• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கார்கோள் கொண்ட குமரியாள் -05

MK18

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
41
41
18
Tamil nadu
குமரியாள்-05

ஒருவாரம் ஓடியிருந்தது...

வீட்டில் கீழே படுத்துக் கொண்டு கால்களை நீள்விருக்கையில் தூக்கிவைத்தபடி அகரயாழினியும், அவளருகே நீள்விருக்கையில் சாய்ந்தபடி கீழே சமுத்திராவும் அமர்ந்திருக்க,

“எரும எரும.. காலைத்தூக்கி அந்தரத்துல வச்சுக்கணுமா? ஒழுங்கா நீட்டிப் படு” என்று சாருமதி வந்து மகளைக் கடிந்தார்.

“ப்ச்.. இதான்மா நல்லா கம்ஃபர்டபிலா இருக்கு” என்று யாழினி கூற,

“எனக்குனு வந்து பிறந்துருக்குது பாரு” என்று திட்டியபடியே அவர்களுக்கு உணவு தயாரிக்கச் சென்றார்.

“சமு..” என்று யாழினி மெல்ல அழைக்க,

கையிலுள்ள புத்தகத்தைப் புரட்டியபடியே, “ம்ம்..” என்று சமுத்திரா குரல் கொடுத்தாள்.

“சமு..” என்று யாழினி மீண்டும் அழைக்க,

“என்னடி?” என்றாள்.

“சமூ..” என்று யாழினி மீண்டும் அழைக்க,

“ஏறி ஒரு மிதி மிதிச்சேன்னு வையி.. மறுபடியும் ப்யூஸ் புடுங்கிகிட்டு ஆஸ்பிடல்ல ஆக்டோபஸ் மாதிரி தான் படுத்து கிடப்ப.. என்னனு சொல்லித்தொல நாயே” என்று சமுத்திரா கூறினாள்.

“இன்னிக்கும் பாரி சார் என்னைப் பார்க்க வருவாரா?” என்று யாழினி கேட்க,

புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவள் மெல்ல தோழியைக் கண்டாள்.

“எதுக்கு வரணும்?” என்று சமு ஒற்றை புருவம் உயர்த்திக் கேட்க,

“சும்மாதான்” என்று சோம்பல் முறித்தாள்.

“ஏ சார் வந்துட்டாரு பாருடி. ஆயிசு நூறு” என்று சமு உற்சாகமாய் கூற,

“எங்க?” என்று அடித்துப் பிடித்து எழுந்தவள் அடக்கப்பட்ட சிரிப்போடு அவளைப் பார்க்கும் சமுத்திராவைக் கண்டு, அது பொய்யென்று புரிந்துகொண்டாள்.

அவள் தோள்களில் சுரீரென அடிகளை வைத்தவள், “விளையாடுறியா?” என்று கேட்க,

“சும்மாடி” என்று சிரித்தபடி கண்ணடித்தாள்.

அவளை ஏற இறங்கப் பார்த்துப் பெருமூச்சு விட்டவள், “ஆனா நான் விளையாடலை” என்று அவள் தோள் சாய,

“ஆஹாங்? என்ன விளையாடலை?” என்று சமு கேட்டாள்.

“எனக்கு.. அவர பிடிச்சிருக்குடி சமு..” என்று யாழினி கூற,

“எவர?” என வேண்டுமென்றே இழுத்துக் கேட்டாள்.

சிறு நாணத்துடன், “பாரி சாரை” என்று அவள் கூற,

சமுத்திராவுக்கு சிரிப்பு தான் வந்தது!

“நிஜமாவா? எப்போதுருந்து? எதனால?” என்று சமுத்திரா கேட்க,

“எதையும் பிடிக்காதுனு ஒத்துக்கத்தான்டி சமு காரணம் வேணும்.. பிடிக்கும் என்பதே காரணமே இல்லாம வர்றது தானே? காரணமே இல்லாம, கால நேரம் தெரியாம அவர்மேல ஒரு பிடித்தம்..” என்று கண்களில் கனவுகள் மின்ன ரசித்துக் கூறியவள், சமுத்திராவின் கண் பார்த்து, “இங்க புகுந்து என்னவோ பண்றார்டி” என்று நெஞ்சை நீவிக்கொண்டாள்.

