• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீராப்பகை தீர்வானது - 25.

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,259
254
113
Chennai
ஹாய் ப்ரண்ட்ஸ்,


"என்னை உருமாற்றினாய்" கதையின் முழு ஆடியோ நாவலை இப்பொழுது நீங்கள் கேட்டு மகிழலாம். என் கதைகளை என்னுடைய குரலிலேயே கேட்க நம்ம சேனலை "Subscribe" பண்ணிக்கோங்க. உங்க ப்ரண்ட்ஸ், ஃபேமிலி மெம்பர்ஸ் எல்லோருக்கும் என் கதைகளை share பண்ணுங்க. Like பண்ணவும், "comments" செய்யவும் மறக்காதீங்க.

https://www.youtube.com/watch?v=ceQD-Loku2o

நன்றி!
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,259
254
113
Chennai
பகுதி - 25.

தங்கள் மாலுக்கு வந்த வைஷாலிக்கு மனதுக்குள் அத்தனை சந்தோஷமாக, நிறைவாக இருந்தது. அதுவும் ஜெயந்திக்கு பல வருடங்களுக்குப் பிறகு கிடைத்திருக்கும் அந்த பிள்ளை வரம் அவளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.

அங்கே இருந்த பிரச்னையை ஹரீஷே கவனித்து முடித்திருக்க, அந்த இடத்தையே நிதானமாக சுற்றி வந்தாள். அவளுடன் ரூபியும் இருக்க, அவர்களுக்கு காவலாக ஹரீஷும் உடன் இருந்தான். அவ்வப்பொழுது ரூபி, ஹரீஷின் கண்கள் உரசிக் கொள்ள, இதழ்களிலோ ரகசியப் புன்னகை.

தோழியை இப்படிப் பார்க்க வைஷாலிக்குப் பிடித்தாலும், அவளுக்குள் மெல்லிய ஏக்கம் படர்ந்தது. அவளது கணவனுக்கு இந்த பார்வை உரசல்கள் எல்லாம் சுட்டுப் போட்டாலும் வராது. அதைவிட சில மெல்லிய உணர்வுகளை எல்லாம் அவனுக்கு வெளிப்படுத்தவும் தெரியாது.

சர்வஜித் எப்பொழுதுமே பிஸி தான். என்றைக்கு எப்பொழுது எங்கே இருப்பான் என அவன் மட்டுமே அறிந்த ரகசியம். சென்னை, மும்பை, வெளிநாடுகள் என அவனது கால்கள் நிலையாக ஒரு இடத்தில் இருப்பதே இல்லை.

அவனுடனேதான் ஹரீஷும் சுற்றிக் கொண்டிருந்தான். ஆனால் தன்னவளின் பாதுகாப்பு மிக முக்கியம். அதுவும் எதிரிகளின் கோட்டைக்குள்ளேயே அவளை விட்டு வைத்திருப்பதால், ஹரீஷ் தன்னுடன் இருப்பதை விட, அவளுடன் இருப்பது முக்கியமாகப் பட்டது.

திருமணம் முடிந்து முதல் பத்துநாள் மட்டுமே அவள் அவனுடனே இருந்தாள். தேனிலவுப் பயணத்தை அவர்கள் முடித்துக் கொண்டு வந்த அடுத்த இரண்டே நாட்களில், தமிழ்நாடே திரும்பிப் பார்க்கும் அளவுக்கான ஒரு விமரிசையான திருமண வரவேற்பு நடந்தது.

அவனது திருமணத்தை அறிவிக்க வேண்டி அதைச் செய்தானா? இல்லையென்றால் கோபாலை வெறுப்பேற்ற வேண்டியே அதை இத்தனை விமரிசையாக, அதுவும் கன்னியாகுமரியிலேயே செய்தானா? என வைஷாலிக்கே மிகப்பெரிய சந்தேகம் இருந்தது.

அது முடிந்தவுடன், மேலும் இரு வாரங்கள் அவனோடு சென்னையில் இருந்தாள். அதற்குப் பிறகு, இங்கே ஊருக்கு வந்துவிட, வாரம் தவறாமல் அவளை வந்து பார்த்துச் சென்றான். அந்த ஒரு நாளோ, இரண்டு நாளோ... மனத்துக்கான தேடலை விட, தேகத்துக்கான தேடல் மட்டுமே குறைவின்றி நடந்தேறியது.

இடையில் பாசமாகவோ, தேடலாகவோ, நல விசாரிப்பாகவோ ஒரு அலைபேசி அழைப்பு கூட கிடையாது. அவனுடன் பேச வேண்டும், அவனது குரலையாவது கேட்கவேண்டும் என வைஷாலிக்கு அத்தனை ஏக்கமாக இருக்கும்.

அவளாக அழைத்தால் நிச்சயம் பேசாமல் இருக்க மாட்டான். அவன் எவ்வளவு அவசரத்தில் இருந்தாலும், மீட்டிங்கில் இருந்தாலும், பயணத்தில் இருந்தாலும் உடனே அவளது அழைப்பை ஏற்பான். அவளது நல விசாரிப்பு பொறுமையாகவே பதில் கொடுப்பான். ஆனால் அவனாக அழைத்து பேசுவதே இல்லை.

அது ஒரு மிகப்பெரும் குறையாகவே அவளுக்கு இருந்தது. அவனுக்கு அது வராது என மனம் சமாதானம் கொண்டாலும், ஆசை கொண்ட மனது அதை ஏற்க மறுத்தது.

ஆனால் தேனிலவு பயணத்தில் அவனது செய்கைகள்... தன்னை சர்ப்ரைஸ் செய்யச் சொல்லி அவள் சொன்னதற்காக நிறையவே செய்தான். விமானம் ஏறியது முதல், மாலத்தீவு... இன்னும் பல நாடுகள் என அவளை அழைத்துச் சென்றான்.

அவன் செய்யும் ஒவ்வொன்றும் பிடித்தாலும், “இதில் என்ன பிரம்மாதம்?” என்பதுபோல் அவள் பேசி வைக்க, அன்று ஒரு வித்தியாசமான இடத்துக்கு அவளை அழைத்துச் சென்றான். அது எந்த நாடு என்பது கூட அவளுக்குத் தெரியவில்லை.

இரவு உணவு நேரம் நெருங்கவே, “கிளம்பு போகலாம்...” எனச் சொன்னவன் அழைத்துச் சென்ற இடத்தைப் பார்த்து அதிர்ந்துவிட்டாள். அரை இருட்டுக்கும் குறைவான வெளிச்சத்தில் மிகவும் அமைதியாக இயங்கிக் கொண்டிருந்தது அந்த ஹோட்டல்.

