• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் தீண்டிடுமோ நேசம் 16

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 16

"ஏன்டா.. அவளு...க்கு என்ன. .புடிக்காம இல்ல டா.. நான்னே.. ஒரு அனாத.. என்னை நம்பி... எப்படி வருவா?.. எனக்கு..லாம் குடும்பமா... வாழ குடுத்து... வைக்கல.. ராம்.. பேசாம அம்மா அப்பா..கூட நானும்... அந்த அச்சிடேன்ட்ல... " குடித்துவிட்டு உளறிக் கொண்டிருந்தவனையும், அவன் பேச்சில் இருந்த கவலையையும் புரிந்து நிவி, வாசு அமைதியாய் வர, உளறி அவன் பேசி முடிக்கும் போது இழுத்து ஒரு அறை அவன் கன்னத்திலேயே விட்டிருந்தான் ராம்.

அவன் அடித்த அடியே சொன்னது ராம் எவ்வளவு கோபத்தில் இருக்கிறான் என்பதை. இதுவரை அவன் கோபத்தை பார்க்காத பெண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு பயத்தில் நாவறண்டு வர, அடி வாங்கியவனோ அவார்ட் வாங்கியவன் போல மயக்கத்திலேயே பல்லை காட்டினான். அதில் சிரிப்பு வந்தாலும் சிரித்தால் ராமிற்க்கு கோபம் வருமோ என மீண்டும் அமைதியாகினர் பெண்கள்.

ஆனால் கௌதம் சந்தோஷத்தில் குடித்து இருக்கிறான் என நினைத்தவர்களுக்கு இப்போது தான் புரிந்தது வாசுவினால் அவன் எவ்வளவு கவலையில் இருக்கிறான் என்று.

வாசுவை வீட்டில் இறக்கிவிட்டு, நிவி வீட்டு வாசலில் இறங்கியதும் ராம் நிவியை பார்க்க, அவள் முகத்தில் தெரிந்த பயத்தில் தான் இவ்வளவு நேரமும் முகத்தை இறுக்கமாக வைத்திருப்பது தெரிய, மென்மையாய் அவளை பார்த்து புன்னகைக்கவும் அவளும் புன்னகைத்து பத்திரம் என கெளதமை பார்த்து சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.

அவள் சென்ற பின் திரும்பி கௌதமை முறைத்துவிட்டு 'வீட்டுக்கு வா மகனே!' என நினைத்துக் கொண்டவன் காரை பறக்க விட்டான்.

"பார்ட்டி எப்படி இருந்துச்சு வாசு?" மல்லிகா கேட்க,

"ஓஹ் அதெல்லாம் நல்லா இருந்துச்சு. லாஸ்ட்ல தான் அந்த கௌதம் குடிச்சிட்டு எல்லாத்தையும் சொதப்பிட்டார்" என்றாள். அவளை அறியாமலே ஒரு மரியாதை கூட.

அம்மாவிடம் எதையும் மறைப்பது இல்லை. அவன் குடித்ததை சொன்னவள் குடித்துவிட்டு உளறியதையும் சொல்லி இருக்கலாம். ஆனால் காதலின் முதல் படியே பொய் சொல்வதோ?

"அந்த தம்பி குடிக்குமா?" அதிர்ச்சியுடன் மல்லிகா கேட்க, அனுவும் அதே கேள்வியுடன் கண்களை விரித்து வாசுவை பார்த்தாள்.

"அந்த கம்பி தான் குடிச்சிட்டு ரகளை பண்ணாம கார்ல தூங்கிச்சு" என்றவள் குளியலறைக்கு செல்ல, மல்லிகா யோசனைக்கு சென்றார்.

'இந்த நாள் இனிய நாளாகட்டும்' நிவியின் வாழ்த்து செய்தியுடன் ராம் எழுந்து கொள்ள, அருகில் கவிழ்ந்து படுத்து நல்ல உறக்கத்தில் இருந்த கௌதமை பார்த்ததும் நேற்று நடந்தது ஞாபகத்தில் வர தண்ணீர் பாட்டிலை எடுத்து மொத்தத்தையும் அவன் மேல் கொட்டினான்.

தண்ணீர் மேலே பட்டதும் விழுந்தடித்து கௌதம் எழ, ராமை பார்த்து "என்னடா வீட்டுக்குள்ள மழை பெய்யுது" என்றவனை கொலைவெறியுடன் ராம் பார்க்க, அப்போதுதான் தலைவலி வந்து நேற்று குடித்ததை கௌதமிற்கு ஞாபகப்படுத்தியது.

பின் முகத்தை பாவமாக வைத்து கொண்டு கௌதம் ராமை பார்க்க, அவன் முறைத்துவிட்டு தனது காலை வேலைகளை தொடர்ந்தான். கௌதமும் குளித்து முடித்து கிளம்பி கீழே வர, சகுந்தலா, நந்தினி கூட அவனை முறைத்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டனர்.

