முத்தங்களின் முடிவில் - 1
சென்னையில் மிகப் பெரும் பணக்காரர்கள் மட்டும் குடியிருக்கும் அந்தப் பகுதியின் மத்தியில், ஒரு வீட்டின் முன் LED சீரியல் பல்புகளின் வெளிச்சமும், அலங்காரமும் கண்ணைப் பரித்தது.
வாய்க்குள் நுழையாத ஏதோ ஒரு ஆங்கில பாடல் அந்த இடத்தை நிறைத்துக் கொண்டிருந்தது. பல ரகமான கார்கள் அங்கிருந்த பார்க்கிங்க் ஏரியாவை நிறைத்துக் கொண்டிருந்தது.
“மேடம் இதுக்கு மேல கார் அலோவ் பண்ண மாட்டேங்கிறாங்க..” என்ற டிரைவரின் சத்தத்தில் நிகழ்வுக்கு வந்தாள் வர்த்தினி.
“ஹான் ஒன்னும் பிரச்சினை இல்ல.. நான் போய் கொடுத்துட்டு வந்துடுறேன்.. நீங்க கொஞ்சம் முன்னாடி தள்ளி நிறுத்திக்கோங்க..” என்று காரை விட்டு இறங்கினாள் வர்த்தினி என்ற பர்வத வர்த்தினி.
“பாரு கண்ணா.?” என்ற தந்தையின் கரகரப்பான குரலில்,
“ப்ளீஷ் ப்பா.. என்னை இதை செய்ய விடுங்க..” என்று தீர்மானமாக சொல்லிவிட, வழக்கம்போல மகளின் பேச்சுக்கு அமைதியாகிவிட்டார் முருகேசன்.
வெள்ளையில் பெரிய பெரிய பச்சைப் பூக்கள் நிறைத்த முல்முல் காட்டன் புடவை. பச்சையில் களம்கரி பிளவுஸ். காதில் கழுத்தில் நகையென்று எதுவுமில்லை. நெற்றியில் கருப்பில் சின்னதாய் ஒரு பொட்டு. அடர்ந்த கூந்தலை அள்ளிக் கொண்டையிட்டிருந்தாள். பார்க்கவே ஓவியம் போல் இருந்தாள்.
அந்த இடத்திற்கு சம்மந்தமே இல்லாதது போல் இருந்தாலும், அவள் அழகு அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும்.
அந்த வீட்டின் முன் நின்ற செக்யூரிடியிடம் “ருத்ரன் சாரை பார்க்கணும்.” என்றாள் நிமிர்வாகவே.
அவளின் தோற்றத்தைப் பார்த்து நக்கலாக சிரித்தவன் “சார் இப்போ பிசியா இருக்கார். இன்னைக்கு அவரோட எங்கேஜ்மென்ட் நடந்துட்டு இருக்கு. அதை விட்டுட்டு உங்களை பார்க்க வரனுமா?” என்றான் கிண்டலாக.
அதை சகித்துக் கொண்டு “ஸாரி.. நாங்க ஊர்ல இருந்து வரோம். இங்க ஃபங்க்சன் தெரிஞ்சிருந்தா நாளைக்கு கூட வந்திருப்போம். இந்த கார்டை ருத்ரன் சார்கிட்ட கொடுங்க. மீட் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டா நாங்க கிளம்பிடுறோம்..” என்று பொறுமையாகவே சொன்னாள் வர்த்தினி.
அந்த காவலாளிக்கு எரிச்சல் தான். ஆனால் ஒருவேளை நிஜமாகவே தெரிந்தவர்களாக இருந்தால், தன் வேலை போய்விடுமே என்ற பயத்தில், அவளின் கார்டை வாங்கிக் கொண்டு உள்ளே ஓடினான்.
அந்த கேட்டின் ஓரமாய் நின்றிருந்த வர்த்தினி, உள்ளே சென்று கொண்டிருக்கும் விருந்தாளிகளையும், கார்களையும் வேடிக்கப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
செக்யூரிடி என்றாலும் உடனே ருத்ரனை பார்த்துவிட முடியாது. அங்கு மேற்பார்வை பார்ப்பவரிடம் சொல்ல வேண்டும். அவர் விசாரித்து அதன் பிறகுதான் முதலாளியிடம் சொல்லப்படும்.
