வீடே பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.
துஷாவை தயார் படுத்திக்கொண்டிருந்த மல்லிக்கு, வெளியே கேட்ட பேச்சொலியில்,
"மாப்பிள்ளை வீட்டு காறர் வந்துட்டினம் போல.. நல்ல வேளை அலங்காரம் முடிஞ்சிது" என அவள் முகத்தை இன்னுமொரு முறை ஆராய்ந்தவர்,
"இரு அத்தை வந்தவய வரவேற்றுட்டு வாறன்" என கதவை திறக்கவில்லை.. அவரை முட்டி மோதிக்கொண்டு, உள்ளே நுழைந்தது அந்த வானரபடை.
"இங்க உங்களுக்கு என்ன வேல.? வெளியால போகலாம்" என்றார் அவர்களை துரத்துவதாய்.
"பாட்டிதான் துஷாவோட போய் இருக்க சொல்லி அனுப்பினா" என்றாள் இலக்கியா.
"உங்களையுமா போக சொன்னா அத்த?" என்றாள் அங்கு நின்ற இளசுகளை நோக்கி.
மல்லியின் பேச்சை கண்டு கொள்ளாத ஜெகனோ,
ஏமாத்திட்டிங்களே...!" என்றான் சம்மந்தமில்லாது.
"எரும நான் என்ன கேக்கிறன்... நீ என்ன சொல்கிற?" என்று அவன் முன் வந்து நின்றவரை, மல்லியை ஓரம் கட்டியவன், துஷாவின் முன் வந்து நின்று,
"உண்மைய சொல்லுங்கோ சித்தி... நானும் துஷாவையும் பக்கத்தில பக்கத்தில நிக்ககேக்க உங்களுக்கு தெரிய வேண்டாமா? அவ அழகுக்க நான் தான் மாச் ஆவன் எண்டு.. என்னை விட்டுட்டு, யாரோ ஒருதனுக்கு கட்டி வைக்கிறீங்களே!
துஷி! நீ இப்பவே மாமாக்கு ஓகே சொல்லு! வந்தவய துண்டக்காணோம் துணியகாணோம் எண்டு ஓட வைக்கிறன்" என்றான்.
அவன் பேச்சில் சிரித்த மல்லி.
"டேய்! அவள்ல கண்ணு வைக்காம, வெளிய போ.. உன்ர மூஞ்சிக்கு அவ கேக்குதா?" என்று தன்கூடவே அவனையும் இழுத்துக்கொண்டு சென்றாள்.
சில நிமிடங்களில் துஷாவை அழைத்து செல்ல வந்த மல்லியை துரத்தியவர்கள், தாங்களே அழைத்து வருவதாக அனுப்பி வைத்தனர்.
ஏனோ இவற்றை காணும் போது துஷவுக்கு காேபம் தான் வந்தது.
யாரையுமே நிமிர்ந்து பார்க்கவில்லை அவள். புணிதா தான்,
"பெரியவ கால்ல விழுந்து ஆசி வாங்கும்மா" என்றார்.
அவர்களை நிமிர்ந்து பார்த்தவளுக்கு, வசந்தாவை தவிர புதிதாக யாரும் வந்ததாக தெரியவில்லை.
அவரோடு ரவியும், அவன் தாத்தா பாட்டி மாத்திரமே அமர்ந்திருந்தனர்.
ஏதோ சஞ்சலம் விலகியவளாய், வசந்தாவின் கால்களில் விழுந்தவளுக்கு, ஆசி வழங்கியவர், அவளை அருகில் அமரச்சொல்லி,
"பையனுக்கு சின்ன வேலை! அதால வர முடியேல... நாள் நல்லதா இருந்ததால, எதுக்கு நல்ல விஷயத்தை தள்ளி போடுவான் எண்டு நாங்கள் வந்துட்டம்...
மாப்பிள்ளையை போட்டே இருக்கு. எல்லாரும் பாருங்கோ...
ரவி அவன் போட்டோவை காட்டு"
'எதுக்கு...? அவனே இவளுக்கு தான் தான் மாப்பிள்ளைனு இப்போதைக்கு தெரியக்கூடாது எண்டு, வராமல் எங்கள அனுப்பி வைச்சிருக்கான். எதுக்கு என்னை மாட்டி விடுறீங்கள்' என்பதாக வசந்தாவை பரிதாபமாக பார்த்தான்.
