தளிர் 77
“விக்ரமுக்கு என்ன அங்கிள்?” என்ற நிசப்தியின் பயந்த குரலில், ரேணுகாவிற்கும் பயம் வர, ரேணுகாவும் தன் அண்ணனைப் பயந்துதான் பார்த்தார்.
“விக்ரமுக்கு ஒன்னும் இல்ல, ஆனா அவனை போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்க.” என்றார் மெல்ல.
“என்ன… என்ன…?” என மீண்டும் மீண்டும் பதட்டமாக கேட்க,
“கொலை செஞ்சா அரெஸ்ட் பண்ணாம…” என அவர் பதிலுக்கு கோபமாக கேட்க, நிசப்தியும் ரேணுகாவும் அதிர்ச்சியில் அரண்டு போய் அவரையே பார்த்தனர்.
“கொலையா?” நா வறண்டது பெண்ணுக்கு.
“அண்ணா எனக்கு ஒன்னும் புரியல, தயவுசெஞ்சு புரியுற மாதிரி பேசுங்க.” என ரேணுகா ஆற்றாமையாக கேட்க, நாகேஷ், வசந்த் தன்னிடம் கூறியதை அவர்களிடம் விவரித்தார்.
***
விக்னேஷ், ஸ்வாதியிடம் கண்ணைக் காட்டியதும், சற்றும் யோசிக்காமல் ஸ்வாதி துப்பாக்கியால் விக்ரமை நோக்கி சுட, அதை கவனித்த ரவி நொடியும் தாமதிக்கமல், “விக்ரம்!” என அலறியபடி, தன்னிடமிருந்த விக்னேஷை விக்ரமை நோக்கித் தள்ளிவிட, அதே சமயம் ஸ்வாதியின் பிஸ்டலில் இருந்து வந்த தோட்டா, சரியாக விக்னேஷின் இடது கையைத் துளையிட்டு சென்றிருந்தது.
அதைச் சற்றும் எதிர்பாராத ஸ்வாதி, விக்னேஷின் கையில் வழிந்த குருதியைப் பார்த்து, “ஓ நோ… விக்கி… விக்கி…” என அவனிடம் வர, அதற்குள் ஸ்வாதியைப் பிடித்திருந்தான் ரவி.
“திருந்த மாட்டல்ல… திருந்தவே மாட்டல்ல… திருந்தாத… நீ திருந்தவே திருந்தாத. இன்னும் உன்னையெல்லாம் உயிரோட வச்சுருக்குறதே தப்பு. நீ செஞ்ச எல்லாத்தையும் பொறுத்து, உனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கணும்னு நினைச்சேன் பாரு, என்னை செருப்பாலயே அடிக்கணும். உனக்கொரு வாய்ப்பு கொடுக்கணும்னு நினச்சதே தப்புன்னு, நொடிக்கு நொடி உணர வச்சுட்டே இருக்க.
அம்மா இறந்துட்டாங்க, அதுக்கு இவன்தான் காரணம். அப்போக்கூட அவனை விடணும்னு உனக்கு தோனல இல்ல… அப்படி என்னதான்டி அவன் மேல உனக்கு காதல்? ச்சே…” என, தன் ஒட்டுமொத்த வெறுப்பையும் முகத்தில் கொண்டுவந்து அவளை அப்படியே தள்ளிவிட, சரியாக அங்கு உடைந்திருந்த டீப்பாயின் மேல் போய் விழுந்தாள் ஸ்வாதி.
“ஏய்! அவளை விடு ரவி, இவனுக்காக உன் தங்கையை கொல்ல பார்க்குறியே, உனக்கே இது தப்புன்னு தோனல…” என்று முடிக்கும் முன்னே, விக்ரம் அவனை ஸ்வாதி விழுந்த இடத்திலேயே, அவள் மேலேயே தள்ளிவிட்டான்.
இருவரும், “அம்மா…” என்றலற, அவர்களுக்கு எதிரில் வந்து நின்ற விக்ரமின் முகம் மிகவும் இறுக்கமாக இருந்தது.
