• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உள்ளத்தில் ஊஞ்சலொன்று!-5 &6

Meenakshi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jun 22, 2024
Messages
10
அத்தியாயம்-5

நான் பார்த்தவரை ஜெனரலா பீல் பன்ன விஷயம் என்ன தெரியுமா? என்னோட சொந்த ஊர் கோவையில் மரியாதைக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கற ஆளுங்க நிறைஞ்ச ஊர். ஆனால் இப்ப இருக்கறர குட்டீஸ் முதற்கொண்டு டீன்ஸ் வரைக்கும் அடுத்தவங்களை மதிக்கனும் அப்படிங்கற டெண்டன்சி ரொம்ப குறைவா இருக்குனு தோணுது. பட் இந்த சின்ன பொண்ணு எங்கிட்ட பேசற மாதிரி எல்லாம் நான் என்னோட அம்மாகிட்டயோ, அப்பாகிட்டேயோ பேச முடியாது.
-எழில்.

சிசிடிவி தன் அண்ணனும், அந்தப் புதியவனும் நின்றிருந்த இடத்தைப் பார்த்துவிட்டு திரும்பிய மனோஷாவின் கண்களில் செடிகளுக்கும், புல்வெளிகளுக்கும் நீர் பாய்ச்சும் கன்ட்ரோல் செக்சன் கண்களில் பட்டது.
தன் அண்ணனும், அந்த கோல்டின் மீதும் சரியாக நீரை பீய்ச்சி நாற்பத்தி ஐந்து கோணத்தில் அடிக்கும் ஸ்பிரிங்கலர் இருந்தது.

“வாவ்! இப்படி வந்து மாட்டிகிட்டீங்களே இரண்டு பேரும்? கோவைக்கு வந்த மூணு நாளுக்குள்ளேயே இப்படி ஒரு சம்பவம் செய்வோம்னு எதிர்பார்க்கலே. பலே மனோ. நீ எப்பவும் மாஸ்தாண்டி!” என தனக்குள் முனுமுனுத்துப் பாராட்டியவள் அங்கிருந்த பச்சை பட்டன் ஒன்றின் மீது விரலை வைத்து அழுத்தினாள்.
இது எவற்றையும் அறியாமல் ஆதித், மித்ரனிடம் பேசிக் கொண்டிருந்தான்.

“என்ன மாதிரி எதிர்ப்பார்க்குற ஆதி?”

“எனக்கு பனைமர விதை ஐநூறு, அப்புறம் நல்லா எந்த கிளைமேட்டும் தாங்குற செடிகள், மரக்கன்றுகள் ஆயிரம். செடி மட்டும் எது பெஸ்டா இருக்கும்னு நீயே சூஸ் பன்னிரு. அதில் எனக்கு எந்த ஓப்பினியனும் இல்லை. ஏனால் அதில் நீதான் பெஸ்ட்.”

“ஓகே. ஆதி. அப்படியே செஞ்சுக்கலாம்.”

“எந்த தேதி பங்கசன்?”

“இந்த ஜூலை 15.”

“காமராஜர் பிறந்தநாள்.அதை கல்வி வளர்ச்சி நாளாகாக் கொண்டாடுறோம். கல்வியைப் போல் மரங்களும் அவசியம் அப்படிங்கற தீமுக்காக இதை செய்யறோம். அதுக்காகத்தான்.”

“அப்ப இன்னும் டிவெண்டி டேஸ் டைம் இருக்கு.”

“யெஸ்.”

“பேமெண்ட் செஞ்சரட்டா?”

“ஹே ஆதி.. டெலிவரி அப்ப பே பன்னா போதும்.”

