Home Antiheroதளிர் -83

தளிர் 83

எட்டாண்டுகளுக்குப் பிறகு,

விக்ரமின் வீடு, ஒரு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தது.

தசிராவிற்கு நான்கு வயது முடிய, நிசாவிற்கு தன்வந்த், தயானந்த் என இரட்டை ஆண் பிள்ளைகள். அந்தப் பிரசவத்தின் போது ஏற்பட்ட சிக்கலில், நிசாவின் உடல்நிலை மீண்டும் மோசமாக, அதோடு போதும் என்று விக்ரமைக் கடுப்பாக்கி, நிசாவிற்கு ஃபேமிலி ப்ளானிங் செய்ய வைத்துவிட்டார் ரேணுகா.

அதில் மகனுக்கு இன்னும் தாயின் மேல் கோபம்தான். அதையெல்லாம் கண்டுகொண்டால் அவர் ரேணுகா இல்லையே?!

இந்த எட்டாண்டுகளில் நான்கு குடும்பத்திலும் மிகப்பெரிய மாற்றங்கள். ரவியும் ரித்தியும் பிஸினசை பெரியளவில் கொண்டு சென்றிருந்தனர். அவர்களுக்கு நித்திலன் என்ற மகனும், நிலா என்ற மகளும் என இரு பிள்ளைகள்.

விக்ரமும் அடிக்கடி அவர்களுக்கு தொழிலில் ஆலோசனையும் தேவையான உதவியும் செய்யவே, அவன் பிஸினசிற்கு செல்வதில்லை என்ற வருத்தம் கூட இப்போது இல்லை ரேணுகாவிற்கு.

முகுந்தன், அவன் ஆசைக்காக ரஞ்சனிக்கு குழந்தை பிறந்ததும், மாலத்தீவு சென்று ஐந்து வருடங்கள் மட்டும் இருந்துவிட்டு இந்தியா வந்துவிட்டான். அவனுக்கு முதலில் அர்ஜூன், அடுத்து அக்ஷிதா என்று இரு பிள்ளைகள்.

நாகேஷ், சுமதி தம்பதியினர் தன் பெரிய பெண்ணோடு கனடாவில் செட்டிலாகிவிட, அவர்களது மருத்துவமனையை இப்போது முகுந்தன், ரஞ்சனி தம்பதிகள் முழுநேரமாக பார்த்துக் கொள்கிறார்கள்.

நரேன் தன் தொழிலை முழுவதுமாக உஷாவிடம் விட்டுவிட்டு, இப்போது விக்ரமிடமிருந்து தப்பித்து நிசாவுடன் முழுநேரமாக இருக்கிறான். இளந்தளிர், இனியன் என இரு பிள்ளைகள் இவர்களுக்கு.

இப்போது உஷாவின் வீட்டில் அவளிடம் நல்ல விதமாகவே நடந்து கொள்ள, குழந்தைகளையும் அவர்களே பார்த்துக் கொள்கின்றனர்.

உஷாவின் தந்தை இறந்துவிட அவளின் சித்தி மட்டுமே. அவரும் மாதத்தில் பாதி நாட்கள் உஷாவின் வீட்டில்தான் வாசம். அவளின் அண்ணனும் அண்ணியும் உஷாவிடம் நல்ல மாதிரியாகவே நடந்து கொள்ள, எந்தப் பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக செல்கிறது அவர்கள் வாழ்க்கை.

இன்று நிசப்தியின் பிறந்தநாள் என, அந்த விழாவிற்காக அனைவரும் வந்திருக்க, பிறந்தநாள் நபரை மட்டும் அங்கு காணவில்லை.

(வழக்கம் போல விக்ரம்தான் இல்லை என்று நீங்கள் யாரும் அவனைத் திட்ட வேண்டாம். பாவம் அவன், இப்போது காணாமல் போனது அவன் உயிரை வாங்கும் இராட்சசி.)

“டேய் நரேன் இன்னும் எங்கடா இருக்கீங்க? கிளம்பி எவ்வளவு நேரமாச்சு?” என விக்ரம் பல்லைக் கடிக்க,

“பாஸ், பக்கத்துல வந்துட்டோம். இன்னும் ஃபிஃப்டீன் மினிட்ஸ்ல வந்துடுவோம்.” என பதட்டமாக கூற,

“முதல்ல அவளை போன் எடுக்க சொல்லு, எத்தனை தடவை கால் பண்றது?” என மீண்டும் கத்த,

“பாஸ் பாஸ்… நிசாம்மா கோவமா இருக்காங்க, போன்ல வாங்குறதுக்கு நேர்லயே வாங்கிக்கலாம் பாஸ். கொலைவெறில தான் இருக்காங்க.” என முணுமுணுக்க,

“டேய், அவங்க ரேணும்மாக்கிட்ட மட்டும் பேசுறா, எங்கிட்ட பேச என்ன? வரட்டும், இருக்கு அவளுக்கு…” என்றவன், “சரி போனது என்னாச்சு? எல்லாம் பெர்ஃபெக்ட்தானே?” என்றான் கறாராக.

“பாஸ் எல்லாம் ஓகே, அந்த டிபார்ட்மென்டல் ஸ்டோர் ஓனர்தான் ஓவரா துள்றான், நிசா வச்சு வெளுத்துட்டா. ரிமான்ட் பண்றதுக்கு ஆர்டரும் வாங்கிட்டா. இனி பேசமாட்டான்னு நினைக்கிறேன். பட் நாம கவனமா இருக்கணும் பாஸ்.”