லேசாய் புன்னகைத்த சமுத்திரா, “நீ காதல், கல்யாணம் பற்றிய பகுத்தறிவு இல்லாதவ இல்லை யாழினி. உனக்கான வயசும் பக்குவமான வயசு தான். வாழ்வை முடிவு செய்யும் விஷயம் என்பதால கனவுகள் கற்பனைகள் மட்டுமே இல்லாம நிதர்சனங்களையும் ஆராய்ஞ்சு அவருக்கு உன் நேசத்தை வெளிப்படுத்து” என்று கூற,

தோழியை அணைத்தபடி, “ம்ம்..” என்றாள்.

அன்று அவளுக்காக அவன் கண்களில் கண்ட தவிப்பே சமுத்திராவிற்து ஆடவன் மனம் உணர்த்தியிருந்தது தான்! என்றாலும் தோழியின் வாழ்வு, அவர்களாகப் பேசி ஒரு முடிவுக்கு வந்து கொள்ளட்டும் என்று நாகரீகமாய் நடந்துகொண்டாள்.

“அம்மாட்ட சொல்லப் போறியா?” என்று சமுத்திரா கேட்க,

“அய்யோ சமு.. அம்மாக்கு சொல்லணும்னா அவரோட டீடைல்ஸ்ல துவங்கி குடும்பத்து ஆட்கள் வரை நான் பட்டியலிடணும். லாயர்னு சொன்னா ‘எப்ப என்ன பிரச்சினை வருமோ? அதெல்லாம் வேணாம்’ அப்படினு சொல்லிடுவாங்க. கொஞ்சம் போகட்டும்.. அவரும் அடிக்கடி வந்து போக, அம்மாக்கு அவர்மேல ஒரு நல்ல அபிப்ராயம் வந்ததும் சொல்லிக்கலாம்” என்றாள்.

“நல்லா வெல் ப்ளான்டா (well planned) தான் இருக்க?” என்று கேட்ட சமுத்திரா சிரிக்க,

“பண்ற ஒரே ஒரு காதலையாவது உறுப்படியா பண்ணனும்ல சமு?” என்று கண்ணடித்தாள்.

“ஹான்?” என்று சிரித்தவள், “சார்கிட்ட எப்ப சொல்லப்போற?” என்று கேட்க,

“இன்னும் ரெண்டு நாள்ல ஜெர்மனில ஹியரிங்கு போறார் அவரு. போயிட்டு வெற்றியோட வருவாருதானே? அப்ப சொல்றேன்” என்று கனவுகள் மின்ன கூறினாள்.

ஆனால் அடுத்த வரமே வழக்கு ஒத்திவைக்கப்பட்ட செய்தியோடு வந்து சேர்ந்தவனைக் கண்டு கண்மண் தெரியாது, யாரிடம் காட்டவென்று புரியாத கோபம்தான் அகரயாழினியை ஆட்டுவித்தது!

“இப்ப என்னத்துக்குடி மூஞ்சிய தூக்கி வச்சுருக்க?” என்று கேட்ட சாரு,

“அவகிடக்குறாப்பா.. நீ வா. அன்னைக்கு பணியாரம் பிடிக்கும்னு சொன்னியேனு செஞ்சு வச்சிருக்கேன்” என்றார்.

யாழினியைப் பார்த்துவிட்டு லேசாய் சிரித்தவன் அவர் கொடுத்த பணியாரத்தை வாங்கி ரசித்து உண்டு, “வாவ்.. அட்டகாசமா இருக்குக்கா” என்று கூற, “எங்கண்ணன் மவனுக்கும் நான் செய்யும் பனியாரம் ரொம்ப பிடிக்கும்.. நீ பார்க்கக் கூட அவன போலவே இருக்க” என்று நெகிழ்வான குரலில் கூறினார்.

