• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

40. காற்றோடு கலந்த விதையவள்.

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
799
95
93
Jaffna
பாத்தடிகள் வைத்திருப்பான் வாசன்.


"ஒரு நிமிஷம்" என்ற தடுத்த குரலை தாெடர்ந்து, அவர்கள் முன் வந்து நின்ற இளா.
அவரது கையிலிருந்த பெட்டியை பிடிங்கி,


"நீங்கள் வேணுமென்டா போங்கோ.. அவள் வரமாட்டாள்" என்றான்.
அவனை இகழ்வது போல் ஓர் பார்வை பார்த்தவர்,


"பெட்டி போனா பரவாயில்ல.. நீ வா!" என்றவர் முன்னே நடக்க, பின்னே சென்றவளது கையினை போக விடாது சட்டென பற்றிக்கொண்டவனோ, வேண்டாம் என்பதாக தலையசைத்தான்.


கொஞ்ச தூரம் சென்றதம் தான், தன்னோடு துஷா வராததை உணர்ந்து திரும்பியவர் கண்ணில் அந்த காட்சி விழ.
திரும்பி அவனிடம் வந்தவர், துஷாவின் கையினை அவனிடமிருந்து விலக்க முயன்றார். அதில் கோபம் உண்டாக.


"அண்ணா.... அக்கா உங்களை நம்பி ஒண்டும் இங்க இவள அனுப்பேல..
என்னை நம்பித்தான் அனுப்பினாள் எண்டுறது நினைவிருக்கட்டும். நீ நில்லு துஷா" என்றான் அழுத்தமான வார்த்தைகளை பிரயோகித்து.

அவளுக்கு தான் என்ன செய்வதென்றே புரியவில்லை.

வாசனின் பதிலை எதிர்பார்து, அவரை பார்க,
அவரோ எதுவுதும் பேசாது அவளையே கேள்வியாய் பார்த்திருந்தார்.

இருவரின் பார்வை பரிமாற்றங்களையும் பார்த்தவன்,

"ப்ளீஸ் அண்ணா...... துஷா என்னோடயே இருக்கட்டும்.. அக்காவ தான் இழந்திட்டன். இவளையும் என்னட்ட இருந்து பிரிக்காதங்கோ" என்றவன் வார்த்தைகளில் கண்ணீரின் தழும்பல்.

கூடவே வாசனிடம் அவளை விட்டு கொடாது, துஷவை தன் அணைப்புக்குள்ளேயே பதுக்கிக்கொண்டான்.

அவனது கண்ணீரை கண்டு, இதழ்களில் மெல்லிய கோடாய் புன்னகை அரும்ப, அவன் முன் வந்தவர்,


"உன்ர மருமகள்டா அவள்... என்னட்ட கொஞ்சிக்கொண்டிருக்கிற"


"அப்ப துஷாவ இங்கரே விட்டுட்டு போறீங்களா?" நம்பாது கேட்டான்.


"விட்டுட்டு போகாம, கூட்டிக்கொண்ட போறது.? அவளுக்கு இப்ப உங்கட அரவணைப்பு மட்டும் தான் வேணும்...
இந்தனை மாசமா அவ்வளவு வேதனை அனுபவிச்சிட்டாள்... ஒரு கஷ்டம் ரெண்டு கஷ்டம் எண்டாலும் பரவாயில்ல.. கால் வைக்கிற திசை பூர கஷ்டம்... இனியாவது சந்தோஷம இருக்கட்டும்." என்றார்.


ஒரு புறம் தேவி இல்லை என்ற சோகமான செய்தி என்றாலும், மறுபுறம் இளாவின் மாற்றம் சந்தோஷமாகவே இருந்தது அனைவருக்கும்.
துஷாவை சூழ்ந்து கொண்டு, அவளை ஆளாளுக்கு தாங்க, அதில் அவளுக்கு தான் மூச்சுத்திணறியது.