"பாவம்டா....! முகத்தை பார! கல்யாண பெண் மாதிரியா இருக்கா. ? அவனை சமாளிக்கலாம் காட்டு" என்றார் ஜாடையால்.
'உங்களுக்கென்ன? நான் தானே வாங்கி கட்டோணும். இடையில மாட்டி, நான் படுற பாடு!' என்று நினைத்தவன்,
"போட்டோ கொண்டு வரேலயே" என்றான் தப்பிப்பதாய்.
"எந்த காலத்தில இருக்கிற? போன்ல இருக்கும் காட்டு!"
"இவங்கள் விட்டாலும் இவா விடமாட்டா... கூட்டிக்கொண்டு வந்து, மகன்ர கையால போட்டு தள்ளோணும்' மனதிலே புலம்பியவன்.
போனை பெரியவர்களிடம் நீட்டினான். மாமன் மார்களின் பார்வையோ மாப்பிள்ளையை மெச்சுவாதாக இருந்தது.
போனானது ராசா கையிற்கு மாறவே,
"இந்த தம்பி... பேத்திக்கு அடிபட்டப்ப வந்த......" என்று ஏதோ சொல்ல வருவதை புரிந்து கொண்ட ரவியோ,
"அவனே தான் தாத்தா" என்றான் முந்திக்கொண்டு.
"போட்டோவில விட, நேரில் தம்பி வடிவு" என்றவர் கையில் இருந்து பிடிங்கிய இளையவர்கள், போட்டோவை பார்த்து விட்டு,
"துஷாவிற்கு நல்ல பொருத்தமா இருப்பார்" என்றனர். ஒரு படி மேலே சென்ற பப்லு, எவரும் அறியாது தன் இலக்கத்திற்கு போட்டோவை அனுப்பி விட்டு துஷாவிடம் நீட்டினாள்.
அளுக்கு தான் அதில் நாட்டமே இல்லையே! அவள் கெட்ட நேரமோ, ரவியின் நல்ல நேரமோ தெரியவில்லை. அவன் போனில் சார்ச் இல்லாது ஆஃப் ஆகியது. அவள் பார்க்கும் போது திரை கறுப்பாக தெரிய, அது தான் நல்லதென்று போனை ரவியிடம் நீட்டினாள்.
அப்பாட என்றிருந்தது ரவிக்கு. எங்கு அம்மாவிடம் சொன்னால் தன் போனில் இருக்கும் படத்தை காட்டி விடுவார்களோ என்று அமைதியானான்.
படத்த பார்த்தும் அமைதியாக இருப்பவளை பார்த்த வசந்தா,
"என்னம்மா மாப்பிள்ளைய பிடிஞ்சிருக்கா?"
பார்த்தால் தானே சொல்லமுடியும். தன்னை ஆவலாக பார்ப்பவர்களை நினைத்து, ம்ம் என தலையசைத்தாள்.
அவளை பார்த்திருந்தவனுக்கோ அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை.
தங்கை ஆயிற்றே... பாவம் நடுவில் மாட்டிக்கொண்டான்.
பெண் பார்க்கும் படலம் முடிந்து, அடுத்த முகூர்த்தத்திலே கல்யாணம் என்று முடிவு செய்து, விடைபெற்றனர்.
"அடுத்த வாரமே கல்யாணமா? வேலை நிறைய இருக்குமே" காந்தி அங்கலாய,
"இன்னும் உன்ர காலத்திலேயே இரு.. இப்ப எல்லாம் மண்டபத்தில தானே செய்யினம். பத்திரிகை கூட முக்கியமானவங்களுக்கு நேரில வைச்சிட்டு, மற்றவைக்கு போனில சொல்லிடலாம்."
"அது சரி! இப்ப எல்லாம் கல்யாணம் எண்டுறதே, முதல் நாள் தானே அக்கம் பக்கத்துக்கு தெரிய வருது." கேலியாக சொன்னாலும் கனத்த மனதுடனே கூறினார்.
பெரியவர்கள் பேச்சில் கலந்து கொள்ள மனம்வராது அறக்கு சென்றவளை வரவேற்றது அவளது செல்போன்.
"இன்னொரு புது நம்பரா?" நினைத்தவாறு காதில் பொருத்தினாள்.
