• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
324
ஓலை - 1

லீலா பேலஸ்.

எம். ஆர். சி நகர்

சென்னை.


தி க்ரேட் பிஸ்னஸ்மேன் சத்யபிரகாஷ்ஷோட பங்ஷன்.

பெரிய, பெரிய ஆட்கள் எல்லோரையும் அழைத்து இருக்க… அப்போ பரபரப்பிற்கு கேட்கவும் வேண்டுமா!


விழா கோலாகலமாக ஆரம்பமானது.

சத்யபிரகாஷ் இந்த ஹோட்டலை தேர்ந்தெடுக்க காரணம், இந்த ஹோட்டலின் கட்டுமானம் செட்டிநாடு அமைப்பில் இருந்தது தான். அது மட்டுமல்லாமல் கடலைப் பார்க்க அமைந்துள்ள அந்த ஹோட்டல் அவனுக்கு மிகவும் பிடித்தம்.


அவன் எஸ். எஸ் என்கிற கன்ஸ்ட்ரெக்ஷன் கம்பெனி வைத்து பெரிய, பெரிய அளவில் ஹோட்டல், மால், கவர்மெண்ட் ப்ராஜெக்ட் என்று எடுத்து செய்தது ஏராளம்.


எல்லோரும் அவன் ப்ராஜெக்ட் செய்த ஹோட்டலில் தான் பங்ஷன் செய்வான் என்று நினைத்திருக்க, அவனோ எல்லாருடைய எதிர்ப்பார்ப்பையும் ஏமாற்றி இருந்தான்.

இதுவரை அவர்கள் குடும்பத்தில் நடந்த பங்ஷன் எல்லாமே, அவர்களது சொந்த ஊரில் தான் நடந்தது.

ஆனால் இன்று நடக்கும் விழா அவனுக்கு சம்திங் ஸ்பெஷல். அதான் சென்னையிலே நடத்தினான்.

கெஸ்ட் ஒவ்வொருவராக வர ஆரம்பித்திருந்தனர். விழா நேரம் ஏழு மணி. இன்னும் நேரமிருக்க, சத்யப்ரகாஷோ, தயாராகி வந்து நின்றான்.


கருநீல நிற கோட்சூட்டில், ஆறடிக்கும் கொஞ்சம் கூடுதலான உயரத்துடன் கம்பீரமாக இருந்தான்.


அங்கு வந்திருந்த நவ நாகரீக மங்கைகள் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர். " ஹவ் ஹேண்ட்ஸம்" என.


அதெல்லாம் காதில் விழுந்தாலும், உள்ளுக்குள் லேசாக சிரித்துக் கொண்டவன், வெளியே காதில் விழவில்லை என்பது போல, முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டாமல் நின்றிருந்தான்.

தனது கையில் உள்ள ரோலக்ஸ் வாட்சில் மணியைப் பார்த்தவன், தனக்குள் தலையாட்டிக் கொண்டு, மனோகருக்கு அழைத்தான்.

மனோகர் யார் என்றால், சத்யபிரகாஷோட நண்பன், அவனுடைய சகோதரியின் கணவர், அவனுடைய மனைவியின் அண்ணன், அத்தை மகன் என பல ரோல் அவனுக்கு…


" டேய் எங்கடா இருக்க? கெஸ்டெல்லாம் வர ஆரம்பிச்சுட்டாங்க." என்று கோபத்தை அடக்கிக் கொண்டு வினவினான் சத்யபிரகாஷ்.


" இதோ டென் மினிட்ஸ்ல உன்னோட இருப்பேன்." என்று உறுதிமொழி அளித்தான்.


"பங்சுவாலிட்டினா என்னன்னு தெரியாதா உனக்கு?" வழக்கம் போல, சத்யபிரகாஷிடமிருந்து கேள்வி வந்தது.


" எல்லாம் என் நேரம்…" என்று மனோகர் முனங்க.


