• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Episode -04

Alamu Giri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 15, 2024
21
26
13
Chennai
என் துணைக்கு நீதான் 💞 4

ஒரு விபத்து அந்த குருவிக் கூட்டின் மொத்த சந்தோஷத்தையும் தொலைத்து விட்டிருந்தது.


கேசவ மூர்த்தியின் அந்த வண்டியை ஒரு கனரக வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் இறந்து போக,


பரிதாவிற்க்கு சுயநினைவு இழந்து இருந்தது.


சென்னையில் மிகப்பெரிய தனியார் மருத்துவமனை பரிதாவின் தம்பியும் அவன் மனைவியையும் உயிரை கையில் பிடித்து வைத்துக்கொண்டு காத்திருந்தனர்.



அடுத்து என்ன செய்வது என்று கூட பஷீருக்கு தெரியவில்லை.

அவன் குடும்பத்திற்கே மறுவாழ்வு கொடுத்த கேசவ மூர்த்தி இருந்து இரண்டு நாட்கள் ஆகின்றது.


பரிதாவிற்கு தலையில் நல்ல அடி டாக்டர்கள் எந்த நம்பிக்கையும் கொடுக்கவில்லை.


அவருக்கு சுயநினைவு இன்றி அவரின் கடைசி நேரத்தில் இருக்கிறார் பரிதா.



மதுவிற்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு காலில் ஆபரேஷன் முடிந்தது .

அவள் கண்விழிக்க காத்துக் கொண்டிருக்கின்றனர் பஷிரும் சல்மாவும்.


மது கண் விழித்து தந்தையை பற்றி கேட்டால் என்ன பதில் சொல்வது என்று கலங்கி தவித்து அமர்ந்திருந்தார் பஷீர்.


அதோடு திருமணமாகி பத்தாண்டுகள் கழித்து இப்பொழுதுதான் பஷீரின் மனைவி தாய்மை அடைந்திருக்கிறாள்.


இந்த எதிர்பாராத இழப்புகள் தொடர்ந்த அதிர்ச்சிகள் அவரை மிகவும் பாதித்து இருந்தது..

தன்னில் உழன்டு கொண்டிருந்த பஷீர் திரும்பி மனைவியை பார்த்தார்.

சல்மா மிகவும் ஓய்ந்து போனவளாக இருந்தாள்.

பஷீர்”சல்மா” என்க

“என்னங்க” என்று விட்டு கணவனின் கைகளை இறுக்கிப்பிடித்துக் கொண்டாள்.


பஷீர் “சல்மா உனக்கு கஷ்டமா தான் இருக்கும் ப்ளீஸ் மது குட்டிக்காக கொஞ்சம் பொறுத்துக்க” என்று விட்டு கண்கலங்க


சல்மா “ஏங்க எனக்கு உங்களை புரியாதா? அண்ணியும் அண்ணாவும் உங்களுக்கு இன்னொரு அப்பா அம்மா மாதிரின்னு எனக்கு தெரியும்ங்க,


நமக்கும் இந்த குழந்தை வரும்னு தெரியாத வரைக்கும் நம்ம மது குட்டியை தானே நம்ம பொண்ணா நினைச்சுக்கிட்டு இருந்தோம்.


அண்ணிக்காக அந்த அல்லாஹ் கிட்ட துவா செய்யுங்க. மது குட்டிய இந்த இழப்பை ஏற்று வர தைரியம் கொடுங்கன்னு துவா செய்வோம்”


என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே மது கண் விழித்ததாக செவிலியர்கள் வந்து கூற,

பஷீர் மனதில் இருந்த ஒட்டு மொத்த தைரியத்தையும் திரட்டிக் கொண்டு மதுவை காண உள்ளே காலடி எடுத்து வைக்க



மதுபாலா “மாமா” என்று ஈனமாக முனகி

வாயிலை பார்த்து கொண்டே “டாடி டாடிக்கு ஒன்னும் இல்ல தானே மாமா?

