• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

38. காற்றோடு கலந்த விதையவள்.

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
799
95
93
Jaffna
எங்கு திரும்பினாலும் துஷாவே கண்முன் வந்து போனாள்.

பாட்டியின் ஈமக்கிரிகைகள் எல்லாம் எப்போது முடியும் என காத்திருந்தவன், அவற்றை முடித்த கையோடு கூட்டம் கலைந்து செல்லவும் தந்தையிடம் துஷாவை பற்றி பேசினான்.

"அப்பா.. எனக்கு கல்யாணம் எப்ப?" என்றான்.

"இப்ப தானே பாட்டிக்கு சடங்குகள் முடிஞ்சிருக்கு, பிறகு பாப்பம்" என்றார் மூர்த்தி.

"இருவது வயசு பாப்பா தானே இப்ப செத்தது.... எல்லாம் ஆண்டு அனுபவிச்சு தான் கிழவி போயிருக்கு...
மகனுக்கு முப்பத்திரெண்டு வயசாகுதே! ஒரு கல்யாணம் பண்ணி வைக்கோணும் எண்ட நினைப்பிருக்கா உனக்கு" என்றான் எடுத்தெறிந்து.


"என்னடா பேச்சு பேசுற? நீ தானே அதெல்லாம் சிறை வாழ்கை, உனக்கு சரிவராது எண்ட"

"நான் சொன்னா.. அப்பிடியே விட்டிடுவீங்களா..? சரி சரி இப்ப ஒரு பொண்ண பாத்தன் பேசி முடியுங்கோ...."

"யாரு அது?" என்றார் ஒரு மாதிரியாக.
அவருக்கு தான் தெரியுமே. இவனுக்கு பெண் குடு என்று கேட்டால், யாருமே கொடுக்க மாட்டார்கள் என்று.

ஆனால் இவனும் சாதாரணமானவன் இல்லை. மாட்டேன் என்றால் எந்த எல்லைக்கும் போவான்.

"சுதாகர் அங்கிள் மகள் துஷா" என்றான் சாதாரணமாக.
மயக்கம் வராத குறைதான். கிளியை வளர்த்து யாராவது குரங்கு கையில் கொடுப்பார்களா?

"என்னடா சொல்ற? அவளின்ர படிப்புக்கும், அழகுக்கும், வயசு கூட பொருந்தாது. இதில நீ ஒரு பொறுக்கி" என்றார் தன் மகனை தானே தூற்றுகிறோம் என்பதை மறந்து.

அப்பா.........." என்று அடக்கியவன்,
"என்னை புகழ்ந்தது காணும், முதல்ல அவளை எனக்கு பேசி முடியுங்கோ"

"விளையாடுகிறாயா? அவளுக்கு இன்னும் கல்யாண வயசே வரேல... அதோட இப்ப தான் கோலேஜ் போக தொடங்கியிருக்கிறாள்.
படிப்பு முடியுற வரைக்கு பொறுத்திருப்ப எண்டா இரு! இல்லாட்டிக்கு எல்லாத்தையும் விடு!" என்றார் அவனை திசை திருப்ப.

"ஏன் அவள் படிச்சு தான், குடும்பத்தை பாக்கோணுமோ? அதெல்லாம் நான் பாப்பன். அதோட அவளுக்கு பத்தொன்பது வயசு. கல்யாண வயசு தான்."

"அவங்களுக்கு அவள் சின்ன புள்ளடா!
உனக்காக படிப்ப விட்டு தருவினமா? அதுக்குள்ள உன்னை நீ மாத்தினா, சுலபமா பொண்ணு கேக்கலாம்." என்றார்.

"ம்ம் படிக்கட்டும்... ஆனால் அவள் எனக்கு மட்டுந்தான். இடையில யாராச்சும் வந்திச்சினம்.... அவ்வளவு தான்" என்று சென்று விட்டான்.

அதன் பின்பு முத்துவின் நடவடிக்கைகளில் நிறைய மாற்றங்கள்.
முதலில் சரியான நேரத்திற்கு தினமும் வீடு வர தொடங்கியவன், சிறிது சிறிதாக தன் கெட்ட பழக்கங்களை குறைக்க தொடங்கினான்.

