• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

செம்பூவே..... 1

Tharsan Thanu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
72
46
18
SRILANKA
இதழ்:- 1



பூவினி ....... ஏய் …. பூவினி ..........

எங்கே இருக்கிறாய் ... என்று சத்தமாக அழைத்தபடி கையில் பொருட்கள் அடங்கிய பையுடன் வந்தாள் செம்பூவினியின் தோழி மற்றும் அவளுடன் அந்த அறையை பங்கு போடும் சிந்து.



இருவரும் அந்நிய தேசத்தில் படிக்க வந்தவர்கள். நாம் இருவரும் தமிழ் என்ற ஒரு உணர்வே அவர்களை முதலில் இணைத்தது.பின் பூவினியுடன் பழக பழக அவளின் ஒவ்வொரு குணமும் பண்பும் சிந்துவை வசீகரித்து அவள் பால் ஈர்த்தது.செம்பூவினியின் நட்பு மட்டும் அந்த சமயத்தில் அவளுக்கு கிடைத்திராவிடில்......எண்ணி பார்க்கவே இப்போதும் உடல் நடுங்குகிறது.



சிந்து மிகவும் கட்டுப்பாடான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள்.வெளியில் ஒரு காலனி வாங்க வேண்டும் என்றால் கூட அப்பாவுடனோ அம்மாவுடனோ தான் செல்ல வேண்டும்.அப்படி பொத்தி பொத்தி வளர்க்கப்பட்டவள். இவ்வாறு மிகவும் அடங்கி வளர்ந்த சிந்து வெளிநாட்டுக்கு தனியே படிக்க வந்தவுடன் அவளுக்கு அதுவரை கிடைத்திராத சுதந்திரம் கிடைத்தது. (அந்த வெளிநாட்டு படிப்பை பெற அவள் பட்டபாடு அவளுக்கு தான் தெரியும்.)

வீட்டுப்பறவையாய் வளர்ந்த அவளுக்கு திடீரென கிடைத்த அந்த சுதந்திரத்தை எப்படி சிறந்த முறையில் பயன்படுத்துவது என்று தெரியவில்லை.மனம் போன போக்கில் சென்றாள்.மேலைநாட்டுக் கலாசாரத்தில் கெட்டுப்போக வழியா இல்லை????

அதற்கேற்றாற் போல அவளுக்கு சில மேலை நாட்டு நண்பர்களும் கிடைத்தார்கள்.நினைத்தபடி உடை அணிந்தாள்.நேரம் காலம் பார்க்காமல் நண்பர்கள் கூட வெளியே சுத்தினாள்.ஏன் ஒரு சில தடவை மது கூட அருந்தி இருக்கிறாள்.அதே நிலையில் சென்றிருந்தால் என்ன ஆகி இருப்பாளோ???



கடவுளே அவளுக்கு நல்வழி காட்ட அனுப்பிய தேவதை என அச் சமயத்தில் தான் செம்பூவினி அவள் வாழ்வில் நுழைந்தாள்.அவளை முதன் முதலில் பார்த்தவுடன் அவள் கண்களில் இருந்த வெறுமை தான் இவளை தானாகவே அவளிடம் சென்று பேச வைத்தது.



அவளது மனநிலைக்கும் அனைத்தையும் பகிர்ந்து கொள்ள ஒரு துணை தேவைப்பட்டதோ.என்னவோ இருவரும் நல்ல தோழிகளாய் இணைந்தனர்.அதன் பின் செம்பூவினியின் வழிகாட்டுதலில் அறிவுரையில் சிந்துவின் வாழ்வு சீராகிற்று.செம்பூவினியின் நட்பு கிடைத்த பின்னரே தான் விழ இருந்த படுகுழி எப்படிப் பட்டது என்று அவளுக்கு புரிந்தது. அவள் வாழ்க்கையையே காத்து அழகாக்கிய செம்பூவினி அவளின் உயிர்த்தோழி ஆகிவிட்டாள்.



செம்பூவினி .....பெயருக்கு ஏற்றாற் போல அவள் ஒரு செம் பூ தான். வெளுத்த பாலின் வெண்ணிறம் இல்லை அவள்.சற்றே குங்குமப்பூ கலந்து சுண்டக்காய்ச்சிய பாலின் இளஞ்சிவப்பு நிறம் அவள். அந்த நிறத்தைப் பார்த்து தான் அவளின் பெற்றோர் இந்த பெயரை சூட்டினார்கள் போல!!!! அவளின் பூ முகத்தில் இரு கருவண்டுகளாய் இங்கும் அங்கும் உருண்டோடும் குறும்பு விழிகளே தனி அழகு தான்.



அந்த விழிகளை நினைத்த உடனேயே தான் அவளை முதன் முதலில் சந்தித்த போது அந்த விழிகளில் இருந்த வெறுமையும் வலியும் நினைவு வந்தது சிந்துவுக்கு.அந்த வெறுமையின் காரணமும் கூட ...... ஹ்ம்ம் என்று ஒரு பெரு மூச்சை வெளியேற்றியவள் மீண்டும் தோழியை தேடியபடி உள்ளே சென்றாள்.



அங்கே அவள் தோழியோ ஜன்னல் கம்பியில் முகம் புதைத்து கட்டிடக்காடுகளை வெறித்தபடி நின்றுகொண்டிருந்தாள்.



அருகில் சென்று அவள் தோள் மேல் கை போட்டாள்.அதில் கலைந்தவள்.

ஏய் வந்தாச்சா?? நான் சொல்லிவிட்ட சாமான்கள் கிடைச்சுதா??

ம்ம்ம்.. வாங்கியாச்சு இந்தா...



ரொம்ப நன்றி டி ..

சரி தான் போடி... ..



ஹே ..... ரொம்ப மகிழ்ச்சியா இருக்க போல தெரியுதே?? ஹ்ம்ம் ?? ஹ்ம்ம் ?? என்றாள் அவள் தோளை அணைத்தபடி.

சட்டென அவள் முகத்தில் ஒரு சலனம் வந்து போனது.அதை மறைத்து மெல்ல முறுவலித்தவள்..

ம்ம்ம் ... ரொம்ப நாள் கழிச்சு வீட்டுக்கு போறேன்.சந்தோசம் இருக்காதா??? நாலு வருஷம் கழிச்சு என்னோட குடும்பத்தினரை எல்லாம் பாக்க போறேன்னு சந்தோஷம் தான்.