நான் பார்த்தேன் மாமா எனக்கு லாஸ்ட் மினிட்ல டாடி கிட்ட எந்த அசைவம் இல்லை.


அது ஜஸ்ட் மயக்கம் தானே சொல்லுங்க மாமா” என்க


சல்மாவின் அழுகையும், தன் அன்பு மாமனின் அமைதியும் பெண்ணவளுக்கு கிலி பிடித்தது.


“ மாமா சொல்லுங்க மாமா டாடிக்கு என்னன்னு சொல்லுங்க” என்று கேட்கவும்


தன்னிலை மருந்து ஓடி வந்த சல்மா “என் தங்கமே உன் வாப்பா நம்மள விட்டுட்டு போயிட்டாருடா”



என்று விட்டு தன் மார்போடு ஒரு குழந்தையை போல மதுவை அணைத்துக் கொண்டு கதற,


மதுபாலாவிற்க்கு நிதர்சனம் புரிய தொடங்கியது. புரிய தொடங்கிய நிமிடம் கத்தி கதறி தீர்த்து விட்டாள் மது.


அவளின் கதறலை காது கொடுத்து கேட்க முடியாத பஷீர் தான் மருத்துவரிடம் மதுவிற்கு மயக்க மருந்து கொடுத்து உறங்க வைக்க முற்பட்டார்.


அந்த அறை மயக்கத்திலும் “டாடி டாடி” என்று முணுமுணுத்து கொண்டே இருந்த மதுவை பார்த்து சல்மாவிற்கு ஏகத்திற்கும் ரத்த அழுத்தம் எகிறியது.


அற்புதாவிடம் ஏற்பட்ட மாற்றங்கள் கமலுக்கு மிக மிக மெதுவாகவே புரிய ஆரம்பித்தது.


அவளின் கவனம் குழந்தைகளிடையே குறைய ஆரம்பித்ததும் தான் கமல் ஊன்றி கவனிக்க ஆரம்பித்தான்.


கவனித்தவனின் உள்மனதே அவனை காரி துப்பியது.


அவனின் அலட்சியப் போக்கு, தன் தாயை கவனித்துக் கொள்ள வேண்டிய மொத்த கடமையும் அவளிடம் இறக்கி வைத்து,


அவன் நடந்து கொண்டது, அவனின் சுயநலம் என்று அவனின் ஒவ்வொரு செய்கைகளும் இப்பொழுது உரைக்க


நிலைமையை அவன் கையில் எடுக்க ஆரம்பித்து விட்டான். பிள்ளைகள் இருவரையும் பள்ளிக்கு அனுப்பும் வரையிலும் பம்பரமாக சுழலுபவள்,


பிள்ளைகள் பள்ளிக்குச் சென்ற பிறகு மாமியாரின் அறையில் சென்று அமைதியாக படுக்க,


நடப்பதை பார்த்து கமல் பள்ளிக்கு விடுமுறை சொல்லிவிட்டு அமைதியாக வந்து மனைவியின் அருகே அமர்ந்து,


அவள் தலை கோத, தலையை கணவனின் மணிக்கு இடம் பெயர்த்து விட்டு அமைதியாக கண்களை மூடிக்கொண்டாள் .


இந்த பேச்சுகளற்ற மௌனம் கமலை மிகவும் பாதித்தது.


சற்று நேரம் அமைதிக்கு பிறகு “அற்புதா ஏன் இவ்ளோ அமைதியா இருக்க? ஏதேனும் பேசுமா” என்று விட்டு அவளின் முகம் பார்க்க


அவ்விடம் எந்த பிரதிபலிப்பும் இல்லாமல் போனது.


இந்த மௌனம் நல்லதுக்கு இல்லை என்பதை உணர்ந்த கமல் தன் மைத்துனர் ரிஷிக அழைத்து விட்டான்.


