இபபோதெல்லாம் வேளையோட துஷா பஸ்ஸில் ஏறி விட வேண்டும். அடுத்த பஸ்ஸில் போகலாம் என்றிருந்தால் இரவாகி விடும். இன்னும் சிறிது நாளில் அவளுக்கு பைக் வாங்கி தருவதாக மல்லியும் பாட்டியும் சொல்லி இருந்தனர்.
இப்போது செல்லும் வழி வேறு என்பதால், கடையின் முன்பு நின்று ஏற முடியாது. குறைந்தது நூறு மீற்றராவது தள்ளி நடந்தால் தான் அவள் கிராமத்து பஸ் பிடிக்க முடியும்.
பஸ் டாண்டை நெருங்கும் சமயம், அவளை உரசிய படி வந்த நின்ற வேன் ஒன்று அவளை உள்ளிளுத்து கொண்டு தன் வேகத்தை கூட்டியது.
திடீர் என்று நடந்த சம்பவங்களால் துஷாவின் மூளையோ சிறுது நேரம் வேலைநிறுத்தம் செய்து இயங்க, தன்னை சுற்றி நடப்பவை உணர ஆரம்பித்தவளுக்கு அந்த ஏ. சி வாகனத்தினுள்ளும் வியர்க்க ஆரம்பித்தது.
வேனின் கண்ணாடியினை இறுக தட்டி உதவி கேட்டவளை, உள்ளே இழுத்து விட்டு, அவளது இரண்டு கைகளையும் தன் வலிய கரங்களால் இறுகப்பற்றிக்கொண்டான் அருகில் அமர்ந்திருந்தவன்.
"நல்லா கத்துடி! எவனும் ஏன்னெண்டு கேக்க மாட்டான்.. உன்ர குரல் வெளியவும் கேக்காது.... வாய் எப்ப வலி எடுக்குதோ... அப்ப அடங்கு" என்ற ஆண்குரல் முன்புறம் இருந்து வரவும், யார் என்று பார்ததாள்.
"என்னடி அப்படி பார்கிற....? நினைவில இருக்கிறனா நான்........! இல்லாட்டி மறந்து போச்சோ...?
அது எப்பிடி மறக்கும்...? மறந்தா ஆள் வைச்சு அடிச்சிருப்பியா...?
என்னடா ஆள் வைச்சு அடிச்சு, போலீஸ்ல குடுத்தமே எப்பிடி வெளியால வந்தான் என்டு பாக்கிறியா? நான் முத்துடி!
இது மாதிரி எத்தனை தடவை வந்திருப்பன். உனக்கு வேணும் என்டா அது சிறையா இருக்கலாம்.... பதினாறு வயசிலையே ஜெயிலை பாத்தவன் நான்.
நான் அங்க போறதெல்லாம் ஓய்வெடுக்கிற மாதிரி. அப்பிட பட்ட என்னையே, எவனோ ஒருத்தன் கலரா உயரமா, ட்டை கட்டிட்டு வந்து, ரெண்டு ஆள வச்சு அடிச்சா, அவன் பெரிய வீரனா?
எவன்டி அவன் என்மேல கைவைச்சவன்.? இப்ப அவனை வர சொல்லு.
பெரிய ஹீரோ கணக்க வசனம் பேசினானே.!
துஷாவுக்கு யாரும் இல்ல என்ட தைரியத்தில தானே, அவளை ஊரையும், வீட்டையும் விட்டுட்டு ஓடி வர்ற அளவுக்கு பண்ணின.... இப்போ நான் இருக்கன் என்டானே!
உனக்கு யாராச்சும் கெட்டது நினைச்சாலே, நினைச்சவன் உடம்பில உயிர் இருக்காதமே! அப்பிடியா...? எகத்தாளமாக பேசியவன்,
அவ்வளவு வசனம் பேசீட்டு இப்ப என்க போயிட்டான் அந்த வெள்ளை பணியாரம்? நினைச்சது மட்டுமில்லடி தூக்கிட்டன்.
இனி உனக்கும் எனக்கும் கல்யாணம் தான்... எப்பவெண்டு கேக்கலையே!
இப்பவே... இருட்டீட்டுதே... இப்ப எப்பிடி என்டு நினைக்காத.... அதெல்லாம் முத்து மாமா ஏற்பாடு பண்ணிட்டன்.
கல்யாணம் முடிஞ்சு அடுத்த நிமிஷம் சாந்தி முகூர்த்தம் தான்.