அங்கே இருந்த டேபிள்களுக்கு மேலே சின்ன மஞ்சள் விளக்கு எரிய, அங்கே கசிந்த ஒரு மேலை நாட்டு இசை அந்த இடத்தையே ரம்மியமாக்கியது. கண்கள் அந்த இருட்டுக்குப் பழக காத்திருந்தவள், இருட்டுக்குப் பழகிய பிறகு கண்ட காட்சியில் அதிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.

“அடக் கடவுளே... இது என்ன மாதிரியான இடம்? இங்கே எதுக்கு என்னைக் கூட்டி வந்தீங்க? இங்கே இருந்து போகலாம்...” அவள் சொல்லிக் கொண்டு இருக்கையிலேயே, வேறு ஒருவன் வேறு ஒரு உணவோடு வர, வேகமாக அங்கிருந்து வெளியேறிவிட்டாள்.

அவள் வெளியேறவே, தானும் அவள் பின்னால் வந்தவன் எதையோ பேசப் போக, “முதல்ல நம்ம ஹோட்டலுக்குப் போகலாம்” அவள் சொன்ன விதத்தில் அங்கிருந்து அவளை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.

அறைக்கு வந்தவள் அவனை பிலுபிலுவென பிடித்துக் கொண்டாள். “நீங்க என்ன நினைச்சுட்டு என்னை அங்கே அழைச்சுட்டுப் போனீங்க? அங்கே எல்லோரும்... ஆண்டவா... கண்ணு கொண்டு பார்க்க முடியலை” அவனிடம் பொரிந்தாள்.

“நீ சர்ப்ரைஸ் பண்ணச் சொன்ன...” அவன் சொல்லி சிரிக்க,

அதைப் பார்த்தவளுக்கு கோபம் கொப்பளிக்க, “இப்போ எதுக்கு சிரிக்கறீங்க? நீங்க என்ன நினைச்சுட்டு என்னை அங்கே அழைச்சுட்டுப் போனீங்கன்னு எனக்குத் தெரிஞ்சாகணும்” அவனிடம் அழுத்தமாகக் கேட்டாள். தேனிலவு வந்திருக்கும் தம்பதிகள் செல்லும் இடமா அது?’ என்ற கோபம் அவளுக்கு.

“அதுவா... நான் சர்ப்ரைஸ் பண்ற எதுவும் உனக்கு அப்படி இல்லை. சோ... ஒரு வெரைட்டி...” அவன் சொல்லி முடிக்கும் முன்பு அவனைப் பிடித்து தள்ளி, அவன்மேல் படர்ந்து அவனை அடிக்கத் துவங்கி இருந்தாள்.

“ச்சீ... என்ன பேசறீங்க? எனக்கு வாந்தி வருது. அப்போ நீங்களும் வெரைட்டி பார்க்கத்தான் அங்கே போனீங்களா?” ஆத்திரமென்றால் அப்படி ஒரு ஆத்திரம் அவளுக்கு.

“எனக்கு உன்னை ரசிக்கவே நேரம் போதலை... இதில்...” அவளது அடிகளை எல்லாம் வாங்கியவன் அவளைத் தடுக்க கூட இல்லை.

“அப்படின்னா எனக்காகவா? உங்களுக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? நான் உங்களையே...” என சொல்லிக் கொண்டே வந்தவள், கப்பென வார்த்தைகளை நிறுத்திவிட்டு அதிர்வாக அவன் முகம் பார்த்தாள்.

அவளுக்கு தான் சொல்ல வருவது புரிந்துவிட்டது எனப் புரிய, “முதல்நாள் என்னை முத்தமிட்ட வைஷாலியை எங்கே? நான் உனக்கு சர்ப்ர்ரைஸ் தர நினைத்தால், நீதான் எனக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்துவிட்டாய்...” என்றவன் இன்னதென அத்தனை வெளிப்படையாக பேச, வெட்கத்தில் சிவந்து போனாள்.

“சர்வா... போதும்... இப்படியெல்லாம் பேசாதீங்க...” என்றவள் அவனது பேச்சை நிறுத்த முயல, அது அவளால் முடியவே இல்லை.

“நீ ஏன் என்னை ரசிக்கவில்லை? உணரவில்லை?” என அவன் கேட்டு நிற்க, ஹையோடா... அந்த நிமிடங்களைக் கடக்க அத்தனை சிரமப்பட்டாள். அவன் வாயை மூட, அன்று அவள் செயல்பட்டாக வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானாள்.

அவனை அவளுக்கு எவ்வளவு பிடிக்கும்? ரசிக்கின்றாள் என அவனுக்கு உணர்த்திய பிறகே அவளை அவன் விட்டால். அவள் அதை நினைத்தவாறு நின்றுவிட, அவளது அலைபேசி இசைத்து அவளைக் கலைத்தது.

அதில் ஒளிர்ந்த தாயின் எண்ணைப் பார்த்தவள், “ஒரு நிமிஷம் ரூபி...” என்றவாறு அங்கிருந்து அகன்றாள். எப்படியும் தாய் நல்லவிதமாகப் பேசப்போவதில்லை என அவளுக்குத் தெரியும். அப்படி இருக்கையில் தோழியின் முன்னால் சங்கடம் வேண்டாமே என நினைத்தாள்.

தாயின் குணத்துக்கு அவள் இப்பொழுது அழைப்பை ஏற்கவில்லை என்றால், நேரடியாக இங்கேயோ, அல்லது வீட்டுக்கோ கூட கிளம்பி வந்துவிடுவார். அவரை உள்ளே அனுமதிக்கவில்லை என்றால், வாய்க்கு வந்தபடி சத்தம் போடுவார், அது இன்னும் அசிங்கம் என்பதாலேயே அழைப்பை ஏற்றாள்.

அவள் அங்கிருந்து செல்லவே, “சாரா?” ரூபியிடம் கேட்டான்.

“ம்கும்... உங்களுக்கு ரொம்பத்தான் ஆசை... உங்க சார் பண்ணிட்டாலும்” சற்று கடுப்பாகவே சொன்னாள். ஹரீஷ் கப்பென தன் வாயை இறுக மூடிக் கொண்டான். இந்த இரண்டு மாதங்களில் சர்வஜித் பற்றிய பேச்சு வந்தாலே தங்களுக்குள் முட்டிக் கொள்ளும் என்பதால் எழுந்த ஞானமே அது.

