• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

35. காற்றோடு கலந்த விதையவள்.

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
799
95
93
Jaffna
"என்னாச்சு?... ஏன் இவ்வளவு நேரம்?



உன்ர போன் நம்பரும் யாருக்கும் தெரியேல...



என்னத்துக்கு தான் வீட்டில இருக்கிறாளுங்களோ... வீட்டு பொண்ணோட நம்பரை கூட வாங்கிக்காம.



உடம்பு சரியில்லாத புள்ள வேற, ஏதாவது ஆகிட்டுதோ என்டு பயந்திட்டன்.



என்ர ராசாத்திக்கு எதுவும் இல்லையே!என்றார்.கவலையாய்.



"இல்ல பாட்டி! ரெண்டு நாள் வேலைக்கு போகல தானே.. அதிக வேல... அதான் நேரம் போனதே தெரியேல.... திடீரென்டு நேரத்தை பாத்தா, ஏழாச்சு.... ஐயோ பஸ் போயிருக்குமே என்ன செய்யிறதென்ட பதட்டத்தில, உங்களுக்கு போன் எடுக்க கூட மறந்திட்டேன் பாட்டி.



சாருக்கும் முக்கியமான வேலை இருக்கிறதனால, அவர் நண்பனை கூப்பிட்டு என்னை வீட்டில விடசொல்லி அனுப்பு வைச்சாரு...



மன்னிச்சிடுங்க பாட்டி!" என்று முடிந்த அளவு அவர்கள் நம்ப கூடிய பதிலை சொல்ல,



"என்ன பொண்ணோ! பாரு எவ்வளவு பயந்திட்டம்... இனியாவது பொறுப்பா இரு!" அன்பாக கண்டித்தவர்,
"கௌதமையும் ஜெகனையும் வேற, தேட அனுப்பிட்டன். அதுகள் எங்கெங்க தேடி அலையுதுகளோ!" என்றவர்,
"ஊர்மி அவங்களுக்கு முதல்ல போன போட்டு சொல்லு."
சரியென ஊர்மிளா செல்ல,



பாட்டியை ஓடி சென்று கட்டிக்காெண்டவள்,
"என்னை மன்னிச்சிடுங்கோ பாட்டி! எதையும் நான் வேணுமெண்டு செய்யேல" என்றாள் அவரை அணைத்தவாறே,

அவள் அணைப்பில் எதையோ உணர்ந்தவராய், அவளை தன் முன் நிறுத்தி அவளை முழுமையாக ஆராய்ந்தவரோ,

"ஏன் உடம்பு
நடுங்குது? உன்ன காணேல என்ட பதட்டத்தில தானே திட்டீட்டன்.. அதுக்கு போர் பயந்தனியா.....?



இல்லாட்டி பாட்டியிட்ட இருந்து ஏதுவும் மறைக்கிறியா?"



என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தவள்,

"ஓம்


பாட்டி நடுங்குது.... காலம சாப்பிட்ட சாப்பாடு...



வேலை கூட இருந்ததால, மதிய சாப்பாட்ட மறந்துட்டன். அதோடு நேரமாச்சு என்டு வேற பயந்திட்டன்."

"


இப்ப தான் உடம்பு சரியாகி வேலைக்கு போன.. அதுக்குள்ள சாப்பிடாம கிடக்கிற... இதுக்குத்தான் அடம் புடிச்சு வேலைக்கு பாேனியா?" என்று செல்லமாக கோபித்தவர், அப்போதே தான் பின்னால் நின்றவனை கவனித்ததை போன்று.



"வாசல்லயே நிண்டு கதைக்கிறம்... சிரமம் பாக்காம இவளை கொண்டு வந்து விட்டதுக்கு நன்றி தம்பி... உள்ள வந்து ஏதாவது குடிச்சிட்டு போங்கோ தம்பி." என்றார் நன்றியோடு.



