• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீராப்பகை தீர்வானது - 1.

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,332
872
113
Chennai
தீராப்பகை தீர்வானது....

பகுதி – 1.

மும்பை...

சர்வஜித், வேக நடையோடு அந்த விசாலமான படிக்களில் பொறுமையின்றி ஏறிக் கொண்டிருந்தான். அவன் பின்னாலேயே அவனது உதவியாளன் ஹரீஷ் அவனது ஓட்டத்துக்கு ஈடுகொடுத்துக் கொண்டிருந்தான்.

ஹரீஷின் மனதுக்குள் இப்பொழுது ஓடிக் கொண்டிருந்த விஷயம் ஒன்றுதான். ‘கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை. இன்னைக்கு அவன் கண்டம் ஆகாமல் இருக்கணும்’ அவன் தனக்குள் புலம்பியவாறு சென்று கொண்டிருந்தான்.

‘தான் இப்படி யோசிப்பது மட்டும் சர்வஜித்துக்குத் தெரிந்தால் என்ன ஆகும்?’ என எண்ணியவனுக்கு அப்படி ஒரு உதறல் எடுத்தது.

‘ஐயாடியோ... எனக்கு ஏன் இப்படி புத்தி போகுது? த்தூ...’ தன்னைத்தானே துப்பிக் கொண்டவன் மேலே வராண்டாவுக்கு வந்துவிட்டதை அப்பொழுதுதான் உணர்ந்தான்.

“ஹலோ... யார் நீங்க? உங்களை யார் உள்ளே விட்டா?” அங்கே இருந்த வேலைக்காரன் சர்வஜித்தை வேகமாகத் தடுத்தான்.

‘டேய்... யார்ரா நீ?’ மனதுக்குள் அலறிய ஹரீஷ் பாய்ந்து வந்து, அந்த வேலைக்காரனை பிடித்து பின்னால் இழுத்து அவன் உயிரைக் காப்பாற்றினான். ஆனாலும் அவன் உயிருக்கு உத்திரவாதம் கிடையாது என அவனுக்கே தெரியும்.

“சார்... நீங்க போங்க” ஹரீஷ் சர்வஜித்திடம் சொல்ல, இப்படிச் சொன்ன ஹரீஷின் குரலும், உடல்மொழியும் அவன் உள்ளுக்குள் புலம்பியதற்கு எதிர்மாறாக இருந்தது. குரலில் ஒரு இறுக்கமும், உடல்மொழியில் ஒரு இரும்புத் தன்மையும் வெளிப்பட்டது.

ஹரீஷ், சர்வஜித்தின் பாதுகாவலன், அவனது உதவியாளன், அவனது பிஏ என பன்முகம் கொண்டவன். ஆர்மியில் ட்ரெயின் ஆன, பல தற்காப்புக் கலைகள் பயின்ற ஒருவன். ஒரே நேரத்தில் ஐந்துபேர் என்ன பத்துபேர் வந்தாலும் அசால்ட்டாக சமாளிப்பான்.

கறுப்பு நிற பேன்ட் சட்டையில் மட்டுமே எப்பொழுதும் காட்சி அளிப்பான். ஆறடி உயரமும், அதற்கேற்ற உடற்கட்டும் என உரமேறியவன். அவன் பாதுகாக்கும் சர்வஜித்தோ, இவனுக்கு இணையான உயரமும், உடற்கட்டும் கொண்டு இருந்தாலும், அவன் கண்களிலேயே கத்தி வைத்திருப்பான்.

அவன் கண்களை மறைத்து எப்பொழுதும் ஒரு கறுப்புக் கண்ணாடி இடம் பிடித்திருக்கும். அவன் என்ன நினைக்கிறான் என அவனது கண்களைக் கொண்டு யாரும் கண்டுகொள்ளக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு.

சர்வஜித்தும் பல கலைகள் கற்றவன்தான் என்றாலும் அவனாக இறங்கி எதையும் செய்ய மாட்டான். அவனிடம் இருக்கும் படை பலத்தை வைத்தே அனைத்தையும் சாதித்துக் கொள்ளும் வல்லமை கொண்டவன் அவன்.

