• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரக்கனின் மான்குட்டி 💕6

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 26, 2023
Messages
12
பாகம்-6
அதர்ஷன் இன்றைக்கு மிகவும் புத்துணர்வுடன் காணப்பட்டான்...பாறையின் நடுவில் சிறு தளிர் துளிர் விடும் நெரம் கற்பாறை‌ அதிர்ந்து நிற்பதை போல் இனிமையாக காரணமே இன்றி அதிர்ந்து குதூகலித்த மனதை அடக்கும் விதமாக நெஞ்சை நீவி விட்டவனக்கு அடர்ந்த மீசைக்குள் அடங்காமல் இதழ் விரிய ஓர் மோகன‌ புன்னகை வழிந்தோடி அவனின் வசீகரத்தை கூட்டியதில் எந்த பெண்மையையும் பெண்ணியத்தை மறந்து மையல் கொள்ள வைப்பதாய் அவன் குறும் சிரிப்பு....

இதழ் நீங்கா புன்னகையுடன் கை சட்டையை முட்டி வரை மடித்து விட்டப்படி அட்டகாசமான அழகுடன் ஆண்மையின் இலக்கணமாய் படியில் இருந்து இறங்கி வந்த அதர்ஷனை கண்ட வீர் அவனை ஆச்சரியமாக பார்த்து தன் அண்ணனின் வசீகரத்தின் சாயலில் புதிதாக மிளிரும் ஏதோ ஒன்றை விளங்காது கூர்ந்த அந்த சிங்கள் பையனுக்கு கடைசி வரை விளங்கவில்லை பாவம்...இருந்தும் தன் அண்ணனின் இதழில் கர்வமாக தவழ்ந்து இருந்த புன்னகையை கண்டு அவனும் புன்னகைத்து கொண்டான்...

வீர் அவனின் சிறு புன்னகையில் நிறைந்து போவதற்கும் காரணம் உண்டே எப்போதும் பற்கள் தெறிக்கும் அளவிற்கு தாடை இறுக இருப்பவன் இப்படி கண்கள் பலபலக்க நிம்மதியாக இருந்து பார்த்ததில்லையே....

முற்றும் துறந்த முனிவரின் இதழ் கூட விரிந்து புன்னகைக்கும் ஆனால் இவன் இதழ் பேசுவதற்கு மட்டும் தானே விரியும் சிரிப்பு துறந்த கூட ஓர் மனிதன் இருப்பானா என்பதற்கு உதாரணமாக இருப்பவன் இன்று புன்னகைத்ததில் வீர் உளமார்ந்து மகிழ்ந்தான்...

இறங்கி வந்தவன் தன்னையே பார்த்து நின்ற வீரின் தோளில் லேசாக தட்டி வீர் கிளம்பலாமா என வினவ...அவனோ இன்னும் கூட அவன் முகத்தில் இருந்து பார்வையை விலக்காது அண்ணா இன்னைக்கு ப்ரைட்டா அழகா இருக்கீங்க என தோன்றியதை பட்டென கூறியவன் பின் தான் அவன் என்ன கூறுவானோ என என்னியவன் அசடு வழிந்தான்...ஏனினில் வீரும் அதர்ஷனும் கேலி கிண்டல் இல்லாவிடினும் இயல்பாக கூட பேசியது கிடையாது என்பதால் தான் வீருக்கு அவனின் கூற்று கொஞ்சம் அதிகபிரசங்கியாக தோன்றியது...

அவனின் கூற்றுக்கு அதர்ஷனிடம் இருந்து இதழுக்கும் நோகாமல் சிறு புன்னகை மட்டுமே பதிலாக கிடைத்தது.. அதுவும் கரிய அருகம்புல் போலான மீசையின் நடுவே பாதியாக ஒளிந்துக் கொன்ட போதும் அவன் கண்கள் அவனின் சிரிப்பை ரெட்டிப்பாக அழகாக எடுத்து காட்டியது....


