தளிர் 55
“பாஸ் பேபி ஸேஃப்.” என்றக் குரலைக் கேட்டதும், “ஊப்ஸ்…” என்று பெருமூச்சைவிட்டு, “தேங்க் காட்!” என்று தன் கோபத்தையும் பயத்தையும் வெளியேற்றினான் விக்ரம்.
“அழுதாளா பாப்பா?” என்றான் அதுவரை இருந்த இறுக்கங்கள் எல்லாம் கரைந்து போன மென்மையானக் குரலில்.
“ம்ம்… எஸ் பாஸ், மேடத்தைக் கேட்டு ஒரே அழுகை. நல்ல வேளையா என் வைஃப் கூட இருக்கவும் சமாளிக்க முடிஞ்சது பாஸ். இல்லைன்னா ரொம்பவே கஷ்டமாகிருக்கும், இப்போ பேபி ஓகே. தூங்குறாங்க, நீங்க சொன்னதும் நான் போய் பேபிய மேடம்கிட்ட விட்டுட்டு வந்துடுறேன்.” என்றதும்,
“நோ…” என்றுக் கர்ஜித்தவன், “எல்லாமே தனியா பார்த்துக்குறேன்னு கிளம்பி போனா இல்ல, இப்போ தனியாவே தேடட்டும்.” என்றவன் போனை வைத்துவிட்டான் அடங்காத கோபத்தோடு.
அறைக்குள்ளே வேகவேகமாக நடந்தான். அங்கிருந்த சுவற்றில் தன் கையை ஓங்கி குத்தியபடியே நின்றான். உடல் இறுக்கமும் குறையவில்லை, கோபமும் குறையவில்லை. குழந்தையைத் தூக்கிவிட்டார்கள் எனத் தெரிந்த நொடி, மொத்தமாக சாய்ந்தேவிட்டான் அந்த ஆண்மகன்.
கொஞ்சம் கூட அவர்களைப் பற்றி நினைக்காமல், மற்றவர்களின் உணர்வுகளை மதிக்காமல், குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடிப்போனவளை நினைத்து வெறுப்பானது விக்ரமிற்கு. இவளைப் பாவம் பார்த்து விட்டதே தவறு என எரிச்சலானான்.
தனக்கான உறவுகள் எதுவுமே சாஸ்வதம் இல்லையோ என மனம் கதறத் தொடங்கினாலும், அதை வெளிக்காட்டமல் தசிராவின் கழுத்தில் இருந்த GPRS மூலம் இருப்பிடத்தைக் கண்டுபிடித்தபடியே அடுத்தக்கட்ட வேலைகளை முடித்திருந்தான்.
‘பேபி சேஃப்’ என்ற செய்தி கிடைத்த பிறகே அவன் ஒரு நிலைக்கு வந்திருந்தான். அந்த நொடியை இப்போது நினைத்தாலும் நிசப்தியைக் கொன்றுவிடும் அளவுக்கு கோபம் அலையாய் பொங்கியது.
இதில் நரேனுக்கு விஷயம் தெரியவில்லை என்பது மட்டுமே அவனுக்கு ஆறுதல். தெரிந்திருந்தால் அடுத்து அவன் செய்யப் போகும் வேலைக்கு முட்டுக்கட்டையாக விழுந்திருப்பான்.
‘ஊப்ஸ்’ என மீண்டும் பெருமூச்சைவிட்டவன், “2 Days out of town” என்று மட்டும் நரேனுக்கு மெசேஜ் போட்டவன், மீண்டும் அந்த செக்யூரிடிக்கு அழைத்தான்.
“அந்த லேடிக்கு உயிர் மட்டும்தான் இருக்கணும்.” என்றான் அடக்கப்பட்ட ஆத்திரத்தோடு. அவனின் கோபம் மட்டுப்படவில்லை என்பதை எதிரில் இருந்தவன் உணர்ந்தான், உண்மையும் அதுதான். கண்மண் தெரியாத கோபம், யார் மேல் காட்டுவது எனத் தெரியாமல், எதிரில் இருந்தவனைக் கடித்துக் குதறிக் கொண்டிருந்தான்.