இவ்வளவு நேரம் துஷா கூறிய பொய்களையும் ,அதை நம்பியதற்கு சான்றாக, துஷாவை அவளுக்கு நோகாதவாறு கண்டித்ததையும், கண் இமைக்காது பார்த்து கொண்டிருந்தவன், உள்ளே அழைக்கவும் தன் சூழ்நிலை உணர்ந்தவனாய்,

"


இல்லை பாட்டி! முக்கியமா ஒரு வேலை இருக்கு.... இன்னொரு நாள் கட்டாயம் வாறன் பாட்டி! நான் போயிட்டு வாறன்." என்றுஅவர்களிமிருந்து விடை பெற்று ரதனிடம் சென்றான்.



நேற்றைய தினமே பிணையில் முத்து வெளியே வந்த செய்திய அவனும் அறிவான்.



அடி பட்ட பாம்பு நிச்சயம் தன் வஞ்சம் தீர்க்க வரும் என்று எதிர்பார்த்தவன்,



முழு நேரமும் துஷா தன் கண்காணிப்பிலே இருக்க வேண்டும் என்று அவளுடனே இருந்து கொண்டான்.



வேலையை முடிந்து வீடு செல்லும் நேரம், அவளை பின் தொடர்ந்து செல்வது அவனது தலையாய கடமையானது.

"


மச்சான் உன்ர கடையில் தான் நிக்கிறன்... நீ இப்ப தான் வெளிக்கிட்டதா சொல்லினம்.. எங்க நிக்கிற?" என்ற ரவியின் அழைப்பில்,

"


பக்கத்தில தான் வந்திடு" என்று இடத்தை கூறி அவனுக்காக பஸ் ஸ்ராண்டை ஒட்டி காத்திருந்த நேரம் தான், அவளை அந்த கும்பல் கடத்தியது.

வேன்
நம்பரை குறித்துக்கொண்டு, காரை ஸ்ராட் செய்ய, பின்னால் நடந்து வந்த ரவியை கண்ணாடி வழி பார்த்தவன்,
"வேளைக்கு ஏறுடா"
என்று அவசர படுத்தினான். ஏதோ விபரீதம் என்று புரிந்து கொண்டவனும் வேகமாக ஏறிக்கொண்டான்.



அவர்களை பின் தொடர்ந்தவர்கள், எங்கு அவர்கள் வேன் போகிறது என்பதை புரிந்து கொண்டு,



இப்படியே பின் தொடர்ந்தால் வேலைக்காகது, வேறு ஏதாவது செய்தால் தான், அவர்களை தடுக்கலாம் என நினைத்து, போலீஸில் இருக்கும் நண்பனிடம் விஷயத்தை கூறியவன் அந்த வேன் இலக்கத்தையும் தான் இப்போது இருக்கும் இடத்தை கூறி அங்கு அவனை வரசொன்னான்.



குறுக்கு வழியே காரை செலுத்தியவன், அவர்களுக்கு முன்பு வந்து பாதையை அடைத்து நின்றான்..



துஷாவை ரவி அழைத்து போவதை கண்ட முத்து,



"கூறு கெட்டவனே...! ஒரு பொட்டச்சிய புடிக்க தெரியாத உனக்கு.? வேடிக்கை பாக்காம~

போ.. போய் அவனை ரெண்டு காட்டு காட்டி அவளை இழுத்துட்டு வா!" என்றான் அதிகாரமாய்.

வாங்கிய காசுக்கு ரதனை அடிக்க போன மற்றவனையும் துவைத்து எடுத்தவன்,
முத்துவிற்கும் பாடம் புகட்ட தயாரானான்.

வெள்ளை சட்டை வேட்டியுமாய் வேனில் இருந்து இறங்கியவன்,



பின்புறமாக காலை மடக்கி, வேட்டி நுணியை பற்றியவன், முட்டிக்கு மேல் வேட்டியை மடித்து கட்டி. இரண்டடிகள் ரதனை நோக்கி எடுத்து வைக்க,



ரதனும் அவன் வீரத்துக்கு குறைந்தவனில்லை என்பதை போல், அவனை விட வீர தோரணையுடன் முத்துவை நோக்கி நடந்தான்.