“அப்படியா?” என்று கேட்டவன் கண்களில் கள்ளத்தனத்தோடு, “அப்ப நான் உங்களை அத்தைனே கூப்பிடுறேனே” என்க, சமுத்திராவிற்கு குடித்துக் கொண்டிருந்த தேநீர் புறையேறியது.

கோபத்தில் இருந்த யாழினி கூட சட்டென அவனை நிமிர்ந்து பார்க்க,

அவன் கள்ளத்தனம் புரியாத சாருவோ, “அதுக்கென்னப்பா? தாராளமா கூப்பிடேன்” என்று மனமாரக் கூறினார்.

‘அட அம்மா..’ என்று மனதோடு கூறிக் கொண்ட யாழினியின் இதழ்கடையோரம் புன்னகை எட்டிப் பார்க்கத் துடித்தது! அதைக் கண்ட வேள்பாரி மனதோடு சிரித்துக் கொள்ள, இவர்களுக்கு இடையில் அமர்ந்திருந்த சமுத்திரா கன்னத்தில் கைவைத்து வேடிக்கைப் பார்த்தாள்.

“சமு..” என்று யாழினி அவள் காதோரம் கிசுகிசுக்க,

“புரிஞ்சுது அமைச்சரே.. இப்ப நீ லவ்ஸ் பண்ணனும்.. அதுக்கு நான் உன் அம்மாவை ஓட்டிகிட்டு உள்ள போகணும் அதானே?” என்று சமுத்திரா பதிலுக்கு அவள் காதோரமாய் பல்லைக் கடித்தாள்.

அதில் சிரிப்பை அடக்கப் பெரும்பாடுபட்ட அகரயாழினி, “இப்படி ஒன்ன சத்தியமா நான் யோசிக்கவே இல்லை தெரியுமா? நீயாதான் ஐடியா கொடுக்குற” என்று கூற,

“அடக்கடவுளே.. சொந்த செலவுல சூனியம் வச்சுகிட்டேனே” என்று முனகியவள்,

“அம்மா.. நீங்க வாங்க.. எனக்கும் பணியாரம் குடுங்க” என்று அவரை இழுத்துக் கொண்டு சென்றாள்.

வேள்பாரி இவற்றையெல்லாம் கண்டு மனதோடு சிரித்துக் கொள்ள,

அகரயாழினி பேச்சை எப்படித் துவங்குவது என்று தயங்கினாள்.

“சரி என்ன கோபம் மேடம்க்கு?” என்று அவளுக்கு சிரமம் இன்றி அவனே பேச்சைத் துவங்க,

“எதுக்கு சார் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது?” என்று கோபத்தோடு கேட்டாள்.

'அடடா.. ராங் குவஷ்டின கேட்டுட்டோம் போலயே?’ என்று எண்ணி சிரித்துக் கொண்டவன், “அகரா.. இது சாதாரண வாய்க்கால் வரப்பு தகராறு இல்லை. சட்டுனு முடிச்சுவிடுறதுக்கு. ரெண்டு பெரிய நாடுகளுக்கு இடையான பிரச்சினை. இதுல எடுத்தோம் கவிழ்த்தோம்னு முடிவு செய்து குடுத்துட முடியாதுமா” என்று நிதானமாய் பதில் தர,

“அவங்க அப்படி என்ன சொன்னாங்கனு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது?” என்று கேட்டாள்.

