• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Episode - 22

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,173
602
113
Tirupur
இதழ்:- 22



கடல்...

உலகின் முதல் அதிசயம்

சத்தமிடும் இரகசியம்

கால வெள்ளம்

தேங்கி நிற்கும் நீலப்பள்ளம்



வாசிக்கக் கிடைக்காத

வரலாறுகளைத் தின்றுசெரித்து

நின்று சிரிக்கும் நிஜம்



கடல்

ஒருவகையில் நம்பிக்கை

ஒருவகையில் எச்சரிக்கை ...........



அந்த நீலக்கடல் ஓரத்தில் கால்களைத் தழுவிச் செல்லும் அலைகளின் ஸ்பரிசத்தை ரசித்தபடி கடற்காற்று முகத்தில் அறைய மாலைச் சூரியனின் கிரகணங்கள் நீரில் பட்டு தகதகக்கும் கடலின் அழகை இரசித்தபடி நின்ற பூவினிக்கு கவிஞர் வைரமுத்து அவர்களின் “தண்ணீர் தேசம் “ என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து வாசித்த வரிகள் தான் நினைவிலோடின.



உண்மைதானே இந்தக் கடல் தனக்குள் புதைத்து வைத்திருக்கும் ரகசியங்களும் அதிசயங்களும் தான் எத்தனை எத்தனை!!!!!!!!!! இந்த கடலின் ஆழத்தில் புதைந்து போன சாம்ராச்சியங்களும் புராதன நகரங்களும் தான் எத்தனை எத்தனை!!!!! ஹ்ம்ம் ”காலவெள்ளம் தேங்கி நிற்கும் நீலப் பள்ளம் “ எத்தனை அழகான அர்த்தம் செறிந்த வரிகள்.



சிலீரென்று முகத்தில் பட்ட நீரில் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள்.தாரணி தான் அவள் முகத்தில் நீர்த்திவலைகளை வீசிவிட்டு சிரித்துக்கொண்டிருந்தாள்.



ஆம் அன்று சின்னவர்களின் ஆசைக்கிணங்கி குமாரசாமி வள்ளியம்மை தவிர குடும்பம் மொத்தமும் கடற்கரைக்கு வந்திருந்தது. வழக்கம் போல பெரியவர்கள் கரையோர மணற்திட்டில் அமர்ந்துவிட இளையவர்கள் எல்லாம் நீரில் விளையாடியபடி இருந்தனர்.



தமிழும் தாரணியும் கரையோரம் நின்று அலையில் கால் நனைத்து விளையாட பையன்களுடன் மித்திரனும் சற்று தூரம் சென்று கடலில் நீந்தி ஆட்டம் போட்டனர்.



தாரணியை சற்று தூரம் துரத்தியவளின் பார்வை வட்டத்தில் நிலவன் விழுந்தான்.அவர்களை விட்டு விலகி சற்று தூரத்தில் பான்ட் கால்களை மடித்துவிட்டபடி கடற்காற்றில் முன்னுச்சி முடி பறக்க வானும் கடலும் இணையும் புள்ளியை வெறித்தபடி நின்றிருந்தான்.



உக்கும்...இந்த போஸ் கு ஒன்றும் குறைச்சல் இல்லை.மனம் செல்லமாய் சலித்துக்கொண்டது.





தமிழும் தாரணியும் அலையை துரத்துவதில் ஈடுபட்டுவிட அவர்களுடன் இணைந்து விளையாட மனம் வராமல் மெல்ல நிலவனை நோக்கி நடந்தாள்.





ஏனோ இந்த கடல் போலத்தான் இவனும் உள்ளே என்ன இருக்கிறது என்றே அறியமுடியாது வெளியே அமைதியாய் அழுத்தமாய் இருக்கிறான் என்று தோன்றியது.



எதுக்கு பாஸ் இந்த தனிமைத் தவம்?? கேட்டபடியே அவன் அருகில் போய் நின்றாள்.



அவளைத் திரும்பி நோக்கியவனின் முகத்தில் சோகத்தின் கோடுகள். அவள் முகம் பார்த்தவனின் முகம் கணப் பொழுதில் உணர்வு தொலைத்து பாறையானது.



இங்கேயும் நிம்மதியாக இருக்க விட மாட்டாயா?? கோபத்தில் தோய்ந்து விழுந்தன வார்த்தைகள்.