“மித்ரன். நாம பிரண்ட்ஸா இருக்கலாம். ஆனால் இது பிஸ்னஸ். மத்தவங்க மாதிரி புல்பேமெண்ட் கொடுக்கறேன். வாங்கிக்கோ.” கண்டிப்பான குரலில் ஆதித் கூறவும் மித்ரனும் ஏதோ கூற வருகையில் இருவரும் ஸ்பிரிங்கலரில் இருந்த மழையில் நழைய ஆரம்பித்தனர்.
1000079727.jpg

ஒரு பக்கம் செல்லலாம் என்று நினைத்தால் அவர்கள் கால் வைக்கும் அனைத்து இடத்திலும் ஸ்பிரிங்கலர் நீர் பீய்ச்ச ஆரம்பித்தது. ஆக மொத்தத்தில் மனோஷாவின் லீலையினால் ஏற்பட்ட மழையால் இருவரும் தொப்பலாக நனைந்து போயினர்.
இருவரும் ஒரு வழியாக தப்பித்து ஷெட்டிற்கு வந்தனர். செடிகளுக்கு இடையில் ஒதுங்கினர். ஸ்பிரிங்கலர் இன்னும் நீர் பாய்ச்சுவதை நிறுத்தவில்லை.
“என்னடா? யாரோ ஆக்ஸிடெண்டலா ஆன் பன்னிட்டாங்களா?”
“ஆதி இது ஆக்ஸிடெண்டல் கிடையாது. பக்கா இண்டென்சனல். இது ஸ்பிரிங்கலர் டைம் கிடையாது. இதை செஞ்சது யாருனு எனக்குத் தெரியும். அவளை?” என்று பற்களை கடிக்க முடியவில்லை. குளிரில் அது தந்திதான் அடித்தது. பாய்ச்சியது. பருவ மழையால் குளிர்ந்து போயிருந்த கிணற்றில் இருந்து வந்த நீர் அல்லவா?
“மனோ” என்ற பெயரை மித்ரன் வாய் மெதுவாக முனு முனுத்தது.

“மனோவா? யாரு அந்த பையன்?”

“மனோ பாய் இல்லை. நான் வேலைக்குச் வச்சுருக்க ஒரு பேய். இப்ப கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி பார்த்தோமோ அந்த குட்டி பிசாசுதான்.”

“அப்படி சொல்ல முடியாதுடா. ஆக்சிடெண்டலா நடந்துருக்கலாம்.”

“ஹா..ஹா.. ஆக்சிடெண்டலா. மனோ செஞ்சால் எந்த விஷயமும் ஆக்ஸிடெண்டல் கிடையாது. பிளான் பன்னி பக்காவா செய்வா.”

இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் ஸ்பிரிங்கலர் நின்று விட்டது.

“வா ஆதி. என்னோட டிரஸ் மாத்திக்கலாம். டிரஸ்ஸிங்க் ரூமுக்குப் போலாம்.”

“இல்லடா. காரில் எக்ஸ்ட்ரா டிரஸ் இருக்கு.”

“சரி இருக்கட்டும். முதல் தலையை துவட்டிக்கோ. சளி கீது பிடிச்சுட போகுது. கமான்.”

அவன் கூறிய திசையில் நடந்த ஆதி டவல் ஒன்றை பெற்றுக் கொண்டு தன் கார் நிறுத்தி இருக்கும் பார்க்கிங்க் பகுதிக்குச் சென்றான்.
மித்ரன் அங்கிருக்கும் மாற்றுடையை அணிந்தவன் தலையைத் துவட்டிக் கொண்டே வெளியே வந்தான்.

“போ. ஆதி டிரஸ் சேஞ்ச் பன்னிக்கோ. டிரஸ் கூட இங்கேயே போட்ரு. டிரை பன்னி நான் கொடுத்து விடறேன்.”

“ஹே நோ இஸ்யூஸ். நான் பார்த்துக்கிறேன்.”

“ஐம் சாரிடா.. இரு அந்த குட்டிப் பிசாச சாரி கேட்க கூட்டிட்டு வரேன்.” என்ற மித்ரன் அங்கிருந்து நகர்ந்தான்.

தன் தங்கையைத் தேடி கோபமாக வந்தான் மித்ரன். அவளோ விசிலடித்தப்படி ஜாஸ் இசைக்கு ஏற்ப அசைந்து கொண்டு பொக்கேவைக் கட்டி கொண்டிருந்தாள்.

