• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அள்ளிக் கொண்ட தென்றல் - 18.

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
878
பகுதி – 18.

தென்றலுக்கு அன்று அலுவலகம் வந்தது முதல், இதயம் கிடந்து அடித்துக் கொண்டது. கடந்த இரண்டு நாட்களாக அவள் இங்கே இருக்கிறாள் தான்... அப்பொழுது அங்கே பிரபஞ்சன் இருக்கவில்லை. இன்று அவன் ஊரில் இருந்து வருகிறான்... அவனை எதிர்கொள்ளத்தான் முடியாமல் நடுங்கினாள்.

அவளது தயக்கத்தைப் பார்த்த பார்வதி, “இன்னைக்கு வேண்ணா லீவ் போட்டுடேன்” அவளிடம் சொல்ல, வேகமாக மறுப்பாக தலை அசைத்தாள்.

அவளது தகப்பனோ, “அங்கே வேலைக்குப் போகணும்னு என்ன அவசியம் வந்தது? உன் கம்பெனி இருக்கு... வா... வந்து வேலையை கத்துக்கோ, எனக்கும் உதவியா இருக்கும்” அவர் சொல்ல, அதை அவள் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.

‘இவருக்கு இன்னும் புத்தி வரலையே... எப்போ வரப் போகுதோ?’ எண்ணிய பார்வதி மகளுக்கு தைரியம் சொல்லி அனுப்பினார்.

பத்து மணி அலுவலகத்துக்கு, ஒன்பதுமணிக்கே அவள் வந்து சேர, அங்கே இருந்த வாட்ச்மேன் அவளை வித்தியாசமாகப் பார்த்தவாறு, அலுவலகத்தின் கதவைத் திறந்து விட்டார்.

அங்கே தியாகு, தக்ஷன், தன்யஸ்ரீ என மூவர் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார்கள். உடன்... பிரபஞ்சன், ஷீபாவும் இருக்க, தென்றல் அங்கே புதியவள். அப்படி இருக்கையில், அவள் சீக்கிரம் வந்திருக்கவே செக்யூரிட்டிக்கு வியப்பு.

அவர்களது அலுவலகம், ஒரு தனி வில்லாவை விலைக்கு வாங்கி, கீழ்த்தளம் முழுமைக்கும் கண்ணாடித் தடுப்புகள், பார்ட்டிஷன் மட்டுமே செய்திருந்தான். ஒரு வரவேற்பறை, ஒரு உள் அறை அங்கேதான் பிரபஞ்சனும், ஷீபாவும் இருப்பார்கள்.

சிறியதாக ஒரு காபி அறை, அதை ஒட்டி... ஃபயில்களை எல்லாம் வைக்கும் அறையும் இருந்தது. மேலே மாடியில் என்ன இருக்கிறது என அவளுக்கு இன்று வரைக்கும் தெரியாது.

தன் சீட்டில் சென்று அமர்ந்தவள், கணினியை இயக்கி... சில கணக்கு வழக்குகளைப் பார்க்கத் துவங்கினாள்.

திடுமென அவளது அலைபேசி இசைக்கவே, தூக்கி வாரிப் போட அதிர்ந்தவள், பிறகு தெளிந்து அழைப்பை ஏற்றாள்.

“அண்ணி... சொல்லுங்க...” அவள் குரல் கொடுக்கவே,

“ரஞ்சன் வந்துட்டான் தென்றல்... அதைச் சொல்லத்தான் கூப்ட்டேன். நீ ஆபீஸ்க்கு கிளம்பிட்டியா?”.

“நான் ஆபீஸ்லதான் அண்ணி இருக்கேன்...”.

“ஓ... இவ்வளவு சீக்கிரமாவா? டென்ஷனா இருக்கறியா என்ன?” அவளது குரலில் இருந்த பதட்டத்தைக் கண்டுகொண்டாள்.

“ஆமா அண்ணி, கொஞ்சம்...” அவள் சொன்ன விதத்தில் நிவேதிதாவுக்குப் பாவமாக இருந்தது.

“அட, இவ்வளவு தூரம் வந்த பிறகு பின்வாங்கலாமா? நாங்களே அவன்கிட்டே பேசலாம்ன்னா, அதுக்கு அவன் விடவே மாட்டேங்கறான். கொஞ்ச நாள் போகட்டும், கண்டிப்பா பேசறேன்” அவளுக்கு தைரியம் சொன்னாள்.

“இல்ல அண்ணி, நீங்க சிரமப்படாதீங்க, நானே பார்த்துக்கறேன்... என்னால் முடியலன்னா கண்டிப்பா உங்ககிட்டே கேட்கறேன்”.

“அப்படின்னா சரி, அவன் கொஞ்சம் கோபமா இருக்கான் அவ்வளவுதான். மற்றபடி அவனால் உன்னை வெறுக்க முடியாது”.

“ம்... புரியுது அண்ணி... ஆனாலும் ரொம்ப கோபமா இருக்காங்களா?” அவளுக்கு அதை எப்படி கையாள்வது எனத் தெரியாமல் தடுமாறினாள்.

