• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

34. கதாரசிகை - Cafe காதல்

கதாரசிகை

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 27, 2023
1
1
3
Krishnagiri
"ஹாய், ஹலோ, வணக்கம் நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது xxx எஃப்பம் 98.8 நா உங்க ஆர் ஜே மகேஷ் ... இந்த உலகத்துல நிறைய சண்டைகள் நிறைய கொலைகள்ன்னு முக்கால்வாசி தவறுகள் நடப்பது எதனாலன்னு உங்களுக்கு தெரியுமா ... அது காதலால தான்... புரியுது புரியுது காதலர்கள் எல்லாம் அப்படி என்ன தப்பு காதலால நடக்குதுன்னு பொங்கறது புரியுது ... நா ஏன் அப்படி சொன்னன்னும் சொல்லிட்றன் ... காதலிக்கு கிப்ட் கொடுக்க கொள்ளை ... காதலை மறுத்த காதலி முகத்தில் ஆசிட் ... வீட்டில் ஒப்புக் கொள்ளாததால் காதலர்கள் தற்கொலைன்னு நிறைய ந்யூஸ் நம்ம படிப்போம் அத வச்சி தான் சொன்னன் .

சரி சரி ரொம்ப நேரம் பேசாம டாபிக்குள்ள வருவோம் ... மக்களே இன்னைக்கு என்ன நாள்ன்னு உங்க எல்லார்க்கும் தெரியும் ... காதலர் தினம் ... இன்னைக்கு எல்லா ஆண்களும் அவங்களுக்கு பிடிச்ச பெண்ணோட பின்னாடியும் எல்லா பொண்ணுங்களும் அவங்களுக்கு பிடிச்ச ஆண்கள் பின்னாலையும் சுத்திட்டு இருப்பிங்க ... காதல சொல்லி காதலிக்க ஆரமிச்சவங்க வெளில போய் இருப்பிங்க ... நிறைய ப்ளான்ஸ் வச்சிருப்பிங்க ... அவங்களுக்கெல்லாம் ஆல் தி பெஸ்ட் ... தொலை தூர காதலர்கள் எல்லாரும் நீங்க சீக்கிரம் உங்க பாட்னனர்ர சந்திக்கனுன்னு நாங்க வேண்டிக்றோம் ... இன்னைக்கான டாப்பிக் லவ் தான்னு உங்களுக்கு தெரியும் ... ஆனா அதுலையும் ஒரு பிரிவ பிரிச்சி நா வச்சிருக்கன் ... அது என்னன்னா ... இது வரைக்கும் ஒரே ஒரு பொண்ண மட்டுமே மனசுல விரும்பி லவ் பன்னி இப்ப வரைக்கும் ஒன்னா இருக்கவங்க இருக்கிங்களா ... லவ்வர்ஸ்ஸா இருந்தாலும் சரி கணவன் மனைவியா இருந்தாலும் சரி கால் பன்னுங்க உங்க காதல பகிர்ந்துக்கோங்க ... இப்போ உங்களுக்கான சூப்பரான சாங் வருது கேட்டு வாங்க நம்ம பேசலாம்" என்று அவன் படபடவென பேசி முடித்து விட்டு ஒரு காதல் பாடலையும் ஓட விட்டு நிமிர்ந்தான்.

அறைக்கு வெளியில் இருந்து ஒருவர் மகேஷ்க்கு கை காட்டி வெளியில் அழைத்தார். மகேஷ் அவசரமாக வெளியில் சென்று "சாங் முடிய போது எதுக்கு கூப்ட்ரிங்க" என்று கேட்டான். "இன்னைக்கு காலர்ஸ்கான லைவ் இல்லையாம் ... மேனேஜர் சார் ஒருத்தரை இன்வைய்ட் பன்னி அவரை இன்டர்வ்யூவ் பன்ன சொல்ராரு" என்று அவர் கூறினார்.