எதிரே கேட்ட குரலுக்கு சொந்தக்காரன் யாரென்பதை அறிந்து கொண்டவள் முகமோ, இவ்வளவு நேரம் இல்லாத பொலிவினை பிரசவிக்க,
"சொல்லுங்க சார்! என்றாள்.
"
பரவாயில்லயே! குரல வைச்சு, கண்டு பிடிக்கும் அளவுக்கு நினைவிருக்கு போல..
வாழ்த்துக்கள் துஷாந்தினி! ரவி எல்லாம் சொன்னான். அதான் வாழ்த்த கூப்டன்" என்றவனது பேச்சில் பற்றிக்கொண்டு வந்தது அவளுக்கு.
இவ்வளவு நேரமும் இஷ்டமே இல்லாது மூன்றாவது நபர்போல் நிகழ்வுகளில் கலந்து கொண்டவள், அவனது நக்கல் பேச்சில், இல்லாத சந்தோஷத்தை குரலில் கொண்டு வந்து,
"நன்றி சார்" என்றாள் தன் கெத்தை விட்டுக்கொடாது.
"
மாப்பிள்ளை ஓகேவா துஷாந்தினி? அவனும் என்ர நண்பன் தான்" என்றதும் தான்
அன்று ரவி சாென்னது நினைவில் வந்தது.
அவள்
எங்கு மாப்பாள்ளையை பார்த்தாள்.?
"
கொஞ்சம் குட்டை தான்.. ஆனா நல்லா இருக்கிறார்" என்றாள் ரவி சொன்ன பொய்யை உம்மையென நம்பி.
அவனுக்கோ
சிரிப்பை அடக்க முடியவில்லை.
"உயரமெல்லாம் பாத்தியே!
சண் கிளாஸ் போட்டு ஏன் கண்ண மறைச்சிருக்கின் தெரியுமா? அவனுக்கு கண் கொஞ்சம் தெரியாது.. அதோட ஒன்டரை கண்" என்றான்.
"
என்னது..? கண்ணாடி போட்டிருக்கானா?" வாய்விட்டே கேட்டாள்.
"
அப்ப நீ போட்டோ பாக்கேலயோ"
இல்லை என்று சொன்னால், தன் நினைவில் மாப்பிள்ளையை பார்க்கவில்லை என்று நினைப்பான் என நினைத்தவள்,
"பார்த்தனே! ஆனா நான் பாத்த போட்டோல கண்ணாடி போடேல" என்றாள்.
"
அப்ப ஒன்டரை கண் தெரிந்திருக்குமே!"
"அது....
அதுவும் ஒரு வடிவு தான்" சமாளித்தவளுக்கு ஒரு தடவை முகத்தை பார்த்திருக்கலாமோ என்றிருந்தது.
"என்ன செய்ய...
கல்லானாலும் கணவனா வரப்போறவனாச்சே" பெரிதாக நகைத்து வீட்டே போனை வைத்தான்.
அவனது நக்கல் நகைப்பில் ஆத்திரம் உண்டானது.
"
வாழ்த்து சொல்லேல எண்டு யார் அழுதீச்சினம்.... கொஞ்சம் கூட வருத்தமில்ல.. இவனுக்கு பொண்ணு பாக்கினம் எண்டதும் நான் எப்பிடி ஆனேன்.. இவன் குரல்ல எவ்வளவு சந்தோஷம்!
இல்லாம இருக்கும்....?
ஐயாவுக்கும் கல்யாணம் தானே! அந்த நினைப்பில இருக்கிறாரு." மனதிலே அர்சித்தவள், இனி எதுவும் தன் கையில் இல்லை என்பது
புரிய, அமைதியாகினாள்.
திருமணத்திற்கு இரண்டே நாட்கள் என்ற நிலையில் தோழிகள் இருவரும், துஷாவிற்கு துணையாக காலையிலே தான் வந்தார்கள்.
வந்ததில் இருந்து இருவரும் மாப்பிள்ளையை கேட்டு அவளை நச்சரித்துக் கொண்டிருக்க, அவன் எப்படி இருப்பான் என்று அவள் தான் எப்படி கூறுவாள்.
மூவரின் பேச்சையும் கேட்டுக்கொண்டிருந்த பப்லுவோ, ஓடிச்சென்று தன் போனை எடுத்து வந்தவள், அதை அவர்கள் முன் நீட்டினாள்.
