எழுத்தாளர் : ரமா
தலைப்பு : நேசம் பொய்க்குமா..?
செஞ்சூரியன் பிரகாசமாய் ஒளிர்விட்ட அந்த காலை வேலையில் கோயிலின் கோபுரங்களில் ஒளிந்திருந்த மாடப்புறாக்கள் மணியோசை சத்தத்தில் கூட்டை விட்டு பறக்க அந்த பொற்றாமரை குளத்தின் படிகட்டில் அமர்ந்து தன் கையில் வைத்திருந்த பொறியை அள்ளி குளத்திலிருந்து மீனுக்கு உணவளித்துக் கொண்டிருந்தாள்.. பொறிக்காக மேலே வரும் மீன்களை அந்த மீன் விழிகள் ரசித்து கொண்டே வாரி வழங்கும் வள்ளலாய் பொறியை அள்ளி வீசினாள்.
தன் கையில் இருந்த பொறி தீர்ந்தும் அந்த இடத்திலிருந்து போவதற்கு மனமில்லாதவளாய் அங்கேயே அந்த மீன்களையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள் பாவையவள்.. அவளருகில் யாரோ அமரும் அரவம் கேட்டும் அவள் யாரென திரும்பி பார்க்கவில்லை.. பார்க்கவில்லை என்று சொல்வதை விட அந்த மீன்களிலிருந்து கண்களை அகற்ற அவள் சுத்தமாய் விரும்பவில்லை.. அந்தளவு அதனுடன் ஒன்றி போய்விட்டாள் பெண்ணவள்.
அந்த மீன்களையே பார்த்தவளின் கவனத்தை கலைத்தது அவளின் கைப்பையில் இருந்த அலைபேசியின் சத்தம்.
தன் சிந்தையை மீனிடம் இருந்து மீட்டவள் அலைபேசியை உயிர்ப்பித்து அதை செவிக்கு கொடுத்தாள்..
" ஹலோ சொல்லுங்க மேடம்.." என்றவளின் குரலுக்கு,
"......... " எதிர்பக்கம் இருந்து என்ன சொல்லப்பட்டதோ,
"இதோ இன்னும் அரை மணி நேரத்துல வந்துடுவேன் மேடம்.." என்று பேசிவிட்டு தன் கைப்பையில் அலைபேசியை வைத்தவள் அவசரமாய் தன்னிலை மறந்து வேகமாய் எழுந்தவள் பிடிமானம் இல்லாமல் குளத்தில் விழப்போனவளை இரு வலிமையான கரங்கள் தாங்கி பிடித்தது.
அப்பொழுது தான் தன் நிலை உணர்ந்து தன்னை தாங்கி பிடித்து கரங்களுக்கு சொந்தகாரனை பார்த்து நன்றி சொல்ல போனவளை அவன் யாரென்று தெரிந்ததும் வார்த்தை மேலும் வராமல் தன் கீழிறிருந்த ஸ்டிக்கை எடுத்து தன் கைகளில் இருபக்கமும் லாவகமாய் பொருத்திக் கொண்டு வந்தவள் அங்கிருந்த ஆட்டோவை நிறுத்தி ஏறிக் கொண்டாள்.
அவள் செல்வதை பார்த்துக் கொண்டிருந்தவன், "மொழி ப்ளீஸ் என்னை மன்னிச்சிரு.. மொழி.. மொழி.. எனக்கு திரும்ப ஒரு வாய்ப்பை கொடுமா..." என்று குரலில் ஒட்டுமொத்த வலியையும் தேக்கி கூறியவனை திரும்பவும் பாராமல் ஆட்டோவில் ஏறி சென்று விட்டாள் அந்த ஆடவனால் மொழி என்றழைக்கப்பட்ட இசைமொழி.
இந்த முறையும் அவள் தன்னிடம் பேசாமல் சென்றது உயிர் உருக்கும் வலியை தர தோற்றுப் போன வேதனைவுடன் திரும்பி சென்றான் இசைவேந்தன்.
ஆட்டோவில் சென்றவளுக்கு அவளறியாமல் கண்ணீர் துளி கண்களின் ஓரம் குளம் கட்டி கரை தாண்ட துடித்தது.. அவளால் என்ன முயன்றும் பழைய நினைவுகளின் தாக்கம் குறையைவில்லை.
'ஆண்டவா ஏன் என்னை இப்படி படைச்சே..' என்று தாழ்வு மனப்பான்மையில் மனதால் கடவுளை நிந்தித்தவள் யோசிப்பதற்குள் அவள் இறங்க வேண்டிய இடம் வந்ததும் டிரைவரின் குரல் கேட்டு நடப்பிற்கு வந்தாள்.
