• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 27

"நான் வேணா சொல்லவா?" என்ற குரலில் திரும்பி பார்க்க, அங்கே ராம் தான் நின்றிருந்தான்.

"ண்ணா! அது ஒரு லூசு ண்ணா.." என்றவன்,

"ஏய்! நீ போ!" என்றும் சொல்ல,

"அதான் எனக்கும் தெரியுமே!" என்ற ராமை புரியாமல் கீர்த்தி பார்க்க, சட்டென புரிந்து கொண்டான் கண்ணன்.

"ண்ணா! வேண்டாம்" தலையை இடவலமாய் அசைத்து, கைகளை அசைத்து என கண்ணன் கூற,

"நீ உன் போன்ல கூட லூசுன்னு தானே கீர்த்தி நம்பர் சேவ் பண்ணியிருக்க.. கீர்த்திக்கு தெரியாதா?" என்றான் விவரமாய்.

"எது?" என்று கீர்த்தி முறைத்தபடி கண்ணன் பக்கம் திரும்ப,

"நீ மாறிட்டனு தெரியும்.. ஆனா இவ்வளவு மாறி இருக்க வேணாம் டா அண்ணா" என்ற கண்ணன்,

"அடியை நாளைக்கு வாங்கிக்குறேன்.. இப்ப எஸ்கேப்" என்றபடி ஓடினான்.

"நாளைக்கு வந்துடாத" என்று கூறி தான் வழியனுப்பினாள் கீர்த்தி.

கண்ணன் சென்றதும் கீர்த்தியும் கோபமாய் உள்ளே செல்ல பார்க்க,

"பதில் வேண்டாமா?" என்றான் ராம்.

"என்ன பதில்?" கீர்த்தி கேட்க,

"கேள்வியே மறந்துட்டியா? அந்த அண்ணாமலை வீட்டுல என்ன நடந்துச்சுன்னு தெரிய வேண்டாமா?" என்ற பின் தான்,

'அய்யோ! இவன் எப்ப வந்தானோ? எதையெல்லாம் கேட்டானோ?' என்றிருந்தது கீர்த்திக்கு.

"இல்ல.. நாங்க சும்மா தான் பேசிட்டு இருந்தோம்.." என்றவள்,

"ஆமா நீங்க எப்ப வந்திங்க?" என்றாள் அவனிடமே! அதில் புன்னகை புரிந்தவன்,

"உன் அண்ணன் என்ன பெரிய இவனானு கேட்டியே அப்பவே வந்துட்டேன்" என்றான்.. அதை கூறும்போது இன்னுமே புன்னகை விரிந்தது ராமிற்கு.

"ஸ்ஸ்ஸ்ஸ்" என நாக்கை மடித்து தன் தலையிலேயே கொட்டிக் கொள்ள,

"பழைய காதலிய பார்த்தா கெத்தா நிற்கணுமா? எனக்கு அதெல்லாம் தெரியாது.. ஆனா எனக்கு மனைவியா வரப் போறவங்களுக்கு என்னை பத்தி எல்லாம் தெரியும்னு இப்ப தான் தெரியும்" என்றான். முகத்தில் இன்னும் அதே புன்னகையோடு.

'மனைவியா?' அவன் கூறிய சொற்களை மனதோடு நினைத்துப் பார்க்கும் போது வந்த உணர்வுகளுக்கு பெயர் தெரியவில்லை கீர்த்திக்கு.

"நானே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிருப்பேன்.. கண்ணாகிட்ட எப்படி கேட்குறதுன்னு தான் கேட்கல.." ராம் சொல்ல,

"என்ன?" புரியாமல் கீர்த்தி முழிக்க,

"இதுவும் நீ கேட்ட கேள்விக்கு பதில் தான்" என்றவன்,

"இப்ப ஃபீவர் பரவால்லயானு கேட்க தான் வந்தேன்.. நல்லாவே குணமாகிடுச்சி போல" என்றவன் குரலில் இருந்ததை கண்டுகொள்ள முடியவில்லை கீர்த்திக்கு.

"கீர்த்தி!" என்ற குரலில் இருவரும் திரும்ப, அங்கே சித்ரா வந்தார்.

வந்தவர் இருவரையும் மாறி மாறி ஆசையும் ஆர்வமுமாய் பார்க்க, அதில் சத்தமாய் சிரித்துவிட்டான் ராம்.