பெற்றோர்கள் என்ன சொன்னாலும், அதற்கு மறு பேச்சில்லை. ஊரில் கூட இவன் நல்ல பழக்கங்கள் தெரிய வர, இப்போது அவனுக்கு பெண் கொடுக்க என பலர் வீடு தேடி வந்தனர். அத்தனையையும் மறுத்தவன், துஷா தான் தனக்கு வேண்டுமென நிற்க.
பெற்றோர்களாலும் எதுவும் சொல்ல முடியவில்லை.


சிறந்த மகனாக திகழும் மகனை நினைக்க ஒரு புறம் மகிழ்ச்சி என்றாலும்.
சுதாகர் சம்மதிக்கவில்லை என்றால் என்னாகும் என்ற பயம் அவரை மிரட்டாமலும் இல்லை.

தன் மூன்று வருட கல்வியை முடிந்து, கடைசி தேர்வுக்கு, இன்னும் ஒரு மாதம் என்றிருக்க, விடுமுறையும் தாெடங்கியது.

அந்த விடு முறையிலே அவளது பிறந்த நாளும் வருவதால்,
அவளுக்கு பார்த்த மாப்பிள்ளையை அன்று அவளிடம் சொல்ல வேண்டும் என்றிருந்தார் சுதாகர்.

தேர்வு முடித்த கையோடு கல்யாணத்தை முடிப்பது தான் அவர் எண்ணம்.
இவற்றிக்கிடையில் வாசனும் தன் மகளை வெளிநாட்டில் கட்டிக்கொடுத்திருந்தார்.


இப்போது அவளுக்கு குழந்தை பிறந்திருப்பதால், குடும்பமாக வெளிநாடு செல்வதற்கு, வீசா ஏற்பாடு செய்வதாகவும், அந்த அலைச்சலில் வர முடியவில்லை என்று, போனிலே பேசிக் கொள்வார்.


மூர்த்தி வீட்டிற்கு வந்த சுதாகர், மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தன் பங்கை பிரித்து தரும்படி கேட்டார்.

எங்கு அவன் பிரிந்து சென்றால், தொழில் நுணுக்கங்கள் யாவும் தெரிந்தன், தன்னை விட்டு போனார், தன் லாபம் கெட்டு விடும் என நினைத்தவன், முன்னால் வாங்கிய கடன்களுக்கு இப்போது கணக்கு காட்ட ஆரம்பித்தான்.


சுதாகரும் அப்போதே தன் கடனை அடைத்து விட்டாதாக சொல்ல,
இல்லை என அடம் பிடித்தவன், கடனை அடைத்ததற்கான ஆதாரத்தை காட்டு என்றான்.


உண்மையில் அவனிடம் எந்த ஆதாரமும் இல்லை. வாசன் அறிமுக படுத்தினான் என்றதனாலோ, இல்லை அவன் மேல் இருந்த நம்பிக்கையினாலோ, அவனும் ஆதாரம் அற்று கடனை கொடுத்து விட்டான்.


ஆனால் மூர்த்தியோ அவன் வாங்கிய கடன் பத்திரங்களை காட்டி, இத்தனை வருட வட்டிக்கணக்கை காட்டினான்.


சுதாகரும் எதுவும் செய்ய முடியாத காரணத்தால், தனக்கு பங்கே வேண்டாம் என்றும், தான் வாங்கிய கடன் இதன் மூலமா அடைக்க பட்டது என்று எழுதி வாங்கும் போது தான், வாசனுடைய அழைப்பு வந்தது.


அப்போது தான் அவரிடம், துஷாவின் பிறந்த தினத்தன்று அவளுக்கு இன்ப அதிர்சி கொடுப்பதாகவும், அவள் பரீட்சை முடிந்த கையோடு திருமணம் என்றும் கூறினான்.

"மாப்பிள்ளை யார்?" என்ற வாசனிடம்,

"துஷா சம்மதிக்கட்டும்.. பிறகு எல்லாருக்கும் சொல்லுறன்" என்றார் சுதாகர்.

சுதாகர் போனில் பேசியவற்றை கேட்டவாறே வந்த முத்து. இனியும் தாமதிப்பது தவறென நினைத்தவனாய்,

"அங்கிளிட்ட ஒரு விஷயம் கதைக்கோணும்" என்றவன்,

"எனக்கு துஷாவ கட்டி தாங்கோ அங்கிள். அவளை நான் நல்லா பாக்குறன்" என்றான்.
சுதாகருக்கோ பக்கென்று ஆனது.