திடீரென அவர்கள் மூன் அவள் நீட்டிய பொருளுக்கு அத்தம் தேடி, அவர்கள் அவள் முகத்தை காண,
"போனுக்க என்னண்டு
பாருங்கோ" என்றாள் அழுத்தமாக.
அதை பார்த்த அவர்களும், சாதாரணமாகவே,
"இவனை எதுக்கு இப்ப காட்டுகிற?" என்றனர் இருவரும் ஒரு சேர.
"இவர் தான் துஷாக்கு பாத்த மாப்பிள்ள" தோழிகள் இருவரின் நச்சரிப்பு தாங்காமல் தள்ளி அமர்ந்திருந்தவள், மாப்பிள்ளையின் போட்டோ என்றது, ரதனது மாப்பிள்ளை பற்றிய வர்ணணையும் நினைவில் வந்தது.
ஒரு முறை பார்த்து விடுவோம் என எண்ணியிருந்த அதே வேளை.
"ஓ....
மேடம் இதுக்கு தான் மாப்பிள்ள யாரெண்டு சொல்ல வெக்கப்பட்டாங்களோ!
எ
மனுக்கே பாசக்கறிறு கொடுத்தவள்டி நீ....
அண்டைக்கு டயரிக்கை ஒழிச்சு வைச்சிருந்த போட்டோக்கு காரணமும் இது தானா?
எதுவும் எங்களுக்குள்ள இல்ல எண்டு சொல்லிச் சொல்லியே! வளைச்சு போட்டுட்ட...
நெட்டாங்கு எண்டு கூப்பிட்ட வாயால, இனிமேல் அத்தான், மாமாண்டு கூப்பிட போற.." கேலியில் இறங்கினார்கள் இருவரும்.
இவர்கள் பேச்சு சுத்தமாக அவளுக்கு புரியவில்லை.
"
என்ன உலறுறீங்கள்..? இங்க நெட்டாங்கு எங்க வந்தான்" என்றாள் எரிச்சலாக.
"ஆதாரத்த கையில இருக்கும்மா.. எங்களையே ஏமாத்த பாக்கிறியா?"
"
எங்க அதை காட்டு" என போனை கேட்டு கையினை நீட்டினாள்.
"
ஏன்? நேரில பாக்குறது காணாதோ? எப்பவும் பாக்கிற மூஞ்சி தானே?"
துஷாவால் நம்ப முடியவில்லை.. என்றாலும் உறுதி செய்ய வேண்டும் என்று தோன்ற, சைலுவிடம் இருந்து போனை புடுங்கினாள்.
அதற்கு அவள் இடம் கொட வேண்டுமே! அவளும் போக்கு காட்டி வீட்டை சுற்ற, அவளை துரத்துவதே தோழி வேலையானது.
திருமணம் என்று சொன்ன நாளில் இருந்து, இல்லாத சலசலப்பு, புதிதாக வந்த தோழிகளினால் உருவானது.
சிறியவர்களின் விளையாட்டை கண்டும் காணாதவர்களாய் பெரியவர்கள் ஒதுங்கி கொள்ள,
பப்லு தான் சைலுவை மடக்கி பிடித்து, துஷவிற்கு உதவி செய்தாள்.
போன் கையில் வந்ததும், படத்தை பார்த்தவளால் உண்மையில் நம்பமுடியவில்லை.
ஒரு புறம் அதிர்ச்சி, ஒருபுறம வெட்க்கம், ஒரு புறம் அழுகை. நண்பர்கள் இருவரும் சேர்ந்து தன்னை ஏமாத்தி விட்டார்கள் என்ற கோபம். ரதனிடத்திலும், ரவியிடத்திலும் உண்டானது.
"
முகம் ஏன் இப்பிடி போகுது" என்றனர் தோழிகள் அவள் மாறுதலை கண்டு.
அத்தனை பேர் மத்தியில் சொல்ல விரும்பாதவளாய்,
"உள்ள வா சொல்லுறன்" அழைத்து சென்றவள், அனைத்தையும் கூறினாள்.
"
அடி பாவி......! அவனை இவ்ளோ விரும்பிறியா? இதை நேர சொல்லி இருந்திருக்கலாமே!
இதுல இவ மாப்பிள்ளை பாேட்டோவையே பாக்கேலயாம்... செம்ம போ!