“ மித்து இங்க பாரு நானே கஷ்டப்பட்டு கட்டுன பொக்கே. நல்லாயிருக்கா.. இவ்ளோ சீக்கிரமா நான் கட்டுனதே இல்லை?” என்று காட்டினாள். அவனை இன்னும் நிமிர்ந்து பார்க்கவே இல்லை.
நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி நிற்பவளைப் பார்க்க மித்ரனுக்கு இன்னும் சந்தேகம் கூடியது.
1000079731.jpg

“மித்து நான் ஒரு மிஸ்டேக் பன்னிட்டேன். சவுத் ஜோன் வாட்டர் கண்ட்ரோலுக்குப் பதிலா ஈஸ்ட் ஜோன் வாட்டர் கண்ட்ரோல் பிரஸ் பன்னிட்டேன். நீ அந்தப் பக்கம் போகலை இல்லை?” அப்பாவியாய் கேட்டாள்.
இப்படி அவள் தவறு செய்ததாக கூறவும் நிஜமாக அவள் தவறாக அழுத்தி இருப்பாள் என்று தோன்றியது மித்ரனுக்கு.

“என்னை நிமிர்ந்து பாரு மனோ.” நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் அதிர்ச்சி.

“அச்சோ..” என்று வாயில் விரல்களைக் கொண்டு மூடினாள்.

“அப்ப அந்த கஷ்டமர்? ஓ மை காஷ்.. ஐம் சோ சாரி. எங்க அவரு? நான் உடனே சாரி கேட்கறேன். சாரிடா மித்து. நீ இங்கேயே இரு.” என்றவள் பொக்கேவை கைவிட்டு ஒரு பூந்தொட்டியை எடுத்துக் கொண்டு நகர்ந்தாள்.
1000079734.jpg


அந்தப் பகுதிக்கு ஆதியும் வந்து கொண்டிருந்தான்.
லில்லி குளத்தின் நடுவில் பூந்தொட்டியுடன் அவனை சந்தித்தாள் மனோஷா.

“ஐம் ரியலி சாரி.. நான் ஆக்சிடெண்டாலா.. சாரி.. இந்த வேலை எனக்கு ரொம்ப முக்கியம்.” என முகத்தைப் பாவம் போல் வைத்துக் கொண்டு கேட்டாள்.

“இதை நீங்க கண்டிப்பா ஏத்துக்கனும்.” என்று பூந்தொட்டியை நீட்டினாள். அவள் அடுத்து கூறிய விஷயம் ஆதியை வியப்புக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது.




அத்தியாயம்-6

நான் நிறைய பேரைப் பார்த்திருக்கேன். அதில் நீங்க ரொம்ப கவனமாக இருக்க வேண்டியவங்கனு நினைச்சது பெண்கள் கிட்ட. ஆக்கும் சக்தி, அழிக்கும் சக்தி நிறைஞ்சவங்க பெண்கள். நாம எப்படி அவங்கிட்ட நடந்துக்கிறோம் அப்படிங்கறதை பொறுத்து சிலர்கிட்ட அவங்க எதிர்வினை இருக்கும்.
-எழில்.

தன் எதிரில் பூந்தொட்டியுடன் நிற்பவளை கண்களை விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதி. அவனின் கையில் அந்த பர்பிள் நிறத்திலும், வெள்ளை நிறத்திலும் பூக்கள் பூத்திருந்த மலர்த் தொட்டியை திணித்தவள், “ஓய் கோல்ட். இப்படி எல்லாம் பேசுவேனு எதிர்பார்த்தியா?. பிளான் பன்னி செஞ்சேன். பார்த்தவுடனே என்னை பத்தி நீ எப்படி ஜட்ஜ் செய்யலாம். என்னை பார்த்தால் எப்படி இருக்கு? என்னை வேலையை விட்டு தூக்கு பார்க்கலாம். நடக்குதானு பார்க்கலாம்.”
என புன்னகைத்தப்படி கூறினாள் மனோஷா. அவளுடையை பேச்சில் தான் அதிர்ச்சியையும், வியப்பையும் ஒருங்கே காட்டினான் ஆதி. அவள் மன்னிப்பு கேட்டதில் அவனே ஒரு நிமிடம் நம்பி விட்டான். இவனும் அவளின் சார்பாக பேசியவன் தானே. அதை நினைக்கையில் அவனை நினைத்து சிரிப்பு வேறு வந்தது.