“ஹ்ம்.. அவங்க நான் சொன்ன போல, சாடிலைட் ஆதாரங்கள் எல்லாம் கொண்டு வந்து தந்தாங்க. என்னதான் சம்மந்தம் இருந்தாலும் இது இந்தியா கண்டுபிடிச்சதுதானேனு கேட்டதுக்கு எங்களுக்கு குமரிக்கண்டத்தை எடுத்த புகைப்படத்துக்காது உரிமம் கொடுங்கனு கேட்குறாங்க. பிரச்சினையை சுமுகமா முடிக்க நாமளும் படத்தை குடுக்கலாமேனு அங்க சிலர் நினைக்குறாங்க. ஆனா வீ ஹாவ் பாடென்ட் அன்ட் காபிரைட்ஸ் ஃபார் தட் (We have patent and copyright for that). புகைப்படத்தை உங்க அருங்காட்சியகத்தில் வைக்கணும்னா அதுக்கு நாங்க தரும் வரலாறு குறிப்பைதான் நீங்க வைக்கணும், அதுவுமில்லாம வருடா வருடம் எங்களுக்கு உரிமம் தொகை வழங்கணும்னு நாம கருத்து சொன்னோம். பொதுவா உனக்கே தெரியும் பேடென்ட் எடுத்து வைக்கும் ஒரு பொருளை வேற ஒருத்தர் பயன்படுத்தணும்னா பேடென்டீயோட லீகல் அஷ்ஷூரன்ஸ் அன்ட் அதுக்கான தொகையை செழுத்திட்டே இருக்கணும்னு. அதுபடி கேட்டதுக்கு மொத்தமா எங்களுக்கு வித்துடுங்க நாங்க முழு பணமா தரோம்னு சொல்றாங்க. மொத்தமா குடுத்துட்டா அவங்க அந்த புகைப்படத்துக்கு என்ன வரலாறு வைக்குறாங்களோ அதை நாம எதுவும் கேட்க முடியாது. முழுசா ஆஸ்திரேலியா சார்ந்த தகவல்களைத்தானே குடுப்பாங்க? இன்னும் சொல்லப்போனா மடகாஸ்கருக்கும் இந்தியாவுக்கும் இடையில் குமரியின் தொடர்பு இருந்ததுனு சொல்றதுக்குக் கூட நிறைய வரலாறு சார்ந்த ஆதாரங்கள் இருக்கு. ஆனா ஆஸ்திரேலியாவுக்கு அப்படி வரலாறுகள் இல்லை என்பதால அவங்க வரலாறுனு சம்மந்தபடுத்தும் விஷயத்தை நம்மால எதிர்க்க முடியாது. அதனால அப்படி மொத்தமா விற்க முடியாதுனு நம்ம பக்கம் வாதம் வந்தது. அதனால வழக்கை ஒத்தி வச்சிருக்காங்க” என்று வேள்பாரி நீண்ட விளக்கம் கொடுத்தான்.

“அநியாயம்பா ஆனா இதெல்லாம்” என்று அவள் அலுத்துக்கொள்ள,

“சொல்றது சுலபம் அகரா. அங்க அந்த இடத்தில் இருந்தாதான் புரியும். நம்மைவிட அங்க இரண்டுக்கும் நடுநிலையா இருப்பவங்களுக்கான அழுத்தம் ரொம்ப அதிகம். நடுநிலையா முடிவு எடுக்குறதுங்குறது அவ்வளவு சுலபம் இல்லை” என்று கூறினான்.

அதிருப்தியாக இருந்தாலும் கூட அவன் கூறும் கருத்து உண்மை என்பது புரிந்தது!

சில நிமிடங்கள் மௌனம் நீடிக்க, “எங்கம்மாவை அத்தைனு கூப்பிடுறீங்களாக்கும்?” என்று கேட்ட அகரயாழினியின் குரலில் என்ன உணர்விருந்ததென்று அவனுக்குப் புரியவில்லை.

“ஏன் கூப்பிடக் கூடாதா?” என்று வேள்பாரி கேட்க,

“நான் அப்படி சொல்லவே இல்லையே?” என்றவள், “அம்மாவை அத்தைனு கூப்பிடுறீங்கனா.. உங்க அப்பா எனக்கு மாமா தானே?” என்றாள்.

“ஆமா..” என்று அவன் தோள்களை உலுக்க, “அப்ப நீங்க எனக்கு மாமா பையன் தானே?” என்று கேட்டாள்.

அவள் கேட்க வருவது பிடிபட்டு இதழ் கடையோரம் துடித்த புன்னகையைக் கட்டுப்படுத்த அவன் பெரும்பாடுபட்ட போதும் அவன் கண்கள் காட்டிக் கொடுத்துவிட்டன.