“நினைச்சேன்… ஓகே நான் பார்த்துக்குறேன், சீக்கிரம் வாங்க. பசங்க தேட ஆரம்பிச்சிட்டாங்க அவங்க அம்மாவை.” என்று வைத்துவிட, இங்கு நரேனை முறைத்துக் கொண்டிருந்தாள்.

“என்ன ண்ணா, உன் பாஸ்கிட்ட சொல்லலன்னா உனக்கு தூக்கம் வராதா? என்னோட வொர்க்ல தலையிடாதீங்கனு சொன்னா கேட்கமாட்டீங்களா?” என கடுகடுவென ஆரம்பித்தவள், நரேன் பாவமாக முழிக்கவும், “சரி, நான் அவர்கிட்டயே பேசிக்கிறேன்.” என்றுவிட ‘ஷப்பா!’ என பெருமூச்சுவிட்டான் நரேன்.

சற்று பொறுத்து, “நரேன், என்னை கேட்காம அந்தாளை எதுவும் பண்ணக்கூடாது…” என முடிக்கும் முன்னே சட்டென்று, “அந்தாளுக்கு கால் பண்ணுங்க.” என்றாள் இவர்களைத் தெரிந்து.

“அது… அதெல்லாம் முடிஞ்சு நிசா…” என அவன் பாவமாக சொல்ல, “ண்ணா… இவன்கிட்ட நான் கேட்டேனா? எதுக்கு இப்படி என்னை டார்ச்சர் பண்றீங்க? நாளைக்கு இந்தப் பிரச்சனையால எதுவும் புது பிரச்சனை வந்தது, உங்களை நானே கம்ப்ளைன்ட் பண்ணி அரெஸ்ட் பண்ணுவேன்.” என்றுக் கத்திக்கொண்டே இருக்க வீடு வந்திருந்தது.

வாசலிலேயே விக்ரமும் ரவியும் நின்றிருக்க, விக்ரமின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது.

“என்ன விக்கி…” என்ற ரவியிடம், “அந்த டிபார்ட்மென்டல் ஸ்டோர் ஓனரை போட்டாச்சு.” என்றான் அசிரத்தையாய்.

“ஹேய் என்னடா சொல்ற? இன்னைக்கு நிசா அட்டன் பண்ணது அவன் கேஸ்தானே?! நிசாவை என்ன செஞ்சான்?” என்றான், காரணம் இல்லாமல் விக்ரம் செய்திருக்க மாட்டான் என்று உணர்ந்து.

“ம்ம்… என்ன கிழிச்சிருப்பான் ராஸ்கல்? பேரம் பேசினான், மடியலன்னதும் மிரட்டிருக்கான். அதுவும் கார் ப்ளாஸ்ட் பண்ணிடுவேன். உன் அத்தையை தூக்கிடுவேன், புருஷன முடிச்சிடுவேன்னு டைலாக் விட்டுருக்கான் ஃபாஸ்***, அவனை…” என கடித்துக் குதற,

“சரி விடு, ஆள் அவுட்டா? இல்ல, மிச்சம் மீதியோட விட்டுருக்கியா?”

“என் பொண்டாட்டியை மிரட்டுனவன் பொட்டுன்னு போயிட்டா எப்படி? அவனை வச்சு செய்ய வேண்டாம்?! மிச்சம் மீதியோட ஜிஹச்சுக்கு அள்ளிட்டு போக சொல்லிருக்கேன்.”

“ஓகே விடு, அதான் முடிஞ்சது இல்ல. பார்த்துக்கலாம், நீ உன் இத்துப்போன மூஞ்சியை கொஞ்சம் நார்மலாக்கு. எல்லாரும் உன்னை கவனிப்பாங்க.”

“ம்ம்ம்… நரேன் இந்நேரம் சொல்லிருப்பான், இனி இவ வந்து குதிப்பா பாரு…”

“உன் நாக்குல சனி உக்காந்து டான்ஸ்தான் ஆடுவார் போல, அங்க பாரு நிசா வந்துட்டா. நான் போறேன், என்னைப் பாத்தா நானும் சேர்ந்துதான் செஞ்சேன்னு என்னையும் திட்டுவா.” என ரவி கழண்டுகொள்ள,

“புறமுதுகு காட்டி ஓடுவது ஆணுக்கு அழகில்ல மச்சான்…” என விக்ரம் கிண்டல் செய்ய,

“என் பொண்டாட்டியை விட மோசம்டா உன் பொண்டாட்டி. அடி வாங்கியெல்லாம் எனக்கு பழக்கமே இல்ல. இது எனக்கு தேவையா சொல்லு?” என்று ரவியும் பதிலுக்கு கிண்டலடித்தபடியே நகர்ந்துவிட,

“போங்கடா பயந்தாங்கோலீஸ்…” என்று எல்லாரையும் கலாய்த்தவன், “இந்த சில்வண்டுக்கு போய் எல்லாரும் பயப்படுறாங்களே…” என முனகி முடிக்கும் முன்னே, அவனுக்கு முன்பு வந்து நின்றிருந்தாள் அவனின் சில்வண்டு.

