• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அள்ளிக் கொண்ட தென்றல் - 19.

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
878
பகுதி – 19.

தென்றல் அலுவலகத்தில் வந்து அமர்ந்தவள், தன் கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும், தன்னவன் எப்பொழுது வருவான் என புலன்கள் அனைத்தும் காத்துக்கொண்டிருந்தது.

அவள் எதிர்பார்த்து காத்திருந்த அவனும் அங்கே வந்து சேர, சில பல நிமிடங்கள் காத்திருந்தவள், அவனது அறைக்கு எழுந்து சென்றாள்.

பிரபஞ்சன் அங்கிருந்த அலமாரியில் ஏதோ ஃபயிலை தேடிக் கொண்டிருக்க, “வா தென்றல்... என்ன அங்கேயே நின்னுட்ட?” ஷீபா அவளை அழைத்தாள்.

அவளது குரலில், பிரபஞ்சன் என்னவென திரும்பிப் பார்க்க, அங்கே ஷீபா அமர்ந்திருந்தாலும், எதைப்பற்றியும் கவலைப்படாமல் அவனை நெருங்கியவள், அவனை சட்டென இறுக அணைத்துக் கொண்டாள்.

“ஏய்... தென்றல்...” தன் தோழியின் முன்னால் அவள் இப்படிச் செய்வாள் என எதிர்பாராத பிரபஞ்சன் சற்று பதறினான். அது அவளுக்கும் புரிந்தாலும், அவனது தென்றல் என்ற அழைப்பு மனதைப் பிசைய, அவனை இன்னும் இறுக்கினாள்.

“என்னை மன்னிச்சுடுங்க... நான் அப்படிப் பண்ணது உங்களை எந்த அளவு காயப்படுத்தி இருக்கும்னு எனக்கு இப்போ புரியுது. ஐ’ம் சாரி...” அவள் சொல்ல, வேகமாக அவளை அகற்றி நிறுத்தினான்.

“இப்போ சாரி சொல்லத்தான் வந்தியா?” எதையோ எதிர்பார்த்து ஏமாந்த மனது, கோபத்தை கைக்கொண்டது.

“ம்... ஆமா... நான் செஞ்சது பெரிய தப்பு...” அவள் மன்னிப்பை வேண்ட, அவன் முகமோ அத்தனை கோபத்தை வெளிப்படுத்தியது.

“உன் சாரி இங்கே யாருக்கும் வேண்டாம்...”.

“உங்களுக்கு வேண்டாம்... ஆனா சாரி கேட்கலன்னா என்னால் நிம்மதியா இருக்க முடியாது. நான் அப்படிப் பண்ணதுக்கும் ஒரு காரணம் இருந்தது...” அவள் சொல்லிக்கொண்டே போக, கையைக் காட்டி அதை நிறுத்தினான்.

“எனக்கு இப்போ அதைக் கேட்கறதுக்கு நேரமில்லை... சாரி கேட்டுட்டல்ல, போ... போய் வேலையைப் பாரு...” அவன் சொன்ன விதத்திலேயே மிரண்டவள், வேகமாக அங்கிருந்து அகன்றுவிட்டாள். நிஜத்தில் அவளுக்கு அவன் கோபத்தை எப்படி கையாள என்று தெரியவில்லை.

அவள் பிறந்தது முதலே, கொஞ்சி மட்டுமே வளர்க்கப்பட்டவள். அப்படி இருக்கையில் கோபத்தை முதல் முதலாக எதிர்கொள்கிறாள், மிரள்கிறாள்.

அவள் செல்லவே, “எதுக்குடா உனக்கு இவ்வளவு கோபம்?” ஷீபா அவனை முறைத்தாள்.

“அவ தேறமாட்டான்னு தெரிஞ்சும், அவளை எதிர்பார்க்கற என்னை நினைச்சு, என்மேலதான் எனக்கு கோபம்... வந்து சாரி சொல்றா பாத்தியா... எனக்கு...” அவன் கோபத்தை அடக்க போராட, அவளுக்குப் பாவமாக இருந்தது.

“அவளுக்குத் தெரியலடா... உன் மனசுக்குள்ளே என்ன இருக்குன்னு வாயைத் தொறந்துதான் அவகிட்டே சொல்லேன்...” அவள் அறிவுரை வழங்க,

“அவ அப்பன் நினைக்கறது மட்டும் எல்லாம் தெரிஞ்சது...” அவன் பிடிவாதம்பிடிக்கும் குழந்தையென அடம் பிடிக்க, அந்த காதலனின் முரட்டுத்தனத்தை எண்ணி சிரித்துக் கொண்டாள்.