“அப்படினா மொறைப் பையன் தானே?” என்று அவள் கேட்க,

அவளை ஒற்றைப் புருவம் உயர்த்திப் பார்த்தவன் பதில் கூறவில்லை.

அவன் மௌனம் கண்டு பெருமூச்சுவிட்டவள், “நான் நேரா விஷயத்துக்கு வரேன். எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. உங்களைக் கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசையா இருக்கு.. ஏன்? எப்படி? வந்த காதல்னுலாம் தெரியலை.. ஆனா..” என்று நிறுத்தினாள்.

அவன் கண்களில் துள்ளலோடு அவளைப் பார்க்க,

“முதல் சந்திப்புலயே இது துளிர் விட்டுடுச்சோன்னு ஒரு எண்ணம்.. ரெண்டாவது முறை பார்த்தப்ப சமு பெயரை மட்டும் நினைவு வச்சு சொன்னீங்க, ஆனா என்னை மறந்துட்டீங்க. அதுல உள்ளுக்குள்ள ஒருமாதிரி ஆயிடுச்சு. வருத்தமா.. ப்ச்.. எனக்கு அதெல்லாம் விளக்கத் தெரியலை. ஆனா உங்களை கல்யாணம் பண்ணிகிட்டா நம்ம வாழ்க்கை ரொம்ப அழகா இருக்கும்னு தோனுது..” என்று கூறினாள்.

அவனிடம் மௌனமே!

நிமிர்ந்து பார்த்தாள். அவன் கண்கள் ஆயிரம் கவி பேசின!

“உங்களுக்கும் என்னை பிடிக்கும் தானே?” என்று கேட்டவள் குரலில் தான் எத்தனை ஆசை? எத்தனை தவிப்பு?

அவள் விழிகளை ரசனையோடு ஏறிட்டான்.

கைகளைக் கட்டிக் கொண்டு அவள் புறமாய் ஒற்றை காலை நீள்விருக்கையில் மடித்துவைத்து, மற்றைய காலை தரையில் அழுத்தமாய் ஊன்றி அமர்ந்தவன்,

“என் பதிலைக் கேட்டுட்டு அதையும் நீயே சொல்ற? இப்பவே மனைவி அராஜகம் பண்றியா?” என்று கேட்டான்.

அந்த விநாடி! பாரியின் அகராவுக்குள் ஊற்றெடுத்த உணர்வுகளை விவரித்திடத்தான் இயலுமா?!

பனிக்கால பன்னீர் ரோஜா தோட்டத்தில் அமர்ந்து சந்தனம் பூசிக்கொள்வதைப் போன்ற குளுமை அவளிடம்!

“அப்ப பிடிச்சிருக்கு தானே?” என்று தானும் அவனைப் போல் திரும்பி அமர்ந்துகொண்டு அவள் ஆர்வமாய் கேட்க, அவளது இந்த சிறுபிள்ளை பாவத்தில் சிரித்துக் கொண்டான்.

கம்பீரமாய், தைரியமாய், உற்சாகமாய், கோபமாய் என அனைத்திலும் பக்குவத்தோடு தென்பட்டவள் தற்போது சிறுகுழந்தையைப் போன்று தென்பட்டாள். காதல் குழந்தைத்தனமானது தானே?

மறுநாள் நிச்சயம் பொம்மை வாங்கித் தருவேன் என்று கூறும் தந்தையிடம் சத்தியம் கேட்கும் குழந்தையின் பாவம் அவளிடம். ரசித்துப் பார்த்தான்.

“அழகாருக்க” என்று அவன் கூற,

“ஆஹாங்?” என்று கேட்டவள் கன்னங்கள் சிவப்பேறின.

