உன்ர அம்மா அப்பாட்ட போய் சொல்லு..... என்ன நாடகமும் போட்டும், எதுவும் அங்க பலிக்கேல... உண்மை தெரிய வந்துட்டுது எண்டு," என்றவன், விறு விறு என உள்ளே சென்று அவள் உடைகளை கையில் அள்ளிக்கொண்டு வந்து முற்றத்தில் கொட்டினான்.
நின்ற இடத்தில் நின்ற டியே மல்லியையும்,தாத்தா பாட்டியையும் மாறி மாறி உடைந்த பார்வை பார்த்தவளால், எதுவும் கூற முடியவில்லை... மாறாக அழுகையே வந்தது.
அந்த நேரம் பார்த்துதான் அங்கு வந்தார் வாசன்.
வழமைக்கு மாறாகமுற்றத்திலேயே வீட்டவர்கள் திரண்டு நிற்பதை கண்டவர், பைக்க அவசரமாக நிறுத்திவிட்டு ஓடி வந்தான்.
அவனை கண்டதும் ஆறுதல் தேடி, "அங்கிள்....." என்று ஓடிச்சென்றவள் அவனை கட்டிக்கொண்டு அழுதாள்.
"என்னாச்சு துஷாம்மா...?" என்றான் அவளது கண்ணீரின் காரணம் புரியாது.
"உண்மை தெரிஞ்சு போச்சு...
இவளும் இவளின்ர அம்மாவும் ஆடின நாடகம் வெளிச்சத்துக்கு வந்திட்டுது" முன் வந்து கூறியவன்,
"அம்மாவும் பொண்ணும் நடத்துற நாடகத்துக்கு நீங்களும் துணையோ..?
காசு தான் வேணும் எண்டு கேட்டிருந்தா, தூக்கி எறிஞ்சிருப்பம்.. எதுக்கு அவள் பெத்த பொண்ணையே, அவளின்ர வாயால பெத்தவ செத்திட்டம் எண்டு, பொய் சொல்ல வைக்கோணும்?
அங்க போய் சொல்லுங்கோ...
இங்க அவளுக்கு உறவென்டு யாரும் இல்ல... யாரையும் நம்ப வைக்குறதுக்கு நாடகமும் ஆடத்தேவையில்லை" என்றான் இழிவாக.
அவன் பேச்சில் எங்கிருந்து தான் வாசனுக்கு கோபம் வந்ததோ.. உதட்டை ஓரமாக இழுத்து வினோத நகை பூண்டவன்.
"உண்மைதான்..... நாடகம் தான் ஆடினம்... இல்லை எண்டு நானும் சொல்லேல....
ஆனா உண்மையும் தெரியாம வாயில வந்ததை எதுவும் பேசி, சின்ன பொண்ண நோகடிக்காத...
இத்தனை சொந்தம் இருந்தும்,
ரெண்டு மாதத்துக்கு மேல, அனாதைய போல, ஏதோ ஒரு மூலையில இருந்து கொண்டு, தன்ர சோகத்தை மறைச்சு சந்தோஷமா இருக்கிறத போல நடிச்சாள் தான்.
எங்க உண்மையை சொன்னா உங்களால தாங்க ஏலாது எண்டும், தான் யார் எண்ட உண்மை தெரிஞ்சா, அம்மா செய்த பிழைக்கு தன்னை தண்டிச்சிடுவீங்களோண்டும் பயந்து, தனக்குள்ளேயே, அவேன்ர சாவ மறைச்சு, உங்களுக்கு முன்ன சிரிச்சா மாதிரி இருக்கிறாளே அதுவும் நாடகந்தான்.
உயிராக இருந்த பெத்தவங்கள இழந்துட்டு, உங்களை தேடி வந்து, சாப்பாட்டுக்கு பாதையில்லாம, சாதாரண ஒரு கடையில் தன்ர படிப்பு, அந்தஸ்து எல்லாத்தையும் மறந்துட்டு அங்க வேலை செய்தாளே... அதுவும் நடிப்புத்தான்.
அவ்வளவு ஏன்? நேற்றைக்கு தான் தன்ர அப்பா சாகேல... கொல்லப்பட்டார் எண்டு தெரிஞ்சும், உங்களுக்கு தெரியாத மாதிரி, தனக்குள்ளேயே கதர்றாளே அதுவும் நடிப்புத்தான்.
அண்டைக்கு ஏன் லேட்டா வந்தாள் தெரியுமா? அவளின்ர அப்பாவை கொன்டவன் கடத்தி, கட்டாய தாலி கட்டப்பார்த்தான்... அதை கூட மறைச்சிருக்கிறாள்.
