• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

7.நவிலனின் கோதையானாள்

Lakshmi kandhan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2025
154
106
43
Salem

7.நவிலனின் கோதையானாள்​




இங்க பாருங்க அவனுக்கு பிடிப்பதை தெரிஞ்சுக்க வேண்டாமா

என்னம்மா தெரிஞ்சுக்கனும் அவளுக்கு இதெல்லாம் அலர்ஜி சொல்லமாட்டியா அம்சா உன் பொண்ணுக்கு இதெல்லாம் ஆகாதுன்னு என்று ராணி எகிற..

அம்சா, “அண்ணி இருங்க எதுக்கு இவ்வளவு டென்ஷன் அவங்க இலையில வச்சுட்டாங்க அதை எடுக்க சொல்லவி முடியும் அவ அதையெல்லாம் ஒதுக்கிட்டு சாப்பிட வேண்டியது தான்

கவிதா, “அதெப்படி ஒதுக்க சொல்லுவீங்க என் தம்பிக்கு இதெல்லாம் ரொம்ப இஷ்டம் என்று ஆரம்பிக்க..

அங்கே வந்த ஆண்களோ கை கட்டி நவிலனை தான் பார்த்து இருந்தனர்..

நவிலனோ இதற்கு எப்படி டா தீர்வு கொண்டு வரமுடியும் என்பது போல் பார்த்து இருக்க பனியுமே இன்னைக்கு இவரு செத்தாரு டயலாக்கா பேசுற இப்ப பேசுடி என்பது போல் அவனை பார்க்க..

உண்மைகள் முக்கியமில்லை ஒரு நல்ல நம்பிக்கை காப்பற்ற படுவது தான் முக்கியம்- ஜெயகாந்தன்


அந்த வரிகள் நினைவு வரவும், இல்ல நான் சாப்பிடுறேன் சில சமயங்கள் தான் ஒத்துக்காம போகும் என்ன ஒத்துக்கலன்னு வாமிட் பண்ண போறேன் அவ்வளவு தானே அத்தை நீங்க சொன்னது உண்மை தான் எனக்கு இந்த பால் பொருட்கள் ஒத்துக்காது தான் ஆனா எப்பவுமே இல்ல தானே நீங்க கூட இப்படியே இருந்துடாத பூவு கொஞ்சம் கொஞ்சமா சேர்த்துக்க நாளைக்கு அது உனக்கு உதவும் ன்னு சொல்லுவீங்க இல்ல என்றவள் நீங்களே எனக்கு எடுத்து குடுங்க அத்த நான் கொஞ்சமா சாப்பிடுவேன் என்று பூம்பனி ராணியிடம் சொல்ல..

நவிலன், “அம்மு என்று யாருக்கும் தெரியாமல் கையை அழுத்தி பிடிக்க..

பனியோ புன்னகை மாறாமல் கவிதா அண்ணி உங்களுக்கு எந்த சங்கடமும் இல்லன்னா இந்த மத்த ஸ்வீட் எல்லாம் அவருக்கே வச்சிடவா

சரி சரி என்று கவிதா முகத்தை சுழிக்க..

ராணி ஆவென பார்த்து இருந்தார் எதையும் எதிர்கொள்ளும் பனியா இது விட்டு கொடுத்து போவாள் நியாயமான காரணத்திற்கு ஆனால் தன்னால் முடியாத விஷயத்தை முடியாது என்று சொல்லி பழகியவள் எப்படி என்று பார்க்க..


நவிலன், “அக்கா என்ன நீ இது சும்மா சம்பிரதாயம் ன்னு தான் வச்சு இருக்கு நமக்கு எது விருப்பமோ அதை சாப்பிட வேண்டியது தான் ஒத்துக்காம போய் அப்புறம் அதுக்கு டிரீட்மெண்ட் ன்னு எதுக்கு அக்கா ரிஸ்க் பேரர் என்று அழைக்கவும் அவர் அங்கே வர… இந்த ஸ்வீட் ஒன்றே ஒன்றை தவிர மீதி எல்லாத்தையும் எடுத்துடுங்க அப்புறம் ஒரு பவுள் ல கொஞ்சம் வெஜிடபிள் ரைஸ் வச்சு அதோட அந்த ப்ரை எடுத்துட்டு வாங்க என்று தனக்கும் பனிக்கும் பிடித்த உணவை சொல்ல அவர்களும் அப்படியே எடுத்து வைக்க நவிலன் பனிக்கு ஊட்டி விட பனியும் எந்த எதிர்ப்போ சங்கடமோ இல்லாமல் நவிலனுக்கு ஊட்டி விட இனிதே முடிந்தது அந்த சம்பிரதாயம் ஆனால் கவிதா அவள் முகத்திலேயே பிடித்தமின்மையை காட்ட

பனி , “இந்த ஸ்வீட் எனக்கு கொஞ்சம் என்று நவிலனை கேட்க..

