தளிர் 30
அன்று வழக்கம்போல பார்க்கவி நேரமே கிளம்பிவிட, எப்போதும் இருந்து பூட்டிச் செல்லும் ஆள் அன்று விடுமுறை எடுத்திருக்க, நிசப்திதான் அனைத்தையும் பார்த்து எடுத்து வைத்து பூட்டிவிட்டுக் கிளம்ப வேண்டியதாகிப் போனது.
வேணுகோபாலுக்கு அழைத்து இரவு வர லேட்டாகிவிடும் என்று சொல்லிவிட்டு, தனது ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு பறக்க ஆரம்பித்தாள். வண்டி நகர்ந்த அரை மணி நேரத்தில் யாரோ தன்னைப் பின் தொடர்வதாகத் தோன்ற, பாதுகாப்பாக ஜன சந்தடியில் வண்டியை நிறுத்திவிட்டு சுற்றும் முற்றும் பார்க்க, அப்படி ஒன்றும் அவள் கண்களில் படவில்லை.
தன் பிரம்மையோ என்று நினைத்தவள் வண்டியை கிளப்ப ஆரம்பிக்க, சரியாக அடுத்த பத்து நிமிடத்தில் அவளுக்கு முன்னே ஒரு மினி வேன் கவிழ்ந்து கிடக்க, அவளின் உள்ளுணர்வு ஏதோ தவறென்று சொல்ல, வண்டியை நிறுத்திப் பார்க்க வேண்டும் என்றெல்லாம் யோசிக்காமல் வேகமெடுத்தாள் பெண்.
இதை சற்றும் யோசிக்காதவர்கள் முதலில் தடுமாறி, பின் மறைத்து வைத்திருந்த ஜாகுவாரில் ஏறிப் பறக்க விட்டனர். என்னதான் வேகமாகப் போனாலும், பதட்டத்திலும் பயத்திலும் பின்னே அவர்கள் வருகிறார்களா? என்று பார்த்துக்கொண்டே வண்டியை ஓட்டியதிலும், அவளால் முழுக்கவனமாக ஓட்ட முடியாமல் திணறி, கீழே விழுந்திருந்தாள் நிசப்தி. விழுந்த நொடி எழுந்தும் விட்டாள்தான், ஆனால் அதற்குள் ஜாகுவார் அவளைச் சுற்றி ஒரு வட்டம் அடித்து நின்றிருந்தது.
நிதர்சனம் உணர்ந்து ஹெல்ப்… ஹெல்ப் என கத்துவதற்குள், அவள் வாயைக் கட்டி வண்டிக்குள் ஏற்றியிருந்தனர் அந்த ரவுடிகள். அடுத்து என்ன நடந்தது என யோசிக்கும் திராணியில்லாமல் இருந்தவளின் காதில், “பாஸ் அந்த பொண்ணு மயங்கிடுச்சு, நீங்க சொன்ன இடத்துக்கு கொண்டு வந்துடுறோம். இன்னும் ஒரு மணி நேரத்துக்கு என்ன நடந்தாலும் தெரியாது.” என்ற பேச்சைக் கேட்டவாறு மயங்கியிருந்தாள் பெண்.
அடுத்து அவள் கண்விழிக்கும் நேரம் ஒரு அறையில் பூட்டப்பட்டிருந்தாள். நல்ல வேளைக்கு கை, கால்கள் கட்டப்படாமல் இருந்தது. கண்களைத் திறக்காமலே சுற்றுப்புறத்தை உள்வாங்க ஆரம்பிக்கும் நேரம், கதவு திறக்கப்பட்டது. பட்டென்று மயக்கத்தில் இருப்பது போல் இருக்க, “என்னடா இன்னும் இந்த பொண்ணுக்கு மயக்கம் தெளியல? பாஸ் எப்போ வருவாராம்? சீக்கிரம் வேலை முடிஞ்சா, கழுத்த அறுத்துத் தூக்கிப் போட்டுட்டு போலாம்னு பார்த்தா, ஜவ்வா இழுத்துட்டு இருக்கு.” என ஒருவன் சொல்ல,
“டேய் அரமெண்டலு இது வேற மேட்டர். நீ கொஞ்சம் மூடிட்டு சும்மா இரு, இல்ல சாவடிச்சிடுவேன்.” என்றவன், அருகில் வந்த நேரம் சற்றும் யோசிக்காமல் அவனைக் கீழேத் தள்ளிவிட்டு ஓடியிருந்தாள் நிசப்தி.