‘சர்வஜித் இறங்கிச் செய்தால் என்ன ஆகும்?’ என ஹரீஷ் பலமுறை எண்ணி இருக்கிறான். அவனது அந்த ருத்ர தாண்டவத்தை இன்றுமுதல் காணப் போகிறோம் என அவன் எண்ணியிருக்கவே மாட்டான்.

“க்ளீயர் ஹிம்...” அவன் உறுமிவிட்டுச் செல்ல, அடுத்த நொடி ஹரீஷ் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அவனைத் தடுத்தவனை மாடியின் தடுப்புக் கம்பிகளுக்கு அருகே இழுத்துச் சென்றவன், மறு நொடி அவனை அங்கே இருந்து தூக்கி கீழே விசிறி அடித்து இருந்தான்.

“ஆ...ஆ...” அவன் அலறிக்கொண்டே அந்த வேலைக்காரன் கீழே விழ, அவனது அலறல் சத்தம் அந்த இடத்தையே அதிர வைத்தது எனலாம். அவனது அலறலில் மாடி அறைக்குள் ஓய்வில் இருந்த அமைச்சர் துரை பட்டென படுக்கையில் எழுந்து அமர்ந்தார்.

“யார் அலறுவது?” வாய்விட்டே கேட்டவர் படுக்கையில் நேராக எழுந்து அமரும் முன்பு அவரது அறைக்கதவை படாரென திறந்துகொண்டு புயல் வேகத்தில் உள்ளே நுழைந்தான் சர்வஜித்.

அந்த நேரம் அவனை அங்கே அவர் சத்தியமாக எதிர்பார்க்கவே இல்லை. அவனைப் பார்த்த அந்த நொடி, பேயைப் பார்த்த இபெக்ட் தான் கொடுத்தார். நிஜத்தில் அந்த நேரம் அவர் பேயைப் பார்த்திருந்தால் கூட அவர் இவ்வளவு பயந்திருக்க மாட்டார்.

“ச..ச..சர்வஜித்?” அவனது பெயரை உச்சரிக்கும் முன்பாகவே அந்த சில்லென்ற ஏசி அறையிலும் அவருக்கு வியர்த்து வழிந்தது. அவனோ அவரது பதட்டத்தையோ பயத்தையோ கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல், நிதானமாக நடந்து உள்ளே வந்தவன், அங்கே கிடந்த ஒற்றை சோபாவில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்தான்.

“அடடே என் பெயர் கூட ஞாபகம் இருக்கே...” போலியாக சிலாகித்தவன், அறைக்குள் வந்த ஹரீஷை நோக்கி கரத்தை நீட்டினான். அதன் அர்த்தம் அவனுக்குப் புரிய, வேகமாக அவன் கரத்தில் சிகரெட் ஒன்றையும், லைட்டரையும் வேகமாகக் கொடுத்தான்.

“நீ... நீ... நீ எப்படி இங்கே?” துரையிடம் இருந்தது முழு பதட்டம் மட்டுமே.

“என்ன மினிஸ்டர் சார், நாம என்ன அப்படியா பழகி இருக்கோம்?” நம்பியார் மாடுலேஷனில் அவன் கேட்டு வைக்க, அவருக்கு நெஞ்சே அடைத்தது.

“இ...இ... இந்த இடம் எப்படி உனக்குத் தெரியும்?” தன் கேள்வியை அவர் மாற்றிக் கேட்டார். அவர் இருக்கும் இந்த பங்களா, அவரது பினாமி பெயரில் முதல் முதலாக அவர் வாங்கிய பங்களா. இதைப்பற்றி அவரது குடும்பத்தினருக்கே தெரியாது. அப்படி இருக்கையில் சர்வஜித் இங்கே வந்து நின்றால் அவர் அதிராமல் என்ன செய்வார்?

இத்தனைக்கும் அவர் வெளிநாடு சென்றிருப்பதாக கட்சி தலைமையையே நம்ப வைத்துவிட்டு, இங்கே வந்து ஒளிந்து கொண்டிருக்கிறார். அதுவும் சர்வஜித்திடம் இருந்து மறைந்து போக வேண்டியே செய்திருக்க, அவன் தன் கண்முன் வந்து நின்றால் அவரும் என்னதான் செய்ய?

