• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அள்ளிக் கொண்ட தென்றல் - 9.

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
829
பகுதி – 9.

தென்றலின் அழுது சோர்ந்த முகத்தைப் பார்த்த அனைவருமே அவளிடம் என்னவென கேட்க, “அவங்க அப்பா ஏதோ திட்டிட்டாங்களாம், குழந்தை அழறா... வேற எதுவும் இல்லை” அவன் சொல்லி சம்மாளிக்க, அனைவரும் அவளுக்கு ஆறுதல் சொன்னார்கள்.

“நீ வா... எப்படி என் மருமகளை உங்க அப்பா திட்டலாம்னு கேக்கறேன்” மேகலை அவளை கைபிடித்து தன் அருகே அமர வைக்க,

“அதெல்லாம் வேண்டாம் பாட்டி... நான் அப்பாகிட்டே பேச மாட்டேன்” அவள் சொல்ல, பிரபஞ்சன் பக்கென சிரித்துவிட, நிவேதிதா அவனை முறைக்க, முதியவர்களின் முகங்களிலும் புன்னகை.

அவனின் சிரிப்பு, அவர்களின் புன்னகையைப் பார்த்த பிறகுதான், தான் அவரை பாட்டி எனச் சொல்லிவிட்டது புரிய, “அச்சோ... சாரி அத்த, உங்களை பாட்டி சொல்லிட்டேன்... அச்சோ... மறுபடியும் சொல்லிட்டனே” இப்பொழுது அது பெரிதாகப் போய்விட, அவள் பதற, அவனோ விழுந்து புரண்டு சிரித்தான்.

மற்றவர்கள் யாருமே தென்றல் சொன்னதை பெரிதாக எடுக்கவே இல்லை. மேகலைக்கு தென்றல் என்றால் தன் மகனை காப்பாற்றிக் கொடுக்க வந்த தேவதை... அவளை அவர் கோபித்துக் கொள்வாரா என்ன?

“மாம்ஸு... எதுக்கு இப்படி பேய் மாதிரி சிரிச்சு என்னை எழுப்பி விட்டீங்க?” நைனிகா அவனிடம் கேட்க,

“அதுவா...?” அவன் தன்னவளைப் பார்த்தவாறே இழுத்து நிறுத்த,

“ஹையோ வேண்டாம்... சொல்லாதீங்க... சொல்லாதீங்க...” பதறியவள், அவன் வாயை அடைக்கப் போனாள்.

“மாம்ஸு... சொல்லுங்க... சொல்லுங்க...” நைனிகா அவனை நச்சரிக்க, தென்றல் அவன் வாயை மூடவென அங்கே ஒரே கலாட்டாவாகிப் போனது.

அத்தனை நேரமாக அழுதுகொண்டு இருந்த தென்றல் சிரித்துவிட்டதே போதும் என நினைத்து, மற்றவர்கள் அனைவரும் அவர்கள் விளையாட்டில் தலையிடாமல் விலகிச் செல்ல, இரு பெண்களுக்கு நடுவில் அவன்தான் திண்டாடிப் போனான்.

நைனிகா ‘சொல்’ எனவும், தென்றல் ‘சொல்லாதே’ எனவும் அவனைப் போட்டு ஆட்டி வைக்க,

“பட்டு... உனக்கு நான் நாளைக்கு சொல்றேன்... இப்போ முடியாதுடா” அவன் நைனிகாவை சமாதானப்படுத்த, “ம்ஹும்... நீங்க எப்பவும் சொல்லக் கூடாது. ப்ராமிஸ் பண்ணுங்க...” அவன் கழுத்தை வளைத்திருந்த தென்றல், அவன் முன்னால் கையை நீட்டினாள்.

“சாரிடா பட்டு...” அக்கா மகளிடம் மன்னிப்பை வேண்டியவன், தன்னவளின் கரத்தில் கரத்தை வைக்க, “போங்க மாம்ஸு... நான் அம்மாகிட்டேயே கேட்டுக்கறேன்” நைனிகா கோபித்துக் கொண்டு அவனைத் தள்ளி விட்டு எழுந்து சென்றாள்.

“ஐயோ... அண்ணி சொல்லிடப் போறாங்க...” இவள் பதறிக்கொண்டு செல்லப் போக, அவளை கரம்பிடித்து தடுத்தான்.

