• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Sailajaa sundhar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jun 13, 2024
Messages
34
காற்று - 02

“மார்னிங்க் நானே வந்துடுறேன் ஆன்ட்.. நீ வீட்டுக்கு கிளம்பு..” என நண்பனிடம் கூறி அவனது முகத்தில் தெரிந்த கோபத்தைப் பார்த்து, “அட்ஜஸ்ட் பண்ணிப்பேன்டா, மாமாவுக்காக எல்லாத்தையும் அட்ஜஸ்ட் பண்ணிப்பேன் ப்ளீஸ், அப்புறம் ஆராக்கா அவளுக்கு நான் மட்டும்தானே இருக்கேன். அவளுக்கு என்கூட இருக்கனும்.” என மூச்சுக்கு ஏங்கி, வந்த அழுகையை அடக்கி “எனக்கும்.. எனக்குமே அவகூட இருக்கனும் ஆன்ட்” என்றுத் திக்கித் திணறி கூறிவிட்டு “பார்த்துக்குவேன்டா.. நீ கிளம்பு” என தங்கள் காரில் ஏறிவிட்டாள்.

“ஃபர்ஸ்ட் இப்படி அழறதை நிறுத்து ஆதி. எதுக்கு அழனும். உன்மேல ஒரு தப்பும் இல்ல. முதல்ல அதை உன் மண்டைல ஏத்து.” எனக் கடித்தவன், “மார்னிங்க் நானே வந்து பிக்கப் பண்ணிக்கிறேன், ஷார்ப் 8.30 ஓகேதானே. நம்ம வீட்டுக்கு வந்து டிஃபன் சாப்பிட்டு ஹாஸ்பிடல் போகலாம்..” என அவள் மறுக்க முடியாதபடி பேசி விடை கொடுத்தான் ஆன்டர்ஷன்.

காரில் ஆராதனாவுடன் அமர்ந்தவள், அவளின் கையை இறுக்கப் பிடித்தபடி தோளில் சாய்ந்து கொண்டாள். கண்கள் மூடியிருந்தாலும் விழிநீர் அதன்பாட்டுக்கு வழிந்து கொண்டிருந்தது.

ஆராவிற்கும் கிட்டத்தட்ட இதே நிலைதானே. ஆதிரா இங்கு வந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. யார் அழைத்தும் வரவில்லை. வரப்பிடிக்கவில்லை. தாய் தந்தை இல்லையென்றால் அந்த குழந்தைகளின் நிலை, அதிலும் பெண்பிள்ளைகளின் நிலை என்ன என்று அவர்களின் பெற்றோர் இறந்த சில மாதங்களிலேயே கண்டு கொண்டாள் ஆதிரா.

தென்காசியில் ஒரு திருமணத்திற்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது ஆதிராவின் பெற்றோர் பாஸ்கரும் அகிலாவும் ஒரு ஆக்சிடென்டில் சம்பவ இடத்திலேயே இறந்துவிட, வயிற்றில் குழந்தையுடன் பெரிதான காயங்களுடன் உயிர் தப்பி இருந்தாள் ஆராதனா.

அதன் பிறகான நாட்கள் அனைத்தும் அவர்கள் வாழ்க்கையின் கருப்பு பக்கங்கள். என்றுமே அதை நினைத்துக்கூடப் பார்க்க விரும்பவில்லை ஆதிரா. தமக்கையின் கையை மேலும் மேலும் இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.

கார் சிட்டியைத் தாண்டி அவுட்டர் வந்ததுமே, பக்கத்தில் இருந்த ஒரு கையேந்திபவனில் நிறுத்தியிருந்தான் அமரன். இருவரும் அதில் கேள்வியாய் நிமிர, “ஆரா முதல்ல வா சாப்பிடலாம். வீட்டுக்கு போனதும் பால் மட்டும் குடிச்சா போதும். இவ்வளவு நேரம் நீ சாப்பிடாம இருந்ததே தப்பு..” என மனைவியின் கையைப் பிடித்து இறங்க உதவி செய்ய, ஆதிராவும் எதுவும் பேசாமல் அமைதியாக இறங்கிக் கொண்டாள்.