அந்த வெள்ளை பணியாரம் எல்லாம் உனக்கு ஒத்து வரமாட்டான். அவன பாத்தா ரெண்டு அடிகூட தாங்க மாட்டான் போல. பாலும் பழமும் சாப்பிட்டு வளந்திருப்பான்." என கூறிக்கொண்டு போனவன் பேச்சு சுத்தமாக துஷாவுக்கு புரியவில்லை.
அவன் யாரை பற்றி கூறுகிறான் என்று கூட அவள் அறியாள். ஆனால் நடப்பவை எதுவும் தனக்கு சாதகமாக இல்லை என்பது மட்டும் தெளிவானது.
எப்படியாவது இவனிடமிருந்து தப்பித்தாக வேண்டும். அதற்கும் சாத்தியமில்லை என்பது போல், அவளது இருபுறமும் பார்க்க தடியர்கள் இருவர் அமர்ந்திருந்தனர்.
அரண்போல் இருப்பவர்களிடம் இருந்து எப்படி தப்பிப்பிப்பாள்.?
அப்படி தப்பித்தாலும் வேனின் வேகத்திற்கு கீழே விழுந்தால், எலும்பு கூட மிஞ்சாதே.!
'செத்தாலும் பரவாயில்லை.. இவன்ர கையால மட்டும் நான் தாலி வாங்கிக்க கூடாது.' என்று எண்ணியவள். அவர்களில் ஒருவன் அசந்த நேரம் பார்த்து, திடுமென கையை அவனிடத்தில் இருந்து பிடுங்கியவள், வேனின் லாக்கை ஒரு கையால் அமத்திக்கொண்டு, மற்ற கையால் கதவை இழுத்தாள்.
அதற்குள் சுதாகரித்த அந்த தடியன், அவளை இழுத்த வேகத்தில், கன்னத்தில் ஒன்று விட்டு கதவை பூட்டினான்.
"சாபஷ்டா... இன்னும் ரெண்டு போட்டிருந்தாலும் நான் கேட்டிருக்க மாட்டன்.
அப்பிடியே அப்பன்ர குணம்... எனக்கு பொண்ண தரமாட்டானாம்... யாரெண்டே தெரியாதவனுக்கு கட்டிக்குடுப்பானாம்ிிி காத்திருந்தவன் பொண்டாட்டிய, நேற்று வந்தவன் கொண்டு போன மாதிரி.
இவள்ர படிப்பு எப்ப முடியும் எண்டு, மூன்டு வருஷாமா நான் தவமா கிடக்கிறன்.. இவள்ர அப்பன் என்னண்டா... எவனோ அவன்ர அண்ணன் நண்பன் மகனுக்கு வாக்கு குடுத்திட்டன், நாக்கு கொடுத்திட்டன் எண்டுவான்,
போனா போகட்டும் போடா எண்டு போகோணும் நான்...
விட்டுடுவனா...?
அது தான் இவளை ஏத்த தனியா கார்ல போனவனை, டிப்பரை வைச்சு ஏத்திட்டன்" என்னவன் பேச்சை கேட்டவள் அதிர்ந்தே போனாள்.
எப்படி அதிராமல் இருக்க முடியும்?
அவள் தந்தையை இழந்திருந்த சமயம் இவன் தான், தமக்கு ஆதரவாக இருந்து கடைசி காரியங்கள் அனைத்தும் செய்தான்.
இல்லை இல்லை உதவி செய்வத போல் நாடகமாடினான். அப்போது தான், துஷாவின் அன்னை தனக்கு துஷாவை கட்டிக்கொடுப்பார் என்று அவன் எண்ணம்.
"பாவி நீ தான் என்ர அப்பாவ கொன்டியா? அப்பான்ர உயிர் உனக்கு விளையாட்டா போச்சாடா?" அவன் சட்டையை பிடித்திழுத்தவள் கையினை உருவி எறிந்தவன்,
"என்னடா பாத்திட்டே இருக்கிறீங்கள்...? இன்னும் கொஞ்ச நேரத்தில கல்யாணம்.. இவள் சட்டைய கசக்கினா எப்பிடிடா இதை போடுறது? முதல்ல இவ கைய விடாம புடி!" என்றான்.
" உனக்கு நான் வேணுமாடா? எனக்காக தானே அப்பாவ கொன்ட...
இப்ப சொல்லுறன்... நீ கட்டாய தலி கட்டினாலும், என்ர சுண்டு விரல் கூட உனக்கு கிடைக்காது... ஊரில இல்லாத பொறுக்கி தனமெல்லாம் செய்யிற உனக்கு, படிச்ச பொண்ணு வேணும் என்டா, எந்த அப்பன் தான் சம்மதிப்பான்? நீயெல்லாம் மனுசனே இல்ல...." ஆத்திரமாய் அவன் மேல் காறி துப்பினாள்.