‘ஆண்டவா, போச்சு போச்சு... சிகரெட் வேற பிடிக்கறாரே...’ ஹரீஷ் நிஜத்தில் உள்ளுக்குள் அதிர்ந்தான். சர்வஜித் இரண்டே விஷயங்களுக்கு மட்டுமே சிகரெட் பிடிப்பான்.

ஒன்று, எதிரில் இருப்பவனை மொத்தமாக சாம்பல் ஆக்குவது. இரண்டாவது எதையாவது தீவிரமாக சிந்திக்க வேண்டும் என்றாலோ, மிகத் தீவிரமான டென்ஷனில் இருந்தாலோ மட்டுமே சிகரெட்டைப் பிடிப்பான்.

அப்படி இருக்கையில், இப்பொழுது அமைச்சர் துரைக்கு எதிரிலேயே அமர்ந்து புகை பிடிக்கிறான் என்றால், விஷயம் இன்னது என அவனுக்குத் தெரியாதா என்ன?

சர்வஜித்தோ, வெகு நிதானமாக சிகரட்டைப் பற்ற வைத்தவன், லைட்டரை ஹரீஷிடம் திருப்பிக் கொடுத்தான். சிகரெட்டின் புகையை அத்தனை ஆழ்ந்து அவன் உள்ளிழுக்க, அவனது நுரையீரல் முழுக்க அந்த புகை நிரம்பியது.

அந்த புகையில் கலந்திருந்த நிக்கோட்டின் அதன் வேலையை சரியாகச் செய்ய, அவன் நாடி நரம்பெங்கும் சுறு சுறுவென ஒரு சுகம் பரவியது. உள்ளே இழுத்த புகையை வெகு நிதானமாக வாய்வழியாகவும், மூக்கு வழியாகவும் அவன் வெளியேற்ற, துரை அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

இதயம் துடிக்கும் வேகத்துக்கு அது அவரது நெஞ்சுக்கூட்டைக் கிழித்துக்கொண்டு வெளியே வராதது ஆச்சரியமே. “வாவ்... டிவைன்” அந்த சிகரெட்டின் வாசனையிலும், அது கொடுத்த சுகத்திலும் சர்வஜித் வாய்விட்டு சொன்னான்.

அவன் புகைக்கும் அழகுக்கு, அதைப் பார்க்கும் எவனும் தானும் ஒரு முறையேனும் அந்த புகையை நுகர வேண்டும் என ஆசை கொள்வான். ஆனால் அவனுடம் இருந்த ஹரீஷுக்கு அந்த சிகரெட் தீர்ந்து போகும் முன்னர் என்ன ஆகுமோ என்ற எண்ணம் மட்டுமே அவனுக்குள் ஓடியது.

“தென்?” சர்வஜித் நிதானமாகக் கேட்க, துரைக்கு ஜன்னி கண்டுவிடும் நிலை. தன் கேள்விக்கு பதில் சொல்லாமல், அவன் ஒரு கேள்வியை கேட்டு வைக்க, தொண்டை கவ்வியது.

“எ...எ...ன்ன கேட்கற சர்வஜித்?” அவன் எதைப்பற்றி கேட்கிறான் எனத் தெரிந்தாலும், தன் உதறலை மறைத்துக்கொண்டு கேட்டார்.

சிகரெட்டை மீண்டுமாக புகையை உள்ளிழுத்துக் கொண்டவன், நிதானமாக அந்த அறையைச் சுற்றி பார்வையை சுழல விட்டான். அந்த அறையின் பகட்டும், ஒரு பக்கம் வரிசையாக அடுக்கி வைக்கப் பட்டிருந்த மது வகைகளையும் பார்த்தவன், “வாழ்றார்...” என்றான் ஹரீஷிடம்.

‘ஆம்...’ என்பதுபோல் அவன் தலை அசைக்க,

“ஒரு நிமிஷம், மினிஸ்டர் சாருக்கு நான் என்ன கேட்கிறேன்னு கூட தெரியலை பாரேன். அவ்வளவு மறதி?” என அவன் நிதானமாகக் கேட்டு வைக்க, ஐயோ... அவருக்கு உள்ளுக்குள் பயம் பிடித்துக் கொண்டது.

