தீராப்பகை தீர்வானது....
பகுதி – 1.
மும்பை...
சர்வஜித், வேக நடையோடு அந்த விசாலமான படிக்களில் பொறுமையின்றி ஏறிக் கொண்டிருந்தான். அவன் பின்னாலேயே அவனது உதவியாளன் ஹரீஷ் அவனது ஓட்டத்துக்கு ஈடுகொடுத்துக் கொண்டிருந்தான்.
ஹரீஷின் மனதுக்குள் இப்பொழுது ஓடிக் கொண்டிருந்த விஷயம் ஒன்றுதான். ‘கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை. இன்னைக்கு அவன் கண்டம் ஆகாமல் இருக்கணும்’ அவன் தனக்குள் புலம்பியவாறு சென்று கொண்டிருந்தான்.
‘தான் இப்படி யோசிப்பது மட்டும் சர்வஜித்துக்குத் தெரிந்தால் என்ன ஆகும்?’ என எண்ணியவனுக்கு அப்படி ஒரு உதறல் எடுத்தது.
‘ஐயாடியோ... எனக்கு ஏன் இப்படி புத்தி போகுது? த்தூ...’ தன்னைத்தானே துப்பிக் கொண்டவன் மேலே வராண்டாவுக்கு வந்துவிட்டதை அப்பொழுதுதான் உணர்ந்தான்.
“ஹலோ... யார் நீங்க? உங்களை யார் உள்ளே விட்டா?” அங்கே இருந்த வேலைக்காரன் சர்வஜித்தை வேகமாகத் தடுத்தான்.
‘டேய்... யார்ரா நீ?’ மனதுக்குள் அலறிய ஹரீஷ் பாய்ந்து வந்து, அந்த வேலைக்காரனை பிடித்து பின்னால் இழுத்து அவன் உயிரைக் காப்பாற்றினான். ஆனாலும் அவன் உயிருக்கு உத்திரவாதம் கிடையாது என அவனுக்கே தெரியும்.
“சார்... நீங்க போங்க” ஹரீஷ் சர்வஜித்திடம் சொல்ல, இப்படிச் சொன்ன ஹரீஷின் குரலும், உடல்மொழியும் அவன் உள்ளுக்குள் புலம்பியதற்கு எதிர்மாறாக இருந்தது. குரலில் ஒரு இறுக்கமும், உடல்மொழியில் ஒரு இரும்புத் தன்மையும் வெளிப்பட்டது.
ஹரீஷ், சர்வஜித்தின் பாதுகாவலன், அவனது உதவியாளன், அவனது பிஏ என பன்முகம் கொண்டவன். ஆர்மியில் ட்ரெயின் ஆன, பல தற்காப்புக் கலைகள் பயின்ற ஒருவன். ஒரே நேரத்தில் ஐந்துபேர் என்ன பத்துபேர் வந்தாலும் அசால்ட்டாக சமாளிப்பான்.
கறுப்பு நிற பேன்ட் சட்டையில் மட்டுமே எப்பொழுதும் காட்சி அளிப்பான். ஆறடி உயரமும், அதற்கேற்ற உடற்கட்டும் என உரமேறியவன். அவன் பாதுகாக்கும் சர்வஜித்தோ, இவனுக்கு இணையான உயரமும், உடற்கட்டும் கொண்டு இருந்தாலும், அவன் கண்களிலேயே கத்தி வைத்திருப்பான்.
அவன் கண்களை மறைத்து எப்பொழுதும் ஒரு கறுப்புக் கண்ணாடி இடம் பிடித்திருக்கும். அவன் என்ன நினைக்கிறான் என அவனது கண்களைக் கொண்டு யாரும் கண்டுகொள்ளக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு.
சர்வஜித்தும் பல கலைகள் கற்றவன்தான் என்றாலும் அவனாக இறங்கி எதையும் செய்ய மாட்டான். அவனிடம் இருக்கும் படை பலத்தை வைத்தே அனைத்தையும் சாதித்துக் கொள்ளும் வல்லமை கொண்டவன் அவன்.
‘சர்வஜித் இறங்கிச் செய்தால் என்ன ஆகும்?’ என ஹரீஷ் பலமுறை எண்ணி இருக்கிறான். அவனது அந்த ருத்ர தாண்டவத்தை இன்றுமுதல் காணப் போகிறோம் என அவன் எண்ணியிருக்கவே மாட்டான்.
“க்ளீயர் ஹிம்...” அவன் உறுமிவிட்டுச் செல்ல, அடுத்த நொடி ஹரீஷ் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அவனைத் தடுத்தவனை மாடியின் தடுப்புக் கம்பிகளுக்கு அருகே இழுத்துச் சென்றவன், மறு நொடி அவனை அங்கே இருந்து தூக்கி கீழே விசிறி அடித்து இருந்தான்.