அவளது செயலில் கோபம் கொண்டவனோ, பின்னால் இருந்த தடியனில் ஒருவனுக்கு கன்னத்தில் ஒன்று விட்டு,
ஒன்னொட்டா உனக்கு சொல்லனுமா? இவள் நிறைய கதைக்கிறப்பவே வாயை கட்டிருந்தா, இப்ப துப்பி இருப்பாளா?
இதுகெல்லாம் வட்டியும் முதலுமா, தாலிய கட்டிட்டு தாரேன்" ஆத்திரமாய் முன்பக்கமாக திரும்பிக்கொண்டான்.
துஷாவின் வாயில் துணியை திணித்தவர்கள், கையினையும் அசையாது பற்றி கொண்டனர். ஆனால் துஷாவின் திமிறல் தான் நிற்கவில்லை.
முடிந்தவரை அவர்களிடம் இருந்து தப்பித்து போவதே அவள் எண்ணம். ஆனால் அதற்கு அவளால் முடிய வேண்டுமே!
யாருமில்லாத பாதையில் வானும் வேகமாய் போய் கொண்டிருந்தது.
திடீர் என வேகமாக போய்கொண்டிருந்த வண்டி, சடேன் பிறேக் போட்டு நிற்க. முன் இருக்கையுடன் நெற்றி மோதி எழுந்தவளது காயத்திலிருந்து இரத்தம் கசிந்தது.
அதை எதையும் பொருட்படுத்தாது, அந்த சந்தர்ப்பத்தை தனக்கான சாதகமாக பயன்படுத்தலாம் என்று நினைத்தவள் விழிகளோ வண்டி நின்றதன் காரணத்தை ஆராய்ந்தது.
அது ஒரு முச்சந்தி. இவர்களை போக விடாது குறுக்கே கார் ஒன்று மறித்திருந்தது.
"யாரோட கார் இது... நடுறோட்டில?"
என்று ஆத்திரமாக கூறியவன் வண்டியை விட்டு இறங்க எத்தணித்த சமயம், முன் நின்ற காரிலிருந்து, ரதனும் ரவியும் காரிலிருந்து இறங்கினார்கள்.
அவனை கண்டதும்,
" இவனுக்கு என்னால தான்டா சாவு! அது தான் சாவை தேடி வந்திருக்கான்" என்றவன்,
"டேய் பாத்துட்டே இருக்காம, ஒருத்தன் போய் அவனை போடுகிற போடுல, அவன் உயிரோடவே இருக்க கூடாது." என்றான் உறுமலாய்.
அவன் சொற்படியே காரிலிருந்து இறங்கி, அடிக்க போனவன் கையை லாவகமாக பிடித்து, அவன் கையை உடைத்தான் ரதன்.
இதை மற்றைய தடியன் பார்த்து மிரண்டு போயிருந்த சமயம், அவனை தள்ளி விட்டு வெளியே ஓடினாள் துஷா.
இதை முத்து கவனித்து விட்டான்,
உள்ளிருந்தவாறே, கண்ணாடியால் கையினை விட்டு ஓடாது அவளை பிடித்துக்கொண்டவன்,
"அவனே இன்னும் கொஞ்ச நேரத்தில சாக போறான். அவனிட்ட ஓடுற" என்றவன் பிடியோ இறுகியது.
என்ன செய்தால் தன் கையை விடுவான் என்று ரதனை திரும்பி பார்த்தாள். ரதனோ அந்த தடியனை கீழே போட்டு மிதித்து கொண்டிருந்தான்.
எல்லாவற்றிற்கும் ரதனை எதிர் பார்க்க முடியாது என்று நினைத்தவள், பிடித்திருந்த அவன் கையை இறுக கடித்து வைக்க, வலியில் பிடியை தளர்த்தினான்.
ஓடிச்சென்று ரதனை இறுக கட்டிக்கொண்டவளது
இறுகிய அணைப்பே, அவளது பதட்டத்தை பறை சாற்றியது.
விடிந்ததில் இருந்து எடுத்த முடிவுகள் யாவும் துஷாவிற்கு நினைவலைகளில் இல்லை. மாறாக தன்னை காக்க தன்னவன் வந்து விட்டான்... இனி எந்த பயமும் இல்லை என்கின்ற மனநிலையே.
அவள் அணைப்பிலே அவள் எவ்வளவு பயந்திருக்கிறாள் என்பது தெரிய, கோபத்தில் ரதனின் கண்கள் நெருப்பாய் மின்னியது.
