அகானா - 47
அகானாவை தன்னுடைய மருத்துவமனைக்கே கொண்டு வந்திருந்தான் ஆகன். அவளுக்கு முதலுதவி கொடுக்கப்பட்டிருக்க, மயக்கத்தில் இருந்தாள் பெண்.
அந்த ஸ்பெஷல் வார்டின் முன் அழுது அழுது ஓய்ந்து போய் அமர்ந்திருந்தார் மஞ்சரி. அவருக்கு இருபக்கமும் காயத்ரியும் கவிதாவும் இருக்க, எதிரில் நவீனும், குமரனும்...