பிடிவாதமாக சர்வஜித்துக்காகப் பேசி, தன் பெர்சனல் வாழ்க்கையில் சிக்கல் ஏற்படுத்திக்கொள்ள அவன் தயாராக இல்லை.

தன் அறைக்கு வந்த வைஷாலி அழைப்பை எடுக்கவே, “என்ன மகாராணி ஃபோனை எடுத்துட்டீங்க? வழக்கமா எடுக்க மாட்டீங்களே?” நக்கலாக கேட்டார்.

“அம்மா, தேவையில்லாமல் பேசாமல், எதுக்காக இப்போ கூப்டீங்கன்னு சொல்லுங்க” கத்தரித்தே பேசினாள். ஏதாவது ஒரு கட்டத்திலாவது தன் தாய், தனக்கு தாயாக மாறிவிட மாட்டாரா? என்னும் எதிர்பார்ப்பு அவளுக்குள் இன்னும் கனன்று கொண்டிருந்தது. அதனால் மட்டுமே அவள் அழைப்பை ஏற்றாள்.

“என் அண்ணன் மகனை பைத்தியமாக்கிட்டு நீ நல்லா இருந்துடுவியா? கல்யாணமாகி இத்தனை மாசம் ஆச்சே, வயிற்றில் ஒரு புழு பூச்சி உண்டா? எப்படி வரும்? செய்த பாவம் அப்படியாச்சே...” தாய் பேசுவதைக் கேட்டவளின் கண்கள் கலங்கிப் போனது.

“ம்மா... நீதான் என்னைப் பெத்தியாம்மா?” தாள முடியாமல் கேட்டுவிட்டாள்.

“எனக்கும் அதே சந்தேகம் இருக்குடி... நீ என் வயித்தில்தான் வந்து பொறந்தியா? இல்லன்னா உங்கொப்பன் பிள்ளையை மாத்தி தூக்கிட்டு வந்துட்டானான்னு தெரியலை. இப்போ கூட ஒன்றும் கெட்டுப் போகலை, அவனை விட்டு வந்துடு...” தாய் சொல்ல,

“ச்சீ... என்னம்மா பேசற நீ? உனக்கு இதைச் சொல்ல நாக்கு கூசலை?” வெடித்தாள்.

“கண்டவன் கூட போக உனக்கே கூசாதபோது, எனக்கு எதுக்குடி கூசணும்? ஒழுங்கு மரியாதையா நான் கூப்பிடும்போதே வந்துடு. என் அண்ணன் மகன் இன்னும் உன்னை மறக்கலை. உன்னை கட்டிக்கிற நினைப்பில்தான் இருக்கான். உன் பெயரைச் சொல்லியே புலம்பிகிட்டு கிடக்கான்.

“எல்லாத்தையும் மறந்த பிறகும், உன்னைமட்டும் அவன் மறக்கவே இல்லைன்னா, அவன் மனசுக்குள்ளே நீ எந்த அளவுக்கு பதிஞ்சு போயிருக்கன்னு தெரிஞ்சுக்கோ. நீ மட்டும் வந்துட்டா, அவன் உடனே நார்மல் ஆகிடுவான்னு சொல்றாங்க... வந்துடு...” தாய் பேசப் பேச அவளுக்கு அருவருத்துப் போனது.

பட்டென அலைபேசியை வைத்துவிட்டாள். ‘இப்படியும் ஒரு தாயா?’ என்றுதான் அவளுக்குத் தோன்றியது. அலைபேசியை வைத்துவிட்ட பிறகும், தாயின் குரல் காதுக்குள் ஒலிப்பதுபோல் இருக்க, தேகம் நடுங்கியது.
 
Last edited:

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,259
254
113
Chennai
வேகமாக தன் தகப்பனுக்கு அழைத்தவள், விஷயத்தைச் சொல்லி அழுதாள். இந்த விஷயத்தை அவளால் தன்னவனிடம் சொல்ல முடியாதே. யாரிடமாவது சொல்லவில்லை என்றால், இதன் அழுத்தம் தன்னைக் கொன்றுவிடும் எனத் தோன்றியது.

“அம்மா ஏன்ப்பா இப்படி இருக்காங்க? நான் இன்னொருத்தரைக் கல்யாணம் பண்ணிகிட்ட பிறகும், அவங்க அண்ணன் மகன்கூட என்னை சேர்த்துவைக்க என்னவெல்லாம் பேசறாங்க. கேட்கவே எனக்கு காது கூசுதுப்பா. அவங்க இதை விடவே மாட்டாங்களா? இந்த விஷயம் அவருக்குத் தெரியவந்தால் என்ன ஆகும்னு கொஞ்சமாவது யோசிச்சாங்களா?” புலம்பித் தள்ளிவிட்டாள்.

“உன் அம்மாவைப்பத்தி உனக்குத் தெரியாதாம்மா? அவ பொறந்த வீட்டில் தன் அதிகாரம் இறங்கிப் போச்சேன்னு அவளுக்கு கவலை. பொண்ணு மனசு, அவ வாழ்க்கை எல்லாம் புரியறதா இருந்தால், எப்போவோ அது அவளுக்குப் புரிஞ்சு இருக்கு.

“இப்போ அவ பேசினதைக் கேட்டு நீ எதுவும் மனசைப் போட்டு குழப்பிக்காதே. உனக்கு உன் புருஷன் இருக்கார்... எதுன்னாலும் அவர் பார்த்துப்பார் சோ... நிம்மதியா இரு” என பலவாறாக மகளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அழைப்பை வைத்தார்.

ஆனால் அவளது ஒவ்வொரு பேச்சுக்களையும் அவன் இன்னொரு அலைபேசி மூலம் கேட்டுக் கொண்டிருக்கிறான் என அவள் அறியாமல் போனாள். அவள் தகப்பனிடம் சொல்லி அழ, சர்வஜித்துக்கு ரத்தம் கொதித்தது.

‘கட்டிய கணவன் நான் கண்டவன், அந்த தெருப்பொறுக்கி நல்லவனா? அதுவும் அவன் இவளை கேட்கறானா? தப்பாச்சே, ரொம்ப தப்பு. அவனை இப்படியே விட்டால் நான் என்ன ஆண்பிள்ளை? அவனுக்கு இருக்கு...’ அவர்கள் கதைகளை முடிக்க முடிவெடுத்தான்.

