6.நவிலனின் கோதையானாள்
எதுக்கு என்னைய இப்படி துரத்தி வந்தீங்க ? அவன் சட்டை கசங்கும் அளவிற்கு போட்டு உலுக்கி கொண்டு இருந்தாள் பூம்பனி..
ரிலாக்ஸ் என்னாச்சு டா ஏன் இவ்வளவு எமோஷ்னல்..
பனி, “உங்களுக்கு புரியுதா இல்லையா நான் யார் கண்ணுக்கும் தாழ்ந்தவளா இருக்க விரும்பல இப்ப என்னோட நிலைமை அப்படித்தான் இருக்கு..
அம்மு…
ப்ளீஸ் நவி வேண்டாம் ன்னு தான் சொன்னேனே எங்க உங்க அப்பா..
அம்மு…
பதில் சொல்லுங்க…
அவரு இல்ல..
அப்படி என்ன பிசினஸ் தான் முக்கியம் ன்னு ஓடிட்டு இருக்காங்க…
அவரே இல்ல பனி புரியுதா…
என்ன சொல்லுறீங்க..
அப்ப நீ இதுவரை எதையுமே கவனிக்கலையா மா? பனி நான் உன் முன்னாடி நிற்குறேன் என் குடும்பம் இருக்கு எதுவுமே உன் கவனத்தில் பதியலையா என்று சற்றே கலக்கத்துடன் கேட்க..
அவனை நிமிர்ந்து பார்த்தவள் நவி என்று அவன் அருகில் வர ஒரு அடி பின் நகர்ந்தவன் சொல்லு பனி நான் உன்னையே பரிதாபத்துல கல்யாணம் பண்ணிக்குற மாதிரி தான் இதுவரை நினைச்சிட்டு இருக்கியா?
……
பனி என்று அவன் மீண்டும் அழைக்க..
ப்ளீஸ் இந்த கேள்வியை என்று அவள் முடிக்கும் முன்பே அறைக்குள் நுழைந்த மங்கை என்னாச்சு நவி பூவுக்கு ஒன்னு இல்லையே என்று படபடப்பாய் கேட்க..
அவளுக்கு ஒன்னு இல்லம்மா என்று நவி சொல்ல..
பூவு என்று மங்கை அழைத்து கொண்டு அருகில் வரவர கண்கலங்கி அத்தை என்று அவரை கட்டிக்கொண்டு அழுதாள் பூம்பனி…அவள் அழுது அந்த மங்கலான பார்வையில் உணர்ந்து கொண்டாள் நவிலனின் தந்தை இவ்வுலகிலேயே இல்லை என்று ..
என்னாச்சு பூவு அத்தை கிட்ட சொல்லு டா ஏன் அழுதுட்டு இருக்க?
அம்மா அவ இதுவரை நம்மளை எந்த விதத்திலும் கவனிக்கல இப்ப தான் உங்களை சரியா பார்க்கிறா போல..
அதுக்கு எதுக்கு டா அழுதுட்டு இருக்கா? கவனிக்கலன்னா என்ன இனி தான் நாம் ஒன்னா தானே ஒரே வீட்டில் இருக்க போறோம் அப்புறம் என்ன இது ஒரு விஷயமா அவளை எதுவும் பேசுறியா நீ என்று நவிலனை சத்தம் போட
அது சரி அது ஒன்னு தான் நான் செய்யனும் போங்க..
மன்னிச்சுடுங்க அத்த..
என்ன பூவு..
அது வந்து நீங்க என்று தடுமாற..
நவிலன், “அப்பா இறந்தது அவளுக்கு தெரியாது இல்லம்மா அதான் இப்படி வாட்டர் டேங்க் ஐ திறந்து விட்டு இருக்கா..
ஓஓஓ.. பரவாயில்ல பூவு உனக்கு தெரிஞ்சு இருக்கனும் ன்னு இல்லையே எதுக்கு இவ்வளவு வருத்தம் நாங்க யாருக்கும் சொல்லவே இல்ல அவரோட இறப்பு நிறைய மாற்றங்களை தந்துட்டு நீ அதை நினைச்சு கவலைப்படாத என்று மங்கை சமாதானம் சொன்னாலும் அவள் அழுகை மட்டும் நின்றபாடில்லை…
ம்மா இவளை பார்த்துக்கோங்க நான் வந்தவர்களை சாப்பிட சொல்லி அனுப்பிட்டு வரேன் இப்படியே இவளை ஸ்டேஜ் ல நிற்க வைக்க முடியாது என்று வெளியேற..
சிறிது நேரத்தில் குடும்பத்தினர் அனைவரும் உள்ளே வந்து நின்று இருந்தனர்..
அம்சா, “ பூவு…
அம்மா என்று அவள் அழ..
என்னாச்சு எதுக்கு அழுதுட்டு இருக்க..
அது ஒன்னு இல்ல அம்சா என் வீட்டுக்காரர் இறந்தது அவளுக்கு தெரியாது அதை நினைச்சு அழுதுட்டு இருக்கா…
என்ன சொல்லுறீங்க, பூவு உனக்கு அவங்களை தெரியுமா?