ஆட்டோவை கட் பண்ணியவள் தான் வந்த இடத்தை நிமிர்ந்து பார்த்தாள். வெளியிலிருந்து பார்க்கும் போதே தெரிந்தது அது ஏதோ காப்பகம் என்று.
ஆம் அது காப்பகம் தான்.. ஆதரவற்ற பெண் குழந்தைகள் காப்பகம்.. அதில் தான் இசைமொழி வேலை செய்கிறாள்.. அவள் இங்கே வேலைக்கு வந்து ஐந்து வருடம் ஆகின்றது.. அங்கிருக்கும் சிறுமழலைகளை பராமரித்து அவர்களுக்கு படிப்பு சொல்லி கொடுப்பது என்று அவள் மனதுக்கு பிடித்தத்துடனே வேலை செய்கிறாள்.
அவள் அந்த காப்பக அலுவலக அறையில் நுழைந்ததும் அவளின் முன்பு நின்றது அந்த ஆசிரம நிர்வாகியான சகுந்தலா அம்மா தான். அவளை கண்டவரின் கண்களில் சிரிப்பை பதிலாக கொடுத்தவர்,
"இசை எவ்வளவு நேரம் ஆச்சி.. உனக்காக குழந்தைங்க காத்துட்டு இருக்காங்க மா.. போய் அவங்களை பாரு.." என்றார் மென்மையாக.
"சரிங்க மேடம்.." என்று தலையசைத்தவள் தன் வேலையை பார்க்க சென்றாள்.
அங்கே வந்தவளுக்கு அதற்கு மேலே தன் நினைவுகளில் இல்லாமல் வேலை அவளை இழுத்துக் கொண்டது.
அந்த குழந்தைகளின் பிஞ்சு முகம் அவளின் கவலைகளை மறக்கச் செய்தது.
வேலையெல்லாம் முடிக்கவே மணி இரண்டாகிவிட்டது.. அதற்கு மேல் அவளுக்கு ஒரு மணி நேரம் பிரியாகத்தான் இருப்பாள்.. அந்த நேரத்தில் குழந்தைகள் விளையாடுவர் சிலர் தூங்குவார்கள்.
தன் வேலைகளை முடித்து விட்டு தன் அறைக்கு வந்தவளை மீண்டும் வரவேற்றது என்னவோ காலையில் பார்த்தவனின் நினைவு தான்.
அவனை முதலில் பார்த்த நிகழ்வு அவளின் வேதனையை மீண்டும் கீறிவிட்டது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியதை போல.
இசைமொழி தாய் தந்தை யாரென்று தெரியாமல் அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவள்.. பெண் குழந்தை பாரமென்று என்னுபவர்கள் மத்தியில் பிறிவியிலேயே இரண்டு கால்களும் ஊனமுடன் பிறந்தவளை எப்படி வளர்த்து ஆளாக்குவது என்று அறியாமல் அவளை அனாதை ஆசிரமத்தில் போட்டுவிட்டனர் அவளின் பெற்றவர்கள்.. நல்லவேளை அவள் பாரமென்று அனாதையாக விட்டனரே ஒழிய அவளை கள்ளிப்பாலுக்கு இரையாக்கவில்லை.
ஏன் எத்தனையோ இடங்களில் பெண் குழந்தை பிறந்தால் பாரம் யார் வளர்த்து ஆளாக்கி அவளை படிக்க வைத்து நல்ல ஒருவன் கையில் ஒப்படைத்து அவன் கேட்கும் சீர்வரிசை செய்வது என்று பிறந்த போதே கள்ளிப்பாலுக்கு பலி கொடுத்தனர்.. இதில் பெண் பிள்ளை ஊனமென்றால் கேட்கவா வேண்டும்.. எதோ கொலை பாதகம் செய்யும் அளவு போகாமல் அனாதையாகவாது வளர விட்டார்களே என்று சிறிது சந்தோஷப்படத்தான் வேணும்.
அப்படி அறியா மழலை பருவத்திலிருந்தே அனாதை ஆசிரமத்தில் வளர்ந்த இசை படித்தது சமைக்கவென எல்லாமே கற்றுக் கொண்டது அங்கே தான்.
அங்கே பெரிதாக விதவிதமாக சமைத்திட வசதி இல்லை தான்.. ஆனால் அத்தனை பேருக்கும் சமைப்பது சுலபமில்லையே.. தெரியாததை கற்றுக் கொண்டாள்.. கற்றுக் கொள்வதற்கு ஊனம் மிகப் பெரும் தடையில்லை என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தினாள்.