வலி, வேதனை, துரோகம் இதற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு பாவனை. இருவரையும் கூர்மையாக பார்த்தவன், “உங்க ரெண்டு பேர்ல யார் உயிரோட இருக்கணும்னு நீங்களே முடிவு பண்ணி சொல்லுங்க. இதுதான் உங்களுக்கான லாஸ்ட் சான்ஸ்…” என்று கட்டளையாக சொன்னவனின் பார்வை, ஸ்வாதியை அழுத்தமாகப் பார்த்தது.
“ஹா… ஹா… கொல்லணும்னு நினைக்கிறவன் சான்ஸ் கொடுக்கமாட்டான்…” என அந்த நேரத்திலும் விக்னேஷ், விக்ரமை எள்ளலாக பேசி சிரிக்க,
“ஹா… ஹா… அதுவும் சரிதான், சாய்ஸ் கொடுத்தது என் தப்புதான். இவ உனக்காகத்தானே எல்லாம் பண்ணா? உன்கூட வாழணும்னு தானே இவ்வளவு வேலையும் பண்ணா? ம்ம்ம்… உனக்காக… உனக்காக… எல்லாமே உனக்காக… இப்படி அவ வாழக்கையைத் தொலைச்சு உனக்காக இருந்தவளுக்கு, நீ என்ன செய்ய போற, ஹ்ம்ம்ம்…?” என்றவன், பிஸ்டலால் தன் தலையில் தட்டி ஏதோ யோசிப்பது போல் பாவனை காட்ட,
“ரெண்டு பேரையும் போட்டுரு, இதுங்க இருந்து யாருக்கு லாபம்? போய் சேரட்டும்…” என ரவி, தங்கையைப் பார்த்து அத்தனை வெறுப்பாக சொல்ல,
“ப்ளீஸ் விக்ரம்… எங்களுக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடு, நாங்க இனி இந்த பக்கமே வரமாட்டோம். எனக்கு அவன்கூட வாழணும் விக்ரம். ப்ளீஸ்…” என கெஞ்சியவளைப் பார்த்து, நக்கலாக சிரித்தபடியே விக்னேஷை நோக்கி, தன் பிஸ்டலை உயர்த்தினான்.
“நோ… நோ விக்ரம்… அப்படி பண்ணாத. ப்ளீஸ் விக்ரம்… ரவி, நீ சொல்லு…” என கெஞ்சியவளைப் பார்த்தவனுக்கு, ‘இப்படித்தானே நிசாவும் அன்று இவனிடம் கெஞ்சியிருப்பாள்.’ எனத் தோன்ற, அடுத்த நொடி விக்னேஷை நோக்கியிருந்த பிஸ்டல் ஸ்வாதியின் நெற்றியைக் குறிபார்க்க, அவளோ முகம் முழுவதும் பயத்துடன், “விக்ரம்…” என கெஞ்ச, அதை கண்டுகொள்ளாத விக்ரம், “வெரி சாரி ஸ்வாதி…” என ட்ரிக்கரை அழுத்த,
விக்ரமின் முகத்தைப் படித்த விக்னேஷ், “நோ ஸ்வீட்டி…” என்றபடியே, ஸ்வாதியின் மேல் பாய இருந்த தோட்டாவை, அவள் மேல் விழுந்து தான் வாங்கிக்கொண்டான் விக்னேஷ்.
“அய்யோ… விக்கி… விக்கி…” என, அந்த வீடே அதிரும்படி ஸ்வாதி கதற, அவளது கதறலைக் காண முடியாமல், “ஐ ஆம் சாரி… சாரி ஸ்வீட்டி, மிஸ் யூ அன்ட் நீ என் லைஃப்ல வந்ததுக்கு லாட்ஸ் ஆஃப் தேங்க்ஸ். லவ் யூ ஸ்வீட்டி! லவ் யூ…!” என்றபடியே விக்னேஷ் அவளின் மடியிலே விழ, அதைப் பார்த்த ஸ்வாதியின் பார்வை அப்படியே அவனிலேயே நிலைத்துப் போனது.
‘என்னாச்சு? என் விக்கிக்கு என்னாச்சு?’