இனிமை மாறாமல் அவர்கள் அன்றைய தினம் அப்படியே கழிய ஆரம்பித்தது.. அதர்ஷன் பின் சிட்டில் அமர்ந்துக்கொள்ள வீர் காரை இயக்கினான்...இப்போது இனிமை அனைத்தையும் வாசம் பரப்பும் பூச்சரமாக இதயத்தினுள் புதைத்து வைத்தவர்கள் அடுத்து அடுத்து தங்களுக்கு அணிவகுத்து நின்ற வேலையில் கவனம் பதித்தனர் இருவரும்...

உரிமை பேச்சு எல்லாம் இதயத்தின் அடியே இதமாக தலைசாய்த்து கொள்ள இப்போதும் மேல் ஓங்கி நின்றது எல்லாம் கடமையே...

அதுவும் வீர் வேலையில் தீவிரம் அடையும் தீவிரவாதியாக அடுத்து அடுத்த வேலையில் படு முனைப்பாக...

மால் ஒன்று வாங்க விசிட் போகனும் அண்ணா என ரிமைன்டர் ஆப்க்கு இனையாக இன்றைய அலுவல்களை பட்டியலிட்டு நியாபகம் படுத்த... அதற்கு அனைத்தையும் நிதானமாக உள் வாங்கி கொண்டவன் பின் தலை அசைத்து சரி அந்த மாலுக்கு போ என அவனை பணித்து விட்டு தன் மடிகணினியில் கவனத்தை குவித்தான் அதர்ஷன் வர்மா...


***************
இங்கே அஞ்சலி சென்னை கோயம்பேடு பஸ் நிறுத்ததில் இறங்கியவள் அதற்கு மேல் எங்கு செல்வது என தெரியாமல் குழந்தையாக விழித்து நின்றவள் முன் திடிரென புன்னகை ததும்பும் அமைதியான முகத்தை சீரியஸாக வைத்து கொண்டு வந்தவள் ஒருத்து..எதுவும் கூறாது வெடுக்கென அஞ்சலி கையில் இருந்த பெட்டியை வாங்கிக் கொண்டு முன் சென்றவளை...

அஞ்சலி புருவம் சுழித்து அவளை பார்த்தவள் என் பேக் என அவள் பின் பதறி செல்ல..அவளோ நின்று திரும்பி கத்தாத நான்தான் அஞ்சனா ஷிவானி பிரின்ட் எப்படி நம்ம வெல்கம் என கடையோர சிரிப்போடு பெருமை பட்டு கொண்டவளை ...மேல் இருந்து கீழாக பார்த்த அஞ்சலி சீரியஸான முக பாவத்துடன் ஓஓ நீங்கதானா அது நா கூட பேட்டி திருடினு நினைச்சு பயந்துட்டேன் என கூற அதில் அவளை முறைத்து தள்ளிய அஞ்சனா போடி என்ன பாத்தா பேட்டி திருடி மாதிறியா இருக்கு என முகம் சுருக்கியவளை கண்டு சும்மா அக்கா சும்மா என இளித்து சமாளித்தவளின் குழந்தை சிரிப்பில் கோவம் மறந்து நல்லா சமாளிக்கிற உன் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கனும் என செல்லமாக தலையில் தட்டி சரி வா வீட்டுக்கு போகலாம் என கூற இருவரும் தங்கள் தங்கும் இடம் நோக்கி சென்றனர்..