ஹே ஹே ..உண்மைய சொல்லு.அது மட்டும் தான் காரணமா ஹ? என்றாள் சிந்து கண்களில் இருந்த ஆராய்ச்சியை மறைத்து குறும்பாக கண்ணை சிமிட்டியபடி.



அதுவரை பெயருக்கேற்றாற் போல பூவாய் மலர்ந்திருந்த செம்பூவினியின் முகமலர் சட்டென இருண்டது.

தோழியின் கண்களை சந்தித்தவள் உளறாதே என்றாள். அவளின் குரலின் இறுக்கமே அவள் கோபத்தை பறை சாற்றியது.அது கண்ட சிந்துவின் முகத்தில் இனம் புரியாத ஒரு திருப்தி தென்பட்டது.சட்டென முக பாவத்தை மாற்றியவள் ..



ம்ம்ம் அதெல்லாம் இருக்கட்டும்.நீ உன்னோட பொருட்களை எல்லாம் எடுத்து வைச்சுட்டியா??? என்றாள் இயல்பாக. அதை உணர்ந்தவளும் அவளின் கேள்விக்கு இயல்பாக பதில் சொன்னாள்.

இல்லடி கொஞ்சம் எடுத்து வைத்தேன்.மீதியை நீ வந்தபின் செய்யலாம் என்று விட்டுவிட்டேன்.என்றாள் சிறு சிரிப்புடன். அந்த சிரிப்பில் லயித்த சிந்து.ஏய் நீ நிஜமாவே செம்பூ தாண்டி. பொருத்தமா தான் பேரு வைச்சிருக்காங்க உனக்கு.



அச்ஹூம் ...... அச்ச்சூம்.... என்னடி ஐஸ் வைக்கிறாயா??? ஹா??



சரி சரி நான் எதுவுமே சொல்லலப்பா. நீ வா நாங்கள் உன் பொருட்களை எல்லாம் எடுத்து வைக்கலாம்.

ம்ம்ம் ...சரி என்றவாறே அவளுடன் நடந்தாள் பூவினி

எல்லாவற்றையும் அடுக்கி முடித்து பெட்டியை மூடியபடி ...





பூவினி ......என்றாள் சிந்து

ம்ம்ம் ........

நான் ஒண்ணு சொல்லவா??

என்னை கோபப்படுத்தாத விடயம் என்றால் சொல்லு.



மெல்ல சிரித்த சிந்து

ம்ம்ஹும் நான் பேசும் விஷயம் நிச்சயம் உன்னை கோபப்படுத்தும்.உன் கோபத்தின் காரணத்தாலேயே இவ்வளவு நாளும் நான் எதுவும் பேசவில்லை.இது தான் கடைசி வாய்ப்பு இப்போதாவது நான் சொல்லுவதை காது கொடுத்து கேள்.தயவு செய்து ...... என்றாள்.



அவளின் குரலில் இருந்த கெஞ்சல் பூவினியை மௌனமாக்க.அதையே சாதகமாக கொண்டு சிந்து தொடர்ந்தாள்.

இதோ பார் பூவினி ....



இனிமேலும் முட்டாள் தனமாக உன் வாழ்வை வீணடிக்காமல்.உன் பெற்றோரை கஷ்டப்படுத்தாமல் ஒழுங்காக நல்ல முடிவை எடு.சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கொள்.என்ன?? என்றாள்.



அதற்கு பூவினியிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. லேசான உதட்டு சுழிப்பை தவிர ..



அதை பார்த்த சிந்துவுக்கு கோபம் தலைக்கேறியது.

பைத்தியமாடி நீ?? இல்லை தெரியாமல் தான் கேட்கிறேன்?? உன்னை வேண்டாம் என்று கூறி உன் காதலை புறக்கணித்தவனை நினைத்துக் கொண்டு உன் வாழ்கையை வீணடிக்கிறாயே இது உனக்கே முட்டாள்த்தனமாக தெரியவில்லை??? அல்லது அவனுக்கு தான் இன்னும் கல்யாணம் முடியவில்லையே இன்னொரு வாய்ப்பிருக்குமோ என்று எண்ணுகிறாயா??? என்றாள் கோபமாகவே.அவள் எண்ணியது போலவே சிந்துவின் கடைசி வாக்கியம் அவள் தன் மானத்தை தட்டி எழுப்பிவிட வெறி கொண்ட வேங்கையாய் சீறினாள் பூவினி.



சிந்துதுதுது........... உன் உளறலை கொஞ்சம் நிறுத்துகிறாயா?? இதற்கு மேல் ஏதாவது கதைத்தாய் என்றால் நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது. என்ன சொன்னாய் நான் இன்னொரு வாய்ப்பிற்காக காத்திருக்கிறேனா?? ஹ்ம்ம்.... எனக்கு சிறுவயதில் இருந்து ஒவ்வொரு விடயத்திற்கும் முன்னுதாரணமாக இருந்தது அவன் தான்.கூடவே அவனது திமிரும் எனக்கு இருக்கிறது அவனைவிட அதிகமாகவே .....





என்று என்னை என் காதலை அவன் புறக்கணித்தானோ அன்றே அவனை நான் வெறுத்துவிட்டேன்.இனி ஒருவேளை அவனே என்னை விரும்பினால் கூட நான் அவனை ஏற்கப் போவது இல்லை.இது உறுதி. நான் திருமணம் செய்வதும் செய்யாமல் விடுவதும் என் சொந்த விடயம். அதனால் இதற்கு மேல் தேவை இல்லாமல் எதுவும் கதைக்காதே என்று கோபமாக கத்தியவள் தோழியின் ஆராய்ச்சி பார்வையைக் கூட கண்டு கொள்ளாமல் தன் அறைக்குள் சென்று கதவை அறைந்து மூடினாள்.





ஒரு புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது சிந்துவுக்கு.ஊப்ஸ் ......... என்று மூச்சை இழுத்து விட்டவள் தொப் என்று இருக்கையில் விழுந்தாள். அவளின் சிந்தனை முழுதும் பூவினியையே சுற்றி வந்தது.



தான் அப்படி பேசியதும் பூவினி கொதித்தெழுந்து நான் எதுக்கு திருமணம் செய்யாமல் இருக்க போகிறேன். அவனை நினைத்து என் வாழ்வை பாழாக்க நான் ஒன்றும் முட்டாள் இல்லை.நான் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என்று சவால் விடுவாள் என்று எதிர்பார்த்தாள்.ஆனால்............????