“பாஸ் அந்த லேடிக்கும் கிட்நாப்பிங்க்கும் சம்மந்தமே இல்ல. அந்த லேடியும் பார்க்குக்கு வந்தவங்கதான், கல்ப்ரிட் அந்த லேடியை யூஸ் பண்ணிருக்கான்.” என்றதும்,
“வாட்! நீ எல்லாம் என்ன இன்வெஸ்டிகேடர் அன்ட் செக்யூரிடி? உங்கிட்ட கேசைக் கொடுத்த என்னை…” எனப் பல்லைக் கடித்தவன், “சான்சே இல்ல… கண்டிப்பா அவளுக்கு லிங்க் இருக்கு. நீ அவளை கஸ்டடில வச்சிடு, டோன்ட் ஆர்க்யு. நான் வந்து எப்படி விசாரிக்கணுமோ, அப்படி விசாரிக்கிறேன்.” என்றவன் குரலில் அரக்கக் குணம் ஏறியிருந்தது.
“பாஸ்…” என எதிரில் இருந்தவன் அந்தக் குரலில் பயந்து இழுக்க,
“எஸ், நான் வந்து பார்த்துக்குறேன் ரைட்…” என்றான் முடிவாக. பின் குரலை இறக்கி, “ம்ம்…” எனத் தன் தாடையைத் தடவி யோசித்து, “உன் வைஃபால பேபியை ஒரு ரெண்டு நாள் சமாளிக்க முடியுமா?” என்றான் விக்ரம் அதே யோசனையோடு.
“ரெண்டு நாள் கஷ்டம் பாஸ், பட் இன்னைக்கு ஒரு நாள் மேனேஜ் பண்ண முடியும். பாப்பா ரொம்ப அழறாங்க.” என எதிரில் இருந்தவன் மீண்டும் இழுக்க,
“ம்ம் ஓகே, இன்னைக்கு மட்டும் உன் வைஃப்கிட்ட சொல்லி கவனமா பார்த்துக்க சொல்லு. பேபி உங்கிட்டயே இருக்கட்டும், பேபி உங்கிட்ட இருக்குன்னு யாருக்கும் தெரியக்கூடாது, முக்கியமா நரேனுக்கு.
நரேனுக்கு இன்னும் மேட்டர் தெரியாது, ஒருவேளைத் தெரிஞ்சு கேட்டா, இன்னும் கிடைக்கலனு மட்டும் சொல்லு. வேற பேச்சே இருக்கக்கூடாது ரைட். நான் கிளம்பிட்டேன், அங்க என்ன நடக்குதுனு எனக்கு அப்பப்போ அப்டேட் கொடு.” என்ற விக்ரமிடம், “பாஸ்…” என இழுக்க,
“என்னடா?” என எரிந்து விழுந்தான்.
“பாஸ், நரேன் சாருக்குத் தெரிஞ்சா பிரச்சனை ஆகிடும் சார்.” என்றான்.
“அடிங்க…” எனக் கெட்ட வார்த்தையில் திட்டியவன், “நான் உனக்கு பாஸா? இல்ல அவனாடா? நான் சொல்றதை செய்றதுக்குத்தான் உன்னை வச்சிருக்கேன், புரியுதா? நரேனை எப்படி சமாளிக்கணும்னு எனக்குத் தெரியும், அதெல்லாம் நான் பார்த்துக்குறேன். நீ, நான் சொன்னதை மட்டும் செய். அப்புறம் பேபியோட சேஃப் முக்கியம்.” எனக் கடித்து குதறியவனிடம், “எஸ் பாஸ்… எஸ் பாஸ்…” என்பதைத் தாண்டி வேறொன்றும் சொல்ல முடியவில்லை அவனால்.
‘எவ்வளவு திமிரா கிளம்பி போனா? யாரைப்பத்தியும் கவலைப்படாம, யாருக்கும் சொல்லாம… இப்போ அவளே எல்லாம் பார்க்கட்டும். திமிர்… திமிர்… உடம்பு மொத்தமும் திமிர். அதைக் குறைக்கலன்னா நான் என்ன ஆம்பள?’
‘ரெண்டு பேரையும் காணோம்னு எல்லாரும் எவ்வளவு வேதனைப்பட்டிருப்பாங்க? முக்கியமா என் அம்மா. அவ செஞ்ச கிறுக்குத்தனத்தால இன்னும் என் அம்மா எங்கிட்ட பேசாம இருக்காங்க. எவ்வளவு வேதனைப்படுறாங்க? அதை கொஞ்சமாவது அவளும் அனுபவிக்கட்டும். அப்போதான் எனக்கு நிம்மதி.’ என நிசப்தியைப் பற்றி எரிச்சலாக எண்ணியவன், தன் தாய்க்கு அழைத்தான்.