அவளிடமிருந்து மிகப்பெரிய வாக்குவாதத்தை எதிர்பார்த்து காத்திருந்த அமரன், புருவத்தை உயர்த்தி ஒருமுறை அவளைப் பார்த்ததோடு சரி, உணவை ஆர்டர் கொடுக்க சென்று விட்டான்.

“ஏன் ஆராக்கா இப்படி இருக்க, இவ்வளவு நேரம் ஏன் சாப்பிடாம இருக்க.. குழந்தையைப் பத்தி யோசிக்கவே மாட்டியா.?” எனத் தன் அக்காவை திட்டிக் கொண்டிருந்தாலும், கண்கள் அவள் உடலை மேலிருந்து கீழ் ஒரு முறை பார்வையால் அலசியது.

“அதெல்லாம் சாப்பிட்டேன் ஆதிம்மா, அப்படி சொன்னாத்தான் நீயும் சாப்பிடுவன்னு அத்தான் என்னை காரணம் சொல்றார். அதை விடு நீ எப்படி இருக்க.? ஏன் இப்படி மெலிஞ்சிட்ட.? என்னைக் கூட பார்க்க வர முடியலதானே உனக்கு..” என தங்கையின் கையைப் பிடித்தபடி ஏக்கமாக கேட்க,

“அக்கா… நான் எப்படி இங்க வருவேன்? அதுவும் அந்த வீட்டுக்கு? என்னால எப்படி முடியும். முடியாதுக்கா.? எப்பவுமே என்னால அங்க இருக்க முடியாதுக்கா.?” என்றவள் அழுகையை அடக்கியபடி, வேகமாக முகத்தை துடைத்துக் கொண்டாள்.

“நீ இல்லாம எனக்கு மட்டும் என்னடா இருக்கு. உனக்கு நான் வேண்டாம்னே முடிவு பண்ணிட்டியா ஆதிம்மா.. பெத்தவங்களும் இல்லாம, நீயும் இல்லாம நான் தனியா எவ்வளவு கஷ்டப்பட்டுருப்பேன்னு உனக்குத் தெரியுமா..? அன்னைக்கே அவங்க கூடவே நானும் போயிருந்தா எனக்கும் இவ்வளவு கஷ்டம் இல்லைதானே..” என முடிக்கும் முன், “அக்கா..” என்ற சத்தமும், “ஆராதனா..” என்ற அதட்டலும் ஒருங்கே வந்து விழுந்தது.

அவர்களின் சத்தத்தில் நிமிர்ந்தவள் “எதுக்கு.. எதுக்கு இப்படி கத்துறீங்க ரெண்டு பேரும். உண்மையைத்தானே சொன்னேன். நானும் அவங்களோடவே போயிருந்தா இவ்வளவு கஷ்டம் இருந்திருக்காதுதானே.” என பதிலுக்கு ஆராதானாவும் கத்திவிட, மற்ற இருவரும் சட்டென்று அமைதியாகிவிட்டனர்.

அந்த கனத்தை, அந்த சூழலை எப்படி கடக்க என இருவருக்குமே தெரியவில்லை. மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்க ஆராதானா தேம்பிக்கொண்டே இருந்தாள். ஆதிராவும் அழுகையை அடக்கிக்கொண்டே நிற்க, அமரன்தான் இருவரையும் சமாதானம் செய்ய வேண்டியாதாகிப் போனது.

“வாங்க முதல்ல சாப்பிடலாம், ஃபுட் வந்துடுச்சு. அம்மு வேற ரொம்ப நேரம் தனியா இருக்கமாட்டா. பிரகாஷ் மாமாவால அவளை சமாளிக்க முடியாது. ஆதி அந்த வாட்டர் பாட்டிலை எடுத்து ஆராவுக்கு கொடு..” என அடுத்தடுத்து வேலை சொல்லி, அந்த சூழலை மாற்றி, இருவரையும் சாப்பிட வைத்து அவனும் பெயருக்கு கொறித்து என ஒருவழியாக பெண்களை வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்தான் அமரன்.