“தென்றல்... கல்யாணம் ஆனதுக்குப் பிறகு, புருஷனோட கோபத்துக்கெல்லாம் பயப்படக் கூடாது. நாமளும் சரியான நேரம் பதிலடி கொடுக்க கத்துக்கணும்... விடு, இதெல்லாம் நீயும் சீக்கிரமே கத்துப்ப” சொன்னவள், மேலும் சில நிமிடங்கள் பேசிவிட்டு அலைபேசியை வைத்துவிட்டாள்.

நேரம் கடந்துகொண்டே இருக்க, முக்கால்மணி நேரம் கடந்த பிறகு அங்கே வந்தான் தியாகு.

“ஹாய் தென்றல்... என்ன சீக்கிரமே வந்துட்டீங்க போல? அப்படி என்ன வேலை இருக்கு?” கேட்டவன் அவள் அருகே வந்து நிற்க, இருக்கையில் இருந்து எழுந்தாள்.

“அட, என்ன இது... எதுக்கு இவ்வளவு மரியாதை? சும்மா உக்காந்துட்டே பதில் சொல்லுங்க” அவன் சொல்ல, அவளது பார்வையோ, அவனைக் கடந்து, அவன் முதுகின் பின்னால் பாய்ந்தது.

“நான் கேட்டா, எனக்கு பதில் சொல்லாமல் அங்கே யாரைப் பார்க்கறீங்க?” கேட்டவன், அங்கே பிரபஞ்சனைப் பார்த்துவிட்டு,

“குட் மார்னிங் சார்...” அவன் வேகமாக சொல்ல, அவனுக்கு தலையை அசைத்தவனின் பார்வை மொத்தமும் தென்றல் மீதுதான்.

“என்னசார் அப்படிப் பார்க்கறீங்க? புதுசா நம்ம ஷீபா மேடம் தான் அப்பாயின்மென்ட் பண்ணாங்க. ரிசப்ஷன் ப்ளஸ் டேட்டா என்ட்ரி எல்லாம் பார்க்கறதுக்கு. பேர் தென்றல்...” அவன் சொல்ல, தென்றலோ விழித்துக்கொண்டு நின்றிருந்தாள்.

“ஓ... உங்களுக்கு வேலை எதுவும் இல்லையா?” அவன் அவளிடம் நின்று பேசியது அவனுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை.

“இதோ கிளம்பிட்டேன் சார்...” அவன் வேகமாக அங்கிருந்து செல்ல, தென்றல் அவனையே பார்த்திருக்க, அவளைக் கடந்து தன் அறைக்குள் சென்று மறைந்தான்.

உள்ளே கார்பன் பேப்பர் ஒட்டியிருக்க, அவனது பார்வையோ அவளைத்தான் தழுவிக் கொண்டிருந்தது.

‘இவ இங்கே என்ன பண்றா? ஷீபா எதுவும் சொல்லவே இல்லை?’ எண்ணியவன் அவளுக்கு அழைக்க நினைத்து, அவள் வந்துகொண்டிருப்பாள் என்பதால் அதைக் கைவிட்டான்.

‘அவ வரட்டும் கேப்போம்.... என்ன எல்லாரும் சேர்ந்து ப்ளே பண்றாங்களா?’ தென்றல் இங்கே வேலைக்கு வருகிறாள் என்றால், ஷீபாவுக்கு அவளை நேரடியாகத் தெரியாது. நிச்சயம் நிவேதிதா கேட்டு, அப்படித்தான் இது நடந்திருக்கும் என அவனுக்கு நொடியில் புரிந்து போனது.

‘அவன்கிட்டே அவளுக்கு என்ன பேச்சு?’ ஒரு அலுவலகத்தில், ஒன்றாக வேலை பார்ப்பவர்களுக்கு மத்தியில் பேச்சு என்பது வெகு இயல்பான விஷயம் என்றாலும், அவனிடம் அவள் பேசவில்லை என்ற கோபத்தில் நினைப்புகள் எல்லாம் அபாயம் தான்.

ஒரு ஜீன்ஸ், குர்தாவில் வெகு சாதாரணமாக நின்றவளை அவனது கண்கள் ரசித்துப் பார்த்தது. அவளது சுருட்டை முடி, ஒரு பேண்டுக்குள் அடங்கி இருக்க, அந்த குண்டு கண்களோ அவனது அறையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.

தென்றலுக்கோ, உடனடியாக அவனிடம் பேச ஆசை உந்தித் தள்ளியது. அவன் வந்தவுடன் எப்படி அங்கே சென்று நிற்பது என அவளுக்குப் புரியவில்லை.

அவள் தன் அறையைப் பார்ப்பதும், கணினித் திரையை வெறிப்பதுமாக இருக்க, அவனுக்குள் ஒரு உற்சாக ஊற்றும், சிறு கோபமும் ஒருங்கே எழுந்தது.

‘என்னைத் தேடி வந்திருக்கா... அவ அப்பனை தாண்டி வந்திருக்கா’ அந்த நினைப்பே பெரும் சந்தோஷத்தை அளிக்க, ‘இன்னும் வெளியே நிக்கறா...’ அவள் விலகி நிற்பது அவனுக்கு கோபத்தை அளித்தது.

அவள் கையைப் பிசைந்தவாறு இருக்க, ஷீபா அங்கே வந்தாள்.

“ஷீபா...” உள்ளே செல்லப் போனவளை அழைக்க, அவள் அருகே வந்தாள்.