ஒரு சின்ன பொண்ணு இந்த வயசில அனுபாவிக்காத கஷ்டங்கள அனுபவிச்சு, உறவுகளாவது ஆறுதலாக இருக்கும் எண்டு நம்பி வந்து, இப்படி வாய் பேச முடியாம ஊமையா இருக்கிறாளே இதுவுமே நடிப்பு தான்." ஆதங்கத்துடன் இயலாமையும் கலந்து கூறிக்கொண்டு போன வாசனின் பேச்சை கேட்டவர்கள் முகம் முழுவதும் ஆதிர்ச்சி.
தங்கை தற்போது உயிருடன் இல்லை என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை.
தேவியின் பெற்றவர்களோ ஒரு படி மேல சென்று உறைந்தே போனார்கள்.
"யாருக்கு வேணும் இளா உங்கட சொத்து?
இதை விட பல மடங்கு சொத்திற்கு சொந்தக்காரி அவள்.
வேலை செய்கிறாள் எண்டதுக்காக சாப்பாட்டிற்கு வழியில்லாம தான் உங்களிட்ட வந்தாள் எண்டா நினைக்கிறீங்கள்.?
இல்லவே இல்லை..... தேவி சாகேக்க அவளுக்கும் உறவெண்டு நீங்கள் இருக்கிற தகவலே சொல்லியிருக்கிறாள்." என அவளது கதையை சொல்ல ஆரம்பித்தார்.
"நீங்க எல்லாரும் தேவி தான் தப்பு பண்ணிட்டாள் என்டுறீ்ங்கள்.
தேவி தப்பு பண்ணாள் தான். அதை யாரும் மறுக்கேல.... ஏதோ வயசுக் கோளாறில, அந்த சூழ்நிலையில அவளால அதை தான் செய்ய முடிஞ்சிது.....
உங்கள் எல்லார் மேலையும் உயிரா இருந்த, அவளால மட்டும் உங்களை மறந்து நிம்மதியா இருக்க முடிஞ்சுது எண்டா நினைச்சீங்கள்?
இத்தனை பேர் அவளை பிரிஞ்சு ஒருதருக்கொருதர் ஆறுதல் சொல்லி மனச தேத்திருப்பீங்கள். ஆனா தேவிக்கு....?
இத்தனை பாசத்தை இழந்திட்டு, யாருமே இல்லாம எப்பிடி தவிச்சிருப்பாள்.
கிழமையில் ஒரு தடவை அவளை பாக்க போவேன், போனதில இருந்து, வீட்டுக்கு திரும்புற வரைக்கும் உங்கள பற்றியே கேட்டுக்கெண்டிருப்பாள்.
எங்க கணவனுக்கு தன் வருந்தம் தெரிஞ்சா, அவரும் வருத்தப்படுவாரோ எண்டு மாப்பிள்ளையிட்டயும் சொல்ல மாட்டாள்.
தேவி சொல்லாமலே, அவள்ர மனச புரிஞ்சு நடந்துப்பாரு மாப்பிள்ளை.
ஒரு பக்கம் தொழில், ஒரு பக்கம் மனைவி எண்டு, நம்ம தேவிய ராணி போல தான் பாத்தார்.
தேவி மாசமா இருக்கிற நேரத்தில, மாப்பிள்ளையும் வேலைக்கு போயிருக்கிறார்.
எதையோ வீட்டிலயே மறந்துட்டு போட்டார் போல... அதை எடுக்க வந்தப்ப தான், தனிமையில இவள் அழுதுக்கொண்டிருக்கிறத பாத்து, காரணம் கேட்டிருக்கிறார்.
அப்ப தான் உங்கள் எல்லாயைும் பாக்ககோணும் போல இருக்கெண்டு சொன்னா,
குழந்தை உண்டான நேரம் வீக்கா இருந்ததால, குழந்தை பிறந்தாப்பிறகு, போவோம் எண்டு மாப்பிள்ளையும் சொல்லிருக்கிறார்.
எனக்கும் அது தான் சரியெண்டு பட்டுது. பேரபிள்ளையை கண்டா, உங்கள் எல்லாற்ற மனசு மாற வாய்பிருக்கும் எண்டது என்ர எண்ணம்.
துஷாவும் பிறந்தாள்.. அந்த நேரம் தான் பாட்டியும் இறந்தது.