கல்வி செல்வம் அழியா புகழை கொண்டது என்பதை அறிந்தவள் அதை தன் துணையாக பிடித்துக் கொண்டாள்.. யாருமில்லாதவளுக்கு கல்வி கை கொடுக்கும் என்பதை அறிந்து முழு மூச்சாக கல்வியை கற்றாள்.. படித்து முடித்ததும் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிக் கொண்டே இல்லத்தில் இருந்த பிள்ளைகளுக்கும் படிப்பறிவை கற்றுக் கொடுத்தாள்.. அவள் அங்கேயே வேலையும் செய்து வெளியிலும் வேலை செய்து வந்த சம்பளத்தை தன் தேவைக்கு போக மீதியை ஆசிரமத்திற்கு கொடுத்து விடுவாள்.. அதனால் அவள் அங்கேயே தங்கிக் கொள்ள யாரும் தடைசொல்லவில்லை.
அவளின் வாழ்வு அமைதியாய் சென்று கொண்டிருந்த நேரத்தில் தான் அவள் வேலை செய்யும் பள்ளியிலிருந்து பிள்ளைகளை பக்கத்திலிருக்கும் பார்க்குக்கு எப்பொழுதும் அந்தியில் விளையாட அழைத்துச் செல்வார்கள்.. இவளும் அவர்களுடன் எப்பொழுது செல்வாள்.. அந்த பள்ளியின் கேட்டிலிருந்து வெளியே வர கம்பிகளால் இடைவெளி விட்டு போடப்பட்ட பதாகைகள் இருக்கும்.. குழந்தைகள் அனைவரும் வெளியே வருவதற்கு கண்டிப்பாக யாரின் உதவியாவது தேவைப்படும்.. எப்பொழுதும் இவர்களுடன் வரும் ஆள் அன்று வரவில்லை.. அந்த நிலையிலும் குழந்தைகளை தன் கையிலிருந்த ஸ்டிக்கின் உதவியுடன் மற்றொரு ஸ்டிக்கை வைத்து பொறுமையாக குழந்தைகளை அந்த இரும்பு பதாகையை தாண்டி விட்டாள்.. அவளுக்கு பயம் தான் என்றாலும் குழந்தைகள் மேல் உள்ள பாசத்தில் தைரியமாய் நின்று அதை செய்தால்.
அதை தான் எதிரில் தன் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த இசை வேந்தன் கண்டது.. ஏனோ அவளை கண்ட அந்த நொடியிலே அவன் மனதோரம் வந்து ஒட்டிக் கொண்டாள் பெண்ணவள்.
அவளை பார்க்க பார்க்க ஏனோ அவனின் மனம் அவனிடமில்லாமல் அவளைத் தேடி ஓடியது.. பார்த்தவுடன் காதலா என்றால் அவனுக்கு தெரியவில்லை.. ஆனால் அவனுக்கு அவளை மிகவும் பிடித்தது.
இதே தினமும் அவளை காண்பதற்கென்றே அங்கே அவள் பிள்ளைகளுடன் வரும் நேரத்திற்கு வந்துவிடுவான்.
இதே தினமும் தொடர தன்னை யாரோ உற்று நோக்குவது போல அவளின் மனதோரம் தோன்ற யாரென திரும்பி பார்ப்பவளின் விழிகளுக்குள் விழுந்தான் அவன்.
சிவப்பும் அல்லாத கருப்பும் அல்லாத திராவிட நிறத்தவன்.. பார்ப்பதற்கு மீண்டும் ஒரு முறை பார்க்க தோன்றும் அழகில் தான் இருந்தான்.
அவன் தன்னை தொடர்ந்து வருவது தெரிந்தாலும் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தன் வேலையை மட்டும் செவ்வனே செய்தாள் பெண்ணவள்.
அவளுக்கு தெரியும் இது போல நிறைய இடர்பாடுகள் வந்தாலும் அதை அமைதியாக கடந்து போவது மேல்.. யாரிடமும் சென்று தர்க்கம் செய்யவே எந்த பிரச்சனையிலும் மாட்டிக் கொள்ள அவள் விரும்பவில்லை.
சில நாட்கள் அவளை பார்த்துக் கொண்டிருந்தவன் ஒரு நாள் துணிவுடன் அவளருகில் சென்று தன் காதலை கூறினான்.