"என்ன திடீர்ன்னு" என்று மகேஷ் கேட்க மேனேஜர் ஒருவனை அழைத்து வந்து "மகேஷ் இவரை தான் நீ இன்டர்வியூ பன்னனும்" என்று கூறி அறிமுகப்படுத்தினார். மகேஷும் பாடல் முடிய போவதால் எதுவும் பேச முடியாமலும் மேனேஜரின் சொல்ல தட்ட இயலாமலும் சரி என்று அவருடன் உள்ளே நுழைந்தான்.

"வெல்கம் பேக் டூ த ஷோ ... நா உங்கள் மகேஷ் ... காய்ஸ் எல்லாரும் என்னை மன்னிக்கனும் ஏன்னா இன்னைக்கு காலர்ஸ்க்கான ஷோ இல்லை இது ஒரு இன்டர்வ்யூ ஷோ ... சாரி ... திடீர் முடிவு ... நம்ம கூட யார் இருக்கான்னு தெரிஞ்சா நீங்க என் மேல கோவமே பட மாட்டிங்க ... அப்படி ஒரு ஆள் தான் நம்ம கூட இருக்காங்க ... லவ்வர்ஸ்கான புது சேட்டிங்க கிரியேட் பன்ன நம்ம எல்லார்க்கும் ரொம்ப பிடிச்ச முக்கியமா லவ்வர்ஸ்க்கு கடவுளா தெரியுற நம்ம காஃபி டே ஓனர் சூரியா .... ஹலோ சார்" என்று மகேஷ் புன்னகையுடன் சூரியாவிடம் கை நீட்ட அவனும் புன்னகையுடன் "ஹலோ" என்று கை குலுக்கினான்.

"சார் உங்க காபிய பத்தி இந்த சென்னை சிட்டில தெரியாதவங்கன்னு யாருமே இருக்க வாய்பில்லை. முக்கியமா லவ்வர்ஸ் ... உங்களுக்கு காபிய இப்படி மேக் பன்னலான்ற ஐடியா எப்படி வந்தது" என்று மகேஷ் கேட்டான்.

"பஸ்ட் எல்லாருக்கும் வணக்கம் ... எனக்கு காபிய இப்படி மேக் பன்னி கொடுக்கனுன்ற எண்ணமே முதல்ல இல்லை. ஆனா ஆரமிச்சது எனக்கானவளுக்காக" என்று சூரியா கூறினான். "அப்படின்னா நீங்க லவ் பன்றிங்களா ... அவங்க நேம் என்னங்க சார்" என்று மகேஷ் ஆர்வமுடன் கேட்டான்.

"ரிஷிவர்தினி" என்று சூரியா தன் உதடுகள் துடிக்க சிறியதாக கலங்கிய கண்களுடன் அவள் பெயரை உச்சரித்தான். "நேம்மே வித்தியாசமா இருக்கே உங்க காதலும் வித்தியாசமா இருக்கும் போலையே ... நாங்க அதை தெரிஞ்சிக்கலாமா" என்று மகேஷ் கேட்டான். சூரியா புன்னகையுடன் தன் கடந்த காலத்தையும் தன் காதலையும் கண்களுக்குள் படமாய் கொண்டு வந்தான்.

சூரியா கல்லூரியை முடித்து விட்டு ஒரு காபி ஷாப்பில் வேலை செய்துக் கொண்டிருந்தான். அங்கு அவனுடன் வேலை செய்யும் நண்பனின் காதலி அங்கு வந்திருப்பதாகவும் சூரியா காபியில் இதயத்தினுள் இதயம் வரைந்து அதில் நிலாவை வரைய கூறி நச்சரித்தான். சூரியாவும் தன் நண்பனின் நச்சரிப்பில் காபியில் அவன் கூறியது போலவே வரைந்து கொடுத்தான். அவனோ அதை சூரியாவையே எடுத்துச் சென்று கொடுக்க கூறினான்.

தான் கொடுப்பதாக அப்பெண் தவறாக நினைத்து விட்டால் என்ற சந்தேகத்தை சூரியா முன் வைக்க அவனோ அவளிற்கு தெரியும் என்று கூறி சமாதானம் செய்து அனுப்பி விட்டான். சூரியாவும் தன் நிலையை நொந்துக் கொண்டு சென்றான்.