ஹலோ உங்கள் நிம்மதியை குலைக்கும் அளவுக்கு நான் என்ன செய்தேன்.நீங்கள் இப்படியே தனியே இருப்பதைக் கண்டால் பெரியவர்களின் சந்தேகம் அதிகமாகுமே என்று பேச வந்தால்.ஹ்ம்ம் என்னவோ செய்யுங்கள்..திரும்பி நடக்க முயன்ற வினியை



ஏய் நில்லு என்று தடுத்தான்.



அவள் நின்று அவன் முகம் பார்க்கவும் நீ சொல்வதும் சரி தான்.கொஞ்ச நேரம் இங்கேயே நின்று ஏதாவது பேசு என்றான்.



வாங்க பாஸ் வாங்க.மனதுள் மகிழ்ந்தவள் வெளியே என்ன பேசுவது என்றாள்.



பேசத்தானே வந்தாய்!!!! ஏதாவது பேசு.பேசுவது தான் உனக்கு கைவந்த கலையாயிற்றே.



பேசுவேன் ஆனால் நீங்களும் என் பேச்சைக் கேட்டு பதிலுக்கு ஏதாவது பேசவேண்டும்.சும்மா பைத்தியம் மாதிரி நான் மட்டுமே பேச முடியாது.டீல்?? தலை சரித்து வினவியவளின் முகம் பார்க்காமல் கடலை வெறித்தபடி



ஹ்ம்ம்..தலை எழுத்து.சரி பேசு.என்று சலிப்பு குரலில் முணுமுணுத்தான்.



பெரியவர்களுக்காக என்றாலும் அவன் இந்தளவு தூரம் நெருங்கி வந்ததே வினிக்கு மகிழ்வைக் கொடுக்க அலைகொஞ்சும் கடலோரம் அவனின் அருகாமையை ரசித்தபடி துள்ளலுடன் ஏதேதோ பேசினாள் பூவினி.கடல் கவிதை நிலவு இயற்கை இப்படி ஏதேதோ பேசிக்கொண்டே இருந்தாள்.



வெளியே வேண்டாவெறுப்பாக அவள் பேச்சைக் கேட்பது போல் பாவனை செய்தாலும் உள்ளே அவளுடைய அருகாமையையும் துள்ளல் குரலில் குழந்தை போல கள்ளம் இல்லாமல் அவள் பேசும் அழகையும் இரசித்தபடி அவள் பேச்சுக்கு இடையிடையே பதில் சொல்லிக்கொண்டிருந்தான் நிலவன்.அவள் குரலின் இனிமையோ அருகாமை தந்த மயக்கமோ ஒரு கட்டத்தில் தன் நடிப்பை மறந்து மௌனமாக அவள் பேச்சை கேட்டு உம் கொட்டியபடி மோனத்தில் ஆழ்ந்துவிட்டான்.



அவனிடம் தோன்றிய மாற்றத்தை உணர்ந்த வினியும் அதைக் கவனிக்காதவள் போல் தன் பேச்சை நிறுத்தாது தொடர்ந்தாள்.



நிலவனும் வினியும் தனியே நின்று பேசிக்கொண்டிருப்பதைக் கண்ட தாரணிக்கு மகிழ்ச்சியாய் இருந்தது.



அவர்கள் இருவருக்குள்ளும் என்ன நடந்தது என்று இதுவரை அவளுக்கு தெரியாது தான்.ஏன் வினி தன காதலை நிலவனிடம் சொன்னாளா என்று கூட அவளுக்கு தெரியாது.ஆனால் வினி தானாக சொல்லாத எதையும் அவளை வற்புறுத்தி கேட்டு தெரிந்துகொள்ள தாரணி விரும்பவில்லை.அது அவர்கள் இருவரின் அந்தரங்கம்.அதைக் குறித்து தான் விசாரிப்பது அநாகரிகம் என்று தாரணிக்கு தோன்றியது..



ஆனால் வினியும் நிலவனும் ஒருவர் மேல் ஒருவர் மிகுந்த அன்பு கொண்டுள்ளனர் என்பது அவளுக்கு தெரியும்.அதில் அவளுக்கு சந்தேகமே இல்லை.அவர்கள் இருவரும் பேசிக்கொண்டாலே எல்லாம் சரியாகிவிடும் என்று அவள் நினைத்தாள்.



அவள் அவர்களைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கும் போதே மித்திரன் அவர்களை நோக்கி செல்வது தெரிந்தது.