மூன்றாண்டுகளுக்கு முன் இருந்த வீடு இல்லை இது. முன்னமே பெரிய வீடுதான். இப்போது இன்னும் பெரிதாக இருந்தது. சொத்தை மூன்று பங்காக பிரித்த பெரியவர், வீட்டை மட்டும் பிரிக்கவே இல்லை. அவர்கள் இருவரும் இருக்கும் வரைக்கும் வீடு பெரியவர்களோடதுதான். அதன் பிறகு ஆதிராவிற்கும் அவளுக்கு வரப்போகிற கணவனுக்கும் என்று முடித்துவிட, அப்போது ஆரம்பித்தது பிரச்சினை.

எந்த வீட்டை தன் உலகம் என்று நினைத்தாளோ அந்த வீட்டையே வெறுத்து ஒதுக்குவாள் என கனவிலும் நினைத்தது இல்லை ஆதிரா.

எதையும் கவனத்தில் கொள்ளாமல், தடதடக்கும் மனதுடன் வீட்டுக்குள் வந்தவளை “ஆதிம்மா” என்ற ஒரு குரல் கரகரப்பாக அழைக்க, பார்க்காமலே யாரென்று புரிந்து போனது. அவளது தாத்தா.!

அந்தக் குரலில் பெண்ணின் உடல் ஒரு நொடி துடித்து அடங்கியது. உள்ளுக்குள் பொங்கும் உணர்வுகளை வெளிக்காட்டாமல் அவரை நிமிர்ந்து பார்த்தாலும், கலங்கியக் கண்களையும், அழுகையில் துடித்த இதழ்களையும் மறைக்க முடியவில்லை அவளால்.

ஆராவின் கரங்களை விட்டவள், தாத்தாவின் அருகில் வர, “ஏய் ஆதிக்குட்டி எப்படிடா இருக்க..?” என பிரகாஷ் வேகமாக வந்து அவளை அனைத்துக் கொண்டார்.

“எப்படி இருக்க குட்டிம்மா.? ஏன்டா இளைச்சுப் போயிட்ட.? சரியா சாப்பிடுறது இல்லையா.?” என கேள்விகளை வரிசைக்கட்ட,

அனைப்பில் இருந்தவள் அதுவரை அடக்கியிருந்த அழுகையை, அவர் தோளில் சாய்ந்து கதற ஆரம்பித்தாள்.

“ஆதிம்மா என்ன என்னம்மா.? என்னாச்சு.? ஹாஸ்பிடல் போனியா.? அங்க யாரும் உன்னை எதுவும் சொல்லிட்டாங்களா.? தர்ஷியா.?” என மகளைப்பற்றி சரியாக கணித்து கேட்க, அப்போதும் அழுகைதான் பெண்ணவளுக்கு.

“வேற யார் இதெல்லாம் செய்யப்போறா.? ஒன்னு அந்த வீணாபோன தர்ஷினி, இன்னொன்னு வெரப்பா சுத்திட்டு இருப்பாங்களே, நானும் போலிஸ்தான்னு உங்க மருமகன் அவரா இருக்கும்.” என இவர்களுக்கு இடையில் வந்தான் பிரகாஷின் மகன் தர்ஷன்.

“ஆதி.. போதும் முதல்ல அழுகையை நிறுத்து. சும்மா அழுதுட்டே இருந்தா நடந்தது எல்லாம் சரியாகிடுமா.? நீ எதுக்கு இப்போ இவ்ளோ எமோஷன் ஆகிட்டு இருக்க. உன்னோட எமோஷன்சுக்கும், ஃபீலிங்குசுக்கும் தகுதியான ஆட்களே இங்க யாரும் கிடையாது. நீ வா முதல்ல..” என அங்கிருந்த யாரையும் கண்டுகொள்ளாமல் அவளை அழைத்துக்கொண்டு மேலேறிவிட்டான் தர்ஷன்.