"என்னங்க வணக்கம் என்னோட பேரு இசை வேந்தன்ங்க.. நான் உங்களை கொஞ்ச நாளா பாத்துட்டிருக்கேன்.. அதுவும் நீங்க அந்த குழந்தைகளை பாத்துடிருக்கும் போது அத நானா இருக்கக் கூடாதான்னு தோனுது.. எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்குங்க.. உங்களை கல்யாணம் செய்துக்க ஆசைப்படுறேன்ங்க.." என்று தன் விருப்பத்தை வார்த்தையால் வெளிப்படுத்தினான்.
அதை கேட்டு மென்மையாய் சிரித்தவள், "ஏன் சார் என்னை பாத்து கிண்டல் பண்றீங்களா.." என்று கேட்டாள்.
அவளுக்குத்தான் தெரியுமே இந்த காலத்தில் எந்த விதமான சம்பந்தமும் இல்லாத ஆண் ஒருவன் தன்னிடம் வந்து பேசினாள் அவன் எதற்கு அடிபோடுவான் என்று.. என்ன இவன் கல்யாணத்தை பத்தி பேசுறான்.. அது மட்டும் தான் வித்தியாசம் என்று எண்ணியவள் அவனிடம் அவ்வாறு கேட்டாள்.
அவள் கேள்வியில் பதறியவன், "அய்யோ நிஜமாங்க.. எனக்கு உங்களை ரொம்ப புடிச்சிருக்குங்க.. நிசமாத்தான் சொல்றேன்ங்க.." என்று பதறியபடி கூறினான்.
இதோ பாருங்க உங்க பொழுது போக்குக்கு நான் ஆளில்லை.. என்னோட நிலை தெரிஞ்சும் இப்படி கேக்குறீங்களா.. ஒரு அனாதைய உங்க வீட்ல ஒத்துப்பாங்களா.. அதை பாருங்க முதல்ல.. போங்க போய் உங்களுக்கு தகுந்த மாறி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்குங்க.." என்று அவனிடம் கூறிவிட்டு சென்றுவிட்டாள் பேதை.
அவனும் விக்கிரமாதித்யன் போல விடாமல் அவளை தொடர்ந்தான்.. அதே சமயத்தில் அவளைப் பற்றி விசாரித்து தெரிந்து கொண்டான்.
மெதுவாக அவளை அறிந்து கொண்டவன் நேராக போய் நின்றது என்னவோ அவளை வளர்த்த ஆசிரமத்தின் நிர்வாகியைத்தான். அவரிடம் நேரில் சென்று இசையை தான் காதலிப்பது கல்யாணத்தை பற்றி பேசியவன் மெதுவாய் அவரை ஒப்புக் கொள்ள செய்து விட்டான்.
பின்பு அவரே இசையை கூப்பிட்டு,
"இசை எவ்வளவு நாள் இப்படியே இருக்க போற.. அந்த தம்பியை பார்த்தாலும் நல்லவர்களாக தெரியுது.. உன் வாழ்க்கையும் பாருடா.. அவங்க கிட்ட பேசுடா.." என்று தன் விருப்பத்தை மறைமுகமாக தெரிவித்தார்.
அதற்கு மேல் அவரின் பேச்சை தட்ட முடியாதவள் அவனின் காதலுக்கு சம்மதம் தந்தாள்.
அவள் சம்மதம் தந்த சந்தோஷத்தில் அவளை அவனின் வீட்டிற்கு அழைத்துச் செல்ல நிர்வாகியிடம் சம்மதம் வாங்கினான். அவரின் அனுமதியுடன் இசையை அவன் இல்லத்திற்கு சென்றான்.
இசைவேந்தனுக்கு தந்தை இல்லை.. தாய் இரு தங்கைகளுடன் வசித்து வந்தான். அவன் குடும்பம் நடுத்தர வர்க்கம் தான்.. அவனின் சம்பாத்தியத்தில் தான் அவனின் குடும்பம் ஓடியது.. அவனுக்கு திருமணம் செய்த பின்பு அவன் மனைவி கொண்டு வரும் சீதனத்தில் தான் அவனின் தங்கைகளின் திருமணத்தை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவன் தாயார் இருந்தாள்.
பெற்றவளின் எண்ணத்தில் மண்ணள்ளி போட்டான் வேந்தன் இசையை காதலித்ததால்.
தன வீட்டிற்கு தன் மகன் ஒரு வயது பெண்ணுடன் அதுவும் ஊனமுற்ற பெண்ணுடன் வரவும் அவனின் தாய் முகம் யோசனையில் விழுந்தது.