நீ மட்டும் சொல்லியிருந்த, இந்த கல்யாணம் செம்ம ரொமன்ஸ்சா நடந்திருக்கும்.
ஹீம்... உனக்கு அந்த பலன் இல்லை போல....
ஆனா
உன்னை ஏமாத்தின ரெண்டு பேரையும் ஏதாவது செய்யோணும்.." என்றாள் சைலு.
"
எனக்கும் அப்படி தான் தோன்டுது... பேசாம உண்மை தெரியாதது போல நடிக்கலாமா மச்சி!"
"அது ஒரு பக்கம் இருக்கட்டும்
... ஆனாலும் பெருசா ஏதாவது செய்யோணும்"
"இப்ப ரவியண்ணா வருவார்டி.. அப்ப வச்சுப்பமா......?" என்றாள் ஆர்வமாக.
தங்களுக்குள் பேசி ஒரு முடிவுக்கு வந்தவர்கள், நேராக தாத்தாவிடம் சென்று,
"
எனக்கு ஒரு ஆசை தாத்தா! நிறைவேற்றுவீங்களா?" என்றாள்.
"என்ர பேத்திக்கு எதுவுமே நான் செய்யேல.. முதல் முதலா தாத்தாட்ட ஆசையா கேட்குற செய்யாம விட்டுடுவேனா?
உத்தரவு போடும்மா உடனம் செய்கிறன்" என்றார் அவரும்.
"சின்ன வயசில இருந்து எனக்கொரு அண்ணன் இருந்தா நல்லா இருக்கும் எண்டு நிறைய தரம் ஏங்கிருக்கிறன் தாத்தா.. அப்பிடி ஒருத்தர் இருந்த, என்ர கல்யாணத்துக்க எல்லா வேலையையும், அவரே இழுத்து போட்டு செய்திருப்பார். ஆனா எனக்கு தான் யாருமே இல்லையே!" என்றாள் கவலையாய்.
அதுக்கென்னம்மா? அண்ணா இல்லாட்டிக்கு என்ன? நிறைய மச்சினன்கள் இருக்காங்களே! அவங்கள் பாப்பாங்கள்." என்றார் அவளை தேற்றுவதாய்.
"எப்பிடி தாத்தா மச்சான்கள் அண்ணா ஆகேலும்...?
எனக்கு அந்த கொடுப்பின இல்ல" என்றாள் மீண்டும் முகம் சுருக்கி.
இது தான் உன்ர பிரச்சனை எண்டா, கவலைய விடும்மா...
இ்ன்னும் கொஞ்ச நேரம் பொறு!
இப்ப வருவான் உன்ர அண்ணன்...
அவனை கொண்டு உன்ர ஆசைய நிறைவேற்றிடுவம்...
இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணத்த வைச்சு கொண்டு, இதுக்கெல்லாம் கவலை படலாமா?
எதை பற்றியும் யோசிக்காம போய் இரு! தாத்தா உன்ர ஆசையை நிறைவேற்றுறன்." என்று முடிக்கவில்லை, வந்து நின்றான் ரவி.
"
வாப்பா! உன்னை தான் எதிர் பாத்தன். மாப்பிள்ளை வீட்டில கல்யாண வேலை எல்லாம் எப்பிடி போகுது?"
"
அவயலுக்கு என்ன தாத்தா! ஆள் வைச்சு செய்வினம்.... மாப்பிள்ளை இருக்கிற நிலமைய பாத்தி, இப்ப விட்டாலும் தாலி கட்டிடுவான் போல." என்று தாத்தாவிடம் பேசிக்கொண்டிருந்தவன் எதேற்சியாக திரும்பும் போது தான் துஷாவை கண்டான்.
ரதன் பேச்சை எடுத்ததும், அவளையே அறியாது சிவந்து போன கன்னங்களை மறைப்பதற்காக, தலை கவிழ்ந்தவள் கால் விரல்களோ சீமென்ட் தரையிலும் குழி பறிக்க தொடங்கியது.
இதை அவன் எதிர் பார்க்கவில்லை.
'நேற்றுவரை யாருக்காே என்று இருந்தவள் முகத்தினில், இன்று வெட்கத்தின் சாயலா?
ஒருவேளை மாப்பிள்ளை யாரெண்டு தெரிந்திருக்குமோ!