அய்யய்யோ ரொம்ப நாளைக்கு பிறகு இப்போது தான் அத்தானும் வினிக்காவும் இயல்பாக பேசிக்கொள்வது போல் தோன்றுகிறது.இவன் எங்கே அங்கே போகிறான்.



வேகமாக சென்று மித்திரனின் கரம் பற்றி இழுத்தாள் தாரணி.கடல் அலையோரமாய் தான் அவன் நடந்துகொண்டு இருந்தான்.தாரணி சென்று இழுக்கவும் அச் சமயம் ஒரு பெரிய அலை வந்து முட்டிவரை மோத இருவருமே தடுமாறிவிட்டனர்.கால்களை மண்ணில் அழுந்த ஊன்றி தன்னை சமாளித்தவன் தாரணியையும் கைகளில் தாங்கிக் கொண்டான்.



இருவருமே இதை எதிர்பார்க்கவில்லை அவனது வலிய கரங்களில் பூங்கொடியாய் சாய்ந்திருந்தவள் பார்வை திகைப்புடன் அவன் முகத்தில் பதிந்தது.



கடலில் முழுகி நீச்சலடித்ததால் தலையில் இருந்து நீர் சொட்டிக்கொண்டிருக்க அவன் விழிகள் ஆர்வமும் சிறு வியப்புமாய் அவளை நோக்கியபடி இருந்தது.அவன் முன்னுச்சியில் இருந்து சொட்டிய நீர்த்துளி ஒன்று அவள் நுனிமூக்கில் விழுந்து கன்னத்தில் உருண்டது.பெரிய விழிகளில் திகைப்புடன் தன்னையே நோக்கியபடி இருந்தவளின் முகத்தில் நிலைத்திருந்த அவன் பார்வை மாற மெல்ல அவள் முகம் நோக்கி குனிந்தான்.



அவனின் கம்பீரம் ததும்பிய முகம் அவளை நோக்கி குனிந்த போதும் விலகத் தோன்றாமல் இதயம் படபடக்க விழி விரித்து அவனைப் பார்த்தபடியே இருந்தாள் தாரணி.அவன் முகம் அவளை நெருங்கி அவன் மூச்சுக்காற்று கன்னம் சுட்டபோது ஏனென்று தெரியாமலே உடல் சிலிர்க்க விழிமூடிக் கொண்டாள்.தன் கரங்களில் மல்லிகைச் சரமாய் விழிமூடிக் கிடந்த தாரணியை விழி மூடாமல் ஒரு கணம் ரசித்த மித்திரன் ஏதோ தோன்ற தன்னைக் கட்டுப்படுத்துபவன் போல கண்களை ஒருகணம் மூடித் திறந்தான்.



எதையோ எதிர்பார்த்தவள் போல் விழி மூடியிருந்த தாரணி எதிர்பார்த்தது நடக்காமல் போகவே சட்டென விழிகளைத் திறந்தாள்.அவள் விழிகளை நேருக்கு நேர் சந்தித்தவனின் பார்வையில் அவள் முகம் சிவக்க அவன் விழிகளில் சட்டென குறும்பு மின்னியது. அவள் செவியோரம் குனிந்து “பழிக்கு பழி ” என்று கிசுகிசுத்தவன் அவள் என்னவென்று சுதாரிக்கும் முன்பே சட்டென அவளைக் கடலில் தள்ளி விட்டான்.



அதை சற்றும் எதிர்பாராத தாரணி தொபுக்கென நீரில் விழுந்தாள்.நீரில் விழுந்து முற்றாக நனைந்தவள் சுயநிலைக்கு வந்து தன்னைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தவனைப் பார்த்து கோபத்துடன் முறைத்தாள்.அவளின் எரிக்கும் பார்வையை சந்தித்தவன் அலட்சியமாக உதட்டை சுழித்து என்ன?? என்பதாய் புருவத்தை உயர்த்திவிட்டு பூவினியை நோக்கி நடந்தான்.





தாரணிக்கு கோபத்திலும் அவமானத்திலும் முகம் கன்றி சிவந்தது.





ஹே வினி இப்படி சும்மா நின்று அரட்டை அடிக்கத் தான் இங்கே வந்தாயா??



மித்திரனின் குரல் நாராசமாய் நிலவனின் செவிகளில் புகுந்து அவன் மோனத்தை கலைத்தது.



பூவினிக்கும் சற்று எரிச்சலாகத்தான் இருந்தது.ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது.இவன் எதற்கு இடையில் வருகிறான்.