திக்கு தெரியாமல் ஓடியவள் வழி தெரியாமல், கால் போன போக்கில் தனக்கு நேரேத் தெரிந்த காட்டுக்குள் ஓட ஆரம்பித்தாள். அதன்பிறகுதான் அவளைப் பிடித்து விக்னேஷ் சொன்ன ஆற்றோரமாக இருந்த மர வீட்டிற்கு கொண்டு சென்றிருந்தனர்.
“என்ன ஓட்டம் ஓடுறம்மா நீ? நாங்க என்ன வயசு பையனுங்களா? உன் ஓட்டத்துக்கு வரதுக்கு…” என காலைப் பிடித்தபடி ஒருத்தன் கீழே அமர,
“அடச்சே வாய மூடு…” என அதட்டிய மற்றொருவன், அவளைச் சேரில் தள்ளிக் கை, கால்களை கட்ட,
“டேய் யார்டா நீங்க எல்லாம், உங்களை யாரு இந்த வேலைப் பார்க்க சொன்னது. போலிஸ்க்குத் தெரிஞ்சா என்னாகும் தெரியுமா?” என்றவளை நேராகப் பார்த்தவன், “விக்கி சார் தான்மா உன்னைக் கடத்தச் சொன்னது. என்னமோ அவர் வாழ்க்கைல குறுக்க மறுக்க போறியாம். எதுக்கு உனக்கு இந்த வேண்டாத வேலை? கல்யாணத்தப் பண்ணிட்டு செட்டிலாவுறத விட்டுட்டு…” என கிண்டலாகச் சொல்ல,
நிசப்தியின் மனதில் பதிந்த விக்கி விக்ரமாகிப் போனான். அவன்தானே முன்னமும் ஒருமுறைக் கடத்தியிருந்தான்.
‘கடவுளே!’ என மனதுக்குள் புலம்பியவள், வீட்டில் தன்னை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அப்பாவை நினைத்து அழுகை வந்தது. எப்படியும் வீட்டுக்கு வரவில்லை என்றால் இன்னேரம் பார்க்கவிக்கு அழைத்து விசயத்தைச் சொல்லியிருப்பார் அப்பா என்று சற்று ஆசுவாசம் வந்தது.
அவளின் எண்ணப்படியேதான் வேணுகோபாலும் செய்திருந்தார். நிசப்தி வர லேட்டாகவுமே பார்க்கவிக்கு அழைத்து சொல்லியிருக்க, அவளும் உடனே தனக்கு தெரிந்தவர்களிடம் விசாரிக்க ஆரம்பித்திருந்தாள். அப்படி விசாரிக்கும் நேரம் ஆஃபிசை அடைக்கும் பையன் மாற்றி மாற்றிப் பேச, சந்தேகம் வந்து மிரட்டி விசாரிக்க விக்னேஷின் கடத்தலுக்கு உதவியதை ஒப்புக் கொண்டான். விக்னேஷ்தான் இன்று விடுமுறை எடுக்கச் சொன்னதாகவும் சொல்ல, பார்க்கவிக்கு பதட்டம் தொற்றிக் கொண்டது.
விக்னேஷ், பார்க்கவி, விக்ரம், ரவி எல்லோரும் ஒரே பேட்ஜ் மேட் என்றாலும், பார்க்கவி விக்ரமுடனே இருப்பதால், விக்னேஷிற்கு பார்க்கவியைப் பிடிக்காது. அதனால் அவளும் அதிகம் அவனிடம் பேசியதில்லை. இப்போது எப்படி விக்னேஷைத் தொடர்பு கொள்வது எனத் தெரியாமல், விக்ரமிற்கு அழைத்து விசயத்தைக் கூறிவிட்டாள்.
