• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Nuha Maryam

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 27, 2021
Messages
128
இரண்டு வருடங்களுக்குப் பின்


பூஞ்சோலைக் கிராமம் முழுவதுமே ஒரே கொண்டாட்டமயமாக இருந்தது.


அன்று தான் ஆதர்ஷ் - லாவண்யா, அபினவ் - அக்ஷரா ஜோடிகளுக்கு திருமணம்.


சகோதரர்கள் இருவருக்கும் ஒரே மேடையிலே திருமணத்தை நடத்த வீட்டினர் முடிவு செய்திருந்தனர்.


பெண் வீட்டினருக்கும் அதில் சம்மதம் என்பதால் அவசர அவசரமாக திருமணத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.


ஊர்த் தலைவர் வீட்டுத் திருமணம் என்பதால் மொத்த ஊருமே ராஜேந்திரனின் வீட்டில் குழுமி இருந்தனர்.


தங்கள் வீட்டுத் திருமணம் போல மகிழ்ச்சியாக ஒவ்வொருவரும் மாறி மாறி வேலை செய்தனர்.


பூஞ்சோலைக் கிராமத்திலே திருமணத்தை நடத்த முடிவு செய்திருந்ததால் மணமகள்கள் ராஜேந்திரன் வீட்டில் தயாராகிக் கொண்டிருக்க அவர்களின் வீட்டிலிருந்து ஒரு தெரு தள்ளி இன்னொரு வீட்டில் மணமகன்கள் தயாராகிக் கொண்டிருந்தனர்.


திருமணத்திற்கு முந்தின மற்றைய சடங்குகளை செய்ய இலகுவாக இருக்கும் என்று தான் ராஜேந்திரன் அதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.


லாவண்யாவின் தாய் ஆண்டாளுக்கு உதவியாக அகிலா இருக்க வேஷ்டி சட்டை அணிந்து மிடுக்காக அங்கு வந்த ஆர்யான்,


"மினி எங்க மாம்... ஆதர்ஷ் வீட்டிலிருந்து வந்த நேரத்திலிருந்து நானும் தேடிட்டு இருக்கேன்... கண்ணுல கூட பட மாட்டேங்குறா..." என அகிலாவிடம் கேட்டான்.


அகிலா, "அதை ஏன்டா கேக்குற... ஃப்ரெண்ட்ஸோட மேரேஜ்னு சொல்லி கல்யாண வேலை எல்லாம் ஓடி ஆடி செஞ்சிட்டு இருக்கா... காலையில இருந்தே சித்து ரொம்ப டல்லா இருக்கா... ரெஸ்ட் எடுக்க சொன்னாலும் கேக்க மாட்டேங்குறா... லாவண்யா ரூம்ல தான் இருக்கான்னு நெனக்கிறேன்.. அவங்கள தயார் பண்ணிட்டு வரேன்னு போனா... நீ போய் கொஞ்சம் பாரு..." என்க,


ஆர்யான், "சரி மாம்.. நான் போய் பார்க்குறேன்.. இன்னும் கொஞ்சம் நேரத்துல மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்திடுவாங்க... சீக்கிரம் எல்லாம் ரெடி பண்ணி வைங்க..." என்றவன் சிதாராவைத் தேடிச் சென்றான்.


லாவண்யா மற்றும் அக்ஷரா இருந்த அறைக்குச் சென்றவன் வெளியே நின்று கதவைத் தட்ட,


கதவைத் திறந்த அக்ஷரா ஆர்யானைக் கண்டு, "என்னண்ணா இங்க நிக்கிறீங்க... ஏதாவது வேணுமா..." என்க,


"ஆஹ்.. அது ஒன்னுமில்லம்மா... மினிய தேடித்தான் வந்தேன்... அவள் இருந்தா கொஞ்சம் கூப்பிட முடியுமா.." எனக் கேட்டான்.


அக்ஷரா, "எங்கள ரெடி பண்ண பார்லர்ல இருந்து ஆட்கள் வந்ததுமே சித்து வெளிய போய்ட்டான்னா... இங்க எங்கயாவது தான் இருப்பா.. நான் வேணா வரவா.." என்க,


"இல்லம்மா... நான் போய் பார்க்குறேன்... நீங்க ரெண்டு பேரும் ரெடியாகி இருங்க.." என்று விட்டு சென்றான்.


_______________________________________________


மணமகன் அறையில், "டேய் ஆது... இந்த வேஷ்டி இடுப்புல நிக்கவே மாட்டேங்குதுடா... யாருடா இதெல்லாம் கண்டு பிடிச்சாங்க... பேசாம நான் ஜீன்ஸ் போட்டுக்கவா...." என அபினவ் வேஷ்டியை கையில் வைத்து திண்டாடிக் கொண்டிருக்க,


அவன் தலையில் தட்டிய ஆதர்ஷ், "குடு அதை இங்க... " என அபினவ்வுக்கு வேஷ்டியை கட்டி விட்டவன்,


"சிட்டி போய் படிச்சன்னு சொல்லி நம்ம பண்பாட மறந்துட கூடாதுடா... எங்க இருந்தாலும் அது படி நடக்கனும்.." என்க பூம் பூம் மாடு போல் தலையாட்டினான் அபினவ்.