“தர்ஷு.. விடு நான் அக்கா கூட இருக்கேன்..” என தம்பியின் பிடியிலிருந்து கையை உருவ முயன்றவளை முறைத்தவன், “அக்கா இங்கதான் இருப்பாங்க, அவங்க இல்லைன்னா மாமாவுக்கு தூக்கம் வராது. நீ போய் அவங்களுக்கு டிஸ்டர்பா இருக்க போறீயா.? சும்மா பெனத்தாம வா..?” என மேலும் இழுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

“அட மகாராணியம்மா ஒருவழியா வீட்டுக்கு வந்துட்டாங்க போலயே..” என நக்கல் குரல் காதில் விழ, தம்பியின் பின்னோடு நடக்க ஆரம்பித்த ஆதிரா அப்படியே நின்றுவிட்டாள்.

முகம் அவமானத்தில் சிவந்துவிட்டது, அழுகையும் இயலாமையும் சேர, கால்கள் இரண்டும் பின்னிக்கொண்டது.

“டேய் இப்போ வாய மூடுறியா இல்லையா.? ஆரம்பத்துல இருந்து உங்கிட்ட சொல்லிட்டே இருக்கேன், அவளை அவ இஷ்டத்துக்கு விட்டுடுன்னு, கேட்கமாட்டியா.? உன்னாலத்தான் எல்லா பிரச்சினையும்..” என அமரன் அனேகனிடம் பாய, அதையெல்லாம் காதிலே வாங்காமல் ஆதிராவின் அருகில் வேகமாக வந்து நின்றான் அனேகன்.

அவன் வந்த வேகத்தைப் பார்த்த தர்ஷன், எங்கே அடித்து விடுவானோ என்ற பயத்தில் தமக்கையை தனக்கு பின்னே கொண்டு வந்து நெஞ்சை நிமிர்த்தி முறைத்துப் பார்த்தான்.

“அட பாடிகார்டெல்லாம் பயங்கரமா செட் பண்ணி வச்சிருக்கீங்க போலயே டாக்டரம்மா.?” என இருவரையும் மேலும் கீழும் பார்த்துவிட்டு நக்கலாக சிரிக்க,

“அவ என்னோட அக்கா.. அவளுக்கு நான் பாடிகார்ட்தான். உங்க தங்கச்சி அந்த மூக்கொழுகிக்கு நீங்க ரெண்டு பாடிகார்ட்னா நான் என் அக்காவுங்களுக்கு பாடிகார்ட். ஒன் மேன் ஆர்மி ஓக்கே..” என அவனும் அதே நக்கலுடன் பதில் கொடுக்க, “ம்ச் தர்சு சும்மா இரு..” என ஆராதனா தம்பியை அடக்க,

“நீங்க ஏன் இன்னும் தூங்காம இருக்கீங்க, போங்க போய் ரெஸ்ட் எடுங்க. பாப்பா என்கூட இருக்கா, அப்புறம் கொண்டு வந்து விடறேன். அமரத்தான் அழைச்சுட்டு போங்க..” என இருவரையும் விரட்டியவன், தனக்கு முன்னே நின்று நக்கலாக பார்த்துக் கொண்டிருந்த அனேகனை எரிச்சலாகப் பார்த்தான்.