"


நீ தானேடா அண்டைக்கு ஆள் வைச்சு அடிச்ச வீரன்.? போதையில இருக்கிறவன ஆள் வைச்சு அடிச்சா, அடையாளம் தெரியாது என்டு நினைச்சியா?
போதையில இருந்தால அண்டைக்கு தப்பட்ட.... இண்டைக்கு இப்பிடி தனிய வந்து மாட்டீட்டியே வெள்ளை பணியாரம்...." என்றான் கேலி போல.

அவன் வீர வசனத்தில் பலமாக சிரித்தவன்,
"இவங்கட நிலமைய பார்த்துமா இப்பிடி?



இன்னும் கொஞ்ச நேரத்தில தெரியும்"



"ஓ..... அவ்வளவு நம்பிக்கை... அந்த தீணி பண்டாரங்கள போல என்னையும் நினைக்கிற" என்று வேகமாக வந்தவன், தன் செருப்பு காலால் அவன் நெஞ்சின் மேல் உதை விட்டான்.

இதைாஎதிர் பார்க்காதவனும்


நிலை தடுமாறி கீழே விழுந்தான்.



விழுந்து கிடந்தவனைப் பார்த்து பலமாக சிரித்தவனோ,
சொன்னனே! நீ இதுகெல்லாம் சரி பட்டு வரமாட்ட...



பாரன் உன் விதிய...



இதுவரை எமன் தான் சாகுறவனை போய் சந்திப்பான். ஆனா நீ எமனையே தேடிவந்து சாவை சந்திக்கிற.



நான் பாட்டுக்கு, அவளை கல்யாணம் பண்ணீட்டு என்வேலை முடிஞ்சுது என்டு போயிருப்பன். ஆனா பாரு உன்னை தண்டிக்காம எங்க போகபோற என்டது போல நீயே மாட்டீட்ட" அவனை அடித்த தரியத்தில் பேசிக்காண்டே போனான்.
எழுந்து தன் சட்டைமேல் ஒட்டிய மண்ணை சாதாணமாக தட்டியவனை நோக்கி மீண்டும் கையை ஓங்கியவன் கையினை சாதாரணமாக பிடித்தவன்,
மறு கையை மடக்கி அவன் வாயில் ஒன்று விட்டான்.
ஒரு அடியிலே வாய் பிளந்து இரத்தம் கொட்டியது.



அதை மறு கையால் தடவி பார்த்தவன், ஆவேசமாய் ரதனை அடிக்க போக, அவனை பற்றியிருந்த கையை மடக்கி, நிலத்திலே சரித்து, தன் கால்கலாலே நெஞ்சின் மேல் பல முறை மிதித்தான்.
இரண்டு அடிகளிலே சுருண்டு போனவனை,

"


எதிர்ல நின்டு பேசவே யோசிப்பாங்கள்....என்ர நெஞ்சிலயே உதையிறியா நீ...?



முதல் தடவையே உன்னை எச்சரிச்சன்... உன்ர நிழல் கூட அவள்ல விழக்கூடதென்டு..., போதையில இருந்ததால தான் எதுவும் உனக்கு நினைவில இல்ல போல...

அண்டைக்கு ஏன் உன்னை அடிச்சன் தெரியுமா? அவளை கட்டாய கல்யாணம் செய்ய பாத்ததால தான்..



ஆனால் இண்டைக்கு அவள்ர அப்பா சாவுக்கு காரணமாகி, அவளை அனாதை ஆக்கின உன்னை உயிரோட இருக்க கூடாது." என்று உறுமியவன், அவனை கவுழ்த்து, கழுத்தை எழும்பை உடைத்து இவனை கொன்று விடும் எண்ணம் கொண்டு குனியும் சமயம், போலீஸ் நண்பன் ஜீப்பில் வந்திறங்கினான்.


"வேண்டாம்டா...