" நானும் அதைத்தான் சொல்றேன். நேரம். டைம்… டைம் மேனேஜ்மெண்ட் எப்போதும் முக்கியம். ஆறுமணிக்கு இங்கே இருப்பேன் என்று சொன்ன? இன்னும் வரல?" என்று கண்டிப்புடன் வினவினான் சத்யபிரகாஷ்.


" சொல்லமாட்டீயா பின்னே? நம்ம குடும்பத்தை அழைச்சிட்டு வர பொறுப்பை என் கிட்ட விட்டுட்ட. ஒரு குடும்பமா இருந்தா பரவாயில்லை. ஒரு ஊரே குடும்பமா இருந்தா என்ன பண்ணுறது."


" ப்ச்… இதெல்லாம் ஒரு பேச்சா? நீ ஒரு சக்ஸஸான பிசினஸ்மேன் என்று வெளியே சொல்லிக்காத. எல்லாத்தையும் கால்குலேட் பண்ணி தான் கிளம்பியிருக்கணும். இங்கே இருக்குற திருவண்ணாமலையில் இருந்து வர்றதுக்கு இவ்வளவு அக்கப்போர். இப்போ எங்கே வர்ற?"


" அல்மோஸ்ட் ரீச்சாயிட்டோம் சத்யா. இன்னும் டென் மினிட்ஸ்ல அங்க இருப்போம்." என்றான் மனோகர்.


நேரில் இருந்தால் மனோகரை கும்மியிருப்பான் சத்யபிரகாஷ். அவன் பெயரை இப்படி சுருக்கிக் கூப்பிட்டால் பிடிக்காது. இப்போது கோபத்தை அடக்கிக் கொண்டு அமைதியாக இருக்க.


மனோகர் அவனை அமைதியாக இருக்கவிட்டால் தானே…


" கோபப்படாதே சத்யா. அதான் என் பொண்டாட்டிய முன்னாடியே அனுப்பிட்டேனே."


" முட்டாள்..‌. என் தங்கச்சியை தனியே அனுப்பினதும் இல்லாமல், அதைப் பெருமையா வேற சொல்லிக்குற… அம்மா, அப்பா, சித்தி, சித்தப்பா, அத்தைங்க, மாமங்க, புள்ளைங்க எல்லாரையும் அழைச்சிட்டு, தங்கச்சியோட இரண்டு நாள் முன்னாடி வாடாணா வேலை இருக்குன்னு தட்டி கழிச்சிட்டு, இப்போ அவளை தனியா அனுப்பி விட்டுருக்க." என்று பொறிய…


" அது நேற்று பௌர்ணமி. கடையில வேற கூட்டம் அதிகமாக இருந்தது. அதான் வரலை டா. காலைல சீக்கிரம் கிளம்புவோம் என்று பார்த்தால், பெருசுங்க லேட் பண்ணிடுச்சுங்க." என்று மெதுவான குரலில் மனோகர் கூற.


அந்தப் பக்கம் சத்யபிரகாஷ் மீண்டும் படபடவென்று பொரிய ஆரம்பித்தான்.

" நீ பெரிய பிசினஸ்மேன் என்று நிரூபிக்கிறடா." என்று பல்லை கடித்துக் கூறினான்.


"..... "


" முன்னாடியே சொல்லி தொலைக்கலாம்லடா… நான் வேற ஏற்பாடு பண்ணி இருப்பேனே." என்று மீண்டும் கடுப்பாக பேச.


" சரி விடுடா… எதுவா இருந்தாலும் நேர்ல பேசிக்கலாம். நான் கார் டிரைவிங்ல இருக்கேன்." என்று மனோகர் கூறினான்.


" உன்ன பெத்தாங்களா, இல்ல செஞ்சாங்களான்னே தெரியலை. கார் டிரைவிங் பண்ணிட்டு யாராவது ஃபோன் பேசுவாங்களா? ஃபூல்... . முதல்ல சீக்கிரம் வந்து சேரு.

நேர்ல இருக்கு உனக்கு கச்சேரி." என்று கத்தினான்.


" உன்னோட அரிய பெரும் சந்தேகத்தை நேர்ல உங்க அத்தைக்கிட்ட கேட்டுக்கோ உன் சந்தேகத்தை…பாய் டா."