அட நீங்க வேற இரண்டு வருஷம் அவர் கூட தானே இவ வேலை பார்த்தா பூம்பனி இப்படி, பூம்பனி அப்படின்னு ஓயாம பேசுவாரு அவருக்கு பனி ன்னா அவ்வளவு இஷ்டம் அப்பாக்கும் பையனுக்கும் நம்ம பூவை வச்சு எப்ப பாரு உரிமை போராட்டம் தான்
அம்சா அமைதியாகி கேட்டு கொண்டவர் அப்ப ஏற்கனவே பனியை பத்தி தெரிஞ்சு தான் பொண்ணு கேட்டு வந்தீங்களா?
ஆமா அம்சா அவருக்கு பனியை என் மகனுக்கு கட்டனும் ன்னு ஆசை அதை நிறைவேத்தனும் ன்னு எனக்கு ஆசை இருக்காதா?
ரொம்ப சந்தோஷம் என் பொண்ணு நல்லா இருப்பா ன்னு ஏற்கனவே நம்பிக்கை இருந்தது இப்ப மனசுக்கு நிம்மதியா இருக்கு…
அப்ப எல்லாரும் ஏற்கனவே பேசி தான் இந்த கல்யாணம் நடந்து இருக்கு ஒரு வார்த்தை என்கிட்டே சொல்லல இல்லம்மா என்று கவிதா வர..
அட இவ வேற என்று சலித்து கொண்டவர்..
இங்க பாரு கவி முடிவாகாத ஒரு விஷயத்தை என்னைக்கும் பேசிட்டு இருக்க மாட்டாங்க உன் அப்பாவும் தம்பியும் அப்படித்தான் பனி விஷயம் பனி ஒத்துக்காம இதை யார்க் கிட்டேயும் சொல்ல வேண்டாம் ன்னு அப்பா முடிவு பண்ணாங்க
அப்ப உனக்கு மட்டும் சொல்லி இருக்காங்க என்று கவிதா கேட்க..
என் புருஷன் எந்த விஷயத்தையும் என்கிட்டே மறைக்க மாட்டார்..
அப்ப நான் யாரு மா இந்த வீட்டில்..
நீ இந்த வீட்டு பொண்ணு தான் அன்பையும் பாசத்தையும் எவ்வளவு வேணுமோ எடுத்துட்டு போ உனக்கு முடிவு எடுக்கிற உரிமை கொண்டாடுறதுக்குன்னு ஒரு குடும்பத்தை உருவாக்கி தந்துட்டோம் அங்க எல்லாமே நீ தான்
அப்ப இனி இந்த வீட்டில் நான் முடிவு எடுக்க கூடாதா?
ஆமா..
அம்மா..
இங்க பாரு கவி ஒரு நிதர்சனத்தை புரிஞ்சுக்க உன்னையே மாதிரியே இங்க ஒரு பொண்ணு வாழ வரப்போறா அவளுக்கு இது தான் அவளோட உரிமை பட்ட வீடு அப்ப அவளோட முடிவு தானே முதல்ல..
அதெப்படி மா நான் இந்த வீட்டு பொண்ணு..
ஆமா நீ இந்த வீட்டு பொண்ணு தான் இல்லன்னு சொல்லலையே ஆனா அவனோட வாழ்க்கையை நீ முடிவு பண்ண கூடாது கவி அவனோட விருப்பு வெறுப்பில் உள்ள நிறை குறைகளை எடுத்து சொல்லலாமே தவிர முடிவு எடுக்க கூடாது என்றார் மங்கை..
கவிதா, “இப்ப வந்த மருமகளுக்காக என்னைய அசிங்கப்படுத்துறியா அம்மா..
புரியாம பேசாத கவி நீ தான் ஒவ்வொரு முறையும் தேவையில்லாம பேசி பிரச்சனைன்னு சொல்லிட்டு இருக்க
அப்ப நான் தான் பிரச்சினை பண்ணுறேனா அம்மா என்று கவிதா கேட்க…
நீ பிரச்சினை பண்ணுறேன்னு சொல்லல எல்லாத்தையும் பிரச்சினையா பார்க்கிறன்னு தான் சொல்லுறேன் உனக்கு புரியுதா இல்லையா அவ உன் தம்பி பொண்டாட்டி உன் தம்பியோட சரிபாதி அப்ப நீ தம்பியை எப்படி பார்க்கிறியோ அப்படித்தானே பார்க்கனும் ஆனா நீ ஏன் அவளை யாரோ எவரோன்னு பார்க்கிற என்று மங்கை பேச பேச அம்சா தான் சந்தோஷத்தில் அழுது இருந்தார்..தன் மகள் வாழ்வு செழித்து விடும் ஊர் வாய் இனி என்ன சொல்லும் என்று எண்ணம் தேவையில்லாதது என்று நினைத்தவர்..
அம்மு உன் வீட்டுக்காரர் அக்கா உனக்கும் அக்கா தான். நீங்க இனி உங்க நல்லது கெட்டது எல்லாத்துலையும் சேர்ந்தே இருக்கனும் விட்டு கொடுத்து போகனும் எங்கேயும் அவங்களை விட்டுட கூடாது என்று சொல்ல..