அதெப்பிடி. தெரியும்? நான் தான் போட்டோவ கூட குடுக்கேலயே!
பிறகு எப்பிடி இந்த சந்தோஷம்? இப்பிடி இருக்குமோ! மாப்பிள்ளை யாரா இருந்தி என்னண்டு, குடும்பத்துக்காக ஏற்க ரெடியாகிட்டாளோ? எதுவாக இருந்தா என்ன?
எனக்கு தந்த வேலைய சிறப்பா முடிச்சிட்டன், இனி அவன் பட்ட பாடு!"
என நினைத்தவன்,
அவள் அருகில் நின்றிருந்த தோழியரை அப்போது தான் கண்டான்.
"அட
நம்ம கறிக்கடை ஆயாவும் குள்ளச்சியும் இங்க தான் நிக்கினமா? ரவி... இண்டைக்கு நல்ல முழுவியளம் போலடா! குள்ளச்சிய சீண்டி பாக்கலாம் தான்.. ஆனா கறிக்கடை ஆயா வம்புக்கு வருவாளே!
வரட்டும் அப்ப பாப்பம்....' இருவரையும் மாறிமாறி பார்த்து சிந்தித்திக்கொண்டிருந்தவன் சிந்தையை கலைத்தார் தாத்தா..
"
என்ன ரவி யோசனை?"
"அது... தாத்தா.... எதுவும் இல்லை..... எதுவுமே இல்லையே!" தடுமாறினான்.
"
அதுக்கு ஏன் இவ்வளவு பதறுற...
உன்னட்ட சில விஷயம் பேசோணும்.
துஷாவுக்கு சின்ன கவலையாம்.."
"
யாருக்கு தாத்தா...? இவளுக்கா? நேற்று இருந்திது... இண்டைக்கு இல்லையே!' நினைத்தவன்.
"என்ன கவலையாம்...?
மாப்பிள்ளை பிடிக்கலையாமா?" என்றான்.
"டேய் என்னடா கதைக்கிற? சுந்தரம் சொல்லுறது சரிதான்... காமடி எண்டு, காண்டாக்குற" என்றார் கோபமாய்.
அதில் பெண்கள் மூவரும் சிரித்தனர்.
'இவளுங்க வேற.... முன்னுக்கு நிண்டு பல்ல காட்டிட்டு.... சுத்தி வளைக்காம, நேர விஷயத்துக்கு வாறது தானே! பொம்பள பிள்ளங்க முன்னுக்கு அசிங்க படுத்துறது.'
"என்னடா வந்ததில இருந்து நீ சரியில்லையே! என்னத்தை வாய்க்குள்ள போட்டு முழுங்கிக்கொண்டிருக்கிற... கழுத்து வரைக்கும் வாறத கக்கு." என்றார் மீண்டும் சினந்தவராய்.
"தாத்தா......" என்றான் இம்முறை பொங்கி.
"நானும் பாத்துக்வகாண்டிருக்கிறன்.. பொம்பிள புள்ளைகள் முன்னால, அசிங்க படுத்துறீங்கள்.... நீங்கள் தானே ஏதோ சொல்ல வந்தனீங்கத்..
பிறகு சாெல்லாம என்னையே ஏன் திட்டுறீங்கள்."
"
பரவாயில்ல... உனக்கும் கோபம் வருகிறது" என்று அவன் தோள்களை தட்டியவர், நேராக விஷயத்திற்கு வந்தார்.
"
துஷாவிற்கு தன்ர அண்ணன் தான் தன்ர கல்யாண வேலை எல்லாம் செய்யோணுமாம்.
உன்ர தங்கச்சிக்காக நீ செய்வாய் தானே!" என்றார்.
"க
ரும்பு தின்ன கூலியா" என்றான் மைனாவிடம் விழிகளை வீசியவாறு.
அவன் பேச்சும் பார்வையும் ஒரு மாதிரியாக இருக்கவே,
"ஓ.... இப்படி போகுதா கதை?" என்று நினைத்தவளோ,
"பலியாடு தானவே தலையை கொண்டு வருது... என்ன வெட்டுவமா?" என்றாள் தன் தோழிகளிடம் துஷா.