“காலையிலேயே ஷீபாவுக்கு என்ன வச்சிருக்க? அவன் வந்துட்டானா? பேசினியா? பேசினானா?” அவளிடம் கேட்க,

“அவங்க வந்த உடனே ரூமுக்குள்ளே போய்ட்டாங்க”.

“ரூம் என்ன அண்டார்ட்டிக்காவிலேயா இருக்கு, இதோ இருக்கு, விஷ் பண்ற சாக்கில் போய், கரெக்ட் பண்றது தான?” அவள் கேட்க,

“ஆமா... இது ஏன் எனக்குத் தோணலை?” அவள் வருத்தமாக கேட்க, “சுத்தம்...” ஷீபா சத்தமாக சலித்தவள்,

“எது... கரெக்ட் பண்றதா?” ஷீபா சற்று கடுப்பாக கேட்க,

“ம்ஹும்... விஷ் பண்றது...” அவள் வேகமாக சொல்லவே, பக்கென சிரித்தாள்.

“கிழிஞ்சுது... நான் கரெக்ட் பண்ண ஐடியா கொடுத்தா, இவ விஷ் பண்றதுக்கு எடுக்கறா பார்... நீ தேற மாட்ட... சரி, நான் போய் அவன்கிட்டே வாங்கிக் கட்டிக்கறேன்” சொன்னவள், தன் லேப்ட்டாப் பேகை எடுத்துக்கொண்டு நகர்ந்தாள்.

“குட் மார்னிங் பாஸ்...” ஷீபா விஷ் செய்தவாறே உள்ளே வர, அவனோ அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.

“விஷ் பண்ணா, பதிலுக்கு விஷ் பண்ணணும்... இப்படி முறைச்சா?” கேட்டவாறே, அவனைத் தாண்டிச் சென்றவள், அவனுக்கு பக்கத்தில், இடப்பக்கம் அவனைப் பார்த்துப் போட்டிருந்த சைட் டேபிளில் சென்று அமர்ந்தாள்.

“என்ன பண்ணி வச்சிருக்கங்க? எதுக்கு இப்போ அவளை வேலைக்கு எடுத்த? எனக்குப் பிடிக்கலை....” அவன் கத்த, அதை அவள் கொஞ்சம் கூட கண்டுகொள்ளவே இல்லை.

“புடிக்கலை... இங்கே நீதானே பாஸ்... நீயே அவளைப் போகச் சொல்லிடு. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை” சொன்னவள், தன் லேப்ட்டாப்பை எடுத்து, டேபிள்மேல் வைத்து அதை ஆன் செய்ய, அவனோ அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.

“என்ன போகல?” அவள் அவனைச் சீண்ட, டேபிள்மேல் இருந்த பிளாஸ்டிக் பேப்பர் வெயிட்டை தூக்கி அவள்மேல் வீசினான்.

அதை சரியாக கேட்ச் பிடித்தவள், “அதான் அவமேலே அவ்வளவு ஆசை வச்சிருக்கல்ல, பிறகு எதுக்கு இந்த கோபம்? போ... போய் பேசு...” அவள் சொல்ல, தன் இருக்கையில் அமர்ந்துகொண்டான்.

“நான் பேசவேண்டியது எல்லாம் பேசியாச்சு... இனிமேல் அவ பேசட்டும்” சொன்னவனது குரல் இறுகிக் கிடக்க, அதற்கு மேலே ஷீபா எதையும் பேசவில்லை.

சில பல நிமிடங்கள் அமைதியில் கழிய, “இப்போ கூட அவ வரலை பார்...” அவன் குறைபட,

“அவதான் வந்திருக்கா... உனக்கு அது தெரியல?” அவனை நிமிர்ந்து பார்க்காமலே அவள் சொல்ல, அவனோ, தென்றலைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

“அப்படி அவளை நான் என்ன பண்ணிடுவேனாம்?” அவனிடம் தென்றல் பேச வராமல் போக, புலம்பித் தள்ளினான். அவளைப் பார்த்தவுடன், அவள்மேல் இருந்த கோபமெல்லாம் எங்கே சென்று ஒளிந்துகொண்டது என்றே அவனுக்குத் தெரியவில்லை.

“அதெப்படி எனக்குத் தெரியும்?” அவள் குறும்பாக பதில் கொடுக்க, அவளை முறைக்க முயன்று தோற்றான்.

“என்னை இப்படி புலம்ப விடத்தான் அவளை இங்கே கூட்டி வந்தியா?”.

“மூணு மாசமா நீ எப்படி இருக்கன்னு கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தன்னா, இப்படி என்கிட்டே கேட்க மாட்ட” சொன்னவள் அவனை அத்தனை அழுத்தமாகப் பார்த்தாள்.

“மூணு மாசத்துக்குப் பிறகு இப்போதான் நீ பேசற... அது தெரியுமா?” கேட்டவள், அவனையே பார்த்திருக்க, அவன் எங்கே அவளைப் பார்த்தானாம்?

அவன் பார்வையைக் கண்டவள், “டேய்... நான் பாவம்டா... பேச ஆசையா இருக்குன்னா போய் பேசு. மாடிக்கு கூட கூட்டி போ, உன்னை யார் வேண்டாம்னு சொன்னா?” அவன் இப்படி மருகுவது அவளுக்குப் பாவமாக இருந்தது.

“இதுக்கு பதில் நான் அப்போவே சொல்லிட்டேன்” சொன்னவன், தன் வேலைக்குத் திரும்பினான்.