அப்பெண் முன் காபியை வைத்தவனை அப்பெண் ஏறிட்டு முறைக்கவும் சூரியா குழம்பி போனான். அவள் முறைத்த முறைப்பை கண்டதும் சூரியாவிற்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது உண்மை தான். அப்பொழுது அவசரமாக சூரியாவின் நண்பன் ஓடி வந்து "டேய் இந்த பொண்ணு இல்லை டா பின்னாடி டேபிள்" என்று கூறி காபியை அவள் முன் இருந்து எடுத்து மன்னிப்பையும் கேட்டு பின்னால் எடுத்துச் சென்றான்.

"மேடம் உங்களுக்கு" என்று சூரியா பவ்வியமாக கேட்டான். அவள் பதில் கூறாமல் அங்கிருந்து எழுந்து சென்று விட்டாள். சூரியா வெகு நேரமாக அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அடுத்த நாள் சூரியா அவளை கண்டதும் மனதில் தோன்றிய இனம் புரியா ஆனந்தத்தை அனுபவித்தவாறே அவள் முன் சென்று முப்பத்திரண்டு பற்களும் தெரியுமாறு நின்றான். அவள் அவனை சிறிதும் கண்டுகொள்ளாமல் அவனிடம் காபியை கூறி விட்டு அமர்ந்திருந்தாள். சூரியா ஹாய் என்று அதில் கிறுக்கி எடுத்து சென்று அவள் முன் வைத்தான். அவள் அவனை முறைத்தவாறு "டெயிலி டேபிள் மாத்தி தான் காபி வைப்பிங்களா" என்று கேட்டாள்.

முதல் முதலாக அவள் அவனிடம் கடுமை பாதியும் மரியாதை பாதியுமாய் கேட்கவும் சூரியா சிரித்து விட்டான். "உங்களுக்கு முறைக்க மட்டும் தாங்க தெரியுது கோவப்படவே தெரியல" என்று கூறி அவள் முறைப்பை அதிகமாக வாங்கிக் கொண்டான். இப்படியே தினமும் அவளிடம் அவன் காபியில் பல கை வண்ணங்களை காண்பித்து பேச முயற்சித்து தோற்றுக் கொண்டே இருந்தான். ஆனால் அவனின் மனம் அவள் தான் தன் காதல் என்று அடித்துக் கூறியது.

முதல் பார்வையில் விழுந்தானோ இல்லையோ ஆனால் அவளின் இரண்டாம் பார்வையில் அவளிடம் மொத்தமாக விழுந்து அவளிடம் இருந்து மீள முடியாமல் காதல் கடலில் ஆனந்தமாக தத்தளித்துக் கொண்டிருந்தான்.

அப்படி இப்படி என்று பேசி பழகி இருவரும் நண்பர்கள் ஆகி இறுதியில் காதலையும் பரிமாறிக் கொண்டனர். இருவரும் ஒருவரை ஒருவர் பேசிக் கொள்ள நேரம் கிடைக்காமல் சென்றாலும் கண்களாலேனும் பேசிக் கொண்டும் விடை பெற்றுக் கொண்டும் நகர்ந்து விடுவர்.

இருவரின் காதலும் தடை இல்லாமல் சென்றுக் கொண்டிருந்த நேரத்தில் சூரியாவின் வாட்ஸ்சப் ஸ்டேட்டஸ்ஸில் அவனுடையை தங்கையின் தோழியுடன் காதலிப்பவர்கள் போல் பேசிக் கொண்ட ஸ்க்ரீன் ஷாட்டை கண்ட ரிஷிவர்தினி உடைந்து போனாள்.

சூரியாவின் அந்த காதல் கொஞ்சும் மெசேஜ்ஜையும் வார்த்தையையும் கண்டவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. இது பத்தாதென்று அதன் கீழே 'தங்கையின் தோழியுடன் காதல் கிசு கிசு' என்று வைத்திருந்தான்.

