7.இரவின் நிழலே உனக்குள் கரைஞ்சேனே
ரிஷி பாலா, “ப்ளீஸ் சார் நீங்களே இதை ஹான்டில் பண்ணிடுங்க என்று டிஜிபி யிடம் பேசிக்கொண்டு இருக்க…
மேம் சாரி இது மேல இருந்து வந்து இருக்க ஆர்டர் உங்க தலைமையில் தான் இதை வெளியே கொண்டு வந்ததா இருக்கனும் ன்னு சொல்லி இருக்காங்க .
இல்ல சார் இது சரி வராது நீங்க தான் இந்த டிபார்ட்மெண்ட் ஹெட் அப்படி இருக்கும் போது…
இது நிறைய லிங்க் வரும் போல நீங்க தான் இதுல இருக்கனும் ன்னு நிமா மேம் சொல்லுறாங்க என்றதும் பல்லை கடித்தாள். மேம் பிரஸ் எல்லாம் வரச் சொல்லி இருக்காங்க எப்படியும் ஒரு அரைமணி நேரம் ஆகும் நீங்க அதுக்குள்ள தயார் ஆகுவீங்களாம் . அந்த ஆளை இந்த இடத்தில் தான் வச்சு இருக்கு..
வாட் இங்கையா? அப்ப லாக் ஆப் ல இல்லையா என்று ரிஷி அதிர்ந்து கேட்க…
இல்ல மேம் அவனை அங்க வைக்க வேணாம் ன்னு சொன்னதும் நிமா மேம் தான்.
என்ன தான் உங்க மினிஸ்டர் நினைக்கிறா என்று ரிஷி பேசிவிட…
ரிஷியின் வார்த்தையை கவனித்தவர்., என்ன பண்ணுறது மேம் அவங்க பதவிக்கு மதிப்பு ஆனா சின்ன பொண்ணை எல்லாம் கொண்டு வந்து வச்சுட்டு நம்ம கழுத்தை அறுக்குறாங்க..
சார் என்று ரிஷி அதட்ட
சாரி மேம் .. உண்மையை தான் சொல்லுறேன் எந்த இடத்திலும் மரியாதை தரதே இல்ல மேம், ஒரு வயசுக்கு, என்னோட எக்ஸ்பீரியன்ஸ் க்கு எதுக்குமே இல்ல என்று சொன்னதும் ..
போதும் சார் நீங்க உங்க வேலையை பாருங்க நான் ரெடி ஆகிட்டு வரேன் என்று அந்த ஆபிஸ் கடைசியில் இருக்கும் அறைக்கு சென்றவள் தன்னை நிதானமாக்கி கொண்டவள் போனை எடுத்து மகளுக்கு அழைக்க..
சொல்லுங்க அம்மா..
என்னத்த வாகி பண்ணி வச்சு இருக்க?
எல்லாம் சரியா தான் பண்ணிட்டு இருக்கேன் நிதானமாகிட்டீங்களா…?
ப்ச் விளையாடாத வாகி இப்ப நான் பிரஸ் மீட் பண்ணி என்ன பண்ண…
நீங்க போங்க அங்க பார்க்க வேண்டியவங்களை பார்த்ததும் உங்களுக்கே பேச்சு வரும் என்று நிமாவாகினி சொல்ல..
புரியல வாகி…
அம்மா உனக்கான காலம் உன்னையே தேடி வந்து இருக்கு இதுக்கு மேல எதுக்கு ஓடி ஒளிஞ்சு இருக்கனும்? நீ பிரஸ் மீட் பண்ணு, வெளியே போனாலே உனக்கே என்னென்ன பேசனும் ன்னு தெரியும் பாய் மா என்ஜாய் யுவர் டே என்றவள் போனை அணைத்து விட…
அந்த விடியற்காலை நேரத்தில் தயாராகி வெளியே வந்த ரிஷி பாலா அகப்பட்டு இருப்பவனை பார்த்து ஒரு நொடி அதிர்ந்து அவன் அருகில் வந்து நிற்க…வேறு புறம் பார்த்து நின்றவனோ தன் முன்னே நிற்பது யார் என்று திரும்ப…
என்ன நாராயணன் காலம் உங்களை நோக்கி வருது போல என்று ரிஷி பாலா கேட்க…
சின்னம்மா என்று நாராயணன் தடுமாறியது மட்டுமல்லாமல் ரிஷி தானா என்று கண்ணை கசக்கி கொண்டு பார்க்க…
நானே தான் என்ன சந்தேகம் நாராயணன்? எப்படி இவ இங்க அதுவும் முழுசான்னு பார்க்குறீங்களா?
இ..ல்ல இ….ல்ல என்றவர் மனதிற்கு எல்லாம் முடிஞ்சது இனி என்ன இருக்கிறது என்று அமைதியாகி விட…
ரிஷி, “சர்மா டிஜிபி எங்க”?
பிரஸ் மீட்க்கு அரேஞ்ச் பண்ணிட்டு இருக்காங்க மேம்.. என்னோட ரூம் ல என்றவள் ஒரு கீயை எடுத்து கொடுத்து அங்க PB ன்னு ஒரு ஃபைல் இருக்கும் அதை எடுத்துட்டு வாங்க என்று தர..,சர்மா அந்த கீயை அதிர்வாக பார்க்க…
என்னாச்சு சர்மா?