அபினவ், "ஆர்யான் எங்கடா..." எனக் கேட்கவும்,


"எங்கள பின்னாடி வர சொல்லிட்டு காலைலயே கிளம்பிட்டான் அவன்..." எனப் பதிலளித்தான் ஆதர்ஷ்.


பின், "ஆமா.. பிரணவ் இன்னெக்கி வரேன்னு ஏதாவது உன் கிட்ட சொன்னானா.." என ஆதர்ஷ் கேட்கவும்,


"தெரியலடா... முடியாதுன்னு தான் சொல்லிட்டு இருந்தான்... நான் தான் கம்பிள் பண்ணி வர சொன்னேன்... பட் கேக்கவே இல்ல..‌ அப்புறம் ஆர்யான் பேசி வர சொன்னதும் பார்க்கலாம்னு சொன்னான்... எனக்கு என்னவோ அவன் வர மாட்டான்னு தான் தோணுது... நானும் அவன எதுவும் சொல்லல... இப்ப தான் அவன் செஞ்ச தப்ப உணர்ந்து திருந்தி இருக்கான்... சித்துவ கண்டால் அவனுக்கும் குற்றவுணர்ச்சியா இருக்கும்... சித்துக்கும் வீணா மனசு கஷ்டமாகிடும்... அவன் வராம இருக்குறது தான்டா எல்லாருக்கும் நல்லது..." எனப் பதிலளித்தான் அபினவ்.


சற்று நேரத்தில் அனைவரும் கிளம்பி ராஜேந்திரன் வீட்டுக்கு சென்றனர்.


அங்கு தான் திருமணம் நடக்க இருந்தது.


செல்லும் வழியெல்லாம் இருவரும் தத்தம் துணைவியருடன் கழிக்கப் போகும் நாட்களை எண்ணி கனவில் மூழ்கினர்.


_______________________________________________


ஆர்யான் சிதாராவைத் தேடிச் செல்ல அதற்குள் சங்கர் அவனை அழைக்கவும் அவரிடம் சென்றார்.


இங்கு சிதாரா மாடியிலிருந்த அறையொன்றில் சோர்வாகப் படுத்திருந்தாள்.


காலையிலிருந்தே அவளுக்கு தலைசுற்றலும் வாந்தியுமாக இருக்க ஏதோ உண்ட உணவு தான் உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை என நினைத்தாள்.


வீட்டில் யாரிடமாவது கூறினால் அவர்களும் அவளை நினைத்து வீணாக கவலைப்படுவார்கள் என யாரிடமும் கூறவில்லை.


மூன்று நாட்களுக்கு முன் பூஞ்சோலைக் கிராமத்துக்கு வந்த நாளே சிதாராவுக்கு தோழிகளுடன் நேரம் செலவழிக்க கூறிவிட்டு ஆதர்ஷ் மற்றும் அபினவ்வுடன் சென்று தங்கிக் கொண்டான் ஆர்யான்.


அன்று காலையிலிருந்தே தன்னவளின் நினைவு அதிகமாக வாட்ட ஆதர்ஷிடம் சொல்லிக் கொண்டு உடனே கிளம்பி வந்திருந்தான் ஆர்யான்.


ஆனால் அவன் வந்தது சிதாராவுக்குத் தெரியாது.


லாவண்யாவையும் அக்ஷராவையும் தானே தயார் செய்வதாக அகிலாவிடம் கூறியவள் அவர்களின் அறைக்குச் செல்ல சற்று நேரத்தில் பார்லர் பெண்மணிகள் வரவும் அங்கிருந்து வெளியே வந்தாள்.


உடல் சோர்வாக இருக்கவும் சற்று தூங்கி எழும்ப நினைத்தவள் யாரும் தொந்தரவு பண்ணாமல் இருக்க மாடியிலிருந்த அறைக்குச் சென்றாள்.


படுத்துக் கொண்டிருந்தவளுக்கு மீண்டும் வாந்தி வருவது போல் இருக்கவும் அவசரமாக குளியலறை நுழைந்தாள்.


குடலைப் பிரட்டிப் போடுவது போல் வாந்தி எடுத்தவள் சோர்வாக கட்டிலில் வந்தமர்ந்தாள்.


அப்போது தான் தனக்கு நாள் தள்ளிச் சென்றுள்ளது நினைவு வரவும் மகிழ்ச்சியில் சிதாராவின் கண்கள் கலங்கின.


தன்னவனின் உயிர் தன் வயிற்றில் வளர்கிறது என நினைக்கவே சிதாராவுக்கு உடல் சிலிர்த்தது.