“ஹேய் வந்துட்டியா? வா… வா… பசங்க டென்சன் பண்ணிட்டாங்க.” என அவளை இழுத்துக்கொண்டு நகரப் பார்க்க, அவளோ கணவனை முறைத்தபடி அவன் இழுப்புக்கு செல்லாமல் அப்படியே நின்றிருந்தாள்.

“ம்ச்… வாடி!” என சலிக்க,

“உங்கிட்ட எத்தன தடவி சொல்லிருக்கேன், ஏன் இப்படி…?” என அவனிடம் கோபப்பட முடியாமல் சலிப்பாக சொல்ல,

“நானும் உங்கிட்ட சொல்லிட்டேன், நான் இப்படித்தான். ஒன்னும் பண்ண முடியாது, அவன் உன்னை மிரட்டுவான், நான் பார்த்துட்டு சும்மா இருப்பேனா?” என விக்ரமும் எரிச்சலாக சொல்ல,

“ம்ச்… இந்த திமிர் மட்டும் உனக்கு குறையவே குறையாது. எரிச்சல் பண்ணாம போ.” என கத்திக் கொண்டே வீட்டுக்குள் போக, ‘இன்னைக்கும் அவளை டென்சன் பண்ணாதடா விக்ரம்’ என தனக்குத்தானே சொல்லிக் கொண்டு, அவளுக்குப் பின்னே சிரித்தபடியே நடந்தான்.

அதற்குள் குழந்தைகள் எல்லோரும் அவளை நோக்கி ஓடிவர, அதில் அனைவருக்கும் பெரியவனான நித்திலன், நிசாவிற்கு பிடித்த மஞ்சள் ரோஜாவில், ஒரு பெரிய பொக்கேயுடன் வந்து, “ஹேப்பி பர்த்டே அத்த!” என அணைத்து வாழ்த்து சொல்ல,

அதுவரை இருந்த இறுக்கம் தளர்ந்து மலர்ந்து சிரித்தவள், தானும் அவனை அணைத்து, “நன்றிடா தங்கம்!” என நெற்றியில் முத்தமிட,

குழந்தைகள் எல்லாம் அவர்கள் இருவரையும் தள்ளிக்கொண்டு விளையாட, அதிலும் தசிரா வேகமாக நித்திலனை இழுத்துவிட்டு தாயிடம் செல்ல, அவள் இழுப்பிற்கு சென்றவன், அவளைப் பார்த்து நக்கலாக சிரித்தபடியே அங்கிருந்து அகன்றுவிட்டான்.

அதில் கடுப்பான தசிரா, “போடா பனைமரம்…” என வாய்க்குள் முனகியபடியே, தம்பிகளை எல்லாம் தள்ளிவிட்டு தாயை அணைத்து வாழ்த்து சொல்ல, நிசப்தியும் மகளை அணைத்துக் கொண்டாள்.

“நிசா, சீக்கிரம் போய் ஃப்ரெஷாகி வா. எல்லாரும் வந்து ரொம்ப நேரமாச்சு.” என ரேணுகா வந்து அதட்டலிடவும் தான், குழந்தைகளிடமிருந்து பிரிந்து தன்னறைக்குள் சென்றாள்.

அவளுக்குப் பின்னாலேயே உள்ளே வந்த விக்ரமை முறைக்க, முறைத்தவளை இழுத்து அணைத்தவன், “முதல்ல ரெடியாகு, அப்புறம் என்னை முறைக்கலாம். முகுந்தனுக்கு மார்னிங் சர்ஜரி இருக்கு, அவன் கிளம்பணும்.” என்றதும், அவன் கன்னத்தில் கடித்துவிட்டு குளியலறைக்குள் நுழைந்தாள் நிசப்தி.

கடித்த இடத்தைத் துடைத்தபடியே, “ராட்சசி!” என கொஞ்சியபடியே, அவளுக்கான உடையை எடுத்து கட்டிலில் வைத்துவிட்டு வெளியில் வந்தவன், நரேனிடம் அங்கு நடந்ததைக் கேட்டுத் தெரிந்து கொண்டான்.

ஆண்கள் அங்கு ஒரு குட்டி மாநாட்டை நடத்த, முகுந்தன் தான் டென்சனாக இருந்தான். அதை கவனித்த ரவி, “என்னடா?” எனவும்,

“ம்ச்… நெக்ஸ் வீக் கனடா போகணும் சொல்லிருந்தேன் இல்ல, அந்த வீக் ஒரு சர்ஜரி இருக்கு. ரஞ்சி பிரச்சனையில்ல, இந்த அர்ஜூன் தான் டென்சன் ஆவான். அதோட இன்னைக்கு பாரு, அவங்கத்தைக்கிட்ட எவ்ளோ கம்ப்ளைண்ட் கொடுப்பான்னு…” என சலிக்க,

“ஹா… ஹா… விடுடா விடுடா… அதெல்லாம் நிசா உனக்குத்தான் சப்போர்ட் பண்ணுவா, அர்ஜூனுக்கும் புரிய வைப்பா. ஆனா இந்த பசங்க எல்லாம் எப்படித்தான் அவக்கூட ஒட்டிட்டு இருக்காங்களோ தெரியல. அவ போஸ்ட்டுக்கும் அவ கேரக்டருக்கும் சம்மந்தமே இல்ல.” என விக்ரம் கூற,

நிசா இப்போது செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர். அனைத்தும் விக்ரமின் ட்ரெயினிங்தான். பிள்ளைகளை நினைத்து முதலில் தயங்கினாலும், ரேணுவும் ரித்தியும் பார்த்துக் கொள்வதாக சொல்லி நிசாவை ஊக்கப்படுத்த, தயங்கினாலும் அவளுக்கும் படிக்க பிடிக்கவும் ஆரம்பித்துவிட்டாள்.