இத்தனை நாள் கூண்டு கிளியாக அடைப்பட்டு கிடந்ததில் அவளுள் அமிழ்ந்து போன துடுக்கான வாய் ஓயாத பேச்சும் விலையாட்டு தனமும் இப்போது சுதந்திர பறவையாக மாறியதில் தங்கு தடையின்றி வெளிப்பட்டது ஆனால் அதையும் மீறி அவ்வப்போது மனதை அழுத்தம் அந்த நிகழ்வு அவளை வாட்டினாலும் அதை சாமர்த்தியமாக தன் சிரிப்பினில் ஒளித்து இருந்தாள்...அவள் மனதை வாட்டும் நிகழ்வு தான் என்னவோ...ஆனால் இவளின் துடுக்கு தனமான பேச்சில் ஈர்க்கப்பட்ட அஞ்சனாவிற்கு பழகிய சில கனங்களிலேயே அவளை‌‌ பிடித்து போனது..

தங்கும் இடத்திற்கு அஞ்சலியை அழைத்து வந்த அஞ்சனா கதவை திறந்து வீட்டை சுற்றி காட்டும் முன்பே வீட்டின் ஒரு பக்கம் விடாது சுற்றி வந்த அஞ்சலி...

எனக்கு இந்த வீடு ரொம்ப பிடிச்சு இருக்கு அக்கா என கூறியவளின் கண்களுக்கு அந்த வீடு அழகு பெட்டகமாகவே தெரிந்தது... சிறிய வீடுதான் என்ற போதும் இருவர் தாராளமாக வலம் வர தோதாக சிறிய சமையல் அறை இரு படுக்கை அறை நேர்த்தியாக பொருட்களை அடுக்கிய சின்ன கூடம்‌ வீட்டிற்கு பின்‌ சின் புறவாசலில் அழகா ஓரிரு செடிகள் வைத்து பராமரித்து வைத்து இருந்தது என அனைத்தும் மிகவும் பிடித்திருந்தது அவளுக்கு...


அவள் வீட்டை ரசித்து நிற்ப்பதை பார்த்த அஞ்சனா...ம்ம் நீ ரசிச்சு கிட்டே இரு எனக்கு வேலைக்கு டைம் ஆயிடுச்சு நான் கிளம்புறேன் என‌ கூறியவள் தன் உடமைகளை எடுத்து கொண்டு கிளம்பும் முன் பசிச்சா சாப்பிடு காலைலயே சமைச்சு வச்சுட்டேன் பசிக்காட்டியும் கொஞ்சம் சாப்பிட்டு தூங்கு மறக்காம சாப்பிட்டுறு என அக்கறையாக நிதானம் அற்று வேகவேகமாக கூறி செல்ல போனவளை தடுத்து நிறுத்திய அஞ்சலி...

என்னது வேலைக்கு போறிங்களா அப்போ நா என்ன பண்ணுறது அக்கா எனக்கு போர் அடிக்கும் எனக்கு எதாவது வழி சொல்லுங்க என அவளை போகவிடாது அடம்பிடித்து நின்றவளை பார்த்து இப்போ தான வந்த கொஞ்சம் ரெஸ்ட் எடு அதுக்குள்ள ஈவினிங் ஆயிடும்...நானும் வந்துருவேன் என கூற...

அவளோ துக்கம் வாராது கா எதாவது வழி சொல்லு

சிறிது யோசித்தவள் பின் என்னைக்கு வேலைக்கு போகனும்

நாளைக்கு

அப்போ என் கூட வா நா போர வழில ஒரு ஷொப்பிங் மால் இருக்கு அங்க விடுறேன் நீ மெதுவா சுத்தி பாத்துட்டு வந்து நாளைக்கு வேலைக்கு போக பிரிப்பேர் பண்ணு டைம் போகும் ஓகே வா

ம்ம் ஐடியா நல்லாருக்கு இருக்கு ஆனா நா எப்படி திரும்பி வீட்டுக்கு வர வழி தெரியாதே

தெரிஞ்ச ஆட்டோ டிரைவர் ஒருத்தர் இருக்காரு அவர் நம்பர் தரேன் எடுத்துக்கோ அவுங்க உன்ன பத்திரமா வந்து விட்டுறுவாங்க

அப்போ ஓகே இருங்க கிளம்பி வரேன் என வேகமாக சென்று தான் எடுத்து வந்து இருந்த பெட்டியில் இருந்து துணு எடுத்துக் கொன்டு சிட்டாக பறந்து இருந்தால் குளியலறைக்குள்..இருநிமிடத்தில் நேரத்தை கடத்தாமல் கிளம்பி வந்தவள் அக்கா போலாமா என வினவ...ம்ம் வா என விட்டை பூட்டிவிட்டு இருவரும் கிளம்பினர்...