'நேத்து எதுவும் ஓவரா பண்ணிட்டோமோ?' கௌதம் எவ்வளவு யோசித்துப் பார்த்தும் எதுவும் ஞாபகம் இல்லாமல் போக, "ம்மா சாரி மா. ஏய் நந்து சாரி டா" என சொல்ல,

சாப்பிட தட்டை நங்கென அவன் முன் வைத்தார் சகுந்தலா. "சாரி மா தெரியாம குடிச்சிட்டேன். ப்ளீஸ்" கெஞ்ச,

"ம்மா! நான் சீக்கிரம் போகணும். எனக்கு சாப்பாடு வேண்டாம்" என ராம் வர, "டேய் நீயாவது சொல்லுடா" என்றவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு ராம் வெளியே செல்ல முயல,

"இப்ப ஏன் எல்லாரும் பேச மாட்றீங்க? அதான் சாரி சொல்றேன் இல்ல?" என்றவன் அதே கன்னத்தில் பளார் என ஒன்று விழ, அடித்தது ராம் இல்லை சகுந்தலா.

அந்த அடியில் ராமும் அப்படியே நின்று விட்டான். ஆனால் அதை வாங்கிய கௌதம் கொஞ்சமும் அசராமல் "அதான் அடிச்சுட்டிங்க இல்ல. இனி பேசுங்க" என பாவம்போல முகம் வைத்து சொல்ல,

"உன்ன அடிச்சது நீ குடிச்சதுக்கு இல்ல! அப்புறமா சொன்ன வார்த்தைக்கு" சகுந்தலா சொல்ல, யோசித்தாலும் ஞாபகம் வராது என்பதால் ராமை பார்த்தான்.

"நான் அனாதை. குடும்பமா வாழ குடுத்து வைக்கல" எங்கேயோ பார்த்து கொண்டு கோபத்தில் கௌதம் சொன்ன வார்த்தைகளை ராம் சொல்ல, தன் தலையிலேயே கொட்டிக் கொண்டான் கௌதம்.

எழுந்தவன் சகுந்தலா தோள்களை கட்டிக் கொண்டு "அம்மா! அம்மா! என்னை என்னைக்காவது அப்படி நினைக்க விட்ருப்பிங்களா? எதோ தெரியாம வாய் தவறி வந்திருக்கும் அதுக்கு போய் என்கிட்ட பேச மாட்டேன்னுறீங்கலே? ஏய் நந்து! எனக்கு ஜென்மத்துக்கும் நீங்க போதும் டா. ப்ளீஸ் இந்த அண்ணனை மன்னிச்சுடேன்" என சொல்ல,

"ம்மா! அவன் நடிக்குறான். நேத்து எப்படி உருகி உருகி பேசினான் தெரியுமா? நான் ஒரு அறை விடலனா இன்னும் பேசிட்டே இருந்திருப்பான்" ராம் மீண்டும் போட்டுக் கொடுக்க,

"அடேய் நீயும் என்னை அடிச்சியா? அதான் எழுந்ததுல இருந்து வலிக்குது. இரு உன்னை அப்புறமா பாத்துக்குறேன்" என்ற கௌதம் மீண்டும் சகுந்தலாவிடம் ப்ளீஸ் போட,

"இனி அந்த கன்றாவிய குடிச்சிட்டு இப்படி பேசினனு கேள்வி பட்டேன்.. அன்னையோட என்னை நீ மறந்திடு" என்றவரை கட்டிக் கொண்டவன்

"சத்தியமா மனசார நான் அப்படியெல்லாம் நினைச்சது இல்லம்மா. இந்த வாசு புள்ளய நினைக்கும் போது மட்டும் எனக்கு என்னவெல்லாமோ தோணுது. அதான் அப்படி உளறி இருக்கேன்" என்றான் கௌதம்.

"அப்படி யாரு அண்ணா உன்ன வேண்டாம்னு சொன்னது? சொல்லு நான் அவங்களை பார்த்தே ஆகணும்" நந்தினி சொல்ல,

"நந்தினி, உன் கல்யாணத்துக்கு இன்ட்ரோடியுஸ் பண்ணுவான். அப்ப பாரு" என்ற ராம் கௌதமை முறைத்துவிட்டு செல்ல, அவனை சமாதானம் செய்வது எளிது என்பதால் சிரிப்புடன் நின்றான் கௌதம்.

வாசு காலை எழுந்தும் படுக்கையை விட்டு எழாமல் நேற்று ராம் கூட்டி சென்று காட்டியதையும் பேசியதையும் நினைத்துக் கொண்டிருந்தாள்.

நேற்று ராம் வாசுவை அழைத்து சென்று நேரே நிறுத்திய இடம் யுவர் சேவா சங்கம் என்ற பல ஆதரவற்ற, உடல்நிலை சரியில்லாத குழந்தைகள் இருக்கும் இடம்.

அதை நடத்தும் பெரியவரின் அறைக்கு இருவரும் செல்ல, "வா ராம்! என்ன இந்த நேரத்துல வந்திருக்க?" என்றவரின் பார்வை வாசுவிடம் இருக்க, என்ன தோன்றியதோ அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொண்டாள் வாசு.

