• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Episode 12

Alamu Giri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 15, 2024
21
26
13
Chennai
என் துணைக்கு நீதான் 💞

தனபாக்கியத்தின் ஒற்றை சொல்லில் மனதில் பெரிய அடி வாங்கியவள் நின்று நிதானமாக திரும்பி


“ஓ அப்படியா!” என்று விட்டு மென்னகை புரிந்து கொண்டே தனபாக்கியத்தின் அருகில் வந்தவள்,


“ இந்த பிச்சைக்காரி கிட்ட இருக்க சொத்துக்கு தான் பரம்பரை பணக்கார உங்க பேரன் மானவ் என்னை கடத்தி, ஒரு நாள் முழுக்க அடைத்து வைத்து இந்த சொத்தைக் கேட்டு என்னை ஆள் வைச்சு அடிச்சான்” என்றவள்


மேலும் மானவ்வின் அருகில் சென்றவள் “உன்னோட கேவலமான செயலில் பயந்து நான் ஒன்னும் இந்த சொத்தை உன்கிட்ட கொடுக்க வரல.


என்னோட வளர்ப்பு பத்தி பேசுனியே என்னோட வளர்ப்பு இதுவரைக்கும் தப்பி போகல.


ஒருத்தரை கஷ்டப்படுத்தி ஒருத்தரை மனசளவுலையோ உடலளவிலையோ காயப்படுத்தி அதுல வர அற்ப சந்தோஷம் நிலைக்காதுன்னு சொல்லி தான் என் அம்மாவும் என் அப்பாவும் என்னை வளர்த்திருக்காங்க. இதுலையே தெரியலையா எங்க அம்மாவோட குணம்.”


“எவ்வளவு அசிங்கமா பேசின நீ? என் அம்மாவை பத்தி இதோ நிக்கிற உன் பாட்டியும், என் அப்பாவும் நல்லா காது கொடுத்து கேட்டுக்கோ! ஜாதி மதம் பார்க்காமல் என் அம்மாவுக்காக என் அம்மாவோட வீட்டை தேடி பெண் கேட்டு வந்தாங்க.


என் அப்பாவோட மனசுல ஆரம்பம் முதல் கடைசி வரைக்கும் என் அம்மா தான் முதன்மையா இருந்தாங்க.


அதனாலதான் எந்த நிலையில் இருந்தாலும் எங்க அம்மாவை விடாமல் இருக்க முடிஞ்சது அப்பாவால.


அது எந்த அளவுக்குன்னா அவருக்கு வாழ்க்கையில் கல்யாணம் ஆகி ரெண்டு பசங்க இருந்தும், எல்லாத்தையும் விடவும் எங்க அம்மா தான் முதன்மையா தெரிஞ்சாங்க இங்கேயே எங்க அம்மா ஜெயிச்சிட்டாங்க.”



“அன்னைக்கு என்ன சொன்ன? குடியை கெடுத்தவங்கன்னா …

ஏன் எங்க அம்மாவா நல்லா வாழ்ந்துட்டு இருந்த அப்பா வாழ்க்கையில் வந்தாங்க?


என்னோட அம்மா அவங்களோட வாழ்க்கையில எல்லாத்தையும் இழந்துட்டு கூலி வேலைக்கு தான் போயிட்டு இருந்தாங்க.


அப்படி இருந்தவங்கள கல்யாணத்துக்கு வற்புறுத்தினது அப்பா.

அப்பாவை உன் அம்மாவாலையோ இல்ல உன் பாட்டியாளையும் தடுக்க முடிஞ்சுதா?” என்றாள்


“என் அம்மா அப்பா மேல வச்ச காதல் எந்த அளவுக்கு உண்மைன்னு அவங்க ரெண்டு பேரோட இறப்பிலேயே தெரியலையா உனக்கு” என்று விட்டாள்


மதுவின் முதல் வார்த்தியிலேயே லட்சுமி ஒடுங்கி விட்டார். அதிலும் மானவ் அவளை கடத்தினான் என்று அவள் கூறிய போது அவருக்கு அவமானமாக இருந்தது.