"ம்மா! ஃபீவர் எப்படி இருக்குன்னு தான் மா கேட்க வந்தேன்" சிரித்தபடியே ராம் சொல்ல,

"ஆங்.. கேளு கேளு.. நான் ரெண்டு நிமிஷம் அப்புறமா வரேன்" என்று நகரப் போக, கீர்த்திக்குமே அவர் பேச்சிலும் பார்வையிலும் ஒரு நிமிடம் முகம் சிவந்து போனது.

"ம்மா! நத்திங்.. நான் கிளம்பறேன்.. நீங்க பேசுங்க" என்ற ராம் இன்னுமே அடக்கிய புன்னகையோடு உள்ளே செல்ல,

"கஞ்சி ரெடி கீர்த்தி.. சாப்பிட தான் கூப்பிட வந்தேன்.. கொஞ்சம் லேட்டா வந்திருக்கலாம் போல.. சீக்கிரம் சரினு சொல்லிடு டா" என்று பேசியபடியே அவளுடன் உள்ளே செல்ல, எதுவும் பேசாமல் சாப்பிட அமர்ந்தாள் கீர்த்தி.

பாடல் ஒன்றை விசிலடித்தபடி ராம் தன் வீட்டிற்குள் வர, அவனுக்காகவே காத்திருந்தான் கண்ணன்.

"என்ன ண்ணா! செம்ம குஷி போல" கண்ணன் ராம் வந்ததும் கேட்க,

"அதெல்லாம் ஒன்னும் இல்ல டா" என்றவன் முகமே அவ்வளவு பிரகாசமாய்.

"ப்பா! லைட் எல்லாம் ஆஃப் பண்ணிடலாம் போல ண்ணா.. அதெப்படி என்னை மாட்டி விடணும்னா கரெக்ட்டா நம்ம பேமிலில எல்லாரும் ஆஜர் ஆகிடுறீங்க?" கண்ணன் கேட்க,

சிரித்தவன் "இதெல்லாம் உனக்கு புதுசா கண்ணா? அதான் அடிக்கடி அவகிட்ட வாங்குவியே?" என்றான் சிரிப்புடன்.

"இதெல்லாம் நல்லா நோட் பண்ணுவிங்களே" என்றவன்,

"ஆமா ஹாஸ்பிடல்ல என்ன நடந்துச்சு? நிஷா வந்ததா கீர்த்தி சொன்னா" என்றான் கண்ணன்.

"நிஷா எங்கே டா வந்தா?" என்றபடி அருகே வந்தார் தங்கராஜ்.

"ஒன்னும் இல்ல பா! ஹாஸ்பிடல்ல நிஷா வந்து அம்மாகிட்ட சாரி சொல்லிட்டு போனா அதை தான் சொல்லறான்" ராம் சொல்ல,

"ப்பா! உன் முகத்துல எந்த கோபமும் தெரில.. மன்னிச்சுட்டியா?" கண்ணன் ராமை கேட்க,

"மன்னிக்க அவங்க யாரு டா நமக்கு?" என்ற பதில் இன்னுமே ஆச்சர்யம் கண்ணனுக்கு.

"நீ கொஞ்சம் கொஞ்சமா ஷாக் குடு ண்ணா.. இவ்வளவு சாப்ட்டா பேசினினா அப்புறம் அம்மா என்னை எல்லாம் கண்டுக்கவே மாட்டாங்க.. அப்புறம் யாரை பத்தி என்கிட்ட புலம்புவாங்க சொல்லு?" கண்ணன் கிண்டல் செய்ய,

"எனக்கும் இதே சந்தேகம் தான் டா.. ராம் திருந்தினாலும் திருந்தினான்.. நான் தான் இப்ப அம்மா மாதிரி புலம்பிட்டு இருக்குறேன்" என்றார் தங்கராஜூம் கண்ணனுடன் சேர்ந்து.

"ப்பா! நீங்களுமா?" என்று சிரித்த ராம்,

"ஆனா இது கூட நல்லா தான் பா இருக்கு.." என்று சொல்ல,

"ஏன் இருக்காது.. ப்பா! இனிமேல் நாம தான் ஜாக்கிரதையா இருக்கணும் போல" என்றான் கண்ணனும்.

"சரி கீர்த்தி எப்படி இருக்கா?" தங்கராஜ் கேட்க, கண்ணனுக்கு முன்

"ஓஹ்! ரொம்ப நல்லாருக்காங்க மேடம்.. என்ன வாய் பேசுறா தெரியுமா?" என்றான் ராம்.