“ஆர்டர் எல்லாம் போடுறீங்களே சார், அதுக்குள்ள பெரிய மனுஷன் ஆகிட்டீங்க போல..” என அந்த நக்கல் குரல் கொஞ்சமும் முறையாமல் சீண்ட,

“தப்பை தட்டிக் கேட்க பெரியாளா இருக்கனும்னு எந்த அவசியமும் இல்லை. இப்போ உங்களுக்கு எதுவும் பேசனும்னா சீக்கிரம் பேசி அனுப்புங்க. அவளுக்கு ரெஸ்ட் எடுக்கனும்..” என ஆதிராவை மனதில் வைத்து கடுப்பாக சொல்ல,

“அடேங்கப்பா.. ரொம்ப பெரிய தப்புதான்.” அதிசயிப்பது போல் கிண்டலடித்தவன், “எப்போ கிளம்புறாளாம் உங்க சொக்கா..” என்றான் தன் கூரிய பார்வையை ஆதிராவின் மேல் வைத்து.

“டேய் பேராண்டி என்னடா இது..” என தாத்தா அதிர்ச்சியாக கேட்க,

“ஏகா என்ன இது..” என பிரகாஷும் அதட்ட,

“டேய் வாயை மூடிட்டு கிளம்பு..” என அமரனும் கத்த,

“அவ ஏன் போகனும். அவ போகமாட்டா. இது அவளோட வீடு. இது அவளுக்குத்தான் சொந்தம். நீங்க போங்க..” என அடங்காத காளையாக தர்ஷன் எகிற,

“ம்ச்ச் தர்ஷ்..” எனத் தம்பியின் கையைப் பிடித்து அடக்கியவள், “சர்ஜரி முடியவும் கிளம்பிடுவேன்..” என தன் மரத்தக் குரலில் பொதுவாக சொல்லிவிட்டு நடந்துவிட்டாள்.

அவளது முதுகை வெறித்துப் பார்த்தவன், சிறு முகச்சுழிப்புடன் “ரொம்ப சந்தோசம்..” என எகத்தாளமாகச் சொல்லிவிட்டு, வந்த வேலை முடிந்தது என்பது போல, தோளைக் குழுக்கிவிட்டு நின்றிருந்த யாரையும் கண்டுகொள்ளாமல் வெளியில் சென்றுவிட்டான் அனேகன்.

இதில் ஆரம்பத்தில் இருந்து நடந்த அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த ஆராதனா, “ஏன் தாத்தா நீங்க எதுக்கு அவளை வரச்சொன்னீங்க. அங்கதான் அவ நிம்மதியா இருந்தாலே அதுவும் உங்களுக்கு பொறுக்கலையா? ஏன் இப்படி எல்லாரும் அவளை டார்ச்சர் பன்றீங்க.” எனக் கத்த, “அம்மாடி நான்..” என தளர்ந்து அருகில் இருந்த மகனின் கையைப் பிடித்துக்கொண்டார்.

“ஆரா உனக்கு என்ன பைத்தியமா? தாத்தா எது செஞ்சாலும் சரியாத்தான் இருக்கும். நீ ரூமுக்கு போ.” என மனைவியை அதட்ட,

“திட்டுங்க, பேசுங்க என்ன வேனும்னாலும் பண்ணுங்க. கேட்க யார் இருக்கா.? எங்களுக்கு யார் இருக்கா.? எங்கள பெத்தவங்க இருந்திருந்தா இப்படியெல்லாம் யாரும் நடந்திருப்பாங்களா..? அன்னைக்கு வீட்டை விட்டு போன்னு உங்க தம்பி சொல்லும் போது எல்லாரும் பார்த்துட்டு தானே இருந்தீங்க.? இப்போ மட்டும் என்ன நல்லது கெட்டதுனு பேசிட்டு இருக்கீங்க. அவ வாழ்க்கையை அவளே முடிவு பண்ணட்டும். யாரும் எதுவும் அவளுக்கு நல்லது பன்றதா நினைச்சு, உங்க குற்றவுணர்ச்சிக்கு வடிகால் தேடிக்க வேண்டாம்.” என ஆத்திரமாக கத்திவிட்டு ஆதிராவின் அறைக்கு சென்றுவிட்டாள் ஆராதானா.