“அதெல்லாம் அக்கா சொல்ல மாட்டாங்க... நீ பதறாத. காலையில் எழுந்து ப்ரெஷ் கூட பண்ணலையா? முதல்ல அதைப் பண்ணிட்டு, குளிச்சுட்டு வா... போ...” அவளை அனுப்பியவன், தன் அக்காவைக் காணச் சென்றான்.

நைனிகா தன்னோடு விளையாடுவதை தென்றல் பெரிதாக எடுத்துக் கொள்ளாததே அவனுக்கு பெரும் நிம்மதியைக் கொடுத்தது. நிவேதிதாவுக்கும் அப்படித்தான் என அவன் அங்கே சென்றதும் அவனுக்குப் புரிந்தது.

“தென்றல் ரொம்ப நல்ல பொண்ணுடா... ரொம்ப வெள்ளை மனசு...” அக்கா சொல்ல, தன் அக்காவைக் கட்டிக் கொண்டான்.

“ஆமாக்கா, நானும் அதையேத்தான் நினைச்சேன். அவ மட்டும் கொஞ்சமே கொஞ்சமாவது, ‘இது என் புருஷன், நீ போ’ ன்னு சொல்லி இருந்தா, நம்ம பட்டுவை எப்படி சமாதானம் பண்ணி இருப்பேன்னே தெரியலை” அவன் குரலில் நிஜமான ஒரு விடுதலை உணர்வு தெரிந்தது.

“உண்மைதான் தம்பி...” என்றவள், அந்த நேரம் நைனிகாவை அவள் அங்கிருந்து அனுப்பி இருக்க, இவர்களின் பேச்சை அவள் கேட்டிருக்கவில்லை. தன் அக்காவை விட்டு விலகி, சாப்பாட்டு மேடையின்மேல் ஏறி அமர்ந்தான்.

“பொன்னம்மாக்கா... அந்த மீனை கொஞ்சம் கிளீன் பண்ணி எடுத்துட்டு வாங்க...” அவளை அனுப்பியவள், தம்பியிடம் திரும்பினாள்.

“என்னடா... என்ன பிரச்சனை? உனக்கு ஏன் இவ்வளவு கோபம்? அவளுக்கு ஏன் இவ்வளவு அழுகை?” அவர்களுக்குள் நடப்பதை தன் அக்கா கணித்துக் கேட்க, பிரபஞ்சனின் முகத்தில் அப்படி ஒரு கோபம் வெளிப்பட்டது.

“ரஞ்சா.... என்னன்னு சொல்லு....” அவன் கோபம் அதிகரிக்கவே பொறுமையாக கேட்டாள்.

“எங்க பெர்சனல் எல்லாம் அவ அப்பன் அவகிட்டே கேக்கறான்க்கா... என்கூட தனியா இருக்காத, பேசாத... இன்னும்... ச்சே... என்னக்கா இது? இவளை நான் அங்கே அனுப்பப் போறதில்லை” அவன் தன் கோபத்தை அடக்க முடியாமல் திணற, நிவேதிதாவுக்கும் சற்று அதிர்வுதான்.

“பிரபஞ்சா... நீயே பாத்தியே... அவ இன்னும் குழந்தையாட்டம் இருக்காடா. நம்ம பட்டுவை தனியா விட்டா கூட பிழைச்சுப்பா, இவ பயத்திலேயே போய்டுவா. நம்ம பட்டுவுக்கு இப்படி ஆகி இருந்தா நாம விடுவோமா?” அவள் கேட்க,

“அதுக்குன்னு இப்படியெல்லாம் அவகிட்டே பேசுவோமா?” அவன் கேட்க, அதில் இருந்த நியாயம் புரிந்தாலும் அதை விடுத்தவள்,

“நமக்கே அவளைப்பத்தி இவ்வளவு தெரியும்போது, பெத்தவங்களுக்கு எப்படி இருக்கும்? அதுவும் நினைச்சே பாக்காத கல்யாணம்... சின்னப்பொண்ணு, திடீர்ன்னு ஃபேமிலி லைஃப்குள்ள அனுப்ப அவங்களும் யோசிப்பாங்க தானே. அவங்க இடத்துல இருந்து யோசிடா...” அவனுக்குப் புரிய வைக்க முயன்றாள்.

“எங்களுக்கு நடுவில் அவர் எப்படி வரலாம்?” அவனது நியாயமான ஆதங்கமும், கோபமும் அவளுக்குப் புரிந்தது.