“கவி, நீ பயப்படுற மாதிரி எல்லாம் இருக்காது, அவன் அந்தப் பொண்ணை ரொம்பவே லவ் பண்றான். இந்த பொண்ணு வேண்டாம்னு சொன்னதாலதான் இப்போ பிரச்சனை. அதைப்பத்தி பேசத்தான் கூப்பிட்டிருப்பான். நீயா எதுவும் யோசிச்சு எல்லாரையும் பயம் காட்டாத.” என விக்ரம் சாவதானமாகப் பேச,
“முட்டாள் மாதிரி பேசாதடா இடியட். நீ சொன்ன ஒரே ரீசனுக்காக மட்டும்தான், அவளை வேலைக்கு வச்சுக்கிட்டேன். மத்தபடி எனக்கும் அவளுக்கும் ஒன்னுமில்ல. நளைக்கு எதுவும் பிரச்சனை வந்தா நான் உன்னைக் கையைக் காட்டிட்டு போய்ட்டே இருப்பேன்.” என பார்க்கவி எரிச்சலாகக் கத்த,
“என்னடி இப்படியெல்லாம் பேசுற, என்னால பாதிக்கப்பட்ட பொண்ணுன்னுதான் ஒரு சாஃப்ட்கார்னர்ல உங்கிட்ட சேர்த்துக்கச் சொன்னேன். நீ என்னன்னா என்னை ஜெயிலுக்கு அனுப்பாம விடமாட்ட போலயே… சரி விடு, நான் வந்துடுறேன்.” என்றவன் அடுத்த பத்து நிமிடத்தில் பார்க்கவியின் வீட்டில் இருந்தான்.
பார்க்கவியின் பதட்டமும் கலங்கிய முகமுமே அவளது பயத்தைச் சொல்ல, அவளிடம் தன் விளையாட்டைக் காட்டாமல் வேகமாக வேலையில் இறங்கிவிட்டான்.
பல போன் கால்கள் மற்றும் அவனுக்குத் தெரிந்த காவலதிகாரிகள் மூலம் தேடுதல் வேட்டை என ஒருபக்கம் வேலை நடந்தாலும், மற்றொரு பக்கம் யோசனையிலேயே இருந்தான். பிறகு விக்னேஷிற்கு மிகவும் தெரிந்த ஒரு நண்பனைப் பிடித்து விசாரிக்க,
“எனக்குத் தெரியாது. அவ உன்னைத்தானே லவ் பண்ணா, நீதானே ஏற்கனவே அவளைக் கடத்திருக்க, இப்போ மறுபடியும் கடத்தி வச்சிட்டு விக்கி மேல பழி போடுறியா?” என நான் விக்கிக்கு உண்மையானவன் எனக் காட்ட, ஓங்கி ஒரு உதை உதைக்கத் தூரமாக போய் விழுந்தான் அவன்.
“அடிங்… என்ன மச்சானுக்கு பழசெல்லாம் மறந்துடுச்சு போல, வச்சு செஞ்சிருவேன் பார்த்துக்கோ… என்ன எங்கிட்ட வாங்கினது எல்லாம் பத்தல போல… காலேஜ்ல பார்த்த அதே விக்ரம்தான்டா இப்பவும் இருக்கேன். மோதணும்னா நேருக்கு நேர் மோதணும்டா. இப்படி பொம்பள பின்னாடி ஒளிஞ்சு வேலையைக் காட்டி பயமுறுத்திட்டு இருக்கான். ப்ளடி…” என வாய்க்கு வந்த கெட்ட வார்த்தகளை எல்லாம் சகட்டுமேனிக்குப் பேச,
“எருமமாடு… நீயும் முதல்ல அதத்தான் செஞ்ச, அம்னீஷியால மறந்துருப்ப மலமாடு. முதல்ல என் வேலையை முடிச்சுக் கொடுத்து என்னை அனுப்பு, அப்புறம் அவனை வச்சு செய்வியோ, இல்ல கொஞ்சுவியோ என்னமோ பண்ணித்தொல.” என பார்க்கவியும் கடுப்பில் கத்த,
“இவ ஒருத்தி!” என எரிச்சலாக முணுமுணுத்தவன், அவனை விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரிக்க, அவன் மூலம் கிடைத்த பதிலில் சற்று ஆடித்தான் போனான் விக்ரம். ஒருவழியாக பார்க்கவியை சமாதானம் செய்துவிட்டு வெளியில் வந்தவன், பின் ஒரு முடிவோடு தனது நண்பர்கள் மூலம் விக்னேஷின் இடத்தைக் கண்டுபிடித்து வந்து விட்டான். ஆனால் அவன் வருவதற்கு முன்பு அனைத்துமே நடந்து முடிந்திருந்தது.