“ஆ...ஆ...” அவன் அலறிக்கொண்டே அந்த வேலைக்காரன் கீழே விழ, அவனது அலறல் சத்தம் அந்த இடத்தையே அதிர வைத்தது எனலாம். அவனது அலறலில் மாடி அறைக்குள் ஓய்வில் இருந்த அமைச்சர் துரை பட்டென படுக்கையில் எழுந்து அமர்ந்தார்.
“யார் அலறுவது?” வாய்விட்டே கேட்டவர் படுக்கையில் நேராக எழுந்து அமரும் முன்பு அவரது அறைக்கதவை படாரென திறந்துகொண்டு புயல் வேகத்தில் உள்ளே நுழைந்தான் சர்வஜித்.
அந்த நேரம் அவனை அங்கே அவர் சத்தியமாக எதிர்பார்க்கவே இல்லை. அவனைப் பார்த்த அந்த நொடி, பேயைப் பார்த்த இபெக்ட் தான் கொடுத்தார். நிஜத்தில் அந்த நேரம் அவர் பேயைப் பார்த்திருந்தால் கூட அவர் இவ்வளவு பயந்திருக்க மாட்டார்.
“ச..ச..சர்வஜித்?” அவனது பெயரை உச்சரிக்கும் முன்பாகவே அந்த சில்லென்ற ஏசி அறையிலும் அவருக்கு வியர்த்து வழிந்தது. அவனோ அவரது பதட்டத்தையோ பயத்தையோ கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல், நிதானமாக நடந்து உள்ளே வந்தவன், அங்கே கிடந்த ஒற்றை சோபாவில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு அமர்ந்தான்.
“அடடே என் பெயர் கூட ஞாபகம் இருக்கே...” போலியாக சிலாகித்தவன், அறைக்குள் வந்த ஹரீஷை நோக்கி கரத்தை நீட்டினான். அதன் அர்த்தம் அவனுக்குப் புரிய, வேகமாக அவன் கரத்தில் சிகரெட் ஒன்றையும், லைட்டரையும் வேகமாகக் கொடுத்தான்.
“நீ... நீ... நீ எப்படி இங்கே?” துரையிடம் இருந்தது முழு பதட்டம் மட்டுமே.
“என்ன மினிஸ்டர் சார், நாம என்ன அப்படியா பழகி இருக்கோம்?” நம்பியார் மாடுலேஷனில் அவன் கேட்டு வைக்க, அவருக்கு நெஞ்சே அடைத்தது.
“இ...இ... இந்த இடம் எப்படி உனக்குத் தெரியும்?” தன் கேள்வியை அவர் மாற்றிக் கேட்டார். அவர் இருக்கும் இந்த பங்களா, அவரது பினாமி பெயரில் முதல் முதலாக அவர் வாங்கிய பங்களா. இதைப்பற்றி அவரது குடும்பத்தினருக்கே தெரியாது. அப்படி இருக்கையில் சர்வஜித் இங்கே வந்து நின்றால் அவர் அதிராமல் என்ன செய்வார்?
இத்தனைக்கும் அவர் வெளிநாடு சென்றிருப்பதாக கட்சி தலைமையையே நம்ப வைத்துவிட்டு, இங்கே வந்து ஒளிந்து கொண்டிருக்கிறார். அதுவும் சர்வஜித்திடம் இருந்து மறைந்து போக வேண்டியே செய்திருக்க, அவன் தன் கண்முன் வந்து நின்றால் அவரும் என்னதான் செய்ய?
‘ஆண்டவா, போச்சு போச்சு... சிகரெட் வேற பிடிக்கறாரே...’ ஹரீஷ் நிஜத்தில் உள்ளுக்குள் அதிர்ந்தான். சர்வஜித் இரண்டே விஷயங்களுக்கு மட்டுமே சிகரெட் பிடிப்பான்.
ஒன்று, எதிரில் இருப்பவனை மொத்தமாக சாம்பல் ஆக்குவது. இரண்டாவது எதையாவது தீவிரமாக சிந்திக்க வேண்டும் என்றாலோ, மிகத் தீவிரமான டென்ஷனில் இருந்தாலோ மட்டுமே சிகரெட்டைப் பிடிப்பான்.
அப்படி இருக்கையில், இப்பொழுது அமைச்சர் துரைக்கு எதிரிலேயே அமர்ந்து புகை பிடிக்கிறான் என்றால், விஷயம் இன்னது என அவனுக்குத் தெரியாதா என்ன?