“நாலு வருஷம் கழிச்சு தானே கல்யாணம் பண்ணிக்கறதா இருந்த. இப்பவும் அப்படியே நினைச்சுக்கோ...” அவள் சொல்ல,

“அப்போ எனக்கு கல்யாணம் ஆகலை...” அவன் சொன்ன விதத்தில், தம்பியின் மனம் அவளுக்குப் புரிந்தது.

பூனைக்கு பாலையும் ஊற்றிவிட்டு, அதற்கு அதை காவலும் இருக்கச் சொன்னால்... அது எப்படி சாத்தியம்?

“உன் மனசு இந்த அக்காவுக்குப் புரியுதுடா தம்பி... இந்த கோபத்தை எல்லாம் விட்டுட்டு, அவகூட போய் இரு போ. சாயங்காலம் அவ கிளம்பிப் போய்டுவா... அவ்வளவு நேரமாவது அவளோட இரு...” அவன் ஏக்கம் புரியவே சொன்னாள்.

“எங்கே...? அவ கிட்டே போனாலே அப்பா, அப்பான்னு உயிரை வாங்கறா. இங்கே இருந்து போயிட்டான்னா, என் நினைப்பெல்லாம் அவளுக்கு இருக்குமான்னே எனக்கு சந்தேகமா இருக்கு” அவன் கவலையாக சொல்ல, அவளுக்கு பாவமாக இருந்தது.

“அது... நீ நடந்துக்கற விதத்தில் இருக்கு...” அவன் கன்னம் வருடி, பாசமாக சொன்னாள்.

“அந்த ‘அன்புள்ள அப்பா’ படத்தில் நதியா பண்ற மாதிரி ஆயிட்டா. நான் டோட்டல் ஃபெயிலியர் ஆயிடுவேன்க்கா...” அவன் குரலில் பெரும் கவலையும், பயமும் இருந்தது.

“ரஞ்சா... என்ன இது? அப்படியெல்லாம் எதுவும் ஆகாது. இதுவரைக்கும் எல்லாம் கொடுத்து பழக்கிட்டார்... முதல்முறையா இது வேண்டாம்னு அவர் மறுக்கும்போது, அதுவும் அது அவளுக்கு கொஞ்சமாவது பிடிச்சிருந்தா கண்டிப்பா கேட்டுக்க மாட்டா...” அவள் சொல்ல,

“அக்கா... அப்படின்னா அவருக்கு என்னைப் பிடிக்கலைன்னு உனக்கும் தோணுது தானே. நான் எனக்கு மட்டும்தான் அந்த சந்தேகம் இருக்கோன்னு நினைச்சேன். என்கிட்டே அப்படி என்னக்கா குறை?” அவன் ஆதங்கமாக கேட்க, மென்மையாக புன்னகைத்தாள்.

“அவரோட பொண்ணுக்கு புடிச்சவனா இருக்கறியே... அவரோட இடத்தை புடிச்சுப்பியோன்னு பயம்... அதுதான் காரணம்...” அவள் சொல்லச் சொல்ல, அவன் முகத்தில் ஒரு விஷமப் புன்னகை உதயமானது.

அதைப் பார்த்தவள், “என்னடா... உன் சிரிப்பே சரியில்லையே...” அவனை சந்தேகமாகப் பார்த்தாள்.

“அவரை சுத்தல்ல விடணும்க்கா... செய்யறேன்...” அவன் சவாலாக சொல்ல,

“அவசரப்படாமல் நிதானமா செய்... ரிவர்ஸ்ல ஆயிடக் கூடாது” அவனுக்கு பத்திரம் சொன்னாள்.

தென்றல் குளித்து, ப்ரெஷ் செய்துவிட்டு அங்கே வர, “தென்றல், இதென்ன கன்னம் மொத்தமும் இப்படி சிவந்து போயிருக்கு...? ஏதும் அலர்ஜியா? இல்லன்னா பூச்சி எதுவும் கடிச்சுட்டா?” கேட்ட நிவேதிதா, அவள் கன்னத்தை ஆராய முயல, வேகமாக பின்னால் நகர்ந்தாள்.

அடுத்த நொடி, பதட்டமாக தன்னவனைப் பார்த்தவள், கன்னத்தை தன் கையால் மறைத்துக் கொண்டவள், “அது... நைட் ஒரே பக்கமா படுத்திட்டேன் போல, அதான்...