"மன்னிச்சிடுங்கோ தம்பி! அவளுக்கு ஏற்கனவே பேசி முடிச்சிட்டம்." என்றார் நேரடியாக மறுக்க முடியாது.

"அங்கிள் ப்ளீஸ்... எனக்கு துஷா வேணும் அவளுக்காக என்னவும் செய்வன்." என்றான் கெஞ்சலாய்.
அதற்கு மேல் பேச பிடிக்காதவரோ,


"நான் வாறேன் மூர்த்தி என்று விட்டு வந்து விட்டான்.
அவன் போன பிறகு தந்தையிடம் எரிந்து விழுந்தான் முத்து.


"உங்களால தான். அவள் கிடைப்பாள் எண்டு தானே கெட்ட பழக்கமல்லாம் விட்டன். அண்டைக்கே அவளை தூக்கிருந்தா, இண்டைக்கு எனக்கு ரெண்டு புள்ளைகள் இருந்திருக்கும்" என ஆர்ப்பறித்தவன்,

"போனது போகட்டும், அவர் வாங்கின கடனை காட்டி மிரட்டி, அவர எப்பிடியாவது வழிக்கு கொண்டு வாங்கோ என்றான்." இடையில் வந்ததால் நடந்த விஷயம் தெரியாது.


சுதாகர் எழுதித்தந்த பத்திரத்தை காட்டியதும், அதை படித்த முத்து அவரை முறைத்தான்.

"இருந்த ஒரு வழியையும் போச்சு...
பேசாம மாப்பிள்ளைய கொண்டுடலாமோ"
அதற்கு அவன் யாரென தெரிய வேண்டுமே! இருந்த எல்லா வழிகளும் அடைத்தாயிற்று முத்துவிற்கு.


அப்போது தான் கொழும்பில் இருந்து துஷாவும் வருவதாக அறிவித்தாள்.

அவளை அழைத்து வருவதறாகாக பஸ் ஸ்டாண்ட் சென்றவர், கால தாமதத்தினால் குறுக்கு பாதையை தேர்ந்தெடுத்தார்.

அது ஒரு சிறிய பாதை.. ஒரு நேரத்தில் ஓர் வாகனம் மாத்திரமே போக முடியும்.
அவன் கெட்ட நேரமோ என்னவோ, வாசன் அந்த வழியால் தான் செல்கிறான் என்ற தகவலை அறிந்த முத்து, டிப்பரால் அவர் காரை நசுக்கி தள்ளி விட்டு, அதிலிருந்து இறங்கி ஓடிவிட்டான்.


இங்கு தந்தை வருவார் சில மணிநேரமாக காத்திருந்தவள் முன் வந்த வாசன்,

"வா போகலாம்" என்றார்.

"அப்பா..... எப்பவுமே அவர் தானே வருவார்...
நீங்க எப்பிடி இங்க...? ஏதோ வெளிநாட்டு அலுவலா இருக்கிறீங்கள் எண்டு சொன்னாரே"
எந்த பதிலும் சொல்லவில்லை அவர். மௌனமாகவே அவளை அழைத்து சென்றார்.

வாசலிலே பெரிம் கூட்டம் கூடி நிற்கவும், ஏன் இ்வளவு சனம்...? என்னாச்சு?" என்றவளுக்கு ஏதே புரிய விழிகளை விரித்தவாறே வந்தாள்.

அவளை கண்ட சாந்தி.

"அம்மாடி..................." என்று ஓடி வந்தவர் அவளை கட்டிக்கொண்டு கதறவே ஆரம்பித்தார்.

"என்னாச்சு? எதுக்கு இப்ப அழுவுற? சொல்லும்மா?" தாயின் கண்ணீரை கண்டதும் தானாய் பொங்கியது அவளுக்கும் கண்ணீர்.

"நீ இப்பிடி அழுறத, அப்பா பாத்திட்டு இருக்க மாட்டாரேம்மா.. எங்கம்மா அவர்?"

"அவர் என்னையும் உன்னையும் தவிக்க விட்டுட்டு, உலகத்தை விட்டு போட்டாரும்மா....." என கதறியவள் மயங்கியே போனாள்.