ஒருவழியாக அழுது ,தழுவி அனைவரையும் தேற்றி முடிய ஆறுமணியை தண்டி இருக்க, வாசனோ அவர்களிடம் துஷாவை ஒப்படைத்ததில் மகிழ்ச்சியில் விடைபெற்றார்.


ராசாவை சொல்லவே வேண்டாம்.
துஷா மடியில் அமர்த்தி சாப்பாடு ஊட்டிவிட, கோபம் கொண்ட பப்லு.

"அவள் என்ன குழந்தையா? இறக்கி விடுங்கோ" என்றாள் பொறாமையில்.


"உங்கள சின்ன வயசில தூக்கி வைச்சு, பராக்கு காட்டு சாப்பாடு ஊட்டினார். அவளுக்கு சந்தர்ப்பங்கிடைக்கேல, இப்ப ஊட்டுறார்.. அதில உனக்கு ஏன் பொங்குது." என்று கணவனுக்காக காந்தி பரிந்து பேசியதும் இல்லாது. தானும் ஒரு வாய் கிள்ளி ஊட்டி விட்டார்.


"உன்ர பொண்ணின்ர மகளை கண்டதும் எங்க இருந்து பாசம் வந்தததோ.."


"பொறாம புடிச்சவளே! உன்ர தட்டில இருக்கிறத சாப்பிடு!" என்றார் கோபமாக..
உதட்டை சுழித்து இழுத்து பழிப்பு காட்டிவிட்டு சாப்பிட ஆரம்பித்தாள்.

இரவு தூங்கும் போது கூட அவளை தனிமையில் விடவில்ல காந்தி. அருகிலே தூங்கினார்.


நேற்று வரை அன்புக்காக ஏங்கி கிடந்தவளுக்கு, இன்று அத்தனையும் கிடைத்தது.
வழமை போல் காலையில் எழுந்து வேலைக்கு தயாரானவளிடம்,


"இந்த வேலையை விட்டுடலாமே" என்றனர் ஆண்கள் அக்கறையாய்.


"இல்ல மாமா! கொஞ்ச நாளைக்கு போறன்" என்றாள் கெஞ்சலாய்.


"சரி... ஆனா இண்டைக்கு மட்டும் வேண்டாம்" என்வர்கள் பேச்சில் அமைதி காத்தவளுக்கு, ரதனிடம் நடந்தவற்றை கேட்க வேண்டும் என்ற ஆர்வம்.
ஆனால் மாமனின் பேச்சையில் தட்ட மனம் எழவில்லை.


"ரவி அண்ணாட்டயே கேட்டிடுவோம்' என நினைத்தவள். அப்போது தான் அது தோன்றியது.


"வாசன் அங்கிளுக்கு முத்து கடத்தீட்டு போன கதை எப்பிடி தெரிஞ்சிது? எங்கள் மூண்டு பேரையும் தவிர, வேற யாருக்கும் தெரிய வாய்ப்பில்லையே!


ஒருவேளை.... இந்த ரெண்டு பேரில.... இல்ல... அதுக்கு வாய்பில்லை... அவங்கள யாரெண்டே அங்கிளுக்கு தெரியாது..


ஆனா எப்பிடி சரியான நேரம் வந்து என்ர பக்கத்து நியாயத்த சொன்னார்...? கிடைத்த இடைவெளிக்குள் தன்னை குடைந்த கேள்விகளை தன்னிடமே கேட்டவள் காதினில்,


"மாமா கேட்க கூடாதத கேட்டுட்டனா?" மணிவண்ணனின் குரலில் சித்தம் தெளிந்தவள்,


"அப்பிடி எல்லாம் ஒண்டும் இல்ல மாமா! போன் பண்ணி சொல்லிடுறன்." என்றவள் அதன்படியே வர்மனுக்கு அழைத்தாள்.


"அண்ணா இண்டைக்கு வர ஏலாது முடியாது சார்ட சொல்லிடுங்காே..."