அதை பார்த்ததும் ரிஷிவர்தினி தன் உலகையையே வெறுத்து விட்டாள். 'எவ்வாறு அவனால் இதை செய்ய முடியும் ... எவ்வாறு அவனால் தன்னை ஏமாற்ற இயலும் ... அத்தோடு மற்றொரு பெண்ணையும் ஏமாற்றுகிரானே' என்று அவளுக்காக வருத்தப்பட்டதோடு அப்பெண்ணிற்காகவும் வருத்தப்பட்டாள்.

அவனுடைய ஸ்டேட்டஸை கண்டதில் இருந்து அவளிற்கு உறக்கமே வரவில்லை. கண்களில் ஈரம் மட்டுமே மீண்டும் மீண்டும் சுரந்துக் கொண்டிருந்தது. கண்ணீரை துடைக்க முடிந்த ரிஷிவர்தினியால் அவளின் துக்கத்தையும் அவனுடனான காதல் நினைவுகளையும் அவனுடைய காபியினையும் துடைத்தெறிய முடியவில்லை. நெஞ்செமெல்லாம் கனமாகி மனமெல்லாம் ரணமாகியது.

அடுத்த நாள் ரிஷிவர்தினியிடம் வேலை விஷயமாக பெங்களூர் செல்ல வேண்டும் என்று கூற அவளை காண சென்றவனை ரிஷிவர்தினி மொத்தமாக ஒத்துகினாள். திடீரென தன்னை பார்ப்பதை தவிர்ப்பதும் கையை தொட விடாமல் தவிர்ப்பதும் வந்ததில் இருந்து ஒரு வார்த்தை கூட பேசாமேல் அமர்ந்திருப்பமாக இருப்பவளை விசித்ரமாகவும் குழப்பமாகவும் பார்த்தான் சூரியா.

எப்பொழுது அருகில் அமர்ந்தாலும் விரலோடு விரல் கோர்க்கும் கைகள் இன்று ரிஷிவர்தினியின் மடியிலே ஆழ புதைந்துக் கிடந்தது. அதை எடுக்க சூரியா நினைத்தாலும் இடம் கொடுக்காமல் தட்டி விட்டாள். அவளின் சுபாவமே இது தான். கோபம் என்றால் பேச மாட்டாள். அதற்காக அவனை தவிர்க்கவும் மாட்டாள். முகத்தை தொங்கப்போட்டுக் கொண்டு அமர்ந்திருப்பாள். ஆனால் இன்று முழுவதுமாக சூரியாவை அவள் தவிர்க்கவும் சூரியா "என்ன ரிஷி ஆச்சி எதுக்காக இப்படி பன்ற" என்று பொறுமையாக கேட்டான்.

"இதுக்கு மேல எனக்கு நீ என்ன பன்னனும் ... இதுவே போதும் இதுவே மனசுல வலியும் வேதனையும் முழுசா நிறஞ்சி இருக்கு நீ புதுசா எதாவது செய்யனுமா" என்று அழுகையுடன் மென்மையான குணம் கொண்ட ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாத ரிஷிவர்தினி கூறினாள்.

"முதல்ல என்ன பன்னன்னு சொல்லு டி" என்று சூரியா கோபமாக கேட்கவும் ரிஷிவர்தினி "அதான் உன் ஸ்டேட்டஸ்லே எல்லாம் பாத்தனே" என்று அவளும் கோபமாக பற்களை கடித்துக் கொண்டு கூறினாள். அப்படி என்ன ஸ்டேட்டஸில் என்று எடுத்து பார்த்த சூரியா அதிர்ந்தான். "ரிஷி ... இது ... இது நா இல்லை ... நா பன்னல" என்று சூரியா நா தத்தியடிக்க கூறினான்.

"போதும் நீ இதுக்கு மேல எதுமே சொல்ல வேணா" என்று கூறிய ரிஷிவர்தினி கிளம்ப போக சூரியா தடுத்தான். இருவரும் பல வாக்குவாதத்திற்கு பிறகு ரிஷிவர்தினி "எனக்கு இது தேவை தான் உன்னை நம்பனன் இல்லை கண் மூடி தனமா நம்பனன் இல்லை தேவை தான்" என்று கூறி அழுதாள். "நா சொல்ர எதையுமே இப்ப நீ நம்ப மாட்டிங்கிற அப்பறம் எந்த நம்பிக்கைய பத்தி பேசற" என்று கேட்டான்.

