• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீராப்பகை தீர்வானது - 20.

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,259
318
113
Chennai

பகுதி – 20.

சர்வா அடக்க முடியாத ஆத்திரத்தில் கொதித்துக் கொண்டு இருந்தான். ‘அவ என்னை அடிப்பாளாமா? அதுவும் அத்தனைபேர் முன்னால்?’ என உள்ளுக்குள்ளேயே கொதித்து, புகைத்து சோர்ந்து போனான். தன் அடங்காத ஈகோவுக்கு அப்பொழுது அவன் தீனி போட்டே ஆக வேண்டும்.

தன் அலைபேசியை எடுத்தவன் யாருக்கோ சில கட்டளைகள் பிறப்பிக்க, மறு நிமிடம் வைஷாலியின் வீட்டில் அவளுக்கு துணைக்கென இருந்த அருணா அடித்துப் பிடித்துக்கொண்டு ஊருக்கு கிளம்பி இருந்தாள்.

அவளது தகப்பன் வீட்டில் வழுக்கி விழுந்து காலை முறித்துக் கொண்டார் எனத் தெரிந்த பிறகு அவளால் அங்கே இருக்க முடியுமா என்ன? அந்த காலை உடைத்தது யார் எனவும் நீங்கள் அறிந்துகொள்ள பிரம்மாதமான மூளை எதுவும் தேவை இல்லை.

சர்வஜித், இருந்த இடத்தில் இருந்து தன் வேலையை முடித்து இருந்தான். அவனுக்கு இப்பொழுது உடனே வைஷாலியைப் பார்க்க வேண்டும். அவளை உண்டு இல்லை எனச் செய்தாக வேண்டும். அவனே காரைக் கிளப்பிக்கொண்டு அவள் வீட்டுக்குள்ளும் சென்றுவிட்டான்.

அந்த நேரம், தன் வீட்டின் வாசல்கதவை தாழ் போட்டோமா? இல்லையா என்ற கவனமின்றி வைஷாலி இருந்திருக்க அது அவனுக்கு வசதியாகவும் போயிற்று. பொதுவாகவே இதையெல்லாம் அருணாதான் பார்த்துக்கொள்வாள் என்பதால் அவள் அதைப்பற்றிய நினைப்பின்றி இருந்துவிட்டாள்.

அவன் அங்கே வந்த நேரம் அவள் குளியலறையில் குளித்துக் கொண்டு இருந்தாள். தான் நினைத்ததை நடத்தி முடிக்க அவனுக்கு இரண்டே நாட்கள் தான் தேவைப்பட்டது. அவள் குளித்துக் கொண்டு இருக்கையில், வீட்டுக்குள் அதுவும் அவளது அறைக்குள் ஒருவன் அத்துமீறி நுழைந்து இருப்பான் என்று எல்லாம் அவள் கற்பனை கூட செய்து இருக்க மாட்டாள்.

ஆனால் சர்வஜித் போன்ற ஒருவனை பகைத்துவிட்டு இப்படி அஜாக்கிரதையாக அவள் இருந்திருக்க கூடாதோ? வேட்டை மிருகமென அவளது அறைக்குள் அவன் உலவிக் கொண்டிருந்தான். பாத்ரூம் கதவைத் தட்டி, அவள் முன்னால் சென்று நிற்க அவனுக்கு வெறியே இருந்தாலும், கொஞ்சம் நிதானித்தான்.

ஒரு வேளை அவளை முழுதாக வேட்டையாட பாத்ரூம் போதாது என நினைத்தானோ என்னவோ? இல்லையென்றால் அவள் கதவைப் பூட்டிக்கொண்டு உள்ளேயே இருந்துவிட்டால் என்ன செய்வது என எண்ணினானோ? அது அவனுக்குத்தான் தெரியும்.

ஆனால் குளித்து முடித்தவள், ஒரு டவ்வலை நெஞ்சுக்கு குறுக்காக கட்டிக்கொண்டு, தலையிலும் ஒரு டவ்வலை சுற்றியவாறு வெளியே வந்தாள். வந்த மறு நிமிடம் அந்த சிகரெட்டின் நெடி அவளைத் தீண்ட, உள்ளம் திக்கென அதிர்ந்தது.

பார்வையைச் சுழற்றி ‘அவரா? எங்கே இருக்கிறார்?’ என தேடும் முன்பாக, அவள் கட்டியிருந்த டவ்வல் அவன் கரத்தில் இருந்தது.

“ஐயோ... அம்மா... சார்...” நிமிடத்தில் அது யார் எனப் பார்த்துவிட்டவள், தன் மானம் காக்க முயன்றாள்.

அவளது இரு கரங்களையும் கைக்கு ஒன்றாகப் பிடித்து, அங்கே இருந்த சுவரில் அவளை சாய்த்து அவள்மேல் சாய்ந்தான். அவளது தலைக்கு மேலாக அவளது கரங்களை வைத்துப் பிடித்தவன், பார்வையை அவளது மொத்த தேகத்திலும் மேய விட்டான்.