ஏனென்றால் அவன் கேட்ட தொனியே அப்படி இருக்க, பயம் அவர் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

“அப்போ பினாமி சொத்து, வேற சொந்த சொத்து, கீப்புக்கு கொடுத்த சொத்து, அது பேர்ல இருக்கற சொத்து... இப்படி எதுவுமே மினிஸ்டருக்கு ஞாபகம் இல்லை அப்படித்தானே...?” என்றவன், மீண்டும் ஒரு முறை புகையை சுவைத்தான்.

“ஏ... ஏ... ஏ... நீ... நீ... என்ன சொல்ற?” என்றவர் தன் அலைபேசியை எடுக்க முயல, அதுவோ கை நழுவி கீழே விழுந்தது. ஹரீஷுக்கு அதைப் பார்க்கவே கொஞ்சம் பரிதாபமும், கொஞ்சம் கோபமாகவும் இருக்க, அசையாமல் அப்படியே நின்றான்.

“அதுவா...?” என்றவன் தாடையைத் தேய்த்துக் கொள்ள, துரை தன் வயதையும் மீறி எழுந்து அவன் அருகே ஓடி வந்தார்.

அவர் இப்பொழுது ஆளும் கட்சியின் மினிஸ்டர் என்ற போதிலும் அவரால் அவனிடம் தன் கெத்தை காட்ட முடியவில்லை. ஏனென்றால் அவருக்கு சர்வஜித்தைப் பற்றி முழுதாகத் தெரியும். அவனைப் பகைத்துக் கொண்டால், தன் அரசியல் வாழ்க்கை முதல் அனைத்தும் முடிந்துபோகும் எனப் புரிய, அவனை சமாதானப்படுத்த முயன்றார்.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,332
872
113
Chennai
“சர்வஜித், சர்வஜித்... நீ கேட்கற பெர்மிட்டை உடனே கொடுக்க முடியாத சூழ்நிலையில் நான் இருக்கேன். எனக்கு கொஞ்சம் டைம் கொடு, நான் எல்லாத்தையும் சரி பண்றேன்” அவனிடம் கெஞ்சினார்.

“இனிமேல் எனக்கு உங்க உதவி தேவையில்லை சார். அதை சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன். வரட்டா?” என்றவன் எழுந்துகொள்ள முயல, அவன் கரத்தைப் பற்றிக் கொண்டார்.

“சர்வஜித், நான் சொல்றதை ஒரே ஒரு நிமிஷம் கேளு...” அவனைத் தடுக்க முயல, அவன் தன் குளிர் கண்ணாடியைக் கழட்ட, அவன் கண்களோ ரத்தமென சிவந்து இருந்தது. அதைப் பார்த்தவர் இரண்டு அடி பின்வாங்க, அவன் கரத்தில் கட்டி இருந்த வாட்சோ சின்னதாக ‘பீப்... பீப்... பீப்...’ என ஒலி எழுப்பத் துவங்கியது.

அது துரையின் கவனத்தில் பதியாமல் போனாலும், ஹரீஷின் கவனத்தை எட்ட, உள்ளுக்குள் சற்று டென்ஷன் ஆனான். ஆனாலும் அவன் தன் டென்ஷனை கொஞ்சம் கூட வெளியே காட்டிக் கொள்ளவே இல்லை.

“உன்னோட அறுபது செகென்ட் ஆரம்பிச்சு பத்து செகென்ட் ஆச்சு” நின்ற நிலையிலேயே அவன் உறும, துரைக்கு என்ன சொல்லி சமாளிப்பது எனத் தெரியவில்லை.

“நீ... நீ கேட்கறது என் கட்சிக்காரனுக்கு எதிரா, அவன் தொழிலுக்கு போட்டியா வரும் முயற்சி. என் கட்சிக்காரனை நான் எப்படி பகைச்சுக்கன்னு சொல்லு? அவனை நம்பி ஒரு தொகுதியோட மொத்த ஓட்டும் இருக்கு. எனக்கு கொஞ்சம் டைம் கொடு” நிஜத்தில் அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்.