அதோடு விடாமல் மேலும் மேலும் அவள் அன்னை கேசவமூர்த்திக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதை அவள் கூற இன்னும் அசிங்கமாக உணர்ந்தவர் குனிந்த தலை நிமிரவில்லை.


தனபாக்கியத்திற்கு தன் பேரன் இப்படியா அதுவும் ஒரு பெண்ணிடம் கீழ் இறங்கி செய்வான் என்று இருந்தது.


அதிலும் அவன் பேசியதாக கூறிய வார்த்தைகள் எல்லாம் மிகுந்த வருத்தமாக இருந்தது. தவறு என்று சொன்னால் அது தனது மகன் மீது மட்டும் தானே. இந்த இரு பெண்களுமே சூழ்நிலை கைதிகள் தானே, என்று நினைத்தவர் மறு வார்த்தை பேசவில்லை.



இன்னும் கோபமாக ஆணவமாக தன்னை முறைத்து பார்க்கும் மானவ்வான் கர்வத்தை உடைக்க நினைத்த மது சஞ்சயின் மகளின் அருகே சென்று “ஹாய் பட்டு உங்க பேர் என்ன” என கேட்க அதுவும் அழகாய் சிரித்து “அமுலு” என்றது




மது “ஓஓஓ பேபி பேரு அம்முலுவா” என்றவள்

நின்று இருந்தவளை அருகில் இருக்கும் சோபாவில் அமர்த்த முயலே


அந்த சிட்டு அன்னையை திரும்பிப் பார்த்தது. ஷோபாவில் அமர அது அன்னையை அழைக்க, பூர்விகா இருக்கையில் அமர்ந்து குழந்தையை மடியில் அமர்த்தி கொண்டாள்.

அந்த குழந்தைக்கு சமமாக கீழே அமர்ந்தவள்குழந்தையிடம்
“அம்முலு குட்டி வளர்ந்து பெரியவளா ஆன பின்னாடி உன் டாடி கிட்ட சொல்லு, உனக்கு உன் டாடி சொத்து எதுவும் கொடுத்தா


உன் சித்தப்பாவோட சம்மதத்துடன் தரச் சொல்லி சொல்லிடுமா . இல்லைனா உன் சித்தப்பா சொந்த இரத்தம் என்று கூட பார்க்காம


ஒரு நடு ராத்திரி முழுக்க ஒரு அறையில கண்ண கட்டி ரெண்டு ஆம்பளைங்களை விட்டு, அடுத்த நிமிஷம் என்ன நடக்கும்னு பயத்துல நரகத்தை காட்டிடுவாங்க,



அந்த கொடுமை என்னோடவே போகட்டும். உனக்கு எல்லாம் அந்த நரக வேதனை வேண்டாம்” என்றவளுக்கு முடிக்கும் போது கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது.


மது சொல்ல சொல்ல பூர்விகா அச்சத்துடன் மாணவ்வை பார்க்க தன்னுடைய அண்ணி பார்த்த பார்வையில், அவனுக்கு தன்னை நினைத்து வெட்கமாக இருந்தது.



இவ்வளவு நேரம் இருந்த திமிரும் தெனாவட்டும் மதுவின் இடத்தில் அம்முலு குட்டியை வைத்து யோசிக்க, இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது.



அமுலுவின் 10 மாத குழந்தையாய் இருந்த போதிலிருந்து தன் அண்ணன் மகளை தன் தோளிலேயே போட்டு வளர்த்தவனுக்கு மதுபட்ட வேதனையில் ஒரு துளி கூட தன் அண்ணன் மகள் படக்கூடாது என்று மனம் அடித்துக் கொண்டது.





பேசி முடித்து அங்கிருந்து கிளம்ப முற்பட்டவள் கண்ணில் லஷ்மி பட இத்தனை நேரம் பேசியவளின் கண்கள் குளம் கட்ட ஆரம்பித்தது.