இருந்தாலும் வீட்டிற்கு வந்தவர்களை வரவேற்ற பழக்கம் ஆதலால் அவளை வரவேற்று அமர வைத்தனர்.
வந்ததிலிருந்து அமைதியாக அமர்ந்திருக்கு இருவரையும் பார்த்த வேந்தனின் தாய்க்கு எதுவும் சரியாகபடவில்லை.
"என்னாச்சி வேந்தா ஏன் அமைதியா இருக்க.. இந்த பொண்ணு யாரு பா.." என்று கேட்டார் தாமரை.
"இந்த பொண்ணு பேரு இசைமொழி மா.. அப்பா அம்மா இல்லை மா.. அம்மா இது வந்து வந்து நான் இந்த பொண்ண காதலிக்கிறேன் மா.. கல்யாணம் செய்துக்கனும்னு ஆசைப்படுறேன் மா.." என்று தன் விருப்பத்தை தன் தாயிடம் கூறியவன் மலர்ந்த முகத்துடன் பெற்றவளின் முகம் பார்த்தவன் அதிர்ச்சியில் சிலையாகிப் போனான்.
தான் கூறியதை கேட்டு தன் தாய் மகிழ்ந்து போவாள் என்று எதிர்பார்த்த ஆடவனின் மனம் சுருங்கிப் தான் போனது.
ஆம் அங்கே தாமரையின் முகம் செந்தனலில் எரியும் நெருப்பாய் தகித்தது.. அதே கோபத்துடன் இசையின் பக்கம் திரும்பியவள் அவளின் கையிலிருந்த ஒரு ஸ்டிக்கை புடுங்கி தூர எறிந்தவள்,
"ஏன்டி உனக்கு வேற ஆம்பளையே கிடைக்கலையா.. என் புள்ள தான் கிடைச்சானா.. உனக்கு சொகுசு வாழ்க்கை வேணும்னா வேற எதாவது தொழில் பண்ண வேண்டியது தான்.. என்னத்த காட்டி என் புள்ளைய மயக்குன.. அனாதையா வளர்ந்தவளுக்கு பாசத்தை பத்தி தெரியுமா டி..
இவனுக்கு அடுத்தது ரெண்டு பொட்ட புள்ளைங்க கல்யாண வயசுல நிக்குது.. ஆம்பிளை அப்டி இப்படி தான் இருப்பான்.. பொம்பளை நாம்தான் சூதானமா இருந்துக்கனும்.. இல்லைன்னா எவன் கிடைச்சாலும் இப்படித்தான் உடம்பு தெனவெடுத்து திரியனும்.. " அவளிடம் வார்த்தைகளை விஷமாக கொட்டியவள் தன் மகனிடம் திரும்பி,
"வேந்தா இந்த பொண்ணு நம்ம குடும்பத்துக்கு சரிவராது.. கொண்டு போய் விட்டுட்டு வா.." என்று கட்டளையாய் கூறினாள்.
தாயின் பேச்சை மீறாத வேந்தனுக்கு இப்பொழுது தன்னவள் தன்னால் தானே இந்தளவு வேதனை சுமந்தாள் என்பதை நினைத்து மனம் பாரமானது.. வேதனையுடனே தன் தாயின் புறம் திரும்பி,
"அம்மா மொழிய எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குமா.. அவளும் நல்ல பொண்ணு மா.. நம்ம குடும்பத்த பாத்துப்பா மா.." என்று வாதாடினான்.
இத்தனை வருடமாக தன் பேச்சை தட்டிக் கழிக்காத தன் மகன் இன்று யாரோ ஒரு பெண்ணுக்காக தன்னிடமே வாதாடுவது அவளுக்கு மேலும் கோபத்தை வளர்த்தது.
அதே கோபத்துடன் வேகமாக உள்ளே சென்றவள் ஒரு கேன் மண்ணெண்ணெய் கொண்டு வந்து தன் மகள்கள் மேலும் தன் மேலும் ஊத்திக் கொண்டவர் தீப்பெட்டியுடன் தன் மகனின் புறம் திரும்பி,
"வேந்தா நாங்க உயிரோட இருக்கனும்னா இந்த பொண்ணு இங்கே இருக்க கூடாது.. இல்லை அந்த பொண்ணு தான் வேணும்னா நாங்க இல்லைன்னு முடிவு பண்ணிக்கோ.." என்று கத்தி முனையில் தன் மகனை நிறுத்தினாள் தாமரை.
