மிகவும் சோதிக்கிறாய்!!!" என்று கடிந்தவனின் மூளையில் ஏதோ ஒன்றுத் தோன்ற… "அமைதி பூங்காவிலா இருக்கிறாய்?" என்று கேட்டவனது குரல் மிக ஆழமாய் ஒலிக்க… அதற்கு பதிலேதும் பேசாமல் பட்டென்று அவனது அழைப்பைத் துண்டித்தான் ராகேஷ்.

கண்களை மூடிக்கொண்டு மூச்சை உள்ளிழுத்தபடி, கால்களைத் தரையில் நீட்டிய நிலையில் தொங்கவிட்டவன்… அப்படியே அந்த மரத்தின் மீது சாய்ந்தான்.

"நிஷ்சிந்தா!!!" என்று அவனது உதடுகள் அவளது பெயரை உச்சரித்த போது, அவனையும் மீறி மூடியிருந்த அவனது கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.

'என் உயிரின் உயிரானவளே…!' என்று தன் மனதிற்குள் பேசியவனின் நினைவெல்லாம் பத்து வருடங்களுக்கு முன் இதே நாளன்று நடந்த சம்பவத்தை நோக்கிச் சென்றது.

"நிஷா… நிஷா… தெரியாமல் பேசிவிட்டேன் நிஷா. புரிந்துக்கொள்ளடா மா." என்று கெஞ்சியபடி நிஷ்சிந்தாவாகிய தனது காதலியின் பின்னால் கெஞ்சிக்கொண்டு ஓடியது அவனது நினைவலையில் வந்துப்போனது…

"நிஷா.!!" என்று கூறிய அவனது உதடுகள் மனவலி தாங்காமல் பிதுங்க… தாடையெல்லாம் அழுகையில் நடுங்கியது.

"நிஷா…! என்னை நீ கடைசிவரை புரிந்துக்கொள்ளவேயில்லையடா!!!" என்று வாய்விட்டுக் கூறியவன், கண்களைத் திறந்து, தான் சாய்ந்திருக்கும் மாமரத்தைத் தடவிக்கொடுத்தான்.

'இங்கு தான் நானும் என் நிஷாவும் பலமுறை காதலோடு உரையாடியிருக்கிறோம்!!' என்று மனதிற்குள் எண்ணினான்.

அப்போது எங்கோ ஒரு கட்டிடத்தில் ஒலிக்கவிட்ட வானொலியில், அந்த பிரபலமான சினிமா பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.

"அமர்ந்துப் பேசும் மரங்களின் நிழலும்…
உன்னைக் கேட்கும், எப்படி சொல்வேன்?

உதிர்ந்துப் போன மலரின் மௌனமா?? ஆஆ??"

இவ்வரிகளில் தனது மனவலி மேலும் அதிகரிக்க… கதறியழ ஆரம்பித்தான் ராகேஷ்.

"தூதுப் பேசும் கொலுசின் ஒலியை…
அறைகள் கேட்கும், எப்படி சொல்வேன்?

உடைந்துப் போன வளையல் பேசுமா...? ஆஆ…???"

என்று அந்தப் பாடல் ஒலிக்க… அதோடு சேர்ந்து அவனும் 'ஆஆஆ' வென்று இழுத்து உச்சரித்தபடி அழுதான் அவன்.

"உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்… விரல்கள் இன்று எங்கே…????
தோளில் சாய்ந்து கதைகள் பேச… முகமும் இல்லை இங்கே…"

என்று பாடியவன் தன் கைகளை உயர்த்தி, பத்து வருடங்களுக்கு முன் இதே கைகளால், பூப்பொன்ற அவளது முகத்தை ஏந்தி… அவளது கண்களைக் காதாலோடு பார்த்த நாட்கள் நினைவிற்கு வர… அந்த கைகளால் தன் முகத்தை அடித்தபடி அழுதான் ராகேஷ்…

"முதல் கனவு முடிந்திடும் முன்னமே… தூக்கம் கலைந்ததே…!!!"

என்றுப் பாடியபடி அந்த வானொலியின் சப்தம் நின்றுவிட… அந்த வரியில் இருக்கும் வலியைவிட நூறு மடங்கு வலியை தன் மனதில் சுமந்துக்கொண்டிருந்தான் ராகேஷ்.