“ஓ... கட்சி, ஓட்டு, தொகுதி... ம்ஹும்...? அப்போ அதுக்கெல்லாம் கோடிக்கணக்கில் செலவழிக்க கொட்டி அழும் நான் பைத்தியக்காரனா?” அந்த கட்டிடமே அதிர அவன் கத்தி தீர்க்க, அவன் கையில் கட்டியிருந்த கடிகாரம் அதன் உச்ச ‘பீப்பீப்பீப்...’ ஒலியை விடாமல் ஒலிக்கத் துவங்கி இருந்தது.

“சர்வஜித்... சர்வஜித்...” அவர் கெஞ்சிக் கொண்டே இருக்க,

“இங்கே டிவி இல்லையோ?” அவன் கேட்டு முடிக்கும் முன்னர், ஹரீஷ் அங்கே இருந்த தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான்.

ஹரீஷ் தொலைக்காட்சியை உயிர்ப்பித்த மறு நொடி, அவர்களது கட்சியின் செய்திச் சேனல் ஓடத் துவங்கியது.

“அமைச்சர் துரையின் பதவி பறிப்பு. கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டதாக கட்சி தலைமை அறிவிப்பு. முதலமைச்சர் அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதில்” என செய்தி வாசிப்பவள் சொல்லிக் கொண்டிருக்க, துரைக்கு எதுவும் புரியவில்லை.

துரை இடி விழுந்த பனை மரம்போல் அப்படியே நிற்க, “சாவுடா...” என்ற சர்வஜித், சிகரெட் துண்டை கீழே போட்டு, காலால் நசுக்கியவன், அங்கிருந்து வெளியேறத் துவங்கி இருந்தான். அவன் நசுக்கிய சிகரெட் துண்டை வேகமாக தன் கரத்தில் எடுத்துக் கொண்டான் ஹரீஷ்.

அவனது அறையின் வாசல் வரை வந்தவன், “வேற சேனல் எதுவும் மாத்திடாத, தாங்க மாட்ட” என்றவன் சொல்லிச் செல்ல, ஹரீஸ் தன் கையில் இருந்த ரிமோட்டை படுக்கையின்மேல் விசிறியடித்தவன் சர்வஜித்தின் பின்னால் ஓடினான்.

சர்வஜித்தின் கரத்தில் கட்டியிருந்த வாட்ச் அதன் உச்ச ஒலியில் கதறிக் கொண்டிருக்க, அவனோ படிகளில் தன் வேகத்தைக் கூட்டி இருந்தான். ஹரீஷ் அவன் பின்னால் ஓட, அதை அவன் கொஞ்சம் கூட கண்டுகொள்ளவே இல்லை.

துரை செய்திச் சேனலை மாற்றி, வேறு செய்திச் சேனலை வைக்க, “மத்திய அமைச்சரின் காமக் களியாட்டம்” எனச் சொல்லி துரையின் அந்தரங்க வீடியோக்கள் அனைத்தும் அந்த செய்திச் சேனலில் ஒளிபரப்பப் பட்டுக் கொண்டிருந்தது.

ஒன்றா இரண்டா... பாலியல் தொழிலாளி முதல், முன்னணி திரைப்பட நடிகைகள், சீரியல் நடிகைகள். அதில் சிலரை அப்பட்டமாக மிரட்டி தன் இச்சைக்கு பணிய வைத்தது முதல், பல நடிகைகளுக்கு சொத்துக்களாகவும், விலை உயர்ந்த கார், வைர நகைகள் என கொடுத்ததற்கான ஆதாரங்கள் அனைத்தும் ஒன்று விடாமல் வெளியாகி இருந்தது.

அது மட்டுமா? மற்றுமொரு சேனலில் வருமான வரித்துறை அதிகாரிகள் அந்த செய்திச் சேனலுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்.

“மினிஸ்டர் துரை அவர்களில் பினாமி சொத்து விவரங்கள், அவரது பண்ணை வீட்டில் அவர் பதுக்கி வைத்திருக்கும் பணம், மேலும் சில டாக்குமெண்ட்ஸ் எல்லாம் எங்களுக்கு கொரியரின் வந்திருக்கு. இதைப்பற்றிய விசாரணையை நாங்கள் உடனே துவங்கி இருக்கிறோம்” என அவர் சொல்லிக்கொண்டே போக, துரை மரித்துப் போனார்.