அவள் கொதித்தாள் தான்.ஆனால் சிந்து எதிர்பார்த்த வார்த்தைகளை அவள் கூறவில்லை.

வேறு ஒருத்தனை திருமணம் செய்வேன் என்று வெறும் வாய் வார்த்தையாக கூறுவதற்கு கூட அவளுக்கு மனம் வரவில்லை என்றால் இதுக்கு என்ன அர்த்தம்.அப்படியானால் இன்னும் அவள் அவனை மனதில் இருந்து தூக்கி போடவில்லையா??? அப்படியாயின் பூவினியின் வாழ்வு????



கடவுளே ..... அவளுடைய இனிய தோழியின் வாழ்வு என்னவாகும்?? அவளுக்கு பூவினியின் வாழ்வு முக்கியம். மிக மிக முக்கியம்.அவளை அவள் வாழ்வை நல்வழிப்படுத்திய அவள் தோழியுடைய வாழ்வு சிறப்பாக அமைய வேண்டும்.அவளுக்கு பூவினியுடைய கடந்தகாலம் தெரியும். அதில் அவனால் அவள் பட்ட மனவலியும் தெரியும்.அதனாலேயே அவனை பூவினி மறக்க வேண்டும் என்று விரும்பினாள்.ஏன் அவனை மறந்துவிட்டாள் என்று கூட நினைத்தாளே. சற்று முன்பு கூட வேண்டுமென்றே லேசாக பேச்சு எடுத்தாள்.அதற்கு பூவினி கோபம் கொண்ட போது அவளுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது நிஜம்.தோழி அவனை வெறுக்கிறாள் என்று...
 

Tharsan Thanu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
72
46
18
SRILANKA
ஆனால் இப்போது யோசிக்கும் போது தான் இதுவரை பூவினியை பற்றி தான் கணக்கிட்டது சரியா என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.பூவினியின் அவன் மீதான கோபம் அவள் வெறுப்பின் வெளிப்பாடா? அல்லது உள்மனதை மறைக்கும் வெளிப்பூச்சா?? இதுவரை அவளின் வெறுப்பின் வெளிப்பாடு என்று நிம்மதி அடைந்தவளால் இப்போது அப்படி அமைதியாய் இருக்க முடியவில்லை.சிந்தனை முழுதும் பூவினி கூறிய அவளின் கடந்தகால நிகழ்வுகளிலேயே சுற்றியது.



உள்ளே சென்று கட்டிலில் விழுந்த பூவினியின் மனமும் ஒரு நிலையில் இல்லாமல் அங்கும் இங்கும் சுற்றி அலைந்தது...............







இந்த நான்கு வருடங்களில் தன்மனதை கட்டுபடுத்தி அனைத்தையும் மறந்து ஒரு தெளிவுக்கு வந்துவிட்டதாக எண்ணினாளே!!!!!!!!!!!!



ஆனால் என்று ஊருக்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளை செய்ய தொடங்கினாளோ.அன்றிலிருந்தே அவளது மனசு மறுபடியும் அலைபாய தொடங்கிவிட்டது.அவள் மிகவும் முயற்சி செய்து மறந்த அல்லது மறந்துவிட்டதாக நினைத்த அந்த கம்பீர உருவம் இப்போது அடிக்கடி அவள் மனக்கண்ணில் வந்து ஒற்றை புருவத்தை உயர்த்தி நலம் விசாரிக்கின்றதே.அது அந்த உருவம் நிலவனுடையது.

நிலவன்...........தமிழ் நிலவன் மெல்ல அப் பெயரை உச்சரித்தாள். சட்டென ஒரு வலி அவள் இதயத்தை ஊடுருவிப் பாய்ந்தது.
 

Tharsan Thanu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
72
46
18
SRILANKA
இதழ்:- 2



அந்த ஊரில் குமாரசாமி குடும்பம் என்றால் அறியாதவர்கள் இருக்க முடியாது.பணத்திலும் சரி ஒழுக்கத்திலும் சரி ஒற்றுமையிலும் சரி பாசத்திலும் சரி அந்த குடும்பத்தை யாரும் மிஞ்ச முடியாது.



குமாரசாமி வள்ளியம்மாள் தம்பதிக்கு நான்கு பிள்ளைகள்.இரு ஆண் பிள்ளைகளும் இரு பெண்களும்.

மூத்தவர் ஜெகநாதன் அவர் மனைவி சாந்தா.அவர்களின் சீமெந்த புத்திரன் தான்.நிலவன்.தமிழ்நிலவன்.அவனுக்கு பின் கிட்டதட்ட பத்து வருடங்கள் கழித்து பிறந்தவள் தான்.அவன் தங்கை தமிழினி.வாலில்லா வானரம்.



அடுத்து குமாரசாமி தம்பதியின் மூத்த பெண்பிள்ளை ஜெகநாதனின் தங்கை மேகலா.அவர் கணவன் பத்மன்.அவர்களின் ஏக புத்திரி தான் செம்பூவினி.ஒற்றைப்பிள்ளை. குடும்பத்தின் முதல் பெண் வாரிசு என்பதாலோ என்னவோ அந்த குடும்பத்தில் பூவினி என்றால் அனைவருக்கும் செல்லம் தான்.



அடுத்து அடுத்து குமாரசாமி தம்பதியின் அடுத்த அடுத்த பிள்ளைகள் முறையே நாகநாதன்.மற்றும் மேனகா.அவர்களின் துணைகள் கல்யாணி மற்றும் மேனகாவின் கணவன் சுப்பிரமணியன்.



பூவினியின் சின்ன மாமா நாகநாதனுக்கு இரண்டு பையன்கள்.பூவினியை விட சின்னவர்கள்.பெரியவன் நிவேதன்.சின்னவன் சுவேதன்.



சித்தி மேனகாவிற்க்கு ஒரு பெண்ணும் ஒரு பையனும்.பெண் செந்தாரிணி. பூவினிக்கு நெருக்கமானவள்.அவளை விட மூன்று வயது சிறியவள்.பையன் செந்தூரன்.