"ஏன் டி என்னைவிட்டு பிரிந்தாய்?? என்னை நீ புரிந்துக்கொண்டது இவ்வளவு தானா??" என்று கேட்டவனது கண்களில், கண்ணீர் தாரைத் தாரையாக வழிந்துக்கொண்டிருந்தது.

"கையை எடு ராகேஷ்!! போதும் போதும் என்றாகிவிட்டது. உன்னை என்னால் திருத்தவே முடியாது என்பதை உணர்ந்துவிட்டேன். ஆளைவிடு…! இனியும் என்னைத் தொந்தரவு செய்யாதே! இத்தோடு நிறுத்திக்கொள்வோம். உன்னையும் உன் கோபத்தையும் அந்த கடவுள் நினைத்தால் கூட மாற்றமுடியாது." என்று பிரிவதற்குமுன் நிஷ்சிந்தா கூறிய அந்த வார்த்தைகள் தனது மண்டைக்குள் ஒலிக்க…

"அர்ர்ர்ர்க்க்க்க்..!!!" என்று பற்களைக் கடித்துக்கொண்டு கத்தியவன், அழுதபடி தனது வலது கையினால் ஓங்கி அந்த மரத்தைக் குத்த ஆரம்பித்தான்…

'சரட்' என்ற சப்தத்துடன் அங்கே ஒரு கார் வந்து நின்றது… காரிலிருந்து அளவான உயரத்திலிருக்கும் இளைஞன் ஒருவன் இறங்கி வந்தான்.

மாமரத்தை தன் கையால் ஓங்க ஓங்கி குத்திக்கொண்டிருந்த ராகேஷைக் கண்ட நந்தக்குமாராகிய அந்த இளைஞனோ, பதறியடித்துக் கொண்டு அவனிடம் ஓடினான்.

"டேய் முட்டாள், ராகேஷ்!!! புத்தி மழுங்கிவிட்டதா? ஏன் இப்படி பித்துப்பிடித்தவனைப் போல் நடந்துக்கொள்கிறாய்?? நவம்பர் 25 ஆனால் போதுமே!!! இவ்விடத்திற்கு வந்து பைத்தியக்காரனைப் போல் நடந்துக்கொள்கிறாய்…" என்றுக் கேட்டபடி மரத்தைக் குத்திக்கொண்டிருந்த ராகேஷைத் தடுத்து நிறுத்தி…

"இல்லை… தெரியாமல் தான் கேட்கிறேன்…. உனக்கு என்னடா குறை? அழகில்லையா? வசதியில்லையா??? டேய்!!! சொந்தமாய் தொழில் தொடங்கி அதில் வெற்றிப்பாதையில் சென்று பேரும் புகழும் வாங்கிருக்கிறாயடா நீ!!! கைநிறைய சம்பாதிக்கிறாய்… இந்த இளம் வயதில் இதைவிட வேறென்னடா வேண்டும் ராகேஷ் உனக்கு??" என்று வினவியபடி இரத்தம் சொட்டிக்கொண்டிருந்த ராகேஷின் கையை தனது கைக்குட்டையால் கட்டிவிட்டான்.

"நிஷ்சிந்தா வேண்டும். தரமுடியுமா?" என்று அமைதியாய் ராகேஷ் கேட்க… அதனைக் கேட்ட நந்தக்குமார் எரிமலையாய் வெடித்தான்.

"நிஷ்சிந்தா… நிஷ்சிந்தா… நிஷ்சிந்தா…!!! இன்னும் ஏனடா அவளையே பிடித்துக்கொண்டு தொங்குகிறாய்? அவள் என்ன அப்படியொரு பேரழகியா? ஏதோ சுமாரான பெண் தானேடா அவள்? உன் பின்னே சற்றும் பெண்களில் நிறைய பேர் அவளைவிட அழகாய் இருக்கிறார்களே டா!!! அவர்களில் எவரேனும் ஒருவரைப் பிடித்துக்கொண்டு காதலித்துத் தொலைக்கவேண்டியது தானே? இன்னும் ஏன் நிஷ்சிந்தாவிலேயே இருக்கிறாய்?"

"ஆயிரம் பெண்கள் இருந்தாலும் அவளாகிவிடாது டா." என்றான் ராகேஷ் பொறுமையாய்.