தங்கள் காதலுக்கு கிடைத்த பரிசு என மெதுவாக தன் வயிற்றைத் தடவிப் பார்த்தாள்.


அவள் நினைவில் கடைசியாக ஆர்யானுடன் நியுயார்க்கில் கழித்த நேரங்கள் வந்து சென்றன.

_______________________________________________

சிதாரா தன் காதலை ஆர்யானிடம் வெளிப்படுத்திய பின் அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சிக்கு குறைவே இருக்கவில்லை.

ஒருவருக்கொருவர் காதலை அள்ளிக் கொடுத்தனர்.

சிதாராவின் படிப்பு முடியும் வரை குழந்தை வேண்டாம்‌ என்று ஆர்யான் முடிவு செய்ய அதை கடைபிடிக்கத்தான் அவன் அரும்பாடு பட்டான்.

சிதாரா வேண்டுமென்றே அடிக்கடி ஆர்யானை சீண்டிக் கொண்டிருக்க அதற்கு பதிலாக ஆர்யான் அவளின் இதழ்களுக்கு தண்டனை கொடுப்பான்.

நாட்கள் வேகமாக நகர சரியாக ஒன்றரை வருடத்தில் சிதாராவின் படிப்பு முடிந்து பட்டம் பெற்றாள்.

ஆர்யான் இந்தியாவில் சொந்தமாக கம்பனி ஆரம்பித்து நடத்த முடிவு செய்ய சிதாரா ரஞ்சித்திற்கு உதவியாக அவர் கம்பனியில் வேலை செய்ய விரும்பினாள்.

இதில் ரஞ்சித்திற்கு ஏக மகிழ்ச்சி.

தனக்குப் பின் ஆர்யானைக் கம்பனி பொறுப்பேற்க வைக்க அவர் நினைத்திருந்த போது தான் தனியாக தொழில் தொடங்குவதாக ஆர்யான் கூறினான்.

ஆர்யான் இல்லாவிடினும் தன் மருமகள் தனக்குப் பின் கம்பனியைப் பொறுப்பேற்று வழி நடத்துவாள் என அவருக்கு நம்பிக்கை பிறந்தது.

சிதாராவின் பட்டமளிப்பு விழா முடிந்து மறுநாளே இருவரும் இந்தியா செல்ல முடிவெடுத்தனர்.

விழா முடிந்து களைப்பாக சிதாரா வீட்டினுள் நுழைய அவள் பின்னே காரைப் பார்க் பண்ணி விட்டு வந்த ஆர்யான் சிதாராவை அலேக்காக கைகளில் ஏந்திக் கொண்டான்.

அதிர்ந்த சிதாரா, "டேய் ஜிராஃபி... என்னடா பண்ற... கீழ இறக்கி விடுடா... நீ எனக்கு இனிமே ட்ரடிஷனல் ட்ரஸ் போட சொன்னதும் கேட்டது தப்பா போச்சு... " என ஆர்யானின் தோள்களில் அடித்தாள்.

சிதாராவின் இதழைக் கொய்து அவள் பேச்சை நிறுத்தியவன் அறையினுள் நுழைந்த பின் தான் விடுவித்தான்.

சிதாராவை மஞ்சத்தில் கிடத்தியவன் அவளை நெருங்க,

சிதாரா, "ஜி..ஜிரா.. ஜிராஃபி... என்ன.. பண்ற..." என்க,

அவள் வாயை தன் கையால் மூடி சிதாராவின் பேச்சை நிறுத்தியவன் அவள் கண்களைப் பார்த்து, "ப்ளீஸ் மினி..." என்றான்.

ஆர்யானின் கண்களில் காதலைத் தாண்டியும் தெரிந்த ஏக்கத்தைக் கண்டு கொண்ட சிதாரா ஆர்யானின் கரத்தை விலக்கி விட்டு அவனை அணைத்துக் கொண்டாள்.

அதன் பின் அங்கு பேச்சுக்கு இடமிருக்கவில்லை.

ஆர்யான் சிதாராவின் மேனியில் தன் தேடலைத் தொடர சிதாராவும் தன்னவனுக்கு எல்லாவற்றிலும் இசைந்து போனாள்.

அதன் பின் இந்தியா வந்து ஒரு வாரத்திலே ரஞ்சித்தின் உதவியுடன் ஆதர்ஷ் மற்றும் அபினவ்வுடன் இணைந்து சொந்தமாக ட்ரிப்பிள் ஏ க்ரூப் ஆஃப் கம்பனீஸ் (AAA GROUPS OF COMPANIES) ஐ ஆரம்பித்தான் ஆர்யான்.

மூவரின் முயற்சியாலும் அவர்களின் கம்பனி வெகு விரைவில் வளர்ச்சி அடைந்தன.

_______________________________________________
Epilogue part 2👇🏻

 
Last edited:
Top