" நீயே சொல்லலாமே துஷா" என்றவனிடம்,
அவற்ர நம்பர் என்னட்ட இல்ல.. நீங்களே சொல்லிடுங்கோ" என்றவள் ஒரு சில உரையாடலின் பின்பே போனை வைத்தாள்.


அடுத்து சில நிமிடங்களில் கோவிலுக்கு செல்வதென்றாக, கோவில் தரிசனத்தையும் முடித்தவர்கள் முன் வந்து நின்றார் வாசன்.


துஷாவை அழைத்துக்கொண்டு வாசனோடு ராசா, காந்தி, மூன்று மாமன் மார்களும், வெளியே இடத்துக்கு செல்வதாக கூறி, மற்றவர்களை வீட்டுக்கு அனுப்பினர்.
இளா தான் துஷாவின் அருகில் அமர்ந்திருந்தான்.

"எங்க போறம் மாமா?"


"என்ன அவசரம்? போனா தெரிஞ்சிட போகுது" என்றவன் பார்வையோ காரின் வெளியே மேய, அவனையே பார்த்தவாறு வந்தவளுக்கு குழப்பமானது.

"இன்னும் எவ்வளவு தூரம் மாமா?"


"இடம் வந்தா எவ்வளவு தூரம் எண்டு தெரிஞ்சிடும்?" என்றான் இளா அலட்டிக்கொள்ளாது.


"இதெல்லாம் ஓவர் மாமா!" கடுப்பானவள், அதன் பின் அமைதியாகவே இருந்து விட்டாள்.

வண்டியானது அவள் வேலை செய்யும் மார்க்கெட்டில் இருந்து ஒரு இருநூறு மீற்றர் தூரம் சென்றிருக்கும், ஒதுக்கு புறமான ஒரு வீட்டினுள் காரானது நுழைந்தது.


இதுவும் அவள் தாத்தா வீட்டைப்போல் பழைமையான வீடு தான்.
ஆனால் அதைவிட இரண்டு மடங்கு பெரியது. வீட்டை சுற்றி பல வகையான பயன் தரு மரங்கள், கிராமத்தின் சாயலை நகரத்திலும் எடுத்தியம்பியது.


வண்டியை விட்டு இறங்கியவர்களை எதிர்பார்த்து இருந்தவர்கள் போல, வாசலிலேயே நின்று அனைவரையும் வரவேற்றனர், அந்த வயதான தம்பதியினர்.


அவர்கள் ஒருவரை எங்கேயோ பார்த்ததை போல் ஓர் உணர்வு. அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்த இருவரும்,

"இங்கே வா!" அவளை அழைத்தவர்கள் விழிகள் கண்ணீரின் தடம்.
அதன் காரணம் அறியாது, மாமன் மார்களை திரும்பி பார்த்தாள்.


"போம்மா..." என்றவர்களுக்கு சம்மதமாய் தலையசைத்தவள், அவர்களிடம் செல்ல,
மாறி மாறி அவளை வாரி அணைத்தவர்களின் உறவு புரியவில்லை என்றாலும், உணர்வினை புரிந்து கொண்டவளாய், அந்த அன்பிற்கு அடங்கிப் போனாள்.
அவள் நெற்றியினில் முத்தவர்,


"அப்படியே சுதாகர போல இருக்கிற." என்று பூரித்து நின்ற சமயம்,

"இப்படியே வாசலோட வைச்சே என்ர மகளை துரத்திடுறதா எண்ணமோ?" பின்னிருந்து வந்த குரலில் திரும்பி பார்த்தனர் அனைவரும்.
சுந்தரம் தான் நின்றிருந்தார். அவரையும் அவள் கேள்வியாக நோக்க,


"என்னடாம்மா அப்படி பார்க்கிற...? நானும் உனக்கு சொந்தம் தான். இவேன்ர மகன்" என்று அந்த வயதானவர்களை காட்டினார்.

"இது...?" என்றாள் அவர்களை தெரியாது.

"என்ன மாமா..?" என்றார் சுந்தரம் ராசாவிடம் திரும்பி.


" ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்கட்டும் எண்டு சொல்லேல மாப்பிள்ளை" என்றார் அவர் சிரித்தவாறு.


"அது சரி! உங்கட விளையாட்டால என்ர புள்ள எப்படி முழிக்கிறாள் எண்டு பாருங்கோ... சொல்லீட்டு கூப்பிட்டு வந்திருந்தா, அப்பா எண்டு ஓடி வந்து கட்டிப்பிடிச்சிருப்பாள்." குறைபட்டார் அவர்.

புரிந்து போயிற்று அவளுக்கு... நம்பமுடியாது, அதை உறுதி செய்வதாக காந்தியிடம் பார்வையை நகற்றியவள், கேள்விக்காக காத்திருந்தவர் போல்,
ஆமோதிப்பதாய் தலை அசைத்தவர்,

"இவாவும் உன்ர பாட்டி தான்ம்மா. சுதாகரோட அம்மா" என்றார்.


"பாட்டி..." என்றவள் கண்களும் கலங்கி போயிற்று. ஓடிச் சென்று இருவலையும் அணைத்துக் கொண்டாள்.
அவர்களின் அன்பு பரிமாற்றங்கள் நிறைவுட சில நிமிடங்கள் ஆனது. பின் உள்ளே அழைத்து சென்றனர்.

"இப்ப வந்த புரிந்துணர்வு, அப்பவே வந்திருந்தா, இவ்வளவு இழப்பு வந்திருக்காது" வாசன் ஆரம்பிக்க.

"எல்லாம் என்ர பிழை... . அண்டைக்கு சரியா விசாரிக்காம விட்டுட்டன். எல்லாம் சுயபுத்தி இல்லாததால வந்த வினை!


என்ர புள்ளையையும் அனாதையாக்கி, நானும் அனாதையாகி. இப்ப என் பேத்தியையும்......" மீதியை பேச முடியாது கண்ணீர் முட்ட, தோளில் இருந்த துண்டினால் கண்களை துடைத்துக்கொண்டவர்,


"இண்டைக்கு நான் உயிரோட இருக்கிறன்... என்ர புள்ளையை எனக்கு முன்னம் போயிட்டான்..." அழவே ஆரம்பித்து விட்டார்.


"நடந்தது நடந்துட்டுது.. இதை பற்றி கதைச்சு எதுவும் மாறப்போறதில்ல.... இந்த கதையையே கதைச்சுக் கொண்டிருந்தா, என்கட பேத்திய நாங்களே கஷ்டப்படுத்துறதா போயிடும்..

இனி நாங்கள் யோசிக்க வேண்டியதெல்லாம், ரெண்டு பேரும் ஒப்படைச்சிட்டு போன இந்த பொக்கிஷத்த பற்றித்தான்." என ராசா அவரை தேற்றும் விதமாய்.


"அதுவும் சரி தான்..." அவர் பேச்சில் தெளிந்தவரோ,

"மகனும் மருகமளும் ஆசை பட்டா மாதிரி, பேத்திய அந்த மாப்பிள்ளைக்கே கட்டி வைக்கிற வழிய பாப்பம்" என்றார்.


இவ்வளவு நேரமும் தன் முழு சொந்தமும் கிடைத்து விட்ட பூரிப்பில் இருந்தவள், அவர்களின் இறுதிப் பேச்சில் திகத்தாள்.

"ஆனால் சம்மந்தி.... மாப்பிள்ளை யாரெண்டு தான் தெரியாதே!" என்றார் கணபதி.


"என்ன சம்மந்தி நீங்கள்...! உங்கட மூத்தமகன்ர நண்பன் மகன் தானாமே என்றார் ராசா.


"அப்பிடியா? ஆனா எனக்கு தெரியலையே! உனக்கு தெரியுமா சுந்தரம்?" என்றார் சுந்தரத்திடம்.