அதனால் அங்கு மேற்பார்வை செய்யும் நந்தனிடம் சென்றார் செக்யூரிடி. அவர் விவரம் சொல்ல, கார்டை வாங்கிப் பார்த்தான் நந்தன்.
டாக்டர். பர்வத வர்த்தினி. குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர். திண்டுக்கல். என்று போட்டிருக்க, சில நாட்களுக்கு முன் ருத்ரன் திண்டுக்கல் சென்று வந்ததும் ஞாபகம் வர, “பாஸ்கிட்ட கேட்டுட்டு வரேன்..” என ருத்ரனின் அறையை நோக்கிச் சென்றான் நந்தன்.
சினிமா பிரபலம் முதல் அரசியல் பிரபலம் வரை அனைவரும் வந்து கொண்டிருக்க, வாசலில் இருந்து வரவேற்க வேண்டிய ருத்ரன் அறைக்குள் அடைந்து கிடந்தான்.
நந்தனின் அழைப்பில் கதவைத் திறக்க “ஸாரி பாஸ்..” என்று தன் கையில் இருந்த கார்டை கொடுத்து, “உங்களைப் பார்க்க வந்துருக்காங்க.. செக்யூரிடி வெய்ட் பண்ண சொல்லிருக்கார்..” என்றதும்,
“ம்ம் டென் மினிட்ஸ்ல வந்துடுறேன்.” என்றான் உணர்ச்சியற்ற இறுக்கமான குரலில்.
நந்தன் அகன்றதுமே தன் மொபைலில் சிசிடிவ் கேமராவை ஆன் செய்து வர்த்தினி நிற்கு இடத்தை ஜூம் செய்து பார்த்தான். பத்து நாட்களில் நன்றாக மெலிந்திருந்தாள். இந்த புடவையையும் கொண்டையயும் விடவே மாட்டாளா.. அந்த முடியை விரிச்சு விட்டாதான் இவளுக்கு என்ன? ஏன் இவ மட்டும் வந்துருக்கா? ஏன் வீட்டுக்குள்ள வராம வெளியே நிக்கிறா? இவளோட அப்பா எங்க?’ என அவளின் முகத்தைப் பார்த்தே யோசித்துக் கொண்டிருந்தான்.
புடவையை சிங்கில் ப்ளாட் விட்டிருப்பாள் போல, இப்போது மொத்தமாக ஒதுக்கியிருந்தாள். அந்த கொண்டைக்கும், அந்த புடவைக்கும் அவனுக்குள் தூங்கிக் கொண்டிருந்த ரசிகன் விழித்துக் கொண்டான்.
ஆனால் அவள் எதற்காக வந்திருக்கிறாளோ என்று நினைக்கும் போதே உடல் இறுகித்தான் போனது.
தன் உடையை பார்த்தான். விழாவுக்காக, பிரபலமான ஆடை வடிவமைப்பாளாரால் மிகவும் விலையுயர்ந்த விலையில் தயாரிக்கப்பட்டிருந்தது.
அவளிடம் கோபப்ப்டக்கூடாது என்று தன்னை சமன் செய்து கொண்டே அறையை விட்டு வெளியில் வந்தான்.
அவனைப் பார்த்ததும் விழாவுக்கு வந்த அனைவரும் அவனைச் சுற்றிக் கொள்ள, அனைவரிடமும் சம்பிரதாயமாக இரண்டு நிமிடம் பேசி என அவன் வெளியில் வர அரை மணி நேரம் ஆகியிருந்தது.
நந்தன் அவளை கார்டனின் மறுபக்கம் அமர வைத்திருந்தான். நீண்ட எட்டுக்களை வைத்து அவளிடம் வேகமாக வந்து நின்றான் ருத்ரன்.
அவனைப் பார்த்ததும் எழுந்து நின்றவளுக்கு, நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக் கொண்டது.
ஒரு முடிவை எடுத்துவிட்டு தைரியமாக இங்கு வந்துவிட்டாள்தான். ஆனால் அதை அவனிடம் சொல்லக்கூடிய தைரியம் இப்போது காணாமல் போய்விட்டது.