எல்லாருமே தேவியால தான் பாட்டி செத்ததா, தேவியில வஞ்சத்தை கொட்டினீங்கள். இது தெரிஞ்சா அவள் வருத்தப்படவாள் எண்டு, நான் தான் பாட்டி இறந்த விஷயத்த அவளிட்ட சொல்லேல.
நான் கூட்டிட்டு போவன் எண்டு, என்னை எதிர் பார்த்து இருந்திருக்கினம்..
பாட்டியோட சடங்கு எல்லாம் முடிச்சு ஒருவாரம் கழிச்சு, போகேக்க தான், விஷயத்த சொல்லி, நீங்க எல்லாரும் அவள்ல கோபமா இருக்கிறதையும் சொன்னன்.
அவளும் பாட்டி செத்ததுக்கு தான் தான் காரணம் எண்டு, கத்தி ஊர கூப்பிட ஆரம்பிச்சிட்டாள்.
மாப்பிள்ளை தான் பச்ச உடம்புக்காரி.. இப்பிடி அழகூடாது. எங்களுக்கு ஏதாவது நடந்தா, குழந்தை அனாதையாகிடும் எண்டு, அவளை சாமாதானம் செய்யிறதுக்குள்ள பாவம் மனுசன் தொஞ்சே போட்டார்.
பிறகு உங்கட ஞாபகமே வரக்கூடாதெண்டு, கூட இருந்து கவனிச்சார்.
இவள் வளர்ந்து ஐந்து வயசு கழிஞ்சாப் பிறகு தான் மாப்பிள்ளை தொழிலையே கவனிக்க ஆரம்பிச்சார்.
அது வரைக்கும் அந்த மூர்த்தி தான் பாத்துகிட்டான். அப்பப்ப மாப்பிள்ளையும் போய் பாப்பாரு.
துஷாவின் நற்பு வட்டாரங்களில் யாரை கேட்டாலும், தங்களின் எதிர்கால கனவு சிறந்த ஆசிரியராவது என்று தான் சொல்வார்கள்.
அவர்கள் கனவு என்ன என்பதை அறிந்தே தங்கள் நற்பையும் வளர்த்து கொண்டனர்.
துஷாவும், சைலுவும் பக்கத்து தெருவாக இருந்தாலும், சிறு வயதில் இருந்தே நல்ல நண்பர்கள்.
தாம் ஆசிரியர் படிப்பை கூட ஒன்றாக முடித்து, ஒரே பாடசாலையில் ஆசிரியர் ஆவது தான் அவர்கள் எண்ணம்.
சைலு அம்மா கூட, "ஏன் ஓரே மாப்பிள்ளையையும் கட்டிக்கொண்டு ஒரே வீட்டிலே இருங்கோ" என்று கேலி செய்திருக்கின்றார்.
இப்படி இருந்த வேளையில் தான், உயர்தர பெறு பேறும் வந்தது.
சைலு சாதாரணமாக சித்தி பெற்றிருக்க.
துஷாவோ மாகாண ரீதியில் முதலிடமும், தேசிய ரீதியில் நான்காவது இடம் பிடித்திருந்தாள்.
இவளில் பெறு பேற்றை பார்த்து ஊடகங்கள் அனைத்தும் அவளை சூழ்ந்து கொண்டு பேட்டிகள் கண்டிருந்தது.
துஷாவின் தந்தை என்று கூறிகொள்வதில் சுதாகரனுக்கு அளபெரும் சந்தோஷம்.
துஷாவை இனி என்ன படிக்க வைப்பதாக உங்கள் கனவு என்று சுதாகரனை கேட்டதற்கு,
"சிறந்த மருத்துவராக இந்த நாட்டுக்கு அவளை தரது தான் என் கனவு" என்றார்.
அவர் முகத்தில் அத்தனை பூரிப்பு.. தன்மகள் தன் பெயரை உயர்தி விட்டாள் என்று.
தந்தையின் ஆசைக்காகவே தன் கனவை விடுத்து, மருத்துவ துறையை தேர்ந்தெடுத்தாள்.
அவளின் பெறு பேறுகள் அடிப்படையிலும், மருத்துவக்கல்வி விற்கப்படுவதில்லை என்பதனாலும், கொழும்பு தேசியக்கல்லூரியிலே இடம் கிடைத்தது.
தங்கள் ஊரிலே தங்களுக்கு இடங்கிடைக்கவில்லை என ஏங்கிக்கொண்டிருந்த கொழும்பு வாசிகள் மத்தியில், துஷாவுக்கு அங்கேயே இடங்கிடைத்தது.