"
பாவம்டி! சின்னதா ஏதாவது செய்யலாமா?" என்ற மைனாவிடம்,
"
ஹேய் ...... இங்க பாரேன்.... ஆடு நனையிது சரி! இந்த ஓனாய் எதுக்குடி ஊலையிடுது? "
"
அதுவா துஷா.... அது பெரிய கதைடி!" என்றாள் சலித்தவாறு சைலு.
"
என்ன கதைடி எனக்கு தெரியாம?"
"
என்ர பிறந்தநாள் அப்ப.... ரவியை தேடி கடைக்கு போனோமா... அப்ப ரவி எண்ட பெயர்ல குழப்பமாச்சா?
ரவி எண்டு இந்த குண்டன் தான் முதல்ல வந்தான்.... வந்தவன் குட்டைச்சி எண்டு இவளை சைட் அடிக்க தொடங்கிட்டான்...
அது தான் அய்யாவுக்கு அம்மணி மேல ஒரு கண்ணு... இவங்களும் குண்டன் பேச்சில கவுந்துட்டாங்க போல." என்றாள் நக்கலாய்.
"
ஏய்! அவர் என்ர அண்ணன் நினைவிருக்கட்டு்ம்... அவன் குண்டுதான் ஆனா அழகான குண்டன். உனக்கு அவன் நல்ல குணம் தெரியாது." என்று தமையனுக்காக பரிந்து பேசினாள் துஷா.
"
உன்ர அண்ணனனோட நற் சான்றிதழை நீயே வச்சிரு... இப்ப நடக்கிறதை கவனி"
ஹீம்ம் என்று அவர்கள் பேச்சை கவனிக்க தொடங்கினார்கள்.
"
அதுக்கென்ன தாத்தா செய்திட்ட போச்சு.." என்றவன், அதோடு நில்லாது.
"அலங்கார வேலை எல்லாம் அப்படியே இருக்கு போல" என்றான்.
உடனே அங்கு
ஓடி வந்தவளோ.
"அலங்காரம் பண்ண வந்தவ, இப்பிடித்தான் இடைக்கிடை விட்டுட்டு சொல்லாம போயிடுறாங்கண்ணா.... இதுக்குதான் அப்பவே தாத்தாட்ட சொன்னன்.
எங்க
வேலையை தாங்கள் தான் பாக்கோணும் எண்டு... காசுக்கு செய்யிற, கடைசி நேரத்தில, அவசரமா வடிவில்லாம செய்துடுவினம்.. கல்யாணத்துக்கு வாறவயல், யாரை குற்றம் சொல்லுவினம்...
நீங்க வந்து இதை பாருங்கோண்ணா...." என்றவள், தாத்தாவை பார்த்து கண்ணடித்தாள். அவரும் சிரித்து விட்டு சென்றுவிட்டார்.
ரவிக்குத்தான் தெரியாமல் வாயை கொடுத்து விட்டோமோ என்றிருந்தது. பின்னே அதன் உயரத்தை பார்த்து மிரண்டே போனான்.
"என்னண்ணா யோசிக்கிறீங்கள்? நாங்க ஸ்டூல பிடிக்குறம்... நீங்க ஏறுங்கோ" என்றவள் சைலுவை ஒரு மாதிரி பார்த்து வைத்தாள்.
அவன் வெகுளித்த தனத்தை பார்த்த மைனாவிற்கு தான் பாவமாகி போனது.
இவர்கள் பிடிப்பதை நம்பி, நீளமான பிளாஸ்டிக் மாலையை எடுத்து ஆணியில் மாட்டிக்கொண்டு வந்தவன்,
மூன்றாவது மாலையை மாட்டுவதற்காக, பெருவிரலை ஊன்றி, நுணிக்காலில் நின்று ஆணியை எட்டி பிடிக்கும் சமயம் சைலுக்கு கண்காட்டியவளோ,
"
ஏய்.... ஏய்.... ஒழுங்கா புடிடி..." என பெரிதாக கத்தியாவாறு இருவரும் ஒரு சேர கையிைை எடுத்தனர். இவர்களின் சத்தத்திலே பதறாமல் இருந்தவனும், பதறியடிக்க, அங்கிருந்தே கீழே விழுந்தான்.
"
ஐயோ அண்ணா... அடி பெரிசா பட்டுட்டுதா? ரொம்ப வலிக்குதாண்ணா." என்றாள் எதுவும் தெரியாதவளைபபோல் அப்பாவியாய்.