“ஸ்...சப்பா... என்னால உன்னோட போராட முடியாதுடா... எனக்கு ரொம்ப வேலை இருக்கு” சொன்னவள் தன் வேலையைப் பார்க்கத் துவங்கினாள்.

‘அவங்களுக்கு அப்படி என்ன கோபம்? கொஞ்சமும் பொறுமையே இல்லை’ தென்றல் இப்படி எண்ண, அவனது பலவருட காத்திருப்பு அவளுக்குத் தெரியவில்லையா? புரியவில்லையா என்று கண்டுகொள்ள முடியவில்லை.

அன்று மதிய உணவுக்குப் பிறகு, ஷீபா வெளியே வேலையாகச் செல்ல, அவனிடம் பேசக் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிட மனமின்றி, ஒரு ஃபயிலைத் தூக்கிக் கொண்டு, சந்தேகம் கேட்பதுபோல் அவனது அறைக்குச் சென்றாள்.

அவனோ, அவளைப் பார்த்தவுடன், இருக்கையில் இருந்து எழுந்து அறைக்கு வெளியே வந்து நிற்க, அவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

“ஏன் இப்படிப் பண்றீங்க?” அவள் கலங்கிபோய் நிற்க,

“உனக்குத்தான் என்னோட தனியா இருக்க பயமாச்சே, அதான்... எல்லாம் நீ கத்து கொடுத்ததுதான்... நான் எதையும் புதுசா செய்யலை” அவன் சொல்ல,

“என் பயம் என்னன்னு நிஜமாவே உங்களுக்குத் தெரியுமா? புரியாமல் பேசாதீங்க” அவள் சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே, தக்ஷன் அங்கே வர, அவள் தன் இருக்கைக்குச் சென்றுவிட்டாள்.

தான் செய்துவைத்த அனர்த்தங்கள் எல்லாம், பூமராங்காக திரும்பி தன்னைத் தாக்கும் உணர்வு.

“எனக்கு ஒரு ஹால்ஃப் டே லீவ் வேணும்...” அவனிடம் சென்று நிற்க, அமைதியாக தலை அசைத்தான்.

‘அவளுக்கு என்கிட்டே வர இன்னும் என்ன தடை, தயக்கம் இருக்கு?’ அவனுக்கு அதுதான் புரியவில்லை.

அவளுக்குள் ஓடும் எண்ணங்கள் அவனுக்குத் தெரியாதே. அவளோ, தோழியருக்கு அழைத்தவள், அனைவரையும் பீச்சுக்கு வரச் சொல்ல, அவர்களும் கிளம்பி வந்தார்கள்.

“என்னடி அப்படி தலை போற அவசரம்? உடனே வாங்கன்னு சொன்ன?” எலினாவும், ஹதிஜாவும் ஒன்றாக வந்து சேர்ந்தார்கள்.

“கொஞ்ச நேரம் எனக்கு எதையும் யோசிக்காமல் இருக்கணும்” அவள் சொல்ல, மற்றவர்கள் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்தார்கள்.

“தென்றல்... எனக்கு உன்மேலதான் கோபம். உன் அப்பா இவ்வளவு செஞ்ச பிறகும், அவரை விட்டு போக எதுக்கு இவ்வளவு யோசிக்கணும்? என்னதான் அப்பா செல்லம்ன்னாலும் இப்படியா?” எலினா படபடக்க, தென்றலிடம் ஒரு பெருத்த அமைதி.

“இன்னும் எதுக்குடி இப்படி இருந்து கஷ்டப்படற? எனக்கு சுத்தமா புரியலை. சொல்லப்போனா இப்படி கஷ்டப்பட அவசியமே இல்லைன்னு சொல்வேன்” அவள் பேசப் பேச, அமைதியாக கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

“சார்கிட்டே, நான் உங்களோட வந்துடறேன்னு சொன்னா, எல்லாம் முடிஞ்சு போய்டும். உனக்கும் கஷ்டமில்லை, சாரும் சந்தோஷமா இருப்பாங்க” அவளது பேச்சு காதில் விழுந்தாலும், தென்றல் கடலையே வெறித்தாள்.

“உனக்கு சார்கிட்டே சொல்ல சங்கடமா இருந்தா, உன் அம்மாகிட்டே சொல்லு, இல்லையா உன் அண்ணிகிட்டே சொல்லு... எதுக்குடி இப்படி கஷ்டப்படணும்?” சற்று கோபமாகவே இரைந்தாள்.

“எலி, அவளைப்பத்திதான் உனக்குத் தெரியுமே... பேசி எதுக்கு உன் எனர்ஜியை வேஸ்ட் பண்ற?” ஹதிஜா அவளை அடக்கினாள்.

“நீ என்ன பேசற ஹதி? நான் இவளுக்காகத்தான் பேசறேன்”.

