நிலவு _ 8
சேரா வந்தனாவைக் கண்டு திகைத்து தான் இனியனுடன் பேசியதைக் கண்டு என்ன நினைத்திருப்பாளோ?? என்ற சங்கடத்துடன் அவள் எதுவும் கேட்கும் முன்பே தானே விளக்கம் கொடுத்துவிட எண்ணி வாயைத்திறக்கவும்
ஏன் சேரா உனக்கு கொஞ்சமாவது மனச்சாட்சி இருக்கிறதா?? என்றாள் வந்தனா கடுப்புடன் அவளை முந்திக்கொண்டு.
அறிந்தவன் என்று தவிர்க்க முடியாமல் தான் இனியனிடம் பேசியதற்கும் மனச்சாட்சிக்கும் என்ன சம்பந்தமோ என்று இவள் குழம்பும் போதே
நான் உன்னைவிட்டு எதையும் உண்ண முடியாமல் தளம் தளமாய் சுற்றிய களைப்புடன் உன்னுடன் சேர்ந்து எதையாவது வயிற்றுக்கும் ஈயலாம் என்ற எண்ணத்தில் உன்னைத் தேடி வந்தால் நீ கொஞ்சம் கூட என்னைப்பற்றி கவலை கொள்ளாமல் மொக்கிக் கொண்டிருக்கிறாய். நீயெல்லாம் ஒரு பிரெண்ட்டாடி ??
சேராவுக்கு சிரிப்பே வந்துவிட்டது. இதற்கா இந்த பார்வை பார்த்தாள்!! எருமை.!! நிஜமாகவே சாரி வந்தனா. எதிர்பாராமால் இனியன் அண்ணாவை சந்திக்க நேர்ந்தது.பேசிக்கொண்டிருக்கும் போதே அவர் ஆர்டர் பண்ணிவிட்டார்.மறுக்க முடியவில்லை.சாரி.
ஹ்ம்ம் .பிழைச்சு போ.ஆனால் நான் இப்போது எதையாவது வயிற்றுக்குள் போடாமல் இங்கிருந்து அசைய மாட்டேன். என்றவள் பேரரை அழைத்து தனக்கான சிற்றுண்டிகளை ஆர்டர் செய்தாள்.
உனக்கும் ஏதாச்சும் சொல்லவா சேரா??
ம்ஹும்..வயிறு புல். இதற்கு மேல் எதுவும் முடியாது. நீ சாப்பிடு நான் காத்திருக்கிறேன்.
ஹ்ம்ம் kkk. ஆமாம் இவன் தானே நிலா அன்று இல்ல விழாவிற்கு வந்தவன்.
ஏய் மரியாதை கொடுத்து பேசுடி.வயதில் பெரியவர்.
ஆமாம் என்ன ஒரு எழுபது எண்பது வருமா?? அடப்போம்மா. என்ன ஆக கூடியது ஒரு ஐந்து வயது பெரியவனாய் இருப்பானா?? ஆள்வேறு பார்க்க செம ஹான்ட்சம் அஹ் இருக்கான்.அவனைப் போய் அவர் இவர்னு பேசுறது கேட்கவே சகிக்கல சேரா.
ஏய் வந்தனா உன் விளையாட்டுத் தனத்தை இதிலேயும் காட்டாதே?? அவர் என் அண்ணனின் நண்பன்.
உன்னோட அண்ணாவின் தோழன் தானே?? அண்ணா இல்லையே?? அண்ணாவின் பிரெண்டை சைட் அடிக்க கூடாதுன்னு ஏதாச்சும் ரூல்ஸ் இருக்கா என்ன??
ஏய் ...
ஏய் என்னப்பா இவ்ளோ டென்ஷன் ஆகிறாய்??? இப்போது சொல்கிறேன் கேட்டுக்கோ உன் அண்ணாவின் நண்பன் என்ன உன் அண்ணா பார்க்கிற மாதிரி இருந்தா அவனையும் சைட் அடிப்பேன்.
வந்தனா கூறி முடித்த நொடி உளறாதே முட்டாள் என்ற சேராவின் குரல் அதட்டலாய் சற்று ஓங்கி ஒலித்தது.அவள் முகம் செந்தணல் போல் சிவந்து ஜொலித்தது கோபத்தில்.
