• இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.
  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏

4.நவிலனின் கோதையானாள்

Lakshmi kandhan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2025
54
52
18
Salem

4.நவிலனின் கோதையானாள்​



மருத்துவமனை வந்து ஒன்றரை மாதங்கள் ஆகி இருந்தது கண்ணை திறப்பேனா என்று அவள் மூளை மறுக்க அவள் திறந்து தான் ஆக வேண்டும் என்பது போல் தினமும் அவளோடு பேசிக்கொண்டு இருந்தான் நவிலன்.


பனி உனக்கு ஒன்னு தெரியுமா…

ம்ம் ன்னு கேளு பனி என்றான் நவிலன்


நாம ஒரே காலேஜ் ல தான் படிச்சோம் என்ன டிபார்ட்மெண்ட் தான் வேற எவ்வளவு சந்தோஷமான தருணங்கள் தெரியுமா உன்னையே காலேஜ் ல நான் பார்த்து வியக்காத நாளே இல்ல அவ்வளவு சேட்டை நீ, ஆனா ஒரு இடத்தில் கூட மாட்ட மாட்ட அந்த அளவுக்கு அறிவாளி நீ, ஆனா எப்படி இந்த மாதிரி ஒரு பயந்தாகொளியா மாறின நீ எவ்வளவு பெரிய தைரியசாலி தெரியுமா அந்த ஒவ்வொரு நொடியும் நீ கடந்து வந்தது பெரிய விஷயம் அதையெல்லாம் தாண்டிய உன்னால் இந்த நரம்பில்லாத நாக்கு பேசுறதையா பெரிசா நினைச்சு இப்படி முழிக்காம இருக்க ?

நமக்காக வாழனும் பனி நீ எழுந்து வா நீ தான் நிறைய பொண்ணுங்களுக்கு ரோல் மாடல் அதை நீ உணராம இல்ல ஆனா இப்படி உன்னையே நீ தாழ்த்தி என்ன பண்ண போற எழுந்து வந்தா தானே என்னைய பத்தி தெரியும் நீ இப்படி ஒதுங்கியே இருக்கனும் ன்னு நினைச்சா அப்புறம் எப்படி பனி இந்த உலகத்தில் இருக்க அழகான பக்கத்தை பார்க்க முடியும்


அவனும் என்னென்னவோ பேசிப் பார்க்கிறான் ஆனால் சிறு அசைவு கூட அவளிடம் இல்லை..

சரி போ நான் கிளம்புறேன் நான் போனதும் உனக்கு ஜாலியா இருக்கும் இல்ல ஆனா வந்துடுவேன் ரவுண்ட்ஸ் தான் போறேன் என்றவன் எழுந்து விட வாசலில் இருந்த அம்சா உள்ளே வந்தார்.

அத்தை பார்த்துக்கோங்க வந்துடுறேன் என்றவன் வெளியேறி விட

அம்சா, “பூவு இதுக்கா நாங்க உன்னை ஆளாக்கினோம் உன்னோட விருப்பத்தை தானே இத்தனை வருஷமா விட்டு வச்சோம் கல்யாணம் தானே பண்ணிக்க சொன்னோம் அதுக்கு போய் இப்படி படுத்து இருக்கியே என்று கண்ணீர் சிந்த இத்தனை நாட்களாய் சிந்திய ஒவ்வொரு துளியையும் இன்று வந்த துளியில் சற்றே அசைய ஆரம்பித்து இருந்தது அவள் உடல் ஆனால் அதை அம்சா உணரவில்லை..


என்ன அம்சா என்ன சொல்லுறா அம்மு..

என்ன சொல்லுவா உனக்கு வேற வேலையே இல்லம்மா எப்ப பாரு இப்படி புலம்பிட்டே இரு அப்படின்னு பார்க்கிறா என் பொழப்பை பார்த்தீங்களா இப்படி அல்லாடிட்டு இருக்கேன் என்று மூக்கை உறிஞ்ச..

அட அத்த என்ன நீங்க இதுக்கே அல்லாடுறேன் ன்னு சொன்னா அப்புறம் எங்க கல்யாணம் முடிஞ்சு பேரன் பேத்தி பார்க்கும்போது அப்ப என்ன சொல்லுவீங்க என்று அந்த இடத்தை கலகலப்பாக்க, கார்த்திகேயன் வாய்விட்டு அழுது இருந்தார்…


ஒன்றரை மாத பேச்சு தான் இதோ இப்போது சற்றே அசைவை கொடுத்தவள் கை நகர்த்தி கட்டிலில் இருந்த அம்சாவின் கையில் பட அழுது கொண்டு இருந்த அம்சா பூவு என்று பூரிப்பாய் அழைக்க அவள் கண்கள் சுழல ஆரம்பித்து இருந்தது.