“கியூட்” என்று அவள் கன்னம் தட்டியவன், “என்னைப் பற்றி என்ன தெரியும் உனக்கு?” என்று கேட்க,

அவனை மிதப்பாய் ஒரு பார்வை பார்த்தவள், “பெயர் வேள்பாரி. ஹை கோர்ட் ஜட்ஜ். அப்பா சங்கரநாராயணன் நடுவணரசு தலைமை வழக்கறிஞர். அம்மா ராஜலட்சுமி, இரண்டு அண்ணன்கள். மூத்தவர் தொழிலதிபன், பெயர் செழிலன், மனைவி கல்லூரி பேராசிரியை குந்தவை. இரண்டாமவர் மருத்துவர், கவியழகன், மனைவி தானும் மருத்துவச்சி ஆதிரை. உங்க மூத்த அண்ணி இப்ப சமீபமா பிரெக்னென்ட் வேற ஆயிருக்காங்க. இதுபோதுமா? இல்ல உங்க ஃபோன் நம்பர், உங்க அப்பா அம்மா நம்பர், வீட்டு அட்ரஸ், தோட்டக்காரர் முத்துவேல், சமையலுக்கு உதவும் செம்பியன் பாட்டி, உங்களுக்கு ஸ்கூல் படிக்கும்போது கூட படிக்குற பெண்ணு மேல வந்த கிரஷ், அதுக்கு வீட்டில் வாங்கின அடினு இந்த விவரங்களும் வேணுமா?” என்று கேட்டாள்.

அவளை விழிகள் விரிய பார்த்தவன் பார்வையில் அதிர்ச்சி மட்டுமே!

“ஹே ஹே ஹே.. இதெல்லாம் உனக்கு யாரு சொன்னா?” என்று வேள்பாரி கேட்க,

அவன் பதட்டம் கண்டு அவளிடம் அப்படியொரு சிரிப்பு!

அவள் வாயை தன் கைகொண்டு மூடியவன், “அத்தை வந்துடப் போறாங்க” என்று கூற,

அவனை ஒற்றைப் புருவம் உயர்த்திப் பார்த்தவள் சிரிப்பைக் கட்டுப்படுத்தினாள்.

“எப்படி தெரியும் உனக்கு?” என்றவன் முகத்தில் தான் எத்தனைக் கூச்சம்?

அவன் கரத்தை எடுத்தவள், “யாரது அந்த பொண்ணு? பயங்கரமா அடி வாங்கிட்டீங்களோ?” என்று நக்கலாக அவள் கேட்டாள்.

அவன் முகத்தில் அப்பட்டமான வெட்கம்!

ஆண்கள் வெட்கப்படும் அழகே தனி என்று கேட்டு வந்தவள் கண்களுக்கு அவன் விருந்தாய்!

'அச்சோ.. சோ கியூட்’ என்று மனதோடு கூறிக் கொண்டவள், “உங்க சைல்ட்வுட் ஃப்ரெண்டு.. அன்ட் இரண்டாம் அண்ணி” என்று கூற,

“நினைச்சேன்” என்றான்.

“போய் திட்டிடாதீங்க.. பாவம்.. உங்க ஆன்லைன் போஸ்ட்ல அத்தனை வருஷ ஃப்ரெண்டுனு பிறந்தநாள் வாழ்த்து போட்டிருந்ததைப் பார்த்து தான் அவங்கட்ட போனேன். உங்க அண்ணினு தெரிஞ்சதும் குடும்ப வரலாறு, உங்க வரலாறுனு எல்லாம் கரந்துட்டேன்” என்று கூறி யாழினி கண்ணடிக்க,

“வாலு..” என்றான்.