வந்தனா அதிர்ந்துவிட்டாள்.அவள் எதையும் பேச வேண்டுமென்று எண்ணிப் பேசவில்லையே!!!! கல்லூரிக் காலத்தில் தோழிகளுடன் எப்படி நகைச்சுவையாக கேலி பேசி சிரித்தாளோ அதே போலத்தானே பேசினாள்.அவள் பேச்சு வெறும் நகைச்சுவைப் பேச்சுத்தான்.மற்றும்படி சேராவுக்கு ஒரு அண்ணன் இருக்கிறான் என்பது மட்டுமே அவளுக்கு தெரியும்.அதுவும் போனவாரம் தான் தெரிந்தது.அவனைப் பற்றி வேறு எதுவுமே தெரியாது.. அப்படி இருக்கும் போது அவள் முழுக்க முழுக்க விளையாட்டிற்காய் பேசிய பேச்சில் சேரா இவ்வளவு தூரம் கோபம் கொள்ள என்ன இருக்கிறது???
அருகிலிருந்த ஒருசிலர் திரும்பி பார்க்கவும் வந்தனா அவமானமாய் உணர்ந்தாள்.ச்சே ...இவளைப் பற்றித் தெரிந்திருந்தும் சற்று இலகுவாக பேசுகிறாளே என்று அதிகமாக பேசியது அவள் தவறுதான்.வந்தனா கன்றிச் சிவந்த முகத்துடன் தலை குனித்து ஜூசைக் குடிக்க முயன்றாள்.
அன்று விடுதி திரும்பும் போதும் இருவருக்கிடையிலும் பயங்கர மௌனம் நிலவியது.அது விடுதியிலும் தொடர்ந்தது. சேராவிடம் பார்வையால் கூட விடைபெறாமல் வந்தனா விடுவிடென வேகத்துடன் தனது அறைக்குள் நுழைந்துவிட்டாள்.
தளர்ந்த நடையுடன் தனது அறைக்குள் நுழைந்த சேராவின் விழிகளில் இருந்து பொலபொலவென சில பல நீர்மணிகள் பிரசவித்து அவள் ஆடையில் பட்டுத் தெறித்து ஆவியாகின.
\
வாப்பா இனியா.. என்ன இன்று சீக்கிரம் வந்துவிட்டாய்??
ப்ச் ..லேசான தலைவலிம்மா.
எதற்கு தலை வலிக்கிறது மதியம் என்ன சாப்பிட்டாய்?? இரு இஞ்சி டீ எடுத்து வருகிறேன்.எது சாப்பிட்டிருந்தாலும் ஜீரணம் ஆகிவிடும்.
ம்மா.. இஞ்சி டீ வேணாம் மா. வெறும் ப்ளாக் டீ போதும்.மதியம் ஹெவியாக எதுவும் உண்ணவில்லை.சொல்லப்போனால் மதியம் சாப்பாடே சாப்பிடவில்லை.வெறும் ஷோர்ட்ஈட்ஸ் தான்.
ஏன்பா?? அது தான் தலைவலிக்கிறது போல இரு தோசை ஊத்தி எடுத்து வருகிறேன்.
இல்லம்மா பசிலாம் இல்லை.ஏதோ ஒரு குழப்பம் அது தான் லேசான தலைவலி.
ஹ்ம்ம்..எப்போது பார்த்தாலும் தொழில் தொழில் என்று அதைப் பற்றியே சிந்தித்தால் மண்டை சூடேறாமல் என்ன பண்ணும்.
இது தொழில் பற்றியது இல்லை நிலா பற்றியது என்று கூற முடியாமல் மௌனம் காத்தான் இனியன்.
அவன் தாய் கமலா அவனுக்கான “டீ”யினை தயாரிக்க உள்ளே சென்றுவிட அதுவரை அமைதியாய் அவர்கள் இருவரின் பேச்சினைக் கேட்டபடியிருந்த தந்தை ராமமூர்த்தி
ஏன் இனியா மதியம் சாப்பாடு சாப்பிடவில்லை?? வேலை பிஸியில் மறந்துவிட்டாயா?? சுவரிருந்தால் தான் பா சித்திரம் வரையலாம் என்றார் அமைதியாக.
அவர் எப்போதுமே அப்படித்தான் அவன் தாயைப் போல எந்த உணர்வையும் படபடவென்று பேசி வெளிப்படுத்த மாட்டார்.ஆனால் ஆழ்ந்து கவனித்து அவர் பேசும் ஒவ்வொரு பேச்சும் சரியானதாகத் தான் இருக்கும்.