மாப்ள வாங்க பூவு அசையுறா என்றதும் படபடப்பாக அடுத்த அடுத்த நகர்வில் இரண்டு மணிநேரத்தில் கண்ணை திறந்து இருந்தாள் பூம்பனி..

பூம்பனி என்று மகப்பேறு மருத்துவர் அழைக்க..

ஹான் என்று அவள் வாயை திறக்க..



உங்களுக்கு இப்ப எப்படி இருக்கு..

நல்லா இருக்கேன்..

உங்களுக்கு இவங்களை எல்லாம் தெரியுதா..

ம்ம்ம என்று தலையை ஆட்ட..

பூவு என்று அம்சா கண்கலங்க..

அம்மா என்று வாயை திறந்தாள்.. கண்ணீர் மல்க நான் வேண்டின கடவுள் கை விடல கண்ணு முழிச்சிட்ட என்று அழுதவரை அத்த அழாதீங்க அவளுக்கு செக் பண்ணட்டும் வாங்க என்று வெளியே சென்று இருந்தனர்.



வீட்டிற்கு வந்து இரண்டு நாட்கள் ஆகி இருந்தது..அம்மா..

வரேன் பூவு என்றவர் ஹாலுக்கு வர நான் ஸ்கூல் க்கு லீவ் சொல்லவே இல்ல அங்க என்ன ஏதுன்னு..

அதெல்லாம் மாப்ள பேசிட்டாரு நீ எதையும் போட்டு குழப்பிக்காத உன் கூட வேலை செய்யுற டீச்சர் எல்லாரும் வந்தாங்க உன்னையே பார்க்க அப்புறம் மீனா ன்னு ஒரு டீச்சர் அவங்க தான் உன்னையே ரொம்ப மிஸ் பண்ணுறாங்க போல அழுதுட்டாங்க

ஓஓஓ மீனாக்கா வந்தாங்களா?

ஆமா அப்புறம் நீ ஏன் இப்ப வேலைக்கு ஒரு ப்ரேக் எடுக்க கூடாது என்று அம்சா கேட்க..

என்னது…

இல்ல பூவு உடம்பு சரியாக்கட்டும் அப்புறம் போகலாம் இல்ல..

அம்மா ப்ளீஸ் எனக்கு நிம்மதி தர இடம் ன்னா அது ஸ்கூல் தான் அதையும் விடுன்னு சொன்னா என்ன அர்த்தம் ..

உன்னையே விடச் சொல்லல கொஞ்சநாள் கழிச்சு போகலாம் ன்னு..

இது ஒன்னும் கவர்மெண்ட் போஸ்ட் இல்ல நான் என் இஷ்டத்துக்கு லீவ் போட உடம்பு சரியில்ல ஓகே அதுக்கான லீவ் கிடைக்கும் நான் வேலை பார்க்க ஆரம்பிச்சு மூணு வருஷம் தான் ஆகுது…

இருக்கட்டும் பூவு வேற ஸ்கூல் கூட பார்த்துக்கலாம் இப்ப உடம்பு தானே முக்கியம்..

பார்க்கலாம் ம்மா என்றவள் சாய்ந்து அமர்ந்து கண்மூடிவிட எவ்வளவு நேரம் ஆகியதோ அவள் கண் விழிக்கையில் ஏதோ அவளை உரசி கொண்டு இருப்பது தெரிய…பட்டென கண்ணை திறக்க அந்த உதறலில்..

ஹேய் ரிலாக்ஸ் என்னாச்சு பனி…

நீங்க என்று தள்ளி உட்கார பார்க்க..

புன்னகையுடன் அவளை பார்த்தவன் என்னாச்சு என்றான்.

தெரியாத மாதிரியே கேட்குறதை பாரு என் தோள்ல கை இருக்கு என்று பார்வையில் காட்ட..

என்ன யோசனை பனி நான் மாமா கிட்ட நம்ம ரிஷெப்ஷன் பத்தி பேசிட்டு இருந்தேன் நீ தான் நல்ல தூக்கத்தில் இருந்த..

கொஞ்சம் தள்ளி உட்காருங்க என்று பட்டென சொல்லிவிட..

அதனால் என்ன உட்கார்ந்தா போச்சு என்றவன் அவளோட இன்னும் நெருக்கமாக அமர..

நவி என்று பல்லை கடித்தாள் பூம்பனி…

சொல்லு பேபி..