தோள்களை உலுக்கியவள், “அம்மா அப்பாக்கு லவ் மேரே‌ஜ். அம்மா மலைவாழ் குடியை சேர்ந்தவங்க. ஒரு முகாமில் சந்திச்சு வந்த காதல். அம்மாவோட காதலை அவங்க குடும்பம் ஏத்துக்கவே இல்லை. அப்பா இறந்தபிறகும் அம்மா யார்கிட்டயும் போய் நிக்கக் கூடாதுனு அவங்க பேரில் ஆரம்பத்திலிருந்தே நிறைய சொத்தும், நண்பர்களா சில சொந்தங்களும் கொடுத்துட்டு தான் போய் சேர்ந்தார். அப்பாவை நினைவு அறியும் வயசில் இழந்துட்டேன்.. ஆனா அவரோட தைரியம் எனக்கு போதுமானதா இருந்தது. அம்மா ரொம்ப வெகுளி. சட்டுனு எல்லாரையும் நம்பிடுவாங்க. ஆனா பயமும் இருக்கும், பாசம் ரொம்ப அதிகம். அவங்களுக்காகவே என்னை ரொம்ப மெசூர்டான பொண்ணா செதுக்கினேன். அது கொடுத்த பாதையில் இதோ இந்த நிலைக்கும் வந்துட்டோம்” என்று பெருமைபட தன்னைப் பற்றி கூறி முடிக்க, அவனிடம் அழகான புன்னகை.

“என்ன சிரிப்பு?” என்று யாழினி கேட்க,

“அப்ப அகராவோட குழந்தைத்தனம் முழுசும் எனக்கே எனக்குதானே சொந்தம்?” என்று கேட்டு கண்ணடித்தான்.

நாணப்பூப் பூக்க புன்னகைத்தவள், “உங்களுக்கு மட்டுமே தான்” என்று அவன் எதிர்ப்பார்க்கும் முன் அவனை தாவி இறுக அணைத்துவிட்டு எழுந்து உள்ளே ஓடினாள்.

அவள் அணைப்பு கொடுத்த அதிர்விலிருந்து மீண்டவனுக்கு, அதன் தித்திப்பை மெல்ல ருசிக்கும் உணர்வு! காதல் இத்தனை தித்திப்பா? என்று அவன் யோசிக்க,

“இந்தமுறை வீட்டில் அடி வாங்கிடாம இருக்க தற்காத்துக்கோங்க” என்று அவளிடமிருந்து குறுந்தகவல் வந்து,
அவனை மிக அழகாய் சிரிக்க வைத்தது!


பூவியோடு சண்டையிட்டு மூழ்கினாள்,


கார்கோள் கொண்ட குமரியாள்;

இக்காதலனோடு கோபித்து
மூழ்கடிக்கின்றாள்,


என் அகத்தைக் கொள்ளையிட்டக் குமரியாள்!

-தொடரும்...

அத்தியாயம்-06

 
Last edited:

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
180
43
Tirupur
அகரா ❤️ பாரி ரொமான்டிக் மொமன்ட்ஸ் அழகு 😍

தகவல்களுக்கும் பஞ்சமில்லாத எபி 🤩

அருமை❤️

அடுத்த எபிக்காக வெயிட்டிங் 😍
 
  • Love
Reactions: MK18

MK18

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
41
41
18
Tamil nadu
அகரா ❤️ பாரி ரொமான்டிக் மொமன்ட்ஸ் அழகு 😍

தகவல்களுக்கும் பஞ்சமில்லாத எபி 🤩

அருமை❤️

அடுத்த எபிக்காக வெயிட்டிங் 😍
😍😍😍😍

Thank you so so much sis 💝 it means a lot🤗
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
ஆத்தி ஆத்தி ஆத்தி என்னா வேகம் என்ன வேகம் இந்த அகரா பொண்ணுக்கு 😄😄😄😄😄😄😄வேள்பாரி நினைச்சுக்கூட பார்க்காதா செயல் அகராவோடது 😍😍😍😍😍😍
 
  • Love
Reactions: MK18

MK18

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
41
41
18
Tamil nadu
ஆத்தி ஆத்தி ஆத்தி என்னா வேகம் என்ன வேகம் இந்த அகரா பொண்ணுக்கு 😄😄😄😄😄😄😄வேள்பாரி நினைச்சுக்கூட பார்க்காதா செயல் அகராவோடது 😍😍😍😍😍😍
ஹாஹா🤭🤭🤭 ஆமா சிஸ் 🥰 மிக்க நன்றி சிஸ் 🥰😍❤️