"நல்லா இரும்மா! ராம் இந்த பொண்ணு..?" என அந்த பெரியவர் இழுக்க,

"கௌதம் பிரண்ட் அப்பா. சும்மா அவங்க பாக்கணும்னு சொன்னாங்க அதான் கூட்டிட்டு வந்தேன்" என்றவன் "இந்த இடத்தை நான் சுத்தி காட்டலாமா வாசுக்கு?" என கேட்க, அவர் சம்மதம் தந்ததும் கூட்டி சென்றான் அவன். செல்லும் வாசுவையே பார்த்துக் கொண்டு நின்றார் அந்த பெரியவர்.

"அவரு பேரு சுந்தரம். இந்த குழந்தைகளுக்கும் எனக்கும் அப்பா. ரொம்ப நல்ல மனுஷன். இங்க மொத்தம் 148 குழந்தைங்க இருகாங்க" என சொல்லிக்கொண்டு வர, வாசுவும் அங்கு தூங்க தயாரான குழந்தைகளை ஒரு வலியோடு பார்த்துக்கொண்டு வந்தாள்.

"இந்த இடத்துல பாதி கௌதம் கொடுத்தது வாசு. இங்க இருக்குற குழந்தைங்களுக்கு ஆபரேஷன் பண்ணி சரி செய்ய முடியும்னா கொஞ்சமும் தயங்காம சுந்தரம் அப்பா ஹெல்ப் கேட்குறது கௌதம்கிட்டதான். என்கிட்ட இருக்குற பணம் சும்மா தான இருக்கு. இவங்க எல்லாம் எவ்வளவோ சாதிக்கனும் அப்படினு இங்க இருக்குற எல்லாரோட பொறுப்பையும் அவன் ஏத்துகிட்டான். இதுல முக்கியம் என்னன்னா அவன் இந்த பொறுப்பை ஏத்துக்கும் போது அவன் காலேஜ் தான் படிச்சுட்டு இருந்தான். இவங்க எல்லாருக்கும் தன்னால முடிஞ்சத செய்யணும்னு ஓட ஆரம்பிச்சு தான் இன்னைக்கு பிசினஸ்ல இளம் சாதனையாளரா வந்துருக்கான்" என சொல்ல, அவன் சொல்வதை பிரமிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தாள் வாசு.

"நான் உன்னை மைண்ட் வாஷ் பண்ண இங்க கூட்டிட்டு வர்ல. உன் அக்காக்கு அவன் செய்யுறத வச்சு உனக்காக செய்யுறான்னு சொன்னியே.. அவன் அதுக்கு முன்னாடியே இதுல ஆத்ம திருப்திய உணர்ந்தவன்னு நீ தெரிஞ்சுக்கனும்னு தான் சொல்றேன்" என்றவன் அவளை யோசிக்கவிட்டு சுந்தரத்திடம் பேசிவிட்டு வந்தான்.

இதையெல்லாம் யோசித்த வாசுவிற்கு கௌதம் மேல் பெரிய மரியாதை ஒன்று உருவாக, அவனை எப்படி சந்திப்பது என குற்ற உணர்ச்சியோடு ஹோட்டலிற்கு ராமுடன் வந்தவள் பார்த்தது, தலை தொங்கி ராம் கைகளில் தள்ளாடி வந்த கௌதமை தான்.

அப்போதும் கோபம் வராமல் ஏன் இப்படி என்று தான் தோன்றியது. காரில் அவன் உளறல்களை கேட்ட பின்னோ 'எதுவுமே இல்லாத எனக்காக ஏன் ஒருவன் அதுவும் எல்லா தகுதியிலும் மேம்பட்ட ஒருவன் இவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கிறான்?' எனதான் நினைத்து கொண்டு வந்தாள். இதோ விடிந்து இவ்வளவு நேரம் ஆகியும் அதை தான் நினைத்துக் கொண்டிருக்கிறாள்.

"மச்சி சத்தியமா இனி குடிக்கவே மாட்டேன் டா" என கெஞ்சி குட்டிக்கரணம் அடித்து ராமை பேச வைத்து இருந்தான் கௌதம்.

சின்ன சின்ன தவறு செய்யாமல் மனிதன் இல்லை என்பதை யாராலும் மறுக்க முடியாதே! கௌதமும் அப்படி தான். தவறு செய்து மன்னிப்பு கேட்கும் சிறு பிள்ளையாய் ராம் முன் நின்று குடிக்கவே மாட்டேன் என சத்தியம் செய்து சமாதானம் ஆனான்.

இதோ அதோ என நாட்கள் ஓட, ஒரு மாதமும் நால்வரும் சந்தித்து கொண்டாலும் கௌதம் வாசுவை முன்பு போல சீண்டுவது இல்லை. வாசுவும் அமைதியாய் இருந்து கொள்வாள் அவனிடம் மட்டும். நிவி ராம் காதல் பறவையாய் கௌதம் வாசுவுடன் சுற்ற, கல்யாணத்திற்கு முந்தைய நாள் ராஜ்குமாரிடம் கெஞ்சிக் கொண்டிருந்த பெண்ணை பார்த்தாள் நிவி.

தொடரும்..
 
Top