"
பாவிகளே! உங்கள நம்பித்தானேடி ஏறினன். இப்பிடி செய்திட்டிங்களே!" என்றான் வலி பொறுக்காது.
"வேணுமெண்டாண்ணா தள்ளி விட்டம்..? ஏதோ தெரியாம நடந்திட்டுது.... ஏய் எங்கள பாக்காமா.. போய் சுடுதண்ணி எடுத்துட்டு வா சைலு! நான் துணியோட மூவ் எடுத்துட்டு வாறேன். ஒத்தடம் குடுப்பம்" என்று உள்ளே ஓடினாள்.
சிறு நிமிடம் தான், மீண்டும் ஆயராகினர் இருவரும்,
"எங்கண்ணா அடி... முதுகில எண்டா சட்டைய கழட்டுங்கோ" என்று, சட்டையை கழட்ட வைத்தவள்,
குப்புற படுக்க வைத்து,
"கொஞ்சம் சூடாகத்தான் இருக்கும்... பொறுக்கோணும்.. அப்ப தான் வலி போகும்" என்றவள்,
துணியை நீரில் போட்டு, கைாமல் எடுத்து ரவி முதுகில் வைத்தது தான் தாமதம்,
"ஐயோ! அம்மா......, உன்ர பிள்ளையை கொல்லுறாளுங்கம்மா" அவசரமாக எழுந்தவன் துள்ளிக்குதித்தான்.
"ஏன்ணா...?
என்னாச்சு..?"
"
அடி பாவி! சுடு தண்ணிய ஊத்தி கொல்ல பாக்கிறியேடி! பச்ச மண்ண போய், இந்த கொடுமை படுத்துறீங்களேடி ரெண்டு பேரும்."
"என்னண்ணா சொல்லுறீங்கள்? தண்ணி அவ்ளோவா சூடில்லையே! ஏய் நீ சூடாவா கொண்டு வந்த? இல்லையே! சூடெண்டா கை சுட்டிருக்குமோ!" ன்றவள்.
"
நீங்கள் சொன்னது போல, பச்ச மண் தான்ணா நீங்கள்..... அதான் இந்த சூட்டைக்கூட உங்களால தாங்கேலம இருக்கு...
சரி.. அந்த கதிரையில இருங்கோ, குடிக்க ஏதாவது கொண்டு வாரேன்" என்றவள் உள்ளே சென்று,
"
செல்ல அண்ணாவுக்கு ஸ்பெஷலா செய்யோணும்." என்று யோசித்தவள்,
சுற்றி ஒரு தடவை பார்த்து விட்டு,
"
தேவையாண பொருட்கள்... பால் ஒரு கிளாஸ். தேவையாண அளவு உப்பு, ஒரு கரண்டி மிளகாய் பொடி, வேண்டாம் இது கலர் தெரிஞ்சிடும்.. இதுக்கு பதிலா என்ன போடலாம்..... ஓகே ஒரு கரண்டி பெப்பர். பின் சிறிதளவு எழும்பிச்சம் சாறு.! சிறிதளவு தேயிலை இதெல்லாம் கலரை குறைச்சிடுமோ?
ஓகே அந்த குறை எதற்கு டூத்பேஸ்டா இருக்கே கலருக்கு..
செய்யும் முறை.
முதலில் பாலை நன்கு காச்சவேண்டும். காச்சியதும் தேவையாண அளவு தேயிலையை போட்டு, வடிகட்டி, உப்பு, பெப்பர், எழும்பிச்சம்சாறு, டூத்பேஸ்ட் போட்டு, சந்தேகம் வராதவாறு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
அதை பரிமாறும் பாத்திரத்தில் ஊற்றினால் துஷா ஸ்பெஷல் தயார்... என்று மீதமிருந்ததை சிங்கில் ஊற்றி, பாத்திரங்களை யார் கண்ணிலும் அகப்படாமல் கழுவினாள்.
அதை ரவியிடம் கொண்டுவந்து நீட்ட,
"
சுடுதண்ணீர் ஊத்திட்டு, சமாளிக்க இதை குடுக்கிறியா... போனா போகுது மன்னிக்கிறன்." என்று அதை வாங்கியவன்,
ஒரு மிடரை விழுங்கியதும் தான். அதன் சுவையையே உணர்ந்தான்.