இவர்கள் அனைவரையும் பாசம் எனும் பலமான சங்கிலி இறுகப் பிணைத்திருந்தது.ஒவ்வொருவரின் குடும்பமும் தனித்தனி வீட்டில் இருந்தாலும் அருகருகே தான் வரிசையாக இருந்தது.ஒவ்வொரு வீட்டினையும் மதில் சுவர்கள் தான் பிரித்ததே தவிர அங்கு வாழ்ந்த மனிதர்களின் மனதுக்குள் பிரிவிருக்கவில்லை.எந்த ஒரு சிறிய விடயம் என்றாலும் அனைவருமே மூத்தவர் ஜெகநாதன் வீட்டில் கூடிவிடுவர்.ஏனெனில் அங்கு தான் குடும்பத்தின் மூத்த தலை முறை குமாரசாமி வள்ளியம்மை தம்பதியினர் இருந்தார்கள்.



எந்த காரணமுமே இல்லையென்றாலும் கூட வாரத்தில் ஒருநாள் எல்லோரும் அங்கு கூடவேண்டும் என்பது அக் குடும்பத்தின் எழுதப்படாத விதி. அப்படி எல்லோரும் ஒன்று கூடும் நாள் இளையவர்களுக்கு கொண்டாட்டம் தான்.வார நாட்கள் எல்லாம் படிப்பு படிப்பு என்று ஓடிக் கொண்டிருப்பவர்களுக்கு அந்த நாள் வந்தாலே மகிழ்ச்சி தான்.அன்று அவர்கள் என்ன அட்டகாசம் பண்ணினாலும் யாரும் எதுவும் சொல்லமாட்டார்கள்.



அதை இப்போது நினைத்தாலும் உள்ளத்தில் ஒரு சந்தோஷ சாரல் தூவும். பூவினியின் இதழ்களில் இள முறுவல் ஒன்று மலர்ந்தது.அவள் மனதில் அந்த நாள் காட்சிகள் படமாய் விரிந்தது.



அந்த நாள் எல்லோரும் கூடி விட்டால் அம்மா சித்தி அத்தைமார்கள் எல்லோரும் ஒன்றாக கலகல என்று பேசி சிரித்தபடியே சமையல் செய்வார்கள்.ஏன் மூட்டு வாதம் என்று ஒய்ந்திருக்கும் பாட்டி கூட அன்று மட்டும் அப்படி சுழன்று சுழன்று வேலை பார்ப்பார்.

அனைவரின் முகத்திலும் சந்தோசப்புன்னகை மலர்ந்தபடியே படியே இருக்கும்.



வெளியே கூடத்திலோ அல்லது மொட்டை மாடியிலோ அப்பா மாமா சித்தப்பா என்று அவர்கள் கூட்டணியும் களைகட்டும். நான்கு பேரும் உரக்க பேசி சிரித்தபடியே கரம் அல்லது சீட்டு ஏதாவது விளையாடுவார்கள். அவர்களின் பேச்சில் அப்படி ஒரு நட்புணர்வு இழையோடும் ஒருத்தர்காலை ஒருத்தர் வாருவதும் நடக்கும்.ஜெகநாதன் நாகநாதன் தங்களது நண்பர்களையே சகோதரிகளுக்கு மணமுடித்ததால் தான் அது சாத்தியமானதோ???



பூவினியின் தந்தை பத்மன் ஜெகநாதனின் நண்பன் படிக்கும் காலத்தில் தொடங்கி தொழில் வரையிலும் அவர்கள் நட்பு நீடித்தது.அவ்வப்போது ஜெகநாதன் வீட்டுக்கு வரும் போது அவர் தங்கை மேகலா மீது தோன்றிய ஈர்ப்பை மறைக்காது ஜெகநாதனிடம் சொல்ல அவருக்கும் மகிழ்ச்சியே.யாரென்றே தெரியாத ஒருத்தரை தங்கைக்கு மணமுடிப்பதை விட சிறுவயதில் இருந்து பழகிய நன்கு தெரிந்த ஒருத்தர் தன் தங்கைக்கு கணவனாக வருவதில் அவருக்கு பூரண திருப்தி.அதை தனது பெற்றோர்களிடம் சொல்ல அவர்களுக்கும் சம்மதமே.



ஆனால் இதில் பத்மனின் தாய் கண்மணிக்கு சம்மதம் இல்லை. பத்மனுக்கு தந்தை இல்லை தாய் தான் சிறுவயதில் இருந்து கஷ்டப்பட்டு இவரை நல்ல நிலைக்கு கொண்டு வந்தார். எங்கே ஜெகநாதனின் வீட்டில் திருமணம் செய்தால் தன் பிள்ளை அவர்கள் வீட்டோடு மாப்பிளையாக போய்விடுவானோ.தன்னையும் தன் மகளையும் புறக்கணித்து விடுவானோ என்று பயந்தார். அதனால் அதை தடுக்க முயன்றார்.ஆனால் பத்மன் உறுதியாய் இருக்கவே வேறு வழியில்லாமல் அவர்கள் வீட்டோடு மாப்பிள்ளையாக போக கூடாது என உறுதி வாங்கிய பின் சம்மதித்தார்.ஆனால் அந்த உறுதி அவருக்கு எவ்வளவு தூரம் திருப்தி அளித்தது என்பதுதான் கேள்விக்குறி.?????????





மேனகாவிற்கு நாகநாதன் தன் நண்பனையே மணமுடிக்க வேண்டும் என்று அடம்பிடித்து நண்பன் சுப்பிரமணியை மணமுடித்தார்.அவர் ஒரு அநாதை.சிறுவயதில் அநாதை ஆசிரமத்தில் வளர்ந்து மிகவும் சிரமப்பட்டு படித்து வந்தவர்.உறவுகள் இல்லாது உறவுக்களின் பாசத்திற்கு ஏங்கிய அவருக்கு இந்த குடும்பத்தில் தானும் ஒரு அங்கமாக முடிந்ததில் எல்லை அற்ற மகிழ்ச்சி.



இவ்வாறு நட்பை அடித்தளமாக கொண்டு இணைந்த உறவுகள் ஆதலால் அவர்களுக்குள் எதுவித மனவேற்றுமைகளும் இல்லை.இனிய நட்புணர்வே எப்போதும் மேலோங்கி இருந்தது.



இந்த குடும்பம் செய்த புண்ணியம் அவர்களுக்கு மருமகள்களாக கிடைத்த சாந்தாவும் கல்யாணியும் தான்.இந்த குடும்பத்தோடு எதுவித தொடர்பும் இல்லாத இருவருமே திருமணமாகி வந்ததும் இந்த குடும்பத்தின் பாசப்பிணைப்பை புரிந்து கொண்டு அந்த பிணைப்பில் தங்களையும் இயல்பாக பொருத்தி கொண்டனர்.