தன் தாய் அப்படி ஒரு வார்த்தை கூறிய பின்பு தன் மனதை திடப்படுத்திக் கொண்டவன் இசையின் பக்கம் திரும்பி,
"என்னை மன்னிச்சிருங்க.. எனக்கு என் குடும்பம் தான் முக்கியம்.." என்று வலியுடனே அவளின் இதயத்தை வார்த்தையால் கொன்றான்.
அவள் அவனை காதலிக்கவில்லை தான்.. ஆனால் அவன் திருமணம் எனவும் தனக்காகவும் ஒரு குடும்பம் வரப்போகும் ஆவல் அவள் மனதோரம் இருந்தது.. ஆனால் வேந்தனின் தாய் பேச்சை கேட்டதும் அவள் மனம் மறித்து தான் போனது.
வலியுடனே தாமரை பிடிங்கி போட்ட ஸ்டிக்கை கடினப்பட்டு எடுத்தாள் எதுவும் பேசாமல் கண்ணீருடனே அங்கிருந்து சென்றாள்.
அதன் பின்பு இல்லத்தை நிர்வாகியிடம் நடந்ததை கூறியவள் தான் அங்கிருந்து வேறு ஊருக்கு செல்ல வேண்டும் என வேண்டினாள்.
அவளின் மனமாற்றத்திற்காக இந்த காப்பகத்தில் அவளுக்கு வேலை வாங்கி கொடுத்து இங்கே அனுப்பி வைத்தார்கள்.
என்ன தான் விரும்பவில்லை என்ற போதும் மனதினுள் மத்தாப்பு மலர்ந்தது நிஜமே.. ஆனால் அதை ஒரே நாளில் கருத்து போகும் என்று அவள் அறியவில்லை.
தன் பழைய நினைவிலிருந்து மீட்டவளை வெளியே கேட்ட குரல் நடப்புலகிற்கு கொண்டு வந்தது.
அவனைத்தான் யாரோ காப்பக பெண் ஒருவள் அழைத்தாள்.
வெளியே வந்து பார்த்தவளை, "அக்கா உங்களை சகுந்தலா அம்மா வர சொன்னாங்க.. உங்களை பாக்க யாரோ வந்துருக்காங்க.." என்று விட்டு ஓடினாள்.
நம்மளை பாக்க யாரு வந்துருப்பாங்க என்ற சிந்தனையில் வரவேற்றது சகுந்தலா வின் எதிரிலிருந்த முதுகை காட்டியபடி அமர்ந்திருந்த பெண்ணின் தோற்றம்.
" அடடே வா இசை இதோ உன்னை பாக்க யாரு வந்துருக்காங்கன்னு பாருமா.." என்று ஆவலாக வரவேற்றார்.
ஏதோ ஒரு உந்துதலால் யாரென்று சென்று முகத்தை பார்த்தவள் அதிர்ந்து போய் நின்று விட்டாள்..
ஆம் அங்கே அமர்ந்திருந்தது வேந்தனின் தாய் தாமரை தான். அவரை பார்க்கவும் பழைய நினைவுகளில் மனம் சுருங்கி போனாள்.
இவளை பார்த்ததும் தாமரையின் முகம் மலர்ந்து போனது.. வேகமாக அவளருகில் வந்தவள்,
"அம்மாடி இசை என்னை மன்னிச்சிருடா.. நான் பன்னது எவ்வளவு பெரிய தப்புன்னு இந்த கொஞ்ச நாள்ல உணர்ந்துட்டேன் டா.. என் பையனோட வாழ்க்கைக்கு நீ எந்த அளவுக்கு முக்கியம்னு எனக்கு புரிஞ்சிடுச்சி மா.. அவனோட சந்தோஷத்தை நானே அழிச்சிட்டேன் மா.. காசு பணம் தான் அவனோட சந்தோஷமா இருக்கும்னு நினைச்சிட்டேன்.. ஆனா அவனோட சந்தோஷமே நீ தான்னு இப்போ புரிஞ்சிக்கிட்டேன் மா.. என்னை மன்னிச்சிடுமா.." இருகரம் கூப்பி அவளிடம் மன்னிப்பை யாசகமாய் கேட்டு நின்றிருந்தார்.
இசையோ எதையோ யோசித்தபடியே நின்றிருந்தாள். அப்போது அங்கே வந்த சகுந்தலா,
"இசை என்னாச்சி மா.. எவ்ளோ பெரியவங்க உன்கிட்ட மன்னிப்பு கேட்குறாங்க.. நீ இப்படி அமைதியா இருக்கே.." என்று அவளின் தோளை தொட்டார்.