“அது எனக்குப் புரியுது, அவளுக்குப் புரிய வேண்டாமா? விடு... அதான் வேற பேச சொன்னாளே, பேசு...” அவளுக்குமே தென்றலின் செய்கையில் உடன்பாடு இல்லாமல் இருக்க, தன் கோபத்தை இப்படி காட்டினாள்.

“எல்லாம் நிமிஷத்தில் முடிஞ்சுடும் இல்ல... அவர் பட்ட கஷ்டம், பட்ட அவமானம், எல்லாம் நிமிஷத்தில் காணாமல் போய்டும்... அப்படியா?” அவள் பேச, இருவரும் விழித்தார்கள்.

“அவருக்காக நான் என்ன செஞ்சேன்? செஞ்சிருக்கேன்?” அவள் வெறித்த பார்வையாகவே கேட்க, இவர்களுக்குப் புரியவில்லை.

“அதுக்குத்தான்டி உன்னை போகச் சொல்றோம்...” அவர்கள் சொல்ல, மறுப்பாக தலை அசைத்தாள்.

“அப்படிச் செய்ய என் மனசாட்சி இடம் கொடுக்கலையே...” அவள் குரலில் இருந்த வேதனையில், தோழியர் இருவரும் அவளை அணைத்துக் கொண்டார்கள்.

“இதுக்கு என்னதான் முடிவு தென்றல்?” எலினா கேட்க,

“என் அப்பாவை மீறி, அவரைக் கடந்து அவருக்காக நான் ஏதாவது செய்யணும். அதுதான் நான் அவருக்குச் செய்யற நியாயமா இருக்கும்”.

“நீ சொல்றது புரியலை தென்றல்...”.

“என் அப்பாதான் எனக்கு ரொம்ப உசத்தி, அவருக்கு முன்னால் நான் அவரை ஏத்துக்க மாட்டேன், அவரை மீறி எதையும் செய்ய மாட்டேன்னு இவர் நினைக்கறார்.

“அது அப்படி இல்லை... என் அப்பாவை விட, எனக்கு அவரைத்தான் புடிக்கும்னு நான் அவருக்கு நிரூபிக்கணும். அது இப்படியே நான் அவர்கிட்டே போனா நடக்காது...” அவள் வார்த்தைகளில் இருந்த தீவிரத்தில் திகைத்தார்கள்.

“என்னடி சொல்ற? அவருக்கு நிரூபிச்சுத்தான் இந்த உறவை நீ புதுப்பிக்கணுமா? அதுவரைக்கும் உனக்கும் கஷ்டம் தானே...” எலினா வருத்தமானாள்.

“இல்ல... நான் அவர்கிட்டே பேசிடுவேன்...” அவள் நம்பிக்கையாக உரைக்க, அதற்கு மேலே அவளிடம் அவர்கள் எதையும் சொல்லவில்லை.

தோழியரின் கேலியும், அரட்டையும், கடல்நீரில் விளையாடுவதுமாக மீதி நேரத்தை அவர்கள் கழிக்க, இரவு உணவை முடித்த பிறகுதான் அவர்களது வீட்டுக்கே சென்றார்கள்.

சில பல மாதங்களுக்குப் பிறகு, தென்றலின் மனதில் ஒரு நிம்மதி விரவி இருந்தது. மறுநாள் அதே மனநிலையோடு அலுவலகம் வந்தவள், நேராக சென்று நின்றது பிரபஞ்சனிடம் தான்.

அவன் அவளை என்னவென நிமிர்ந்து பார்க்க, அவளோ ஷீபாவைப் பார்த்தாள்.

“டேய்... என்ன செய்வியோ தெரியாது, எனக்கு ஒரு புது ரூம், தனி ரூம் வேணும்... ஆமா...” படபடவென அவள் பொரிய, அவளை முறைத்தவன், தென்றலின் பக்கம் பார்த்தான்.

“அவங்க இருக்கட்டும், எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லை” சொன்னவள், “ஐ லவ் யூ...” அவள் சொல்ல, ஷீபா பக்கென சிரித்து வைக்க, பிரபஞ்சனுக்குமே சிரிப்பு வந்து தொலைத்தது.

“ஏய், எழுந்து வெளியே போ...” அவன் ஷீபாவை விரட்ட முயல,

“இல்ல நான் போகலை... இது ரொம்ப சுவாரசியமா இருக்கும் போல...” வாய்விட்டு சிரித்தவாறே அவள் சொல்ல, அவனோ தென்றல் தன் காதலைச் சொன்னதில், அவனுக்குள் ஒரு மாதிரி திணறிப் போய் இருந்தான்.