கண்களில் சலிப்பைக் காட்டி அவனைப் பார்த்தாள்.அவள் விழிகளில் இங்கிருந்து போயேன்டா.என்ற குறிப்பிருந்தது.மித்திரனோ “நல்மரமாக”



என்ன வினி பேசாமல் நிற்கிறாய் வீட்டில் இருந்து வரும் போது அங்கே போய் இருவரும் அலையில் விளையாடலாம்.என்று சொன்னாய் இங்கே வந்து இப்படி பேசாமல் நிற்கிறாயே.வா வா நான் உனக்கு அலையில் விளையாட கற்றுத்தருகிறேன்.வினியின் கரம் பற்றி இழுத்தபடி நடந்தான்.



அடப்பாவி நான் எப்போடா சொன்னேன் அலையில் விளையாடலாம் என்று!!!!! மனதுக்குள்ளேயே கேட்டுக்கொண்டவள் மித்திரனின் இழுப்புக்கு உடன்பட்டு அவனுடன் நடந்தபடி திரும்பி நிலவனைப் பார்த்தாள்.



அவனும் அவளையே தான் பார்த்திருந்தான்.வழமையாக உணர்வு தொலைத்து இறுகி இருக்கும் அவன் முகத்தில் அப்போது தோன்றியிருந்த உணர்வு!!!!!!! அவள் நெஞ்சைப் பிசைந்தது.ஒரு தவிப்பு.தன்னுடைய விருப்பமான பொம்மையை பலவந்தமாக யாரோ பறிக்கும் போது அதை திரும்ப பறிக்கவும் இயலாமல் பெரியவர்களிடம் முறையிடவும் முடியாமல் இருக்கும் ஒரு குழந்தையின் முகத்தில் தோன்றும் தவிப்பு.



அந்த கணத்தில் எப்போதும் அவள் கண்களுக்கு எல்லாவற்றிலும் பெரியவனாக தோன்றும் நிலவன் குழந்தையாக தோன்றினான்.அவன் முகத்தை நெஞ்சோடு அணைத்து உனக்கு நான் இருக்கிறேன்டா.என்று கூறவேண்டும் போல் இருந்தது வினிக்கு.அவன் கண்கள் தவிப்புடன் அவளையே நோக்கி கொண்டிருந்தது.



அவனிடம் ஓடிச் செல்ல வேண்டும் என்ற தவிப்பு எழ மித்திரனின் கரங்களில் இருந்து கையை உருவ முயன்றாள்.மித்திரனின் பிடியோ சற்றும் தளரவில்லை.



தயவு செய்து விடு மித்து கொஞ்சநேரம் பேசிவிட்டு வருகிறேன்.என்றாள் வினி கெஞ்சலுடன்.



ஹே கொஞ்சநேரம் எதுவும் பேசாமல் வா என்றவன் தங்கள் பேச்சு யார் காதிலும் விழாத அளவு தூரமாக அழைத்துச் சென்று அமர்ந்தான்.



பூவினி “உம் “ என்று இருக்கவும்.



என்ன வினி மேடம் என் மேல் கோபமா?? என்றான் சிறு சிரிப்புடன்.



ப்ச்..ஏன் மித்து அப்படி செய்தாய்.அவர் முகத்தில் எவ்வளவு தவிப்பு தெரிந்தது தெரியுமா??



தெரியும்.ஆனால் இந்த தவிப்பு நான் அப்படி செய்யாமல் விட்டிருந்தால் அவன் முகத்தில் வந்திருக்குமா??



பூவினி கேள்வியாக மித்திரனைப் பார்க்கவும்



எந்த ஒரு ஆணுக்குமே தன்னவளை இன்னொருத்தன் சொந்தம் கொண்டாடுவது உவப்பாக இருக்காது.உன் அத்தானுக்கு உன் மீது காதல் உண்டா என்று அறிந்து கொள்ள நான் கையாண்ட யுக்தி இது.இந்த ஆட்டத்தை முதலில் ஆரம்பித்தது நீ தான்.இப்போது நான் சற்று ஆடிப்பார்க்கிறேன்.நான் செய்வது எல்லாமே உன் நன்மைக்கு தான் வினி.பொறுத்திரு என்றான் நிதானமாக.



சற்று நேரம் அமைதியாக இருந்தவள்.பின்பு ஒரு பெருமூச்சை வெளியேற்றி சரி வா போகலாம்.என்றபடி எழுந்தாள்.



