பகுதி – 20.
சர்வா அடக்க முடியாத ஆத்திரத்தில் கொதித்துக் கொண்டு இருந்தான். ‘அவ என்னை அடிப்பாளாமா? அதுவும் அத்தனைபேர் முன்னால்?’ என உள்ளுக்குள்ளேயே கொதித்து, புகைத்து சோர்ந்து போனான். தன் அடங்காத ஈகோவுக்கு அப்பொழுது அவன் தீனி போட்டே ஆக வேண்டும்.
தன் அலைபேசியை எடுத்தவன் யாருக்கோ சில கட்டளைகள் பிறப்பிக்க, மறு நிமிடம் வைஷாலியின் வீட்டில் அவளுக்கு துணைக்கென இருந்த அருணா அடித்துப் பிடித்துக்கொண்டு ஊருக்கு கிளம்பி இருந்தாள்.
அவளது தகப்பன் வீட்டில் வழுக்கி விழுந்து காலை முறித்துக் கொண்டார் எனத் தெரிந்த பிறகு அவளால் அங்கே இருக்க முடியுமா என்ன? அந்த காலை உடைத்தது யார் எனவும் நீங்கள் அறிந்துகொள்ள பிரம்மாதமான மூளை எதுவும் தேவை இல்லை.
சர்வஜித், இருந்த இடத்தில் இருந்து தன் வேலையை முடித்து இருந்தான். அவனுக்கு இப்பொழுது உடனே வைஷாலியைப் பார்க்க வேண்டும். அவளை உண்டு இல்லை எனச் செய்தாக வேண்டும். அவனே காரைக் கிளப்பிக்கொண்டு அவள் வீட்டுக்குள்ளும் சென்றுவிட்டான்.
அந்த நேரம், தன் வீட்டின் வாசல்கதவை தாழ் போட்டோமா? இல்லையா என்ற கவனமின்றி வைஷாலி இருந்திருக்க அது அவனுக்கு வசதியாகவும் போயிற்று. பொதுவாகவே இதையெல்லாம் அருணாதான் பார்த்துக்கொள்வாள் என்பதால் அவள் அதைப்பற்றிய நினைப்பின்றி இருந்துவிட்டாள்.
அவன் அங்கே வந்த நேரம் அவள் குளியலறையில் குளித்துக் கொண்டு இருந்தாள். தான் நினைத்ததை நடத்தி முடிக்க அவனுக்கு இரண்டே நாட்கள் தான் தேவைப்பட்டது. அவள் குளித்துக் கொண்டு இருக்கையில், வீட்டுக்குள் அதுவும் அவளது அறைக்குள் ஒருவன் அத்துமீறி நுழைந்து இருப்பான் என்று எல்லாம் அவள் கற்பனை கூட செய்து இருக்க மாட்டாள்.
ஆனால் சர்வஜித் போன்ற ஒருவனை பகைத்துவிட்டு இப்படி அஜாக்கிரதையாக அவள் இருந்திருக்க கூடாதோ? வேட்டை மிருகமென அவளது அறைக்குள் அவன் உலவிக் கொண்டிருந்தான். பாத்ரூம் கதவைத் தட்டி, அவள் முன்னால் சென்று நிற்க அவனுக்கு வெறியே இருந்தாலும், கொஞ்சம் நிதானித்தான்.
ஒரு வேளை அவளை முழுதாக வேட்டையாட பாத்ரூம் போதாது என நினைத்தானோ என்னவோ? இல்லையென்றால் அவள் கதவைப் பூட்டிக்கொண்டு உள்ளேயே இருந்துவிட்டால் என்ன செய்வது என எண்ணினானோ? அது அவனுக்குத்தான் தெரியும்.
ஆனால் குளித்து முடித்தவள், ஒரு டவ்வலை நெஞ்சுக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, தலையிலும் ஒரு டவ்வலை சுற்றியவாறு வெளியே வந்தாள். வந்த மறு நிமிடம் அந்த சிகரெட்டின் நெடி அவளைத் தீண்ட, உள்ளம் திக்கென அதிர்ந்தது.
பார்வையைச் சுழற்றி ‘அவரா? எங்கே இருக்கிறார்?’ என தேடும் முன்பாக, அவள் கட்டியிருந்த டவ்வல் அவன் கரத்தில் இருந்தது.