இப்போதும் அவர் குரலில் இருந்த அக்கறையும் பரிவும் புரிய எப்போதும் என்று இல்லைப்பா.இன்று வசந்த் அவன் பேபி ஓட birthday வருகிறது so அதற்கு சில திங்க்ஸ் டிரஸ் எல்லாம் எடுக்கணும்னு ஷாப்பிங் கூப்பிட்டிருந்தான் எனக்கும் ஒரு change ஆ இருக்குமேன்னு போனேன்பா.அங்க நிலாவ மீட் பண்ணினேன்.அவகூட பேசிட்டே ஷோர்டீட்ஸ் சாப்பிட்டதில அப்புறம் பசி எடுக்கல.அப்புறம் ஆபீஸ் வந்ததும் வேலை கழுத்தை பிடிச்சுடுச்சு.
ஹ்ம்ம்..வசந்த்துக்கும் உன் வயசுதான் இனியா. அவன் திருமணமாகி ஒரு குழந்தைக்கு தந்தையும் ஆகிட்டான்.நீ இவ்ளோ நாளும் தொழில் தொடங்கணும் அதை நல்லபடியா ரன் பண்ணனும் அப்படின்னு காரணம் சொன்ன. உன் பேச்சில் நியாயம் இருந்ததால் நாங்களும் எதுவும் சொல்லல.இப்போ தான் எல்லாம் நல்லபடியா செட்டில் ஆயாச்சே.. இனியாவது உன் திருமணத்தைப் பற்றி ஜோசி. உன் அம்மா ஏற்கனவே அந்தப் பெண்ணைப் பார்ப்போமா இந்தப் பெண்ணைப் பார்ப்போமா என்று ஆரம்பித்து விட்டாள். நீ ம்ம் என்று சொல்ல வேண்டியது தான். என்னப்பா சொல்கிறாய்.
நிலாவை மறுபடியும் சந்திப்பதற்கு முன்பு என்றால் உடனே சரி என்று சொல்லி இருப்பானோ என்னவோ?? இப்போது ஏனோ அவனுக்கு சம்மதம் சொல்லத் தோன்றவில்லை. நிலாவின் வெறுமையான முகமே மனதில் நின்று இம்சை செய்தது.
பார்க்கலாம் பா.என்ற ஒற்றை வார்த்தையுடன் மாடி ஏறினான் இனியன்.
மகனின் இந்த பதிலுக்கு என்ன அர்த்தம் என்று புரியாமல் குழம்பி எப்போதும் ஒருவித கம்பீரத்துடன் படிகளை இரண்டிரண்டாக தாவி ஏறும் மகனின் தளர்ந்த நடையையே ஜோசனையுடன் பார்த்தபடி இருந்தார் ராமமூர்த்தி.
அதன் பின் வந்த நாட்கள் இயல்பாக ஓடி மறைய அந்த வாரத்தின் நடுப்பகுதியில் சென்னைக்கு கிளம்பினான் இனியன்.
ஏன்பா நீயே போக வேண்டுமா?? வழக்கம் போல வசந்த் அல்லது வேறு யாரையாவது அனுப்பலாமே??
வசந்த் அவன் பேபியின் birthday party arrangements இல் busy மா.இது முக்கியமான மெசினரீஸ் நானே நேரடியாக போய் பார்க்க வேண்டும் மா. அத்தோடு நான் சென்னைக்கு போவதற்கு இன்னொரு முக்கிய ரீசன் சேரனை மீட் பண்ணனும்.அவனை பார்த்து எத்தனை காலம் ஆகிற்று.இடையில் சில தடவை சென்னை சென்ற போதும் என்னுடைய தொழில் பிஸியில் அவனை மீட் பண்ண முடியல.போனதும் வந்ததுமாக வந்துவிட்டேன். இந்த தடவை போய் கண்டிப்பாக அவனை சந்திக்க வேண்டும். குறைந்தது ஒரு வாரமாவது சென்னையில் இருப்பேன். அப்பா இங்கே அனைத்தையும் வசந்த் பார்த்துக்கொள்வான் இடையிடையே நீங்களும் அவனுக்கு உதவி செய்யுங்கள்.
கண்டிப்பாய் பா. நீ நல்லபடியாக சென்று உன்னுடைய வேலைகளை முடித்துவிட்டு வா.
தந்தையும் தாயும் மகிழ்ச்சியாக விடைகொடுக்க நிம்மதியுடன் சென்னைக்கு பயணமானான் இனியன்.
...........................................
வந்தனாவின் ஒரு வித விலகல் அந்த ஒரு வாரத்தைக் கடந்தும் தொடர சேரா தான் தவித்துப் போனாள். வந்தனா சேராவிடம் கோபத்தைக் காட்டவில்லை எரிந்து விழவில்லை.ஏன் சுத்தமாக பேசாமலும் இருக்கவில்லை. ஆனால் வழக்கம் போல கலகலவென்று பேசிவிடவும் இல்லை.