இவன் செத்தா பெரிய பிரச்சினையாகிடும், என்னட்ட விடு! அவனை சட்டத்திட்ட நான் ஒப்படைக்கிறன். பிறகு சட்டம் அவனை பாக்கும்"



"எப்படி..! இப்ப விட்டிச்சே! அப்பிடியா? எத்தனை தடவை சட்டத்திட்ட ஒப்படைச்சாலும், ஈஸியா வெளியால வந்திடுவான்.



இவன் செய்யிற பாவங்களுக்கு, சாகவும் கூடாது,... வாழவும் கூடாது... அப்பிடி ஒரு தண்டனை தரோணும்... இது இவனை போல ஆக்களுக்கு பாடமாவும் இருக்கோணும்....




இதுக்கு இவன்ர அப்பாவும் உடந்தையா இருக்கிறதால, இவனுக்கு தார தண்டனையில, அவரும் நொந்து போகோணும்....



சொத்து சொத்து எண்டு, உலகத்தில இல்லாத வட்டி பெயரை எல்லாம் சொல்லி ஊரான் பணத்தை ஏப்பம் விட்டவன் தானே அவனும்...



அதற்கு தண்டனை அனுபவிக்க வேண்டாம்..... இவனுக்கு வைத்தியம் பாத்து அதை கரைச்சிடுவம்.." என்று ஆதங்கமாய் பேசியவன், கீழே கிடந்தவன் முதுகில், எட்டி ஒரு உதை விட்டு, ஜீப்பின் முன்புறம் ஏறி அமர்ந்து, ரவியின் வரவை எதிர் பார்த்திருந்தான்.

அவ்வழி


காட்டு வழி என்பதாலும், யானைகள், மற்றும் கொடிய விலங்குகள் மனிதரை தாக்குவதனால், அந்த பாதையை பகல் நேரங்களிலேயே அதிகளவானோர் பயன்படுத்துவது இல்லை.



இரவு நேரங்களில் சொல்லவா வேண்டும்.? அதனால் தான் அந்த பாதையை தேர்ந்தெடுத்தான் முத்து.



சிறுது நேரத்தில் ரவியும் வந்து விட்டிருந்தான்.

அவன் வந்த


காரின் டிக்கியை திறந்து, வீச்சருவாளை எடுத்தவன், முத்துவின் இரண்டு கைகளையும் கதறக்கதற வெட்டினான்.



இருட்டில் எங்கோ தேடியெடுத்த உருட்டு கட்டையினால், அவன் தலையை குறிபார்த்து ஒன்று விட்டான்.



வலியில் சிறுது நேரம் முனங்கியவன் மயக்கம் கொண்டிருந்தான்.



அப்படி அவன் செய்தும் அவன் கோபம் குறைந்தது போல் தெரியவில்லை....



வைத்திருந்த கட்டையாலேயே அவன் கால்களை பதம் பார்த்தவன்,



கோகுலிடம் நீ என்ன செய்வியோ தெரியாது... இவன் உயிரோடு இருக்கோணும்.... ஆனால் இதெல்லாம் விபத்து போல வெளிய தெரியோணும்." என்றான்.

"சரிடா விடு! அதை நான் பாக்குறன்" என்றவன்,

முத்து வாகனத்தில்
இருந்த டிரைவரை அப்போது தான் கண்டான்.



அவனிடம் சென்றவன்,



"நீயும் இவங்கட ஆளா?"
"இல்லை ஐயா...! நான் வாடைகைக்கு வாகனத்தை ஓட்டுவன். இவனுங்கள் அந்த பொண்ணை கடத்தப் போறது எதுவும் எனக்கு தெரியாது.
கொஞ்ச நாளா எனக்கு யாரும் வேலை தரேல... இவங்கள் வந்து கூப்பிட்ட உடனம், வேலை கிடைச்சா சரி என்டு வந்துட்டன்." என்று அங்கு நடந்த சம்பவங்களை பார்த்து பயந்திருந்தவன் கூற,

"


உன்னை நம்பலாமா.?"