பெற்றோரை பிரிந்து இருக்க முடியாது என அவள் மறுக்க, அவளை தேற்றி அனுப்பி வைத்தார் சுதாகர்.
மூன்று வருடக்கல்வி. பின்பு இரண்டு வருடங்கள் பயிற்சி. மொத்தமாக ஐந்து வருடங்கள் கொழும்பிலே என்றானது.
தனக்காக பார்த்து பார்த்து செய்யும் தந்தைக்காக, அவரின் சின்ன ஆசையையாவது நிறைவேற்றுவோம் என்று, பெற்றோரை பிரிந்திருக்க சம்மதித்தாள்.
ஆனால் தினமும் தந்தையுடனும், தாயுடனும் வீடியோ கால் பேசாமல் அவள் நாள் விடிவதுமில்லை, முடிவதமில்லை.
வருடத்தில் மூன்று விடுமுறைகள். குறைந்தது பத்து நாட்களாவது வந்து விடும்.
விடுமுறை விட்ட நாள் அன்று பெற்றோரை பார்க்க முதல் பஸ்ஸை பிடித்தும் விடுவாள்.
அப்படி ஒரு விடுமுறையில் தான் முத்துவை சந்திதக்க நேர்ந்தது.
சிறுவயதில் இருந்தே முத்துவை அவளுக்கு தெரியும். இவளை விட பதின்மூன்று வயது பெரியவன் முத்து.
இவளின் பத்து வயதிற்கு பின்பு அவனை அவள் கண்டதில்லை.
சாதாரணமாகவே ஒருமுறை அவளை பார்த்து விட்டால், மீண்டும் ஒரு முறை திரும்பி பார்க்க வைக்கும் அழகி.
இப்போது இலங்கையின் தலை நகரபகுதியில் படிப்பதனால், அவர்களின் கலாச்சாரம் கொஞ்சம் அவளில் தெரியத்தான் செய்தது. அதுவும் அவர்களில் இருந்து தன்னை வேறுபடுத்தி காட்டக்கூடாது என்பதற்காகவே அந்த மாற்றம்.
ஆனால் நேர்தியாக உடுத்துவாள்.
மூர்தியின் அன்னை படுக்கையில் சில காலம் இருந்து, இறந்து விட்டார் என செய்தி சுதாகருக்கு கிடைக்க,
தொழில் பங்குதாரர் என்ற முறையில் தன் மனைவியை அழைத்தவன், துஷா வீட்டில் இருக்கவும்,
இது போல நிகழ்வுகளை அவள் இது வரை கண்டதில்லை, எல்லாவற்றையும் தன் மகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அழைத்து சென்றார்.
காரில் இருந்து இறங்கியதும் ஓலமிட்டவர்கள் அலறலில், பயந்தே போனாள் துஷா.
தாயை ஒட்டிக்கொண்டே நின்றவள், மூர்த்தியின் தாயருகில் பெற்றோர் செல்லவும், அன்னையின் கையை இறுகபற்றி, இன்னும் ஒட்டிக்கொண்டாள்.
இறந்தவரின் உடலையே பார்த்து கொண்டிருந்தவளுக்கு, எதுவே உறுத்துவது போல் தோன்ற, நிமிர்ந்து பார்த்தாள்.
அவளையே வைத்த கண்வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் முத்து.
அவனது பார்வை ஏனோ அட்டை ஊறுவதை போலிருக,
அம்மா எனக்கு இவயல் அழுற சத்தத்தில தலை சுத்துறது போல இருக்கு... கொஞ்சம் தள்ளி போவோமா?" என்றாள்.
அவளுக்கும் அதே போல இருந்ததோ என்னவோ, அவளை அழைத்து சென்று, யாரும் இல்லாத இடம் பார்த்து அமர்ந்து கொண்டனர்.
அப்போதும் அவன் பார்வை அவனை வேய,
"யாரம்மா அது?" என்றான் மூர்த்தியின் அருகில் நின்றவனை காட்டி,
"அவனை நீ ஏன் கேக்கிறா? அவன் ஒரு பெள்ளாதவன்,
ஊரில இல்லாத பொறுக்கிதனம் முழுக்க இவன் தான் செய்து கொண்டிருக்கிறான்.
படிக்கிற வயசில, அவன் நல்லா படிக்கிறான் எண்டு அவனை கவனிக்காம விட்டுட்டார் மூர்த்தி.