அதில் சுய உணர்வு பெற்றவள், "மேடம் அது வந்து இவங்க.." அதற்கு மேல் பேச முடியாமல் தாமரை அவளை அவமானப்படுத்திய தினம் கண் முன்னே அவளின் மனதை வதைத்தது.
அதற்கு தாமரையோ, "எனக்கு தெரியுமா நீ எதை நெனைச்சி நீ இவ்ளோ வருத்தபடுறேன்னு.. நான் பேசுன பேச்சுக்கு மன்னிப்புன்னு ஒரு வாரத்தையில மன்னிக்க முடியாது தான்.. அன்னைக்கு உன்னை அப்படி பேசி அனுப்பனுதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சி தெரியுமா..." என்று பழைய நினைவை மீண்டும் மீட்டினாள்.
இசை அன்று அழுது கொண்டே சென்ற பின்பு வேந்தன் அவன் தாயிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை.. அவன் மீண்டும் இசையை தேடிப்போவானோ என்ற நினைவில் இருந்தவளுக்கு அதற்கு மேல் பார்த்த வேந்தனின் குணம் மொத்தமாய் மாறியிருந்தான்.. யாரிடமும் எதுவும் பேசமாட்டான்.. ஆனால் அவர்களுக்கு தேவையான அனைத்தும் செய்தான்.
நேரங்காலம் பார்க்காமல் இரவும் பகலும் உழைத்தான்.. தன் குடும்பத்தை ஒரு நிலைக்கு கொண்டு வந்தான்.. சுயமாய் சம்பாதித்து தங்கைகளுக்கு எல்லா சீர்வரிகைளை செய்து திருமணம் செய்து கொடுத்தான்.. இரு தங்கைகளும் திருமணம் முடிந்ததும் தாமரை தன் மகனின் திருமணத்திற்காக அவனிடம் பேசினாள்.. அவள் கேட்கவும் மென்மையான புன்னகையை உதிர்த்தவன்,
"அம்மா என்னை என்னன்னு நினைச்சீங்க.. என் மனசுல எப்பவும் என் மொழி தான் என்னோட பொண்டாட்டி.. அவளை நெனைச்ச மனசுல இன்னொருத்திக்கு எப்பவும் இடமில்லை.. நான் ஏன் இத்தனை நாளா உங்ககிட்ட இதை பத்தி பேசலைன்னு தெரியுமா.. அப்பா இல்லாம நீ எங்களை ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கின.. உன்னோட உழைப்புக்கும் அன்புக்கும் மரியாதை செய்யனும்னு நினைச்சி தான் நீங்க அன்னைக்கு இசையை அத்தனை பேசியும் நான் அமைதியா இருந்து அவளுக்கு அநியாயம் பன்னேன்.
ஆனா எப்பவும் என் மனசும் நானும் அவளுக்கு மட்டும் தான் சொந்தம்.. அவ என்னை கல்யாணம் செய்துக்கலனாலும் பரவாயில்லை நான் கடைசி வரை உங்க புள்ளையா இப்படியே இருந்துக்குறேன் மா.. அதை மீறி எதாவது செஞ்சு என்னை இன்னொரு பொண்ணோட பாவத்தை சுமக்க வச்சிறாதீங்க மா.. மனசுல ஒருத்தியோட உடம்புல ஒருத்தியையும் சுமக்க முடியாது மா.. நீங்க அன்னைக்கு என் இசையை பேசுன பேச்சு இன்னமும் எனக்குள்ள தான் மா இருக்கு..
ஏம்மா இதே எங்க கல்யாணத்துக்கு அப்புறம் அவளுக்கு இது போல ஆயிருந்தா விட்டுட சொல்வீங்களா மா.. ஆனா என்னோட மனசு அதுக்கு தயாரா இல்லைமா.. காதல் ஒருத்தரோட குறையை பாக்காது மா.. எத்தனை குத்தம் குறை இருந்தாலும் அப்படியே ஏத்துக்கனும்.. அது தான் காதல் அது தான் கல்யாணம்.. என் மனசுல அந்த காதல் கல்யாணம் என் இசையோட முடிஞ்சுது மா.." என்று வேதனையான குரலில் சொல்லிவிட்டு அமைதியடைந்து விட்டான்.
ஆனால் அதற்கு மேல் தாமரையின் மனதில் பாரமேறிவிட்டது.. ஒரு பெண்ணாய் இருந்து இன்னொரு பெண்ணின் வலியை புரிந்து கொள்ளாமல் இருந்து விட்டோமே என்று மனம் குமைந்து போனாள்... அதற்கு மேலும் தாக்கு பிடிக்காமல் தன் மகனிடம் சென்று அவனின் காதலுக்கு மனதார சம்மதம் தெரிவித்து விட்டாள்.