அந்த குடும்பத்தில் எந்த வீட்டுப் பிள்ளை எங்கே சாப்பிடுகிறது என்று பெற்றவர்களுக்கு தெரியாது. ஆனால் நாலு வீட்டில் ஏதோ ஒரு வீட்டில் தனக்கு பிடித்த உணவை வயிறு முட்ட உண்டிருக்கும் என்பது மட்டும் தெரியும்.பூவினிக்கு தன் வீட்டில் உணவு பிடிக்கவில்லை என்றால் சித்தி வீட்டுக்கு கிளம்பி விடுவாள்.அவளுக்கு எப்போதுமே சித்தி மேனகா சமையல் பிடிக்கும். ஆனால் சித்தி பெண் செந்தாரணிக்கு அத்தையின் சமையல் தான் பிடிக்கும்.ஆனால் இரண்டு மாமன்களின் பையன்களுக்குமோ இவள் தாயின் கைமணம் தான் பிடிக்கும்.



மேகலாவுக்கும் ஆண் குழந்தைகள் இல்லாததால் அண்ணன் தங்கையின் பசங்கள் மீது மிகுந்த பாசம்.அதுவும் நிலவன் மீது தனிப்பிரியம் தான்.அவனும் அத்தை அத்தை என்று உருகி வழிவான்.இவளுக்கு தான் அதை பார்க்க பத்திக் கொண்டுவரும்.

எதுவும் கூறாது எழுந்து சென்று விடுவாள்.அதற்காக நிலவனை பிடிக்காது என்று இல்லை என் அம்மா என்னை விட அடுத்தவர் மீது அதிக அன்பு கொள்வதா என்று சிறுபிள்ளைத்தனமான கோபம். அது நிலவனுக்கும் தெரியும்.தெரிந்து கொண்டே வேண்டுமென்று சீண்டுவான்.



இவள் முன்னால் வேண்டுமென்றே அத்தை இன்றைக்கு சாயுங்காலம் ஏதாவது இவளுக்கு பிடிக்காத சிற்றுண்டியின் பெயரை சொல்லி அதை செய்து கொடுங்கள் என்பான்.மேகலாவும் அவன் தலையை வருடி அதுக்கென்னடா கண்டிப்பா செய்து தாறேன்னு சொல்லுவார்.



பூவினி பல்லைக்கடித்துக் கொண்டு கத்துவாள்.அம்மாமா.......... எனக்கு அது பிடிக்காது.

உனக்கு பிடிக்காவிடில் நீ அதை சாப்பிடாதே.வேறு உனக்கு பிடித்ததை செய்து கொடுக்கிறேன் அதை சாப்பிடு.



எனக்கு பிடிக்காத உணவை நீங்கள் செய்ய கூடாது சிறுபிள்ளையாய் அடம்பிடிப்பாள்.

அதற்கு மேகலாவிடம் இருந்து ஒரு முறைப்பும் நான்கு திட்டுக்களும் பரிசாய் கிடைக்கும்.அதை கூட தாங்கி விடலாம்.ஆனால் அவள் திட்டு வாங்குவதை பார்த்து அவன் நமுட்டாய் புன்னகைப்பதை தான் இவளால் தாங்க முடியாது.







அந்த குடும்பத்தின் முதல் வாரிசு தமிழ் நிலவன் தான்.அவனுக்கு பின் ஐந்து வருடம் கழித்தே செம்பூவினி பிறந்தாள்.அவளுக்கு பிறகு தான் மற்றவர்கள் பிறந்தார்கள்.

நிலவனுக்கு பின் பத்து வருடங்கள் கழித்தே அவன் தங்கை தமிழினி பிறந்ததால் அந்த பத்து வருடங்களும் அவனும் ஒற்றைப் பிள்ளையாகவே இருந்தான்.இங்கே செம்பூவினியும் ஒற்றை பிள்ளை என்பதால் இருவருக்குள்ளும் இயல்பான ஒரு ஒற்றுமை நெருக்கம் ஏற்பட்டது.

அவளின் சிறு வயதில் இருந்தே பூவினிக்கு ஒவ்வொரு விடயத்திலும் வழிகாட்டியாக இருந்து வழிநடத்துவது நிலவன் தான்.எப்படி உடை அணிய வேண்டும் என்பதில் இருந்து யாரிடம் எப்படி பழக வேண்டும் என்பது வரை அவனின் வழிகாட்டுதல் இருக்கும்.அவளின் பெற்றோரின் கண்காணிப்பு அவள் மேல் இருக்குமோ இல்லையோ தெரியாது.ஆனால் நிலவனின் கண்காணிப்பு எப்போதும் அவளை தொடரும் என்பது அவளுக்கு தெரியும்.

மாலை ஆறு மணிக்கு மேல் அவள் எங்கு நின்றாலும் அவள் வீட்டுக்கு சென்று விட வேண்டும்.அவள் விளையாட்டு ஆர்வத்தில் சித்தி வீட்டிலோ இல்லை தாத்தா பாட்டியுடன் பேசிக்கொண்டு நிலவன் வீட்டிலோ கூட நின்றுவிட கூடாது.அதை அவன் கண்டால் அவ்வளவுதான்.

ஒரு அழுத்தமான பார்வையுடன் இப்போது என்ன நேரம் பூவினி???
என்பான்.அந்த கேள்வியிலேயே வீட்டுக்கு செல் என்ற மறைமுக கட்டளை இருக்கும்.அந்த பார்வையையும் குரலையும் எதிர்த்து அவளால் எதுவும் பேச முடியாது.
 
  • Like
Reactions: Krithika ravi

Tharsan Thanu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
72
46
18
SRILANKA
நிலவனைப் பற்றி அவள் தாயிடம் முறையிடுவாள்.
அம்மா இந்த அத்தானை பாருங்கள்.சும்மா அதை செய்யாதே இதை செய்யாதே.அப்படி நடக்காதே இப்படி இருக்காதே என்று எதற்கெடுத்தாலும் அதிகாரம் பண்ணிக்கொண்டு இருக்கிறார்.என்பாள்.