‘என் விக்கி என்னை விட்டு போயிட்டானா? அய்யோ! அவன் இல்லையா? அவன் இல்லாமல் நான் எப்படி?’
‘இல்லை… அப்படி இல்லை…’
“ஹெல்ப்… ஹெல்ப் பண்ணுங்க… ரவி சீக்கிரம் வா, ஹாஸ்பிடல் போகலாம். விக்ரம் ப்ளீஸ்.. .” என இருவரிடமும் மாறி மாறி கெஞ்சியவளைப் பார்த்து அமைதியாக நின்றான் விக்ரம்.
ரவியோ, யாரோ ஒருவனுக்காக தன் வாழ்க்கையைத் தொலைத்து, அதை இன்னமும் உணராமல் துடிப்பவளை நினைத்து, மனம் கனத்துப் போய் பார்த்தான்.
“விக்கி வா… விக்கி ப்ளீஸ்… நான் எப்படி தனியா இருக்க முடியும்? நீ வா… வாடா… நீயில்லாம முடியாது விக்கி… வா…’ என கத்துகிறாள், கதறுகிறாள், அவனை உலுக்குகிறாள், கெஞ்சுகிறாள், கோபப்பட்டு அடிக்கிறாள். உடனே, அவனை அணைத்துக் கொண்டு அழுகிறாள். ஆனால் பயன்தான் இல்லை.
அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த நண்பனிடம், “விக்ரம்…” என்று ரவி வர,
“ம்ச்…” என அவனைத் தள்ளிவிட்டவன், பிஸ்டலை வைத்து தன் தலையைத் தட்டிக் கொள்ள, அதற்குள் ஆம்புலன்சும் அதைத் தொடர்ந்து வசந்த்தும் தன் டீமோடு வந்துவிட்டார்.
ரவியோ, விக்ரமிடம் இருக்கும் பிஸ்டலை மறைக்க முயற்சி செய்ய, அவனோ அதை தடுக்க, அதற்குள் அனைவரும் உள்ளே வந்துவிட இனி ஒன்றும் செய்யமுடியாது என அமைதியாகிவிட்டான் ரவி.
வசந்த் அங்கிருந்த சூழலை கிரகித்து, உடனே மதியழகியை ஆம்புலன்சில் ஏற்றி, கூடவே ரவியையும் அனுப்பிவிட்டு உள்ளே வர, அதற்குள் மற்றொரு ஆம்புலன்சுக்கு தெரிவித்து, விக்ரமிடமிருந்து பிஸ்டலை வாங்கி, அவனை ஒரு ஓரமாக அமர வைத்திருந்தனர்.
உள்ளே வந்த வசந்த், விக்னேஷின் அருகில் சிலை போல் அமர்ந்திருந்த ஸ்வாதியைப் பார்த்தபடியே விக்ரமிடம் வந்து, “நான் என்ன சொன்னேன், நீ என்ன செஞ்சிருக்க? முட்டாள்! பிஸ்டலை அவக்கிட்ட கொடுக்காம உன கைல? இப்போ என்ன பண்றது…?” என பல்லைக் கடிக்க,
“ம்ச்… நானே அரெஸ்டாகத் தான் போறேன்.” என மிகவும் அழுத்தாமாக சொல்லி, பெரிய குண்டைத் தூக்கி போட, “வாயை மூடு!” என எரிச்சலில் கத்திய வசந்த், விக்னேஷின் அருகில் சென்று அனைத்தையும் பார்க்க, அதற்குள் மற்றொரு ஆம்புலன்சும் வந்திருந்தது.
அதில் வந்தவர்கள் விக்னேஷை ஏற்ற, அதுவரை சிலையாக அமர்ந்திருந்த ஸ்வாதி, விக்னேஷைத் தூக்கவும் வெறி கொண்டவள் போல் கத்தி, “விடு… என் விக்கியை விடு… அவனை எங்கிட்ட இருந்து பிரிக்காதீங்க… அவனை கொடுங்க, அவன் வேணும்… விக்கி… விக்கி…” எனக் கதறி, தூக்கியவர்களைப் பிடித்து கீழேத் தள்ளி, அங்கிருந்த கண்ணாடித் துண்டை எடுத்து, யாரும் தடுக்கும் முன்னே விக்ரமை நோக்கி எறிந்திருந்தாள்.