தற்போதைய அற்புதாவின் அமைதி, திருமணமான ஆரம்பத்தில் அவர்களின் இனக்கம்,


அதன் பின் தாயின் உடல் நலமின்மை, அதன் பின் பிரகான கமலின் அலட்சியப் போக்கு என்று ஒன்று விடாது கூறி,


தற்போதைய அற்புதாவின் நிலைமையை கமல் விளக்க,அந்த மகப்பேறு மருத்துவனிற்கு தமக்கையின் மனநிலை புரிய ஆரம்பித்தது.



மைத்துனனும் மாமனும் கலந்து பேசி ரிஷி வேலை பார்க்கும் அந்த மருத்துவமனையிலேயே மனநிலை மருத்துவரிடம் அவளுக்கு கவுன்சிலிங் காண நேரம் பெற்ற பிறகு தான் ஓய்ந்தனர்.


ரிஷியும் தன் தமக்கைக்காக அவன் இருப்பிடத்தை அற்புதாவின் வீட்டிற்கு மாற்றிக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து விட்டு,
அற்புதவிடம் வந்து நின்றான்.



ரிஷி “அக்கா என்னோட பிளாட் ரெனோவேஷனுக்கு இப்போ வீட்டை காலி பண்ண சொல்லி ஹவுஸ் ஓனர் சொல்லி இருக்காங்க,


உனக்கு ஓகேன்னா உன் வீட்டுக்கு வரவா உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே”


என்று விட்டு தமக்கையை பார்க்க,


அற்புதவிற்கு நெஞ்சை அடைக்கும் போல இருந்தது. தன் வாழ்க்கையில் அன்னையை தவிர்த்து ஆன மட்டும் அவளில் உண்மையான அன்பை காட்டியது ரிஷி ஒருவன் மட்டுமே.



இப்போது கூட அவன் சொல்வது அத்தனையும் பொய் தன் மன அமைதி இவர்களை பாதிக்க அதற்கான அடுத்த கட்ட நகர்வுதான் தன் தம்பியின் வரவு என்று உணர்ந்தவள்


அமைதியாகவே “வாயேண்டா ரிஷி நீ வந்தா எனக்கு என்ன பிரச்சனை வரப்போகுது?


இன்னும் சொல்லப்போனால் நீ வந்தா நிஜமாவே எனக்கு யாரும் இல்லைன்ற ஒரு எண்ணம் மறைஞ்சு போக கூட வாய்ப்பு இருக்கு” என்று விட்டு மென்மையாக சிரித்து தம்பியின் தலைகோத



இவர்களின் பேச்சை கேட்டு நின்ற கமலுக்கு மனம் கசந்து விட்டது.

19 வயதில் தன்னையே உலகம் என்று நம்பி வந்த பெண்ணிற்கு தான் எத்தகைய உணர்வை விதைத்து இருக்கிறோம் என்று வெட்கி தலை குனிந்தான்.




ரிஷி மெதுவாக தான் மனநல மருத்துவரிடம் ஆலோசனைக்காக நேரம் கேட்டிருப்பதாக கூற,


அற்புதாவிற்கே அவளில் ஏற்பட்ட மாற்றங்கள் தெரிந்தே இருந்ததால் தன் இரு மகள்களை கருத்தில் கொண்டு


“போலாம் ரிஷி எனக்கே புரியுது என்னோட மாற்றங்கள். அத்ததையோட இழப்பில் இருந்து வெளியே வர முடியாமல் தான் தவிக்கிறேன்.


நம்ம அம்மாவுக்கு பிறகு என் அதிகம் பெயர் சொல்லிக் கூப்பிட்ட ஒரு ஜீவனும் இல்லன்னு நினைக்கும்போது கஷ்டமாத்தான் இருக்கு,


இந்த கஷ்டத்தில் இருந்து நானா மீண்டு வரலைன்னா என் இரண்டு பிள்ளைகளுக்கும் நான் இல்லாம போயிடுவேன் என்றுவிட்டு கலங்க,

அக்காவின் இந்த தெளிவே தம்பிக்கு தெம்பாக இருந்தது.