அதற்கு மேகலாவிடம் இருந்து வரும் பதில் பூவினி அவன் உனக்கு பெரியவன் அவன் என்ன சொன்னாலும் எதை செய்தாலும் அது உன் நன்மைக்காகதான் இருக்கும்.சும்மா அவன் மீது குற்றம் குறை சொல்லாமல் அவன் சொல்வதை கேட்டு நட என்பதாகத்தான் இருக்கும்.அதை பூவினியும் அனுபவத்தில் உணர்ந்து கொண்டதால் முடிந்தவரை அவன் சொல்வதை கேட்டு நடப்பாள்.


நிலவனுக்கு சிறுவயதில் இருந்தே அமைதியும் அழுத்தமும் பொறுப்புணர்வும் இயல்பாகவே அமைந்த ஒன்று.அவன் எது சொன்னாலும் செய்தாலும் அது சரியாகவே இருக்கும் என்ற நம்பிக்கை அந்த வீட்டு பெரியவர்களுக்கு இருந்தது.

என்னதான் நிலவன் என்னை அதட்டுகிறான் என்று தாயிடம் குறை சொன்னாலும் தனக்கு ஒரு பிரச்சனை என்றால் பூவினி முதலில் சென்று நிற்பது நிலவனிடம் தான்.

பாடசாலையில் பக்கத்து இருக்கைப் பெண் என்னை கிள்ளிவிட்டாள் அத்தான் என்று பத்து வயதில் முறையிட்டதும் அவனிடம் தான்.பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஒரு பையன் காதல் கடிதம் கொடுத்துவிட்டான் என்று அந்த கடிதத்துடனே சென்றதும் அவனிடம் தான்.

அதை நினைத்ததும் இப்போதும் சிரிப்பு வந்தது பூவினிக்கு.திடீரென்று ஒரு பையன் வந்து கடிதத்தை இவள் கையில் திணித்து விட்டு ஓடியதும் பூவினி அரண்டு விட்டாள்.எது சரி? எது தப்பு?? இந்த கடிதத்தை நான் என்ன செய்ய வேண்டும் எதுவும் புரியவில்லை அவளுக்கு.இதை கொண்டு போய் அம்மாவிடம் கொடுத்தால் நிச்சயம் அது அப்பா காதுக்கு போய் பெரிய பிரச்சனை ஆகிவிடும்.
குமாரசாமி வீட்டு பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுக்கும் தைரியம் யாருக்கு வந்தது என்று சின்னமாமா நாகநாதன் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு நிச்சயம் கிளம்பிவிடுவார்.அதன் பிறகு அவள் சுதந்திரமாக பாடசாலை செல்வதென்பது முடியாதகாரியம்.எப்போதும் யாராவது ஒருத்தருடைய பாதுகாப்பிலேயே பாடசாலைக்கு சென்று வர வேண்டிய நிலை ஏற்படலாம்.



இதழ்:- 3

கடவுளே அப்படி நடந்தால் அவள் எப்படி தோழிகளோடு சேர்ந்து திருட்டு மாங்காய் அடிப்பது.வீட்டுக்கு தெரியாமல் திருட்டு குச்சி ஐஸ் சாப்பிடுவது.

அட ச்சே......... ஏன்டா மடையா.உனக்கு காதல் கடிதம் கொடுக்க வேறுயாருமே கிடைக்கலையா.. நான் தான் கிடைச்சனா?? இப்படி அநியாயமா எனக்கு ஆப்படிச்சுட்டியே என்று மனதில் புலம்பி தவித்தவாறே வீடு வந்து சேர்ந்தாள்.


வீட்டுக்கு வந்தும் அவள் குழப்பம் தீரவில்லை.என்ன பண்ணுவது யாரிடம் சொன்னால் இதற்கான தீர்வு கிடைக்கும் என்று எண்ணிய போது முதலில் நினைவு வந்தது நிலவனின் முகம் தான்.

உடனே அந்த கடிதத்தை எடுத்து புத்தகத்துள் மறைத்தபடி.அம்மா எனக்கு ஒரு கணக்கு விளங்கவே இல்லை அத்தானிடம் கேட்டு படித்துவிட்டு வருகிறேன்.என்று காரணம் சொல்லிவிட்டு கிளம்பி விட்டாள்.


இவள் அங்கு சென்றபோது நிலவன் எங்கோ வெளியே கிளம்பிக்கொண்டிருந்தான்.இவளைக் கண்டதும்.

ஏய் பள்ளிக்கூடம் முடிஞ்சு வந்தா ஒழுங்கா உட்கார்ந்து படிக்கணும் என்று சொல்லி இருக்கேன்ல..என்றான் மிரட்டலாய்.


ஏன்டா குழந்தையை மிரட்டுறாய். அவளே எப்பவாவது தான் இந்தப்பக்கம் தலைய காட்டுறா.ஒரே படிப்பு படிப்பு என்று தான் அவள் பொழுதே கழியுது.இதில நீ வேற என்று நிலவனை அதட்டினார்.சாந்தா.


அதற்கு ஆமா ஆமா பச்சை குழந்தை அவள்.தொட்டிலில் போட்டு தாலாட்டு பாடுங்கள். என்று முணுமுணுத்தான் நிலவன்.

அத்தை நிலவனை திட்டியது மகிழ்ச்சியாக இருந்தாலும் இப்போது அவனின் உதவி தேவை என்பதால் அடக்கி வாசித்தாள் பூவினி.அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு

அத்தான் அது ..அது...எனக்கு ஒரு கணக்கு விளங்கவே இல்லை அதுதான் உங்களைக் கேக்கலாம் என்று....என்று இழுத்தாள் பூவினி.

சாந்தா நிலவனை பார்த்தாயா? என்பது போல முறைக்க அவன் அதை கண்டுகொள்ளாது இப்போ நான் அவசரமா வெளில போகணும்.நீ இப்போ வேற ஏதாவது பாடத்தை படி நான் நாளைக்கு உனக்கு சொல்லி கொடுக்கிறேன் என்று செல்லப்போனான்

பூவினிக்கு திக் என்றது நாளைக்கா? அட கடவுளே கடிதம் கொடுத்தவன் நாளைக்கு வந்து ஏதாவது பேசினால் அவள் என்ன செய்வது.இவனிடம் தீர்வு கேட்கலாம் என்று பார்த்தால் இப்படி போகிறானே என்று தவிப்புடன் நிலவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவளிடம் கூறிவிட்டு செல்ல எத்தனித்தவன் ஒரு கணம் தயங்கி அவள் விழிகளை சந்தித்தான்.அதில் என்ன தெரிந்ததோ யோசனையை குறிக்கும் புருவச்சுளிப்புடன் சரி வா சொல்லி கொடுக்கிறேன் என்று கூறி விட்டு படிக்கும் அறையை நோக்கி நடந்தான்.