“என்கிட்டே அடிதான் வாங்கப் போற... ஷீபா...” அவன் தன் தலையை அழுத்தமாக கோதியவாறு, தென்றலை விழுங்கும் பார்வை பார்த்தான்.

‘ஆத்தாடி... காமப் பார்வையாவுல்ல இருக்கு’ என உள்ளே அலறியவள், “நான் வெளியவே போறேன்டா...” ஷீபா சொல்ல,

“இல்ல நான் போறேன்...” என்ற தென்றல் வெளியே சென்றுவிட,

“பாவம்டா... உன்னை ரொம்ப மிஸ் பண்றா...” ஷீபா சொல்ல, அவன் மட்டும் அவளை மிஸ் செய்யவில்லையாமா?

அன்று அவளை எப்படியாவது தனிமையில் நிறுத்தி வைத்து பேசிவிடவேண்டும் என எண்ணியவன், தென்றலுக்கு வேலை கொடுக்க, அன்று தன்யஸ்ரீயும், தியாகுவும் முடிக்க வேண்டிய வேலை இருக்கவே அவர்களும் தாமதித்தார்கள்.

‘ச்சே... இதென்ன இப்படி ஆகுது...’ அவன் தனக்குள் புலம்பியவன், நேரமாகவே இரவு உணவுக்கு ஆர்டர் கொடுக்க எண்ணினான்.

“தியாகு, தன்யா டின்னருக்கு என்ன ஆர்டர் பண்ணட்டும்?” அவர்களிடம் கேட்க, அவர்கள் வேண்டியதைச் சொல்லவே, தன்னவளைத் திரும்பிப் பார்த்தான்.

‘அவளுக்கு...’ என யோசிக்கையிலேயே,

“சார்... அவங்களுக்கு ‘நான்’ அண்ட் பன்னீர் கிரேவி சொல்லுங்க... தென்றலுக்கு ரொம்ப புடிக்கும்னு சொன்னாங்க” தியாகு சொல்ல,

“ஓ... அவங்களைப்பத்தி நிறைய தெரிஞ்சு வச்சிருக்கீங்க போல” அவன் ஒரு மாதிரி குரலில் கேட்க, அதையெல்லாம் அவன் எங்கே கவனித்தானாம்?
 

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
878
“அப்படி இல்ல சார்...” சொன்னவன் வேலையைப் பார்க்கத் திரும்ப, ஸ்ரீ வேகமாக பிரபஞ்சனை நிமிர்ந்து பார்த்தாள்.

“சார்...” அவள் எதையோ அவனிடம் சொல்ல வர, ‘வேண்டாம்...’ என்பதுபோல் தலை அசைத்தவன் அங்கிருந்து அகன்றுவிட, தன்யஸ்ரீ சிறு குழப்பமாக தியாகுவைப் பார்த்தாள்.

“என்ன தியாகு சார்... என்ன நினைச்சுட்டு இப்படியெல்லாம் பண்றீங்க?” அவள் குழப்பமாகவே அவனிடம் கேட்டாள்.

“ஏன் ஸ்ரீ... நான் அப்படியென்ன தப்பா பண்ணிட்டேன்?” ஒரு பெண்மேல் விருப்பம் கொள்வது என்ன அவ்வளவு பெரிய தவறா?’ என்பது அவனது எண்ணமாக இருந்தது.

“நீங்க பண்றது உங்களுக்கே தப்பா தெரியலையா? தென்றலை நீங்க யார்ன்னு நினைக்கறீங்க?” அவள் அவனிடம் சொல்லப் போகையில், பிரபஞ்சன் அங்கே வந்தான்.

“ஸ்ரீ... கொஞ்சம் வாங்க...” பிரபஞ்சன் அவளை அழைக்கவே, இருக்கையில் இருந்து எழுந்துகொண்டாள்.

அவளை அறைக்கு அழைத்து வந்தவன், “தென்றலைப்பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?” அவளிடம் கேட்டான்.

“சார், அவங்க உங்க வைஃப் தானே... ஒரு முறை உங்க வாலட்ல அவங்க போட்டோவைப் பாத்திருக்கேன். ஷீபா மேடமும் அவங்களைப்பத்தி எதேச்சையா சொன்னாங்க” ஒரு வேளை தான் புரிந்துகொண்டது தவறோ என்ற நினைப்பு அவளுக்கு வந்துவிட்டது.

“ம்... ஆனா இந்த விஷயம் வேற யாருக்கும் நீங்க சொல்லி தெரிய வேண்டாம்” அவன் சொல்லவருவது புரிந்தும் புரியாத நிலைதான் அவளுக்கு.

“அப்படின்னா...?”.