“வேற எதுவும் இல்லை...” அவள் கண்களை ஏறிட முடியாமல் அவள் தடுமாறி சொல்ல, நிமிடத்தில் அவள் பார்வை, பதட்டம் என அனைத்தையும் கவனித்த நிவேதிதா, அதற்குமேல் அதைப்பற்றி எதையும் கேட்கவில்லை.

“சரி தென்றல்... இந்தா டீ குடி... நேரமாச்சே... டிபன் சாப்பிடறியா?” என்றாள்.

“இல்ல அண்ணி... கொஞ்சம் நேரமாகட்டும், நாம சேர்ந்தே சாப்பிடலாம்... நான் ஏதாவது வேலை செய்யவா?” அங்கே வந்துவிட்டு, எதுவும் செய்யாமல் இருப்பது அவளுக்கே ஒரு மாதிரியாக இருக்க கேட்டாள்.

“இங்கே பொன்னம்மாக்கா தான் முழு சமையல், மேல் வேலை எல்லாம் பாப்பாங்க. நான் இங்கே வந்தா, சும்மா அவங்களுக்கு ஏதாவது சப்போட் பண்ணுவேன் அவ்வளவுதான். வேற வேலை எல்லாம் இங்கே இருக்காது” அவள் சொல்ல, நைனிகா அங்கே வந்தாள்.

“அம்மா... இன்னைக்கே நாம கிளம்பணுமா? நாளைக்கு இங்கே இருந்தே ஸ்கூல் போய்க்கறேனே. இன்னைக்கு அப்பா கூட டியூஷன் போறேன், பிளீஸ்ம்மா...” அவள் கெஞ்ச,

“அப்பாகிட்டே கேள்.... அப்பா ஓகே சொன்னா எனக்கு ஓகே தான்”.

“அப்பா அல்ரெடி ஓகே சொல்லிட்டாங்க... உங்ககிட்டே கேக்க சொன்னாங்க, இப்போ நீங்களும் ஓகே சொல்லிட்டீங்க” சொல்லிவிட்டு அவள் குதிக்க, “கேடி... சரி வாங்க சாப்பிடலாம்...” அவர்கள் வெளியே செல்ல, தென்றலின் கன்னத்தை மெல்லியதாக கடித்து சப்பியவன், வேகமாக அவர்கள் பின்னால் சென்றான்.

அப்படியே அதிர்ந்து நின்றுவிட்டவள், “அத்த... என்ன அங்கேயே நின்னுட்டீங்க?” நைனிகாவின் குரலில் கலைந்து வேகமாகச் சென்றாள்.

சாப்பாட்டு மேஜையின் முன்னால் அனைவரும் அமர, அவன் அருகே அமர்ந்தவள், “என்னங்க... ஏற்கனவே கன்னம் சிவந்திருக்கு... இதில் மறுபடியும் இப்படிப் பண்றீங்க?” அவனிடம் சின்னக்குரலில் கேட்டாள்.

“நான் கடிச்சதாவது பரவாயில்லை... நீ கடிச்சது எனக்கு காயமே ஆயிட்டு இருக்கு... அது யாருக்கும் தெரியலை அவ்வளவுதான்...” அவன் சொல்ல, அத்தனையாய் படபடத்துப் போனாள்.
 

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
829
நேற்று வந்த வேகத்தில்... அவனைக் காண முடியாத ஏக்கத்தை, கண்ட சந்தோஷத்தை வெளிப்படுத்த தெரியாமல் வெளிப்படுத்தியது புரிய, அமைதியாகிவிட்டாள்.

அதன் பிறகு அவன் பக்கமே அவள் திரும்பவில்லை. நைனிகாவும் பிரதாப்பும் டியூஷனுக்கும், மருத்துவமனைக்கும் கிளம்பிச் செல்ல, நிவேதிதா அன்று விடுப்பு எடுத்திருக்கவே, வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள்.

சற்று நேரத்தில் அவளுக்கு மருத்துவமனையில் இருந்து அவசர அழைப்பு வரவே, அவள் கிளம்பிச் சென்றாள். அவனைப் பெற்றவர்கள் இருவரும், ரத்தினத்தின் நண்பர் ஒருவர் டெல்லியில் இருந்து சென்னை வந்திருப்பதாகச் சொல்ல, அவரைக் காண கிளம்பிச் சென்றார்கள்.