விக்ரமிடம் அசிஸ்டெண்டாக இருந்து கொண்டே தேர்வுகளும் எழுத, இரண்டாம் அட்டெண்டில் கிடைத்துவிட்டது வேலை.

முதலில் கோவையில் போஸ்டிங் போட்டிருக்க, அதிலும் ஒருவருடம் கட்டாயம் என்றிருக்க, நிசப்தியும் விக்ரமும் கோவை வந்துவிட்டனர்.

கோவையில் இருந்த காலத்தில் அவனது வேலைகளை பாதியாக குறைத்துக் கொண்டான் விக்ரம். வெளி வேலைகளை முற்றிலுமாக விட்டுவிட்டான். பாவம், நரேன் மாட்டிக்கொண்டான்.

அங்கிருந்த ஒரு வருடமும் அவர்களுக்கான காலம். இதுவரை வாழாத ஒரு வாழ்க்கையை இருவரும் வாழ்ந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

அது அவர்களின் அந்யோன்யத்தையும் அன்பையும் புரிதலையும் அதிகப்படுத்தியது. அதை இருவருக்கும் உணர்த்தியது.

ஸ்வாதி என்பவள் அவர்களின் மூளையில், மூலையில் கூட எங்குமே இல்லை என்று உணர வைத்த காலக்கட்டம். இதில் இருவருக்கும் முட்டிக் கொள்ளாமலும் இல்லை. விக்ரம் கோவையில் இருக்கிறான் என்று தெரிந்து, அங்கேயும் அவனுக்கு தெரிந்தவர்கள் வழக்கோடு வந்து நிற்க, மனைவியை நினைத்து சிரிப்போடு ஏற்றுக்கொண்டான்.

அது நிசப்திக்கு ஆப்போசிட் சைட் வேறு. சும்மாவே குதிப்பாள், இப்போது சலங்கை வேறு. சொல்லவா வேண்டும்? ஆனாலும் சுவாரஸ்யம்தான்.

நீதிமன்றத்திலும் சரி, வீட்டிலும் சரி அனல் பறந்தது. அவனைப் போட்டு வறுத்தெடுத்து விடுவாள். அதெப்படி பொய் சொல்லலாம், ஏமாற்றலாம் என்று அவனை ஒரு கை பார்த்துவிடுவாள்.

மனைவியை இப்படி பார்க்க மிகவும் பிடிக்கும் விக்ரமிற்கு. அதனால் எப்போதும் அவளை வம்பிழுத்து டென்சனிலேயே வைத்திருப்பான்.

பொறுமையாக இருப்பவள், பின் முடியாமல் ரேணுகாவிடம் பஞ்சாயத்தைக் கூட்டுவாள். அதன்பிறகே அடங்குவான்.

வார இறுதியில் சென்னை செல்வது கட்டாயமானது. அவளால் முடியாத நாட்களில், ரவி குடும்பத்தோடு கோவை வந்துவிடுவான், இல்லையென்றால் நரேன். அவனாலும் முடியவில்லையென்றால் ஒரு குட்டி வேனைப் பிடித்து, முகுந்தனையும் அள்ளிப் போட்டுக்கொண்டு எல்லா குழந்தைகளோடும் ரஞ்சி வந்துவிடுவாள்.

ஒரு வருடம் முடிந்து செங்கல்பட்டில் மாற்றல் கிடைக்கவும் தான், அனைவருக்கும் நிம்மதியானது, முக்கியமாக முகுந்தனுக்கு. பாவம், அவ்வளவு அடி வாங்கியிருந்தான் மனைவியிடமும் நண்பனிடமும்.

நிசப்தி கீழே வரவும், உஷா வந்து அணைத்துக் கொள்ள, “சாரிடா! ரொம்ப முக்கியமான கேஸ், நீங்க வந்து நேரமாச்சா? அம்மா வந்துருக்காங்களா?” என்றதும் உஷா சிரிக்க,

“நீங்க சொல்லணுமா மேடம்? எங்களுக்கே புரியும், வா முதல்ல கேக் கட் பண்ணு. குழந்தங்களுக்கு கொடுத்து அமைதி படுத்தலாம். ஏற்கனவே என் பையன் கேக் தருவீங்களா மாட்டீங்களானு, அவங்கப்பாவை டார்ச்சர் பண்ணிட்டு இருக்கான்.” என ரஞ்சி சிரிக்க, அவளையும் அணைத்து விடுவித்தவள் ரேணுகாவிடம் செல்ல, அவரும் ரித்தியை சமாதானம் செய் என்பது போல் கண்ணைக் காட்ட,

ரித்தியோ இதையெல்லாம் கவனிக்காமல் முன்புறமாக திரும்பி, தன்வந்திற்கு ஏதோ எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

அவளின் பின்னோடு அணைத்து தன் மகனிடம், “லேடிஸ் இருக்குற இடத்துல என்னடா பண்ற?” என அதட்ட,

நிசப்தி அணைத்ததும் சிரித்த ரித்தி, தன்வந்திடம் வாயாடவும் கோபம் வந்துவிட, “எப்போ பாரு, அவன் கூடவே வம்பு உனக்கு…” என நிசாவை முறைக்க,

“அத்த, இவங்க எப்பவும் இப்படித்தான். பொறாமை! நீங்க வாங்க, எனக்கு இதை ஊட்டுங்க.” என ரசமலாயைக் காட்ட, “டேய்!” என நிசா பல்லைக் கடிக்க, மற்ற எல்லோரும் சிரித்துவிட்டனர்.