"ம்ம்..செல்வத்தோட மகன் தானப்பா... துஷாவோடயும் வசந்தா கதைச்சாவாமே!" என்றான்.
துஷாவிற்கோ ஏகபட்ட குழப்பங்கள்.


'மாப்பிள்ளையோட அம்மா என்னோட கதைச்சாவா? எப்ப...? எனக்கு ஏன் எதுவும் நினைவில்லை?'

"என்னம்மா யோசிக்கிற? உனக்கும் தெரியாதா? வேலை செய்யிற இடத்தில கண்டு, எங்கட ரவி அறிமுக படுத்தினானே வசந்தா... நினைவில்லையா?"

"ரவியா? வசந்தா எண்டுறது....... ரதன் வெளியூர் போயிருந்த நேரம், வந்த அம்மா பெயர் தானே!

என்னை தெரிஞ்சது போல கூட விசாரிச்சாங்களே! அப்ப இதனால தானா?
அப்ப ரவி யாரு? எனக்கு என்ன வேணும்.? பெரியப்பா எங்கட ரவி எண்டாரே!' குழப்பமே எஞ்சியது.


இவற்றை எல்லாம் கடந்த குழப்பம் என்னவென்றால், நேற்று தான் அவள் சுதாகர், தேவி மகள் என்பதே தெரிய வந்தது.

இன்று அவர்கள் இவர்களுக்கு சொல்லி இருக்கலாம்..... அப்படி இருக்கும் போது, வசந்தாம்மா என்னோடு பேசியது.
அதுவும் நான் வேலை பார்க்கும் இடத்தில் என்று குறிப்பாக சொல்கிறார் என்றால், நான் வேலை செய்யும் இடம் முதற்கொண்டு, என்னை பற்றிய விஷயங்கள் முன்னாடியே பெரியப்பாவிற்கு தெரிந்திருக்கிறது என்பது தான்.


எப்படி தெரியும்? ஒருவேளை இவர் கூறியது போல வசந்தாம்மா கூறி இருப்பாரோ?
அப்படி அவர் கூறியிருந்தால், எதற்காக என்னை இவ்வளவு காலம் வந்து பார்க்கவில்லை.

என்மீது அக்கறை காட்டவில்லை என்றால், அலட்சியமாக விட்டார்கள் என்றலாம். ஆனால் இவர் இன்று தன்னிடம் காட்டும் பாசத்தையும், அன்பையும் பார்த்தால் அக்கறையில்லாததைப்போல் தெரியவில்லையே!
பிறகு என்ன தான் காரணம் ?' ஆயிரம் ஆயிரம் கேள்விகள் அவளுள். விடை தான் இல்லை.


"என்னடா என்ர பேத்தியை குழப்புற... பார் அவள் எப்படி குழம்பி போய் இருக்கிறாள் எண்டு.. அவளுக்கு இப்ப தான் நாங்கள் யாரெண்டதே தெரியும்.. இதில எங்கட ரவி எண்டா எப்பிடி?
தெளிவாக சொல்லு" என்ற
தந்தையின் பேச்சில், தன் தவறை உணர்ந்தவர்,


"மன்னிச்சிடம்மா.... ரவி யாரெண்டு சொல்ல மறந்துட்டன்" என்றவர் சொல்ல வாயெடுக்கு,


"உன்ர அண்ணன் தான்." என்ற குரல் வாசலில் கேட்டது. அது அவனே தான்.

"என்ன நம்பேலாம இருக்கா? என்னாலையும் தான்.. இவ்வளவு அழகான தங்கை எனக்கு..... பட் நம்பித்தான் ஆகோணும். அப்ப தான் சோறாம்" என்றான் கேலிபோல்.

அப்போது தான் எல்லாமே விளங்கியது. ரவியை முதலில் காணும்போது வந்த இனம்புரியாத உணர்வுக்கும் இது தான் காரணம் என்று.
ரவியை முறைத்தவள்,

"உங்களுக்கும் முன்னமே தெரியுமா?" என்றாள்.
இல்லை என்பதாகவே தலையசைத்தான்.
அவன் தலையசைப்பில் குழம்பியவள், எதுவோ கேட்க வந்து, இருக்கும் மனநிலையை கலைக்காது அமைதியானாள்.