இப்பொழுது அவரது அலைபேசியும், அங்கே இருந்த தொலைபேசியும் அவரை இசைத்து அழைக்க, அழைப்பது யார் என அவருக்குத் தெரியாதா என்ன?

‘இதுக்கு அவன் என்னை கொன்னிருக்கலாம்?’ துரை எண்ணிக் கொள்ள, அப்படியே தோய்ந்து போய் படுக்கையில் அமர்ந்துவிட்டார்.

சர்வஜித் கீழே இறங்கி வந்த பொழுது, ஹரீஷ் மாடியில் இருந்து வீசிச் சென்றவன், அங்கே தரையில் எழுந்து அமர்ந்து இருந்தான். அவனைப் பார்த்தவன், அவன் அருகே நெருங்கி, “என்னையே வழி மறிச்சு கை நீட்டுவியா?” என்றவன் அவனது வலக்கரத்தை தரையில் வைத்து அழுத்தி, காலால் முட்டியில் மிதித்தவன், அவன் கரத்தை பின்னால் திருப்பி மிதித்து உடைத்தான் சர்வஜித்.

“ஆ...ஆ...” அவனது அலறல் கொடூரமாக அந்த இடத்தையே நிறைக்க, அதைப்பற்றி அவன் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளவே இல்லை. சர்வஜித்தின் தலை வரைக்கும் டென்ஷன் எகிறி இருக்க, வேகமாக நடந்து காருக்கு வந்தான்.

மணிக்கட்டில் கட்டியிருந்த வாட்ச் இன்னுமே உச்ச நிலையில் விடாமல் கத்திக் கொண்டிருக்க, அவனது பிபி ஏகத்துக்கும் எகிறிக் கொண்டிருந்தது. கழுத்து நரம்போடு சேர்த்து, நெற்றிப்பொட்டில் ஒரு நரம்பு புடைத்து எழ, காருக்குள் ஏறி அமர்ந்தான்.

அவன் பின்னாலேயே ஹரீஷும் காருக்குள் ஏற, மறு நொடி கார் அசுர வேகத்தில் பறந்தது. அவனது பிபியைப் பற்றி ஹரீஷ் கவலைப்பட்ட அளவுக்கு அவன் கண்டுகொள்ளவே இல்லை. தன் நெற்றியைத் தட்டி எதையோ தீவிரமாக சிந்தித்தான்.

“இடைத்தேர்தல் பற்றி முதலமைச்சர் கிட்டே நான் பேசி ஆகணும்” சர்வஜித் சொல்ல, வேகமாக அலைபேசியை எடுத்த ஹரீஷ் யாருக்கோ வேகமாக குறுந்தகவலை அனுப்பி வைத்தான்.

அடுத்த இரண்டே நிமிடங்களில், “ரெண்டு நாள்ல டைம் கொடுக்கறாங்களாம்” அவன் சொல்லிக் கொண்டு இருக்கையிலேயே அவன் கையில் இருந்த அலைபேசி இசைத்தது. அதைக் கேட்ட மறு நிமிடம், சர்வஜித்தின் பிபி எகிற, வேகமாக அதை எடுத்தான் ஹரீஷ்.

அலைபேசியை அவன் ஸ்பீக்கரில் போட, “என்னப்பா...? என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே. இப்போ மத்தியில் வரைக்கும் பிரச்சனை போயிடுச்சு” மறுபக்கம் முதலமைச்சரின் குரல் கேட்க, ஹரீஷ் ஓரவிழிப் பார்வையாக சர்வஜித்தை கவனித்தான்.

அவன் கரத்தை நீட்ட, மறு பேச்சின்றி அவன் கரத்தில் அலைபேசியை கொடுத்துவிட்டான்.

முதலமைச்சர் பேசும் முன்பாகவே, “இந்த தப்பு இன்னொரு முறை நடக்கக் கூடாது. ரெண்டு நாளில் பேசுவோம்” என்றவன் அலைபேசியை வைத்துவிட்டான்.

ஒரு முதலைமைச்சரிடமே இத்தனை திணக்கமாக அவன் பேசுகிறான் என்றால் சர்வஜித் எத்தனை பவர்ஃபுல்லானவன் என்பதை சொல்லித்தான் தெரிந்துகொள்ள வேண்டியது இல்லை. அவன் ஒட்டுமொத்த இந்தியாவையே ஆட்டி வைக்கும் வல்லமை கொண்டவன்.