“ம்மா, நான் ஒரு எமர்ஜென்சி வொர்க்கா வெளியே கிளம்பறேன், ரெண்டு நாள் ஆகும் வர. கவனமா இருந்துக்கோங்க.” என கடுப்பாகச் சொல்ல,
“இப்போ உங்கிட்ட நான் எதுவும் கேட்டேனா, இல்லைதானே? எங்கையோ போ, என்னமோ பண்ணு… எனக்கு அது தேவையே இல்ல. எனக்கு நீ சொல்லணும்னு எந்த அவசியமும் இல்ல புரியுதா? போனை வை.” என அவனுக்கு மேலேக் கடுப்பாகச் சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார் ரேணுகா.
“ம்ச்… இவங்களோட…” என எரிச்சலானவன் ஏர்போர்டிற்கு விரைந்தான்.
***
இங்கே குழந்தையைக் காணாமல் பெண்கள் இருவரும் பரிதவித்துப் போனர். தனக்குத் தெரிந்தவர்கள் மூலம் சாரு தேட ஆரம்பித்திருந்தாள்.
சில மணி நேரங்கள் எந்த தகவலும் கிடைக்காமல் போக, துவண்டு போனாள் நிசப்தி. என் பிடிவாதத்தால், எடுத்த முடிவால் என் குழந்தையைத் தொலைத்து விட்டேனே எனக் கதற ஆரம்பித்துவிட்டாள்.
ஒருவழியாகத் தோழியை சமாதானம் செய்த சாருவிற்கும் அங்கு ஆட்கள் அதிகம் பழக்கம் இல்லை. தனியாக இருப்பதால் பெரிதாக யாருடனும் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை.
தன்னுடன் பணிபுரியும் மருத்துவரிடம் உதவிக் கேட்டுத் தேடிக் கொண்டிருந்தாள். இரவும் நெருங்கிவிட்டது, அதுவரை கொஞ்சம் நஞ்சம் இருந்த தைரியமும் தொலைந்து போகத் தலையில் அடித்துக்கொண்டு கதற ஆரம்பித்தாள்.
“நான் எந்த ஜென்மத்துல என்ன பாவம் பண்ணினேனோ, இப்படி யாரும் எனக்கு இல்லாம கஷ்டப்படுறேன். ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது? ஏன்…? ஏன்…?” எனக் கதறியவளை, என்னச் சொல்லித் தேற்ற என்றேத் தெரியவில்லை சாருவிற்கு.
பொதுவாக சாரு தைரியமானவள்தான். ஆனால் குழந்தை என்று வரும் போது யாராக இருந்தாலும் பயம் வரத்தானே செய்யும்?
அதுவும் தன் குழந்தையைப் பிடிக்கப் போய் அவளது குழந்தையைத் தொலைத்துவிட்டு கதறுபவளை எப்படி தேற்ற? போலிஸ் ஒரு பக்கம் தேட, இவர்களும் ஒரு பக்கம் தேட ஆரம்பித்திருந்தனர்.
நேரம் கரைய கரைய ஏதேதோ எண்ணங்கள் வந்து பயமுறுத்த ஆரம்பித்தது. பெண்பிள்ளை வேறு, அதுவே அவளது பயத்துக்கு முக்கியக் காரணம். பிறந்த குழந்தையில் இருந்து நாளை இறந்து போகும் வயதான மூதாட்டிகள் வரை பெண்களுக்கு இங்கு பாதுகாப்பில்லையே?
‘என் பிள்ளை எப்படி இருப்பாளோ? என்னைத் தேடுவாளே? அழுவாளே? பசிக்குமே? உணவு கொடுப்பார்களா? அடிப்பார்களா? கொடுமைப் படுத்துவார்களா?’ என ஏதேதோ எண்ணங்கள் தோன்றி, அவளை தெளிவடைய விடாமல் பயமுறுத்த ஆரம்பித்தது. சாருவின் சமாதனங்களும், மற்றவர்களின் சமதானமும் கொஞ்சமும் அவளுக்கு தைரியத்தைக் கொடுக்கவில்லை.