அவனும் சந்தோஷமாக இசையை தேடி சென்றான்.. ஆனால் பெண்ணவளோ அவனுக்கு ஏமாற்றத்தை தந்துவிட்டு எங்கோ சென்று ஒளிந்து கொண்டாள்.
அதற்கு மேலும் ஆசிரம நிர்வாகியிடம் சென்று வேண்டினான்.. ஆனால் அவரோ அவள் இருக்கும் இடத்தை அவனுக்கு கூறாமல் அவனை பரிதவிக்க விட்டு அதன் பின்பு அவனின் தவிப்பை காணாது அவள் இருக்கும் இடத்தை கூறிவிட்டார்.
அதன் பின்பு தான் வேந்தன் அவளை தேடி வந்து அவளை சமாதானம் செய்ய முனைந்தது.. ஆனால் ஏற்கனவே பட்ட அடி அவளை சம்மதிக்க வைக்கவில்லை.
இப்பொழுது தாமரை அவளின் முன்பு தன் மகனுக்காக கையேந்தி நின்றாள்.
அப்பொழுது வேந்தனும் அங்கே வந்தான். அவனைக் கண்டதும் அவளுக்கு ஏனோ மனதோரம் மகிழ்ச்சி ஊற்று தான்.. பின்னே இருக்காதா இத்தனை காதலா அவனுக்கு தன் மேல் என்று வியந்து தான் போனாள் பெண்ணவள்.. அதே பார்வையுடன் அவனை கண்டாள்.. அவனும் தான் ஒருவரின் பார்வை மற்றவரின் மனதிற்குள் ஊடே நுழைந்து அவர்களின் காதலை தேட முயன்றது.
அங்கே வந்த சகுந்தலா இசையின் கையை பிடித்துக் கொண்டு, "இசை இந்த உலகத்துல தவறு செய்யாத மனித இனமே இல்லை டா.. ஆனா அப்படி தவறு செஞ்சு திருந்தி வரவங்களை நாம மனதார ஏத்துக்கனும் டா.. அவங்களை பாத்தா நல்லவங்க போல தான் தோணுது.. ஏதோ ஒரு வேகத்துல பேசிட்டாங்க.. இப்போ வந்து மன்னிப்பு கேட்குறாங்க..
அந்த பையனும் உன்னை இவ்வளவு நேசிக்குறான் டா.. ஒத்துக்கோ மா.." என்று அவளை சமதானபடுத்தினார்.
அவளின் நலனில் அக்கறை கொண்ட பெண் அவளுக்காக யோசித்தாள் இதோ ஆணவன் அவளுக்காக இந்த பிறவியும் போதுமென்று சொல்கிறான்.. அவனின் காதலை என்னவென்று சொல்வது.. அதை நினைக்க பெண்ணவளின் கண்களில் கண்ணீர் நனைத்தது.
அதை கண்டவன் ஓடி வந்து அவளின் கண்ணீரை துடைத்து விட்டு அவளை அணைத்துக் கொண்டான்.. இதுவரை அவனிடம் அவள் பேசியதில்லை.. அவன் தான் அவளுக்கும் சேர்த்து பேசியுள்ளான்.. இதோ பெண்ணவளும் தன் மௌனத்தை கலைத்து அவனின் மார்பில் தன் முகம் சாய்த்து, "ஐ லவ் யூ வேந்தா..." என்று தன் காதலை கட்டியம் கட்டி கூறிவிட்டாள்.
அதை கேட்ட அனைவருக்கும் மிகுந்த சந்தோஷம் கொண்டது.. வேந்தனுக்கு வானில் பறப்பது போல் உள்ளது.. தன்னவள் தன்னை ஏற்றுக் கொண்டு விட்டாள்.. தன் காதலை வார்த்தையில் உணர்த்தி விட்டாள்.
காதல் இரு மனங்களின் சங்கமம்.. வார்த்தைகளில் தான் காதலை அனுபவிப்பது என்று இல்லை.. இதோ மௌனத்தின் மறைவில் நின்ற இவளின் காதலும் உன்னதமானது தான்.. அவள் தாமரையை மன்னித்துவிட்டாள்.. மறந்தும் விட்டாள்.. இனி அவள் வேந்தனின் மொழியவள்.
காதல் மனதோரம் தோன்று மத்தாப்பு என்பதை வேந்தரும் உணர்த்திவிட்டான்.