பனி எதற்கு பதில் தருவது என்று புரியாமல் முழிக்க என்ன பூவு இப்படி பார்த்துட்டு இருக்க நீ போய் பேசு என்றார் அம்சா
பூம்பனி, “என்ன அம்மா பேசுறது என்று திணற..
என்ன பூவு இனி அவங்க எல்லாரும் தான் உனக்கு …
அம்மா…
பூவு வா என்று கவிதா பக்கத்தில் நிறுத்த..
பனி நிமிர்ந்து பார்த்தவள் அக்கா என்று தட்டுத்தடுமாறி அழைக்க..
நான் உனக்கு அக்கா இல்ல அண்ணி…
ம்ம் என்று மண்டையை ஆட்டினாள் பனி..
சரி சரி என் தம்பிக்கு பிடிச்சு இருக்கு அவ்வளவு தான் இனி பேசி என்ன பண்ண போறேன் எங்க வீட்டில் எது எப்படின்னு பார்த்து நடந்துக்க யாருக்கு என்ன பிடிக்கும் எப்படி இருக்கனும் ன்னு என்று ஆரம்பிக்க
அதெல்லாம் என் தங்கச்சி சரியா செய்வா கவி உன்ன மாதிரி என்று வசந்த் வர..
என்னங்க..
ஆமா கவி நீ எப்படி நம்ம வீட்டில் பொறுப்போ அதேமாதிரி இது என் தங்கச்சி வீடு அப்ப அவ பொறுப்போடு அன்போட இருப்பா என்று அழுத்தி சொல்ல..
ம்ம்ம என்று முனங்கினாள் கவிதா..
சரி சரி மசமசன்னு நிக்காம உன் தம்பியையும் தம்பி பொண்டாட்டியையும் அழைச்சிட்டு சாப்பிட போ என்று மங்கை கவிதாவை அனுப்பி வைக்க..
வா என்று அவளை இழுத்து கொண்டு சென்றாள் கவிதா…
கவிதா சென்றதும் மங்கை பெருமூச்சுடன் அமர்ந்து விட..
அத்தை எதுக்கு கவலை நாங்க எல்லாம் இருக்கோம் இல்ல..
இல்ல மாப்ள என்ற மங்கை அம்சாவை பார்த்து விட்டு மன்னிச்சிடு அம்சா அவ கொஞ்சம் இல்ல நிறையவே சுயநலம் தான் நானும் என்ன என்னமோ பண்ணி பார்த்துட்டேன் மாத்த தான் முடியல சின்னதுல செல்லம் குடுத்து தப்பு பண்ணிட்டோம்..
அம்சா,“இருக்கட்டும் பொறுப்பு வந்துடும் நீங்க கவலைபடாதீங்க, எனக்கு எந்த வருத்தமும் இல்லை நீங்க எல்லாம் இருக்கும் போது, அப்புறம் என்ன வாங்க நாம போய் அடுத்த வேலையை பார்க்கலாம் என்று சொன்னதும்..
சந்தோஷம் அம்சா நீ எப்படி எடுத்துப்பியோன்னு என்று மங்கை தயங்க
அம்சா, “ இதுக்கு எதுக்கு தயக்கம் நாமளும் இதெல்லாம் கடந்து தானே வந்து இருக்கோம் அவங்களும் கடந்து வந்துடுவாங்க நீங்க வாங்க மங்கை என்று இருவரும் பேசிக்கொண்டே சென்றுவிட
சாம்பசிவம் கார்த்திகேயன் வசந்த் மூவரும் ஒன்று போல் அப்பாடி எப்படியோ வீட்டு பொம்பளைங்குள்ள பிரச்சினை வராம இருக்கும் நாம் நிம்மதியா இருக்கலாம் என்று சிரித்தனர்.
இதையெல்லாம் பார்த்து கொண்டு இருந்த ராணி தான் இருந்துடுவாங்களா பிரிச்சனை இல்லாம பார்க்கிறேன் எப்படின்னு என்று நினைத்து கொண்டு வெளியேற..
சாம்பசிவம், “மச்சான் உங்க அக்காவை கொஞ்சநாள் தள்ளியே வைக்கனும்..
கார்த்திகேயன், “மாமா”
ஆமா மாமா தான் நான் சொன்னது செய்யலன்னா அவ எதாவது பண்ணிடுவா
அதெல்லாம் இல்ல மாமா அவளுக்கு எல்லா இடத்திலும் முக்கியத்துவம் தரனும் அதுவும் தனக்கு மட்டுமே தரனும் ன்னு…
அது தானே எல்லா வீட்டிலும் பிரச்சினை என்றான் வசந்த்..
அதை மாத்த முடியாது அவங்களே மாத்திக்கிட்டா தான் உண்டு சரி வாங்க போகலாம் என்று சாம்பசிவம் அனைவரையும் அழைத்து கொண்டு விருந்திற்கு செல்ல அங்கே சாப்பாட்டு மேசையில் வீட்டு பெண்களோ அவர்கள் வேலையை காட்ட ஆரம்பித்து இருந்தனர்…
தொடரும்