“சம்பந்தப்பட்டவங்க சொல்லி, மத்தவங்க தெரிஞ்சுகிட்டா போதும்” அவன் முடித்துவிட, அவள் ஏன் இனிமேல் வாயைத் திறக்கப் போகிறாளாம்?

“நான் ஒரு விஷயம் கேட்கலாமா சார்?” சற்று தயங்கி நின்றாள்.

“கேளுங்க...” அனுமதி அளித்தவனுக்கு, அவள் என்ன கேட்பாள் எனத் தெரியாதா என்ன?

“நீங்க ரெண்டுபேரும் சண்டை போட்டு பிரிஞ்சமாதிரி எனக்குத் தெரியலையே சார். அவங்க... ஷி லைக்ஸ் யூ...” அவனிடம் இதைச் சொல்லலாமா? கூடாதா? என்ற தயக்கத்தில் அவள் சொல்ல, அவனது பார்வை தன்னவளைத் தழுவி நின்றது.

“ம்... தெரியும்...” அவன் சொல்லிவிட்டு அப்படியே நிற்க,

“பிறகு எதுக்கு சார்...” வேகமாக கேட்கத் துவங்கியவள், வாயை இறுக மூடிக் கொண்டாள்.

“சாரி சார்... அது உங்க பெர்சனல்... அதை நான் கேட்டிருக்க கூடாது” அவர்களுக்கு நடுவில் என்ன நடந்தது என மூன்றாவது மனுஷியான அவளுக்கு என்ன தெரியும்? அவர்கள் இருவருக்கு நடுவில் ஆயிரம் விஷயம் நடந்திருக்கலாம், அதை எல்லாம் அவன் அவளிடம் விளக்கவேண்டும் என எந்த அவசியமும் கிடையாதே.

“இட்ஸ் ஓகே... இனிமேல் இதைப்பத்தி எதையும் நீங்க தெரிஞ்சுக்க வேண்டாம், யாருக்கும் சொல்லவும் வேண்டாம்” அவன் சிறு கண்டிப்பாகவே சொல்ல, அவள் இனிமேல் எதற்காக வாயைத் திறக்கப் போகிறாளாம்?

“சரிசார்... என்மூலமா இந்த விஷயம் இனிமேல் வெளியே போகாது” சொன்னவள், அறையில் இருந்து வெளியேறினாள்.

அவன் ஸ்ரீயை அறைக்கு அழைத்துச் செல்வதைப் பார்த்த தென்றலுக்கு, ‘இவங்க கூட எல்லாம் நல்லா பேசறார்... என்கிட்டே பேச என்னவாம்?’ அவள் மனதுக்குள் சிணுங்க, ‘அவன் பேச வந்தப்போ நீ பேசினியா?’ மனசாட்சி கேட்கவே பட்டென அமைதியானாள்.

அவள் தன் இருக்கைக்குத் திரும்பி வரவே, “ஸ்ரீ, தென்றலைப் பற்றி எதையோ சொல்ல வந்தியே...” அதைக்குறித்து தெரிந்துகொள்ள அவன் ஆர்வமாக இருப்பது அவளுக்குப் புரிந்தது.

“எதுவும் இல்ல சார்... என்னவோ சொல்ல வந்தேன், மறந்துட்டேன்... நீங்க வேலையைப் பாருங்க” சொன்னவள் தென்றலைத் திரும்பிப் பார்த்தாள்.

அவள் பிரபஞ்சனின் அறையையே பார்த்துக் கொண்டிருக்க, ‘இவங்களுக்குள்ளே அப்படி என்ன கோபமா இருக்கும்?’ எண்ணியவள், ‘சரி, நமக்கு எதுக்கு அதெல்லாம்? சார் சொல்றதுக்கு ஏதாவது காரணம் இருக்கலாம்’

சற்று நேரத்தில் அவன் ஆர்டர் செய்த உணவுகள் அனைத்தும் வந்து சேர, அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்டார்கள்.

தனக்கான உணவைப் பார்த்த தென்றல், “வாவ்... எனக்குப் பிடிச்ச டிஷ்...” சொன்னவள், பிரபஞ்சனை நோக்க, அவனோ தன் உணவில் கவனமாக இருந்தான்.

“நான்தான் சார்கிட்டே ஆர்டர் பண்ணச் சொன்னேன்...” தியாகு அவளிடம் சொல்ல,

“ஓ... தேங்க்ஸ்...” அதை அவள் அத்தனை பெரிதாக எடுக்காமல் போகவே, ஸ்ரீயும், பிரபஞ்சனும் ஒரு நொடி பார்த்துவிட்டு தங்கள் உணவைத் தொடர்ந்தார்கள்.

‘அவன் செய்யறது எல்லாம் இவளுக்குப் புரியுதா இல்லையா?’ பிரபஞ்சனுக்கு உள்ளுக்குள் ஒரு கோபம் எழுந்தது.