பெண்ணவளோ அவன் செய்கையில் கூனிக் குறுகி, கூசிப் போனாள். அதைவிட பயம், அச்சம்... நெஞ்சடைத்துக் கொண்டு வர, கண்ணீர் கன்னத்தில் கடகடவென இறங்கியது. தன் வெற்று தேகத்தில் அவனது முரட்டு தேகம் மொத்தமாக அழுந்த, தேகம் மொத்தமும் நடுங்கியது.

குளிர்ந்த தேகத்தில் தன்னைத் தாக்கிய அவன் தேகத்தின் வெம்மை, அந்த முரட்டுத்தனம்... அவளால் இம்மியும் அசையக் கூட முடியவில்லை.

“எங்க அம்மா கூட என்னை இது வரைக்கும் தொட்டு அடித்தது இல்லை. நீ என்னை அடிப்பியா? அதுவும் உண்மை என்னவென்று தெரியாமலேயே செய்வியா? இந்த உடம்பை மற்றவர்கள் பார்க்கக் கூடாதுன்னு தானே என்னை அடிச்ச? இப்போ என்ன செய்வ? பார்க்க மட்டும் இல்லை... இன்னும் என்னென்னவோ...” என்றவன் அவள் புழுவாய் துடிப்பதை எல்லாம் கண்டுகொள்ளவே இல்லை.

அவளது கால்கள் இரண்டையும் நிலத்தில் ஊன்றி, தன் காலால் அழுத்தமாக மிதித்தவன், அவளை அசையக்கூட விடவில்லை. அவன் அப்படி தன் கால்களை மிதித்ததில் அதுவேறு வலி உயிர் போனது. ஆனால் அதையெல்லாம் விட அவனது அந்த பார்வை... அந்த நேரம் அவன் கண்களை மறைத்து குளிர் கண்ணாடி இல்லாமல் போக அவன் கண்களை சந்தித்தாள்.

கொஞ்சம் கூட லஜ்ஜையே இன்றி அவன் அவளைப் பார்த்து வைக்க, அந்த கண்களைப் பார்த்து ஏனோ பயம் வரவில்லை. மாறாக சட்டென இவன் கண்களையும், முத்துப்பாண்டியின் கண்களையும் மூளை ஒப்பிட்டுப் பார்த்து திகைத்தது.

“சார்... சார்... உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கறேன், என்னை விட்டுடுங்க. ஒரு பெண் தன் மானத்தைக் காக்க என்ன செய்வாளோ அதைத்தான் நானும் செய்தேன். அது என்னோட அனிச்சை செயல்தான்... ப்ளீஸ் சார்... என்னை விட்டுடுங்க” அவள் மறந்தும் தன் மாமா, அப்பா என யாரையும் இழுக்கவே இல்லை.

“அந்த நாய் உன்மேலேயே கை வைக்கும்போது உன்னோட அந்த வேகம் எல்லாம் எங்கே போயிருந்தது?” அவன் கேட்டுவைக்க, வைஷாலிக்கு மூளை மொத்தமும் வேலை நிறுத்தம் செய்து இருந்தது.

‘அதுதானே... அப்போ எல்லாம் என் எதிர்வினை இப்படி இல்லையே...’ அவளுக்கே தன்னைக் குறித்து சட்டென பிடிபட மறுத்தது.

எதையாவது பேசி இருக்கும் நிலையை இன்னும் சிக்கலாக்கிக் கொள்ளவும் மனம் விரும்பவில்லை. அவர்களைப் பற்றி பேசினால் நிலைமை இன்னும் மிகவும் மோசமாகும் என அவளது பட்டறிவு சொன்னது.

ஏற்கனவே ஒரு முறை அவனிடம் பலமாக அடி வாங்கி இருந்தாளே. இப்பொழுதும் அவனிடம் சிறைப்பட்டுதானே இருக்கிறாள். அப்படி இருக்கையில், அவனிடமிருந்து தன் மானத்தைக் காப்பது மட்டுமே முக்கியம் எனத் தோன்றியது.

“என்னை நீ எப்படி அடிக்கலாம்? இந்த உடம்பை நான் பார்த்துவிடக் கூடாது என்றுதானே என்னை அடித்தாய்? எங்கே இப்போ என்னை அடி பார்ப்போம்... இங்கே பார்... உன்னை நான் பார்க்கறேன்... இங்கே பார்...” என்றவன் வெறிபிடித்த நிலையில் இருந்தான்.

“உன்னை ஏதாவது செய்யணுமே... அப்படிச் செய்யலைன்னா எரிஞ்சுகிட்டிருக்கும் என் மனசு அடங்காது...” என்றவனது கண்களில் சுடர்விட்ட வன்மம்... அவளைக் கொன்று கூறு போட்டது. வன்மம்தானே தவிர, அவளை துகில் உரிக்கும் பார்வையாக அது இல்லை என அவளது மூளை மொழிபெயர்ப்பதை நம்புவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் அவள் இருந்தாள்.