"ண்ணா! இவ்வளவு நாள் மௌன விரதம் இருந்தது நீ.. அவ எப்பவுமே இப்படி தான் பேசுவா.. ஸோ உனக்கு தான் இதெல்லாம் புதுஸு" கண்ணன் சொல்ல,

"மே பீ.. பட் ஐ லைக் இட்" என்று தோள்களை குலுக்கி ரசனையுடன் சொல்ல,

"ப்பா! ஹன்ட்ரேட் பெர்ஸன்ட் நம்பி இவனுக்கு கீர்த்தியை கல்யாணம் பண்ணி வைக்கலாம் பா.. ஹஸ்பண்ட் ஆகுற எல்லா க்வாலிட்டியும் வந்துடுச்சி" கண்ணன் கிண்டலாய் கூறினாலும் அது தான் உண்மை என்பதை போல தங்கராஜ் புன்னகை புரிய,

"உனக்கும் வாய் தான் டா" என்று கண்ணன் தோளில் தட்டிய ராம்,

"அம்மா இப்ப கீர்த்தியை என்ன பாடு படுத்துறாங்களோ" என்று கூறி கீழே நடந்ததை கூற, தங்கராஜ், கண்ணன் இருவருமே சிரித்துக் கொண்டிருந்தனர்.

தங்கராஜ் மனமும் தற்போது சமன்பட்டிருந்தது. ராம் முழுதாய் மாறி இருப்பதை கண்கூடாய் கண்டு கொண்டார்.

சித்ரா கீர்த்தியை வீட்டிற்குள் அனுப்பிவிட்டு மாடிக்கு சென்றிருக்க, கஞ்சியைப் பருக ஆரம்பித்திருந்தாள் கீர்த்தி.

"கேளு அப்பு" சைகையில் ஜெகன் அபர்ணாவிடம் கூற, கவனித்தும் கவனியாததைப் போல அமர்ந்திருந்தாள் கீர்த்தி.

"அக்கா! டேப்லெட் இருக்கா?" அப்பு கேட்க, சைகையில் டேப்லெட் இருக்கும் இடத்தை காண்பித்தாள் கீர்த்தி.

அதை எடுத்து வந்து பிரித்து கீர்த்தியிடம் அப்பு தர, ஜெகன் பார்த்துக் கொண்டிருந்தார்.

"அக்கா! மார்னிங் அத்தை வந்து அப்பாகிட்ட பேசினாங்களாம்.. வெள்ளிக் கிழமை நல்ல நாள்னு அப்பா நிச்சயம் வச்சுக்கலாமானு கேட்குறாங்க" என்றதும் கீர்த்தி தங்கையை நிமிர்ந்து பார்க்க,

"அத்தைகிட்ட எதுவும் பேசல.. உன்கிட்ட கேட்டுட்டு சொல்லலாம்னு அப்பா நினைக்குறாங்க" என்றாள்.

"நீ அவ்வளவு பெரிய பொண்ணாகிட்டியா அப்பு" கீர்த்தி கேட்க,

"பெரியவங்க பேசலைனா சின்னவங்க தானே பேசணும்" என்றாள் அப்புவும் விளையாட்டாய்.

"சொல்லு க்கா.. நம்ம ராம் அத்தான் தானே? நல்லா பார்த்துப்பாங்க.. நீயும் எங்களோடவே இருக்கலாம்" என்றாள் ஆசையாய் அப்பு.

ஜெகனும் கீர்த்தி என்ன சொல்வாளோ என அவளையே பார்த்தவாறு அமர்ந்திருக்க,

"நாளைக்கு பேசலாம் அப்பு.. ரொம்ப டையார்ட் இருக்கு" என்றவள் மாத்திரையை விழுங்கிவிட்டு அறைக்குள் சென்றுவிட்டாள்.

"என்னப்பா அக்கா இப்படி பன்றாங்க?" அபர்ணா கேட்க,

"விடு மா! அதான் சித்ரா பாத்துக்குறேன்னு சொன்னாளே! இருந்தாலும் இன்னைக்கு ராமும் கீர்த்தியும் கார்ல இருந்து ஒன்னா இரங்குறதை பார்த்ததும் ஒரு ஆசை.. அதான் உன்னை கேட்க சொன்னேன்.. சரி விடு அப்பு.. எல்லாம் நல்லபடியா தான் நடக்கும்.. அவளும் எல்லாத்தையும் ஏத்துக்கணுமே" என தனக்கு தானே ஆறுதலை அப்புவை வைத்துக் கொண்டு சொல்லி முடித்து எழுந்து கொண்டார் ஜெகன்.