சர்வஜித்தோ, வெகு நிதானமாக சிகரட்டைப் பற்ற வைத்தவன், லைட்டரை ஹரீஷிடம் திருப்பிக் கொடுத்தான். சிகரெட்டின் புகையை அத்தனை ஆழ்ந்து அவன் உள்ளிழுக்க, அவனது நுரையீரல் முழுக்க அந்த புகை நிரம்பியது.
அந்த புகையில் கலந்திருந்த நிக்கோட்டின் அதன் வேலையை சரியாகச் செய்ய, அவன் நாடி நரம்பெங்கும் சுறு சுறுவென ஒரு சுகம் பரவியது. உள்ளே இழுத்த புகையை வெகு நிதானமாக வாய்வழியாகவும், மூக்கு வழியாகவும் அவன் வெளியேற்ற, துரை அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.
இதயம் துடிக்கும் வேகத்துக்கு அது அவரது நெஞ்சுக்கூட்டைக் கிழித்துக்கொண்டு வெளியே வராதது ஆச்சரியமே. “வாவ்... டிவைன்” அந்த சிகரெட்டின் வாசனையிலும், அது கொடுத்த சுகத்திலும் சர்வஜித் வாய்விட்டு சொன்னான்.
அவன் புகைக்கும் அழகுக்கு, அதைப் பார்க்கும் எவனும் தானும் ஒரு முறையேனும் அந்த புகையை நுகர வேண்டும் என ஆசை கொள்வான். ஆனால் அவனுடம் இருந்த ஹரீஷுக்கு அந்த சிகரெட் தீர்ந்து போகும் முன்னர் என்ன ஆகுமோ என்ற எண்ணம் மட்டுமே அவனுக்குள் ஓடியது.
“தென்?” சர்வஜித் நிதானமாகக் கேட்க, துரைக்கு ஜன்னி கண்டுவிடும் நிலை. தன் கேள்விக்கு பதில் சொல்லாமல், அவன் ஒரு கேள்வியை கேட்டு வைக்க, தொண்டை கவ்வியது.
“எ...எ...ன்ன கேட்கற சர்வஜித்?” அவன் எதைப்பற்றி கேட்கிறான் எனத் தெரிந்தாலும், தன் உதறலை மறைத்துக்கொண்டு கேட்டார்.
சிகரெட்டை மீண்டுமாக புகையை உள்ளிழுத்துக் கொண்டவன், நிதானமாக அந்த அறையைச் சுற்றி பார்வையை சுழல விட்டான். அந்த அறையின் பகட்டும், ஒரு பக்கம் வரிசையாக அடுக்கி வைக்கப் பட்டிருந்த மது வகைகளையும் பார்த்தவன், “வாழ்றார்...” என்றான் ஹரீஷிடம்.
‘ஆம்...’ என்பதுபோல் அவன் தலை அசைக்க,
“ஒரு நிமிஷம், மினிஸ்டர் சாருக்கு நான் என்ன கேட்கிறேன்னு கூட தெரியலை பாரேன். அவ்வளவு மறதி?” என அவன் நிதானமாகக் கேட்டு வைக்க, ஐயோ... அவருக்கு உள்ளுக்குள் பயம் பிடித்துக் கொண்டது.
ஏனென்றால் அவன் கேட்ட தொனியே அப்படி இருக்க, பயம் அவர் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
“அப்போ பினாமி சொத்து, வேற சொந்த சொத்து, கீப்புக்கு கொடுத்த சொத்து, அது பேர்ல இருக்கற சொத்து... இப்படி எதுவுமே மினிஸ்டருக்கு ஞாபகம் இல்லை அப்படித்தானே...?” என்றவன், மீண்டும் ஒரு முறை புகையை சுவைத்தான்.
“ஏ... ஏ... ஏ... நீ... நீ... என்ன சொல்ற?” என்றவர் தன் அலைபேசியை எடுக்க முயல, அதுவோ கை நழுவி கீழே விழுந்தது. ஹரீஷுக்கு அதைப் பார்க்கவே கொஞ்சம் பரிதாபமும், கொஞ்சம் கோபமாகவும் இருக்க, அசையாமல் அப்படியே நின்றான்.
“அதுவா...?” என்றவன் தாடையைத் தேய்த்துக் கொள்ள, துரை தன் வயதையும் மீறி எழுந்து அவன் அருகே ஓடி வந்தார்.
அவர் இப்பொழுது ஆளும் கட்சியின் மினிஸ்டர் என்ற போதிலும் அவரால் அவனிடம் தன் கெத்தை காட்ட முடியவில்லை. ஏனென்றால் அவருக்கு சர்வஜித்தைப் பற்றி முழுதாகத் தெரியும். அவனைப் பகைத்துக் கொண்டால், தன் அரசியல் வாழ்க்கை முதல் அனைத்தும் முடிந்துபோகும் எனப் புரிய, அவனை சமாதானப்படுத்த முயன்றார்.