தென்றலுக்கு அவன் அருகே இருக்கையில், உலகமே கண்ணுக்குத் தெரிவதில்லை என யார் அவனுக்குச் சொல்வதாம்? அதைவிட, தன்னவன் அருகே இருக்கையிலேயே, அவளிடம் யாரும் இப்படியான ஒரு எண்ணத்தில் பழகுவார்கள் என அவள் கற்பனையாவது செய்திருப்பாளா?

அதையெல்லாம் விட, தன்னைப்பற்றி ஷீபா அனைவருக்கும் சொல்லியிருப்பாள் என்பதாலேயே, தியாகுவோடு, தக்ஷனோடு எல்லாம் வெகு சாதாரணமாக பேசிப் பழகினாள்.

அதற்குப் பிறகு ஸ்ரீ, தியாகுவிடம் தங்கள் வேலை சம்பந்தமாக பேசி, அவனது கவனம் தன்னைத் தாண்டி, தென்றலின் பக்கம் செல்லாதவாறு பார்த்துக் கொண்டாள்.

அவளது முயற்சி பிரபஞ்சனுக்கும் புரிய, உள்ளுக்குள் மெல்லிய புன்னகை.

அவனுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்துவது தென்றலுக்கு பெரும் சந்தோஷத்தை அளிக்க, வேகமாக தன் உணவை உண்டாள். தனது உணவை அவனோடு பகிர்ந்துகொள்ள பெரும் ஆவல் எழ, அவனையே பாராமல் பார்த்திருந்தாள்.

‘இவ வேற... என்னவாம்?’ அவளது பார்வை தன்மீதே இருக்க, அவனும் எத்தனை நேரம் அதை மறுத்து அமர்ந்திருக்க முடியும்?

அவளை நிமிர்ந்து பார்த்தவன், ‘என்ன...?’ என்பதுபோல் புருவம் உயர்த்த, தன் கையில் இருந்த ‘நானை’ அவள் காட்ட, அந்த உணவோடு சேர்த்து அவளையும் விழுங்கத்தான் அவனது தேகமும், மனமும் பரபரத்தது.

அவன் ‘வேண்டாம்...’ என தலையசைக்க, ‘பிளீஸ்...’ அவளது பார்வை அவனிடம் கெஞ்சியது.

பிரபஞ்சன் சட்டென எழுந்து கை கழுவச் செல்ல, அவன் பின்னாலேயே அவளும் எழுந்து சென்றாள்.

ஸ்ரீக்கு அவர்கள் இருவரும் எழுந்து செல்வது புரிய, தியாகுவிடம் இன்னும் தீவிரமாக எதையோ கேட்டுக் கொண்டு, அவனைப் பிடித்து வைத்தாள்.

கையைக் கழுவப் போனவன், தன் பின்னால் வந்தவளை ஒற்றைக் கையால் இழுத்து அணைக்க, “ஹையோ... அவங்க...” மற்றவர்கள் இருவரில், யார் வேண்டுமானாலும் அங்கே வரலாம் என்பதால் சற்று பதறினாள்.

“நீ இருக்கும்போது, இந்த ரொட்டி வேணுமான்னு கேட்கற? உனக்கெல்லாம் கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா?” கேட்டவனது இதழ்கள், அவளது கன்னச்சதையை தின்னும் முயற்சியில் இறங்கி இருக்க, அவன் பேச்சிலும், செய்கையிலும் உண்டான கிளர்ச்சியில் அவனோடு ஒன்றினாள்.

அவள் கன்னத்தை கவ்வி, குதப்பி, மெல்லியதாக கடித்து சுவைக்க, அவளுக்கோ தேகம் மொத்தமும் சிலிர்த்து, விறுவிறுவென ஒரு உணர்வு தேகம் முழுவதும் பரவிப் படரும் உணர்வு.

‘இந்த கன்னத்தில் அப்படி என்னதான் இருக்கோ?’ எண்ணியவளை, அதற்கு மேலே சிந்திக்க விடாமல், அவனது இதழ்கள், அவள் இதழ்களை நாடி வந்து பூட்டிக் கொள்ள, அவன் தேகத்தோடு ஆதியோடு அந்தமாக ஒன்றியவள், அவன் இதழ்களின் சுவையை தனக்குள் உணர்ந்தாள்.

அவன் பின்னந்தலையை ஒற்றைக் கையால் அழுத்தமாக பற்றி, நெரித்து, அவன் முகத்தை இன்னும், இன்னும் தன் முகத்தோடு வைத்து அழுத்தியவள், அவன் இதழ்களை இவள் மென்று தின்ன முயன்றாள்.