முன்பு சேரா பேசுகிறாளோ இல்லையோ??? தான் தன்னுடைய இயல்பு தொலைக்காமல் கலகலவென்று எதையாவது தொணதொணத்து சேராவையும் வலிய சில வார்த்தைகள் பேச வைப்பவள் இப்போது தன்னுடைய அந்த தன்மையை மாற்றிக் கொண்டாள்.தேவைக்கு ஏற்றபடி ஒருசில வார்த்தைகளே பேசினாள்.மற்றும்படி சேரா ஏன் என்றால் ஏன்?? அவ்வளவே.
சேராவிற்கும் தன்னுடைய தவறு புரிந்தது.அப்படி ஒரு பொது இடத்தில் தோழியே ஆனாலும் அப்படி உரத்த குரலில் திட்டியிருக்க கூடாது தான். ஆனால் அவளுக்கு வந்த கட்டுக்கடங்காத கோபத்தில் என்ன செய்கிறோம் என்றே அறியாமல் அல்லவா திட்டினாள். அதுவும் எதற்காக?? அவள் மீது கொண்ட அக்கறையினால் அல்லவோ?? இது அவளுக்கு புரியுமா??
வந்தனா தன்னுடைய பேச்சைக் குறைத்து அவளிடம் விலகலைக் காட்டிய அந்த நாட்களில் தான் சேராவிற்கு புரிந்தது அவளுடைய நட்பும் அந்த பேச்சும் சிரிப்பும் தனக்கு எவ்வளவு முக்கியம் என்று.அதற்கு மேலும் வந்தனாவின் விலகலைத் தாங்க முடியாமல் போய்விட அன்று பள்ளியிலிருந்து வந்து வழக்கம் போல அமைதியாக தனது அறைக்குள் செல்லத் திரும்பிய வந்தனாவின் கைபற்றி தடுத்த சேரா sorry டி என்றாள் தழுதழுத்த குரலில்.
வந்தனாவும் லேசாக கண்கலங்க அமைதியாய் நிற்கவும் தொடர்ந்து அன்று உன்னைத் திட்டவேண்டும் என்று திட்டவில்லைடி என்னை மீறி வந்த கோபத்தில் ஏதோ சொல்லிவிட்டேன்.ஆனால் என்னுடைய அந்த கோபம் முழுக்க முழுக்க உன் மீது கொண்ட அக்கறையால் தான் என்றால் நீ நம்புவாயா வந்தனா?? ஆனால் அது தான் நிஜம். உன்னைப் போன்ற ஒரு கள்ளம் கபடம் அற்ற புனிதமான பெண்ணால் திரும்பி பார்க்க கூட தகுதியற்றவன் டி என் அண்ணன். அவனைப் பேச்சில் இழுத்து நீ அப்படிப் பேசவும் கோபம் வந்துவிட்டது அது தான் திட்டிவிட்டேன் என்றவள் அதுவரை பிரமிப்புடன் நின்ற வந்தனா சுதாரித்து சேரா என திகைக்கவும் இதற்கு மேல் எதுவும் கேட்காதே என்ற கேவலுடன் தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
சற்று நேரம் திகைத்து நின்ற வந்தனாவும் கண்ணீரைத் துடைத்தபடி தனது அறைக்குள் சென்றாள்.
அந்த சம்பவத்திற்கு பின் தோழிகள் இருவருக்கும் இடையேயான நட்பும் நெருக்கமும் அதிகரித்திருப்பதாய் இருவரும் உணர்ந்தனர்.இயல்பாக பேசிக்கொண்டனர். எனினும் வந்தனா அன்று நிலா கூறியதைப் பற்றி அதற்கு மேல் எதையும் விசாரிக்கவில்லை.அது நல்ல நட்புக்கு அழகும் இல்லையே!!!!!
எதையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இறுக்கத்துடன் வாழும் சேரா அன்று அவளிடம் அதைக் கூறினாள் என்றால் அவள் மீது சேரா கொண்ட நட்புக்காகவன்றோ?? அந்த நட்பை வந்தனா கௌரவிக்க வேண்டாமா?? சேராவாக கூற விரும்பாத எதையும் துருவிக் கேட்டு அவளைச் சங்கடம் கொள்ளச் செய்ய வந்தனா விரும்பவில்லை.
அவர்கள் நட்பு அந்த சம்பவத்திற்கு பின் மேலும் மெருகு பெற்று தொடர்ந்தது.