அவள் அழுதால் அவனால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும். அவனது தாயும், அவளும் அவன் இரு கண்களைப் போன்றவர்கள். அவன் பாசத்தை வெளியே கொட்டத் தெரியாதவனாக இருக்கலாம். ஆனால் பாசம் இல்லாதவன் இல்லையே. அப்பொழுதே மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு கிளம்பிவிட்டான்.

அன்று மாலையில் அவள் வீட்டுக்கு வருகையில் அவன் வீட்டில் இருந்தான். அவனைப் பார்த்தவள், பார்த்தபடி அப்படியே நின்றுவிட்டாள். “நீ பாரு... நாங்க கிளம்பறோம் ஷாலு” என்ற ரூபி அங்கிருந்து உடனே கிளம்பிவிட்டாள்.

வேகமாக அவன் அருகே வந்தவள், “எப்போ வந்தீங்க? வர்றேன்னு சொல்லவே இல்ல? பொதுவா வீக் எண்டு தானே வருவீங்க?” என்றவள் அவனை ஒட்டி அமர்ந்து அவன் தோளில் முகத்தை அழுத்தமாக புதைத்துக் கொண்டாள்.

அவன் தோள் உரசி, அவன் வாசனையை நுகர்ந்தாள். அதை அவனும் உணர, அவள் செய்கைக்கு இசைந்து அமர்ந்து இருந்தான்.

“மிஸ் யூ... மிஸ் யூ பேட்லி...” அவள் இதழ்கள் சன்னமாக முனக, அது அவனுக்கும் கேட்டது. அவள் தாடையைப் பிடித்து நிமிர்த்தியவன் அவள் முகம் பார்த்தான். இப்பொழுது அவன் வீட்டுக்குள் குளிர் கண்ணாடி அணிவது இல்லை என்பதால் அவனது கூர்மையான, ஆராயும் விழிகளை அவள் எதிர்கொண்டாள்.

‘அவள் தன்னிடம் அவளது தாயைப் பற்றிச் சொல்வாளா?’ என எதிர்பார்க்க, அவள் எதையும் சொல்லவில்லை. தாயைப்பற்றிய மனக்குறை அவளுக்கு நிறையவே உண்டுதான். அதற்காக தன் தாயை அவனிடம் கூட விட்டுக் கொடுக்க அவளால் முடியவில்லை.

‘அப்போ நீ சொல்ல மாட்ட... அவங்க அடுத்து என்ன செய்வாங்கன்னு நானும் பார்க்கிறேன்?’ அவனும் காத்திருக்க முடிவெடுத்தான்.

“நான் கேட்டதுக்கு நீங்க பதில் சொல்லவே இல்லையே...?” என்றவாறு அவன் சட்டைப் பட்டனைத் திருகினாள். நிஜத்தில் அவனிடமிருந்து வார்த்தைகளைப் பிடுங்குவது அவ்வளவு சுலபம் இல்லை.

கட்டிலில் தங்கள் நெருக்கத்தில் சில நேரம் நிறைய பேசுவான். மற்றபடி சாதாரணமான நேரங்களில் அவனிடம் பேச்சு என்பதே இருக்காது.

“இனிமேல் கொஞ்ச நாள் இங்கேதான்...” அவன் சொல்ல, ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள்.

“நிஜமா? நீங்க சும்மா சொல்லலையே?” படபடத்தாள். ‘அப்படி நான் செய்வேனா என்ன?’ என்பதுபோல் ஒரு பார்வை பார்த்திருந்தான்.

“போய் குளிச்சுட்டு வா... காபி குடிக்கலாம்” அவன் சொல்ல, அவன் அருகே இருந்து எழுந்து கொண்டாள்.

“நீங்களும் வாங்க...” அவள் அழைக்க, அவன் இமைகளை சுருக்கி ஒரு பார்வை பார்க்க, தன் நாக்கை கடித்துக் கொண்டாள்.

“அதாவது... நம்ம ரூம்ல வந்து இருங்கன்னு சொல்ல வந்தேன். மற்றபடி...” அவள் இழுக்க, அவனோ எழுந்துகொண்டான். படபடக்கும் இதயத்தோடு அவள் உடைகளை எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்குள் புகுந்துகொள்ள, அவள் பின்னாலேயே அவனும் சென்று இருந்தான்.

“என்னங்க...?” அவள் தடுமாற, “நாம இதை ட்ரை பண்ணதே இல்லை. இன்னைக்கு ட்ரை பண்ணிடலாம்” என்றவன் அவளோடு ஒன்றாக ஷவரின் அடியில் நிற்க, அந்த சில்லென்ற நீர் இருவரையும் சூடாக்கியது.

அவளை சுவற்றில் சாய்த்தவன் அத்தனை ஆவேசமாக முத்தமிட, அவனுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சற்று திணறிப் போனாள். அங்கே துவங்கிய அவர்களது யுத்தம் கட்டிலில் நிறைவடைய, நேரமோ ஒருமணி நேரத்துக்கும் மேலாக கடந்து இருந்தது.

அவன் தன்னை நாடும் வேளைகளில் சிறு மறுப்பு கூட இன்றி அவனோடு ஒடுங்கிக் கொள்வாள். அதென்னவோ அந்த வேளைகளில் மட்டுமே தான் அவனோடு நெருக்கமாக, அவனுக்குப் பிடித்தவளாக, அவனுக்குத் தேவையானவளாக இருப்பதுபோல் தோன்றும்.

அவன் வெற்று நெஞ்சில் முகம் புதைத்து இருந்தவள், “என்ன திடீர்ன்னு இங்கே...? அங்கே வேலையை எல்லாம் யார் பார்ப்பாங்க?” அவனது ஓட்டம் தெரிந்தவள் என்பதால் கேட்டாள்.

“ஐ கேன் மேனேஜ்... நீ அதைப்பற்றி கவலைப் படாதே. அதையெல்லாம் நான் பார்த்துக்கறேன்” என்றவன் அவள் நெற்றியில் முட்டினான். அவன்மேல் நகர்ந்து வாகாக படுத்துக் கொண்டவள், அவன் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டாள்.

அவளது அந்த செய்கையே, தன்னுடனே இருக்க அவள் எத்தனை பிரியப் படுகிறாள் எனச் சொல்ல, “என்ன?” என்றான். “ம்ஹும்... சும்மா...” என்றவளது இதயத்துடிப்பு தாளம் தப்பி துடிப்பது அவனுக்குத் தெரிந்தது.