வீட்டில் பொன்னம்மாவும், அவர்களும் மட்டுமே இருக்க, அவனோடு தனிமையில் இருக்க சட்டென பயந்தாள். ஏற்கனவே தகப்பன் வேறு திட்டி இருக்க, அவரிடம் திட்டு வாங்கக் கூடாது என நினைத்தவள், வேகமாக கிச்சனுக்குள் சென்று நின்றுகொண்டாள்.

அவனது பார்வை அவளையே சுற்றிவர, அதைப் பார்த்த பொன்னம்மா, “தம்பி, நான் வெளியே போய் காய்கறி வாங்கிட்டு வர்றேன்...” சொன்னவள், அவர்களுக்கு தனிமை கொடுத்து விலகிச் சென்றாள்.

அவர் சென்ற பிறகும், கிச்சனுக்குள் இருந்து வெளியே வராத மனைவியை அவன் தேடிச் செல்ல, தனக்கு முதுகு காட்டி நின்றவளைப் பார்க்கவே அவனுக்கு சுவாரசியமாக இருந்தது.

“ஹோய்... என்ன...? என்னைப்பார்த்து பயந்து இங்கே வந்து ஒளிஞ்சுகிட்டு இருக்கறியா?” அவன் அவளைச் சீண்ட,

“எனக்கென்ன பயம்?” தன்னை தைரியமாக காட்டிக்கொள்ள முயன்றாள். ஆனால் உள்ளுக்குள் ஒரு மாதிரி அலையடிக்க, தள்ளாடும் மனதை என்ன செய்து திடப்படுத்துவது என அவளுக்கு சத்தியமாகத் தெரியவில்லை.

“அப்போ பயமில்லை...?” அவளைப்பார்த்து கண்ணடித்து, அடிமேல் அடிவைத்து அவளை நெருங்க முயன்றான். அவளை சீண்டிப்பார்க்கும் எண்ணம் மட்டுமே அப்பொழுது இருந்தது. அவள் தன்னைப்பார்த்து படபடத்துப் போவதும், தடுமாறுவதும் ஒரு கணவனாக அவனுக்கு பெரும் போதையை அளித்தது மட்டும் உண்மை.

“ஏன்...? எதுக்கு இப்போ கிட்ட வர்றீங்க? என் அப்பாகிட்டே சொல்வேன்...”.

“அப்படியா? என்னன்னு சொல்வ? எதைச் சொல்வ?”.

“எல்லாமே சொல்வேன்...” அவள் சொல்ல, அவனுக்குள் இருந்த பிடிவாதக்காரன் உள்ளுக்குள் கிடந்து திணறினான்.

“ஓ... அப்போ எல்லாமே சொல்வ... அப்படின்னா இதையும் சொல்லு” அவன் சொல்ல, ‘இவர் எதைச் சொல்லச் சொல்றார்?’ அவள் யோசித்து முடிக்கையில், அவனது இறுகிய அணைப்புக்குள், அவள் இதழ்கள் அவன் இதழ்களுக்குள் வதைபட்டுக்கொண்டிருந்தது.

மற்றவரை தொட்டுகூட பேசக்கூடாது என சொல்லி வளர்க்கப்பட்டவளுக்கு, அவனோடு மொத்த தேகமும் உரச நேர்ந்த அணைப்பு பெரும் தடுமாற்றத்தையும், கூச்சத்தையும் விதைக்க, அவனைவிட்டு விலக முயன்றவளின் இதழ்களோ அவனால் விழுங்கப்பட்டுக் கொண்டிருந்தது.

அவளைச் சீண்டவென துவங்கியவனுக்கு, அவளை விட்டு விலக முடியாமல் போக, அவன் கரங்களோ, அவளது முதுகு, இடை என பயணித்து இன்னும் இறங்க திணறிப் போனாள். அடிமனதில் அவன் தன் கழுத்தில் தாலி கட்டிய கணவன் என பதிந்து போயிருக்க, அவளால் அவனை முழுதாக மறுக்க முடியவில்லை.

அதுதான் அழுத்தமான உண்மை என்பதை அவளே அந்த நொடி உணரவில்லை. அவனது செய்கையில் ‘ஹக்...’ அடிக்குரலில் அவள் அதிர, அவளைவிட்டு விலகியவன், அவள் முகம் பார்த்தான்.

