திருவான்மியூர்
வெள்ளிக்கிழமை!
அன்றைக்கு வரதன் - பவானி விடுமுறை எடுத்திருந்தனர்! காலையில் கோவிலுக்கு சென்று வேண்டிவிட்டு வந்தனர்!
அந்த சமயத்தில் தான் ரகுவாசன் வீட்டிற்கு வந்திருந்தான்!
"ஹேய் கல்யாணப் பொண்ணு! ஏன் டல்லடிக்கிறே? பியூட்டி பார்லர் போகலையா? அழகா இல்லாதது எல்லாம் போய் அலங்காரம் பண்ணிட்டு வருதுங்க! நீ சும்மாவே பியூட்டி ! இன்னும் கொஞ்சம் டச்சப் பண்ணிட்டேனு வை, பையன் பார்த்ததும் அப்படியே ஃபிளாட்தான்!"
"டேய் ,கடுப்பை கிளப்பாதே சொல்லிட்டேன்! "
"வொய் வொய் திஸ் மச் ஆங்கிரி?" உனக்கு அந்த பையனைப் பிடிக்கலையா வித்யா?"
"நான் எங்கே பார்த்தேன்? எனக்கு கல்யாணம் இப்ப வேண்டாம்னு சொல்றேன் யாரும் கேட்கிறாப்ல இல்லை!"
"நீ ஒரு வேளை பையனை பார்த்தால் மயங்கிவிடுவேன்னு தானே பார்க்கலை வித்யா?" என்றான் கிண்டல் குரலில்!
"அதெல்லாம் இல்லை! கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்தால் பார்க்கிறதுல அர்த்தம் இருக்கும்! வரட்டும், பெண் பார்க்கத்தானே வர்றாங்க, எப்படியும் அப்பா சொல்ற கன்டிஷனுக்கு அவங்க ஒத்துக்க மாட்டாங்க! ஏன்னா அவங்க கிராமத்து மனுஷங்க!"அதனால, எப்படியும் இந்த கல்யாணம் நடக்காதுன்னு தோனுது! ஆனால் எனக்கு இந்த பொண்ணு பார்க்கிற சடங்கு தான் சுத்தமா பிடிக்கலைடா! ஏதாவது ஒரு கோவிலில், அல்லது மாலில் இந்த மாதிரி சடங்கை வைத்துக் கொண்டால் என்னவாம்? எப்பத்தான் இவங்க எல்லாம் மாறுவார்களோ?? "
"ஆமா, இப்படி செய்தால் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கலாம்!" என்றவன், " சரி, என்னதான் சும்மா பெண் பார்க்கத்தானே என்று நீ இப்படி எண்ணெய் வடிய வந்து நிற்காதே! யாருக்காகவும் இல்லை என்றாலும் நாம எப்பவும் நல்ல மாதிரியா உடைகளை உடுத்தி, நாமே நம்மை ரசிக்கிறாப்ல தோற்றத்தை வச்சுக்கணும்! அதனால நீ உன்னை சாதாரணமாக என்றாலும் திருத்தமாக காட்டணும் வித்யா" என்றான் ரகுவாசன்!
அது சரி என்று தோன்ற, மேற்கொண்டு விவாதம் செய்யாமல், மௌனமாகிவிட்டாள் வித்யா!
சற்று நேரத்தில் கோவிலுக்கு சென்றிருந்த பெரியவர்கள் திரும்பியதும்
," அட என்னப்பா ரகு , இந்தப் பக்கம் அதிசயமா வந்திருக்கிறே?"என்று வரவேற்றார் வரதன்!
"ரிஷி அண்ணா தான், நம்ம வித்யாவை பெண் பார்க்க வர்றாங்க, ஏதும் உதவி வேண்டும்னா செய்து கொடு என்று சொன்னான், அங்கிள்! அதான் வந்தேன்!"
"அதுக்கு அவசியமே இல்லை ரகு, வீட்டிற்கு வருவாங்க என்று நாங்க நினைச்சோம்! ஆனால், நாங்க கோவிலில் இருக்கும் போது, மாப்பிள்ளை வீட்டில், இருந்து போன் செய்து, ஏதாவது உங்களுக்கு தோதாக பொதுவான இடத்தில் இந்த நிகழ்ச்சியை வச்சுக்கலாம்னு சொன்னாங்க! அதனால காபி பலகாரம் செய்ற வேலைகூட இல்லை! ஒரு வேளை கல்யாணம் முடிவாகிட்டா, தாம்பூலம் மாத்திக்கிறதா இருந்தா, தேவைப்படும்னு பூ, பழம் தேங்காய், வெற்றிலை எல்லாம் வரும்போதே வாங்கிட்டு வந்துட்டோம்!" பவானியின் குரலில் வழக்கத்தை விட உற்சாகம் மிகுதியாக தென்பட்டது!