‘இவளால் என்னை எப்படி இந்த அளவுக்கு நேசிக்க முடியுது? நான் இவளுக்கு அப்படி என்ன செய்தேன்?’ என எண்ணியவனுக்கு அவள்மீதான நேசம் வேர்விடத் துவங்கி இருந்தது. தன் தாய்க்கு அடுத்தபடியாக தன்னிடம் எதிர்பார்ப்பே இல்லாத நேசத்தைக் கொடுக்கும் ஒரு ஜீவன்.

“நான் இருக்கற வரைக்கும் உன்னை யாரும் நெருங்க முடியாது” அவன் சொல்ல, சட்டென நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள். தான் சொல்லாமலேயே தன் மனக் குழப்பத்தை, மனதின் தவிப்பை அவன் உணர்ந்துகொள்வது அவளை சற்று பலவீனப்படுத்தியது.

“எனக்குத் தெரியும்” என்றவள், மீண்டும் அவள் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டாள்.

“என்கிட்டே ஏதாவது சொல்லணுமா?” அவன் கேட்க,

“ஹான்... என்ன? ம் ஆமா... ஜெயந்தி அக்கா கர்ப்பமா இருக்காங்க. எத்தனையோ வருஷத்துக்குப் பிறகு அவங்க வீட்டில் ஒரு மிகப்பெரிய சந்தோஷமான விஷயம் நடந்திருக்கு” அவள் சொல்ல, அமைதியாக கேட்டுக் கொண்டான்.

“வேற எதுவும் இல்ல?” என்றவனது குரலில் இருந்த மாறுபாடு அவளுக்குப் புரிந்தது.

“இல்லையே... வேற என்ன?” அவனிடமே திருப்பிக் கேட்டாள்.

“சரி வா... அம்மா கீழே காத்திருப்பாங்க” அவன் சொல்ல, அவனை விட்டு விலகினாள்.

“நான் ஒன்று கேட்டால் என்கிட்டே உண்மையைச் சொல்வீங்களா?” தயக்கமாகவே கேட்டாள்.

“உண்மையை மட்டும்தான் சொல்வேன்” அவன் அத்தனை உறுதியாகச் சொன்னான்.

“முத்துப்பாண்டிக்கு அப்படி ஆனதுக்குக் காரணம் நீங்களா?” அப்படித்தான் எனத் தெரிந்தாலும் கேட்டாள்.

“ம்... ஆமா...” அவன் ஒத்துக்கொண்டான். ஆனால் அவன் குரலில் இருந்த பேதத்தை அவள் இனம் காண மறந்தாள்.

“அவனை உங்களால் தெளிய வைக்க முடியுமா?” ஒருவேளை அவன் தெளிந்துவிட்டால் மற்றவர்களின் கோபம் குறைந்துவிடுமே என எண்ணினாள். ஆனால் அது அப்படி நடக்கப் போவதே இல்லை என அவளுக்குத் தெரியவில்லை.

“ஓ... முடியுமே... ஆனா அதுக்கு உன் மாமன் என் கால்ல விழுந்து கெஞ்சிக் கேட்கணும். அப்படிக் கேட்டான்னா நான் தாராளமா தெளிய வைக்கிறேன்” அவன் சொல்ல, அது நடக்கவே போவதில்லை எனப் புரிந்தது.

“அவன் பைத்தியத்தை தெளிய வைக்க புது விதமான வைத்தியங்கள் எல்லாம் செய்யறாங்களே, உனக்குத் தெரியாது?” அவன் கேட்டுவைக்க, மறுப்பாக தலை அசைத்தாள். அவன் கேட்ட விதம்... அங்கே எதுவோ தவறாக நடப்பதை அவளுக்குச் சொல்லாமல் சொன்னது.

“ஒரு விஷயம் உன்கிட்டே தெளிவா சொல்லிக்கறேன். உன் மாமன் குடும்பமே நிர்மூலமாகும். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு சந்தோஷமான விஷயத்தைச் சொன்னியே... அது கூட முழுசா அவங்களுக்கு கிடைக்காது.

“கிடைக்க விடவும் மாட்டேன். ஆண் வாரிசே அவங்களுக்குத் தங்காது. உன் மாமன் மகன்கள் திருந்தறதுக்கு வாய்ப்பே இல்லைன்னு உனக்கே தெரியும். அதனால் அவங்களுக்காக ஃபீல் பண்ற வேலையே உனக்கு வேண்டாம். அவங்களை அழிக்கத்தான் நான் வந்திருக்கேன், அழிச்சும் காட்டுவேன். இதில் இருந்து நீ விலகி இருப்பது உனக்கு நல்லது” அவன் சொல்லி முடிக்க, அவன் சொன்ன விதத்தில் அவளுக்கு மூச்சடைத்தது.

ஏற்கனவே அவளுக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்ததுதான். ஆனால் அதை அவன் வாயால் கேட்க அத்தனை அச்சமாக இருந்தது.

“அவங்களுக்கு இதைச் செய்ய நீங்க யார்? அவங்களை இந்த அளவுக்கு, அதுவும் குழந்தையைக் கூட அழிப்பேன்னா நீங்க மட்டும் என்ன நல்லவரா?” முயன்று தன்னை மீட்டுக் கொண்டு கேட்டாள்.

“நான் நல்லவன்னு எப்போ சொன்னேன்? நான் கெட்டவன்... ரொம்ப ரொம்ப கெட்டவன். அதுவும் அவங்க விஷயத்தில் ரொம்ப மோசமான கெட்டவன் தான்... இப்போ நீ என்ன செய்யலாம்னு இருக்க?” என்றவன் அழுத்தமாக அவள் முகம் பார்த்தான்.

அவனது பார்வையும், பேச்சும்... அவளுக்குள் அப்படி ஒரு குளிரைப் பரப்பியது. “நீங்க இதைச் செய்யக் கூடாதுன்னு சொன்னா?” கொஞ்சம் கூட நம்பிக்கை இன்றியே அந்த கேள்வியை அவனிடம் கேட்டாள். அவன் தனக்கு சாதகமாக எந்த பதிலையும் சொல்லப் போவதில்லை எனத் தெரிந்தே கேட்டாள்.

“இங்கே இருந்து போய்டு... என்னை கண்ட்ரோல் பண்ணணும்னு நீ நினைக்க கூட செய்யாதே. ரொம்ப மோசமா தோத்துப் போய்டுவ” என்றவன் உடைகளை அணிந்துகொள்ளத் துவங்கினான். அவனது அந்த பதில் அவளுக்கு அவ்வளவு வலியைக் கொடுத்தது.