அம்மு..


ப்ளீஸ் என்றாள் பனி..

நவிலன் ஒரு நிமிட யோசனைக்கு பிறகு அவளுக்கு ஊட்டி விட அந்த வாடை பிரட்டி கொண்ட வருவது போல் இருந்தாலும் சட்டென வாங்கி கொண்டு அதனுடன் சற்று சாதத்தையும் சேர்த்தே எடுத்து கொண்டாள் பனி..


எல்லா சம்பிரதாயமும் முடிந்து இரவு பூம்பனியை நவிலன் வீட்டிற்கே அனுப்பி வைத்தனர் அம்சா கார்த்திகேயன் தம்பதியினர்…இதுவரை அழுதது எல்லாம் போதும் என்பது போல் புன்னகையுடனே அம்சா அனுப்பி வைத்து இருந்தாள்..


கவிதா, “சரி மா நான் அப்படியே கிளம்புறேன்..

மங்கை, “எங்கடி கிளம்புற?

வேற எங்க என் வீட்டுக்கு தான்..

வீட்டுக்கு வர மருமகளுக்கு யார் ஆரத்தி எடுப்பா

இதென்ன முறையா நடந்த கல்யாணமா என்று வார்த்தையை விட..

மங்கை, “ கவி…

ப்ச் நான் கிளம்புறேன் என்றவள் அடுத்த நொடி போய் இருந்தாள்..

கவி நில்லு என்று பின்னே ஓடி இருந்தார் மங்கை..கவி நில்லு என்று சொல்லிட்டு இருக்கேன்.

என்னம்மா என்றாள் கவிதா கார் கதவை திறந்து வைத்து கொண்டு..

ஏன் இப்படி நடந்துக்கிற..

வேறெப்படி நடந்துக்கனும்

கவி…

போதும் மா எல்லார் முன்னாடியும் நீ அடிப்ப அப்படியே எனக்கு சொற்பொழிவும் தருவ நான் தியாகியா மாறனுமா என் தம்பிக்காக அமைதியா வந்துட்டேன் அவளுக்கு எல்லாம் என்னால் முறை செய்ய முடியாது அப்படி முறை செய்யுற அளவுக்கு அவ தகுதியானவ கிடையாது இதுக்கு மேல என் கிட்டே எதையும் எதிர்பார்க்காத என்றவள் சென்று விட..


மங்கை, “ச்சே இவ செய்யுறது க்கு செய்யாமலே இருக்கலாம்”

ஏய் சவிதா..

மம்மி ..

நீ பசங்களை அழைச்சிட்டு வீட்டுக்கு முன்னாடி போ நான் இவங்களை அழைச்சிட்டு வரேன் அங்க மணி இருப்பா அவகிட்ட நான் சொன்னேன் ஆரத்தி ரெடி பண்ணி எடுத்துட்டு வாசல்ல இரு வந்துடுறேன் என்றவர் பிள்ளைகளை அழைத்து கொண்டு கிளம்பினார்.


எல்லாம் முடிந்து இரண்டு நாட்கள் ஆகி இருந்தது..

அம்மு நான் ஆபிஸ் போகனும் வேலை நிறைய இருக்கு இந்த இரண்டு நாள் நான் உனக்கு வீட்டில் அம்மா மணி அக்கா அப்புறம் அப்ப அப்ப வர கவி அக்கா ன்னு கொஞ்சம் செட் ஆகுற வரை இருந்தேன் இது உன்னோட வீடு ஃபீல் ஃபீரி நான் கிளம்புறேன் இது என்னோட நம்பர் எதாவதுன்னா போன் பண்ணு டா அப்புறம் என்று அவள் முகம் பார்க்க..


அவளோ பால்கனியை தான் வெறித்து பார்த்து கொண்டு இருந்தாள் பூம்பனி..

பனி என்று அழுத்தமாக அழைக்க..

ஹான் என்று திரும்பியவளை என்ன யோசனை டா…

ஒன்னு இல்ல

நான் பேசினதை கவனிச்சியா இல்லையா..

என்னது என்றாள் பூம்பனி..

நவிலன், “பெருமூச்சுடன் இதுவரை பேசியதை மீண்டும் சொல்ல..

நான் வேற வேலைக்கு போகலாம் ன்னு இருக்கேன் வீட்டில் இருக்க ஒருமாதிரி இருக்கு..