‘இந்த தென்றல் ஏன் இப்படி இருக்கா?’ அவளால் நினைக்க மட்டுமே முடிந்தது. அன்று முழுவதும், அவள் தன்னிடம் வந்து பேசுவாள் என அவன் காத்திருக்க, அப்படி ஒன்று நடக்கவே இல்லை.

அலுவலக விஷயமாக அங்கிருந்த மற்றவர்களை அழைத்துப் பேசுவதும், வேலை வாங்குவதுமாக அவன் இருக்க, தென்றலுக்கு அவனை எப்படி அணுகுவது என சுத்தமாகத் தெரியவில்லை.

மதியம் கிச்சனில் அமர்ந்து அனைவரும் ஒன்றாக உண்ண, பிரபஞ்சன் மட்டும் அங்கே வரவில்லை.

தன் அருகே அமர்ந்திருந்த ஷீபாவிடம், “அவங்க சாப்பிட வரலையா?” அவளிடம் கேட்க,

“அவன் வீட்டுக்கு போய் சாப்ட்டுட்டு, அப்படியே கொஞ்சம் வெளியே போய்ட்டு வருவான். நீ சாப்பிடு...” அவள் சொல்ல, அமைதியாக தன் உணவைக் கொறித்தாள்.

அவனிடம் பேசச் சொல்லி, மனம் உந்தித் தள்ளிக் கொண்டிருக்க, அவளால் எதையும் செய்ய முடியவில்லை. இவள் சாப்பிட்டுவிட்டு வரும் முன்னர், அவன் கிளம்பிச் சென்றிருக்க, சற்று சோர்ந்தாள்.

மாலையில் அனைவரும் கிளம்பிச் செல்கையில் அவன் மீண்டும் அலுவலகம் வர, அனைவரும் சொல்லிக்கொண்டு கிளம்பினார்கள்.

தென்றலும் தன் பொருட்களை எல்லாம் அடுக்கி வைத்துக் கொண்டிருக்க, “உன்னை யார் இங்கே வரச் சொன்னா? எதுக்கு வேண்டி வந்த?” அவன் கோபமாக கத்த, கையில் இருந்த ஃபயில் எல்லாம் சிதறி கீழே விழ, அவன் கோபத்தில் மிரண்டாள்.

“அது... நான்...” காலைமுதல் அவனிடம் பேசத் தவித்தவளுக்கு, அவனது கோபம் கண்டு வார்த்தை தடுமாறியது.

“என் உயிரை வாங்கன்னே அந்த ஆண்டவன் உன்னைப் படைச்சான் போல...” அவள் தன்னிடம் பேசாத கோபத்தை, அவன் இப்படியாக கொட்டிக் கவிழ்க்க, அவளுக்கோ கண்ணீர் கடகடவென கன்னத்தில் இறங்கியது.

அவளது கண்ணீர் அவனை என்னவோ செய்ய, “ச்சே...” அதற்கு மேலே அவளிடம் கோபத்தைக் காட்ட முடியாமல் வேகமாக அங்கிருந்து வெளியேறினான்.

அவனது கோபக்குரலைக் கேட்டவாறு வெளியே வந்த ஷீபா, தென்றல் அழுவதைப் பார்த்துவிட்டு அவள் அருகே விரைந்தாள்.

“இவனோட... இப்போ எதுக்கு அழற தென்றல்?” சற்று சலிப்பும், கோபமும் கலந்து கேட்டாள்.

“அவங்க என்னைத் திட்டிட்டாங்க... எதுக்கு இங்கே வந்தன்னு கேட்கறாங்க” சொல்லிவிட்டு அவள் அழ,
 

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
878
“உனக்கு அவன் கோபப்படறது மட்டும்தான் தெரியுதா?” இப்படிக் கேட்டவளை, புரியாமல் ஏறிட,

“நீ அவன்கிட்டே பேசலைங்கற ஏமாற்றத்தைத்தான் இப்படி கோபமா கொட்டிட்டு போறான். நீ என்னன்னா... ரொம்ப ஏமாற்றமா இருக்கு தென்றல்” அவளும் காலைமுதல், தென்றல் எப்பொழுது அவனிடம் சென்று பேசுவாள் எனக் காத்திருக்க, அது நடக்காத வருத்தம் அவளுக்கும் இருந்தது.

“எனக்கு அவங்ககிட்டே எப்படிப் பேசறதுன்னு தெரியலையே...” அவள் தன் கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவாறு சொல்ல, ஷீபாவுக்கு தன் தலையிலேயே அடித்துக் கொள்ளலாம் போல் இருந்தது.

“சரி, அதை நாளைக்கு பார்த்துக்கலாம்... இப்போ நீ கிளம்பு” அவளைக் கிளப்பி அனுப்பினாள்.

தென்றல் வீட்டுக்கு வருகையில், பரமேஸ்வரன் வாசலிலேயே அவளை வரவேற்றவர், அவளது முகத்தை ஆராய்ந்தார். அதில் தான் எதிர்பார்த்த எதுவும் இல்லாமல் போகவே, அமைதியாக உள்ளே சென்றுவிட்டார்.

தென்றல் வந்து ஒருமணி நேரம் கடந்த பிறகும் அவள் அறைக்குள் இருந்து வெளியே வராமல் போகவே, பார்வதி அவளைத் தேடிச் சென்றார்.