அதுவும் தங்களுக்குள் எதுவுமே இல்லை என்பதுபோல், நீ இங்கே இருந்து போய்டு’ என அவன் சாதாரணமாகச் சொன்னது அவள் இதயத்தை கசக்கிப் பிழியும் வலியைக் கொடுத்தது.

‘அப்போ நான் போய்டவா?’ என அவளால் கேட்க முடியவில்லை. அப்படிக் கேட்டால், ‘போய்விடு’ எனச் சொன்னால் அதைத் தன்னால் தாங்கிக் கொள்ளவும் முடியாது, அங்கே இருக்கவும் முடியாது, அப்படியே இருந்தாலும் அது தன்னை காயப்படுத்தும் எனப் புரிய வாயை இறுக மூடிக் கொண்டாள்.

“அத்த... அத்தை சொன்னா?” தாய் சொன்னால் அவன் எதையுமே தட்ட மாட்டான் என அவளுக்குத் தெரியும் என்பதால் கேட்டாள்.

“பெட்டர் ட்ரை...” என்றவன் அசால்ட்டாக தோளைக் குலுக்க, முழு தோல்வியே. மனதுக்குள் அப்படி வலித்தது, ஏமாற்றமாக இருந்தது. மனம் காயப்பட்டது, ரணப்பட்டது. ஆனாலும் அவனை விட்டுக்கொடுக்க முடியவில்லை.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,259
254
113
Chennai
‘இவர் கெட்டவர்ன்னு தெரிஞ்சே தானே கல்யாணம் பண்ணிகிட்டேன்? பிறகு ஏன்? இல்ல... கொஞ்ச நாள் போனால் என்னால் இவரை மாற்றிவிட முடியும்?’ என தன்னையே அவள் ஏமாற்றிக் கொண்டாள்.

அவன் சொன்னதுபோல், அவனை கட்டுப்படுத்த நினைத்தால் அவள் நிச்சயம் தோற்றுத்தான் போவாள். அவள் மாற்ற நினைப்பது ‘உஸ்தாத்’ என்னும் சர்வஜித்தை என அவளுக்குத் தெரியுமா என்ன?

ஒருவாறாக தன்னைத்தானே தேற்றிக் கொண்டு, இல்லை ஏமாற்றிக் கொண்டு தானும் எழுந்து உடை மாற்றினாள். இருவரும் ஒன்றாக கீழே இறங்கி வர, விசாலாட்சி அவர்களுக்காக காத்திருந்தார்.

அத்தனை நேரமாக தகதகவென எரிந்து கொண்டிருந்த அவனது முகம், தாயைப் பார்த்த உடனே குளிர்ந்து போனது. அதைப் பார்த்தவள், எப்பொழுதும் போல், இப்பொழுதும் ஆச்சரியமானாள்.

அனைவரும் காபி குடிக்கத் துவங்கவே, அவனுக்கு ஒரு அழைப்பு வர, எடுத்து காதில் வைத்தவன் ஒரு வார்த்தை கூட மறுமொழி பேசவே இல்லை. சில பல நிமிடங்கள் கடந்தும் பேசாமல் போனவனது கை கடிகாரம் மட்டும் இசைக்க, இரு பெண்களும் அவனைப் பார்த்தார்கள்.

வைஷாலி பட்டென அவள் கரத்தைப் பற்றிக்கொள்ள, ‘ஒன்றும் இல்லை...’ என்பதுபோல் தலை அசைத்தவனது கடிகாரம் ஒலிப்பது மட்டும் குறையவே இல்லை.

“எனக்கு எல்லாம் ஆதாரமா வேணும்...” என்றவன் அலைபேசியை வைத்துவிட்டாலும், அவன் மனதின் கொதிப்பு அடங்கவில்லை.

அவனது கோபத்துக்கான காரணம், கோபாலின் பண்ணை வீட்டில் ‘அது’ அரங்கேறிக் கொண்டு இருந்தது. முத்துப்பாண்டியின் மனநிலை பிரண்டு இருக்க, அதற்கான காரணத்தை யாராலும் கண்டறிய முடியவில்லை.

கடந்த ஒரு மாதமாகவே அவனுக்குப் பலவிதமான சிகிச்சைகள், கேரளா முறை சிகிச்சைகள் என தொடர்ந்து வழங்கப்பட்டுக் கொண்டு இருந்தது. அதன் காரணமாக கொஞ்சம் தெளிந்தாலும் அவனால் முழுதாக தெளிய முடியவில்லை.

இவர்கள் குடும்பமே பெண் பித்து கொண்ட குடும்பங்கள் ஆயிற்றே. அப்படி இருக்கையில் இவர்களது புத்தி நேராக வேலை செய்யுமா என்ன? ‘திருமணத்தை செய்து வைத்தால் பித்து தெளியும்’ என்ற மனநிலை கொண்ட மனிதர்களை என்ன செய்ய?

அவனது அந்த பித்தை தெளிய வைக்க, அப்பாவிப் பெண்களை எல்லாம் பலி கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். பணத்துக்கென வரும் பெண்கள் ஒருவிதம் என ஒத்துக் கொண்டாலும், கட்டாயப்படுத்தி அவர்கள் அழைத்துவரும் பெண்களின் நிலையை என்னவெனச் சொல்வது?

அதிகாரமும், அடக்குமுறையும் அங்கே தலைவிரித்தாட, அப்பாவிப் பெண்கள் அதற்கு பலியாகிக் கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு அடியாகக் கொடுத்தால் அடங்கிப் போவார்கள் என சர்வஜித் நினைத்தால், வேறு விதங்களில் அவர்கள் அதை வெளிக்காட்ட, கொதித்துப் போனான்.

முத்துப்பாண்டி இப்பொழுது அவனது கட்டுப்பாட்டிலேயே இல்லை என்கையில் அப்படி வரும் பெண்களின் கதி என்ன? வரும் பெண்களை எல்லாம் அடித்து காயப்படுத்தி, குதறி என அவன் செய்துவைக்க, அங்கே இறுதியாக ஒரு அப்பாவிப் பெண்ணின் உயிரையே அது பலி வாங்கிவிட்டது.