"ஆமாம்! அவளாகிவிடாது தான்… காதலன், கோபத்தில் ஏதோ பேசிவிட்டான். அந்தக் கோபத்தைக் கூட புரிந்துக்கொள்ளாமல், விட்டு ஓடியவளைப் போல எந்த பெண்ணாச்சும் கிடைக்குமா??? கிடைக்காது தான்" தலையை வேறு பக்கம் திருப்பி முணுமுணத்தபடி புலம்பினான் நந்தக்குமார்.

"என்ன இருந்தாலும் நானும் அப்படி பேசியிருக்கூடாது தானே டா?!" கண்கள் கலங்க ராகேஷ் கேட்கவும் அவனைத் திரும்பிப் பார்த்த நந்தக்குமார், அவனது கண்களைத் துடைத்தபடி மெதுவாய் பேச ஆரம்பித்தான்.

நன்றாகக் கவனி டா. நிஷ்சிந்தாவை எண்ணி நீ இப்படி காலம்காலமாய் அழுதாலும் ப்ரயோஜனம் இல்லை டா. அவள் உன்னைவிட்டுச் சென்று இன்றோடு பத்து வருடங்கள் ஆகிவிட்டது. உன் வயது இருபத்தி எட்டு ஆகிறது. அவளுக்கோ இருபத்தி ஏழாகவாவது இருக்கும்…" என்று நந்தக்குமார் பேசிக்கொண்டிருந்த போதே, இடையில் குறுக்கிட்டு பேசினான் ராகேஷ்.

"இருபத்தியேழு இல்லை. இருபத்தெட்டு தான். ஒரே வயது தான் எங்களுக்கு"

"ஹ! இதற்கொன்றும் குறையில்லை. வாயை மூடிக்கொண்டு நான் கூறவருவதைக் கேள்." என்று கடுப்படித்த நந்தக்குமார், மெல்ல நகர்ந்து ராகேஷிற்கு அருகில் அமர்ந்தான். அவனது தோளில் ஆறுதலாய் கைவைத்து தன் பேச்சைத் தொடர்ந்தான் நந்தக்குமார்.

"நம் நாட்டுக் கலாச்சாரத்தின்படி, ஒந்த ஒரு பெண்ணும் இருபத்தி எட்டு வயது வரை திருமணம் செய்யாமல் இருந்ததே இல்லை. அவளே நினைத்தாலும், அந்தப் பெண்ணை எவன் தலையிலாவது கட்டிவைத்து விடுவர். எப்படிப் பார்த்தாலும் நிஷ்சிந்தாவிற்கு இந்நேரம் திருமணமாகி இரண்டு குழந்தைகளாவது இருக்கும், ராகேஷ். அடுத்தவன் மனைவியை எண்ணி நீ அழலாமா?" என்று நந்தக்குமார் கேட்க… அவனது வார்த்தைகளைப் பொறுக்கமுடியாது தன் காதுகளைப் பொத்திக்கொண்ட ராகேஷோ,

"இல்லே… இல்லை… இல்லை… அவள் என்னுடைய நிஷா…! என் நிஷ்சிந்தா டா அவள்…… என்னை அவ்வளவு எளிதில் அவளால் மறந்துவிட்டு கடந்து சென்றிருக்க முடியாது.

நான் கோபத்தில் பேசிவிட்டேன் தான். ஆனால், அவளுக்குத் தெரியும் டா… .அவள் மீது நான் எவவ்ளவு கண்மூடித்தனமான பாசமும் காதலும் வைத்திருக்கிறேன் என்று.

முன்னர் ஒருமுறை அவளே கூறினாள் தெரியுமா? 'என்னை இதுநாள்வரை எவருமே உன்னைப் போல் பாசமாக யாரும் பார்த்துக்கொண்டதேயில்லை. இவ்வளவு பாசமும் காதலும் என்மீது நீ ஆட்டுமளவிற்கு நான் எதுவும் செய்யவில்லையே!' என்று கூறியிருக்கிறாள் டா அவள்.

என்னுடைய ஒட்டுமொத்தக் காதலையும் முழுதாய் உணர்ந்தவளடா அவள். அப்படிப்பட்ட அவளால் என்னை எப்படியடா மறக்க இயலும்?" என்று அப்பாவியாகக் கேட்ட ராகேஷைக் கண்ட நந்தக்குமாரின் இதயம் வலித்தது.