சில உணர்வுகளும், பிரிவும் இருவருக்கும் பொதுவல்லவா... அவனை விட்டால், தன்னை விட்டுப் பிரித்து போய்விடுவான் என்பதால், அவனை இம்மியும் பிரியக் கூடாது, அவனை விட்டுவிடக் கூடாது என அவள் போராடுவது அவனுக்கு நன்கு தெரிந்தது.

அவன் அவளைக் கொண்டாடியது போய், அவள் அவனை அர்ச்சித்துக் கொண்டிருக்க, இருவரின் உணர்வுகளும், ஒருவர் மற்றவரைக் கேட்டது. அவன் உணர்வுகள் அவளைத் தாக்க, இன்னும் அழுத்தி அவனைத் தூண்டினாள்.

“சார்... ஹேண்ட் வாஷ் பண்ணிடலாமா?” ஸ்ரீயின் குரல், அவனை எட்ட, தன்னவளை இடையில் கையிட்டு அலேக்காக அள்ளிக் கொண்டவன், அருகில் இருந்த அவனது அறைக்குள் புகுந்து அவளை இறக்கி விட்டான்.

“ஷ்... ஷ்... மோனா...” அவளை விட்டுப் பிரிய அவன் முயல, அவளது கால்கள் நிலத்தில் பதியாமல் அவள் தள்ளாட, மீண்டுமாக அவள் கன்னம் சுவைத்து, தாடையைக் கடித்தவன் அவளைத் தெளியவைக்க முயன்றான்.

“ம்... ம்...” அவள் பாதி தெளிந்தும், தெளியாமல் மலங்க விழிக்க, அவனுக்கு அவளை விட்டு விலகிச் செல்வது அத்தனை கடினமாக இருந்தது.

“அவங்க வந்துட்டாங்க...” அவளுக்கு அவன் புரியவைக்க முயல, அவன் சட்டையை கொத்தாகப் பற்றிக் கொண்டு அவனை விட மறுத்தாள்.

“போதுமா...?” அவள் கேட்க, அவளை அப்படியே அள்ளிக்கொண்டு புது உலகம் செல்லத்தான் அவனது மொத்த தேகமும் துடித்தது.

அவள் இதழில் அழுத்தமாக முத்தம் வைத்துப் பிரிந்தவன், “இல்ல, போதாது... சுத்தமா பத்தாது... ஆனா... நான் வெளியே போறேன்... நீ இந்த தண்ணியைக் குடிச்சுட்டு வா...” இருவரையும் ஒன்றாக காணவில்லை என்றால், ஸ்ரீ என்னவாக நினைப்பாள் என்பதும், தியாகு தங்களைத் தேடுவான் என்பதும் புரியவே, வேகமாக வெளியே வந்துவிட்டான்.

தென்றலால் அவன் சொன்னவற்றைப் புரிந்துகொள்ள முடிந்தாலும், அவன் தன்னிடம் கேட்டதும், துவங்கியதும்... அவன் தேவையும் முழுதாகப் புரிந்திருக்க, அவன் நிச்சயம் கஷ்டப்படுவான் என்பது தோன்ற தன்னையே வெறுத்தாள்.

‘எங்களுக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது?’ எண்ணியவளுக்கு தன்னைத் தெளிந்துகொள்ள சில நிமிடங்கள் தேவைப்பட்டது.

அவன் சொன்னதுபோல் தண்ணீரை எடுத்துக் குடித்தவள், சில பல நிமிடங்கள் அவனுக்காக காத்திருந்து, அவன் வரவில்லை எனவே, அவன் அறையை விட்டு வெளியே வந்தாள்.

பிரபஞ்சன் எங்கே? என அவளது விழிகள் தேட, அவனது குரல் பக்கத்து அறையில் இருந்து கேட்கவே அங்கே சென்று பார்த்தாள்.

தியாகுவிடம், வேலை விஷயமாக எதையோ அவன் பேசுவது புரிய, கையைக் கழுவியவள், தனக்குக் கொடுத்திருந்த வேலையைப் போய் பார்க்கப் போனாள்.

நேரம் பன்னிரண்டு முப்பதை நெருங்க, அப்பொழுதுதான் அவர்கள் தங்கள் வேலையை முடித்திருக்க, தென்றல் அப்பொழுதும் அவள் வேலையை முடித்திருக்கவில்லை.

“தென்றல்... சிஸ்டத்தை ஆஃப் பண்ணிட்டு கிளம்புங்க... நேரமாச்சு” அவன் சொல்ல, அவளோ அவனையே பார்த்திருந்தாள்.

அந்த நேரம் அங்கே வந்த தியாகு, “சார்... ஸ்ரீக்கு கேப் புக் பண்ணா, எல்லாம் கேன்சல் ஆகுது...” அவனிடம் சொன்னான்.