அதைத்தான் அவர்களை உளவு பார்க்கும் ஒருவன் சர்வஜித்துக்குச் சொன்னான். விஷயத்தை கேள்விப்பட்ட உடனேயே அங்கே சென்று அவர்கள் அனைவரையும் கொன்று கூறுபோடும் வேகம். ஆனால் தான் விவேகமாகச் செயல்பட வேண்டிய நேரம் இதுவென அவனுக்குப் புரிந்தது.

“நான் சொல்வதுபோல் போலீசுக்கு தகவல் கொடு... அங்கே நடப்பதை எனக்குச் சொல்” என்றவன் விஷயத்தைச் சொல்லிவிட்டு, அலைபேசியை வைத்துவிட்டான். அங்கே என்ன நடக்கும் என அவனுக்குத் தெரிந்தே இருந்தது. ஆனாலும் கையும் களவுமாக பிடிக்க நினைத்தான்.

அங்கு...

“என்னடா வேலவா இப்படி ஆகிப் போச்சு?” விநாயகம் தன் தம்பியிடம் கேட்டான்.

“அதுதான் ண்ணா எனக்கும் எதுவும் புரியலை. ஒரு கொலையையும் பண்ணிட்டு எப்படி உட்கார்ந்து இருக்கான் பாரு. அதுவும் அந்த பொண்ணை வேணும்னே கழுத்தை நெரிச்சு கொன்னிருக்கான்” வேலவன் சொல்ல, தம்பியைப் பார்த்தார்கள்.

அவனோ ஒரு மாதிரி இலக்கில்லாத பார்வையும், “வைஷாலி... வைஷாலி... இவ வைஷாலி இல்ல...” என சொல்லிக் கொண்டிருக்க, அந்த நேரம் அங்கே வந்தார் கோபால்.

“என்னடா நடக்குது இங்கே? என்னை எதுக்கு இப்போ அவசரமா வரச் சொன்னீங்க?” என்றவாறே சற்று கோபமாகவே வந்தார்.

“அப்பா... கொஞ்சம் உள்ளே வாங்க...” என்றவாறு உள்ளே அழைத்துச் சென்று அந்த பெண்ணின் பிணத்தைக் காட்டினார்கள். அதிகபட்சம் இருபத்தைந்து வயது இருக்கலாம்... கண்கள் நிலை குத்தி, பின்னந்தலையில் இருந்து குருதி வழிந்திருக்க, கழுத்து நெரிபட்டதில் வாயும் பிளந்து இருந்தது.

அவ்வளவு நேரத்துக்கே சில ஈக்கள் அந்த பெண்ணை மொய்க்கத் துவங்கி இருந்தது. முத்துப்பாண்டி அந்தப் பெண்ணை, கழுத்தை நெரித்தவாறே தரையில் தலையை அடித்து அந்தப் பெண்ணை கொன்றிருப்பது தெரிந்தது.

“எப்படிடா? இவ்வளவு தூரம் ஆகற வரைக்கும் நீங்க என்னடா பண்ணிட்டு இருந்தீங்க?” அவர்களிடம் கேட்டார்.

“வழக்கமா பொண்ணுங்க அலறுவதுதானேன்னு கொஞ்சம் அசால்ட்டா இருந்துட்டோம்ப்பா” அவர்கள் சொல்ல, மகன்களை கொஞ்சம் சூடாகவே பார்த்தார்.

“இப்போ முதலமைச்சர் சப்போட் வேற நமக்கு கொஞ்சம் குறைஞ்சுட்டே வருது. கூடவே எலக்ஷன் வேற நெருங்குது. இந்த நேரத்தில் கொஞ்சம் கவனமா இருங்கன்னு நான் சொல்லி இருக்கேனா இல்லையா?” கோபமாக கத்தினார். வழக்கமாக அவருக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது.

தங்களைச் சுற்றிலும் இப்பொழுது என்ன நடக்கிறது என்றே தெரியாமல் இருக்கையில், இப்படியான விஷயங்களை காதும் காதும் வைத்ததுபோல் மறைக்க முடியுமா? என்ற டென்ஷன்தான் அவருக்கு. மற்றபடி இப்படி ஒரு பெண்ணின் உயிர் போய்விட்டதே என்ற எண்ணம் எல்லாம் அவருக்குத் துளியும் இல்லை.

இவர்கள் இங்கே பேசிக்கொண்டு இருக்கையிலேயே ஒரு போலீஸ் ஜீப் வாசலில் வந்து நிற்க திடுக்கிட்டார்கள். “டேய், யார்ன்னு பாரு...” கோபால் சொல்ல, விநாயகம் வேகமாக வெளியே சென்றான்.

“அப்பா... நம்ம வேங்கடம் தான்...” வெளியே இருந்தே உரக்க குரல் கொடுத்தான்.

“இவனுக்கு எப்படிடா தகவல் போச்சு? யார் சொன்னா? எதைத் தெரிஞ்சுகிட்டு வந்திருக்கான்னு தெரியலையே. சரியான பணப் பேய் அவன், இவன்கிட்டே நம்ம விஷயம் ஒன்று சிக்கினாலும் போதும், அதை வைத்தே பணத்தை கறந்துடுவான். நீ இங்கேயே இரு, நான் போய் பேச்சு கொடுக்கறேன். முதல்ல இதை எதைப் போட்டாவது மூடுங்கடா” என்றவாறு வெளியே சென்றார்.

அங்கே வெளியே ஹாலில் இருந்து, “வைஷாலி இல்ல... இவ வைஷாலி இல்ல...” எனப் புலம்பிக் கொண்டிருந்த இளைய மகனைப் பார்த்து அவருக்கு நெஞ்சடைத்தது. இவன் ஆசைப்பட்டான் என்ற காரணத்துக்காக எத்தனையோ செய்தவர் அவர். அவன் இளம் வயதில் செய்த தவறுகளை எல்லாம் மூடி மறைத்து பாதுகாத்தவர்.

அப்படி இருக்கையில், இப்பொழுது தன் தங்கை மகளுக்காக அவன் பட்ட துன்பங்களைக் கண்டு அவர் ரத்தம் கொதித்தது. ‘அவளை நல்லா வாழவே விட மாட்டேன். என் மகனை இப்படி ஒரு நிலைக்கு கொண்டு வந்து நிறுத்திய அவனையும் விட மாட்டேன்’ சூளுரைத்துக் கொண்டார்.

“வேலவா, இவனை உள்ளே ரூம்ல விட்டு கதவைப் பூட்டு...” அவர் சொல்ல, “அப்படிச் செய்தால் இன்னும் ஆக்ரோஷமா ஆயிடுவான்ப்பா” வேகமாகச் சொன்னான்.