எதையும் நம்ப முடியவில்லை.
மூன்று மணி நேரம் முன்பு தான், வருகிறேன் என்று போனை வைத்தார்.

"இல்லை..... இல்லை.... அப்பாக்கு எதுவுமில்லை" என்று மயங்கி கிடந்த தாயை கூட எழுப்பாது, உண்மையை அறியும் ஆவலில் உள்ளே ஓடினாள்.


தெற்கு திசைக்கு தலை வைத்து, வெள்ளை துணியால், முகத்திலிருந்து முழுவதுமாக மூட்டைபோல் கட்டி, சவப்பெட்டியினுள் திணிக்கப் பட்டிருந்தார் அவள் தந்தை.

இன்னமும் நம்ப முடியாது எல்லோரையும் பார்தவளுக்கு, கண்கள் இருட்டிக் காெண்டு வர, தொப்பென அவளும் தரையில் விழுந்தாள்.


ஓடிவந்து அவளை தூக்கிய வாசன், தண்ணீர் தெளித்து மயக்கம் கலைத்தார்.

மெதுவாக கண்களை திறந்து கொண்டவளோ, தான் சாய்ந்திருப்பது வாசன் என்று தெரிந்ததும்,

"எப்படி அங்கிள்...? அப்பாவுக்கு ஏன் இந்த நிலை?" கதறவே ஆரம்பித்து விட்டாள் சின்னவள்.

அந்த நிலமையில் அவளை தேற்றும் விதம் தெரியவில்லை அவருக்கு. அவளை தேற்றும் நிலமையிலும் அவருமில்லை, வார்த்தைகள் கூட அவருக்கு கிடைக்கவில்லை.

அவருமே இதை எதிர்பார்க்கவில்லையே? பின் எப்படி அவளை தேற்றுவார்?
அவளோ கேட்ட கேள்விகளுக்கு பதிலை எதிர்பார்த்து வாசனையே பார்த்திருந்தாள்.


அவளை இறுக அணைத்தவர்,
"அம்மாடி.... இது தான் உண்மை. சுதாகர் எங்களை விட்டுட்டு போட்டார்...
உன்னை கூட்டி வாறதுக்காக.. பழையவீதி வழியா வந்தார்... எவனோ பாவி... டிப்பரை அப்பா கார்ல மோதிட்டு, பயத்தில ஓடிட்டான்.

பெரிய வாகனம் மோதினதால கார் நசுங்கி, அப்பா உடலும் நசிங்கீட்டுது. அதான் முகத்தை கூட பாக்க விடாம, சுத்தி கட்டி தந்திருக்கினம்... உடனமே அடக்கம் பண்ணட்டாம்.... விட்டா பாடி இன்னும் மோசமாகி கிருமி விழுந்துடுமாம்" என்றவர் இம்முறை வாய்விட்டே அழுதார்.


அவரை நம்பாதவளோ,
"இல்லை அங்கிள்... அப்பா என்னையும் அம்மாவையும் தனியா விட்டுட்டு, பக்கத்து ஊருக்கு கூட போக மாட்டார்...
நீங்க எல்லாருமா சேர்ந்து பொய் சொல்லுறீங்கள்... நான் நம்ப மாட்டேன்...... எல்லாரும் சேர்ந்து விளையாடுறீங்க." என புலம்பியவாறே சுற்ற வர எல்லோரையும் நம்பாது பார்த்தவள்,


"அதோ.... அதோ அவா என்னை பாத்து சிரிக்கிறா. ....... எல்லாருமே பொய் தானே சொல்லுறீங்கள்.? என்னை ஏமாத்த, இது தான் உங்களுக்கு கிடைச்ச காரணமா?" அதிர்ச்சியில் பித்து பிடித்தவளாக புலம்பியவள்,


"நேற்று தான் ஏதோ சப்றைஸ் எனக்கு வைச்சிருக்கிறன் எண்டார். அது இது தானா?" என உண்மை புரிபட கதறியவள், மறு நொடியே,

"அங்கிள்... முதல்ல இவரை விளையாடாம எழும்ப சொல்லுங்கோ..." என்று வாசன் சட்டையை இறுக பற்றி அவள் ஆவேசமாக கத்தினாள்.