வேகமாக சென்று அவரை அணைத்தவள், “சாரி சாரி லட்சுமி அம்மா உங்களை கஷ்டப்படுத்த நிச்சயமா நான் இப்படி பேசவே இல்ல.


அப்படி நினைச்சு நான் பேசியிருந்தா நிச்சயம் அப்பா என்னை மன்னிக்கவே மாட்டார். அன்னைக்கு ரொம்ப கஷ்டப் படுத்திட்டாங்க. அப்போ அங்க யாரு கடத்தினதுன்னு தெரியாமல்


அந்த இடத்துல இவரை பார்த்ததும் மாணவன்னா மானவண்ணான்னு எவ்ளோ கத்தினேன்னு அவரையே கேளுங்க.


நீங்க என்னை எதுவுமாவுமே நினைக்கவில்லை என்றாலும் என் அப்பாவோட குடும்பத்தை என் அம்மாவா என் அண்ணாவா என் பாட்டியா தான் நான் நினைச்சேன்.



ஆனா அவங்க அந்த நேரம் எனக்கு செஞ்சது என் வாழ்க்கையில மறக்க முடியாத தழும்பாக்கி போச்சு. அந்த கோபம் தான் என்னை இப்படி பேச வச்சுடுச்சி. என்ன மன்னிச்சிடுங்க லட்சுமி அம்மா” என்றவள் விறு விறுவென்று ரிஷி என் கைகளைப் பிடித்துக் கொண்டு கிளம்பி விட்டாள்


மூன்று மாதம் பறந்து ஓடி இருந்தது. திருமண மண்டபத்தின் பத்திரத்தை மானவ்வின் வீட்டில் வைத்து விட்டு வந்தவள் அன்றைய தினத்திலிருந்து அந்த மண்டபத்திற்கு போவதே இல்லை .


அப்போதைய நிலவரத்தை மேனேஜர் கந்தனிடம் அப்படியே கூறிவிட்டாள். இனி கணக்கு வழக்குகள் கூட தன்னிடம் ஒப்படைக்க வேண்டாம் என்று கூறிவிட்டாள்.


மனதில் ஒரு ஓரம் வலி இருந்தாலும் இதெல்லாம் ஏற்று தானே அந்த பத்திரத்தை அங்கு வைத்து விட்டது வந்தது ஆகையால் அதையும் ஏற்க்க பழகி இருந்தாள் .


அவளின் முழு நேரமும் இப்பொழுது கேசவ் குட்டியுடன் தான் ஓடுகிறது.




சல்மா குழந்தை பிறந்த ஒரே மாதத்திலேயே சொன்னபடி மதுவின் வீட்டிற்கு வந்துவிட்டாள்.


குழந்தைக்கு பஷீரும் சல்மாவும் கேசவ் என்று பெயரிட்டனர். தினம் ஒரு முறை ரிஷியின் ஷிப்ட் பொறுத்து மதுவை வெளியே அழைத்துப் போவதை வாடிக்கையாக வைத்திருந்தான்.


சல்மாவின் உடல்நலன் தேறி வந்ததால் இரு வீட்டிலும் திருமண பேச்சை ஆரம்பித்து இருந்தனர்.



சிவசங்கரன் தாமரையும் அற்புதாவின் விஷயத்தில் தங்களின் தவறு புரிந்து பிள்ளைகளின் மனம் போல நடக்க பழகி இருந்தனர் .


திருமணம் மிகவும் ஆடம்பரமாக வேண்டாம் என்று நினைத்த மது அவள் விருப்பத்தை இரு வீட்டாரிடமும் கூற,



அவள் அம்மா அப்பாவை மனதில் கொண்டு அவள் இப்படி கூறுகிறாள் என்பதை உணர்ந்த சுற்றத்தினர் அதற்கு சரியென்றே கூறினார்கள்.



பரத்தின் ஆலோசனைப்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருமணம் செய்துவிட்டு, மதுரையில் அவர்களின் விருப்பப்படி ஆடம்பரமா வரவேற்பு செய்யலாம் என முடிவு செய்து இருந்தனர்.



திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில் இன்று மதுவின் விருப்பப்படி கேஷவ மூர்த்தியின் உயிர் பிரிந்த இடத்திற்கு அழைத்து வந்திருந்தான் ரிஷி.



வரும்போது பல அறிவுரைகள் சொல்லித்தான் அழைத்து வந்திருந்தான். அவனிடம் திடமாக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும், தொட்டால் உடைந்து விடும் நிலையில் தான் இருந்தால் மது.


கடந்த இந்த ஆறு மாதங்களும் அவள் வாழ்வில் கனவு போல இருந்தது. எதிர்பாராத தன் தாய் தந்தையின் இறப்பு, ரிஷியுடனான காதல் என்று ஒவ்வொன்றாய் நினைத்து மனதில் மருகி கொண்டு வர,


அந்த இடத்தை அடைந்ததும் நிதானமாக வாங்கி வந்த பூக்களை அவ்விடத்தில் தூவியவள் மனதிற்குள்ளாகவே “எங்கள் கூடவே இருங்கப்பா. வேறு எதுவும் வேணாம் என்னை நல்லா வழி நடத்துங்க” என்று வேண்டியவள் கண்ணீரோடு வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டாள்.


மதுரை வந்து இறங்கியதிலிருந்து மனதளவில் ஒரு நிறைவை உணர்ந்தாள் மது. தாமரை அனைவரிடமும் நல்ல விதமாகவே நடந்தார்.



திருமணத்திற்கு புடவையில் தயாராகி வந்த மதுவை பார்த்து அசந்து போனான் ரிஷி. திருமணம் நெருங்க நெருங்க வந்த பூரிப்பும் அவளின் வெட்கச்சிவப்பும் அவள் கட்டி வந்த பச்சை நிற பட்டு புடவையும் அவளை பேரழகியாக காட்டியது.



சல்மாவின் வளைகாப்பின் போது பச்சை நிற புடவையில் அவளை பார்த்தவன் விழிகளில் ஓவியமாய் அவள் பதிந்து போக அதைத் தொட்டு திருமண புடவை ரிஷியின் விருப்பமாக எடுத்திருந்தான்.



அதிக மேக்கப் இல்லாமல் அளவான மேக்கப்பில் பச்சை பட்டு உடுத்தி, மல்லிகையை சூடி மரகத கல் பதித்த நெத்திச்சுட்டி ஆரம் மரகத வளையல்கள் என்று வந்தவளை பார்த்தவன் பார்த்தபடி இருக்க


பரத் அருகில் வந்து “அண்ணா என்னடா முதல் முதலா பார்க்கிற மாதிரி பார்த்து வைக்கிற பாரு எல்லாரும் உன்னை தான் பார்க்கிறாங்க” என்க



ரிஷி “மச் போடா அங்கிட்டு சும்மா எவன் பார்த்தா எனக்கு என்னடா” என்று அவன் பார்வையை தொடர


கமலே வந்து “போதும் மச்சான் ரொம்ப பாக்காதீங்க” என அந்த நேரத்திலும் ரிஷி கல்யாணம் ஆகி பத்து வருஷம் ஆகுது. நீங்க இப்பவும் எங்க அக்காவை பார்த்தா வாயில வாட்டர் ஃபால்ஸ் வழியுது. எனக்கு சொல்லாதீங்க அத்தான் என்று அவனை வாறினான் ரிஷி.


ரிஷியை நெருங்க நெருங்க அவனின் பார்வை மதுவிற்கு இன்னும் வெட்கத்தை வாரி வழங்கியது. இடைவிடாத அவன் பார்வையில் லஜ்ஜையுற்றவள் “போதும் ப்ளீஸ் ரிஷி” என்று அவனின் முகத்தை கைக்கொண்டு வேறு திசையில் திருப்பிவிட,



சுற்றி இருந்த அத்தனை பேரின் சிரிப்பில் இப்போது வெட்கப்படுவது ரிஷியின் முறையானது .