வேற வேலைன்னா..

அந்த ஸ்கூல் க்கு இனி போகல..

நீ போய் கிளாஸ் எடுக்கனும் ன்னு கம்பெல்ஷன் இல்ல அந்த ஸ்கூல் க்கு நீ ஒன் ஆஃப் த பார்ட்னர் சோ எதாவது சைன் பண்ணனும் ன்னா நீ தான் பண்ணனும்…

பனி, “ப்ச் எதுக்கு இந்த மாதிரி எல்லாம் பண்ணுறீங்க?

என்ன பண்ணிட்டேன்..

பனி, “என்னோட அபிப்பிராயம் வேண்டாமா


வேணுமே…

அப்ப ஏன் இப்படி பண்ணுறீங்க என்றாள் நவிலனை பார்த்து

உனக்கு பிடிச்சதை செஞ்சேன் அதுல என்ன தப்பு..

எதாவது உங்களுக்கு புரியுதா இல்லையா என்று பனி கத்த


சரி எனக்கு புரியல சொல்லு என்ன விஷயம் என்று சாதாரணமாக கேட்டு விட்டு நவிலன் அருகில் அமர

ப்ச்… அங்க அவங்க எல்லாம் என்னைய எப்படி என்று தழுதழுக்க

பனி என்று அவளை இழுத்து அணைத்து கொண்டவன் அவள் இதய படபடப்பை உணர்ந்து கொண்டே எதுக்கு டென்ஷன் இங்க பாரு உலகம் என்ன வேணும் ன்னாலும் பேசும் அதெல்லாம் காதுல வாங்க கூடாதுன்னு உனக்கு நாலு மாசம் டிரைன் பண்ணி இருக்கு நியாபகம் இருக்கா இல்லையா…

பனி விலுக்கென நிமிர்ந்து பார்க்க..

யாத்ரா என்னோட ஃபிரண்ட் தான் அவ தான் உன்னையே பார்த்துக்கிட்டது…

என்ன நடக்குது நவி என்னைய சுத்தி, நீங்க யார் எதுக்காக என்னைய சுத்தி வரீங்க

ஆமா என் காதலியை நான் சுத்தி வராம…

அதான் எப்படின்னு என்று அவள் அவனை துளைக்க..

உன்னையே ஆறு வருஷமா காதலிக்கிறேன் அதை நான் சொல்லி தெரிய வேணாம் அதான் இரண்டு நாளைக்கு முன்ன எல்லா வாணரமும் சொல்லிடுச்சுங்களே…

உங்களை எனக்கு தெரியாது என்னைய எப்படி?

உனக்கு தெரியலன்னா என்ன எனக்கு தான் உன்னையே நிறைய நிறைய தெரியுமே அதுவும் பி 12 கேங் எதுக்கும் அசர மாட்டோம் எப்பவும் கலங்கமாட்டோம் ன்னு இல்ல பேசித்தள்ளுவீங்க…

பேவென அவள் பார்க்க..

உன்னோட முதல் பிரசன்டேஷன் தானே பி12 அதையே உனக்கு உன் பேட்ச் பேரை வைக்க நீ அதுக்கு அந்த செட்டுக்கே இது தான் பேர் ன்னு முடிவு பண்ணி என்ன ரகளை பண்ண..

அது வந்து என்று பனி திணற..

அழகா இருந்த கண்ணம்மா அப்ப அவ்வளவு பேசுவ ஓயாம அந்த பனி ல தான் நான் உருகிட்டேன் ஆனா இப்ப பாரு எப்ப பார்த்தாலும் எதையோ பரிகொடுத்த மாதிரி…

பரிகொடுத்துட்டேன் தான் அது இல்லன்னு ஆகுமா…

என்னடி இப்படி பேசிட்டு இருக்க அது நடந்துடுச்சு அதை மாத்த முடியாது ஆனா கடந்து போகலாம் இல்ல..

நான் கடந்து போனாலும் சுத்தி இருக்க சூழல் அப்படி இல்லையே…

வேற எங்கேயாவது போய்டலாமா கண்ணம்மா என்றான் நவிலன்.

அங்க மட்டும் எதுவும் தோணாதா…

அப்ப எதுக்கு பனி சுத்தி இருக்க சூழல் ன்னு சொல்லிட்டு இருக்க என்றவன் எழுந்து வா என்று அவளே எழுப்ப..

ப்ச் நான் வரல..

வரியான்னு கேட்கல எழுந்து வா என்றவன் அவளை கையோடு அழைத்து கொண்டு படி இறங்கி வர..