“நீங்க பேடா பண்றீங்க... எனக்கு பயமா இருக்கு... அப்பாகிட்டே சொல்லிடுவேன்” தன் பயத்தைச் சொன்னவள், அவனது செய்கையை பிடிக்கவில்லை எனச் சொல்லியிருந்தால் விலகி இருப்பானோ என்னவோ?

அவன் இதழ்களில் குறும்பு புன்னகை ஒன்று உதயமாக, “இதைச் சொல்வ சரி... இனிமேல் செய்யப்போறதை?” அவன் புருவம் உயர்த்த,

“ஹாங்... இல்ல... நீங்க தள்ளிப் போங்க... நான் ரூமுக்கு போறேன்” அவனைத் தள்ளிவிட்டு அவள் செல்ல முயல, அவளை இடையோடு கையிட்டு தூக்கிக் கொண்டான்.

“இப்போ என்ன...? ரூமுக்குத்தானே போகணும்... வா... நான் கூட்டி போறேன்” சொன்னவன், அவள் கழுத்தில் முகம் புதைத்து, அவள் வாசனையை ஆழமாக நுகர, அவன் அடாவடியில் திண்டாடினாள்.

அவன் கரத்தில் இருந்து இறங்க முயன்று அவள் திணற, அவளது அசைவில் அவன் முகம் அவள் தேகத்தில் அபாயமாய் இறங்கி தன் முகத்தைப் போட்டு புரட்ட, அவளுக்குள் புயல் அடித்தது.

“ஹையோ... இது தப்பு... வேண்டாம்...” அவள் குரல் நலிந்து பலகீனமாக ஒலிக்க, அவனுக்குள் ஒரு கர்வ புன்னகை தோன்றியது.

விளையாட்டாய் துவங்கியது அபாயகட்டத்தை நோக்கி அவனை நகர்த்த, அவள் வாசனையை நுகர்ந்தவனுக்கு, கள்ளுண்ட போதை மயக்கத்தில் திளைக்கும் உணர்வு.

அவன் கரங்களும், இதழ்களும், அவள் பொக்கிஷங்களை களவாட முயல, பொக்கிஷத்துக்கு சொந்தக்காரியோ காப்பாற்ற முடியாத தடுமாற்றத்தில் நிலைதடுமாறிக் கொண்டிருந்தாள்.

“இதென்ன இப்படியெல்லாம் பண்றீங்க...? அப்பா திட்டுவாங்க...” அவனை தன் தேகத்தில் இருந்து பிரிக்க முயன்று தோற்று, அவன் சிகையை பின்னி இழுத்தாள்.

“மோனா... அப்பா அம்மா விளையாட்டு விளையாடற வயசில் அப்பாவுக்கு பயப்படறியே. அப்பா, அம்மா விளையாட்டு விளையாடலாமா? நான் சொல்லித் தர்றேன்... அதையும் உன் அப்பாகிட்டே சொல்லு” சொன்னவன்... எப்பொழுது அறைக்கு வந்தான், அவளோடு மஞ்சத்தில் சரிந்தான் என்பது எல்லாம் அவளுக்குத் தெரியவே இல்லை.

தன்மேல் இருந்தவனை மலங்க, மலங்க பார்த்தவள், ‘இவர் என்ன சொல்றார்?’ என்பதுபோல் அவனைப் பார்க்க, “உனக்கு புரியற மாதிரியே சொல்லித் தர்றேன்...” அவளைப் பார்த்து கண்ணடிக்க, அவளுக்கோ வான்வெளியில், எடையற்ற ஊடகத்தில் மிதக்கும் உணர்வு.

“ம்...? என்ன..?” அவன் சொல்ல வருவது எதுவும் புரியாத நிலையில், அவன் கரங்களுக்குள், அவள் மனமும், தேகமும் குழைந்து கிடந்தது.

“பிளீஸ் மோனா...” அந்த ‘ப்ளீஸ்’ அவளை ஏதோ செய்ய, இமைகளை மூடிக் கொண்டாள்.

அவனது கரம் அவள்மீதான தடைகளைக் கடக்க, “இதெல்லாம் இருக்கட்டுமே...” கூச்சம் தடுக்க, அவன் வெற்று தேகத்தை உணர்ந்தவளுக்கு தேகம் நடுங்கியது.