"குட் நைட்! டேக் ரெஸ்ட்" என்ற குறுஞ்செய்தி வந்ததற்கான ஒலியில் மொபைலை எடுத்து பார்த்த கீர்த்திக்கு கடந்த இரண்டு நாட்கள் போலவே இன்றும் ஆச்சர்யம் தான்.

அனைவரையும் போல கீர்த்தியையும் ஆச்சர்யத்தின் உச்சியில் தான் வைத்திருந்தான் ராம்.

இதோ மூன்றாவது நாளாக இன்றும் குறுஞ்செய்திஅவனிடம் இருந்து. பதில் அனுப்பவில்லை என்றாலும் அனுப்பிக் கொண்டே இருக்கிறான் இரவு மட்டும்.

டேக் ரெஸ்ட் என்ற வார்த்தை மட்டும் இன்று ஸ்பெஷலாய் சேர்த்திருக்கிறான். அதெப்படி இப்படி ஒரு மாற்றம்.. அதுவும் இப்படி சில நாட்களில்? புரியவில்லை என்றாலும் சந்தேகம் இல்லை கீர்த்திக்கு.

இனி தினமும் திருமணம் பற்றிய கேள்வி யார் மூலமாவது வந்து கொண்டு தான் இருக்கும்..

என்ன பதில் சொல்வது என்ற கவலை இல்லை.. எப்படி சொல்வது என்று தான் யோசித்துக் கொண்டிருக்கிறாள்.

கண்ணனைத் தவிர யாரிடமும் இதை கூறிட முடியாது.. ஆனால் கண்ணன் மட்டுமே போதும்.. கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் ஓட்டி எடுப்பான்.

நினைத்தவள் பின், வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுடன் தூங்கிப் போனாள்.

அவளின் முடிவை இனி யாரும் கேட்க போவதே இல்லை என்பதை பாவம் அவள் அறியவில்லை.

இப்படி இவர்களை எல்லாம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியவனும் தன்னை நினைத்தே ஆச்சர்யம் கொண்டு விழித்திருக்கிறான் என்பது தான் அனைவரும் அறியாத இன்னொரு செய்தி.

கீர்த்திக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு மொபைலால் நெற்றியை தட்டிவிட்டுக் கொண்டிருந்த ராம் கீர்த்தியை தான் நினைத்துக் கொண்டிருந்தான்.

காலையில் கீர்த்தியை பார்த்துவிட்டு சென்றபோது எவ்வளவு இதமாய் உணர்ந்தானோ இப்போதும் கூட அதே இதம் தான் மனதில்.

'இது தான் காதலோ?' தனக்குள் கேட்டுக் கொண்டவன்,

'வேண்டாம்! இந்த உணர்வுக்கு பெயர் தேவை இல்லை' என்றும் நினைத்துக் கொண்டான்.

சட்டென்று கீர்த்தி கண்ணனிடம் கேட்ட கேள்வி ஞாபகம் வர,

'இந்த கண்ணா எல்லாம் கீர்த்திகிட்ட சொல்லிட்டு... அந்த பொலிடிசியன் வீட்ல நடந்ததை மட்டும் சொலலல போல..இருக்கட்டும் பேசிக்குறேன்" என்று நினைத்தபடி தூங்கிப் போனான்.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
466
கோவக்கரானாய் இருந்தவன்
அக்கறையாக இருப்பதும்
அலட்டல் இல்லாத பேச்சும்
காதலாய் பார்ப்பதும்
கலக்குர ராம்.....
கண்ணா பின்னா என்று
புலம்பும் கண்ணா 😂😂😂😂
குழப்பத்திலும் ஒரு தெளிவு
கீர்த்துக்கு..... 💐💐💐
 

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
கோவக்கரானாய் இருந்தவன்
அக்கறையாக இருப்பதும்
அலட்டல் இல்லாத பேச்சும்
காதலாய் பார்ப்பதும்
கலக்குர ராம்.....
கண்ணா பின்னா என்று
புலம்பும் கண்ணா 😂😂😂😂
குழப்பத்திலும் ஒரு தெளிவு
கீர்த்துக்கு..... 💐💐💐
நன்றி sis
 
Top