“மனோ சாரி கேட்டியா?” மித்ரனின் குரலில் லேசாக வருத்தம் தொனித்து ஒலித்தது. உடனே தன் அண்ணனிடம் திரும்பியவள்,
“கேட்டேன் , இவரு ரொம்ப நல்லவர். என்னோட சாரியை பிளவர்பாட்டோட அக்சப்ட் பன்னிட்டாரு. இப்பதான் ரொம்ப நிம்மதியாக இருக்கு.”
மித்ரனின் முகத்திலும் புன்னகை மலர்ந்தது.
நொடிக்கு நொடி அந்நியன் போல் மாறுபவளை இன்னும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்.

“நீ சொன்ன மாதிரி தெரியாமல் மனோ பிரஸ் பன்னிட்டாள். நான் தான் வேணும்னே செஞ்சுட்டானு நினைச்சேன். சாரி மனோ. ஆனால் நீ விளையாட்டுத்தனத்தைக் குறைச்சுக்கனும்.”
தனக்கு ஆதரவாகப் பேசியதைக் கேட்டவுடனே ஆதியின் பக்கம் திரும்பினாள்.

‘அவ்வளவு நல்லவனா நீ?’ என்ற கேள்வியில் அவள் பார்வையில் பொதிந்திருந்தது. ஒரு நொடி அவள் முகத்தில் வருத்தமும் மின்னியது. அவளின் முகத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான் ஆதித்.
நல்ல சமத்து பிள்ளையாகத் தலையை ஆட்டினாள் மனோ.

“இனிமேல் யாருகிட்டேயும் அப்படி பேச மாட்டேன். அதுக்கும் சேர்த்து சாரி கேட்டுட்டேன்.”

“சரி போய் பொக்கேவை கண்ட்டியுனியூ செய்.”
சில அடிகள் எடுத்து வைத்தவள் மீண்டும் ஆதி இருக்கும் பக்கம் திரும்பினாள். மித்ரன் முதுகு காட்டி நின்று கொண்டிருந்தாள்.
அவனைப் பார்த்து கண்ணடித்தவள், “தேங்க் யூ.” என சத்தமே வராமல் முனுமுனுத்தாள்.
காலையில் தான் பார்த்த பெண் தானா என்ற சந்தேகம் ஆதிக்கு எழுந்தது.
அதற்குள் ஆதியின் கையில் உள்ள பூந்தொட்டியைப் பார்த்து கேட்டான் மித்ரன்.

“ஆதி இந்தச் செடிக்குப் பதிலாக வேற எதாவது செடி வேணுமா?”

“ஏன் மித்ரன்? இந்த செடிக்கு என்ன?”

“ஹே நத்திங்க். நீ வேற எதாவது எக்ஸ்சேஞ்ச் பன்னிக்கலாம். அது மட்டுமில்லாமல் இந்த பிளவரோட மினிங்க்,

‘எட்ர்னல் லவ்’ “

“எட்ர்னல் லவ்வா? அது ரோஸ் தானே.”

“ரோஸ் இருக்கலாம். ஆனால் ஹீலியோடிரோப் தான் பர்ஸ்ட் அண்ட் பர்மோஸ்ட்.”

“ ஆனால் இது சாரி கேட்க அந்த பொண்ணு கொடுத்தது. இதை மாத்துனா நல்லாருக்காது. எல்லா பிளவரையும் நாம மீனிங்க் தெரிஞ்சு வாங்கறது இல்லை. கொடுக்கறது இல்லை.”

“சரி எனக்கு பொக்கே வேணும்.”
அதற்குள் இன்னொரு வாடிக்கையாளர் வரவும், “ஆதி வழக்கமா போற இடத்துக்குப் போ. அங்க மனோ இருப்பாள். இவங்களைக் கவனிச்சுட்டு வரேன். பில் உனக்கு மொத்தமா கால்குலேட் பன்னி செண்ட் பன்றேன்.”