"அவனை விடும்மா... இவன் இப்படித்தான்.. எதை கதைச்சாலும் காமடி பண்றதா நினைச்சு, நேரத்தை வீனடிப்பான்" என்று கணபதி காலை வார,

"உங்களுக்கு மம்மி தான் சரி தாத்தா... அவாவால தான் உங்கள அடக்க முடியும்"


"எதுக்கு என்ர பொண்டாட்டிய இழுக்கிற? அவள் இப்ப திருத்தீட்டாள். அது தான் வீட்ட விட்டு வந்து சர்வத்தையும் அடக்கிட்டியே!

நாங்களும் என்ன பத்து பிள்ளையாடா பெத்து வைச்சிருக்கிறம்.. ஒன்டில்லை எண்டா இன்னொண்ட கொஞ்ச...? நீயும் வீட்டில் இல்லையென்டா, பாவம் அவளும் என்ன செய்வாள்.?


செய்த பாவத்துக்கு மன்னிப்பு கேட்டு, திரும்ப வாங்கோண்டு கூப்பிட்டா.. உன்ர பாட்டியும் தாத்தாவும் தான் வரீனமில்ல...
உனக்கும் வயசாகது... நீயும் அந்த ரதன் தம்பிக்கு கல்யாணம் ஆகட்டும், பிறகு பாக்கலாம் எண்ட... இப்ப அந்த தம்பிக்கும் கல்யாணம் நடக்க போகுது... உனக்கு எப்படா கல்யாணம்?" என்றார் சுந்தரம் கவலையாய்.


அவரோ பேசிக்கொண்டிருக்கும் போதே, அவசரமாக உள்ளே ஓடிச் சென்றவன், கையில் வரும்போது ஓர் செம்பிருந்தது.
அதை அவரிடம் நீட்டினான்.

'நான் என்ன கேக்கிறன்.. இவன் என்ன செய்யிறான்.? என்னை அறியாமலே தண்ணி கேட்டுட்டனோ'


"நான் தண்ணியே கேக்கேலயேடா..." என்றார் குழப்பமாய்.


"இல்லப்பா... கத்தியே தொண்ட தண்ணி வத்திட கூடாது... அது தான், ஒரு மிடர் குடிச்சு தொண்டைய நனையுங்கோ" என்றவன் பேச்சில் மற்றையவர்கள் தம்மை மறந்து நகைக்க,


"இவன் இப்படித்தான் மாமா! நான் என்ன கதைக்கிறன், இவன் என்ன செய்யிறான் பாத்திங்களே! இவன்ர கதைய கேட்டா, எங்களுக்கு தான் பைத்தியம் பிடிக்கும்,
எனக்கு சந்தேகம் என்னண்டா, அந்த ரதன் தம்பி நல்ல பொறுப்பான பையன்.

கண்டிப்பானவனும் கூட, எப்படித்தான் இவனை எல்லாம் பக்கத்தில வைச்சிருக்கிறானோ!
இவனை விடுங்க மாமா! இப்ப என்ன கதைச்சம்? ஆ..... துஷா கல்யாணத்தை பற்றித்தானே!
இப்ப செல்வம் அங்கிள் வீட்டில இருந்து தான் வாறன்.


இண்டைக்கே நல்ல நாளா இருக்காம், இண்டைக்கே பொண்ணு பாக்க வாறம் எண்டினம்" என்றான்.


"என்னது....! இண்டைக்கேவா?" மாமன் மார் அதிர்சியுற,


" ஏற்கனவே பேசிய முடிச்ச சம்மந்தம் தானே! ஆறு மாசத்துக்கு முன்னமே கல்யாணம் நடந்திருக்கோணும்...
மகனுக்கு வயசு போகுது எண்டு வசந்தாம்மா கவலை படுறா..
மாப்பிள்ளையும் அம்மா ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி வைப்பா எண்டு, பல மாசமா காத்திட்டிருக்கான்.