நிசா கோவையில் இருந்த ஒரு வருடத்தில், குழந்தைகள் மூவருக்கும் ரித்தியோடு நல்ல ஒட்டுதல். ஐந்து பேரை சமாளிப்பது என்பது எளிதா என்ன? ஆனாலும் சமாளித்தாள்.

நித்திலனும் நிலாவும் தான் பெரியவர்கள். தசிராவிற்கு இதெல்லாம் மிகவும் புதிது. அதனால் யாருடனும் ஒட்டமாட்டாள். ரேணும்மா போதும் அவளுக்கு, அதில் கடுப்பானவன்தான் நித்திலன்.

அப்போதிருந்து எப்போது பார்த்தாலும், அவளை சீண்டாமல் இருந்ததில்லை நித்திலன். அவளை அழ வைத்தால்தான் அன்றைய நாளே சரியாகும் அவனுக்கு.

ஒரு வழியாக கேக் கட் செய்து குழந்தைகள் அனைவருக்கும் கொடுத்து, அவர்களை அமைதியாக்கி பின் பெரியவர்களுக்கு கொடுத்து என நேரம் வேகமாக சென்றது.

முகுந்தனுக்கு அடுத்த நாள் சர்ஜரி என்பதால், நிசாவிடம் சொல்லிக் கொண்டு குடும்பத்தோடு கிளம்பும் நேரம், அத்தையிடம் பஞ்சாயத்தை வைத்து விட்டான் அர்ஜுன்.

முகுந்தன், நிசாவைப் பாவமாக பார்க்க, “அதென்ன குழந்தைங்ககிட்ட ப்ராமிஸ் பண்ணிட்டு ஏமாத்துறது…” என ஆரம்பித்து முகுந்தனை ஒரு வழி செய்து பின் அர்ஜுனிடம், “அப்பா வொர்க் அப்பாதானே செய்ய முடியும். ஒரு உயிரை காப்பாத்துறது கடவுளுக்கு சமம் இல்லையா? அவங்க நம்ம அப்பாவை கடவுளா பார்ப்பாங்க. அப்போ அப்பா இங்க இருக்கணும்தானே?! அந்த பேசன்ட் நம்ம அப்பாவை நம்பிதானே வருவாங்க, அவங்க சரியாகிட்டா நமக்கும் சந்தோசம் தானே?!” என அவனுக்கு ஏத்த போல பேச,

“ம்ச்! எல்லாம் ஓகேதான் அத்த, ஆனா… ம்ச்! போங்க, நான் போறேன்.” என அவளிடமிருந்து திமிற,

“அச்சு, நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா போகலாம். இந்த லீவ்ல நாம எல்லாரும் அவுட்டிங் போகலாம். அதுக்கு ப்ளேஸ் நீங்க சூஸ் பண்ணுங்க. ஒன் வீக் ஃபேமிலி ட்ரிப் போலாம். ப்ளேசஸ் எல்லாம் உங்க சாய்ஸ்தான்.” என அவனை பேசி சரிகட்டி, சமாளித்து அனுப்புவதற்குள் மூச்சு வாங்கியது.

மூச்சு வாங்கியது அவளுக்கு மட்டுமல்ல, முகுந்தனுக்கும்தான். அவன் பாவமாக நிசாவைப் பார்க்க, “இந்த ட்ரிப் நீங்கதான் அரேன்ஞ் பண்ணணும். இனி அவன் பார்க்கும் போதெல்லாம் என்னை கேட்பான்.” என முகுந்தனிடம் சொல்ல,

“ஓகே… ஓகே… நானே பண்றேன், இந்த தடவை காப்பாத்தி விட்டதுக்கு நன்றியோ நன்றி.” என சிரிக்க, அவனோடு மற்றவர்களும் சிரிக்க, “அப்படியே மாட்டிட்டு முழிங்கன்னு விட்டுருக்கணும்.” என புலம்பியபடியே பெண்களிடம் வந்தாள்.

“நிசா, நரேன் சொன்னார் அந்த கேஸ்ல நிறைய பிரச்சனை வரும்னு. கவனம்டா, நாங்க எல்லாரும் இருக்கோம் தான். இருந்தாலும் கவனமா இருடா.” என்றாள் உஷா.