தென்றல் வந்த கோலத்திலேயே இன்னும் அமர்ந்திருக்க, “என்ன தென்றல், இப்படியே உக்காந்துட்ட? முதல்ல போய் குளிச்சுட்டு வா போ...” அவளை அனுப்ப முயன்றார்.

“அவங்க வந்துட்டாங்கம்மா... என்னை எதுக்கு வந்தன்னு கேட்டு சத்தம் போட்டாங்க” அவள் குரல் கலங்க சொல்ல, பார்வதிக்கு பெருத்த ஏமாற்றம்.

அதை தனக்குள் மறைத்தவர், “பரவாயில்லை விடு... எல்லாம் சரியாப் போய்டும். நீ இப்படி உக்காராத, முதல்ல எந்திரி...” அவளை கட்டாயப்படுத்தி அனைத்தையும் செய்ய வைத்து உறங்க வைத்தார்.

அத்தனை செல்லமாக வளர்த்த மகள், கணவனின் ஒற்றை பேச்சில் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடும். ஆனால் அதைச் செய்யாத கணவன்மேல் ஆத்திரமும், கோபமும் ஒருங்கே எழுந்தது.

அவள் உறங்கிவிட, பார்வதி அறைக்கு வரவே, “என்னவாம்...? தென்றல் முகமே வாடிக் கிடக்கு?” மனைவியிடம் கேட்டார்.

“நீங்க எப்போ இப்படி அரக்கனா மாறினீங்கன்னு எனக்குத் தெரியலை” சொன்னவர் அமைதியாகச் சென்று படுத்துக் கொண்டார்.

பிரபஞ்சனின் நிலையோ இன்னும் மோசம்... தன்னைத்தேடி வந்துவிட்டாள் என சந்தோஷப்படுவதா? இன்னும் மூன்றாம் மனிதர்போல் விலகியே நிற்கிறாளே என வருத்தப்படுவதா? எனப் புரியாத நிலை.

‘எப்படியோ, நேற்று வரைக்கும் அவளைப் பார்க்கக் கூட முடியாத நிலையில் இருந்தாய். இப்போ அவ உன் அருகிலேயே இருக்கிறாளே என சந்தோஷப்படு’ மனசாட்சி குரல் கொடுக்க, ‘எனக்கு அது மட்டும் போதாது’ அவனுக்கு கத்தவேண்டும்போல் இருந்தது.

‘அவகிட்டே நான் கோபப்பட்டிருக்கக் கூடாது... அவளை அழ வச்சுட்டேன்’ அதுவேறு அவனைப் போட்டு பாடாய் படுத்தியது.

‘என் கூடவே வந்துடுறியா?’ எனக் கேட்க அவனுக்கு ஒரு நொடி கூட ஆகாது. ஆனால், மறுபடியும் அவள் தன் தகப்பனைக் காரணம் காட்டி அதை மறுத்தால், அவனால் தாங்கிக்கொள்ள முடியாது.

அதைவிட, அவளாகவே ஒரு நல்ல முடிவுக்கு வரவேண்டும் என நினைத்து அமைதியானான்.

மறுநாள்முதல் அலுவலகத்தில் அவனிடம் பேச சந்தர்ப்பம் வேண்டி காத்திருந்தாள். ஆனால் அதுதான் அமைவேனா என அவளுக்கு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தது.

நாட்கள் மெல்ல நகர, பிரபஞ்சனின் குணத்தை அவள் கூட இருந்து பார்த்தாள். அனைவரிடமும் அத்தனை ஜோவியலாகப் பழகினான். அங்கே இருந்த மற்ற மூவருமே, அவனிடம் வேலை பழக வந்திருந்த ட்ரெயினீஸ்தான்.

அவர்களை ஒருவர் மாற்றி ஒருவர் அவன் செல்லும் அலுவலகங்களுக்கு அழைத்துச் செல்வது, அவர்கள் வேலையில் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டுவது, திருத்துவது என அனைத்தையும் பொறுமையாகவே செய்தான்.

அங்கே தியாகுவுக்கு பிரபஞ்சனின் வயது இருக்கும். தக்ஷனுக்கும் இருக்கும் என்றாலும், ஒன்றோ இரண்டோ குறைவாக இருக்கும். தன்யஸ்ரீ மிகுந்த புத்திசாலி என்பதால், பிரபஞ்சனைப்போல் முதல் முயற்சியிலேயே அனைத்து பாடங்களிலும் தேறி இங்கே வந்திருந்தாள்.

ஷீபாவைப்பற்றி கேட்கவே வேண்டாம்... பிரபஞ்சனின் கல்லூரித் தோழி. கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் இந்த இடத்துக்கு அவள் வந்திருந்தாள். தாய் இல்லை, தகப்பன் மட்டுமே... தாயில்லாத பெண் என்பதால் அவள்மேல் அவனுக்கு மிகுந்த அன்பும், அக்கறையும் இருந்தது.

இவை எல்லாம் தென்றல் அங்கே வந்து தெரிந்துகொண்டது.

அன்று ஒரு கம்பெனியின் விஷயத்தை கவனிக்க வேண்டிய அவசியம் வரவே, அனைவரும் இரவு தாமதித்தார்கள். பிரபஞ்சன் அலைபேசியின் வாயிலாக விஷயத்தைச் சொல்லி இருக்க, அவன் வருவதற்குள், எங்கேயோ இடறிய கணக்கை அவர்கள் கண்டு பிடிக்க வேண்டி இருந்தது.