வாசனால் என்ன செய்ய முடியும்.? அவள் அத்தனை உளுப்பல்களையும் தாங்கியவராய், வாயின் மேல் கையை வைத்து கதறுவதை தவிர,


தன் தந்தையின் பூத உடல் அருகில் சென்றவள், அந்த வெள்ளை துணியின் மேல் கசிந்திருக்கும் இரத்த கறைகளை நடுங்கிய விரல்களால் தொட்டுப்பார்த்தாள்.


"அய்யோ..... அப்பா எழும்புங்கோப்பா.. சின்னதா நான் அழுதாக்கூட பாத்திட்டு இருக்க மாட்டீங்களே! இப்ப உங்கட புள்ள இப்பிடி அழுறன்.... பாத்துக்கொண்டு பேசாமல படுத்திருக்கிறீங்களே எழும்புங்கோப்பா....
எழும்பி இங்க எதுவும் இல்லை... எல்லாரும் அவங்க அவங்க வீட்ட போக சொல்லுங்கோப்பா.......


ஐயோ...... என்ர அப்பாவ பாக்க கூட விடாம இப்பிடி மூட்ட கணக்க கட்டி வைச்சிருங்காங்களே.....
அப்பா எழும்புங்கோ.... இப்ப நீங்கள் எழும்பேல... இனி நான் உங்களோட கதைக்க மாட்டன். எழும்புங்கோ எண்டுறன்........." ஆவேசமாக கத்தியவள், வெறி வந்தவளை போல், சுதாகரின் தோள்களை பற்றி தூக்கினாள்.


அவளது நிலை கண்டவர்கள்,
"பாடிய தொட விடாதங்கோ... நசிங்கின உடம்பு... புள்ளைக்கு நோய் ஏதாவது வந்திட போகுது." என்று எச்சரித்தனர்.


அவர்கள் பேச்சின் நிதர்சனம் அறிந்தவரார், சுதாகரனிடமிருந்து துஷாவை பிரித்தெடுத்தார் வாசன்.

"அங்கிள் என்னை ..." என்று வாசனை உதறியவள், பின் அவர் பிடிக்கு அடங்கி, அவன் மார்பின் மீதே விழுந்து அழுதாள்.


"இனிமேல் அப்பாவ பாக்கவே முடியாதா? ஒரே ஒரு தடவை, அவற்ர முகத்த காட்ட சொல்லுங்கே அங்கிள்..
ப்ளீஸ்...... கடைசியா ஒரு தடவை பாக்குறன்..." என்று கதறியவளை பார்த்து அங்கு அழாதவர்களே கிடையாது.


இது எதுவும் அறியாமல் அவள் அன்னையோ மயக்க நிலையிலே கிடக்க. அவள் அருகில் இருந்து பெண்கள் விசிறியபடி இருந்தனர்.

துஷாவுக்கும் பொட்டலமாக கிடந்த தந்தையை பார்த்து பார்த்து அழுது, ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல், சோர்ந்தவளாய், சவப்பெட்டி அருகில் அமர்ந்து விட்டாள்.
அவள் அருகில் வந்து அமர்ந்த வாசன், அவளை தோளோடு அணைத்து.


"அம்மாடி.. அப்பா உடம்ப கன நேரம் வைச்சிருக்க முடியாது... நீ படிச்ச புள்ள.... நிதர்சனம் புரியும்... அம்மாவும் இன்னும் எழும்பேல...
இனி எல்லாமே அவளுக்கு நீ தான்.. ஆறுதலும் நீ தான் சொல்லோணும்.

சொல்லப்போன உன்னை நம்பித்தான் அப்பா அம்மாவ விட்டுட்டு போயிருக்கார். நீயே இப்படி உடைஞ்சு போனா, அம்மாவ யார் தேற்றுறது?
அம்மாட்ட போடா... உன்ர அருகாமய உணர்ந்தா, அம்மா எழும்பிடுவா... போய் அவளை எழுப்பு" என்றார்.


"எப்பிடி அங்கிள் அப்பா இடத்தில நான்? எங்கள் ரெண்டு பேருக்கும் இனி யாரிருக்கினம்? இவர் தானே அங்கிள் எல்லாமாவே இருந்தார். இப்ப திடீர் எண்டு எங்களை தவிக்க விட்டுராரே அங்கிள்" என்றாள் கண்ணீரோடு.