விக்னேஷ் தன் ஆட்கள் சொன்னது போலவே விரைவாகவே அங்கு வந்திருந்தான். அவன் வரும் போது மயக்கத்தில் இருந்தாள் பெண். தன் ஆட்கள் அனைவரையும் பார்த்து, கையில் இருந்த பணக்கட்டைத் தூக்கி எறிந்துவிட்டு, “நீங்க கிளம்புங்க, மார்னிங் வந்து டிஸ்போஸ் பண்ணா போதும். நானோ இவளோ இங்க இருக்குறது யாருக்காச்சும் தெரிஞ்சாலோ, போலிஸ்க்கு போனாலோ அடுத்த செகன்ட் நீங்க இந்த உலகத்தைப் பார்க்க மாட்டீங்க, ரைட்… உங்களுக்கும் குடும்பம் குழந்தைனு வேற ஒரு லைஃப் இருக்குனு கேள்விப்பட்டேன்.” என இழுக்க,
“இல்ல பாஸ்… இல்ல பாஸ்… நாங்க இதைப் பத்தி மூச்சுக்கூட விடமாட்டோம் பாஸ்…” என்று அவசரமாகக் கோரஸாகச் சொன்னவர்கள், அங்கிருந்து விட்டால் போதும் என்பது போல் ஓடிவிட்டனர்.
நிச்சலனமாகக் கிடந்தவளின் முன்னே வந்து நின்றவன், அந்த முகத்தை ஆழ்ந்து ஒருமுறைப் பார்த்தான். அதில் அவனுக்கு எந்த தவறும் தெரியவில்லை. தவறு செய்தவர்கள் போலவும் இல்லை. ஆனால் ஏன் எனக்கு மட்டும் அப்படித் தோன்றுகிறது…’ என யோசித்தவன், உடனேத் தலையைக் குலுக்கி அந்த யோசனையை விரட்டிவிட்டு, அவளது கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கட்டுகளை அவிழ்த்துவிட்டான்.
அதில் சுரணை வரப்பெற்று மெல்லக் கண்விழித்தவள், விக்னேஷைப் பார்த்து, “நீங்களா? நீங்க எப்படி இங்க?” என்றபடியே தலையை உலுக்கினாள்.
“ஏன் இப்பவும் அந்த விக்ரம் கடத்திருப்பான்னு நினைச்சியோ… சும்மா கடத்தி விளையாட நீயென்ன பெரிய உலக அழகியா? அவனுக்கு உன்னைப் பார்த்தாலேப் பிடிக்கல. பிறகு ஏன் அவன் பின்னாடியே நாய் மாதிரி சுத்திட்டு இருக்க?”
“என்ன பேசுறீங்க… எனக்குப் புரியல…”
“இதை சின்னப் பிள்ளைகிட்ட சொன்னாக்கூட நம்பாது, உன் மேல அவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தேன்டி… ஆனா நீ… ச்சீ!”
“நீங்க எனக்கு இன்னும் புரியுற மாதிரி பேசல. புரிஞ்சா மட்டும்தான் என்னால பதில் சொல்ல முடியும்…” என்றாள் கலக்கமாக.
“ஷப்பா… என்ன நடிப்பு! அப்படியே கண்ணகிக்கு கசின் சிஸ்டர் மாதிரி பத்தினி வேசம். உன் வண்டவாளம் எல்லாம் இப்போ தண்டவாளத்துல ஏறிடுச்சு. உன் நடிப்ப நம்பி ஏமாற நான் இன்னும் அந்த பழைய முட்டாள் விக்னேஷ் இல்ல…” என ஆங்காரமாகக் கத்த,
“போதும் நிறுத்துங்க… இதுக்கு மேல் ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது. நானும் என் பொறுமையை இழக்கக் கூடாதுன்னு பார்த்தா விடுறது இல்ல. என்ன தெரியும் உங்களுக்கு என்னைப் பத்தி? ஒன்னும் தெரியாது, ஒன்னுமேத் தெரியாது…” என ஆக்ரோஷாமாகக் கத்தியவள்,
“எஸ் ஐ லவ் விக்ரம்…” எனச் சொல்லி முடிக்கும் முன்னே அவள் கன்னத்தில் தன் கையை இறக்கியிருந்தான் விக்னேஷ்.