‘சிட்..’ என்பது போல் தலையசைத்துவிட்டு, அவளுக்கு எதிரில் அமர்ந்தான்.
நிமிடங்கள் கரைய “எப்போதான் பேசுவ.” என்றவனின் கனீர் குரலில் திடுக்கிட்டவள், தன் பையிலிருந்த அந்த சாவிக் கொத்தை எடுத்து அங்கு வைத்தாள்.
“நீங்க சொன்ன மாதிரி வீட்டை காலி பண்ணிட்டோம். சாவி கொடுக்கத்தான் வந்தோம்..” என்றாள் அவனைப் பார்த்து..
“ம்ம் இப்போ எங்க இருக்கீங்க?” என்றான் சாவியை கையில் எடுத்தபடி,
“எங்க வீட்டுக்கு போயிட்டோம்..” என்றவள் எழுந்து கொண்டே, “சாரி இன்னைக்கு இந்த ஃபங்க்ஷன்னு தெரியாது. தெரிஞ்சிருந்தா ரெண்டு நாள் கழிச்சுக் கூட வந்திருப்போம்..” என்றாள் அவனைப் பார்த்து.
“இட்ஸ் ஓக்கே.. நான் உனக்கு இன்ஃபார்ம பண்ணல தானே.. கம் லெட்ஸ் ஜாய்ன் மை எங்கேஜ்மென்ட்.?” என்றதும் பதறுவாள் என்று நினைத்திருப்பான் போல.
ஆனால் அவளோ “சாரி பாஸ்.. அப்பா வெளிய வெய்ட் பண்ணிட்டு இருக்கார். அவருக்கு இப்போ இன்சுலின் போடனும். சாப்பாடு கொடுக்கனும்.. இன்னொரு நாள் கண்டிப்பா மீட் பண்ணலாம்..” என்று சிரிக்க,
“குட்… ஓக்கே இங்க யார் வீட்டுல இருப்பீங்க..” என்றான் யோசனையாக.
“பாஸ். என்னோட அபார்ட்மென்ட் இங்கதான இருக்கு. மறந்துட்டீங்களா?” என்றவளின் புன்னகை அவள் கண்ணை எட்டவில்லை என அவனுக்கு தெரியாதா?
“ம்ம் அப்போ இனி இங்கதானா?” என்றான் புருவம் சுருக்கி
“ஆமாம்.. அப்பாவை இனி தனியா விட முடியாது இல்லையா?” என்றவள்.. “ஷல் ஐ லீவ்.? என அவனைப் பார்த்து நிற்க,
“ம்ம்.. என்கிட்ட நீ பொய் சொல்லலதானே” என்றான் தீர்க்கமாக.
“அப்படியெல்லாம் இல்ல.. அப்படியே இருந்தாலும் இதெல்லாம் சொல்லனும், சொல்லக்கூடாதுனு உங்க அக்ரிமென்ட்ல இல்ல. அன்ட் அந்த அக்ரிமென்ட் முடிஞ்சே பத்து நாளாகிடுச்சு.. இப்போ அதை கேட்குற உரிமையும் உங்களுக்கு இல்ல.” என புன்னைக்க,
அந்த புன்னகைக்கு பின் இருக்கும் வலி அவன் அறியாததா?
“ம்ம் ரொம்ப யோசிக்காதீங்க பாஸ். டுடே இஸ் யுவர் டே.. என்ஜாய் பண்ணுங்க..” என புன்னகையுடன் அவனிடமிருந்து தள்ளி நடந்தாள்.
திரும்பிக் கூட பார்க்காமல் செல்லும் அவளையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தான் ருத்ரன்.
எல்லாம் சில் நொடிகள் தான். இரண்டே எட்டில் அவளைப் பிடித்து தன்னோடு இறுக்கினான்.
அவள் திமிறாமல் அவனையே பார்க்க “ஒன் லாஸ்ட் டைம்” என அவள் இதழில் தன்னிதழை பொறுத்த, தடுக்காமல் தானும் அவனை அனைத்து இசைந்துக் கொடுத்தாள்.