"அதை உடச்சவனே நீதான" என்று ரிஷிவர்தினி கூற "நா அத பன்னலன்னு சொல்ரன் இல்லை ஏன் டி இப்படி நம்பிக்கை இல்லாம பேசற" என்று சலிப்பாக கேட்டான். "எனக்கு நம்பிக்கை போச்சி சூரியா" என்று ரிஷிவர்தினி கூற "அப்போ போய் தொலை ... எப்படியோ போ ... இனி நமக்குள்ள எந்த உறவும் இல்லை எந்த பேச்சும் இல்லை" என்று கோபமாக கூறியவன் வேகமாக அங்கிருந்து கிளம்பி விட்டான். ரிஷிவர்தினி அழுதவாறே அங்கேயே அமர்ந்திருந்தாள்.

அனைத்தையும் சூரியா கூறி முடிக்க "வாவ் ... சார் ... அதுக்கு அப்பறம் நீங்க அவங்களை பாக்கவே இல்லையா" என்று மகேஷ் கேட்டான். "நோ ... நா கோவத்துல பெங்களூர் போய்ட்டன்... கொஞ்ச கொஞ்சமா சம்பாதிச்சி ஓன் காபி ஷாப் ஆரமிச்சன் நா நினைச்சத விட சூப்பரா போச்சி ... இப்போ இங்க இருக்கன்" என்று சூரியா கூறினான்.

"சார் கேக்கறனேன்னு தப்பா நினைச்சிக்காதிங்க இப்பவும் நீங்க அவங்களை லவ் பன்றிங்களா ... அவங்களும் உங்களை லவ் பன்னிட்டு இருப்பாங்கன்னு நினைக்கிறிங்களா" என்று மகேஷ் கேட்டான்.

சூரியா சிறிய புன்னகையுடன் "இரண்டுக்கும் ஒரே பதில் தான் எஸ்" என்று கூறினான். மகேஷ் எப்படி என்று கேட்க "அதான் நாங்க ... நாங்க சண்டை போடல எங்களுக்குள்ள இருக்கறது மிஸ் அன்டர்ஸ்டான்டிங் ... அப்பறம் ஏன் நா அவளை விட்டு போனன்னா ... என்னை பத்தி அவ தனியா யோசிச்சி புரிஞ்சிப்பான்னு தான் ... இப்போ அவளுக்கு என் மேல துளி கூட கோவம் இருக்காது ... இப்போ இந்த நிமிஷம் என் பேச்சை அவ கேட்டுட்டு இருப்பா" என்று சூரியா கூறினான்.

என்ன ஒரு புரிதல் என்ற ஆச்சரியத்துடன் பார்த்த மகேஷ்க்கு மற்றொரு சந்தேகம் எழுந்தது. "சார் அப்போ நீங்க" என்று ஆரமித்தவனை இடைமறித்த சூரியா "நா அந்த மெசேஜ் பன்னல என் தங்கச்சி அவ ப்ரண்ட் கிட்ட விளையாட்ன ட்ரூத் ஆர் டேர் கேம்க்காக என் மொபைல்ல இருந்து அவளோட ப்ரண்டுக்கு என்னை மாதிரி மெசேஜ் பன்னி அத ஸ்டேட்டஸ் வச்சிருக்கா அது தான் எங்களுக்குள்ள பிரிவு வர காரணம் ஆகிடுச்சி ஆனா இந்த பிரிவுல அவளை நானும் என்னை அவளும் நிறைய புரிஞ்சிகிட்டோம்" என்று கூறினான்.

"பக்கத்துல இருக்கும் போது நம்ம மனசு நம்ம பார்ட்னர்ர கண்டுக்காது ஆனா விலகி இருக்கும் போது அவங்களோட நினைவுகள் தான் சுத்தி சுத்தி வரும் ... அவங்களோட சின்ன சின்ன எமோஷன் கூட நமக்கு அப்போ தான் தெரியும் ... அதோட புரிதல் தான் இது" என்று சூரியா கூறினான்.