மதுரை மீனாட்சி அம்மனின் முன்னிலையில் மனமாற அந்த அம்மனின் மனதில் வேண்டிக்கொண்டு அம்மையப்பன் பதித்த அந்த பொறுத்தாலியை மதுவின் கழுத்தில் கட்டி, மதுவை அவனின் வாழ்க்கைத் துணை ஆக்கி கொண்டான் ரிஷி.




தன் தாய் தந்தையிடமும் அந்த மீனாட்சியிடமும் வேண்டிக் கொண்டு அவன் கட்டிய தாலியை மனமார ஏற்றுக்கொண்டு அவளின் வாழ்க்கை துணையாக ரிஷியை ஏற்றுக் கொண்டாள் மது.


பஷிரு
க்கும் சல்மாவிற்கும் வந்து உணர்வு நிம்மதி என்ற ஒற்றை வார்த்தையில் சொல்லி விட முடியாது. மகிழ்வின் உச்ச கட்டத்தில் இருந்தனர். தங்கள் மகளுக்கு நிறைவானது ஒரு வாழ்வு கிட்டியதில்..

துணை வரும் 💞
 
Last edited by a moderator:

Joss uby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
544
164
43
Dindugal
இன்னும் நாலு கேல்வி கேட்டுருக்கலாம்..
அந்த கிழவி எதுவும் பேசாததே எரிச்சலா இருக்கு
 
  • Like
Reactions: Alamu Giri

Alamu Giri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 15, 2024
21
26
13
Chennai
இன்னும் நாலு கேல்வி கேட்டுருக்கலாம்..
அந்த கிழவி எதுவும் பேசாததே எரிச்சலா இருக்கு
அவங்க பிள்ளை இறந்து அவங்க அவளை பார்க்காமல் விட்டதே அவங்களுக்கு குற்ற உணர்வு வந்து இருக்கும்.. இதுக்கு மேல பேசி என்ன ஆகிட போகுது . தவறை உணர்ந்தால்ஏ போதும்
 

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,118
592
113
Tirupur
இன்னும் நாலு கேல்வி கேட்டுருக்கலாம்..
அந்த கிழவி எதுவும் பேசாததே எரிச்சலா இருக்கு
என்னோட கருத்தும் அதுதான். இன்னும் ஆழமா அவங்களை காயப்படுத்திருந்திருக்கலாம்.
 

Alamu Giri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 15, 2024
21
26
13
Chennai
இன்னும் நாலு கேல்வி கேட்டுருக்கலாம்..
அந்த கிழவி எதுவும் பேசாததே எரிச்சலா இருக்கு

என்னோட கருத்தும் அதுதான். இன்னும் ஆழமா அவங்களை காயப்படுத்திருந்திருக்கலாம்.
மேடம்
என்னோட கருத்தும் அதுதான். இன்னும் ஆழமா அவங்களை காயப்படுத்திருந்திருக்கலாம்.
ஓஓ மதுவோட இயல்பு இது இல்லை தானே
 
  • Like
Reactions: Sailajaa sundhar

Sailajaa sundhar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
134
97
28
Dindigul
மேடம்

ஓஓ மதுவோட இயல்பு இது இல்லை தானே
பொதுவா பெண்கள் எல்லா இடத்துலயும் அப்படி இருக்க மாட்டாங்கதானே அபங்களோட ஹைப்ரெஷர் ஒரு இடத்துல வெடிக்கும். அது இயல்பை மீறினதா இருக்கும்.
இயலபை கடசி வரை பிடிச்சி வச்சிருக்க முடியாது இல்லையா? ஏதோ ஒரு இடத்துல இயல்பை மீறி நடக்கத்தான் செய்வாங்க. அது மதுவுக்கு இந்த இடத்துலதான் நடந்தது. அப்போ அவளோட கோபத்தின் அளவு குறைவுதானே
 
  • Like
Reactions: Alamu Giri