"இவ்வளவு காதல் நீ அவள்மீது காட்டியும், அதனைப் பற்றி யோசிக்கக்கூட இல்லாமல், நீ கோபத்தில் பேசிய வார்த்தையை மட்டுமே கருத்தில் கொண்டு உன்னைவிட்டு சென்றவளை எண்ணி ஏனடா அழுகிறாய்? உன் அம்மா தினந்தினம் உன்னை எண்ணியே கவலைப்படுகிறாரடா!!! பெற்றவளையும் நோகடித்து, உன்னையும் நோகத்திக்கொண்டு… இதெல்லாம் தேவையாடா? அவளை மறந்துவிட்டு வேறு ஒர பெண்ணை மணந்துக்கொள், ராகேஷ். கோபத்தில் பேசும் வார்த்தைகளுக்கு அர்த்தம் எடுத்துக்கொண்டு பிரிந்து சென்றுவிட்டளைத் திருமணம் செய்து என்னடா சாதிக்கப் போகிறாய்? திருமணமான பிறகு, ஏதோ சண்டையில் நீ, அவளை சண்டையில் ஏசிவிட்டால்… உன்னை அப்படியே 'அம்போவென' விட்டுவிட்டு ஓடிவிடுவாள்.

கல்யாணமான பிறகு இது நடந்தால், அப்போது வலிக்கும் வலிக்கு ஆறுதல் அளிக்க யாரும் இருக்கமாட்டார்கள், ராகேஷ். இப்போவே போய்விட்டாள், தப்பிவிட்டாய் என்று நினைத்துக்கொள்" என்று சமாதனப்படுத்த எண்ணி பேசினான் நந்தக்குமார்.

"நானும் சாதாரணமான வார்த்தையை விடவில்லையடா…" என்று ராகேஷ் கூறவும்…

"அப்படி என்னதான் டா பேசி வைத்தாய்? பத்து வருடங்களாய் கேட்கிறேன். இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் கூறமாட்டேங்கிறாய்" என்று நொந்துக்கொண்டான் நந்தக்குமார். அவன் இவ்வாறு கேட்கவும், அவனது முகத்தைப் பார்த்த ராகேஷின் நினைவலைகள், பத்து வருடங்களுக்கு முன்னர்… இதே நாளான நவம்பர் 25ம் தேதிக்குச் சென்றது.
----------------
 
Attachments

  • 20230210_002055.jpg
    20230210_002055.jpg
    219.3 KB · Views: 72
Last edited:

Priyamudan Vijay

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 30, 2021
39
34
18
Madurai
"ஆமாம்! ஆமாம்! ஆமாம்! எனக்கு உன்னைவிட என் ஈகோ தான் முக்கியம். உன்னால் என்ன செய்யமுடியுமோ அதை செய். போ" என்று அசட்டையாக நிஷ்சிந்தா பேசிய விதம் ராகேஷிற்கு கோபத்தைத் தூண்டியது.

"அப்போ நான் முக்கியமில்லையா நிஷா?" என்று ஆழ்ந்தக் குரலில் ராகேஷ் கேட்க… தன் காதலன், நாம் என்ன சொன்னாலும், நம்மைவிட்டு பிரிந்துவிட மாட்டான் என்ற அசட்டையில் நிஷ்சிந்தா,

"ஆமாம். முக்கியமில்லை. விருப்பமிருந்தால் இரு. இல்லையென்றால், உன்னை யாரும் பிடித்துக்கொண்டிருக்கவில்லை. விட்டுச்செல்வதென்றால் செல்! நான் தடுக்கமாட்டேன்" என்று தோள்களை குழுக்கியபடி நிஷ்சிந்தா கூற… கோபத்தில் ராகேஷிற்கு கண்களே இருட்டிவிட்டது.

'தூக்கியெறிந்து பேசுகிறாள்' என்ற எண்ணமே அவனது மூளையில் ஆணி அடித்தாற்போல் இருக்க… கண்களை இறுக மூடிக்கொண்டவனால் அதற்கு மேல் கோபத்தை அடக்கமுடியவில்லை.