அவள் இதழ்களில் முத்தமிட்டு அவளைச் சமாதானம் செய்தவன், அவளிடம் கெஞ்ச, தன் கூச்சம் கடக்க போராடி, வெட்கமும் மெல்லியதாக விடைபெற அவனுக்கு இசைந்தாள்.

அவன் கரங்களும், இதழ்களும் அவள் தேகத்தில் முட்டி போராட, அவள் தேகம் சிலிர்த்தது. அவன் சிகை கோதி, முதுகை நகக்கண்களால் கீறியவள், அவன் அறிமுகம் செய்யும் உணர்வுகளின் கனம் தாளாமல் முனகி தவிக்க, அவனுக்கோ அத்தனை பூரிப்பு.

தன் தொடுகையை அவள் வெறுக்கவில்லை, ஏற்கிறாள் என்னும் எண்ணமே அவனை இன்னும் அவள்மேல் வேட்கை கொள்ள வைக்க, அவளைவிட்டு விலக நினைத்தவன், அவள் உணர்வுகளோடு விளையாடிவிட்டு அதைச் செய்வது கொடுமை எனத் தோன்ற, அவளைக் கொண்டாடினான்.

“மோனா... என்னைப் பாரேன்...” அவள் இமைமூடி ரசித்துக் கிடக்க, அவள் காதுக்குள் முனகி, அவள் கண்களுக்குள் ஊடுருவினான்.

அவன் கண்களை நேருக்குநேர் ஏறிட முடியாமல் பக்கவாட்டில் பார்த்தவளை, அங்கிருந்த கண்ணாடி அவர்களது பிரதி பிம்பத்தைக் காட்ட, அவனோடு தான் இருக்கும் நிலை கண்டு திடுக்கிட்டாள்.

வயதுக்கு வந்தபின் தன் தாய்க்கு கூட காட்டாத தன் தேகம், அவனுக்கு முழுதாக சொந்தமாகி இருக்க, பெரும் சூறாவளியே மனதுக்குள் தாக்க, அவனை இழுத்து கட்டிக் கொண்டாள்.

அவனுக்கோ அவளை மொத்தமாக ஆண்டுவிடும் வேகம்... அவள் இன்னும் சின்னப்பெண் என புத்தி சொல்ல, தன் தடம் தேடி பயணித்தவனின் கரங்கள், அவளைத் தன் நெருக்கத்துக்கு பண்படுத்த, பயத்திலும் கூச்சத்திலும் சிறு சிலிர்ப்பிலும் மீண்டுமாக தன் இமைகளை மூடிக் கொண்டாள்.

ஆனால் அவள் தேகமோ அவனுக்கு வேண்டிய எதிர்வினையைக் கொடுக்க, திடுக்கிட்டுப் போனாள். ஒரு கட்டத்தில் அவன் செய்கையின் தாக்கத்தில் அவளுக்குள் ஒரு பூகம்பம் நேர, இதயம் படபடக்க அந்த உச்சத்தை அவள் அனுபவித்தாள்.

அதன் தாக்கத்தில், அவன் தோள்ப்பட்டை, கன்னம், தாடை என அவள் கடித்து வைக்க, அவளை இறுக அணைத்து சமாதானம் செய்தான்.

‘ஹையோ... என்ன நடக்குது? எனக்குள்ளே என்னமோ...?’ அந்த உணர்வு சொல்ல முடியாத நிறைவையும், திடுமென ஒரு பயத்தையும் அளிக்க, தேகமோ அவனோடு ஒட்டிக்கொண்டது.

“மோனா... ரிலாக்ஸ்... ஒன்னும் இல்லை...” அவள் தேகம் சிலிர்த்து நடுங்க, அவளை சமாதானம் செய்தான்.

“இப்படி பண்ணாதீங்க... வேண்டாம்... பயமா இருக்கு... எனக்கு என்னமோ ஆகுது...” அவள் முனக, அவன் இதழ்களில் ஒரு வசீகரப் புன்னகை.

“சரி செய்யலை... ஆனா... என்னால இப்படியே விலக முடியாதே... ப்ளீஸ் மோனா...” அவன் கெஞ்ச, அவள் அமைதியானாள். முதல் உச்சம் கண்ட நிலையில், அந்த உணர்வின் பிடியில் இருந்தே அவள் வெளிவராமல் இருக்க, அவன் நெருக்கத்தை உணர்ந்த பிறகுதான் அவன் கெஞ்சிக்கொண்டு நின்றதன் காரணமே அவளுக்குப் புரிந்தது.