நல்ல பையன் மாமா! என்ன என்னை விட கொஞ்சம் சுற்று வட்டம் கூட.... குள்ளமாயும் இருப்பான்" என்று மாப்பிள்ளையை வர்ணித்தவன் விழிகளோ துஷாவையே ஆராய்ந்தது.

அவளோ அவர்கள் பேச்சை கவனிக்காதவள் போல தலையை குனிந்து கொண்டாள்.


"என்ன மாப்பிள்ளை சொல்லுறீங்கள்?" இளா வினவ,


"அவன் பொய் சொல்லுறான் இளா! மாப்பிள்ளை அவ்ளோ அழகு.. பாக்க தானே போறீங்கள்"
இப்போதும் துஷாவின் முகத்தில் ஈ ஆடவில்லை. அதே போல தான் இருந்தாள். அவளுக்கு எங்கு சந்தோஷமாக இருக்கும்.? அவள் தான் கல்யாணம் என்று சொன்னதிலிருந்தே மூளையை வாடகைக்கு விட்டு விட்டாளே! யாருக்கோ என்பது போல் இருக்கையோடு இருக்கையாக ஒன்றிப்போனாள்.

அவளை பார்க்க பாவமாக இருந்தாலும், பெரிய இடத்து உத்தரவாச்சே! மீறினாள் இட்லிக்கு சாம்பாறாக்கி விடுவான் என்ற பயம்.


"சரி சம்மந்தி! பொண்ணு பாக்க வரினம் எண்டா~ நிறைய வேல இருக்கும்.. இன்னொரு நாள் வாரம்.. நீங்களும் பின்நேரம் வந்திடுங்கோ" என்று விடைபெற்றனர்.


வீடு வந்தவள் தான், தலை வலி என கூறிவிட்டு அறையிலேயே முடங்கி போனவளுக்கு ஆறுதலாக யாருடனாவது பேச வேண்டும் போலிருந்தது.
போனை எடுத்தவள், சைலுவிற்கு அழைத்தாள். ரிங் போனதே தவிர, அவள் எடுக்கவில்லை.


அப்போது தான் நினைவு வந்தவளாக, நான் தான் வேலை இல்லாம நிற்கிறன் எண்டா, அவளும் என்ன வெட்டியா' தன்னிடமே கேள்வி கேட்டுகொண்டவள்.


'அப்ப உண்மையாவே ரதனுக்கு கல்யாணமா? அப்ப உண்மையாவே என்னை வெறுத்துட்டானா?' தன்னை தானே கேட்டவள்.

'அவன் தான் தெளிவா சொன்னானே! முடிஞ்சு போன அத்தியாயத்த திரும்ப படிக்க மாட்டன் எண்டு, பிறகு ஏன் அவனையே நினைக்கிற?
பின்நேரம் உன்னையும் பொண்ணு பார்க்க வரினம்.. அதுவும் அப்பா ஆசைப்பட்ட மாப்பிள்ளை... இதுக்காக தானே அவனையும் விலத்தி வைச்ச..
எல்லாம் உன்ர ஆசைப்படி தான் நடக்குது.


ஆனாலும் ஒருநாள் இரவுக்குள்ள இவ்வளவு காரியங்கள் செய்ய முடியுமா என்ன?


வசந்தாம்மாக்கு முன்னமே என்னை தெரியும் எண்டா, எதுக்காக இவ்ளோ நாள் அமைதியா இருந்தா...? உண்மைய தாத்தாட்ட சொல்லி, தாத்தாட்ட என்னை சேர்த்திருக்கலாமே!
இப்ப ஏற்ற தாத்தா, அப்பவும் ஏற்றிருப்பார் தானே! .. உடனேயே அவர்ற மகன்ர கல்யாணமும் முடிஞ்சிருக்கு.