அவளை தன்னிடமிருந்து பிரித்து நிறுத்தியவனை கேள்வியாய் பார்த்தவளுக்கு, காரணம் புரியவில்லை. ஆனால் சற்று தாமதித்தாலும், தன்னவனையும் முத்து கொன்று விடுவான் என்ற பயம் எழுந்தது.
அவன் கொலை காரன். அப்பாவ கொன்டவனும் இவன்தான்.. உங்களையும் கொன்டுடுவான்.. வாங்கா போயிடுடன்." என்று அவன் கைரினை பிடித்திழுத்தவள் இழுவைக்கு அசையாது நின்றவன் உடலோ விறைத்திருந்தது.
"சொல்லுறன் எல்லே வாங்கோ" மீண்டும் பயத்தில் இழுத்தவள் பயம் அவனுக்கு புரியாமலில்லை.
சற்றே உடலை தளர்த்தி ரவியிடம் செய்கையால் எதையாே உணர்த்தியவன் மீண்டும் சிலையானான்,
அதை புரிந்து கொண்ட ரவி, அவளிடம்
"வா நாங்கள் போவம்" என்றான்.
"இல்ல நான் வரேல..
அவர ஏதாவது செய்திடுவான் அந்த முத்து. முதல்ல அவர வர சொல்லுங்கோ... சேர்ந்து போவம்..." விடாபிடியாக நின்றவள், அவன் அதை கண்டு கொள்ளாதவனாட்டம் நிற்கவும்,
"அவன் சுத்த பொறுக்கிண்ணா. என்ன செய்யிறது என்டு கூட தெரியாம செய்திடுவான். அவர கூப்பிடுங்கோ." என்றால் இயலாமையில்.
ஏனோ அவளது புலம்பல் ரதனுக்கு ஆத்திரத்தை உண்டு பண்ணியிருந்தது.
"
ரவீ.........." என்றவனது கோபக்குரலில் அமைதியானவளிடம்,
"இனியும் இங்க நிக்கிறது நல்லது இல்ல வாம்மா" என்று அழைக்க...
"அண்ணா....." என்றவாறு ரதனிடம் திரும்பினாள்.
"அவன் கோபமா இருக்கிறான். நீ என்ன சொன்னாலும் கேட்க மாட்டான். இவ்வளவு நேரம் காணேல என்டு வீட்டிலயும் உன்னை தேட போயினம்... அவன் ஏநோ சமாளிச்சுப்பான்.
நீ
வா நாங்கள் போவம்" என்று வந்த காரிலே அவளை அழைத்துக்கொண்டு சென்றான்.
கட்டாய படுத்தி காரில் ஏத்தி விட்டான். ஆனால் துஷாவிற்கோ ரதனை நிலமையை நினைத்து பயமாகவே இருந்தது.
தன் தந்தைக்கு ஆனது போன்று, ரதனுக்கும் ஏதாவது ஆகிவிட்டால்.....?
எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம் செய்து, ஒரு உயிரை எடுத்து விட்டு, அவர் மகளிடமே வந்து, நான் தான் உனக்காக உன் அப்பனை கொன்றேன் என்று வீர வசனம் பேசுவான்.
அதை அவன் வாயல் கேட்டும், அவனை ஒன்றும் செய்யாமல் வந்த அவளது இயலாமையை என்ன சொல்வது.
அவளும் என்ன செய்வாள்? பெண்ணாக அல்லவா போய் விட்டாள்.
'அங்கிள் சந்தேக பட்டது சரி! அண்டைக்கு அங்கிள் சொல்லேக்கயே கவனமாக இருந்திருந்தா, இண்டைக்கு இப்படி ஒரு இக்கட்டில் மாட்டி இருக்க தேவையில்ல..
ரதனையும் இக்கட்டில மாட்டி விட நேர்ந்திருக்காது. என்ர சொந்தக்காரர் கிடைச்ங சந்தோஷத்தில, இதை மறந்துட்டன்.
பேசாம போலீஸ்க்கு போவமா...?
இல்லை எப்படியும் வெளியால வந்திடுவான்..
ஆனா அப்பாவ கொன்டதுக்கு தண்டனை கிடைச்சே ஆகோணும்.. அப்பாக்காக மட்டுமில்ல... ஆட்டை அறுக்கிற மாதிரி, அவனுக்கு இடைஞ்சால இருக்கிற எல்லாரையும் கொன்டு குவிக்கிறான்.. அவங்களுக்கும் சேர்த்து இவனுக்கு தண்டனை கிடைக்கோணும்..