' அடேய் தேர்ந்தெடுத்த வியாபாரி தான் டா நீ… அத்தை கிட்ட வேற கோர்த்து விடுற.' என்று மனதிற்குள் நினைத்து புன்னகைத்தான் சத்யபிரகாஷ்.



நேரில் வந்த பிறகு அவனைத் திட்டலாம் என்றால் அது முடியாது. அது அவனுக்கும் நல்லாத் தெரியும். தனது அன்னையும், சித்தியும் அப்படி ஒன்றும் மாப்பிள்ளையை திட்டுவதற்கு விட்டுவிட மாட்டார்கள். அந்த தைரியத்தில் தான் நேரில் பார்த்துக்கலாம் என்று கூறியிருக்கிறான். அதுவும் இல்லாமல் அத்தைக் கிட்ட போய் என்ன புள்ள வளர்த்திருக்கீங்க என்று கேட்டால் அவ்வளவு தான் என்னை வைக்க மாட்டார்கள். அதையெல்லாம் நினைத்து பார்த்தவன் முகத்தில் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.



அவர்களுடைய குடும்பத்தொழில் பாத்திர வியாபாரம். திருவண்ணாமலையில் நான்கு பெரிய கடைகள் இருக்கிறது.

பவுர்ணமியன்று கோயிலுக்கு அருகே உள்ள கடையில் கிரிவலம் வரும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அன்று அவனால் வர முடியாது என்பது இப்பொழுது புரிந்தது.

ஏற்கனவே தெரிந்திருந்தாலும் இங்கிருந்து யாரையாவது அனுப்பி கூட எல்லோரையும் வரவழைத்திருப்பான்.

சரி தான்… முடிந்த விஷயத்தை இதற்குப் பிறகு நினைத்துக் கொண்டிருப்பது நேர விரயம் என்று எண்ணியவன் மத்த ஏற்பாடுகளை தனது பி.ஏவை வைத்து கவனித்துக் கொண்டிருந்தவன், தனது சரிபாதிக்காக காத்திருந்தான்.


அந்த பக்கம் மனோகரோ , " அப்பாடா…" என்று பெருமூச்சு விட்டுக்கொண்டே ஃபோனை வைத்தான்.


சென்னை டிராஃபிக் கை சமாளித்துக் கொண்டு, கூகுள் மேப் மூலமாக அந்த ஹோட்டலை கண்டுபிடித்து வந்து கொண்டிருந்தான்.

********************************



மனோகரின் மனைவி மதியரசியோ, சுஜாதாவை தயார் செய்துக் கொண்டிருந்தாள்.


சுஜாதாவையோ, அங்கு கிண்டல் என்ற பெயரில் எல்லோரும் அவளை பாடாய் படுத்திக் கொண்டிருந்தனர். மணி வேற வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. தனது அண்ணனை நினைத்து

மதியரசிக்கோ பதற்றம் அதிகமானது.


கைகள் நடுங்க, கழுத்தில் நகைப் போட தடுமாறினாள்.


அதைப் பார்த்துக் கொண்டிருந்த சுனிதாவிற்கு சிரிப்பு வர, அதை தன் கையில் வாங்கியவள் சுஜாதாவின் கழுத்தில் போட்டு விட்டுக் கொண்டே, " சுஜா… உங்க நாத்தனார் ரொம்ப டென்ஷனா இருக்காங்க போலயே." என்று முணுமுணுத்தாள்.


" ஷ்… சும்மா இரு சுதா." என சுஜாதாவிடமிருந்து கண்டிப்புடன் வார்த்தைகள் வந்து விழுந்தது.


"ஹான்! அவங்களை வம்பிழுத்தால் உங்க ஹீரோவுக்கு கோபம் வருமோ…" என்று மீண்டும் காதில் கிசுகிசுத்தாள்.

அவளைப் பார்த்து முறைத்த சுஜாதா, வேற ஒன்றும் கூறாமல் கண்ணாடியில் தனது அலங்காரத்தைப் பார்த்தாள். அழகாக இருப்பதாகத் தோன்றியது.