ஆராதனாவின் இந்த பேச்சை கேட்டு மேலும் மேலும் குற்றவுணர்ச்சி ஆட்டிப்படைத்தது. இப்படி ஒரு சூழல் இனி வந்துவிடவே கூடாது என முடிவு எடுக்க, அடுத்தநாளே மீண்டும் ஆதிராவிற்கு ஒரு இக்கட்டான சூழலை அவர்களே உருவாக்கபோகிறார்கள் என்று தெரியாமல் ஆராதனா தங்கையிடம் அமர்ந்திருந்தாள்.

பெரிய பேத்தியின் பேச்சைக்கேட்டு மனம் தளர்ந்து போனார் பெரியவர். அவள் சொன்னது கிட்டத்தட்ட உண்மையும் கூட, தங்களுக்குள் இருக்கும் குற்றவுணர்ச்சியைப் போக்கிக் கொள்ளத்தான் பேரனை அதட்டி ஆதிராவை வர வைத்திருந்தார்கள்.

அதிலும் அவளுக்குப் பிடித்த மாமாவின் உடல்நிலையை காரணம் காட்டி வர வைத்தார்கள்.. அனேகன் நிச்சயம் ஆதிராவை ஏதேனும் பேசுவான் என்று எல்லோருக்கும் தெரியும்தான். ஆனால் வந்த அன்றே இப்படி வார்த்தைகளைக் கொட்டுவான் என்று எதிர்பார்க்கவில்லை.

தளர்ந்த பார்வையுடன் அருகே நின்ற மகனையும் பேரனையும் பார்த்தார் பெரியவர். பிரகாஷும் கிட்டத்தட்ட அவர் நிலைமையில் தான் இருந்தார். ஆனால் அமரன் அப்படியில்லையே.

“தாத்தா இப்போ எதுக்கு கவலைப்பட்டுட்டு இருக்கீங்க. மறுபடியும் பிபி அதிகமாகிட போகுது. ஆரா பேசினதுல எந்த தப்பும் இல்லைதானே. அதனால அதை அப்படியே விடுங்க, அந்த காயம் எப்பவும் அவங்க ரெண்டு பேருக்கும் மறையாது. அப்படி மறையனும்னா அது உங்க கைலதான் இருக்கு..” என்றவன்,

பிரகாஷிடம் திரும்பி “மாமா தர்ஷிக்கு ஒரு மாப்பிள்ளை பாருங்க, அதுவும் ஏகனை விட அழகா, அம்சமா, வெளிநாட்டு மாப்பிள்ளையா பாருங்க. முடிஞ்சளவுக்கு சீக்கிரமா பாருங்க. அதுதான் நீங்க இவங்க ரெண்டு பேருக்கும் செய்ற பரிகாரம்..” என பொட்டில் அறைந்தாற்போல சொன்னவன் மனைவியைத் தேடி நடந்தான்.



 

Vimala Ashokan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Nov 9, 2021
Messages
285
இவனுக்கு பைத்தியமா, தர்ஷன் நல்ல தம்பியா இருக்கான். ஆரா சொன்னதுல தப்பே இல்ல.
 

Joss uby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
446
ஆதியும் ஆராவும் ரொம்ப பாவம். இந்த ஏகன் ஏன் இவ்ளோ கோபப்படுறான். ஆரா சொன்னது ரொம்பவே சரி
 

Sailajaa sundhar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jun 13, 2024
Messages
34
இவனுக்கு பைத்தியமா, தர்ஷன் நல்ல தம்பியா இருக்கான். ஆரா சொன்னதுல தப்பே இல்ல.
Avanukku paithiyamaa...
avanthaan ellaaraiyum paiththiyamaakkuvan.
Nandri sis
 

Sailajaa sundhar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jun 13, 2024
Messages
34
ஆதியும் ஆராவும் ரொம்ப பாவம். இந்த ஏகன் ஏன் இவ்ளோ கோபப்படுறான். ஆரா சொன்னது ரொம்பவே சரி
Mikka nandri sis
 
Top