"இப்போ அவங்களை நீங்க பாக்க நினைக்கிறிங்களா" என்று மகேஷ் கேட்க "ரிஷி ... நா உன்னை தனியா விட்டு போனதுக்காக சாரி ... அந்த ஸ்டேட்டஸ் மேட்டர் தெரிஞ்சதுமே உன் கிட்ட ஓடி வரனுன்னு மனசு சொல்லுச்சி ஆனா மூளை அவளோட வாழனுன்னா முதல்ல வேலை வேனுன்னு சொல்லுச்சி அதனால எனக்கான ஒரு அடையாளத்த தேடிக்க நா உன்னை விட்டு விலகி இருந்தன் ... நீ இத கண்டிப்பா கேட்டுட்டு இருப்பன்னு எனக்கு தெரியும் ... அதே மாதிரி நீ என்னை மட்டுமே நினைச்சிட்டு இருப்பன்னும் எனக்கு தெரியும் ... உனக்காக நா என் நம்பர்ர இப்ப வரைக்கும் மாத்தாம இருக்கன் உனக்காக வெயிட் பன்னுவன்" என்று சூரியா கூறினான்.

"சூப்பர் சார் ... நம்ம லவ்வர்ஸ் டேக்கு ஒரு கேப் காதல் கதைய கேட்டோம் என்ஜாய் பன்னோம் பீல் பன்னோம் இப்போ நம்ம கிளம்பறோம் இதோ உங்களுக்கான பாடல்" என்று மகேஷ் நிகழ்ச்சியை முடித்து விட்டு பாடலை போட்டான்.

"நா இங்க வந்ததே ரிஷி கிட்ட பேசனுன்னு தான் ... அதனால தான் உங்க மேனேஜர் கேட்டதும் ஓகே சொன்னன் ... ரொம்ப தாங்க்ஸ்" என்று சூரியா மகேஷிடம் கூறி விடைபெற்றான்.

வெளியில் சென்று காரில் ஏறிய சூரியாவிற்கு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வரவே அழைப்பை ஏற்றான். "நானும் உனக்காக வெயிட் பன்னிட்டு இருக்கன்" என்ற ரிஷிவர்தினியின் குரலை கேட்டதும் சூரியாவிற்கு அளவில்லா மகிழ்ச்சி. அவன் இதயம் படபடவென அடித்துக் கொண்டது.

"ரிஷி ... எங்க" என்ற சூரியாவின் கேள்வி காற்றுக்கே கேட்கவில்லை அவ்வளவு மென்மையாக இருந்தது. ஆனால் அவளுக்கு எவ்வாறு கேட்டதோ "நீ என்னை எங்க விட்டு போனியோ அங்க" என்று ரிஷி கூறவும் சூரியா வேகமாக காரை இருவரும் இறுதியாக சந்தித்த இடத்திற்கு செலுத்தினான்.

அரக்க பறக்க ஓடியவனை கண்டதும் முகம் முழுக்க ஆனந்தமும் மலர்ச்சியும் நிறைய ரிஷிவர்தினி எழுந்து நின்றாள். சூரியா அவள் அருகில் சென்று நிற்க இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு நாற்காலியில் அமர்ந்தனர். ரிஷி சூரியா கைக்குள் கை விட்டு அவன் விரல் கோர்த்தவள் அவன் தோலில் மௌனமாக சாய்ந்துக் கொண்டாள்.

ஆயிரம் வார்த்தைகள் காதலின் பிரிவை பற்றி பேசும் ஆதங்கத்தை விட அவரவரின் மனம் விரும்பியவரின் மௌனமான நெருக்கமே கவலைகளை தூரத்தள்ளி மனதெங்கும் குளிர்ச்சியையும் இதழ் முழுக்க புன்னகையையும் கொடுக்கும்.

சூரியாவும் ரிஷியும் அதை தான் அனுபவித்துக் கொண்டிருந்தனர். அவர்களின் வார்த்தை கூட இருவரின் காதல் நெருக்கத்தை கெடுக்க விரும்பாமல் அமர்ந்திருந்தனர்.
 
  • Love
Reactions: Vimala Ashokan