தசிரா கிடைத்து விடுவாள் என்ற நம்பிக்கை நேரம் செல்ல செல்ல குறைய ஆரம்பிக்க, நிசப்தியும் கத்தி, கதறி, அழுது, துடித்து, தன்னிலை மறந்து மயங்கி கீழே விழ, அவளைத் தாங்கிப் பிடித்த சாரு, “நிசா… நிசா…” என அவசர அவசரமாக கன்னத்தைத் தட்டி அவளை எழுப்ப முயல கை, கால்கள் எல்லாம் துவண்டு விழ ஆரம்பிக்க, அதைக் கவனித்த ஜிதேந்தர் (சாருவின் மருத்துவ நண்பர்) நிசாவைத் தூக்கிக்கொண்டு உடனடியாக ஹாஸ்பிடலுக்கு விரைந்தார்.
அன்றைய இரவு நிசப்திக்கு ஆழ்நிலை மயக்கமும் தூக்கமும், சாருவிற்கு பயமும் பதட்டமுமாகவேச் சென்றது.
சாருவின் பயத்திற்கு காரணம் ஜிதேந்தர் விளக்கிய நிசாவின் உடல்நிலை, குழந்தையைப் பற்றி காவல்துறை கொடுத்த செய்தி.
நிசா சில வருடங்களாகவே டிப்ரசனில் இருப்பதால் அதிர்ச்சி, பயம் போன்ற உணர்வுகளைத் தரும் நிகழ்வுகள் நடந்தால், தன்னையும் அறியாமல் அவளது மூளை மயக்கத்திற்குச் சென்றுவிடும் என்றும், உடலும் ஒத்துழைப்பு தராமல் தொய்ந்து மரக்கட்டையாக விழுந்துவிடுவாள் என்பதுதான். அதை சரி செய்ய அதிகம் கஷ்டப்பட வேண்டும் என்றும் சேர்த்து சொன்னார்.
‘ஜித்’தை தேடி மருத்துவமனைக்கே வந்த காவலதிகாரி, “டாக்டர் சாரி டூ சே… எங்களால முடிஞ்சளவுக்கு தேடிட்டுதான் இருக்கோம். எங்களுக்கு கிடைச்ச தகவல்படி பேபி சிட்டி விட்டு வெளியே போகல. நாளைக்கு நைட்குள்ள கிடைச்சிடலாம். பட்…” என அதுவரை தொய்வில்லாமல் பேசிக் கொண்டிருந்தவர் நிறுத்த,
“என்ன… என்ன சார்? பேபிக்கு ஒன்னும் ஆகாது தானே? என் பையனைப் பிடிக்க போய்தான் அந்த குழந்தை காணாம போய்ட்டா.” எனப் பதட்டமாக சாரு கேட்க,
“ப்ளீஸ் டாக்டர், நீங்க தைரியமா இருக்கணும். நீங்கதான் அவங்களுக்கும் தைரியம் சொல்லணும். குழந்தையைக் கண்டுபிடிச்சிடலாம். ஆனா அதுக்குள்ள பேபிக்கு என்ன வேனும்னாலும் நடக்கலாம். அதை எல்லாம் தாங்கிக்கிற தைரியத்தை கொண்டு வாங்க. எங்க பெஸ்டை நாங்க கண்டிப்பா செய்வோம்.” என்றதோடு அவர் கிளம்பிவிட, ‘ஜித்’தும் சாருவும் நிசப்தியை நினைத்து வேதனை அடைந்தனர்.
***
தனக்கு முன்னே எரிமலையாய் சீறிக்கொண்டு நின்றிருந்தவனை, நக்கல் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்தப் பெண். பார்க்க பரிதாபமாக, மிகவும் வயோதிகமாக, அப்பாவியாக இருந்த பெண்ணா இது? என அங்கிருந்தவர்கள் எல்லாம் அதிர்ச்சியாகப் பார்க்க,
அடிவாங்கி உதடு கிழிந்து, ரத்தம் வழிந்த நிலையில் இருந்தாலும், “அரே பச்சா… ஹாஹா… என்னைப் பிடிச்சா உனக்கு எல்லாம் தெரிஞ்சிடுமா? நீ என்னை கொஞ்சம் கொஞ்சமா டார்ச்சர் செஞ்சு கொன்னாக்கூட நான் உண்மையைச் சொல்ல மாட்டேன்.