உள்ளே சென்றதும் சொல்லு என்ன பிரச்சனை என்று அவன் கேட்கவும் இவளுக்கு தூக்கி வாரிப்போட்டது.இருந்தும் சாமளித்துக்கொண்டு என்ன பிரச்சனை நான் கணக்கு தான் கேட்க வந்தேன் என்றாள் வேண்டுமென்று.

எதுவும் பேசாது அவள் கண்களை சில கணங்கள் நேராகப் பார்த்தவன் இதோ பார் பூவினி உன்னை பிறந்தது முதலே அறிந்தவன் நான்.உன் கண்களின் ஒவ்வொரு பாவனையும் எனக்கு அத்துப்படி.உன் கண்களைப் பார்த்தே உன் மனதில் என்ன இருக்கிறது என்பதை என்னால் அறிய முடியும்.என்றான் ஆழ்ந்த குரலில். அந்த குரலும் அந்த பார்வையும் முதல் முதலாக அவளுக்குள் ஏதோ ஒரு உணர்வை விதைத்தது உண்மை.நிச்சயம் அந்த உணர்வுக்கு பெயர் பயம் இல்லை.ஏதோ சொல்ல தெரியாத ஒரு உணர்வு.அது என்ன என்பதை அவள் ஆராயும் முன்னரே சட்டென குரலையும் பார்வையையும் இயல்பாக்கியவன்

ஏய் என்ன பிரச்சனை என்று சொல்லப் போகிறாயா இல்லையா?? வெளியே போக கிளம்பியவன் உன் முகத்தைப்பார்த்து பாவம் என்று பேச வந்தால் தேவை இல்லாமல் பேசி ஏன் நேரத்தை வீணடிக்கிறாய்.சீக்கிரம் சொல். என்றான் அதட்டலாக.

ஹ்ம்ம் அதானே பார்த்தேன்.எங்கே அதட்டல் மன்னனை காணோமே என்று.என்று மனதில் முணுமுணுத்தவள் இதற்கு மேலும் தாமதித்தால் நிச்சயம் செம திட்டு விழும் என்று புரிந்து புத்தகத்தில் வைத்திருந்த அந்த கடிதத்தை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

என்ன பூவினி இது???
காதல்கடிதம் அத்தான்

சட்டென அவன் முகத்தில் ஒரு குழப்பம் வந்து போக
ஏய் என்னடி உளறுகிறாய் ??
காதல் கடிதம் எழுதும் வயதாடி உனக்கு?? என்றான் மிரட்டலாக

ஐயோ அத்தான் இது நான் எழுதவில்லை.

பின்னே???
என் கூடப்படிக்கும் ஒருத்தன் எனக்கு கொடுத்தான் என்றாள் கலக்கமாக.

நிலவனின் முகம் இறுகியது.பூவினி கலக்கமாக அவனைப் பார்க்கவும் முகபாவத்தை மாற்றியபடி கடிதத்தை விரித்து படித்தான்.
படித்தவன் வாய்விட்டு சிரிக்க தொடங்கினான்.
ஏன் அத்தான் சிரிக்கிறீங்கள்??


ஹ ஹ ஹ ........ போயும் போயும் உன்னை போய் இப்படி வர்ணித்து உருகி உருகி எழுதி இருக்கிறானே அவன் கண்டிப்பாய் ஒரு பைத்தியமாய் தான் இருப்பான் ஹ ஹ ஹ... சரி எழுதியதையாவது ஒழுங்காக எழுதினானா? அதுவும் இல்லை அங்கங்கே எழுத்துப்பிழை வேறு ஹ ஹ ஹ...

“செம்புவே நான் உன்னை கதலிக்கிறேன்.....”ஆகா அருமை. என்ன ஒரு தமிழ் இல்லையா பூவினி???

பூவினிக்கு கோபம் தான் வந்தது.அவளின் பிரச்னைக்கு தீர்வு சொல்வான் என்று வந்தால் அவன் அவளையே கிண்டல் பண்ணுகிறான்.எதுவும் கூறாமல் கோபத்தில் முகம் சிவக்க வெளியே செல்ல திரும்பினாள்.

சட்டென அவள் கையை பிடித்து தடுத்தவன் என்ன பூவினி கோபமா என்றான்?? இல்லையே என்றவள் கையை உருவினாள்.அப்போது தான் அவள் கையை பற்றியிருப்பதை உணர்ந்தவன் போன்று ஒ ..மன்னிச்சிடு.என்று கூறி கையை விடுவித்தான்
 
  • Like
Reactions: Krithika ravi

Tharsan Thanu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
72
46
18
SRILANKA
ஒருத்தருடைய கையை ஒருத்தர் தொட்டதில்லை என்று கூறிவிட முடியாது.சிறுவயதில் இருந்து கரம் கோர்த்து ஓடி விளையாடியவர்கள் தான்.ஆனால் பூவினி பருவமடைந்ததன் பின் நிலவன் அவள் அருகில் வருவதில்லை. பூவினியும் அவன் நெருக்கத்தில் செல்வதில்லை.தவிர்க்க முடியாத சில சமயங்களில் ஏற்படும் இயல்பான தொடுகைகளை அவர்கள் பெரிதாக கருதியதும் இல்லை.ஆனால் இதுபோல் கரம் பற்றிப் பேசும் வழக்கமும் அவர்களிடம் இல்லை.திடீரென நிலவன் கரம் பற்றவும் அவளுக்கு அது ஏதோ புது உணர்வை கொடுக்கவும் கரத்தை உருவிக்கொண்டாள்.ஆனால் அவன் மன்னிப்பு கேட்டதும் ஒருமாதிரி இருந்தது.

லேசான தடுமாற்றமான குரலில் பரவாயில்ல அத்தான் என்றாள்.அவள் முகத்தை ஒரு கணம் கூர்ந்தவன் அதைப்பற்றி வேறு எதுவும் பேசாது

இந்த கடித விடயத்தை அத்தையிடம் கூறினாயா பூவினி??