"


சத்தியம் ஐயா... எனக்கும் இவர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. பிள்ளை குட்டிக்காரன் வேற... என்னை விட்டிடுங்கோ.... நான் இங்க நடந்தது எதையும் வெளிய சொல்ல மாட்டன்" என்றவன் கையில் ஒரு தொகை பணத்தை திணித்தவன்,

"
சொல்லுறது இல்ர..... சொல்ல நினைச்சாலே இவங்கட நிலைதான் உனக்கும்"

"


ஐயோ...! இவனுங்கள் நல்லவங்கள் என்டா கூட பரவாயில்லை. எந்த அளவுக்கு கெட்டவங்களன என்டு அவங்ட கதையிலயே தெரிஞ்சிட்டு,

என்ர புள்ளைக்கு இந்த பொண்ணு வயது தான் வரும்... அவளுக்கு இதே போல நடந்தா... நானும் இதை தான் செய்வன். என்னை தாரலமாக நம்பலாம்." என்றவனை தோளை தட்டி அவன் பயத்தை போக்கியவன்.



அடிபட்டு விழுந்து கிடந்த அவன் அடியாற்களில் ஒருவனை, தண்ணீரை தெளித்து எழுப்பியவன், அவனை கொண்டு, அந்த காரை இயக்க செய்து, மற்ற இருவரையும் அந்த வாகனத்தின் பின் இருக்கையில் இருத்தி, மரத்துடன் பலமாக அடிபட வைத்து விட்டு, எதுவும் நடவாதது போல வீடு வந்து சேர்ந்தார்கள்.



இங்கு


எல்லோரையும் சமாதாணம் செய்து, உண்டு முடித்து தன் அறையில் வந்து முடங்கியவளுக்கு பதட்டம் இன்னும் குறைந்த பாடில்லை.



ரதனுக்கு ஏதாவது ஆகிவிட்டிருக்குமோ என்ற கவலை ஒரு புறம், இன்று போல் இனி மேலும் இவன் தன்னை எதாவது செய்து விடுவானோ என்று பயம் மறு புறம்,



தந்தை சாவில் இப்படி ஒரு மர்மம் இன்னொரு புறமென எமனதை போட்டு குழப்பிக் கொண்டிருந்தவளுக்கு,



ரதனை பற்றி அறிந்தாக வேண்டும் போல் இருந்தது.
அவன் நம்பர் அவளிடம் இல்லை. ஒரு முறை அவன் அறையில் வைத்து தந்தான் தான், அவளுக்கு அது தேவை படாததனால் அங்கேயே அதை வைத்து விட்டாள்.

'


இப்ப எப்படி தெரிஞ்சிக்கிறது?



ரவி அண்ணா போயிருப்பாரா?' யோசனையை விட்டு விட்டு அவனுக்கு அழைப்பை கொடுத்தாள்.



அவள் பதட்டத்தை அதிகப்படுத்துவது போல, அவள் அழைப்பை அவன் ஏற்கவில்லை.



காரில் சென்று கொண்டிருந்ததால் அவனும் காவனிக்கவில்லை.


பலமுறை அழைத்தவள், பதில் வராத காரணத்தினால் முயற்சியை விட்டு விட்டாள்.



ஆனால் தூக்கம் தான் வர மறுத்தது.



தந்தையை போல், இவனையும் இழந்து விடுவேனோ என்ற பயத்தில், மூச்சினை கூட இயல்பாக விட முடியவில்லை.



ஆறுதல் தேடக்கூட யாருமில்லாது,

அன்னையின் புகைப்படத்தருகில் சென்று நின்றவள், அவரையே விழியசையாது நோக்கினாள்.

அவரின் சிரித்த முகமானது அவளை தேற்றுவது போலவே இருந்தது.