எங்க இயக்கத்துல எங்களுக்கு ஃபர்ஸ்ட் பாடமே எவ்வளவு டார்ச்சர் செஞ்சாலும் உண்மையைச் சொல்லக்கூடாது என்பதுதான்.” என விகாரமாகச் சிரிக்க, அமைதியான அந்த இடமும் அந்த விகார சிரிப்பும், ரத்தம் தோய்ந்த பற்கள் வெளியேத் தெரிந்த அந்த அகோர முகமும், அங்கிருப்பவர்களுக்கே பயத்தை உண்டாக்கியது என்று சொன்னால் பொய்யில்லை.
அதுவரை உறக்கத்தில் இருந்த குழந்தை விழித்ததும் இல்லாமல், அந்த அகோரச் சிரிப்பில் பயந்து வீல்வீலெனக் கத்த ஆரம்பிக்க, தசிராவின் அழுகைச் சத்தத்தில்தான் நிகழ்வுக்கு வந்தான் விக்ரம்.
தசிராவின் அழுகை அடுத்து எதையும் யோசிக்க விடவில்லை. சற்றும் தாமாதிக்கமல் தன் கையில் இருந்த பிஸ்டலால் அவளின் நெற்றியில் குறிப் பார்த்துக் குண்டை இறக்கினான் விக்ரம்.
“பாஸ்…” எனப் பதறிபடியே வந்தவர்களை சுற்றி ஒரு பார்வைப் பார்த்தவன், “க்ளீன் அப்.” என்றுவிட்டுக் குழந்தையை வாங்கிக்கொண்டு வேகமாக வெளியேறினான்.
பின் என்ன நினைத்தானோ நொடி தாமதித்து, தனக்குப் பின்னே மூச்சிரைக்க ஓடிவந்தவனைப் பார்த்து, “பாடி யாருக்கும் அடையாளமேத் தெரியக்கூடாது. இவ எந்த இயக்கத்தைச் சேர்ந்தவன்னு எனக்குத் தெரிய வேண்டாம். அது தேவையும் இல்லை. இனி எப்பவும் என் பேபிக்கு பிரச்சனை வரக்கூடாது. அப்படி வந்தா அடுத்து நீ முழுசா இருக்கமாட்ட.” என ஆக்ரோசமானவன், “அக்யூஸ்ட்கிட்ட இருந்து எடுத்த எவிடென்ஸ் எல்லாம் பேக் பண்ணி எனக்கு சென்னைக்கு அனுப்பிடு.” என்றவன் குழந்தையோடு காரில் ஏறினான்.
“விக்ரம், நீ சொன்ன மாதிரிதான் அந்த டாக்டர்கிட்ட சொல்லிருக்கேன், உன் வைஃப்…” என்றதும், சட்டென்று “She is not my wife.” எனப் பல்லைக் கடித்துக்கூற,
“ஓகே, ஓகே… பேபியோட அம்மா இன்னும் மயக்கத்துலதான் இருக்காங்க. கூட இருந்த ரெண்டு பேருமே ரொம்ப பயத்துல இருக்காங்க. பேபி சேஃப்ன்னு சொல்லிருக்கலாமே…?” என்றதும், “ம்ச்…” என எரிச்சலாய் தலையை அசைத்தான்.
அப்போது அவனது அசைத்த தலையை ஒரு பிஞ்சுக் கரம் ஆட்டாமல் பிடித்து வைக்க, சட்டென்று அவன் உடலும் தளர, இதழ்களும் தன்னால் விரிய, கண்கள் தன் தேவதையின் முகத்தை ஆசையாகப் பார்த்தது.
கையில் கிடைத்த முடியை ஆட்டியபடியே, தன் குண்டு விழிகள் கொண்டு அவனையே எச்சில் ஒழுகப் பார்த்து ஈயென்றது.
அதுவரை ஓடிய ஓட்டமும் இருந்த இறுக்கமும், அலைபாய்ந்த மனமும் ஒரு நிலைக்கு வந்தது. கைகள் தன்னால் தன் தேவதையை இறுக்கிக்கொண்டான் இறுக்கமாக.
***
1 comment
ஏன் திமிர் நிசப்திக்கு மட்டும் தான் இருக்காமா…? விக்ரமோட முதல் பொண்டாட்டி, ஆசை பொண்டாட்டி அந்த ஸ்வாதிக்கு உடம்பு முழுக்க திமிர் இல்லையாமா ?
😀😀😀
CRVS (or) CRVS 2797