“ஓகே.” எனத் தலையாட்டிய ஆதியும் அங்கிருந்து நகர்ந்தான்.
அவனின் கையில் சிறிய மலர்தொட்டி இன்னும் சிறிதாகத் தெரிந்தது. லில்லி குளத்தின் வழியே அந்த கண்ணாடி கூரையை நெருங்கினான். கூரைக்கு ஷேட்ஸ் உண்டு என்பதால் மனோ அதை ஆன் செய்து விட்டு வேலை செய்து கொண்டிருந்தாள். ஏதோ பூக்களைப் பார்த்துக் கொண்டிருந்தவள்,
“மித்.” என்று முதலில் கூறினாலும் காலடி சத்தம் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தாள்.


அதனால் நிமிர்ந்து பார்த்தாள். ஆதித் வந்து கொண்டிருந்தான். அவன் முகத்தைப் பார்த்தால் அவனுக்கு நிச்சயம் ஏதோ பேச வேண்டி இருக்கிறது என்று புரிந்து கொண்டாள் மனோ. தான் பேசியதிற்கு ஏதோ பதில் பேச வருகிறான் என்று தோன்றியது.

“பிங்க் கார்னேஷன் பொக்கே.”

“பிங்க் கார்னேஷனா?”
அவனை ஆழ்ந்து பார்த்தவள், “என்ன அப்படி பார்க்கிறீங்க மேடம்?” என்ற கேள்வியில் தெளிந்தாள்.

“வேற எதாவது?”

“அது மட்டும்தான்.”
பொக்கே செய்யும் மேடையிலிருந்து விலகி அவனைத் தாண்டி பிங்க் கார்னேஷன் மலர்கள் இருக்கும் பகுதிக்குச் சென்றாள்.
எடுத்துவிட்டு பொக்கேவை கட்டியவள் அவனிடம் கொடுத்துவிட்டு அதற்குரிய தொகையைக் கூறினாள். அவனும் அதை மேடையில் வைத்து விட்டு பர்ஸில் இருந்து தொகையை எடுத்துக் கொடுத்தான்.
அவன் தன்னிடம் எதுவும் கேட்காததும் அவளுக்கு ஆச்சரியத்தை அளித்தது.

“என்ன எதுவும் கேட்கலைனு நினைக்கிறியா?” என்றான்.
அவனுக்கு பதில் கூறவில்லை. அவனை மட்டும் பார்த்தாள்.

“கேட்கனும் தோணலை. உன்னோட ஏஜ் என்ன?”

“ஏஜா? நோ கமெண்ட்.”

“ஓகே.. உங்கிட்ட ஏன் நான் கேட்கலைனா? பொதுவாக எனக்கு யார்கிட்டேயும் சண்டை போடறது பிடிக்காது. அதுவும் முட்டாள்கள்கிட்ட நான் சண்டை போடறது இல்லை. யூ நோ டைம் வேஸ்ட்.”
அவன் கூறியதைக் கேட்டதும் மனோவின் முகத்தில் முதன் முதலாக அதிர்ச்சி தெரிந்தது. தன்னை முட்டாள் என்று அழகாக ஒருவன் சொல்லிக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து கொண்டிருக்கிறான். உடனே மேடையைத் தாண்டி விலகிச் செல்பவனைனின் முன்னங்கையைப் பற்றினாள்.

“ஹே நீ இப்ப யாரை முட்டாள்னு சொல்ற?”

“அது உனக்கு புரியலையா? அப்ப நான் கரக்டாதான் சொல்லி இருக்கேன். உன்னை மாதிரி நிறைய டீன்ஸைப் பார்த்திருக்கேன்.” என இரு புருவங்களையும் உயர்த்திக் கூறினான்.
அவனின் இந்த பதிலில் வாய்விட்டு சிரித்தாள் மனோ.

“டீனா? நானா? மறுபடியும் சொல்றேன். பேக்ட் செக் செய்யாமல் ஜட்ஜ்மெண்ட் செய்யக் கூடாது மிஸ்டர்.கோல்ட்.”

“இருக்கலாம். நீ டீனாக கூட இல்லாமல் ஆனால் ஐகியூ சைல்ட் லெவல்தான். முட்டாள் கூட என்னை விரும்புதுனு நினைச்சுக்கிறேன். தாங்க்ஸ் பார் யுவர் எட்ர்னல் லவ்.” என்றவன் அங்கிருந்து வேகமாக நகர்ந்தான்.
 
Top