“ஓ... நீங்க அவங்களை ட்ராப் பண்ணிடறீங்களா?” அவன் கேட்க,

“வெளியே மழை வேற பெய்யுது சார்... திடீர் மழை...” தியாகு சொல்ல, வேகமாக வெளியே வந்து பார்த்தான்.

“என்கிட்டே ரெயின் கோட் இருக்கு...” தென்றல் சொல்ல,

“அப்படின்னா சூப்பர்... நானும் ரெயின்கோட் வச்சிருக்கேன். சார் ஸ்ரீயை கார்ல கூட்டி போய் ட்ராப் பண்ணட்டும். உங்க வீட்டைத் தாண்டித்தான் நான் என் ரூமுக்கு போகணும், சோ... உங்களுக்கு துணைக்கு நான் வர்றேன்” தியாகு வேகமாக திட்டமிட, தென்றலோ விழித்தாள்.

“சரி, கிளம்புங்க... ஸ்ரீ... வாங்க...” அவளை அழைத்த பிரபஞ்சன் முன்னால் நடந்துவிட, ஸ்ரீ, தியாகுவை முறைத்தவாறே அங்கிருந்து செல்ல, தென்றலுக்கு அங்கே நடப்பது எதுவும் சுத்தமாகப் புரியவில்லை.

‘கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நல்லாத்தானே நடந்துகிட்டாங்க’ எண்ணியவளுக்கு, அவன் சுவைத்த கன்னமும், இதழ்களும் இன்னும் அவன் தீண்டல் வேண்டும் என இம்சையில் நடுங்க, அதை மறைத்துக் கொண்டவள் அதே நினைப்போடு வண்டியை எடுத்துக் கொண்டு சென்றாள்.

தென்றல் வீசும்..........
 

ஆனந்த ஜோதி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 14, 2022
Messages
137
நான் உன் கூட வரல. அவரோடு போறேன்னு சொல்லத் தெரியலயே கூமுட்டை தென்றல்..

அடேய் தியாகு!! உனக்கு பெரிய அடி காத்திருக்கு. பார்த்து சூதானமா நடந்துக்கோ.

ஷீபாவின் பேச்சுக்கள் சிரிப்பு சிதறங்கள்

வெயிட்டிங்...
 

saru

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 24, 2022
Messages
186
Ha ha idu kooda nanna iruku
Innum konjam wait pannu rasa innum teliva
Deiii thiyagu unaku naala sambavam iruku Mona kita ha ha
 

Kothai Suresh

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
113
அய்ய சரியான கூ முட்டை, அவனோட போறேன்னு சொல்லத் தெரியாது? தியாகு நீ சரியா பல்ப் வாங்கப் போற
 

gomathy

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 16, 2022
Messages
99
Intha ariya pullaiya vachikittu Prabhanchan enna pannuvan, onnum solrathukku illa:(
 

sumiram

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 20, 2022
Messages
105
Thendral innum thiyagu eppadi pesurannu puriyama irukka.
 

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
878
நான் உன் கூட வரல. அவரோடு போறேன்னு சொல்லத் தெரியலயே கூமுட்டை தென்றல்..

அடேய் தியாகு!! உனக்கு பெரிய அடி காத்திருக்கு. பார்த்து சூதானமா நடந்துக்கோ.

ஷீபாவின் பேச்சுக்கள் சிரிப்பு சிதறங்கள்

வெயிட்டிங்...

தியாகு வாங்குவான். தென்றல் அவன்கூட கண்டிப்பா போவாள்.

நன்றி!
 

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
878
Ha ha idu kooda nanna iruku
Innum konjam wait pannu rasa innum teliva
Deiii thiyagu unaku naala sambavam iruku Mona kita ha ha

மோனா செய்ய முன், ரஞ்சன் கொந்தளிக்காமல் இருக்கணும்.

நன்றி!
 

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
878
அய்ய சரியான கூ முட்டை, அவனோட போறேன்னு சொல்லத் தெரியாது? தியாகு நீ சரியா பல்ப் வாங்கப் போற

அவ சீக்கிரமே சொல்வா.

நன்றி!
 

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
878
Intha ariya pullaiya vachikittu Prabhanchan enna pannuvan, onnum solrathukku illa:(

அவன் அவளைப்பற்றி நல்லா புரிஞ்சுப்பான்.

நன்றி!
 

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
878
Thendral innum thiyagu eppadi pesurannu puriyama irukka.

அவளுக்கு புரிஞ்சுக்க முடியலை அதான்.....

நன்றி!
 

Malarthiru

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 15, 2023
Messages
106
Iva eppa purinji pesi 🙄🙄🙄🙄
 
Top