மங்கை, “ இரண்டு நாளுக்கு பிறகு சற்றே தெளிந்து இருந்த பனியை பார்த்து..

பூவு வா வா ஏன் இவ்வளவு நேரம் டைம்க்கு சாப்பிடனும் இல்ல..

அத்தை இப்ப என்ன
நேரமாகிட்டு..

அட பூவு நீ இன்னேரத்துக்கு இடையில் ஒரு ஸ்நாக்ஸ் சாப்பிட்டு இருப்ப ஆனா பாரு இந்த ஒன்றரை மாசத்துல எப்படி ஆகிட்டேனு… சரி சரி வாங்க சாப்பிட..

அம்மா நான் பனியை ஆபிஸ் அழைச்சிட்டு போறேன்..

தாராளமா இங்க இருந்து என்ன பண்ணுவா அவ பிஸியா இருந்தவ, பூவு நீ வீட்டில் இருந்து உன்னோட திறமையை வீண் பண்ண கூடாது நீ ஒன்றரை மாசம் ஸ்கூல் வரலைன்னு பிள்ளைங்க எல்லாம் ஏங்கி போய் இருக்குங்க சீக்கிரம் கிளம்பு டா ஆபிஸ் போய்ட்டு ஸ்கூல் போ..

அத்தை..

என்னடா பூவு..

எனக்கு எங்கேயும் போக இஷ்டம் இல்ல..


பூவு..

அத்தை என்று கெஞ்சலாக பார்க்க

உலகம் பெரிசு தான் அதேமாதிரி மனுசங்க மனசு சிறுசு தான் ஆனா உன்னோட உலகமும் மனசும் எல்லையில்லாதது பூவு அதை ஒரு சின்ன காரணத்துக்காக சுருக்க நினைக்காத தப்பு செஞ்சவங்களே இந்த உலகத்தில் சாதாரணமா நடமாடும் போது உனக்கு என்ன?

அது இல்ல அத்தை..

மங்கை, “பூவு காரணம் சொல்லாத நீ எவ்வளவு தன்னம்பிக்கையானவன்னு மாமா அடிக்கடி சொல்லுவாங்க என்னோட பூவை அப்படி நான் பார்க்க வேண்டாமா என்றவர் அவளுக்கு உணவை ஊட்டி விட்டு ஆபிஸ் அனுப்பி விட


பல யோசனைகளுடனும் தன்னை சுற்றி உள்ள அன்பானவர்களையும் நினைத்து கொண்டே வர..

இறங்கு பனி ஆபிஸ் வந்துட்டு…

நிமிர்ந்தவள் வேற ஒரு இடமாக இருக்க யோசனையுடன் நவிலனை பார்க்க இது என்னோட ஆபிஸ் வா என்றவன் அழைத்து உள்ளே செல்ல அங்கே அவளுக்கு பிடித்த பயோடெக்கில் நேனோ பார்ட்டிகல் பிரிவில் அவளை விட்டு ,மிஸ்.ரவீனா உனக்கு எல்லாத்தையும் காட்டு வாங்க அப்புறம் இந்த டிபார்ட்மெண்ட் ஹெட் வருவாங்க அவங்களோட என் கேபின் வந்துடு அம்மு என்றவன் சென்று விட பல வருடங்கள் கழித்து அவளின் பழைய கல்லூரி அதில் நடந்த ப்ரோஜெக்ட் என்று நினைவுகளுடன் பூம்பனி நடந்து பார்த்து கொண்டு வர..

ஹாய் பனி என்ற குரலில் திரும்பியவள் உறைந்து போய் நின்று விட்டாள்…


தொடரும்







 

Lakshmi kandhan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2025
154
106
43
Salem
Ovvoru epilayum twist than
நிஜமாவா நானா நானா எல்லா பக்கமும் சுத்தி பார்த்துக்கிட்டேன் உங்க மெஸேஜ் பார்த்து மிக்க மகிழ்ச்சி சகோதரி
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
417
91
43
Tirupur
🧐🧐🧐🧐 இந்த எபில எந்த ரகசியத்தோட முடிச்சை அவிழ்க்கப் போறீங்க 🤔🤔

பனியை உறைபனியா ஆக்கினது யாரு 🧐🧐🧐
 
  • Like
Reactions: Lakshmi kandhan

Lakshmi kandhan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 6, 2025
154
106
43
Salem
🧐🧐🧐🧐 இந்த எபில எந்த ரகசியத்தோட முடிச்சை அவிழ்க்கப் போறீங்க 🤔🤔

பனியை உறைபனியா ஆக்கினது யாரு 🧐🧐🧐
எனக்கே தெரியலையே