இந்தியாவின் பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்வது முதல், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மொத்தமும் அவன் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. அவனது இந்த அசுர வளர்ச்சி கடந்த பத்து வருடங்களில் நிகழ்ந்ததுதான்.

மும்பை தொழில் சக்கரவர்த்தி விப்ரூத் திவானின் தத்துப்பிள்ளை என்ற அடையாளத்தோடு இந்த உலகுக்கு அறிமுகமானவன்தான் இந்த சர்வஜித். அவனைப்பற்றி வேறு எதையும் யாராலும் கண்டுகொள்ள முடியவில்லை.

அமெரிக்காவின் ஹார்ட்வேர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்தவன், அனாதை... என அவனைப்பற்றி வெளியே தெரியும் விஷயங்கள் எல்லாம் அவனாக, அவனைப்பற்றி வெளியே சொன்னவையே தவிர, மற்றபடி அவனைப்பற்றிய உண்மை யாருக்கும் தெரியாது.

விப்ரூத் திவானியின் இரு புதல்வர்கள் ஒரு புதல்வி என யாருக்கும் கிடைக்காத அங்கீகாரம் சர்வஜித்க்கு மட்டுமே கிடைத்தது. சர்வஜித்தை அவர் தனது தத்துப்பிள்ளையாக இந்த உலகுக்கு அவனை அறிமுகம் செய்த பொழுது இந்தியாவே அவனைப் பார்த்து சிரித்தது.

ஏனென்றால் விப்ரூத் திவானியின் கடன் அத்தனை கோடியாக இருந்தது. தனது மொத்த சொத்துக்களும் திவால் என அவர் அறிவிக்கப் போகிறார் என காத்திருந்த நேரத்தில்தான் சர்வஜித்தின் வருகை.

விப்ரூத்தின் பிள்ளைகள் அனைவரும் ‘இவன் தத்துப்பிள்ளையா? இல்லையென்றால் உங்க கீப்போட பிள்ளையா?’ எனக் கேட்டு அவரிடம் சண்டை போட்டார்கள். ஆனால் அதற்கான பதிலை அவர் தன் மகன்களுக்கு சாகும் வரைக்கும் கொடுக்கவே இல்லை.

சர்வஜித்தைப் பார்த்து சிரித்தவர்கள் எல்லாம், இரண்டே வருடங்களில் விப்ரூத்தின் மொத்த கடனையும் அடைத்து, புதுத் தொழிலில் கால் பதித்த சர்வஜித்தைப் பார்த்து மூக்கின்மேல் விரலை வைத்தார்கள்.

இரண்டு வருடங்களிலேயே இத்தனை மாற்றம் என்றால், பத்து வருடங்களில் அவன் இந்தியாவின் மிகப்பெரும் சக்தியாக உருமாறி இருப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லையே. அவனுக்குள் மறைந்து கிடக்கும் மர்மங்கள், அவனுக்குள் புதைந்திருக்கும் ஆக்ரோஷம், அவன் பழிவாங்கத் துடிக்கும் மனிதர்கள்... இந்த சர்வஜித்தின் நிழல் பக்கங்கள் எத்தனை எத்தனையோ.

இவனைப்பற்றி முழுதாக அறிந்து கொள்ள அவனைப்பெற்ற தாயாலேயே முடியாத பொழுது, வேறு யாரால் என்ன தெரிந்து கொள்ள முடியும்?
பகை முடிப்பான்......
 

Thani

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 2, 2023
122
34
28
Deutschland
இவன் சரியானடெரரா தான் இருக்கான்.
பாவம் ஹரிஷ் இவனிடம் வந்து மாட்டிவிட்டான்.
 

Malarthiru

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 15, 2023
150
7
28
VILLUPURAM
இவனுக்கு ஏத்த ஜோடி யாரோ 🙄🙄🙄🙄🙄 பாவம் அந்த ஆளு 🙄🙄🙄🙄
ஹரிஷ் 🤗🤗🤗🤗🤭🤭🤭 நல்ல மைண்ட் வாய்ஸ் 🤣🤣🤣🤣