போதும் இது மாதிரி பண்ணாதீங்க..

நீ இப்படி பேசுறதுக்காகவே பண்ணலாம் போல எங்க இன்னொரு முறை கூப்பிடு..

என்ன என்றாள் புரியாதவளாய் அதை உணர்ந்தவன் மீண்டும் அவளை இடித்து கொண்டு அமர நவி என்றாள் மீண்டும், இது இதைத்தான் கேட்க ஆசையா இருந்தது என்றதும் தலையில் தட்டி கொண்டவள் எழுந்து போக பார்க்க அவன் விட்டால் தானே..

எதுக்கு இப்ப அவசரம் உன்கிட்டே நிறைய பேசனும் பனி ஆனா அதெல்லாம் நீ என் மனைவி ஆகி நம்ம வீட்டுக்கு வந்த பிறகு..

மன்னிக்கவும் இது நடக்கிறது நல்லது இல்ல..

ஏன் பனி..

வேண்டாமே..

அதான் ஏன்னு கேட்கிறேன்..

நான் மனநலம் பாதிக்கப்பட்டவ என்னைய கல்யாணம் பண்ணிக்கிறது தற்கொலைக்கு சமம்

அப்படின்னு யாரு சொன்னா?

நான் ஒரு நேரம் போல் இருக்க மாட்டேன்


என்னக்கு எப்படி கையாளும் ன்னு தெரியுமே


எல்லா நேரமும் அது சாத்தியப்படாது மிஸ்டர் நவிலன்


அப்படியா பூம்பனி


ஆமா..

சரி சேலன்ஜ் நாம கல்யாணம் பண்ணிட்டோம் இனி வாழ்ந்து அதை சரியாக வருமா வராதான்னு பார்த்துடலாம்

பைத்தியமா நீங்க

இப்ப தான் உன்னையே பைத்தியம் ன்னு சொன்ன இப்ப என்னைய பைத்தியம் ன்னு சொல்லுற இதுல எது நிஜம் பனி.


இரண்டுமே உண்மை தான்


அடப் பாருடா அப்ப சரியா தானே இருக்கு யாராவது ஒருத்தர் நார்மலா இருந்தா தானே பிரச்சினை இங்க தான் நாம் சேம் கேட்டகிரில இருக்கோமே அப்புறம் என்ன உனக்கு

ப்ளீஸ் நவி இதை பத்தி பேசி டென்ஷன் பண்ணாதீங்க உங்க கம்பெனியில் வேலை செய்யும் போதே சொல்லிட்டேன் இது சரி வராதுன்னு அப்புறமும் ஏன் இப்படி பண்ணுறீங்க?

நீ என்கிட்டே சொல்லவே இல்லையே…

உங்ககிட்ட சொன்னா என்ன உங்க அப்பாகிட்ட சொன்னா என்ன?

அப்பாகிட்ட சொன்னியா அவர் தான் எனக்கு சொல்லவே இல்லையே?

வாட்..

ஆமா அவர் எதுவும் எனக்கு சொல்லல

அப்ப அவர்கிட்ட கேளுங்க


கேட்கிற இடத்தில் அவர் இல்ல பனி நீ அந்த வீட்டு மருமகளா வரனும் அது மட்டும் தான் அவரோட கடைசி ஆசை


ப்ச் இதுமாதிரி சென்டிமெண்ட் வேணாம் நவி அதுக்கு தகுதியானவ நான் இல்ல நான் பக்கா சுயநலவாதி என்று நவின் சொன்ன கடைசி வார்த்தையை கவனிக்கவே இல்லை


இருக்கட்டும்

என்னால் உங்களுக்கு எந்த பயனும் இல்லை

என்னால் உனக்கு நிறைய பயன் இருக்கே அதுவே எனக்கு நிறைவா இருக்குமே‌.

அட என்ன இவன் இப்படி பேசிட்டு இருக்கான்..

சைட் அடிக்கிறியா பனி

ச்சே.


நான் தான் உனக்கு மட்டுமே எல்லா ரைட்சும் ஒன்றரை மாசத்துக்கு முன்னாடியே குடுத்துட்டனே அப்புறம் என்ன

நவிலன் எனக்கு இந்த கல்யாணம் குடும்பம் இதுல எல்லாம் விருப்பம் இல்ல

கல்யாணத்தில் விருப்பம் இல்லையா என்னைய பிடிக்கலையா என்று கேட்டதும்..

மொத்தமாவே இந்த வாழ்க்கை பிடிக்கல

அப்ப அத்தை மாமா கிட்ட கல்யாணம் பண்ண சரின்னு சொன்ன.