மணற்திட்டில் உட்கார்ந்த பெரியவர்களை நோக்கி இருவரும் நடந்தனர்.



கடலில் குளித்தது போதும் என சின்னவர்களை அதட்டி ஜெகநாதன் அழைத்துவர எல்லோரும் பெரியவர்களுடன் வந்து அமர்ந்தனர்.



முழுதும் நனைந்தபடி வந்த மகளைக் கண்ட மேனகா



ஏய் தாரணி அறிவில்லை.அவங்கள் தான் பையன்கள் கடலில் குளிக்கிறார்கள் என்றால் நீயும் இப்படி தோய்ந்து போய் வந்திருக்கிறாயே கொஞ்சமாச்சும் புத்தி வேண்டாம் என்று திட்டியபடி ஒரு துவாலையை எடுத்து நீட்டினார்.



இந்தா தலையை துடைத்துவிட்டு போர்த்திக்கொள்.உடை எல்லாம் தெப்பலாக நனைந்துவிட்டது என்றபடி.தாயின் திட்டையும் துவாலையையும் மௌனமாக வாங்கிய தாரணியின் பார்வை மித்திரனைக் குற்றம் சாட்டியது.ஆனாலும் வெளியே எதுவும் சொல்லவில்லை.



அதைக் கவனித்த மித்திரனின் கண்களில் மின்னல் அடித்தது.



ஆனால் அடுத்தகணம் அவன் கவனம் நிலவன் மீது திரும்பிவிட்டது.அவன் உண்பதற்கு தின்பண்டங்கள் வாங்கி வருவதாக எழுந்து செல்லவும் நில்லுங்க பாஸ் நானும் வருகிறேன் என்றபடி மித்திரனும் கூட எழுந்து சென்றான்.





சுட்ட சோளப் பொத்தி சுண்டல் இப்படி வழக்கமாக பீச் இல் வாங்கி கொறிக்கும் வகைகளை வாங்கியவன் கூடவே மாங்காய் சீவல்களை வாங்கவும் யாருக்கு பாஸ் மாங்காய்?? என்றான் மித்திரன்.



பதில் சொல்ல மனம் வராவிட்டாலும் வினிக்கு வேறு எதுவும் பிடிக்காது அவள் எப்போதும் பீச்க்கு வந்தால் மாங்காய் தான் விரும்பி உண்பாள் என்றான் ஒட்டாத குரலில் நிலவன்.



அதைக் கேட்ட மித்திரன் உங்களுக்கு அவளைப் பற்றி தெரியவில்லை பாஸ் நீங்கள் மற்றவர்களுக்கு தேவையானதை வாங்கி செல்லுங்கள் நான் அவளுக்கு பிடித்ததை வாங்கி வருகிறேன் என்றான்.



நிலவனுக்கு உள்ளே சுர் என்று கோபம் ஏறியது.அவளைப் பற்றி அவனுக்கு தெரியாதா?? பிறந்தது முதலே அவளைப் பற்றி அறிந்தவன் டா நான்.அவளுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காதென்று என்னைவிட இப்போது வந்த உனக்கு தெரியுமா என்று அவன் சட்டையைப் பற்றி உலுக்கவேண்டும் போல் இருந்தது.



பல்லைக் கடித்துக்கொண்டு எதுவும் பேசாமல் விலகி சென்றவன் அந்த மாங்காய் சீவல்களை வாங்கிச் செல்ல மறக்கவில்லை.



நிலவன் சென்ற சிறிது நேரத்தில் வேண்டுமென்றே அவித்த வேர்க்கடலையை வாங்கிகொண்டு சென்றான் மித்திரன்.



அவன் சென்றபோது வினி அந்த மாங்காய்ச் சீவல்களை சுவைத்துக்கொண்டிருந்தாள்.



ஏய் வினி உனக்கு பிடித்த அவித்த வேர்க்கடலை இந்தா



உவ்வே ..மித்து எனக்கு வேர்க்கடலையே பிடிக்காது மாங்காய் சீவல் தான் பிடிக்கும் என்றாள் பூவினி.



அந்தக் கணம் நிலவனின் பார்வை என்னை விட அவளைப் பற்றி அறிந்தவர் யார்!!! என்ற கர்வத்துடன் மித்திரனிடம் பாய்ந்து மீண்டது.



ஓரக்கண்னால் அதைக் காணாதது போல் கவனித்த மித்திரன் மௌனமாக சிரித்துக்கொண்டான்.