என் கோபங்களும் தாபங்களும்
கதிரவனைக் கண்ட
பனியாய் உருகிதான் போகிறது,
அவன் இதமாய் கட்டி அணைத்து
எந்தன் இதழோரம்
இதழ் முத்தம் பதிக்கையில்!
முத்தங்களின் முடிவில் தான்
முடிவற்ற காதல் தொடங்குகிறது...
எத்தனை நிமிடங்கள் அவர்களின் மோனத்தில் கழிந்ததோ, ருத்ரனின் அலைபேசியின் அழைப்பில் தான் நிக்ழவுக்கு வந்தனர் இருவரும்.
“சாரி..” என்று இருவரும் ஒரு ஃபார்மாலிடிக்காக கூட சொல்லிக் கொள்ளவில்லை.
சில நொடி ருத்ரனை நேருக்கு நேராக பார்த்தவள், அவன் எதிர்பாராத நேரம் மீண்டும் அவனை அனைத்து, அவன் அனைக்க நினைக்கும் நேரம், அவனைத் தள்ளிவிட்டு வேகமாக அங்கிருந்து வெளியேறினாள் வர்த்தினி.
என்ன செய்தாள் என அவன் அறிந்த நொடி, கேட்டைத் தாண்டி வெளியில் சென்றிருந்தாள் வர்த்தினி.
சற்று நேரம் ருத்ரனிடம் அமைதி. எதையோ திட்டமிடும் யோசனை. அப்போது அங்கு வந்த நந்தனிடம் “இவங்களை வாட்ச் பண்ண சொல்லு?” என்றான் ருத்ரன்.
“ஓக்கே பாஸ்.. இப்போ உள்ள போகலாமா? ஹாசினி மேம் வந்து ரொம்ப நேரமாச்சு.”
“ஹான் ஸ்யூர்.” என முன்னே நடக்க ஆரம்பித்தான் ருத்ரன். அடுத்த நான்கு மணி நேரம் போனதே தெரியவில்லை அவனுக்கு.
வந்திருந்த அனைவரிடமும் பேசி, சாப்பிட வைத்து, தொழில் சார்ந்து பேசி என நேரம் பறந்து சென்றது.
இதில் ஹாசினியுடனான அவனது நிச்சயதார்த்தமும் முடிந்திருந்தது.
வந்திருந்த அனைவரும் கிளம்ப, ஹாசினியின் குடும்பமும் கடைசியாக கிளம்பியது.
அதுவரை ஆர்ப்பாட்டங்களை சுமந்த அந்த வீடு, இப்போது ஆதரவற்ற குழந்தை போல் அநாதையாக நின்றிருந்தது.
வேலைக்காரர்கள் வீட்டை ஒதுங்க வைக்கும் வேலைகளைப் பார்க்க, நந்தன் அவர்களை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.
மேலை நாட்டு நாகரீகம்தான் இந்த பார்ட்டியில் அதிகம். ஆனால் ருத்ரன் அதை கையால் கூட தொடமாட்டான்.
மது மாது இரண்டுமே மனிதனை அழிவை நோக்கி இழுத்துச் செல்லும் போதை. போதைக்கு அடிமையானால் அதிலிருந்து மீளவே முடியாது என்று முடித்து விடுவான்.
அவன் தொழிலுக்கு எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். அவன் போதையில் இருக்கும் நேரத்தை எதிரிகள் பயன்படுத்தி அவனை என்ன வேண்டுமானலும் செய்து விடலாம். அதற்காக எப்போதும் கவனமாகவே இருப்பான்.
ஆம் அவனுக்கு இந்த துறையில் எதிரிகள் அதிகம். அவனை எப்போது அழிக்கலாம் என காத்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்.
அதனால் எப்போதும் தெளிவாகவும், கவனமாகவும் இருப்பான்.
இப்போதும் மிகத் தெளிவாக வந்தவர்களை விட்டு விட்டு வராதவர்களின் லிஸ்டை எடுத்துக் கொண்டிருந்தான்.
இனி அவர்களுக்கு, அவன் வழியில் பாடம் கற்பித்துக் கொடுப்பான்.