அதில் அதிர்ந்து விழித்தவளைப் பார்த்து, “இந்த ஒரு வார்த்தைக்கே உன்னைக் கொல்லணும் போல இருக்குடி. போல என்ன, கொல்லத்தான் போறேன். ஆனா நீ அப்படி ஒரேடியா செத்துட்டா அந்த விக்ரமுக்கு வலி தெரியாதே, அந்த வலியை நினைச்சு, நினைச்சு அவன் வாழ்நாள் முழுக்க செத்து செத்துப் பிழைக்கணும். அதைப் பார்த்து நான் சிரிக்கணும்…” என கர்ஜித்தவன், அவளது உடையில் கை வைக்க,
“வேண்டாம்… ப்ளீஸ்… வேண்டாம்… நீங்க நினைக்கிற மாதிரி இல்ல விக்னேஷ். புரிஞ்சிக்கோங்க. இப்போ விக்ரம் சார் மேல எனக்கு எந்த எண்ணமும் இல்ல. ப்ளீஸ் என்னை விடுங்க. அப்பா தேடுவாங்க, பயந்துடுவாங்க விக்னேஷ் ப்ளீஸ்…” எனக் கெஞ்சிக் கொண்டே ஓட, அந்த அறையைத் தாண்டி அவளால் வெளியே போகவே முடியவில்லை.
“ப்ளீஸ் என்னை விட்டுடுங்க… ப்ளீஸ்…” எனக் காலில் விழுந்தவளை உதறித் தள்ளியவன், “உன்னைத் தொடக்கூட எனக்கு விருப்பம் இல்ல. அருவருப்பா இருக்கு. ஆனா அதுக்காக உன்னை அப்படியே விடவும் மனசு இல்ல…” என்றவன் அவளைக் கட்டி வைத்திருந்த நாற்காலியில், கால் மேல் கால் போட்டு திமிராக அமர்ந்தான்.
“ஓடி ஓடி எனக்கு டயர்டாகிடுச்சு. நீ என்ன பண்ற, இப்போ என் பக்கத்துல வந்து என் முன்னாடி நின்னு, உன்னோட ஒவ்வொரு ட்ரெசையும்…” என முடிக்கும் முன், “நோ…” என அலறியவள், “அதுக்கு நீ என்னைக் கொன்னு போட்ரு ப்ளீஸ்…” எனக் கெஞ்சியவளைத் துச்சமாகப் பார்த்தவன், “ஒன்” என்றபடியே தன்னுடைய மொபைலில் ஒரு வீடியோவை ஓடவிட்டான்.
அதில் வீதியில் வேணுகோபால் நடந்து போவதும், அவருக்குப் பின்னே இரண்டு ரவுடிகள் உருட்டுக் கட்டையுடன் நடப்பதும் தெரிய, “அப்பா…” என அலறிவிட்டாள் நிசப்தி.
“அப்பா… அப்பா ஒன்னும் பண்ணாத, அவரை விட்டுடு… நாங்க என்ன பாவம் பண்ணோம், விட்டுடு ப்ளீஸ்…” எனக் கெஞ்சியவளைக் கொஞ்சமும் ஈவிரக்கமில்லாமல் பார்த்தவன்,
“உன்னைப் பெத்து ஒழுக்கமா வளர்க்காம, பொறுக்கி மாதிரி வளர்த்ததுக்கு தண்டனை வேண்டாமா?” என நக்கலாகச் சிரித்தவன், “டூ…” என்றான் விகாரச் சிரிப்புடன்.
“ப்ளீஸ் விக்னேஷ் அவரை விட்டுடு… நீ என்ன சொன்னாலும் நான் கேட்குறேன். அவர் ஹார்ட் பேஷண்ட் ப்ளீஸ்… விட்டுடு…” எனக் கதறியவளைச் சற்றும் பொருட்படுத்தாமல், “த்ரீ” என்றவன், இப்போது அதிர்ந்து, பயந்து நின்றவளின் ஆடைகளை அவனேத் துகிலுரிய ஆரம்பித்திருந்தான் துச்சாதனனாக!
***
1 comment
அடப்பாவி விக்கி ! அவனைப் பார்த்தாலே அசிங்கமா இருக்கு, அருவருப்பா இருக்குன்னு சொல்லிட்டு, இப்ப அவுத்து வேற பார்க்க நினைக்குறியே, இந்த மானங்கெட்ட புழைப்புக்கு பேசாமல் நீ நாண்டுக்கிட்டு செத்துப்போகலாம். போ.
😀😀😀
CRVS (or) CRVS2797