அப்பல்லாம் இருந்துட்டு, இப்ப ஏன் இவ்ளோ அவசரம்?
அப்ப மகனுக்கு வயசு போகேலயோ?
எதுவுமே விளங்குதில்ல... ரவி அண்ணாவும் ஏதோ மறைக்கிறார்....
பார்க்கலாம்.... என்னதான் நடக்குதென்டு' என நினைத்தவள் நெஞ்சை எதுவோ வந்து அடைப்பது போல் ஒரு உணர்வு தோன்ற, கட்டினிலே சுறுண்டு படுத்து விட்டாள்.


ஐந்து நிமிடம் கழிந்திருக்கும் கதவு தட்டுப்பட்டது.
மல்லியே தான்.
கட்டிலில் இருந்தவள் கையில் காப்பியை நீட்டியவள்,


"சரியா தலை வலிக்குதா? சுக்கு போட்டிருக்கிறன் குடி சரியாகிடும்"
எதுவும் பேச மனமில்லாமல் வாங்கி குடித்தவள்,

"அத்த உங்கட மடியில படுக்கவா?"

"என்னடா இது கேள்வி? வா படு!" என்று தன் அவள் படுப்பதற்கு வசதியாய் அமர்ந்து கொண்டார்.
அவள் நெற்றியை நீவியவரோ,


"துஷிகுட்டி! என்னடா பயமா இருக்கா? கல்யாணம் எண்டாலே பெண்களுக்கு வார பயம்தான், இதை கடந்து தான் ஆகோணும்"
அத்தையின் வருடலில் கண்மூடிக் கிடந்தவள்,

"பயமெல்லாம் இல்லையத்த... ஏன் இந்த அவசரம்? நேற்றுத்தானே எல்லார் அன்பும் கிடைச்சிது... அதுக்குள்ள என்னை துரத்தோணும் எண்டு பாக்கிறிங்களே!" என்றாள் கவலையாய்.


"நாங்கள் உன்னை துரத்துறமா?
சொல்ல போனா, உன்ர வீட்டில் தான் ஆறு மாதத்துக்கு முன்னாலே துரத்தி இருப்பினம்..
இப்ப என்ன பிரச்சனை? மாப்பிள்ளையிட்ட நேர சொல்லிடு! கல்யாணத்துக்கு பிறகு பாட்டி வீட்டில தான் இருப்பன், அவ ஊட்டி விடாம என்னால சாப்பிடவும் ஏலாது. தட்டி கொடுக்காம தூங்கவும் ஏலாதெண்டு" என்றார் அவள் மனநிலையினை மாற்றுவதற்கு சிரிக்காமல்.


அவரை செல்லமாக முறைத்தவளோ, ளஉங்களுக்கு விளையாட்டா இருக்கு... யாருக்குமே என்ர நிலமை விளங்கேல.." என்றாள் அழுபவளாட்டம்.

"அடி லூசு பொண்ணே. உன்ர நிலமையில இருந்து யோசிச்சதால தான் இந்த கல்யாணமே.

உனக்கு உன்ர அப்பா, அம்மா ஆசையை நிறைவேற்றோணும் எண்டுற ஆசையில்லையா?
படிப்பு தான் அவங்கட ஆசைபடி நடக்கேல. இதுவாவது நடந்தா, அந்த ஆத்மா சந்தோஷ படும்டா... எப்ப இங்க வரோணும் எண்டு ஆசைப்படுறீயோ, வந்து எத்தனை நாளுக்கும் இருந்திட்டு போ! யாரு கேட்கிறது? மனச போட்டு குழப்பிக்காத.... எல்லாம் உன்ர விருப்படீ நல்லா நடக்கும்.


இப்ப கொஞ்சம் தூங்கு. குழப்பம் எல்லாம் குறையும். மாப்பிள்ளை வீட்டுக்காரங்கள், வேரேக்க முகமா சிரிச்சா மாதிரி இருக்கோணும்." என்றவள் அவளை தூங்க வைத்து விட்டே வெளியேறினாள்.