“உஷ், நான் கவனமா தான்டா இருக்கேன். நீ டென்சன் ஆகாத, நரேன் அண்ணா என் கூடவேதான் இருக்காங்க, பயப்படாத ப்ளீஸ்…”

“உஷா சொல்றதையும் நாம யோசிக்கணும். செங்கல்பட்டுல இருந்து வீட்டுக்கு வர ஒரு மணி நேரம் ஆகுது. இந்த கேப்ல என்ன வேணும்னாலும் நடக்கலாம். ஏன், நீ சென்னைக்கே ட்ரான்ஸ்ஃபர் கேட்கலாம்ல? உன் புருஷனுக்குத்தான் ஊர்ல இருக்குற அத்தனை பேரும் காவடி தூக்குறானுங்களே, அவங்ககிட்ட கேட்டு உனக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கித்தர சொல்லேன்.” என ரேணுகா மகனைக் கடித்துத் துப்ப,

“என்னை கொஞ்சலன்னா உங்களுக்கு தூக்கமே வராதா? போங்க… போய் வேலையை பாருங்க. எப்பவும் எங்க ரெண்டு பேருக்குள்ள கோல் சொல்றதே வேலை. அதையும் புரிஞ்சிக்காம இவ வந்து தைய தைக்கான்னு குதிக்க வேண்டியது.” என விக்ரம் வந்து தாயிடம் வம்பிழுக்க,

“ம்மா, அவன் செய்றேன்னு சொல்லிட்டுத்தான் இருக்கான். உன் மருமகதான் வேண்டாம் வேண்டாம்னு மண்டையை உருட்டுறா. நேர்மையா வாங்கணுமாம். அப்படியே வாங்கிக்கோன்னு விட்டுட்டான்.” என அண்ணனை விட்டுக்கொடுக்காமல் ரித்தி பேச,

“பாரு, எப்படி தங்கமான புள்ளன்னு. என்ன சொல்லு, இவனுக்கு என் தங்கம் கொஞ்சம் கூடுதல்தான்.” என மருமகளைக் கொஞ்சி, மகனை கலாய்த்து என ரேணுகா பிள்ளைகளிடம் செல்ல, அதை ஒரு புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் நிசப்தி.

இப்போது அவள் உலகமே வேறு. அழுகை இல்லை, வருத்தம் இல்லை, விரக்தி இல்லை, சில நிமிடம் கூட தனிமை இல்லை. எப்போதுமே அவளைச் சுற்றி ஒரு அழகான குடும்பம் இருந்தது. அது அவளை ராணியாக உணர வைத்திருந்தது.

“உஷா குட்டீஸ் எல்லாம் தூக்கத்துக்கு சொக்குறாங்க பார். அவங்களை தூங்க வச்சுடலாம், இல்லைன்னா அழுது ஆர்ப்பாட்டம் செஞ்சிடுவாங்க.” என்ற ரித்தியிடம்,

“அக்கா, பசங்க எங்கூட தூங்கட்டும். நேத்தும் இல்ல…” என்றாள் நிசா.

“சரி இரு, அனுப்பி வைக்கிறேன்.” என தன்வந்தையும், தயானந்தையும் நிசாவுடன் அனுப்பிவிட்டு, மற்றவர்களை வேறு அறைக்கு அழைத்துச் சென்று உறங்க வைத்தனர் உஷாவும் ரித்தியும்.

வழக்கம் போல தசிரா, ரேணுவோடு உறங்க, நித்திலனும் அன்று அத்தையிடம் வந்துவிட்டான்.

“வா கண்ணா…” என நிசா அழைக்க,

“அத்த, இந்த வீக் அவுட்டிங் போகலாம். என் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் டெல்லி போறாங்க, நாமளும் போகலாம். டூ டேய்ஸ்ல ஸ்கூல் லீவ் வந்துடும்.” என்றான் ஆர்வமாக.

இப்போத் தானே ஒருத்தன சமாளிச்சோம் என யோசித்தபடியே, “ஓ… ஓகே போகலாமே… என் தங்கம் கேட்டு எது இல்லன்னு சொல்லிருக்கேன்? மாமா வரட்டும், கன்ஃபார்ம் பண்ணலாம். அச்சுகூட கேட்டான், நீங்க எல்லாம் ப்ளேஸ் சூஸ் பண்ணி சொல்லுங்க, கன்ஃபார்ம் பண்ணிடலாம்.”

“ம்ம் ஓகே… அம்மாதான் டென்சன் ஆவாங்க, அவங்களை நீங்களே சமாளிங்க.”

“சமாளிச்சா போச்சு…” எனவும், விக்ரம் உள்ளே வரவும் சரியாக இருக்க, “என்ன சமாளிக்க போறீங்க?” என்றான் மருமகனைத் தூக்கி பெட்டில் போட்டு.

“மாமா நான் போறேன், அத்தை சொல்வாங்க உங்களுக்கு.” என அவனிடம் மாட்டாமல் ஓடிவிட,

“இவன்தான்டி எனக்கு எதிரி. என் பசங்ககூட பரவாயில்ல, நான் சொன்னதும் உடனே ஒபே பண்றாங்க. ஆனா இவன் இருக்கான் பார்…” என பல்லைக் கடிக்க,

“என்ன… என்ன… எதுக்கு இப்போ நித்தியை திட்டுறீங்க? அவனுக்கு இருக்குற பாசம் கூட உங்களுக்கு இல்ல. எனக்கு பிடிச்ச எல்லோ ரோஸ் கொடுத்து, எப்படி விஸ் பண்ணான் பார்த்தீங்கள்ல… நீங்களும் இருக்கீங்களே…” என அவளும் பல்லைக் கடிக்க,

“இத… இதத்தான் சொன்னேன், என்னை ஜெலஸ் ஆக்குறான்டி இவன். எப்போ பாரு உன்கூடவே ஒட்டிக்கிட்டு…”

“எதுக்கு… எதுக்கு ஜெலஸ் வரணும்? அவனுக்கு இருக்குற அக்கறையோ, பாசமோ கூட உங்களுக்கு இல்ல.”