அவன் நெருக்கத்தை ஏற்க முடியாமல் அவள் திணறி தவிக்க, கோடி முத்தமிட்டு அவளைச் சமாதானம் செய்தவன், அவளோடு முழு மூச்சாக கலக்க, முயன்றான்.

அவன் வேகத்தில் மிரண்டவளின் பார்வை, அனிச்சையாக அந்த கண்ணாடியில் பதிய, தன்னவனின் முகத்தில் வந்துபோகும் அந்த வர்ணஜால உணர்வுகளைக் கண்டு விழி விரித்தாள்.

அவள் பார்வை தன்மீது இல்லாமல், பக்கவாட்டில் இருக்க, தானும் அவள் பக்கம் பார்த்தவன், அவள் கண்களில் இருந்த ஆச்சரியத்தில், அவள் இதழ்களில் அழுத்தமாக முத்தமிட்டு ஆழப் புதைந்து, அவளோடு ஒன்றானான்.

அவளை அடுத்த உச்சம் புரட்டுகையில், அவள் தாய்மை அடைந்துவிடக் கூடாது என்ற நினைப்பு வர, அவளிடமிருந்து விலகிக் கொண்டான்.

சில பல நிமிடங்கள் கடந்த பிறகே, நடந்துவிட்டதன் தாக்கம் அவளுக்கு முழுதாக இறங்க, “அம்மாடி...” தகப்பனின் குரல் வெளியே கேட்க, மொத்தமாக பயந்து போனாள்.

“ஏன் இப்படி பண்ணீங்க? அப்பா வேற வந்துட்டாங்க...” அவள் அழத் துவங்கி இருக்க, வெளியே பரமேஸ்வரனின் குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கி இருந்தது.

தென்றல் வீசும்........
 

ஆனந்த ஜோதி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 14, 2022
Messages
118
அச்சச்சோ!! இவர் வருவதுக்கு வேற நேரமில்லையா?

ஏண்டா, உனக்கு இந்த அவசரம்?

இப்ப உன்னை அடிச்சு, அவமானப் படுத்தி, மகளையும் பிடிச்சு இழுத்துட்டு, பொண்டாட்டிக்கும் நாலு கொடுத்துட்டு போகப் போறான்.

வீட்டுலயும் யாருமே இல்ல.

பிரிவு ஆரம்பம்..
 
Last edited:

Kothai Suresh

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
110
அட ராமா கரடி வந்திருச்சே, இந்தாளுக்கு வேற வேலை இல்லையா? லூசு, இவனும் கல்யாணமாகி பெண்ணை பெத்தவன் தானே
 

sumiram

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 20, 2022
Messages
101
Ippo vantha vegathil kootittu poi ini vidave mattaru ava appa.
 

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
829
Achacho
Inda aaal enna seiya poraro
Pavam inda pullainga

அவர் எதுவும் நல்லதா செய்ய வாய்ப்பில்லை.

நன்றி!
 

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
829
அச்சச்சோ!! இவர் வருவதுக்கு வேற நேரமில்லையா?

ஏண்டா, உனக்கு இந்த அவசரம்?

இப்ப உன்னை அடிச்சு, அவமானப் படுத்தி, மகளையும் பிடிச்சு இழுத்துட்டு, பொண்டாட்டிக்கும் நாலு கொடுத்துட்டு போகப் போறான்.

வீட்டுலயும் யாருமே இல்ல.

பிரிவு ஆரம்பம்..

இங்கே எல்லாம் நீங்க சொன்னதுக்கும் மேலே நடக்க போகுது பாருங்க. நன்றி!
 

Infaa

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 7, 2022
Messages
829
அட ராமா கரடி வந்திருச்சே, இந்தாளுக்கு வேற வேலை இல்லையா? லூசு, இவனும் கல்யாணமாகி பெண்ணை பெத்தவன் தானே

அதெல்லாம் பொண்ணுக்கு முன்னாடி எதுவுமே இல்லையே.... என்ன செய்ய?

நன்றி!
 

Lakshmi murugan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 14, 2022
Messages
639
போச்சு வில்லன் வந்து விட்டார்,இனி என்னென்ன பேசப் போகிறாரோ.
 
Top