“ஐயோ... அம்மா... சார்...” நிமிடத்தில் அது யார் எனப் பார்த்துவிட்டவள், தன் மானம் காக்க முயன்றாள்.
அவளது இரு கரங்களையும் கைக்கு ஒன்றாகப் பிடித்து, அங்கே இருந்த சுவரில் அவளை சாய்த்து அவள்மேல் சாய்ந்தான். அவளது தலைக்கு மேலாக அவளது கரங்களை வைத்துப் பிடித்தவன், பார்வையை அவளது மொத்த தேகத்திலும் மேய விட்டான்.
பெண்ணவளோ அவன் செய்கையில் கூனிக் குறுகி, கூசிப் போனாள். அதைவிட பயம், அச்சம்... நெஞ்சடைத்துக் கொண்டு வர, கண்ணீர் கன்னத்தில் கடகடவென இறங்கியது. தன் வெற்று தேகத்தில் அவனது முரட்டு தேகம் மொத்தமாக அழுந்த, தேகம் மொத்தமும் நடுங்கியது.
குளிர்ந்த தேகத்தில் தன்னைத் தாக்கிய அவன் தேகத்தின் வெம்மை, அந்த முரட்டுத்தனம்... அவளால் இம்மியும் அசையக் கூட முடியவில்லை.
“எங்க அம்மா கூட என்னை இது வரைக்கும் தொட்டு அடித்தது இல்லை. நீ என்னை அடிப்பியா? அதுவும் உண்மை என்னவென்று தெரியாமலேயே செய்வியா? இந்த உடம்பை மற்றவர்கள் பார்க்கக் கூடாதுன்னு தானே என்னை அடிச்ச? இப்போ என்ன செய்வ? பார்க்க மட்டும் இல்லை... இன்னும் என்னென்னவோ...” என்றவன் அவள் புழுவாய் துடிப்பதை எல்லாம் கண்டுகொள்ளவே இல்லை.
அவளது கால்கள் இரண்டையும் நிலத்தில் ஊன்றி, தன் காலால் அழுத்தமாக மிதித்தவன், அவளை அசையக்கூட விடவில்லை. அவன் அப்படி தன் கால்களை மிதித்ததில் அதுவேறு வலி உயிர் போனது. ஆனால் அதையெல்லாம் விட அவனது அந்த பார்வை... அந்த நேரம் அவன் கண்களை மறைத்து குளிர் கண்ணாடி இல்லாமல் போக அவன் கண்களை சந்தித்தாள்.
கொஞ்சம் கூட லஜ்ஜையே இன்றி அவன் அவளைப் பார்த்து வைக்க, அந்த கண்களைப் பார்த்து ஏனோ பயம் வரவில்லை. மாறாக சட்டென இவன் கண்களையும், முத்துப்பாண்டியின் கண்களையும் மூளை ஒப்பிட்டுப் பார்த்து திகைத்தது.
“சார்... சார்... உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கறேன், என்னை விட்டுடுங்க. ஒரு பெண் தன் மானத்தைக் காக்க என்ன செய்வாளோ அதைத்தான் நானும் செய்தேன். அது என்னோட அனிச்சை செயல்தான்... ப்ளீஸ் சார்... என்னை விட்டுடுங்க” அவள் மறந்தும் தன் மாமா, அப்பா என யாரையும் இழுக்கவே இல்லை.
“அந்த நாய் உன்மேலேயே கை வைக்கும்போது உன்னோட அந்த வேகம் எல்லாம் எங்கே போயிருந்தது?” அவன் கேட்டுவைக்க, வைஷாலிக்கு மூளை மொத்தமும் வேலை நிறுத்தம் செய்து இருந்தது.
‘அதுதானே... அப்போ எல்லாம் என் எதிர்வினை இப்படி இல்லையே...’ அவளுக்கே தன்னைக் குறித்து சட்டென பிடிபட மறுத்தது.
எதையாவது பேசி இருக்கும் நிலையை இன்னும் சிக்கலாக்கிக் கொள்ளவும் மனம் விரும்பவில்லை. அவர்களைப் பற்றி பேசினால் நிலைமை இன்னும் மிகவும் மோசமாகும் என அவளது பட்டறிவு சொன்னது.