“ம்மா… இப்படியே சண்டை போட்டுக்கிட்டே இருங்க, நான் அத்தைக்கிட்ட போறேன்.” என தன்வந்த் எழுந்து ஓட, அவனுக்கு பின்னே தயானந்தும் ஓடிவிட்டான்.

“டேய்… டேய்…” என நிசப்தி கத்தியதை காதிலேயே வாங்கவில்லை.

“உங்களோட… இப்போ இந்த சண்டை ரொம்ப முக்கியமா? பசங்க ஓடிட்டாங்க.”

“ஹேய் குட்டீஸ் எல்லாரும் ஒன்னா இருக்கும் போது, நீ இவங்களை கூப்பிட்டு வந்தா ஒழுங்கா தூங்குவானுங்களா சொல்லு? அங்கேயேதான் நினைப்பு இருக்கும். அதுவும் அவங்க ரித்தி அத்தை இருக்கும்போது, நீ ஏன் இந்த வேலை பண்ற?”

“ம்ச்…” என்றவள் அப்படியே பெட்டில் சாய,

“என்னாச்சு? எழுந்துக்கோ, ட்ரெஸ் சேன்ஞ் பண்ணு.”

“ம்ச்… டயர்டா இருக்குப்பா… ட்ரெஸ் தானே, நீங்க சேன்ஞ் பண்ணிவிட மாட்டீங்களா?” என கண்ணை சிமிட்ட,

“வாவ்! என்ன ஒரு ஆஃபர் இது. இப்படியெல்லாம் ஆஃபர் தீபாவளி, பொங்கல் மாதிரி எப்போவாச்சும் தான் கிடைக்கும். அதை மிஸ் பண்ண இந்த விக்ரம் என்ன முட்டாளா?” என அவள் யோசிக்கும் முன்னே, அவள் மீது மொத்தமாக விழ,

“ஹேய்… ஹேய்…” என அவள் அடுத்து கத்தும் முன்னே, வெறித்தனமாக உதடுகளை தன் வன்மையான உதடுகளால் மொத்தமாக கவ்வி, இடையை இறுக்கமாக வளைத்திருந்தான்.

அவள் கண்ணில் மயக்கத்தைக் கண்ட விக்ரம், மேலும் மேலும் அவளுள் புதைய, மூச்சு வாங்க அவனிடமிருந்து பிரிந்தவள், “ஷ்ஷ்… என்ன இப்படி… வலிக்குதுப்பா…” என தன் இதழைத் தடவ,

“ம்ம்… அது… அது என்ன மேக்னட்டா? என்னை விடவே மாட்டேங்குதுடி… உன்ன மாதிரியே உன் உதடும்…” என்றான் அவள் கைகளை எடுத்துவிட்டு தான் விரல்களால் வருடியபடி.

“ஆஹான்… நான் என்ன பண்ணேனாம்? இந்த வக்கீல்தான் என்னை இன்னும் மயக்கத்துலயே வச்சுருக்கார்.” என்றாள் கிறங்கிப் போய்.

“அதுதான் எனக்கு புரியவே இல்லை. நான் உனக்கு ஒன்னுமே செஞ்சதில்லை. பாப்பா வந்தபிறகு தான் என் பார்வையே உன்மேல விழுந்தது. அப்பவும் பாப்பாக்கானு பார்த்தேன். எந்த நொடி, எப்போ நீ எனக்குள்ள வந்தனு இன்னும் தெரியல. ஆனா இவ்வளவு நடந்த பிறகும் நீ என்னை விட்டு போகாம, என்கூடவே இருந்து சாபமா இருந்த வாழ்க்கையை வரமா மாத்திக் கொடுத்துருக்க. உண்மையிலேயே நீ என் வாழ்க்கையில வந்த தேவதைதான்.” என்றான் உணர்ச்சி பொங்க.

அமைதியாக சிரித்தவளின் முகத்தை இழுத்து தன் மார்புகூட்டில் அழுத்தி, “உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனசு நிறைஞ்சு போகுது. அது… அந்த ஃபீலிங் எல்லாம் சொன்னா புரியாது. அது எனக்கு சொல்லவும் தெரியல.” என்றான் இன்னும் இறுக்கத்தைக் கூட்டி.

நிசாவிற்கு அவனை விட, அவன் முகம், அதில் தெரிந்த அந்த ரசனையான புன்னகை, அதை ரசித்து சொன்ன விதம் எல்லாமே அவளை ஒரு மாய உலகுக்கு கொண்டு சென்றது. விழியெடுக்காமல் அவனை பார்த்தபடியே மார்பில் முட்டிக்கொள்ள,

“இப்போவும் உன் அளவுக்கு நான் உன்னை லவ் பண்ணல.” என்றான் பெருமூச்சோடு.