"ஏய்!!! உன் மேல் எவ்வளவு பாசம் வைத்திருந்தேன்? என்னையவா தூக்கியெறிந்துப் பேசுகிறாய்? உன்மீது வைத்திருந்த பாசத்தை ஒரு நாயின் மீது காட்டியிருந்தால், அதுகூட என்னை இவ்வளவு தாழ்வாய் நடத்தியிருக்காது. என்னுடைய பாசத்தையா தூக்கியெறிந்து பேசுகிறாய்? எல்லாம்…. நான் உன்னைவிட்டு போகமாட்டேன் என்கிற தைரியம். அதுதான் உன்னை இப்படியெல்லாம் தூக்கியெறிந்து பேச வைக்கிறது." என்று கோபத்தில் சரமாரியாக ராகேஷ், நிஷ்சிந்தாவைப் பேசிவிட… அவளால் அவ்வார்த்தைகளைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மனம் வலிக்க,
தன்னையும் மீறி அவளது கண்களில் கண்ணீர் வர… அதைனைப் பார்த்துவிட்ட ராகேஷிற்கோ, கோபமெல்லாம் பறந்துப்போய்… அவளை நெருங்கி,

'நிஷா…….!! நான் அர்த்தம் புரிந்து பேசவில்லை… ஏதோ கோபத்தில்... " என்றபடி அவளது கண்ணீரைத் துடைக்க அவன் எத்தனிக்க… அவனது கையைத் தட்டிவிட்டாள் அவள்.

"கையை எடு ராகேஷ்!! போதும் போதும் என்றாகிவிட்டது. உன்னை என்னால் திருத்தவே முடியாது என்பதை உணர்ந்துவிட்டேன். ஆளைவிடு…! இனியும் என்னைத் தொந்தரவு செய்யாதே! இத்தோடு நிறுத்திக்கொள்வோம். உன்னையும் உன் கோபத்தையும் அந்த கடவுள் நினைத்தால் கூட மாற்றமுடியாது." என்று அழுதபடி அவ்விடத்தைவிட்டு சென்றவளை அதற்கு பிறகு அவனால் தொடர்புக்கொள்ளவே முடியவில்லை. 'எங்கே சென்றாள்? எப்படி சென்றாள்?' என்று கூட தெரியாமல் போனது ராகேஷிற்கு.

பத்து வருடங்கள் முன்னர் நடந்த விசயத்தை வரிமாறாமல் அப்படியே தன் நண்பனாகிய நந்தக்குமாரிடம் ராகேஷ் கூறிமுடிக்க… நந்தக்குமாருக்கோ என்ன கூறுவதென்றே தெரியவில்லை.

நீண்ட பெருமூச்சு ஒன்றைவிட்டவன், ராகேஷை நோக்கி… "நீ பேசியது சரியென்று கூறவில்லை. தவறு தான். யாராய் இருந்தாலும் வலிக்கும் தான். நிஷ்சிந்தாவிற்கும் அது நோகடித்திற்கும் தான். ஆனால், அவளும் உன்னை எத்தனையோ முறை பயங்கரமாக ஏசியிருக்காளே டா? கெட்ட வார்த்தைகள் உபயோகிக்கவில்லைத் தான். ஆனால், உன்னை பலமுறை தூக்கியெறிந்து பேசி, உன்னை அவளும் நோகடிக்கத்தானே செய்தாள்? அவள் அவ்வளவு பேசியும் நீ அவளை, விட்டுவிட்டா சென்றாய்? இரண்டு நாள்கூட பொறுத்துக்கொள்ளாமல், அவள் பக்கமே தவறு இருந்தாலும், நீயே ஓடிப்போய்… மன்னிப்பு கேட்பாயே டா? அதையெல்லாம் கூட அவள் யோசிக்கவில்லையா?

உலகில் எவனடா உன்னைப் போல், 'அவளைப் பிரியும் கொடுமையைவிட மன்னிப்புக் கேட்டுவதில் ஒன்றும் குறை ஏற்பட்டுவிடாது' என்று எண்ணும் ஆம்பளை இருக்கிறான்? அதையெல்லாம் அவள் யோசித்துப்பார்த்தாளா?" என்று நந்தக்குமார் கேட்க…

"எனக்கு என் சுயமரியாதையை விட, ஏன்? என்னைவிடவே அவள் தான் டா முக்கியம்! அவளுக்காக அவள் என்னை எவ்வளவு பேசினாலும் தாங்கிக்கொள்வேன், நந்தா! அவ்வளவு ஏன்? 'ச்சீ! போடா நாயே!!' என்று என் நெஞ்சில் அவள் எட்டி மிதித்தாலும் தாங்கிக்கொண்டு அவளுடன் இருப்பேன். அவள் தான்டா எனக்கு எல்லாம். என் உயிர் டா அவள். என் சுவாசமே என் நிஷ்சிந்தா தான் டா." என்று ராகேஷ் பேசுவதைக் கேட்ட நந்தக்குமாரின் மனம் கணத்தது.