“தென்றல்... நீ வேண்ணா கிளம்பு... நாங்க இதை பார்த்துக்கறோம்...” ஷீபா அவளிடம் வந்து சொல்ல,

“இல்ல... நான் வெயிட் பண்றேன்...” அவனைப் பார்த்துவிட்டு செல்ல விரும்பினாள்.

அனைவரும் வேலையில் இருக்க, நேரமாகவே பசி வேறு ஒரு பக்கம் வயிற்றைக் கிள்ளியது. மதியம் ஒரு சின்ன டப்பாவில் கட்டிக்கொண்டு வந்து தின்ற தயிர்சாதம் எப்பொழுதோ ஆவியாகி இருக்க, ஒரு டீயோ, காபியோ குடித்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது.

“நான் காபி போடப்போறேன்... யாருக்காவது வேணுமா?” அவள் அங்கே இருந்தவர்களிடம் பொதுவாக கேட்க, அனைவருமே வேண்டும் எனக் கேட்டார்கள்.

அங்கே இருந்த சின்ன குளிர்சாதனப் பெட்டியில் இருந்து பாலை எடுத்தவள், மின்னடுப்பில் அதை வைத்து காய்ச்சத் துவங்கினாள்.

அந்த நேரம், தியாகு அங்கே வந்து நின்றான். அவனுக்கு அவள்மேல் சிறு விருப்பம் இருக்க, அது அவளுக்குப் புரியவெல்லாம் இல்லை.

பிரபஞ்சனுக்கு திருமணம் முடிந்ததோ, தென்றல் அவனது மனைவி என்பதோ அங்கே இருந்த ஷீபாவைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஷீபாவுக்கு அதைக்குறித்து யாரிடமும் சொல்லவேண்டும் என்று நினைக்கவும் இல்லை.

ஒருவேளை, அவள் அதைச் சொல்லி... மற்றவர்கள் அவர்கள் வாழ்க்கைக் குறித்து ஆராய்வது தேவையற்ற விளைவுகளையோ, சங்கடங்களையோ கொடுத்துவிடக் கூடாது என்பதால் அதை அவள் செய்யவில்லை.

“ஹாய்... நீங்க கிளம்பல?” தியாகு அவளிடம் கேட்க,

“இல்ல... நீங்க எல்லாருமே இங்கே இருக்கும்போது, நான் மட்டும் எப்படி கிளம்பிப் போறது? அதான்...” அவனுக்கு பதில் கொடுத்தவளின் கவனம் முழுவதும் பால்பாத்திரத்திலேயே இருந்தது.

தியாகு ஒரு மாதிரி வழிந்திருந்தாலோ, பார்வையில் மாறுபாடு காட்டி இருந்தாலோ, பேச்சிலோ, பழக்கத்திலோ நெருக்கத்தைக் கொண்டுவர முயன்றிருந்தால் அவள் அலட் ஆகி இருப்பாளோ என்னவோ?

வேலை செய்யும் இடத்தில், அவன் பேச, அவளும் சாதாரணமாகத்தான் உரையாடினாள்.

“நீங்க சமைப்பீங்களா?” அவனது சொந்த ஊர் திருச்சி, இங்கே ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கி இருக்கின்றான். அவளைத் திருமணம் செய்யும் எண்ணத்தில், அவளைப்பற்றி தெரிந்துகொள்ள முயன்றான்.

“எல்லாமே ஓரளவுக்கு சமைப்பேன்... ஏன் கேட்கறீங்க?” அவள் கேட்க,

“சும்மா தெரிஞ்சுக்கத்தான்...” அவன் சொல்லிக்கொண்டிருக்கும் நேரம், சாதாரணமாக திரும்பிப் பார்க்க, அங்கே பிரபஞ்சன் உணர்வுகளைத் தொலைத்த முகத்தோடு, இவர்களையே பார்த்தவாறு நிற்பது தெரிந்தது.

“நீங்க காபி போட்டு எடுத்துட்டு வாங்க... நான் வேலையைப் பார்க்கறேன்” சொன்னவன் அங்கிருந்து சென்றுவிட, அவளோ தன் வேலையைத் தொடர்ந்தாள்.

தியாகுவும் சரி, தக்ஷனும் சரி... அவளிடம் தினமும் ஒன்றிரண்டு வார்த்தைகளாவது பேசாமல் இருக்க மாட்டார்கள். வேலையைக் குறித்தும் சரி, அது இல்லாமல், சாதாரண விசாரிப்புகள், கேலிகள், கலாட்டாகளாக கூட அது இருக்கும்.

பிரபஞ்சன், தன் அறையில் சென்று அமர்ந்தவனுக்கு, அங்கே இருக்க முடியவில்லை.

வேகமாக எழுந்தவன், கிச்சனுக்குச் செல்ல, தென்றலோ, ட்ரேயில் அடுக்கி வைத்திருந்த கண்ணாடி கப்களில் காபியை ஊற்றிக் கொண்டிருந்தாள்.

“இங்கே என்ன பண்ற?” அடக்கப்பட்ட கோபத்தில் கேட்டான்.