அதே நேரம்


கையிலிருந்த போனும் உதறல் எடுக்க,



அவசரமாக அழைப்பை ஏற்று,
"சொல்லுங்கண்ணா... பிரச்சினை எதுவும் இல்லையே! அவர் நல்லா இருக்கிறார் தானே!" என்றாள் மூச்சுக்கு கூட இடங்காெடாது தொடர்ச்சியாய்.

"எதுவும் இல்லம்மா...

அவனும் நல்லா இருக்கிறான்.



இத்தனை வாட்டி போன் பண்ணிருக்கிற.. இன்னும் நித்திர கொள்லேலயா..?"

"


எப்படியண்ணா நித்திர வரும்.?



நடந்த நினைச்சா கண்ண மூட முடியுமா?

அவர்


மட்டும் வரேல என்டா என்ர நிலமை?
நினைத்து கூட பாக்க முடியேல....



இப்ப அவர் எங்கண்ணா? நீங்கள் ஒண்டும் வபாய் பொய் சொல்லேலயே!"

"


காலக்கொடுமை! உண்மையை சொன்னாலும் பொய்யா...? அவனுக்கு ஒண்டுமில்லை... நம்பேல எண்டா போனை குடுக்கிறன், கதைச்சு பாரு" என்றான்.

"


ஆ... குடுங்கோ" என்றாள் அவனுடன் பேசினாலாவது, தன் பதட்டம் குறையும் என்ற நம்பிக்கையில்.

"


ஹலோ..." என்றதும் தான் அவள் உயிரே வந்தது.
ஆனால் அதன் பின் என்ன பேசுவதென்பது அறியாது, அமைதி காக்க.

"


ஹலோ......" என்றான் அவன் மீண்டும் .

"


ஆ... சார்! உங்களுக்கு எதுவும் இல்ல தானே!" என்றாள் தட்டு தடுமாறி.
ஆனால் அவன் நிலமையை அவன் வாயால் அறிந்து கொள்ளும் ஆவலில்.



அவள் பதட்டம் அவனுக்கும் புரியாமலில்லை. வேண்டும் என்றே அவளை சீண்டி பார்க்க எண்ணியவன்.



ஆ... எனக்கென்னா...? நான் ரொம்ப நல்லா தான் இருக்கிறன். ஏன் அதை நீ எதிர்பாக்கேலயோ..!" என்றான்.

ஏனோ மறு


புறம் அமைதி நிலவியது.



"


என்ன...? உண்மைய சொன்னா அமைதியா?" என்றதும் விம்மல் சத்தம் தொலைபேசி வழியே கேட்க,


எனக்கு ஒண்டுமில்ல துஷா... நாங்கள் வீட்டுக்கு போய் கொண்டிருக்கிறம்... நாளைக்கு பாக்கலாம்" என்றதோடு அழைப்பை துண்டித்தான்.



அவனது கேள்விகள் துஷாவின் மனதை ரணமாக்கியது.

"இப்பிடி ஒரு கேள்வி கேக்கிறதுக்கு துடிச்சன்..

பேசாமல் காலேலலே விசாரிச்சிருக்கலாம்...



அது எப்புடி? எனக்காக தன்ர உயிரை கூட பெருசா நினைக்காம, அந்த முரடனோட சண்டை போட்டிருக்கிறான்...



அவனை நினைக்காம சுயநலமா என்னால இருக்க ஏலும்?

இப்ப அந்த முத்து எங்க..?

ஒரு வேளை அந்த தடியனுக்கு அடிவாங்கினத பார்த்துட்டு, பயத்தில ஓடியிருப்பானோ!



இருக்கும்...எது எப்படியோ...... ரதனுக்கு எதுவும் இல்லை என்றதே சந்தோஷம்.



அவன் என்ன நினைச்சா எனக்கென்ன?



நானும் அவன்ர மனச காயப்படுத்தியிருக்கிறன் தானே! அதற்கு இது சரியா போச்சு' என்று திரும்ப திரும்ப இன்றைய நிகழ்வுகளிலே உலன்றவளுக்கு, இன்றைய இரவு



உறக்கமில்லா இரவானது.