"அப்ப சரி, ஆன்ட்டி, நான் கிளம்பறேன்! அம்மா அப்பாவையும் உங்க வீட்டுக்கு போகச் சொன்னானாம் அண்ணன்!
அப்பாவைப் பத்தி தான் தெரியுமே, அவர் ஊரில் இல்லை! அம்மாவுக்கும் ஜுரம், வரலைன்னு தப்பாக நினைக்க வேண்டாம்னு சொல்ல சொன்னாங்க," என்றான் ரகு போனில் கவனமாக!
பவானியின் கண்கள் கடுப்போடு, கணவனிடம் சென்றது! அவருக்கும் முகம் மாறிவிட்டது!"நல்ல வேளை அவள் வரவில்லை!" என்று கணவனிடம் முணுமுணுத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார்!
ஓரே ஊரில் இருப்பவர்கள், மட்டுமின்றி, ரிஷி ஆரம்பக்கல்வி கற்ற தனியார் பள்ளியில் தான், ஆசிரியராக வரதன் வேலை செய்து கொண்டிருந்தார்! அதனால் அவருக்கு சாருவையும் ஆனந்தனையும், அதன் பிறகு, அனிதாவையும் நன்கு தெரியும்! ஊரறிந்த ரகசியம் அது! ரிஷியை தாயிடம் இருந்து பிரித்ததைத் தான் அவரால் ஜீரணிக்க முடியவில்லை! பவானிக்கும் விஷயம் தெரியும், பெற்ற தாய் எங்கோ இருக்க, வளர்ப்பு தாயை உயிராக நேசிக்கும் ரிஷியை பார்க்கும் போதெல்லாம் அனிதாவின் மீது கோபம் வரும்! உண்மையை சொல்லி விடலாமா என்று நாவு துடிக்கும்! அந்த பிள்ளை மனது உடைந்து போகுமே என்று தான் கட்டுப்படுத்திக் கொள்வார்! ரிஷியும் வசந்தனும் சிறு வயது முதலே மிகுந்த பாசமாக பழகிவிட்டவர்கள்!
அந்த நட்பை பிரிக்க அவருக்கு மனம் வரவில்லை! ரிஷிக்கு உண்மையான ஒரு நட்பு இருந்துவிட்டு போகட்டும் என்று எண்ணினார்!
"பவானி," ரகு கிளம்புறான் பார்!" என்ற குரலில் நிகழ்வுக்கு திரும்பியவர்!," இரு ரகு, எங்ககூட இருந்து ஒரு வாய் சாப்பிட்டுப் போ!" என்று அவனை அழைக்க,
"அப்பாட, ஒருவழியாக சாப்பிட அழைத்துவிட்டீர்கள் ஆன்ட்டி! ரொம்ப நன்றி, நான் வந்ததுல இருந்து வாசம் பிடிச்சுட்டே இருந்தேன்! வித்யா காபி என்று ஒரு கஷாயத்தை போட்டு கொடுத்தாள்! அவளுக்கு இன்னும் உங்க கைப்பக்குவம் வரவில்லை ஆன்ட்டி! நான் மூக்கை பிடிச்சுட்டு, குடிச்சேன் தெரியுமா? வேற வழியும் தெரியலை!"என்று முகத்தை சோகமாக வைத்தபடி சொல்ல,
"அடேய், நல்லா சப்புக் கொட்டி குடிச்சுட்டு, இப்ப இப்படி சொல்றதைப் பாருங்க," என்று அவனை அடிக்க பாய்ந்தாள் வித்யா !
பெரியவர்கள் முகங்களில் சிரிப்பு படர்ந்தது..
"ஏய்.. ஏய் வித்யா! அவனை முதலில் சாப்பிட விடு! " என்று மகளை இழுத்து நிறுத்தினார் பவானி!
பங்களாவில் தினமும் நாலு வித பலகாரங்கள் சுவைபட செய்வார்கள் என்று அவருக்கு தெரியும்! அப்படியும் ரகுவுக்கு பவானியின் கையால் செய்யும் பலகாரங்கள் என்றால் தனி விருப்பம்!
ரகுவாசன், சாப்பிட்டு முடித்ததும் கிளம்பிச் சென்றுவிட்டான்!