ஆனா சட்டம் தான் அவனை கண்டு பயப்பிடுதே!' தனக்கு புலம்பிக் காெண்டிருந்தவளுக்கு, தன் தந்தை இறப்புக்கு தானே காரணமாகிப் போனேனே என்று வருந்தலானாள்.
இப்ப
ரதனும் அவனிட்ட மாட்டியிருக்கிறார்... ஏதாவது ஒன்டு ஆகிவிட்டா, அதுக்கும் காரணம் நானகிடுவனே...
இல்ல..... என்னால் இன்னொருதருக்கு இனியும் ஒன்டும் ஆகக்கூடாது. எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை..' என நினைத்தவள் ரவியிடம்,
"அண்ணா.. காரை திருப்புங்கண்ணா! அவரிட்டயே திரும்ப போகலாம்... ப்ளீஸ்ஸண்ணா.... அவரால தனியா அந்த தடியன்கள சமாளிக்க ஏலாது.... அந்த மோடன், அப்பாவ கொன்டது போல அவரையும் கொன்டிடுவான்.
உடனயே காரை திருப்புங்கோ." என்றாள் கெஞ்சலாய்.
"பயப்பிடாத துஷா...
நீ இந்த மாதிரி இருக்கிறதால தான், எல்லாரும் உன்னை மிரட்டினம்...
முதல்ல பயப்பிடுறத நிப்பாட்டு.. பல்லிக்கும், கரப்பான் பூச்சிக்கும் பயந்திட்டு இருந்தா இந்த மாதிரி தான் நடக்கும்.
உனக்கு முன்னால தானே ஒருதன தூக்கி போட்டு மிதிச்சான்.... அந்து முத்துவால ரதனுக்கு எதுவும் ஆகாது." என்றான் ஆறுதலாய்.
"இல்லயண்ணா... நீங்கள் நினைக்கிறது போல அவன் சாதாரணமானவன் இல்ல. அவனுக்கு பின்னால பெரிய அரசியலே இருங்கு. கொலை, கொள்ளை, கஞ்சா கடத்தல் எல்லாம் சாதாரண விஷயம் அவனுக்கு.
பதினாறு வயசிலையே போலீஸ் புடிச்சிட்டு போனதுண்ணா. இப்ப பெரிய ரவுடி ஆகிட்டான்."
"
எந்த பெரிய கொம்பனா இருந்தாலும் ரதன் பாப்பான்... நீ யோசிக்காத...
அதோட அவன்ர ப்ரெண்ட் போலீஸ்ல இருக்கிறான். அவனையும் இப்ப போன் பண்ணி கூப்பிட்டிருக்கான்.
இப்ப அவனும் வந்திருப்பான்....
உன்னை இறக்கி விட்டுட்டு நான் திரும்ப போகோணும்....
உன்ர வீட்டை பற்றி கேள்வி பட்டன். உன்மேல ரெம்ப பாசமாமே? உனக்கு ஏதாவது ஒன்டு என்டா துடிச்சிடுவாங்களாமே.!"
யார்
பேச்சை எடுத்தால், அவள் அமைதியாவாளோ அவர்கள் பேச்சை ஆரம்பித்தான்.
ஆமோதிப்பதாய் அவளும் தலையசைத்தாள்.
"
அப்ப லேட்டான பதறமாட்டினமா? அவங்களையும் யோசிக்கோணும் துஷா....
சும்மா ரதன் ரதன் என்டு அவனை மாத்திரம் யோசிக்கிற...
அவனுக்க எதுவும் ஆகாது... நான் உனக்கு வாக்கு தாரன்.
நெத்தியால ரத்தம் வருது பார்.... அதை கூட உணராம இருக்கிற.... அதை முதல்ல துடை!" என்றான்.
தன் கைக்குட்டை கொண்டு ஒற்றி எடுத்தவள், ஏதோ தோன்றியவளாய்,
"
அண்ணா!......... என்றாள் உளளே போன குரலில்.
"
சொல்லும்மா..."
"அது.... இப்ப நடந்தது எதுவும் விட்டுக்கு தெரிய வேண்டாமே!" என்றாள்.
காரணம் புரிந்து கொண்டவனும்,
"
சரிம்மா.. இது உன்ர சம்மந்த பட்ட விஷயம்.. உனக்கு எது சரி என்டு படுதோ செய்!" என்றவனும் காரை வீட்டை நோக்கி வேகமாக சலுத்தினான்.
ஏழு முப்பது மணியளவிலே துஷாவை அவளது வீட்டில் கொண்டுவந்து விட முடிந்தது.
காரில் இருந்து இறங்கியவர்களை வாசலில் நின்று வரவேற்றது, அவளது மூன்று அத்தை மார்களும் பாட்டியும் தான்.