வழிநெடுக அஞ்சனா அவளுக்கு ஒவ்வொரு ரூட்டையும் விளக்கி பக்கத்தில் அவசரத்திற்கு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும்படியான கடைகளையும் காண்பித்து கொண்டே வர...அவளும் தலையை ஆட்டி வைத்தால் அனைத்திற்கும்...

அவளை ஷொப்பிங் மாலில் இறக்கிவிட்டு பல அறிவுரையுடன் ஆயிரம் பத்திரம் கூறி அலுவலகம் நோக்கி பறந்து இருந்தாள் அவள்...


உள்ளே சென்றவள் அந்த மாலின் கட்டிடத்தை பார்த்து அதிசயித்து போனால் அத்தனை நுணுக்கமாக எங்கும்‌ தொய்வு இன்றி கம்பிரமாக ஊருக்கு மையப்பகுதியில் அமைந்து இருந்த அந்த மாலை கண்டு..

எங்கும் குறையை சுட்டி காட்ட முடியாதபடிக்கு கலைநயம் ததும்ப ஏழு அடுக்குகள் கொண்ட அந்த மாலின் ஒவ்வொரு தளத்தையும் உற்சாகம் போங்க பார்த்து இருந்தாள்...

அதர்ஷனும் அதே மாலிற்க்கு தான் வந்திருந்தான் வீர் டாக்குமெண்ட் சம்மந்தமாக அந்த மாலின் மேனேஜரை சந்தித்து பேச சென்று விட அதர்ஷன் மெதுவாக சுத்தி பார்த்துக் கொன்டிருந்தான்...

கீழ் தளம் மொத்ததையும் சுத்தி பார்த்து முடித்தவள் எஸ்கல்லட்டரில் முன்பின் எறியதில்லை என்பதால் லிப்ட் வழியே போகலாம் என லிப்டினுள் நுழைந்து கொண்டவள் கடைசி தளத்தில் இருந்து கீழே சுத்தி பார்க்கலாம் என என்னி கடைசி தளம் பட்டனை அழுத்தி லிப்டினுள் ஓரமாக நின்று கொண்டாள்...

அதே சமையம் சுத்தி பார்த்து கொன்டே வந்த அதர்ஷனும் லிப்டில் தான் ஏறி இருந்தான்...


முதலில் லிப்ட்டினுள் அஞ்சலி நின்றதை கவனித்திறாதவன் இரண்டாம் தளம் வந்ததும் இறங்க செல்லு முன் அனிச்சையாக தன் பக்கவாட்டில் பார்வையை திருப்பியவன் அவளை பார்த்தது இறங்க மறந்து அப்படியே நின்று விட்டான்...

உடலில் இனிய தாக்கம் கொண்டு அதிர்ந்து நின்றவனுக்கு இன்னும் கூட அன்று தன் கரங்களில் பூ குவியலாக விழுந்து இருந்தவளின் ஸ்பரிசம் விரலோடு நிலைத்து குறுகுறுப்பதாய்...