மேக்கப் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. அவள் தான் வேண்டாம் என்று கூறிவிட்டாள்.

முகத்திற்கு லேசாக பவுடர் ஒற்றி, அவளது முகத்திற்கு எடுப்பான வட்ட பொட்டு வைத்திருந்தாள்.

உடம்பு முழுவதும் வேலைப்பாடுள்ள சில்க் சாரி கட்டி இருந்தவள், கழுத்திற்கு டெம்பிள் செட்டை போட்டு இருந்தாள். அதுவே அவளை பேரழகியாக காட்டியது.


மதியரசியோ இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை கவனிக்கவில்லை. கவனிக்கும் மனநிலையிலும் அவள் இல்லை. 'சுஜாதாவை நேரத்திற்கு அலங்காரம் செய்ய வேண்டும், தனது கணவர் சீக்கிரம் வர வேண்டும்.' இது இரண்டும் தான் அவள் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தது.


" சுஜா… நீ சூப்பரா இருக்க. இன்னைக்கு மாப்பிள்ளை சார் கண்ணு உன் மேல தான் இருக்கும். " என்று சுனிதா கிண்டல் செய்ய.


வழக்கம் போல சுஜாதா அவளைப் பார்த்து முறைத்தாள்.


" ஹலோ மேடம்… என்ன சும்மா, சும்மா முறைக்கிறீங்க. நான் சொல்றது உண்மைதான். வேணும்னா சந்தியா கிட்ட கேளுங்க." என்றவள், தனது அருகில் பதுமையாக இருந்த சந்தியாவையும் இழுத்து விட்டாள்.


" ஆமாம்." என தலையாட்டினாள் சந்தியா.


" நீயுமா…" என்பது போல ஆயாசமாக சுஜாதா பார்க்க.


" இப்பவாச்சும் ஒத்துக்குறீங்களா சுஜா? நீங்க ரொம்ப அழகு என்று… அதுவுமில்லாமல் மிஸ்டர் சத்யபிரகாஷ் உங்களுக்கு கொஞ்சம் கம்மிதான்." என்றுக் கூற.


" ஐயோ! விட்டுடுங்கடீ. என்னால முடியலை." என்று அழுதுவிடுபவள் போல சுஜாதா கூற.



இப்பொழுதுதான் மதியரசிக்கு சுற்றுப்புறமே ஞாபகம் வந்தது.

" அடியே எங்க அண்ணியை ஓவராத்தான் ஓட்டுறீங்க. இருங்க எங்க அண்ணன்ட்ட சொல்லுறேன்" என்றாள்.


" நீங்க சொன்னால், அவர் எங்களை ஏதாவது சொல்லிடுவாரா? "என்று கிண்டலாக புருவத்தை உயர்த்தினாள் சுனிதா.


சந்தியாவோ சிரித்து விட்டாள்.


" சந்து நீயுமா? நீ அமைதியான பொண்ணாச்சே." என்றாள் மதியரசி.


" இருந்தாலும் உண்மைன்னு ஒன்னு இருக்கே கோபால்…" என்று சுனிதா நீட்டி முழக்க.


" வாலு… " என்று அவள் தலையில் மெதுவாகக் கொட்டிய மதியரசி, " சீக்கிரமா அண்ணியை கூட்டிட்டு வாங்க." என்று விட்டு வெளியேற.


சந்தியாவும், சுனிதாவும் புன்னகைத்தனர்.


மதியரசி வெளியே சென்றதும், சுஜாதா அவர்கள் இருவரையும் முறைத்துக்கொண்டு," ஏன் டி இப்படி இருக்க? வாயை அடக்கவே மாட்டியா சுனிதா?" என்று வினவ.

" சுஜா… தப்பா புரிஞ்சுக்கீட்டீங்க‌.

உங்களுக்கு சப்போர்ட்டா தான் நான் பேசுனேன்." என.