"இனி பேசி என்ன டா பயன்? அவள் தான் நீ வேண்டாம் எனாறு மொத்தமாய் உன்னை ஒதுக்கிவிட்டாளே! இனியும் அவள் வருவாளென்றா நம்புகிறாய்?" என்று கணத்த மனதுடன் நந்தக்குமார், தன் நண்பனான ராகேஷிடம் கேட்க… ராகேஷின் உதட்டிலோ மெல்லிய புன்னகை ஒன்று வந்தது. விரக்தி மிகுந்த அந்தப் புன்னைகையைப் பார்த்த நந்தக்குமார்,

"என்ன டா சிரிக்கிறாய்?" என்று வினவ…

"அவள் வருவாள் என்ற நம்பிக்கை இல்லை தான்…" என்று ராகேஷ் கூறினான்.

"அப்பறம் எதற்கடா பாவி, உன் திருமணத்திற்காக அம்மா பார்க்கும் பெண்களை வேண்டாம் என்று நிராகரிக்கிறாய்? உனக்காக பார்க்கவில்லையென்றாலும், உனக்காக வாழும் உன் அம்மாவையேனும் யோசியேன் டா படுபாவி!!!" என்று ராகேஷின் சட்டையைப் பிடித்துக்கொண்டு நந்தக்குமார் கேட்டுக்கொண்டிருந்த வேளையில் சடசடசடவென வான்மகள் மழை பொழிய…… வானத்தைப் பார்த்த ராகேஷோ, அதே விரக்தியான புன்னகையோடு பதிலளித்தான்.

"ஹும்…!!! அம்மாவிற்காக, அவர் காட்டும் பெண்களில் ஏதேனும் ஒரு பெண்ணை முடிவு செய்து அவளை நான் திருமணம் செய்துக்கொள்ளலாம் தான். ஆனால், அதன் பிறகு என்னைக் கட்டிக்கொண்ட பெண்ணின் நிலையைப் பற்றி யோசித்தாயா டா நீ? நிஷ்சிந்தாவை மறக்கமுடியாது தவிக்கும் என்னால், எப்படி இன்னொரு பெண்ணுடன் சந்தோசமாய் வாழ முடியும்? அவள் காதலாய் பேசினால் கூட, அதில் எனக்கு நிஷ்சிந்தா தானே டா தெரிவாள்? இப்படியிருக்கும் என்னை எந்த பெண்ணாச்சும் மணந்தால், அவளது கல்யாண வாழ்க்கையே நரகமாகிவிடாதா? என்னால், மற்றொரு பெண்ணின் வாழ்க்கை கெடுவதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன், நந்தா" என்று உறுதியுடன் பேசிய ராகேஷின் வார்த்தைகளில் இருக்கும் உண்மையை உணர்ந்த நந்தக்குமாரோ, அப்படியே அமைதியானான்.

"அப்போ, கடைசிவரை நீ திருமணமே செய்துக்கொள்ளப்போவதில்லையா, ராகேஷ்?"

"ம்ம்ம்ம்…… நிஷ்சிந்தாவைத் தவற எந்தப் பெண்ணையும் மனைவி ஸ்தானத்தில் வைத்துப் பார்க்க என்னால் முடியாது" என்று ராகேஷ் கூற…

"அவள் உன்னை மன்னிக்கவே இல்லை என்றாலும் பரவாயில்லையா? அவளை மறக்கமாட்டாயா நீ?" என்று நந்தக்குமார் கவலையாய் கேட்க…

"நான் அப்போது கூறியது தான் டா இப்போதும் கூறுகிறேன். என்னைக் கொல்வது நிஷ்சிந்தாவாக இருந்தால், மறுப்பேதும் கூறாமல் வாயை மூடிக்கொண்டு அதனை ஏற்றுக்கொள்வேன், நந்தா." என்று ராகேஷ் பதிலுரைத்தான்.

"ஏன் டா? ஏன்??? அவள் உனக்கு அப்படி என்ன டா செய்தாள்?" மீண்டும் அவனது சட்டையைப் பிடித்துக்கொண்டு நந்தக்குமார் கேட்க…

"ஏனென்றால், அவள் என் காதலி! என்னைக் காதலித்தாளே!!! அதுவே எனக்கு போதும் டா, நந்தா… இதைவிட எனக்கு அவள் என்ன செய்ய வேண்டும்?"