வித்யா எதிலும் பட்டுக் கொள்ளாமல் வளைய வந்தாள்! அவளுக்கு ஒரே ஆறுதலான விஷயம், ஷோகேஸ் பொம்மை போல நிற்க தேவை இல்லாது போனது மட்டும் தான்! ஆனால் திருமணத்திற்கு பிறகான வாழ்க்கையில் நிறைய பொறுப்புகளை ஏற்று செய்ய வேண்டியது இருக்கும்! அவளுக்கு இன்னமும் அந்த மாதியான மனநிலை வரவில்லை! படிப்பு தான் பிரதானமாக மனதில் இருந்தது! வருகிறவர்கள் ஒருவேளை படிக்க வைக்க ஒப்புக் கொண்டாலும்.. குடும்பம், பொறுப்பு எல்லாம் இருக்கும் தானே? இதற்கிடையில் எப்படி படிப்பது? அண்ணனிடமும் தன் நிலையை சொல்லியாயிற்று! நான் பார்த்துக் கொள்கிறேன் என்றவன், இப்போது எதற்காக இந்த ஏற்பாட்டிற்கு சம்மதம் சொன்னான்? ஒருபுறம் எரிச்சலாக வந்தது! இன்னொருபுறம் எங்கேயாவது ஓடிவிடலாம் போல தோன்றியது!
முகத்திலோ மொழியிலோ எதையும் காட்டி விடக்கூடாது என்று அன்னை சொன்னதை செய்து கொண்டிருந்தாள்!
பிற்பகலில்,
"வித்யா, பியூட்டி பார்லர் போய் வரலாமாடா?"என்றார் பவானி!
"அதெல்லாம் வேண்டாம் அம்மா! நீங்க தலைசீவி பிண்ணி விடுங்கள் போதும்!" என்றுவிட்டாள்!
அப்போதும் அவருக்கு திருப்தி வராமல், அவளது கைகளில் வீட்டுச் செடியில் பறித்த மருதாணியை வைத்துவிட்டார்!
எல்லா தாயையும்ப் போல, பவானிக்கும் இந்த வரன், தன் மகளுக்கு அமைந்துவிட வேண்டும் என்று மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது!
வரதனுக்கு இப்போதுதான் மகளை கைப்பிடித்து பள்ளிக்கு அழைத்துப் போனது போல இருக்கிறது அதற்குள் அவளுக்கு திருமணம் என்றால் அவருக்கு சற்று படபடப்பாக இருந்தது! அடுத்த வீட்டில் என் மகள் சமாளிப்பாளா? அந்த வீட்டு மனிதர்கள் அவளை அன்போடு நடத்துவார்களா? இப்படியான எண்ணங்களே மனதில் வியாபித்து இருந்தது! கூடவே எந்த தடங்கலும் நேர்ந்துவிடக் கூடாது என்றும் வேண்டிக் கொண்டார்!
🩷🩷
கொட்டிவாக்கம்
வெள்ளிக்கிழமை மாலை
வீடே விழாக்காலம் போல பரபரப்பாக இருந்தது! பெண் பார்த்து பிடித்துப் போனால், அப்படியே பூ வைத்து உறுதி செய்துவிடலாம் என்று கணவருடன் கலந்து பேசி, செண்பகம் அதற்கான ஏற்பாடுகளுடன் வந்திருந்தார்!
திலகத்திற்கும் அதே கருத்து தான்! பிரியனும், இன்பாவைப் போல அவருக்கு பேரன் தான்! பெரியவர்களிடம் மரியாதையும் அன்புமாக பழகுகிற பையன்! அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்று கடவுளிடம் அவர் வேண்டுதல் வைத்துக் கொண்டிருக்கிறார்!
சுந்தரேசன், சற்று முன்னதாக கல்லூரியில் இருந்து வந்து சேரவும், சற்று நேரத்தில் அனைவருமாக கிளம்பத் தயாரானார்கள்! திலகம் வீட்டில் இருப்பதாக தெரிவிக்க,"அம்மா, நீங்க தான் வீட்டுக்கு பெரியவங்க,நீங்க இல்லாமல் எப்படிமா? அதோடு இந்த இடம் நீங்க பார்த்து சொன்னது! அதனால நீங்க அவசியம் வரணும்மா" என்றார் செண்பகம்!
மற்றவர்களும் அதையே வலியுறுத்த, திலகம் கிளம்பினார் சென்றார்! பல ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் இந்த நல்ல விஷயம் நல்லபடியாக நடந்தேற வேண்டும் என்று அவர் மனது தவிப்புடன் வேண்டுதல் வைத்தபடி இருந்தது!
அன்று ஒரு நாள், திலகத்தை சந்தித்த, அதே கோவிலில் வைத்து சந்திப்பதாக இருவீட்டாரும் ஒரு மனதாக தேர்வு செய்திருந்தனர்!
இருவீட்டாரும் சொன்ன நேரத்திற்கு வந்து சேர்ந்து விட்டனர்!
ஆனால்.. வித்யாவின் கோரிக்கையை அவளது தயார் அனுமதிக்கவில்லை!