ஆனா படிக்காம பொடியலோட சேர்ந்து பீடி, சிகரட், தண்ணி, கஞ்சா எண்டு ஆரம்பிச்சிட்டான்.
அதுகள தொட்டா யார்ட சொல்லு கேக்க போகுதுகள்.. மூர்த்தியும் கண்டிச்சு பாத்தவர், வீட்டில ஒரே பொடியனாச்சே, ஏதோ செய்யட்டும் என்று விட்டுட்டார்.
ஒரு நாள் கஞ்சா குடிச்சிட்டு பள்ளிக்கு போயி, ரீச்சர்லயே கை வைச்சிட்டான்.
அப்ப தான் இவன் முதல் முறையா ஜெயில் போனது.
அதுக்கு பிறகு பள்ளிக்கூடத்துக்கு போக மாட்டன் எண்டு நிண்டுட்டான்.
பிறகென்னா... கேரளா கஞ்சாவை கடல் வழியா, கடத்தி வந்து, படிக்கிற பிள்ளைகளுக்கு வீடக்குள்ள கலந்து லாபம் பாக்கிறதே இவன் வேலை.
இவனால நிறைய பிள்ளைகள் கெட்டு போனதோட, படிப்பையும் குடும்பத்தையும் இழந்து நிக்குதுகள்.
இது மட்டும் இல்லம்மா!
இப்ப முப்பது வயசு தாண்டீட்டுது. இன்னும் கல்யாணமே செய்யேல,
கல்யாணம செய்யேலயே தவிர, கண்ணில படுற பொம்புள புள்ளைகளை பலவந்த படுத்தி, சிதைச்சிருக்கிறான்.
இவனோட கஞ்சா தொழிலுக்கு, அரசியல் வாதிகளும் உடந்தை.
தமிழ் புள்ளைகள் கல்வியை சீர் கெடுக்கிறது தானே அவங்கட நோக்கம்.
பல கடத்தல் கேஸ்ல உள்ள போயிருக்கான். மிஞ்சி மிஞ்சி போனா ஒரு மாதத்துக்கு மேல உள்ள இருக்கேல.. ஒன்று இவன் அப்பன் என்ன பாடு பட்டோ எடுத்திடுவான்.
இல்லாட்டிக்கு இவனை தூண்டி விடுற அரசியல் வாதிங்கள், வெளிய கொண்டு வந்துடுவாங்கள்.
இவன்ர கண்ணில படக்கூடது எண்டு தான், உன்னை இவன்ர வீட்டுப்பக்கம் கூட்டிக்கொண்டு வாரதில்ல.
இப்ப கூட இவன் ஜெயில்ல இருக்கிறான் எண்டு நினைச்சு தான் கூட்டி வந்தம்,
ஆனா இவன் வெளிய வந்திட்டான்.
இந்த மனுசனுக்கு அறிவே இல்ல....
இவனாேட சங்காத்தமே வேண்டாம் அவன் பங்கை குடுத்திட்டு தனிய வாங்கோ எண்டா கேக்கிறார் இல்ல.
வேலை இல்லாமல் கஷ்டபட்ட நேரத்தில உதவினவன், நன்றிய மறக்க கூடாது எண்டு, ஆயிரம் காரணம் சொல்லுவார்.
அவனும் இங்க தான் பாக்குறன். முதல்ல இங்க இருந்து போடோணும். இதிலயே இரு அப்பாவ கூட்டிக்கொண்டு வாரன்." தேவி சென்று விட்ட கையோடே.
அவளருகில் வந்தவன்,
"நீ துஷா தானே! என்னை நினைவிருக்கா? சின்ன வயசில ஒண்டா விளையாடி இருக்கிறமே!} என்று அவளை பார்த்து சிரித்தவன், தன் கையிலிருந்த சோடாவை அவளிடம் நீட்டி,
இந்தா இதை குடி! பாட்டி பக்கத்தில நிக்கேக்க தலை சுத்துறதா ஆன்ட்டிட்ட சொல்லேக்க கேட்டன்." என்றான்.
அவனை அருவெருப்பு பார்வை பார்த்தவள்,
"எனக்கு வேண்டாம்... துடக்கு வீட்டில சாப்பிடுறதில்ல" என கூறிக்கொண்டிருக்கும் போதே கணவனுடன் வந்த சாந்தி,
"வா துஷா! நாங்கள் போவம்" என்று அவளை அழைத்துக்கொண்டு சென்று விட்டாள்.
போகும் வழி பூராகவும் சுதாகரனுக்கு விஷேட அர்ச்சனைகள் நடந்தது.