அங்கே அவள் யாரென மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்... ஆனால் அவனுக்குத் தெரியுமே. அவர்களது முதலாளி, அவள் அனைவருக்கும் ஒன்றைச் செய்வதா?’ என சப்பைக்கட்டு கட்டினாலும், தியாகுவோடு அவள் பேசியது அவனுக்குப் பிடிக்கவில்லை.

“காபி... காபி குடிக்கறீங்களா?” அவள் கேட்டு முடிக்கையில், அவள் கையில் வைத்திருந்த ட்ரேயில் இருந்த கப்களில் மூன்று கோப்பைகளை நொடியில் காலி செய்திருந்தான்.

“ஹையோ... காபி கொதிக்குது...” அவள் பதற,

“நான் கோபமா இருக்கறது தெரியலை இல்ல...” கேட்டவன் அங்கிருந்து செல்ல, இவளோ விழித்துக் கொண்டிருந்தாள்.

அவர்கள் பேசுவது இன்னதென யாருக்கும் கேட்காது. ஆனால் அவர்கள் நிற்பதும், பிரபஞ்சன் காபியை எடுத்துக் குடிப்பதும் நிச்சயம் தெரிந்திருக்கும்.

‘காபி குடிக்க போயிருப்பார்’ என அனைவரும் நினைக்க, அவன் பேசிச் சென்றதில் அவளுக்கு எதுவும் புரியவில்லை.

‘இப்போ எதுக்கு கோபம்? அப்படி நான் என்ன செய்தேன்?’ எண்ணியவள், அவன் குடித்துவிட்டு வைத்த கப்களை கழுவிவிட்டு, மீண்டும் காபியை ஊற்றி மற்றவர்களுக்கு கொடுத்துவிட்டு அவனைத் தேடிச் சென்றாள்.

அவள் அங்கே செல்கையில், “எதுக்குடா இவ்வளவு கோபம்? என்னன்னு சொன்னாத்தானே தெரியும்?” ஷீபா கேட்டுக் கொண்டிருக்க, அறைக்கதவைத் தட்டிவிட்டு இவள் உள்ளே நுழைந்தாள்.

“நீங்க பேசுங்க...” சொன்னவள் எழுந்து செல்ல முயல, அவளது கரத்தை கெட்டியாக பற்றிக் கொண்டான்.

“டேய்... என்னடா?” அவன் தன்னை விட மறுக்கவே, கோபமாகவே இரைந்தாள் ஷீபா.

“நீ இரு...” அவ்வளவுதான் சொன்னான்.... தென்றலின் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டத் துவங்கி இருந்தது.

“ரஞ்சா... இது சரி கிடையாது... நீ பண்றது நல்லாவே இல்லை. முதல்ல என் கையை விடு நீ...” அவனிடமிருந்து கையைப் பறிக்க முயன்றாள்.

“இப்போ நீ வெளியே போனா, நானும் உன்னோட வருவேன்...” அவன் சொல்ல, அவ்வளவுதான்... அங்கிருந்து வெளியேறிய தென்றல், தன் கைப்பையை எடுத்துக்கொண்டு அலுவலகத்தை விட்டு வெளியேறுவது அவர்களுக்குத் தெரிந்தது.

அவள் செல்லவே, “நீ பண்ணது கொஞ்சம் கூட சரியில்லை ரஞ்சா, அப்படி என்னடா உனக்கு அவ மேலே கோபம்? அதான் உன்னைத் தேடி வந்து கெஞ்சிகிட்டு நிக்கறாளே, இதுக்கு மேலே என்ன வேணும்?” அடக்க முடியாமல் கேட்டுவிட்டாள்.

“வந்து இத்தனை நாளாச்சே, என்கிட்டே பேசினாளா அவ? எனக்கு கோபம் வரத்தான் செய்யும்” சொன்னவன் அங்கிருந்து அகன்றுவிட்டான்.

அவளிடம் தியாகு விஷயத்தால் கோபமாக இருக்கிறேன் எனச் சொல்ல முடியவில்லை.

செல்லும் வழியெங்கும் தென்றல் கண்ணீர்விட்டு அழுதுகொண்டே செல்ல, அன்று தான் தன் தோழியர் முன்பு வைத்து செய்து வைத்த அனர்த்தமும், அவனது நிலையும் புரிய, பெரும் கொடுமையாக இருந்தது.

‘அப்படியும் அவர் பேசினாரே...’ எண்ணியவளுக்கு அவனை எப்படி ஒரு சூழலில் நிறுத்தினோம், அவன் எத்தனை வேதனை பட்டிருப்பான் என்பதும் புரிய, அவளால் தன்னையே மன்னிக்க முடியவில்லை.

பிரபஞ்சன் அலுவலகத்துக்கு வெளியே வந்து நிற்க, தியாகு ஒரு ஃபயிலோடு அவனைத் தேடி வந்தான்.

“சார்... நீங்க கேட்டதை கண்டு புடிச்சுட்டோம்...” சொன்னவன் அதை அவனிடம் விளக்க, அமைதியாக கேட்டுக் கொண்டான்.

அவன் அமைதியே தியாகுவுக்கு ஒரு மாதிரி இருக்க, “சார்... தென்றல் கிட்டே தப்பான எண்ணத்தில் எல்லாம் பேசலை...” அவன் சொல்லி முடிக்கும் முன்பே,

“எனக்குத் தெரியும் தியாகு, நீங்க போங்க...” அவனது வார்த்தைகளை கத்தரித்தான்.