ஏற்கனவே ஒரு முறை அவனிடம் பலமாக அடி வாங்கி இருந்தாளே. இப்பொழுதும் அவனிடம் சிறைப்பட்டுதானே இருக்கிறாள். அப்படி இருக்கையில், அவனிடமிருந்து தன் மானத்தைக் காப்பது மட்டுமே முக்கியம் எனத் தோன்றியது.
“என்னை நீ எப்படி அடிக்கலாம்? இந்த உடம்பை நான் பார்த்துவிடக் கூடாது என்றுதானே என்னை அடித்தாய்? எங்கே இப்போ என்னை அடி பார்ப்போம்... இங்கே பார்... உன்னை நான் பார்க்கறேன்... இங்கே பார்...” என்றவன் வெறிபிடித்த நிலையில் இருந்தான்.
“உன்னை ஏதாவது செய்யணுமே... அப்படிச் செய்யலைன்னா எரிஞ்சுகிட்டிருக்கும் என் மனசு அடங்காது...” என்றவனது கண்களில் சுடர்விட்ட வன்மம்... அவளைக் கொன்று கூறு போட்டது. வன்மம்தானே தவிர, அவளை துகில் உரிக்கும் பார்வையாக அது இல்லை என அவளது மூளை மொழிபெயர்ப்பதை நம்புவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் அவள் இருந்தாள்.
அவன் பார்வை மொத்தமும் தன் மேனியில் இருக்க, உடம்பே கூசிப் போனது. ‘இப்படியே தன் உயிர் போய்விட்டால் பரவாயில்லை என அவள் மனம் தவியாய் தவித்தது. அவன் தன்னை என்ன செய்வானோ?’ என்ற எண்ணம் கொடுக்கும் அதிர்வு அதிகமாக இருக்க, நெஞ்சே வெடித்துவிடும் நிலை.
ஒரு பக்கம் அவன்மேல் நீர்பூத்த நெருப்பாக அடிமனதில் இருக்கும் காதல், அவன் செய்கையை எதிர்க்காமல் ரசிக்கச் சொல்ல, பயந்தே போனாள்.
தன் மேனியை அவன் பார்வைக்கு வெளிச்சம் போடுவதைத் தவிர அவளால் எதுவுமே செய்ய முடியவில்லை. அவன் பிடியில் இருக்கும் தன் கரத்தைக் கூட பிரிக்க முடியாமல் அவள் திணறுகையில், அவளால் என்னதான் செய்துவிட முடியும்?
“உங்களை அடிச்சதுக்கு எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?” அவள் தேம்பினாள். எல்லாம் முறையாக நடந்தால் பரவாயில்லை, முறை தவறி நடக்கும் எதையும் ரசிக்க முடியாதே.
“ஆமா... இது தண்டனை இல்லை... இதைவிட பெருசா...” என்றவன் அவளது கரத்தை விட, வேகமாக கீழே கிடந்த டவ்வலை எடுத்துக் கொள்ளப் போனாள். ஆனால் அதற்கு அவன் விட வேண்டுமே, ஒரு மானை ஓடவிட்டு வேட்டையாடும் மனநிலையில் அவன் இருக்க, அவள் எப்படி தப்பிக்க?
“நான் கெட்டவன் தான்... ஆனா கேடுகெட்டவன் இல்லை. ஒரு பொண்ணை தப்பா ட்ரீட் பண்ணிட்டான்னு என்மேலே பழியை போட்டுட்ட இல்ல... விட மாட்டேன்...” அவனது பேச்சு, அவளுக்குள் இறங்கி அவளை சுழற்றி அடித்தது.
அவனிடம் இருப்பது ஒரு நியாயமான தார்மீக கோபம் என அந்த நொடி அவளுக்குப் புரிந்தது. தன்னை விளக்கிவிட்டால் அவனைத் தேக்கிவிடலாம் என புத்தி சொன்னது. ‘எப்படி? எப்படி? எப்படி செய்யப் போகிறேன்?’ என சிந்திக்கையிலேயே, அவன் பார்வைகள் தன்மேல் நிலைக்க, குறுகிக் போனாள்.
அவள் டவ்வலை சுற்றிக் கொள்ளப் போக, அதற்கு அவன் அனுமதிக்கவே இல்லை. அவளைக் கொத்தாகத் தூக்கி கட்டிலில் விசிறி அடித்தவன், அவள்மேல் முழுதாகப் படர்ந்தான். “சார்... என்னை விட்டுடுங்க சார்... என்னை நாசம் பண்ணிடாதீங்க.