ஆமா சொன்னேன் அதை உங்களுக்கு விளக்கனும் ன்னு அவசியம் இல்ல

நீ சொல்லி தான் ஆகனும் நான் உங்க அம்மா அப்பா பார்த்த மாப்ள அப்புறம் ஏன் வேண்டாம் ன்னு சொல்லுறன்னு தெரியனும் இல்ல

யாருக்கு தெரியனும் அப்கோர்ஸ் எனக்கும் அவங்களுக்கும் தான் என்று வாசலை காட்ட..


கார்த்திகேயன் சோகமாக நின்று இருந்தார் சட்டென எழுந்தவள் அப்பா அது வந்து

இல்லடா தப்பு என் மேல் தான் என்று முடிக்கவில்லை

சாரிப்பா


எதுக்கு நீ சாரி சொல்லுற கட்டாயப்படுத்தினது அது நாங்க தானே..மன்னிச்சிடுங்க நேயன் இந்த வரவேற்பு நிறுத்திடுங்க என்றவர் குரல் கமற


இல்லப்பா நடக்கட்டும் எனக்கு சம்மதம் தான்..

இல்லம்மா வேண்டாம் இப்பவும் நீ அப்பாவுக்காக தான் சரின்னு சொல்லுற எப்படி உன் வாழ்க்கை நல்லா இருக்கனும் ன்னு நினைக்கிறேனோ அப்படித்தான் நேயனுக்கும் உன்னால நேயன் வாழ்க்கை துவண்டு போனதா இருக்க கூடாது அந்த தப்பை மட்டும் நான் செய்ய மாட்டேன் என்று அழுத்தமாக கூற


அப்பா

உண்மையை தான் சொல்றேன் எனக்காக நீ கட்டிக்கிட்டு போய் உடல் அளவுலையும் மனசு அளவுலையும் நேயனை காயப்படுத்த கூடாது இல்ல…

அவ்வளவு தான் நம்பிக்கை ஆ அப்பா…

சூழ்நிலையும் காலமும் எப்படி வேணா இருக்கும் இல்லையா…

எனக்கு பரிபூரண சம்மதம் அப்பா நான் அவர்கூட நல்லா வாழுறதையும் இல்ல அப்படி சொல்ல கூடாது அவர் வாழ்க்கையில் என்னால வசந்தம் மட்டும் தான் ன்னு எல்லாரும் சொல்லுற மாதிரி வாழ்ந்து காட்டுறேன்

அம்மு…

நீங்க நடக்க வேண்டியதை பாருங்க என்றவள் திரும்பி நவிலனை பார்த்து உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் என்றவள் வெளியே தோட்டத்திற்கு செல்ல

மாமா கவலைப்படாதீங்க அவளை அவ போக்கில் விடுங்க

அம்சா, “அப்படி விட்டா தனிமரமாகிடுவாளே…

அத்த என்ன நீங்க நான் இருக்கேன் என்றவன் வெளியேறி இருந்தான்..

சொல்லு பனி..

என்னைய பத்தி அம்மா அப்பா எல்லாம் சொல்லிட்டாங்களா..

என்ன சொல்லனும்

இல்ல என்ன பத்தி முழுசா…

அவர்களுக்கே முழுசா எதுவும் தெரியாதே பனி…நவிலனின் வார்த்தையில் அதிர்ந்து போனால் நவிலனின் கோதை..



தொடரும்


 

Joss uby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
545
164
43
Dindugal
ஏங்க அடுத்த எபி கொடுங்க மேடம்
 

Lakshmi kandhan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2025
54
52
18
Salem
ஏங்க அடுத்த எபி கொடுங்க மேடம்
கொடுத்துட்டேன் சகோதரி கொஞ்சம் உடம்பு சரியில்ல இனி தொடர்ந்து வரும் மிக்க மகிழ்ச்சி சகோதரி
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
399
199
43
Tirupur
நவிகிட்ட வேணாங்கிறா... முடியாதுங்கிறா... 🤔

அப்பாகிட்ட வாழறேங்கிறா... முடியுங்கிறா... 🤔

ஏன் மாத்தி மாத்தி பேசுறா 🙄
 
  • Like
Reactions: Lakshmi kandhan

Lakshmi kandhan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2025
54
52
18
Salem
நவிகிட்ட வேணாங்கிறா... முடியாதுங்கிறா... 🤔

அப்பாகிட்ட வாழறேங்கிறா... முடியுங்கிறா... 🤔

ஏன் மாத்தி மாத்தி பேசுறா 🙄
மிக்க மகிழ்ச்சி சகோதரி