“அவன் கூடவே நம்ம பய எவனையாவது உள்ளே துணைக்கு விடு...” என்றவாறு வெளியே சென்றார். இப்பொழுது எல்லாம் முத்துப்பாண்டிக்கு இருட்டு, மூடிய அறை, தனிமை இதையெல்லாம் பார்த்தாலே அலறத் துவங்கிவிடுவான். அதனாலேயே அவ்வாறு சொன்னார்.

கோபால் வெளியே செல்கையில் வேங்கடம் விநாயகத்திடம் பேசிக் கொண்டு இருந்தான். “என்ன வேங்கடம் இந்தப் பக்கம்?” சாதாரணமாகவே கேட்டார்.

“ஒரு அனானிமஸ் கால் வந்தது... அதான் அதைப்பத்தி விசாரிச்சுட்டுப் போகலாம்னு வந்தேன்” கண்களை வீட்டுக்குள் விட்டு சுழற்றியவாறே அவன் சொல்ல, தகப்பனும் மகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“என்ன சொல்ற வேங்கடம்? என்ன கால் அது?” தானாக எதையும் வாய்விட்டுவிடக் கூடாதே என்ற எண்ணம் அவருக்கு.

“இந்த வீட்டுக்குள்ளே இருந்து ஒரு பொண்ணோட அலறல் சத்தம் கேட்டதா சொன்னாங்க. அதான் என்னன்னு பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்” அவன் சொல்ல, நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்.

“பொண்ணுங்க சத்தம் போடறது எல்லாம் புதுசா வேங்கடம்? இப்போ உனக்கு ஏதும் சத்தம் கேட்குதா என்ன? உனக்கு வேண்டியது மாசம் தவறாமல் வருதுதானே, பிறகு என்ன? கிளம்பு...” நேரம் செல்லச் செல்ல, அந்த பிணத்தில் இருந்து ரத்தவாடை வெளிவரத் துவங்கிவிடும் என்பதால் அவனை அப்புறப்படுத்த நினைத்தார்.

“அதெல்லாம் வந்துடுது தான்... ஆனாலும் இவ்வளவு தூரம் வந்திருக்கேன்” என்றவாறு தலையைச் சொறிந்துகொள்ள, கோபால் மகனைப் பார்த்து தலை அசைத்தார். உள்ளே சென்ற விநாயகம் கட்டு பணத்தை கொண்டுவந்து அவன் கரத்தில் கொடுக்க, அதை வாங்கிக் கொண்டு கிளம்பிவிட்டான்.

சர்வஜித், வேண்டும் என்றேதான் விஷயத்தை போலீசில் மாற்றிச் சொல்லச் சொல்லி இருந்தான். எந்த நேரம் போலீஸ் உள்ளே நுழைய வேண்டும், அவர்கள் எப்படி செயல்பட வேண்டும் என அனைத்தையும் சர்வஜித் தான்தான் முடிவு செய்ய வேண்டும் என நினைத்தான்.

இந்த முறை அவர்களுக்கு எந்தவிதமான சட்ட ஓட்டைகளையும் கொடுக்க அவன் தயாராக இருக்கவில்லை. முத்துப்பாண்டிக்கு எந்த மாதிரியான தண்டனையைக் கொடுக்க வேண்டும் என அவன் முடிவு செய்துவிட்டான். அது நடந்தே ஆகவேண்டும் என வலை விரித்துக்கொண்டு காத்திருந்தான்.

வேங்கடம் கிளம்பிச் சென்ற சிறிது நேரத்திலேயே அந்த பெண்ணின் பிணத்தை எடுத்துச் சென்று மயானத்தில் புதைத்துவிட்டு வரச் சொல்லிவிட்டார். இவை அனைத்தையும் இருட்டுக்குள் நிழல்போல் ஒருவன் தொடர்ந்தவாறே படம் பிடித்துக் கொண்டு இருந்தான்.

முத்துப்பாண்டி விடாமல் “வைஷாலி... வைஷாலி...” எனப் புலம்பிக் கொண்டே இருக்க, கோபால் கொதித்துப் போனார். கோபத்தில் எடுக்கப்படும் முடிவுகள் எப்பொழுதும் மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதை அவர் அந்த நொடி மறந்து போனார்.

“டேய்... நீங்க என்ன செய்வீங்களோ தெரியாது... அந்த *** மகளை என் மகனுக்கு கொடுத்தாகணும். அப்போதான் இவனுக்கு இந்த கலங்கிய புத்தி தெளியும். என்னால் என் மகனை இப்படிப் பார்க்க முடியலைடா.

“இவ்வளவு அதிகாரம், ஆள்பலம், பண பலம் இருந்தும் என்மகன் எங்கே இருந்தான்? எப்படி எங்கே போனான்னு எதுவுமே கண்டுபிடிக்க முடியலை. எல்லாத்துக்கும் அந்த சர்வாதான் காரணம்னு நமக்குத் தெரிந்தாலும், ஒரு சின்ன ஆதாரம் கூட கிடைக்கலை.

“அதுதான் கிடைக்கலை, அவனை அழிச்சுடலாம்னு பார்த்தால், அவனை நம்ம ஆட்களால் நெருங்க கூட முடியலை. ஆனா இனிமேல் இப்போ... என்ன செய்வீங்களோ தெரியாது. அவன் பொண்டாட்டியை தூக்குங்கடா. என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம்” அவர் சொல்ல, அவர்களும் ஆவேசமாக கிளம்பினார்கள்.

இனிமேல் அவர்கள் வாழ்க்கையில் நடப்பதை எல்லாம் தான் பார்த்துக்கொண்டு நிற்க மட்டுமே முடியும் என்ற உண்மை புரிந்திருந்தால் கொஞ்சம் அடங்கி இருப்பாரோ என்னவோ?

பகை முடிப்பான்....
 

kumarsaranya

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 14, 2025
17
16
3
Vellkovil
சர்வா அவனோட அம்மாவும் கோபால் குடும்பத்தால் பாதிக்கப்பட்டது மிக அதிகமோ?
 
  • Like
Reactions: Infaa

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,259
254
113
Chennai
சர்வா அவனோட அம்மாவும் கோபால் குடும்பத்தால் பாதிக்கப்பட்டது மிக அதிகமோ?

அந்த கதையைக் கேட்டால் உங்களுக்கே அந்த கோபால் மீது கொலை வெறியே வரும்.
 
  • Like
Reactions: kumarsaranya