அது சரியாக அவன் நெத்தியைப் பதம் பார்த்திருக்க, அவளை வெறித்துப் பார்த்தபடியே அமர்ந்திருந்தான் விக்ரம்.
“உன்னை கொல்லாம விடமாட்டேன்டா… என் விக்கியை எங்கிட்ட இருந்து பிரிச்சிட்டியே… உன்னை… உன்னை…” எனக் கத்திக் கொண்டிருந்தவளை, போலீசார் பிடித்து ஆம்புலன்சில் ஏற்றி கிளம்ப, விக்ரமைத் தன்னோடு அழைத்துக் கொண்டு ஜிஹச் வந்துவிட்டான் வசந்த்.
அங்கு இருவரையும் மார்ச்சுவரியில் வைத்திருக்க, ரவிதான் ஓடிக்கொண்டே இருந்தான்.
விக்ரம் தொடர்ந்து அமைதியாகவே இருந்தான். அவன் என்ன நினைக்கிறான், என்ன செய்யப் போகிறான் என எதுவும், யாருக்கும் புரியவில்லை.
வசந்த் கேட்டு கேட்டு சலித்து போய் அமர்ந்திருந்தான். அவருக்கும் மேலிடத்திலிருந்து ப்ரஸர் வந்த வண்ணம் இருந்தது.
“என்ன செய்யலாம் விக்ரம்?” என மீண்டும் மீண்டும் கேட்க,
“ப்ச்… நான் அரெஸ்ட் ஆகிக்கிறேன் வசந்த். அதுக்கு என்ன பண்ணணுமோ பண்ணுங்க.” என உறுதியாக சொல்லிவிட,
‘நீயே பேசு.’ என எரிச்சலாக ரவியிடம் சொல்லிவிட்டு அவன் நகர்ந்து கொள்ள,
“இடியட்! மறுபடியும் ஆரம்பிக்காத… அதுதான் எல்லாம் முடிஞ்சதே, இனியும் என்னடா? வசந்த் சொல்றதை கேளேன்…” என ரவியும் அதையே சலிப்பாக கேட்க,
“ம்ச்… என்ன முடிஞ்சது? எதுவும் முடியல, எல்லாருக்கும் சரிதான், ஆனா நிசாவுக்கு சரியா? நான் அவளுக்கு நியாயம் செய்யணுமில்ல…” என்றவனை ரவி புரியாமல் பார்க்க,
அதற்குள் பத்திரிகையாளர்களின் கூட்டம் கூட ஆரம்பிக்க, அந்த எம்எல்ஏவும் அவர்களது ஆட்களும் கூட்டமாக வந்திருந்தனர்.
“என்ன… என்ன…” என வெள்ளை வேட்டிகளைப் பார்த்து, பத்திரிகை கூட்டம் முன்னே வர, அவர்களை எல்லாம் செக்கியூரிடிஸ் பிடித்துக்கொள்ள,
‘ஷ்ஷ்ஷ்… இவன் வேற…’ என டென்சன் ஆன ரவி, அவரை முறைத்துப் பார்க்க, அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை வெள்ளை வேட்டி.
விக்ரமின் அருகில் வந்தவர் அவனை விட்டுவிட்டு வசந்த்திடம், “என்ன கமிஷ்னர் சார், லாயர் சார் என்ன சொல்றார்?” எனத் தோரணையாக கேட்க,
“சரண்டர் ஆகுறேன்னு சொல்றான், உங்க கேஸ் ஆப்பனன்ட் லாயர் ஒரே ப்ரஷர். அதனால தான் வேறுவழி இல்லாம உங்களுக்கு சொல்ற மாதிரி ஆகிடுச்சு.” என்றதும்,
“நீங்க சொன்னது நல்லதா போச்சு கமிஷ்னர் சார், இனி நான் பார்த்துக்குறேன். முதல்ல இவருக்கு முதலுதவி செய்ய சொல்லுங்க, ஆக வேண்டியதை நாம பார்த்துக்கலாம்.” என்று வசந்த்திடம் கண்ணைக் காட்ட,
அவரும் புரிந்தது போல் தலையாட்டி விக்ரமிற்கு முதலுதவி அளிக்க கேசுவாலிடி செல்ல, அதற்குள் முகுந்தனும் நாகேஷூம் வந்திருந்தனர்.