"வேற வழி இல்லம்மா.... எழும்பு" என்று எழுந்தவர், அவளையும் எழுப்பி விட்டார்.

தாய் அருகில் சென்று அமர்ந்தவள், அம்மா எழும்பும்மா....." என்றாள்.


அவரிடம் எந்த அசைவும் இல்லை.....
"நீயும் என்னை தவிக்க விட்டு போக போறியாம்மா...? எழும்பும்மா.." என்றவள் அருகில் இருந்த தண்ணீரை தெளித்து முகத்தை துடைத்தாள்.
பக்கத்தில் இருந்தவரிடம் விசிறியை வாங்கி விசிறியவள்,

"எல்லாரும் என்னை அனாதையா விட்டுட்டு போங்கோ... நானும் வந்திடுறன்." புலம்பியவள் கன்னத்தை வருடியது ஓர் கரம்.


அது தாயின் கை என்று தெரிந்ததும், "அம்மா......" என்று அவரை கட்டிக்கொண்டவள்,

"நல்லா பயந்திட்டேன்ம்மா... அப்பா போல நீயும் என்னை ஏமாத்திட்டியோ எண்டு."

"அப்பா இப்பிடி போயிட்டாரேடா? என்ர புள்ளைய இனி எப்பிடி நான் வளக்க போறன். சின்ன மலிகை சாமான் கூட வாங்க வெளிய விட மாட்டாரே! இப்ப எல்லாம் நீயே பார் எண்டு, என்ர தலையில எல்லா பாரத்தையும் இறக்கீட்டு ஒரேயடியா போயிட்டாரே!" என்றார் மீண்டும் கதறி.

முடிந்த வரை இருவரையும சமாதானப்படுத்திய வாசன்,

"நசிங்கி போன உடம்பு தேவி... நிறைய நேரம் வைச்சிருக்க கூடாது.. செய்ய வேண்டியதெல்லாம் செய்திடலாம்" என்றதும் தான்
இருவரும் கத்த தொடங்கினார்கள்.


சுதாகர் என்ற ஒருவன் அந்த வீட்டில் இருக்கும் இறுதி நிமிடம் இது தான் என்பதை துஷாவாளோ தேவியாளோ ஏற்க முடியவில்லை.
துஷாவை தனிமையில் அழைத்த வாசன்.


"அம்மாடி மனச தேர்த்திக்கோ... எனக்கும் புரியுது... இது சின்ன இழப்பில்ல... ஆனா போனவருக்காக, இருக்கிற அம்மாவ இழந்திடாதடா.....! நீயே பார்த்தா தானே!
எவ்வளவு நேரம் தேவி மயங்கி இருந்தாள் எண்டு..

நீ பிறக்கேக்க கூட இப்பிடி தான் இருந்தா.... முதலும் இப்பிடி தான் ஒரு தடவை ரொம்ப நேரம் மயங்கி இருந்தா... எல்லாருமே தேவி உயிரோட இல்ல எண்டு பேசினாங்கள்.

அதையும் தாண்டி உங்க அம்மா புளைச்சுகிட்டா....
இப்ப கூட அதே மயக்கம் தான் வந்திருக்கு, இனி இதே போல ஆகாம பாக்கோணும் இல்லையா?
புரிஞ்சுக்கடா." என்று எச்சரித்தவர், அவளை சுதாகர் உடலருகில் சென்று, செய்ய வேண்டிய அத்தனை சடங்குகளையும் வாசனும், முத்துவும் தான் கவனித்து கொண்டனர்.


கொள்ளி வைக்க ஆண் பிள்ளை இல்லை என்பதால், முத்து தானே வைப்பதாக கூறவும், வாசனோ இல்லை தானே பார்த்து கொள்கிறேன் என்று கூற அனைத்து காரியங்களும் முடிந்தது.


சுதாகரன் உடல் எடுக்கும் போது தேவி அழுத அழுகையில், ஊரே பயந்திருந்தது அவளுக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று.
துஷா தானும் அழுதால் தாய் இன்னும் தன்னை பார்த்து அழுவார் என்று, முடிந்த அளவு தன் அழுகையை அடக்கியவள், தாயை சமாதாணம் செய்து, குடிக்க தண்ணீர் கொடுத்து, தாயை மடியில் கிடத்தி வாயை பொத்திய படி அழுதாள்.