“நீங்க இப்படிப் பண்ணீங்கன்னா சாகறதைத் தவிர எனக்கு வேற வழியே இல்லை. உங்களை அடித்ததற்காக எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? என்னை மன்னிச்சுடுங்க சார்...” அவள் பேசப் பேச, அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவன் செவிகளுக்குள் ஊடுருவி அவனை உறையச் செய்தது.
அவனது மொத்த செயல்பாடுகளும் அப்படியே நின்றுபோக, அதையெல்லாம் அவள் உணரவே இல்லை. அவனிடம் கோபம் கொண்டு, ‘என் மாமாவை வைத்து உன்னை என்ன செய்கிறேன் பார்’ என அவளுக்கும் சவால்விட ஆசை தான். ஆனால் அது அவளுக்கே பிடிக்காத செய்கை என்கையில் என்ன செய்ய?
அதுவும் அவனைப்பற்றி முழுதாகத் தெரியும் என்ற பிறகு, எப்படி அவனை எதிர்க்க?
“ப்ளீஸ் சார்... என்னை விட்டுடுங்க... இப்படிப் பண்ணாதீங்க. என்னோட கற்போட விளையாடாதீங்க. இன்னைக்கு வரைக்கும் நீங்க எந்த பொண்ணையும் ஏறெடுத்து கூட பார்த்தது இல்லைன்னு சொன்னீங்களே. அதை கொஞ்சம் ஞாபகப்படுத்திப் பாருங்க.
“உங்க கால்ல வேணா விழுந்து மன்னிப்பு கேட்கறேன். நம்ம ஆபீஸ்ல எல்லார் முன்னாடியும் உங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேட்பது என்றாலும் செய்யறேன்” அவன் செயல்படாமல் அமைதியாக அப்படியே இருக்கிறான் என்பது எல்லாம் அவளுக்கு புரியவே இல்லை.
அவனை விலக்க முயன்று போராடி, முடியாமல் சோர்ந்து அவள் கதறி அழத் துவங்கி இருந்தாள். இன்றோடு தான் கட்டிக் காத்து வந்த கற்பு களவாடப் படப் போகிறது என நினைக்கவே தன் உயிர் போய்விடாதா என ஏங்கினாள்.
அவன் தன்னைவிட்டு விலகவே போவதில்லை எனத் தோன்ற, வாய்விட்டு அவள் கதறி அழ, அந்த அழுகை அவனை என்னவோ செய்தது. அவனது தாயின் அழுகையும், கண்ணீரும், பேச்சுக்களும், ஒரு நாள் அவர் நின்ற நிலையும் கண்முன் நிழலாட, அப்படியே இருந்தான்.
அவள் கழுத்தில் முகம் புதைத்து இருந்தவன், சட்டென நிமிர்ந்து அவளைப் பார்த்தான். ஒரு நொடி அந்த பார்வையில் வந்துபோன ஏதோ ஒன்று அவளை ஊடுருவியது. அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து அவள் பார்வையை மறைத்தது.
“ஷ்...ஷ்... அழாத... அழாத...” அவன் சொல்ல, அவளுக்கு அது எங்கே கேட்டதாம்? தன்னை நாசம் செய்யப் போகிறான் என்பதிலேயே அவள் இருக்க, வாய்விட்டே அழுது கொண்டிருந்தாள். அவனை அடித்து, பிராண்டி என காயம் கொடுக்கவும் செய்தாள். ஆனால் அவன் அதையெல்லாம் தூசிபோல் கடக்கையில் அதற்கு மேலே அவளால் முடியவில்லை.
எவ்வளவு நேரம் பெண்ணவளால் போராட முடியும்? சோர்வும், களைப்பும் சேர, அழுகையும் ஆற்றாமையுமாக பொங்கித் தீர்த்தாள்.
“ஏய்... இப்போ நான் உன்னை எதுவுமே செயலை. இப்போ நீ வாயை மூடப் போறியா இல்லையா? இல்லன்னா ஏதாவது செய்தால்தான் வாயை மூடுவியா?” அவன் போட்ட அதட்டலில், கத்தலில் தேகம் மொத்தமும் நடுநடுங்கிப் போனது.