விக்ரமிற்கு இன்ஜெக்சன் கொடுத்து, தையலிட்டு ஒரு இரண்டு மணி நேரம் உறங்க வேண்டும் என, அதற்கும் இன்ஜெக்சன் கொடுத்து அறைக்கு மாத்தியிருந்தனர்.
இங்கு மற்றொரு பக்கம் ஸ்வாதிக்கும் சிகிச்சை நடக்க, அவளோ எதற்கும் ஒத்துழைப்பு கொடுக்காமல், ஹிஸ்டீரியா பேசன்ட் போல கத்தி கூப்பாடு போட்டு, “என்னை விக்கிகிட்ட விடு… அவனை பார்க்க விடு…” எனப் பெரிய ஆர்ப்பாட்டமே செய்திட, அவளுக்கும் மயக்க மருந்தைக் கொடுத்து, அதன்பிறகு தான் சிகிச்சை ஆரம்பித்தனர்.
இதையெல்லாம் பார்த்த ரவி ஏதோ யோசித்தான், அந்த அமைச்சரிடமும் தீவிரமாக பேசினான். அவர் மறுத்து முடியவே முடியாது என்று கூற,
“எனக்கு நிசா லைஃப் ரொம்ப முக்கியம், அவளுக்காக விக்ரம் ஏதோ ரிஸ்க் எடுக்க நினைக்கிறான். சரிதான், அவனுக்கும் சரி, நிசாவுக்கும் சரி இந்த கேப் தேவைதான். சரியாகும், அவன் சரி செய்ய நினைக்கிறான், விடுங்க.” என்று விட அமைச்சர் விடவே இல்லை.
மீண்டும் மீண்டும் மறுத்து பேச வர, “உங்க கேஸ் தானே, அது நான் பார்த்துக்குறேன். அதே சமயம் விக்ரமையும் இந்த கேஸ்ல இருந்து வெளியே எடுத்துடுவேன். உங்க பக்கம் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருந்தா போதும்.” என்று முடித்துவிட, அவரும் புரிந்தது என்பது போல் அடுத்து செய்ய வேண்டியதைக் கேட்டுக் கொண்டு கிளம்பிவிட்டார்.
அமைச்சர் கிளம்பியதும் ரவி பேசியதை வசந்த் ஆட்சேபிக்க, “வசந்த் இந்நேரம் நீங்களே அவன் பிளானை புரிஞ்சிருப்பீங்கன்னு நினைச்சேன்.” என புருவத்தை உயர்த்த,
கண்ணை மூடி யோசித்தவன் பின் புரிந்தது போல, “ஓ மை காட்! வெரி டேஞ்சரஸ் ஃபெல்லோ இவன்…” எனப் பல்லைக் கடித்து, அரெஸ்ட் வாரன்டை இஸ்ஸூ செய்ய சொன்னான் வசந்த்.
நிசாவிற்காக சரண்டர் ஆகப் போவது வரை மட்டுமே பெண்களிடம் நாகேஷ் கூற, ரேணுகா இதற்கு என்ன சொல்வது எனத் தெரியாமல் நிசாவைப் பார்க்க, அவளோ அமைதியாக கண்களை மூடிக் கொண்டாள்.
விக்ரமிடமிருந்து இதைத் தான் எதிர்பார்த்தாளோ பெண்ணவள்!
‘யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்
என்ன சொல்வேன் இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும்.’
***
1 comment
அப்படின்னா… நிசாவை திருப்தி படுத்த தான் இந்த அரெஸ்ட்டா..? சூப்பர்.
😀😀😀
CRVS (or) CRVS 2797