அவன் வாயால், அதற்குமேல் எதையும் கேட்கும் பொறுமை அவனிடம் இருக்கவில்லை. ஏனோ தென்றலை அப்படி ஒரு நிலையில் நிறுத்திப் பார்க்க கூட பெரும் கோபமாக இருக்க, அதை அவனால் அடக்க முடியவில்லை.

ஒரு வேளை, தன் கோபத்தை தியாகுவிடமோ, ஷீபாவிடமோ கொட்டியிருந்தால் தெளிந்திருப்பானோ என்னவோ? ஆனால் அது அவனுக்குள் உறைய, தென்றலை அவன் கோபம் சுடப்போவதை அவன் அறியவே இல்லை.

தென்றல் வீசும்........
 

ஆனந்த ஜோதி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 14, 2022
Messages
137
உன் காதலை அவள் புரிஞ்சுக்காம நடந்து முட்டாள்தனம் செய்தா..

இப்பா அவள் உன்னைத் தேடி வந்திருக்கும் இடத்தில் நீ பாடம் கற்றுக் கொடுக்கிறே..

அவளோ இன்னும் அம்மாஞ்சியாகவோ இருக்கா..

இதுல தியாகு வேறு இடைச் செருகலாக ....

சரிதான், இனி என்ன நடக்குதுன்னு பார்ப்போம்.

வெயிட்டிங்....
 

saru

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 24, 2022
Messages
186
Adeiii Ava tan teloyama irukka
Ava appan apditan varthu vachirukan
Ipo unnaithedi vanthade nalla matram
Nee ipdi panna melum sikkalaga vaipu iruku

Unakku ipo kiruku pidichiduchi hooom da
 

Kothai Suresh

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
113
இப்போ இவன் டெர்னா? முறுக்கி கிட்டு இருக்கான். தென்றல் ஒரு பேக்கு,ஷீலா எவ்ளோ தான் முட்டு கொடுப்பா, இந்த தியாகு வேற இடைல, ஒரு வேளை அவனால் தான் இருவரும் ஒண்ணு சேருவாங்களோ?
 

gomathy

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 16, 2022
Messages
99
Thenrala ninaithal kobam thaan varuthu, ivlo muttala irukka kudathu, ippadi irukkarathukku padippu yetharku, ithil gold medalist vera, ithil Prabhanchan thaan parithabathukku uriyavan :mad:
 

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
878
உன் காதலை அவள் புரிஞ்சுக்காம நடந்து முட்டாள்தனம் செய்தா..

இப்பா அவள் உன்னைத் தேடி வந்திருக்கும் இடத்தில் நீ பாடம் கற்றுக் கொடுக்கிறே..

அவளோ இன்னும் அம்மாஞ்சியாகவோ இருக்கா..

இதுல தியாகு வேறு இடைச் செருகலாக ....

சரிதான், இனி என்ன நடக்குதுன்னு பார்ப்போம்.

வெயிட்டிங்....

அவளோட இந்த மனநிலை அவனுக்கு புரிய வரும்போது, அவன் விட்டுக்கொடுத்து போய்டுவான்.

நன்றி!
 

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
878
இவள் தெளியாத புதிர்
இவன் தெளிந்தும் தெளியாத புதிர் 🤔🤔எப்போ விடியுமோ 🙄🙄🙄🙄🙄

சீக்கிரமே இதையெல்லாம் கடந்து வருவாங்க.

நன்றி!
 

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
878
Adeiii Ava tan teloyama irukka
Ava appan apditan varthu vachirukan
Ipo unnaithedi vanthade nalla matram
Nee ipdi panna melum sikkalaga vaipu iruku

Unakku ipo kiruku pidichiduchi hooom da

அவ வளர்ப்புதான் இதற்கு காரணம். அதைப் புரிந்த பிறகு மாறிடுவான்.

நன்றி!
 

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
878
இப்போ இவன் டெர்னா? முறுக்கி கிட்டு இருக்கான். தென்றல் ஒரு பேக்கு,ஷீலா எவ்ளோ தான் முட்டு கொடுப்பா, இந்த தியாகு வேற இடைல, ஒரு வேளை அவனால் தான் இருவரும் ஒண்ணு சேருவாங்களோ?

தியாகுவால் சில விஷயங்கள் கிளீயர் ஆகலாம். தென்றலுக்கு அவன் கோபத்தைப் பார்த்து பயம், அதான் இப்படி.....

நன்றி!
 

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
878
Thenrala ninaithal kobam thaan varuthu, ivlo muttala irukka kudathu, ippadi irukkarathukku padippu yetharku, ithil gold medalist vera, ithil Prabhanchan thaan parithabathukku uriyavan :mad:

அவ தெளிவில்லாமல், முடிவு எடுக்க தெரியாமலே வளர்ந்துட்டா, அதான் காரணம். ஆனால் சீக்கிரம் சரி ஆயிடும்.

நன்றி!
 

sumiram

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 20, 2022
Messages
105
Appo ava puriyama pannuna, ippo ivan turn ah
 

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
878
Appo ava puriyama pannuna, ippo ivan turn ah

இவன் சீக்கிரமே தெளிஞ்சுடுவான்.

நன்றி!
 
Top