குறுகுறுத்த விரல்கள் இப்போதே அவளை இழுத்து அனைத்து கொள் என பரபரக்க அதை கடிணப்பட்டு அடக்கியவன் அப்படியே அவளுக்கு சற்று இடைவெளி விட்டு ஓட்டி நின்று போனை பார்ப்பதை போல் பவ்லா காட்டி ஓரக்கண்ணால் அவளை மிஞ்சம் விடாது அள்ளி விழுங்கி கொண்டு இருந்ததில் அவளுக்குள் குறுகுறுத்ததோ என்னவோ தலையை லிப்டின் நாலா புறமும் திருப்பி எதையோ எதிர்பார்த்து ஏமாந்தவளாக பார்த்து விட்டு மீண்டும் நேராக பார்த்தவளுக்கு இன்னும் கூட அந்த குறுகுறுப்பு நீங்கியதாக தெரியவில்லை....

மதியம் நேருங்கும் நேரம் மற்றும் வார நாட்கள் என்பதால் அவ்வளவாக கூட்டம் இல்லை லிப்டினுள் இவர்களுடன் சேர்த்து மூன்று பேர் மட்டுமே நின்று இருந்தனர் உள்ளே...


அவளின் ஒவ்வொரு செயலையும் சொட்டு விடாது தன் மனப்பெட்டகத்தில் கிழுக்கி செமித்து கொண்டவன் கள்ள பார்வையோடு அவளை தான் பார்த்து இருந்தான்.. உள்ளே நின்ற மூவரும் கூட ஒரு ஒரு தளத்தில் இறங்கி விட ஐந்தாம் தளத்திற்கு மேல் இவர்கள் இருவர் மட்டுமே எஞ்சியிருந்தனர்...

சற்று விலகி நின்று அவள் வாசத்தை ஆழ்ந்து நுறையீரலில் உள் இழுத்து தன் மூச்சு காற்றை சுத்திகரித்தவனுக்கு இவளின் இந்த சிறு அருகாமைக் கூட இன்ப வதையாக பிடித்திருந்தது...


ஆறாம் தளம் எட்டியதில் செல்லமாக முகம் சுழித்து கொண்டவன் அதுக்குள் எதுக்கு வந்துச்சு இது என சலித்து கொண்ட போதும் எதிலும் கடமை தவறாத தொழில் அதிபன் அவளை பார்ப்பதே தலையாய கடமை என அவளை ஓரவிழியால் அள்ளி பருகி நிறைத்து கொள்ள தவறவில்லை..அவனின் இன்ப வதைகளை நீட்டிக்கும் விதமாக லிப்ட் ஆறாம் தளத்திற்கும் ஏழாம் தளத்திற்கும் இடையில் இடர்பட்டு ஸ்டிரக் ஆகி ஓர் குலுங்கு குலுங்கி நின்றதில் இறகுங்கவதர்கு ஏய்துவாக சற்று முன் தள்ளி‌ நின்றவள் சுவற்றோடு சாய்ந்து கொண்டு கிருஷ்ணா கிருஷ்ணா என கடவுளை துணைக்கு அழைத்து கண்களை இறுக்க முடி பயந்து நின்றவளின் பயந்த முகத்தையும் ரசித்து தொலைத்தான் அவன்..

ரோஜாவின் மேல் படர்ந்து இருக்கும் பனித்துளியாக வியர்வை முகத்தில் முத்துமுத்தாக அரும்பி பயத்தில் இதழ் நடுக்கத்தினோடு இதழை முனுமுனுவென அசைத்தவளின் கை பிடித்து சற்று தன் பக்கம் ஒட்டி இழுத்து நிற்க்க வைத்து கொண்டவன் ஒன்னும் இல்லை சீக்கிரம் போயிடலாம் என கூறியவன் அந்த நேரத்திலும் அவள் கரங்களை இறுக பற்றி உவமை அமைத்து ரசிக்க அவனால் மட்டுமே முடியும்...

அவன் பக்கத்தில் பாதுகாப்பை உணர்ந்தாலோ என்னவோ இன்னும் அவன் நெஞ்சு உரச ஒட்டி நின்றவளில் நெருக்கம் அவனை கிளர்ச்சியுர செய்து மூச்சு முட்டி நிற்க்க வைத்தது..