“என்னை சுத்தி எத்தனை பேர் இருந்தாலும், நீங்க சத்தமே இல்லாம என்னை பார்த்துக்குற அந்த ஃபீல்… அது எனக்கு சொல்லத் தெரியல. இதெல்லாம்தான் உங்க காதல் விக்ரம். இது என் அப்பா எனக்கு கொடுத்த ஃபீல். அதை நீங்க எனக்கு கொடுக்குறீங்க.” என்றாள் அவன் முதுகை வருடியபடி.

“ம்ம்… ஆனாலும்…” என்று அவன் முனங்க, இனி வேலைக்காகது என நினைத்தவள், “இப்படியே புலம்பிட்டுத்தான் இருப்பீங்கன்னா, நான் தூங்குறேன். நான் ரொம்ப டயர்ட்…” என அவன் காதில் முணுமுணுக்க,

“நோ… நோ… தூங்கலாம்… தூங்கலாம்… ஆனா லேட்டா… இப்போ எனக்கு நீ வேணும், ரொம்ப ஏங்க வச்சுட்டடி…” என கிடைத்த இடத்தில் கடிக்க,

“ம்ச்… பாவா…” என்ற வார்த்தைகள் சில நொடிகளில் தவிப்பாக, வெட்கமாக, சிணுங்கலாக, பின் முனங்கலாக மாறி அந்த அறையே நிறைந்து போனது.

சில நிமிடங்களில் பிரிந்தவன் அவளைப் பார்த்து சிரிக்க, “உங்களோட…” என போர்வையை தலை வரை இழுத்து மூடிக்கொண்டு, “அந்த நைட்டியை எடுத்து கொடுங்க.” என முனக,

“அதெல்லாம் இனி மார்னிங்தான்.” என அவளோடு போர்வைக்குள் வந்தவன், “நாளைக்கு ஹாஸ்பிடல் போய் அந்த பொண்ணை பார்த்துட்டு வந்துடலாம்.” என்றான், இப்போது குரல் மாறியிருந்தது.

“ம்ம்…” என்றவளுக்கும் ஒரு பெருமூச்சுதான்.

வெளியூரிலிருந்து வேலைக்கென வந்த பெண்கள், ஒரு ஏஜென்ட் மூலம் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் சேர்ந்திருக்க, இரண்டு மாதம் எந்த பிரச்சனையும் இல்லாமல் செல்ல, மூன்றாம் மாதத்திலிருந்து பாலியல் ரீதியான தொல்லைகள் ஆரம்பித்திருக்கிறது.

அதில் ஒரு பெண் துணிந்து வீடியோ எடுத்து வெளியிட்டுவிட, அடுத்த நாளே அந்தப் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு, கடையின் மாடியிலிருந்து கீழேத் தள்ளப்பட்டிருந்தாள்.

காவல் துறையில், திருடிவிட்டு பிடித்ததும் தப்பித்துக் கொள்வதற்காக, மாடியிலிருந்து குதித்து விட்டதாக கடையின் ஓனர் வழக்குப் பதிவு செய்ய, பெண்ணை பெற்றவர்களும் உடன் பணி புரிந்தவர்களும் போராட்டம் நடத்த என, இந்த வழக்கு மீடியாவின் புண்ணியத்தில் மக்களின் பார்வைக்கு வந்துவிட, கடைசியில் நீதிமன்றமே இந்த வழக்கை எடுத்து நடத்த ஆரம்பிக்க, அதில் அந்த பெண்ணுக்காக நின்றாள் நிசப்தி.

இன்றுதான் அந்த கேசின் ஃபைனல் ஹியரிங். அனைத்து சாட்சிகளும் குற்றவாளிக்கு ஆதரவாக இருக்க, போக்சோவில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு வழங்கப்பட்டது.

அந்தப் பெண் இன்னும் கோமாவில் இருந்து வெளிவரவில்லை. பிழைக்கவும் வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் கூறியிருக்க, மனமுடைந்து போனாள் பெண்.

“ம்ச்… பார்த்து என்ன செய்ய…?” என்றவள், அப்படியே கணவன் தோளில் சாய்ந்து விட்டாள்.

மனைவியின் தலையை வருடியபடியே இருந்தவன், “செய்யலாம்… நம்மளால என்ன முடியுமோ அத செய்யலாம், இப்போ தூங்கு.” எனவும்,

“ம்ம்ம்… ம்ம்…” என்றபடியே அவளும் விழிமூட, விக்ரம்தான் தூங்காமல் தன் தூங்கும் நிலவைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

இனி வரும் காலத்தில் இவளுக்காகவாவது, எதாவது செய்ய வேண்டும் என்று எண்ணியபடியே மனைவியை அணைத்துக் கொண்டு அவனும் கண்ணயர்ந்தான்.

காட்டாறு போலே

சில வேளையில்

காவேரி ஓடும் பல பாதையில்

ஆனாலும் ஒரு நாள்

கடல் சேர்ந்திடும்

நாள் ஆன போதும்

அது நேர்ந்திடு

You may also like

1 comment

M. Sarathi Rio May 3, 2026 - 7:44 pm

உண்மையிலயே விக்ரம் வாழ்க்கையி வளம் சேர்க்க வந்த தேவதை தான் நிசப்தி.

😀😀😀

CRVS (or) CRVS 2797

Reply

Leave a Reply to M. Sarathi Rio Cancel Reply

About Me

Featured