" நான் உன்னை சப்போர்ட் செய்ய சொன்னேனா. பிரகாஷ் அப்புறம் ஏதாவது நினைச்சுக்க போறாரு.கொஞ்சம் அமைதியாக இருடி." என்றவள், தனது கையிலிருந்த ஃபோன் இசைக்க. தள்ளிச் சென்று நின்று பேசினார்.


" ம்… நல்லதுக்கே காலமில்லை." என்று சுனிதா ராகம் பாட.


" அவங்க ரெண்டு பேரும் எப்பவும் அப்படி தான்டி. ரெண்டு பேருமே ஒருத்தரை, ஒருத்தர் விட்டுக் கொடுக்க மாட்டாங்க. அதான் மிஸ்டர் சத்யபிரகாஷ் சாருக்கும் சுஜா ரொம்ப முக்கியம். அப்புறம் நீ ஏன் இடையில நுழையுற‌." என்று கண்களை உருட்டிக் கூறினாள் சந்தியா.


" ஓ… அப்படின்னு சொல்றியா. அவங்க ரெண்டு பேருக்கு இடையில் நான் போகிறேன். ரைட் அவங்க ரெண்டு பேரும் கேக் வெட்டும் போது, மிஸ்டர் சத்யபிரகாஷீடம் முதல் துண்டு கேக்கை நான் வாங்கிக் காண்பிக்கிறேன்." என்று கர்வமாக கூறினாள் சுனிதா.


" ஹேய் சுதா… இன்னைக்கு அவங்களுக்கான நாள். நீ எதுவும் பண்ணித் தொலைக்காதே. சுஜாவை வருத்தப்படவைக்க வேண்டாம்." என்றாள் சந்தியா.


" அப்போ மிஸ்டர் சத்யபிரகாஷுக்கு, நான் ரொம்ப முக்கியம்னு ஒத்துக்குறீயா?" என்று பெருமையாக வினவ.


" நீ மட்டும் முக்கியமானவள் கிடையாது. புரியுதா? என்னால சுஜா மனசை ஹர்ட் பண்ண முடியாது. நீயும் அப்படித்தான் இருக்க வேண்டும்." என்று சந்தியா சொல்ல.


" நோ! நான் நிரூபிச்சு காட்டுறேன்." என்றவள் திமிராக வெளியே சென்றாள்.


சந்தியாவோ என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றாள்.

அவள் அவ்வாறு நிற்க விடாமல் அவளது ஃபோன் அழைத்தது. விழா ஆரம்பித்து விட்டதாக…


" கடவுளே…" என்று கடவுளை துணைக்கு அழைத்தவள், விழா நடக்கும் இடத்திற்கு சென்றாள்.


அந்த நேரத்தில் தான் ஊரிலிருந்தும் எல்லாரும் வந்திருக்க… அந்த இடமே பரபரப்பாக இருந்தது.


அதுவரைக்கும் மெத்தனமாக இருந்த விழா, சுறுசுறுப்பாக… விழா இனிமையாக ஆரம்பமானது.


சுஜாதாவும், சத்யபிரகாஷ்ப்பிரகாஷும் அருகருகே நிற்க…

அவர்களின் முன்பு ஒரு பெரிய கேக் வீற்றிருந்தது.

மொத்த குடும்பமும் அவர்களுக்கு அருகே வந்து நிற்க.

கேக்கை இருவரும் வெட்டினர். சுற்றிலும் உள்ளவர்கள் கைத் தட்ட…

முதல் துண்டை எடுத்த சத்யபிரகாஷ், அருகில் இருக்கும் சுஜாதாவிற்கு ஊட்டுவதற்காக நீட்ட.

வெட்கத்துடன் சுஜாதா அவனைப் பார்த்தாள்.



அவர்கள் இருவருக்கும் நடுவில் வந்த சுனிதா, " ஃபர்ஸ்ட் எனக்குத் தான்." என்றாள்.


மொத்த குடும்பமும், வந்த விருந்தினர்களும் திகைக்க. சத்யபிரகாஷின் வதனத்திலோ புன்னகை மலர்ந்தது.



 
Top