பரிதாபின் கடைசி நிமிடங்களில் பரிதாவிற்கு சுயநினைவு வந்து விட்டதாக மருத்துவர்கள் கூற,

பஷீர் முடிவெடுத்தவனாக தன் அக்காவின் மகளை கைகளில் ஏந்தி ஸ்ட்ரக்சரில் படுக்க வைத்து


தன் தமக்கை இருந்த அறைக்கு அழைத்துச் சென்றான்.


உள்ளே வர வேண்டாம் என்று சல்மாவை தடுத்தவனுக்கு தெரிந்திருந்தது தன் அக்காவின் நிலை.


இருந்தும் சல்மா மதுவை மனதில் வைத்துக்கொண்டு மதுவின் கைகளை இருக்க பற்றி கொண்டு,
ஐசியுவிற்குள் அடியெடுத்து வைத்தாள்.


தன் அன்னையின் அசைவற்ற உடலையும், அவருக்கு பொருத்தியிருந்த மருத்துவ உபகரணங்களையும் பார்த்ததுமே மதுவிற்கு மொத்த உடலும் பயத்தில் நடுங்கத் தொடங்கியது.



பஷீர் ஸ்ட்ரக்சரை நிமிர்த்தி பரிதாபியின் அருகில் இருக்கும்படி மதுவை நகர்த்த,


மது மிகவும் மென்மையாக தன் தாயின் கரங்களைப் பற்றி “மம்மி” என்று மெதுவாக அழைக்க,


மகளைப் பார்க்க உயிரை கையில் பிடித்து வைத்துக் கொண்டு இருந்த பரிதா கண்களைத் திறந்து,


அந்த அறையில் உள்ளவர்களை ஒரு முறை முழுவதுமாக பார்த்துவிட்டு தான் தேடிய முகத்தை காணாமல் நிதர்சனத்தை புரிந்து கொண்டு,


கண்களை ஒரு முறை அழுத்த மூட, மூடிய அந்த மூடிய கண்களில் விழிகளில் இருந்து கோடாக கண்ணீர் வடிந்தது.


பரிதாவின் மூடிய கண்களில் முதன் முதலாக பரிதாவை காதலாக பார்த்த கேசவமூர்த்தி,

அவர்களின் காதல் நிமிடங்கள்,

தன் தந்தையின் முன் தனக்காக இரைஞ்சுதுலாக தன் தாயுடன் பெண் கேட்டு நின்ற கேசவமூர்த்தி,

தன்னை இரண்டாம் தரமாக மனக்க அடாவடியாக நின்ற கேசவமூர்த்தி,

மதுவைப் பெற்றெடுக்கும் போது குழந்தையை கூட முதலில் பார்க்காமல் தன்னை அனைத்து நெற்றியில் முத்தமிட்ட கேசவ மூர்த்தி,


அடுத்தடுத்து காதலால் திக்கு முக்காட வைத்த கேசவமூர்த்தி,


ஏன் இந்த விபத்தில் கூட பரிதாவின் பக்கம் மோத வந்த வண்டியில் இருந்து லாவகமாக தங்கள் வண்டியை உடைத்து திருப்பி தன் உயிரை முதலில் கொடுத்த கேசவ மூர்த்தி,


என்று பரிதாவின் அகம முழுவதும் கேசவமூர்த்தி என்ற ஒரு மனிதரே நிறைவாக நிறம்பி இருந்தார்.


கண்களை திறந்த பரிதா மதுவின் கைகளை சிரமப்பட்டு தன் உதடுகளில் ஒற்றி எடுத்து,

“மது குட்டி அழக்கூடாது. நீ அழுதா உன் டாடிக்கு நிம்மதி இருக்காது. நாங்க உன் கூட இல்லாட்டி கூட எங்க உயிர் உன்னை மட்டும்தான் சுத்தி இருக்கும் குட்டிமா” என்க



இதற்கே பாதி மறித்துப் போனாள் மது

“ம்மா ஏன்ம்மா டாடி தான் என்னை விட்டு போனாருன்னா நீயுமா என்னை விட்டு போகணும் ப்ளீஸ் ம்மா” என்று விட்டு சத்தமாக வந்த கேவலை அடக்க