அதில் சற்று விலகி நிற்க போனவனை விலக விடாது இன்னும் நெருங்கி பஞ்சு பொதியாக அவன் மார்பில் விழுந்து பிலீஸ் பயமா இருக்கு ஏதாவது செய்யுங்க என கூற..

அவளை அனைத்து பிடித்தபடி தன் கைபேசியை எடுத்து வீரிடம் உதவி கோரலாம் என எடுத்து பார்க்க அதுவோ சிக்னல் இன்றி பல்லிலித்ததில் சலித்து கொண்டு அவளை சமாளிக்க முயன்றான் ..ஒன்னும் இல்லடா நா இருக்கேன் பாரு பயப்படாத என கூறியவனுக்கு எங்கு இருந்து இந்த உரிமை காற்றில் பறக்கும் காகிதம் நீரில் ஒட்டி கொள்வதை போல் வந்து ஒட்டி கொண்டதோ தெரியவில்லை..அந்த உரிமை ததும்பும் ஆறுதலை கவனிக்கும் நிலையிலும் இருவருமே தற்போது இல்லை அவனை பொருத்த வரை இது இன்ப வதை அவளை பொருத்த வரை முற்றும் முழுவதும் பயம்...


நேரம் போக போக ஆக்சிஜன் பற்றாமல் சற்று இழுத்து இழுத்து மூச்சு எடுத்தவளுக்கு பயம் வேறு பேயாய் மனதில் நின்று ஆட்டி படைத்து ஏதேதோ நினைவை தொற்றுவித்ததிலும் மேலும் மேலும் பயந்து ஆஸ்துமா நோயாளி போல் மூச்சுக்கு ஏங்கியவில் முதுகை ஆதுரமாக தடவிட்டு ஆசுவாசம் படுத்த பார்க்க அது எதுவும் வேலைக்கு ஆகவில்லை.. இதில் நொடிக்கு நொடி அதிகரிக்கும் அவளின் பதற்றத்தை அவளின் உடல் வழியே உணர்ந்தவனுக்கும் காற்று பற்றாமல் சற்று மூச்சு இறைக்க தான் செய்தது...

இன்னும் பலமாக மூச்சு திணறி துவண்டவளை தன் நெஞ்சோடு இறுக்கி கொண்டு தன் மூச்சையே கொடுத்து சரி செய்ய முயன்றான் இதழ் வழியே தன் சுவாசத்தை அவள் நுரையீரலில் நிறைத்து..

அவன் முத்தமிட்டதில் விழிவிரித்து அந்த இருட்டில் அவன் முகம் பார்க்க முயல..அவனோ அவளை இன்னமும் முத்தமிட்டு கொண்டு தான் இருந்தான்...அவள் சற்று சமநிலை அடைந்த பின்னும் கூட அவள் இதழை விடாது மேல் இதழ் கீழ் இதழ் என சுவைத்து அமுதம் பறுகி அவளை துவல வைத்தான்...

ஒரு கட்டதில் இந்த அடாவடிகரனின் தடாலடியை தாங்க இயலாத பெண்மை அவன் கரத்தினுள் பந்தமாக குட்டி பொம்மை போல் மயங்கி பதுங்கி கொள்ளவும் லிப்ட் திறக்கவும் சரியாக இருந்தது...எதிரில் அவர்களை அதிர்ச்சியாக பார்த்து கொன்டிருந்தான் வீர்...(பாவம் சிங்கல் பையன் 🤭🤭)


தொடரும்...........
 
Last edited:

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 31, 2022
Messages
36
சந்தோஷமான இனிய அதிர்ச்சி தான் இன்னைக்கு எபி 🤩👌

வீர் நெனச்சா பாவமா தான் இருக்கு... 🤣🤣

அவனுக்கும் அஞ்சலியப் பாத்தா சந்தோஷமா இருக்கும் 😎
 
Top