"இந்நேரம் அவள் உன்னை மறந்தே போயிருப்பாளடா!!!" தன் தலையில் அடித்துக்கொண்டான் நந்தக்குமார்.

"பரவாயில்லை நந்தா. நான் என்றைக்குமே அவளிடமிருந்து திரும்ப காதலை எதிர்பார்த்ததே இல்லை. என் ஒருவனது காதல் மட்டுமே போதும்! நாங்கள் இருவரும் நலமாய் வாழ… அவள் மறந்தே போயிருந்தாலும், அவளுக்கான என் காதல் என்றும் அழியாது. மாறாது." என்ற ராகேஷின் குரலில் உறுதி தெரிய…….

அந்த மாமரத்திற்குப் பின்னாலிருந்து, "போதும்ம்ம்!!!!" என்று அழுத நிலையில் குரல் நடுங்க பேசிய பெண்ணின் குரல் கேட்க…

"நிஷ்... நிஷ்… நிஷா…??" என்று குரலை வைத்தே அந்தப் பெண்ணை அவன் அடையாளம் காண… அதிர்ந்தேவிட்டான் நந்தக்குமார்.

ராகேஷ் தன் பெயரை உச்சரித்த மறுகணமே அவனிடம் ஓடிச்சென்று அவனைக் கட்டிக்கொண்டு அவனது மார்பில் முகம் புதைத்துக்கொண்டாள் நிஷ்சிந்தா.

தன்னை இறுக கட்டியிருக்கும் தன் காதலியான நிஷ்சிந்தாவை அவ்விடத்தில்… அதுவும் அந்த நேரத்தில் சற்றும் எதிர்பாராத ராகேஷிற்கோ அதிர்ச்சியாய் இருந்தது…

"நீ… நீ… நீ எப்படி இங்கே???" என்று ராகேஷ் தட்டுத்தடுமாறி கேட்டான்.

"ஒன்றும் பேச வேண்டாம்." என்று பதிலுக்கு கூறிய நிஷ்சிந்தா தன் கண்ணீரை அவனது மார்பை உரசிக்கொண்டிருந்த அவனது சட்டையில் துடைத்தாள்.

"அவன் தான் பேச வேண்டாம். நான் பேசலாமா?" என்று தயங்கியவாறு நந்தக்குமார் கேட்க… பதிலுக்கு அவளிடமிருந்து எவ்வித வார்த்தையும் வராமல் போகவே…

"நீங்கள் எப்படி இங்கே, இந்த நேரத்தில் வந்தீர்கள்? எப்போது வந்தீர்கள்? நாங்கள் பேசியது அனைத்தும்...….." என்று நந்தக்குமார் கேட்டுக்கொண்டிருந்த போதே.. அவனை இடைமறித்து,

"கேட்டுவிட்டேன்…!! ஒரு வார்த்தைவிடாமல் கேட்டேவிட்டேன்" என்று கூறியபடி ராகேஷைக் கட்டிக்கொண்டிருந்தவள், மெல்ல தன் பிடியிலிருந்து அவனை விடுவித்தாள்.

நிஷ்சிந்தாவின் வார்த்தையில் அந்த இரு வாலிபர்களும் அதிர்ந்து தான் போனர்.

"நிஷா…!!!" என்று தயங்கியபடி ராகேஷ் பேச ஆரம்பிப்பதற்குள் நிஷ்சிந்தா அவனை மீண்டும் இறுக்கமாய் கட்டிக்கொண்டு, அவனது மார்பில் முகம் புதைத்துக்கொண்டவள்,

"உன்னை புரிந்துக்கொள்ளாமல்…. இத்தனை வருடம் உன்னைத் தவிக்கவிட்டதற்கு என்னை மன்னிப்பாயா ராகேஷ்?" என்று கேட்ட நிஷ்சிந்தாவின் குரலில் நடுக்கம் தெரிய…

"ஹேய்… மன்னிப்பெல்லாம் கேட்காதே நிஷா!!! உடைந்தே போய்விடுவேன் நான்" என்று அவளை அணைத்தபடி ராகேஷ் கூற… நிஷ்சிந்தாவின் பிடி மேலும் இறுகியது.