ருத்ரன்.. ருத்ரேஸ்வரன் ஃபில்ம் டிஸ்ட்ரிபியுட்டர்.. மிகவும் சிறிய அளவில் தான் ஆரம்பித்தான். குறைவான பட்ஜெட்டி எடுக்கப்படும் படங்களை வாங்கி, மார்க்கெட்டிங்க் செய்து கொள்ளை லாபம் பார்த்து விடுவான்.
முதல் படம் அவன் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை என்றாலும், அடுத்தடுத்து அவனுக்கு வெற்றியை மட்டும் தான் ருசித்தான்.
பணம் புழங்க ஆரம்பிக்கவும், ஃபைனான்ஸ் செய்ய ஆரம்பித்தான். அவனிடம் நேர்மையாக பணம் வாங்கி செலுத்துபவர்களும் இருக்கிறார்கள்.
இதோ இப்போது தருகிறேன் என சொல்லி ஏமாற்றுபவர்களும் இருக்கிறார்கள்.
ஆனால் அவன் யாரிடமும் இதுவரை ஏமாந்ததில்லை. ஏமாற்ற நினைத்தால், அடுத்து அவர்கள் அப்படி நினைக்க உயிரோடு இருந்ததில்லை.
அதனாலே ருத்ரன் என்றாலே அனைவருக்கும் பயம்.. அவனிடம் வம்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காகவே இந்த நிச்சயத்திற்கு வந்தவர்களும் உண்டு.
ஹாசினியின் தந்தை விஸ்வநாதன், ருத்ரனின் மிகவும் மோசமான ஒரு சந்தர்ப்பத்தில் அவனுக்கு உதவியவர். அந்த நன்றியை காட்டும் விதமாக ஹாசினியை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டான்.
அவருக்குமே ருத்ரனை விட மனமில்லை. அவர் பார்த்து வளர்ந்த பையன். ஒழுக்கத்திற்கு பெயர் போனவன். இந்த சினி ஃபீல்டில் இப்போதைய காலத்தில் இத்தனை ஒழுக்கமான ஒருவனை கண்டு பிடிப்பது அரிதிலும் அரிது. அப்படிப்பட்டவன் தனக்கு மருமகனாக வருவதில் அவருக்குமே ஏகப்பட்ட பெருமை.
அடுத்த நாள் காலையில் மிகவும் பதட்டமாக வந்து நின்றான் நந்தன்.
“பாஸ்.. என்று திணற,
“என்னடா.. ஹாசினி அவ பாய் ஃப்ரண்டோட ஓடி போயிட்டாளா?” என்றான் கிண்டலாக.
“பாஸ் உங்களுக்கு எப்படி?” என முழிக்க
“ம்ச் அனுப்பி வச்சவனே நான்தாண்டா.. அவ நான் வளர்த்த பொண்ணு டா.. அவளை எப்படி நான்..? ஹ்ம்ம் லவ் பண்றேன்னு சொல்லும் போது உக்காந்து அட்வைஸ் பண்ண முடியுமா? பெரியவர் பிரச்சினை இல்லை. ஆனா அந்த கௌதம் இருக்கானே அவன் சும்மா இருக்கமாட்டான். அதான் அவனுக்கு சந்தேகம் வராத அளவுக்கு ப்ளான் பண்ணி அனுப்பி வச்சேன்..” என்றான் கண்ணச் சிமிட்டி,
“பாஸ்.. கௌதம் சும்மா இருக்க மாட்டான்..”
“அவனுக்கு யார்டா சான்ஸ் கொடுக்க போறா? நான் பார்த்துக்கிறேன்..” என்ற நேரம் நந்தனுக்கு போன் வர, எடுத்துப் பேசியவன் முகம் அதிர்ச்சிக்குள்ளாகியது.
“என்ன டா..?” என ருத்ரன் அதட்ட,
“பாச்.. வர்த்தினி மேடம் அந்த அபார்ட்மென்ட்ல இல்லையாம்? நைட் அங்கதான் போயிருக்காங்க. மார்னிங்க் அங்க இல்லன்னு சொல்றாங்க.” என பதட்டமாக கூற,
“நான் நினைச்சேன்..?” என்ற ருத்ரன் அப்படியே அமர்ந்துவிட்டான்.
அவன் முகம் அவன் பெயருக்கு ஏற்றார் போல ருத்ரமாக மாறியிருந்தது.