இல்ல மேம் இந்த கீயை நீங்க இந்த இருபது வருஷத்தில் யார்க்கிட்டேயும் குடுத்தது இல்ல அதான்..
ரிஷி, “ அதுக்கான நேரம் வந்துட்டு இனி அதை ஒளிச்சு வச்சு பாதுகாத்து என்ன பண்ண போறேன் எடுத்துட்டு வாங்க என்றவள் நாராயணனை பார்க்க..
சின்னம்மா ….
நான் உங்க சின்னம்மா இல்ல நாராயணன் அந்த உறவு முடிஞ்சு கிட்டதட்ட இருபது வருஷம் ஆகிடுச்சு…
சின்னம்மா என்றவனை ஒரு கசந்த முறுவலுடன் கடந்தவர்…,இத்தனை வருஷமும் எப்படி நாராயணன் கொஞ்சம் கூட மாறாம இப்படியே இருக்கீங்க?
இது ஒருவழி பாதைன்னு நான் உங்களுக்கு சொல்லனுமா சின்னம்மா இதோ இங்க வந்து நிற்கிறேன்னா அதுக்கு ஒரே ஒரு காரணம் என் குடும்பம் அவங்க நல்லா இருக்கனும் இல்ல? அப்ப நான் சிலதை பண்ண வேண்டியதா இருக்கு..அப்ப கூட நீங்க பண்ணது தப்புன்னு நீங்க நினைக்கல தானே நாராயணன் என்றாள் ரிஷி..
நினைச்சா எதாவது மாறிடுமா சின்னம்மா..
நல்ல பதில் என்றவள் மொத்தமா முடிச்சிடலாம் நாராயணன் என்றவள் வெளியே வர பத்திரிக்கைக்காரர்கள் மைக்குடன் பரபரப்பாக இருந்தனர். விடிந்தும் விடியாததுமாய் இருந்த அந்த காலைப் பொழுது பலரின் வாழ்வை மாற்றப்போகிறது என்று யாருமே நினைத்து இருக்க மாட்டார்கள் .இதோ அந்த நிமிடம் இந்த நொடி ரிஷி பாலா அந்த இடத்தில் நிற்க..
வரிசை கட்டி நின்ற கேள்விகளுக்கு பதிலாக நின்றாள் ரிஷி பாலாம்பிகை…
ஹலோ எவரி ஒன். வெரி குடிமார்னிக் . இன்னைக்கான காலை பல விஷயங்களை வெளி கொண்டு வந்து இருந்தாலும், நடந்து முடிந்த பல செயல்கள் மறக்க முடியாத,மன்னிக்க முடியாத குற்றங்கள். ரொம்ப நாளா தேடிட்டு இருந்த கடத்தல்களுக்கு இன்னைக்கு ஒரு முடிவுன்னு சொல்ல முடியாது ஆனா இது மிகப் பெரிய திறவுகோல் தான் அதை மறுக்க முடியாது இனியும் இந்த மாதிரி பெண் பிள்ளைகளை போதைக்கு அடிமையாக்கி அவர்களை விலை பொருட்களாக மாற்றுவதை கண்டிப்பா தவிர்க்க இந்த நாராயணன் போன்றவர்களை கைது செய்து இருப்பது ரொம்ப முக்கியமான தகவல் இன்னைக்கு உங்களுக்கு ஹெட்லைன்ஸ் இது தான் என்று நாராயணனை முன்னே நிறுத்த.
இந்த கேஸ் விது ரிஷி சார்க்கு தானே குடுத்து இருந்தாங்க என்று ஒரு குரல் வர..
சாரி என்ன சொல்ல வரீங்க ன்னு…
மேம் இந்த கேஸ் தமிழ்நாட்டில் தானே ஃபைல் ஆகி இருக்கு தனி டீம் வச்சாங்களே? இவரை பிடிச்சுட்டீங்க இதுவரை கடத்தின பொண்ணுங்க விவரம் அவங்க எல்லாம் இருக்காங்களா இல்லையா என்று அடுத்த அடுத்த கேள்விகள் வர…
கொஞ்சம் பொறுங்க உங்க எல்லா கேள்விகளுக்கும் ஆரம்ப புள்ளி எங்கன்னு இந்த ஃபைல் ல இருக்கு இதோட ஒரு காஃபி என் பிஏ உங்களுக்கு தருவார் அதை வச்சு அடுத்த அடுத்த வேலைகளை நம்ம டிஜிபி ஆக்சன் எடுப்பாங்க என்று தந்தவள் நாராயணனை பார்த்து விட்டு நகர டிஜிபி தனக்கு தெரிந்த விஷயங்களை எல்லாம் சொல்லி அனுப்பி விட்டு வர வேகமாக உள்ளே நுழைந்து இருந்தான் விது.