இவள் தலை இல்லை என்பதாய் ஆடியது.

ஏன்???

எதுக்கு வீணாக பிரச்சனையை பெரிதுபண்ண வேண்டும் என்று எண்ணினேன் அத்தான்.

ஹ்ம்ம் சரி தான்.ஆனால் ஏன் என்னிடம் சொன்னாய்? நான் இதை பெரியவர்களிடம் சொன்னால்??

இல்லை எனக்கு தெரியும் நீங்கள் சொல்லமாட்டீங்கள்.

ம்ஹும்ம்??? என்று புருவத்தை உயர்த்தியவன் ஆனால் நான் இப்போது நேரே சென்று மாமாவிடம் சொல்லப்போகிறேன்.இதெல்லாம் பெரிய விஷயம்.நான் எதுவும் செய்ய முடியாது.நேற்றோடு உன் சுதந்திரம் போச்சு.இனி நீ திருட்டு மாங்காயும் அடிக்க முடியாது.குச்சி ஐசும் சுவைக்க முடியாது. ச்ச் ..ச்ச்.. நீ பாவம் பூவினி என்றான் கண்களில் குறும்பு மிதக்க சீண்டும் குரலில்.


பூவினிக்கு கண்களில் நீர் முட்டியது.பாவி இவனெல்லாம் ஒரு ஆள் என்று இவனிடம் சொன்னால் இப்படி மாட்டி விடப்பாக்கிறானே.எருமை.என்று மனதில் திட்டியபடியே கண்களில் திரண்ட நீரை மறைத்தபடி வாயில் நோக்கி நடந்தாள்.அவள் வாயிலை நெருங்கும் வேளையில் பூவினி என்று அவன் குரல் கேட்டது.திரும்பாமல் அப்படியே நின்றாள்.

ஒரு நமட்டுப்புன்னகையுடன் அவள் அருகில் வந்தவன்.கவலைப்படாதே பூவினி நான் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை இது எல்லாம் சின்ன விடயம் நாமே சமாளிச்சுக்கலாம்.நீ ஒன்றையும் யோசிக்காமல் போய் படி.என்றான்.முகம் மலர கண்ணைத்துடைத்தபடியே அவனை நோக்கி திரும்பியவள் பளிச்சென்ற சிரிப்புடன் நன்றி அத்தான் என்றாள்.

இளமுறுவலுடன் அவளைப் பார்த்தவன் பூவினி என்றான் மீண்டும்.

ம்ம்ம் என்னத்தான்???

உன் பெற்றோரிடம் சொல்ல தயங்குவதைக் கூட என்னிடம் சொல்லுகிறாய். என் மேல உனக்கு அவ்வளவு நம்பிக்கையா??? என்றான் குரலும் பார்வையும் கனிய. புரியாமல் நிமிர்ந்து அவன் பார்வையை சந்தித்தவளுக்கு அன்று இரண்டாம் முறையாக நிலவனின் குரலும் பார்வையும் ஏதோ ஒரு உணர்வை விதைத்தது.ஒரு சில நொடிகள் இருவர் பார்வையும் ஒரு நேர்கோட்டில் சந்தித்துகொண்டன.

சட்டென பார்வையை விலக்கிய நிலவன்.சரி சரி கிளம்பு.நேரமாகுது.போ போய்ப் படி என அவளை விரட்டினான்.

வந்துட்டான்யா அதட்டல் மன்னன் வந்துட்டான்.என்று மனதுக்குள் புலம்பியவாறு அவனுக்கு உதட்டை சுழித்து பழிப்பு காட்டிவிட்டே சென்றாள் பூவினி.

அடுத்தநாள் காலையில் பள்ளிக்கு கிளம்பும் போதே அவளுக்கு சற்று பதட்டமாக இருந்தது.நிலவன் பாத்துக்கொள்வதாக சொல்லிவிட்டான் தான்.ஆனால் பாடசாலை செல்லும் வழியில் அந்த பையன் வந்து ஏதாவது பேசினால் பிரச்சனை பண்ணினால் என்ன செய்வது.மனதுக்குள் பயந்தவாறே தோழிகளுடன் சென்றாள்.அவள் நினைத்தது போலவே ஒரு சந்தில் அந்த பையன் துவிச்சக்கரவண்டியை குறுக்கே விட்டு வழிமறிக்கவும் இவளுக்கு தூக்கிவாரிபோட்டது.பயத்தில் வேர்த்துக்கொட்ட செய்வதறியாது திகைத்து நிற்க பின்னால் இருந்து “பூவினி...” என்ற அழைப்பு கேட்கவும் எல்லை இல்லாத நிம்மதியுடன் அத்தான் என்றபடி திரும்பினாள்.

அவளுக்கு பின்னால் நிலவன் தன் நண்பன் ஒருவனுடன் நின்று கொண்டிருந்தான்.இவள் திரும்பவும்.நீ செல் என்பதைப் போல் கண்ணைக்காட்டவும் இவள் முன்னால் நின்றவனைப் பார்த்தாள்.அவன் பயத்தில் முகம் வெளுக்க வழிவிட்டு விலகி நின்றான்.

பூவினிக்கு சிரிப்பு தான் வந்தது.ஆனால் வீதியில் அதுவும் அந்தமாதிரி சூழ்நிலையில் சிரித்தால் நிலவனின் உலகமகா முறைப்புக்கு ஆளாக வேண்டி வரும் என்பதால் சிரிப்பை தொண்டைக்குழியிலேயே தற்காலிகமாக புதைத்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.


சற்று தூரம் சென்று திரும்பி பார்த்த போது நிலவன் அந்த பையனின் அருகில் சென்று ஒருகையை ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்தபடி முகம் இறுக எதுவோ பேசுவது தெரிந்தது.அவனின் அந்த தோற்றம் பூவினியின் மனதில் முதல் முதலாக அழுத்தமாக பதிந்தது.முதன் முதலாக ஒரு பெண்ணாய் அவனின் கம்பீரத்தை ரசித்தாள்.


அன்று அவன் என்ன பேசினானோ அதன் பிறகு அந்த பையன் பூவினி இருக்கும் திசைப்பக்கம் கூட வருவதில்லை.தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் நேரெதிரே காணவேண்டி வந்தால் கூட தலையை கவிழ்ந்து கொண்டு சென்று விடுவான்.
 
  • Like
Reactions: Krithika ravi