பரிதா “மது குட்டி” என்றவர் மீண்டும் அவள் கையைப் பிடித்து தன் உதடுகளில் ஒற்றி எடுத்தவர்,


“ மது எப்போதும் தைரியமா இருக்கனும். நீ தைரியமா தான் இருப்படா,

மாமா இருக்கான் உன் மாமி இருக்கா, நாங்க இல்லனாலும் உனக்கு இன்னும் ஒரு அப்பாவா அம்மாவா அவங்க ரெண்டு பேரும் இருப்பாங்க” என்றவர் பார்வை இறைஞ்சுதலாக தம்பியை பார்க்க..

பஷீர் “அக்கா நீ சொல்லாட்டியும் மது குட்டி என் மூத்த குழந்தைதான் நீ இத என்கிட்ட சொல்லணும்னு எல்லாம் இல்ல.


நம்ம அம்மா அப்பாவுக்கு பிறகு எனக்கு நீயும் மாமாவும் தான் அப்பாவா அம்மாவா இருந்தீங்க.


அதே போல என் உடம்புல உயிர் இருக்கிற வரைக்கும் மதுக்கு எந்த துன்பமும் இல்லாம பார்த்துப்பேன்” என்று அக்காவின் கைப்பிடிக்க,


தன் தம்பியின் வார்த்தைகளில் நெகிழ்ந்து போனார் பரிதா.


சல்மாவை அருகில் அழைத்து அவளின் வயிற்றில் கையை வைத்து இதழில் ஒற்றி எடுத்தவர் “நல்லபடியா குழந்தை பெற்று எடுத்து நல்லா இருப்ப ஷல்மா” என்றவர்


அழுது கொண்டு இருந்த மகளிடம் திரும்பி “மதுமா உன் வாப்பா அவரை விட்டுட்டு அம்மா எப்படிடா இருப்பேன் ?

என் துணைக்கு அவர். அவர் துணைக்கு நான் தான்னு எங்க இல்லற வாழ்க்கையில் வாழ்ந்தோம்”.


என்றவர் மென்மையாக சிரித்து “இங்க” என்றவர் மெதுவாக தன் நெற்றியை தொட்டு இங்க இங்க நீ பொறந்த போது உன் வாப்பா கொடுத்த முத்தத்தோட ஈரம் இன்னும் இருக்குது மதுகுட்டி


உன் வாப்பா இல்லாம என்ன தனியா கற்பனை பண்ணி உன்னால பார்க்க முடியுமாடா”


என்றவர் சிரிப்பு மெல்ல குறைந்தது. “ஆனா என் மது குட்டி இன்னும் எங்களுக்கு குழந்தைதான் அவளை தனியா தவிக்க விட்டு போறதுதான் கஷ்டமா இருக்கு” என்க,


அவரின் உணர்வுகளின் வெளிப்பாடு கண்களில் இருந்து கண்ணீராய் வழிய ஆரம்பித்தது.


அன்று இரவு முழுக்க பரிதா ஒரு கையில் தன் தம்பியையும் மறுகையில் தன் மகளையும் பிடித்துக் கொண்டே இருந்து,


காலையில் தன் இன்னுயிரை நீர்த்து தன் துணையாய் இருந்த கணவனை தேடி அவரின் ஆன்மா அடங்கியது.


தாயின் உயிர் பிரியும் நொடி வரை தன் அம்
மாவின் கையை பிடித்துக் கொண்டு அமர்ந்தவள் அதே அமைதியுடன் தாயின் கையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.


சல்மாவின் கதறலும் பஷீரின் கதறலும் அவ்வறையை நிறைத்தது.


அழுதழுது சல்மா மயக்க நிலைக்கு செல்லவும் தான் பஷீர் நிதர்சனத்தை ஏற்று அடுத்த ஆக வேண்டியதற்கான வேலையை செய்ய ஆரம்பித்தான்.

துணை வரும்