ம்மா என்று கத்தியவனை பார்த்து …வா விது என்று சோர்வாக அமர்ந்தவளை பார்த்து என்னாச்சு மம்மி ஏன் இப்படி இருக்க… உன் அப்பா என்னைய தேடி வருவார் டா…
வாருவாரா வந்துட்டு இருக்கார் மம்மி ஏர்போர்ட்ல இருக்கார் ஆனா வந்து சேர்ந்துடுவாரான்னு தெரியல..
என்னடா சொல்லுற விது?
ஆமா இங்க வர விடுவாங்களா வந்துட்டா அடுத்த அடுத்த பிரச்சனையை எப்படி சமாளிக்க என்று விது கேட்க…
என்னடா சொல்லுற?
அதை விடும்மா இப்ப எதுக்கு இந்த நாராயணனை இவ உங்க கன்ட்ரோல் ல வெளியே கொண்டு வர நினைக்கிறா…?
நீ இதை அவகிட்ட தான் கேட்கனும் என்னென்ன பண்ண நினைக்கிறான் ன்னு அவளுக்கு தான் தெரியும் விது…
இப்ப எனக்கு பிரஷர் அதிகமாகிட்டு நான் நைட் கிளம்புறேன் வாகி எப்ப வருவா?
தெரியல விது…
மம்மி எதுக்கு இப்ப இவ்வளவு சோகம்?
ஏன் கேட்கமாட்ட…
நிம்மதியா இருந்தோம் இப்ப மறுபடி எல்லாத்தையும் வெளியே எடுக்கனும் ன்னு உன் அக்கா நினைக்குறா போல..
அவ என்ன பண்ணிட்டா ன்னு நீங்க இவ்வளவு டென்ஷன் அம்மா?
உங்க இரண்டு பேருக்கும் ஒன்னு புரிய மாட்டேங்குது அவங்க ஒன்னு வேணாம் ன்னு முடிவு பண்ணிட்டா அதை எப்படி எல்லாம் வெளியேற்றனும் ன்னு தான் ஆரம்பத்தில் இருந்து வேலை பார்ப்பாங்க அதை நான் என் அனுபவத்தில் சொல்லுறேன் ஆனா நீங்க தான் அதை புரிஞ்சுக்க மாட்டேன்னு நிக்குறீங்க
அம்மா அக்கா சாதாரண ஆள் இல்ல அவ மினிஸ்டர் மா..
அட போட… இன்னேரம் நான் யார் ?என்ன? எனக்கு எத்தனை பிள்ளைகள் அவங்க என்ன பண்ணுறாங்க ன்னு வரை தேடி எடுத்து இருப்பாங்க விது
எடுத்துட்டு போகட்டும் மம்மி..
அய்யோ அவ அப்படியே அவங்க அப்பா டா அதோட உன்னோட சின்ன வயசு போட்டோ டீடெயில்ஸ் எடுத்துட்டா மொத்தமா முடிக்க தான் ஆள் தயார் பண்ணுவாங்க ஏன் தான் இருக்கிற பிரிச்சனையில் இதை வேற எடுத்தான்னு புரியல என்று தலையில் கைவைத்து அமர்ந்து விட,விதுக்கு அழைத்தாள் வாகி…
சொல்லு வாகி என்று தாயை பார்த்து கொண்டே கேட்க..
டேய் மம்மியை அழைச்சிட்டு வீட்டுக்கு வா என்று அழைப்பை முடித்து விட..
ம்மா வா வீட்டுக்கு போகலாம் வாகி வரச் சொல்லுறா என்றதும் அடுத்து என்ன வச்சு இருக்காளோ என்று நினைத்து கொண்டு வெளியே வர ,ஆதியின் கார்ட்ஸ் நின்று இருந்தார்கள். ம்மா இதுல போகலாம் வண்டி அண்ணா அனுப்பினாங்க என்று நின்று இருந்தவர்கள் சொல்ல கிளம்பிவிட்டனர் ரிஷியும்,விதுவும்.
எல்லா பிரச்சனைகளையும் ஒதுக்கி விட்டு கிளம்பி வந்தவரை ஏர்போர்ட்டில் லாக் செய்ய, வர்மன் வந்துவிட்டான் மாமனை பார்க்க..
மாமா…
ப்ச் நீயும் எதுவும் தடுக்காத வர்மா…
தடுக்க வரல அங்க போனாலும் எல்லாம் வேஸ்ட் தான்..
என்ன பேசுற வர்மா…
உண்மையை தான் சொல்லுறேன் மாமா நீ போனதும் உன்னையே வரவேற்பாங்களா…?
என்ன என்று அதிர்ந்து பார்க்க…
வர்மா, “ மாமா சொல்லுவதை கேளு நீ அங்க போனா இன்னும் பிரச்சினை தான். கொஞ்சம் பொறு இந்த நாராயணன் பிரச்சினையை முடிச்சிட்டு…போதும் நிறுத்து வர்மா இப்ப பிரச்சனை நாராயணன் இல்ல, அதோட நாராயணன் விஷயத்தில் ஐ விட்னஸே உங்க அத்தை தான் என்று பகலவன் போட்டு உடைக்க..
என்ன என்று இப்போது அதிர்ந்து நின்றது வர்மன் தான்..
தொடரும்