அதனைப் பார்த்துக்கொண்டிருந்த நந்தக்குமார், தன் முகத்தை வேறு திசையில் திருப்பி… "அஹெம்! அஹெம்! அங்… அது… அது வந்து… ராகேஷ் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை, நிஷ்சிந்தா. தாங்கள்…." என்று அவன் இழுக்க… அதற்கு அவளோ, தனது பிடியை விடாமல், ராகேஷின் மார்பில் சாய்ந்தபடியே பதிலளிக்க ஆரம்பித்தாள்.

"ராகேஷின் வார்த்தைகள் என்னால் எப்படி மறக்கமுடியவில்லையோ, அதே போல அவனையும் என்னால் மறக்கமுடியவில்லை. வருடங்கள் செல்ல செல்ல… அவனது கோப வார்த்தைகள் மறந்து, அவனது காதலே என் நினைவில் நிற்க… அவனைக் காண முடிவெடுத்தேன். விதி!! எவ்வளவு தேடியும் அவன் கிடைக்கவில்லை. அவறை மறந்து வேறு ஒரு ஆடவனை என்னால் மனதால் கூட நினைக்க முடியவில்லை. தேடித் தேடி ஓய்ந்த எனக்கு கிடைத்த ஒரே ஆறுதல், இந்த அமைதிப் பூங்கா மரம் தான்.

காதலாகி நாங்கள், இதே மரத்தடியில் பேசிய நாட்கள் நினைவு வரும்போதெல்லாம் இங்கு வருவேன். ஆனால் ஒரு நாளும், ராகேஷை நான் கண்டதேயில்லை.

இதே நாளில் தான் பத்து வருடங்களுக்கு முன்னர், நாங்களிருவரும் பிரிந்தோம். ஆகையால், வருடம் தவறாமல் இவ்விடத்திற்கு வருவேன். எங்கள் விதியோ, என்னவோ… நான் காலையிலும், ராகேஷ் மாலையிலும் இங்கு வந்துபோயிருக்கிறோம்.

நாங்கள் பிரிந்த பிறகு, இங்கு நான் வந்தபோதெல்லாம் ராகேஷைத் தான் தேடுவேன். ஆனால் அவனோ அந்த நேரத்தில் வராமல் போன காரணத்தால், என்னை அவன் மறந்தே போய்விட்டான் என்று எண்ணினேன். அதனால், அவனைத் தொடர்பு கொள்ளவும் முயற்சி செய்யாமல் ஒதுங்கிவிட்டேன்." என்று கூறி முடித்தவளின் கஷ்டத்தில் தொண்டை அடைக்க… அவளை மீண்டும் தன் மார்போடு அணைத்துக்கொண்டான் ராகேஷ்.

"நாம் அழுத வரை போதும். இனி மகிழ்வாய் காதலாகி வாழ்வோம். கண்ணீராகி… கசிந்துருகியதெல்லாம் போதும். இனி, காதாலாகி கசிந்துருகுவோம்…." என்று கூறியவாறு நிஷ்சிந்தாவின் முதுகைத் தட்டிக்கொடுத்தான் ராகேஷ்.

நடப்பதையெல்லாம் சந்தோசமாய்ப் பார்த்துக்கொண்டிருந்த நந்தக்குமாருக்கோ, திடீரென்று ஒரு சந்தேகம் எழும்பியது.

"டேய்!! ராகேஷ்!!! அப்போது கேட்ட, குரல் நிஷ்சிந்தாவுடையது என்று எப்படி கண்டுப்பிடித்தாய்?" என்று தன் சந்தேகத்தை வெளிப்படையாகவே நந்தக்குமார் கேட்க…

"அதெல்லாம் காதலின் ரகசியமடா, நந்தா" என்று பதிலுரைத்த ராகேஷ் வாய்விட்டு சிரிக்க… இப்படி அவன் சிரித்து பத்து வருடங்களுக்கு மேலானதை உணர்ந்த நந்தக்குமாரின் மனமோ நெகிழ… கனிவாய் அந்த காதல் ஜோடியைப் பார்த்து புன்னகைத்தான்.

-------------❤❤❤❤❤-----------
 
Attachments

  • 20230210_002055.jpg
    20230210_002055.jpg
    219.3 KB · Views: 55

Hilma Thawoos

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
163
27
28
Hambantota, SriLanka

Wooww.. Rokesh and nishavoda kadhal arumai.. வருடங்கள் பல கடந்தாலும் இருவருக்குள்ளும் இருந்த அந்த காதல் மட்டும் மாறவே இல்லை!❤️😍😍
Superb anna..
போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்!
♥️