அவன் பார்வை மொத்தமும் தன் மேனியில் இருக்க, உடம்பே கூசிப் போனது. ‘இப்படியே தன் உயிர் போய்விட்டால் பரவாயில்லை என அவள் மனம் தவியாய் தவித்தது. அவன் தன்னை என்ன செய்வானோ?’ என்ற எண்ணம் கொடுக்கும் அதிர்வு அதிகமாக இருக்க, நெஞ்சே வெடித்துவிடும் நிலை.

ஒரு பக்கம் அவன்மேல் நீர்பூத்த நெருப்பாக அடிமனதில் இருக்கும் காதல், அவன் செய்கையை எதிர்க்காமல் ரசிக்கச் சொல்ல, பயந்தே போனாள்.

தன் மேனியை அவன் பார்வைக்கு வெளிச்சம் போடுவதைத் தவிர அவளால் எதுவுமே செய்ய முடியவில்லை. அவன் பிடியில் இருக்கும் தன் கரத்தைக் கூட பிரிக்க முடியாமல் அவள் திணறுகையில், அவளால் என்னதான் செய்துவிட முடியும்?

“உங்களை அடிச்சதுக்கு எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?” அவள் தேம்பினாள். எல்லாம் முறையாக நடந்தால் பரவாயில்லை, முறை தவறி நடக்கும் எதையும் ரசிக்க முடியாதே.

“ஆமா... இது தண்டனை இல்லை... இதைவிட பெருசா...” என்றவன் அவளது கரத்தை விட, வேகமாக கீழே கிடந்த டவ்வலை எடுத்துக் கொள்ளப் போனாள். ஆனால் அதற்கு அவன் விட வேண்டுமே, ஒரு மானை ஓடவிட்டு வேட்டையாடும் மனநிலையில் அவன் இருக்க, அவள் எப்படி தப்பிக்க?

“நான் கெட்டவன் தான்... ஆனா கேடுகெட்டவன் இல்லை. ஒரு பொண்ணை தப்பா ட்ரீட் பண்ணிட்டான்னு என்மேலே பழியை போட்டுட்ட இல்ல... விட மாட்டேன்...” அவனது பேச்சு, அவளுக்குள் இறங்கி அவளை சுழற்றி அடித்தது.

அவனிடம் இருப்பது ஒரு நியாயமான தார்மீக கோபம் என அந்த நொடி அவளுக்குப் புரிந்தது. தன்னை விளக்கிவிட்டால் அவனைத் தேக்கிவிடலாம் என புத்தி சொன்னது. ‘எப்படி? எப்படி? எப்படி செய்யப் போகிறேன்?’ என சிந்திக்கையிலேயே, அவன் பார்வைகள் தன்மேல் நிலைக்க, குறுகிக் போனாள்.

அவள் டவ்வலை சுற்றிக் கொள்ளப் போக, அதற்கு அவன் அனுமதிக்கவே இல்லை. அவளைக் கொத்தாகத் தூக்கி கட்டிலில் விசிறி அடித்தவன், அவள்மேல் முழுதாகப் படர்ந்தான். “சார்... என்னை விட்டுடுங்க சார்... என்னை நாசம் பண்ணிடாதீங்க.

“நீங்க இப்படிப் பண்ணீங்கன்னா சாகறதைத் தவிர எனக்கு வேற வழியே இல்லை. உங்களை அடித்ததற்காக எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? என்னை மன்னிச்சுடுங்க சார்...” அவள் பேசப் பேச, அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவன் செவிகளுக்குள் ஊடுருவி அவனை உறையச் செய்தது.

அவனது மொத்த செயல்பாடுகளும் அப்படியே நின்றுபோக, அதையெல்லாம் அவள் உணரவே இல்லை. அவனிடம் கோபம் கொண்டு, ‘என் மாமாவை வைத்து உன்னை என்ன செய்கிறேன் பார்’ என அவளுக்கும் சவால்விட ஆசை தான். ஆனால் அது அவளுக்கே பிடிக்காத செய்கை என்கையில் என்ன செய்ய?

அதுவும் அவனைப்பற்றி முழுதாகத் தெரியும் என்ற பிறகு, எப்படி அவனை எதிர்க்க?

“ப்ளீஸ் சார்... என்னை விட்டுடுங்க... இப்படிப் பண்ணாதீங்க. என்னோட கற்போட விளையாடாதீங்க. இன்னைக்கு வரைக்கும் நீங்க எந்த பொண்ணையும் ஏறெடுத்து கூட பார்த்தது இல்லைன்னு சொன்னீங்களே. அதை கொஞ்சம் ஞாபகப்படுத்திப் பாருங்க.

“உங்க கால்ல வேணா விழுந்து மன்னிப்பு கேட்கறேன். நம்ம ஆபீஸ்ல எல்லார் முன்னாடியும் உங்க கால்ல விழுந்து மன்னிப்பு கேட்பது என்றாலும் செய்யறேன்” அவன் செயல்படாமல் அமைதியாக அப்படியே இருக்கிறான் என்பது எல்லாம் அவளுக்கு புரியவே இல்லை.

அவனை விலக்க முயன்று போராடி, முடியாமல் சோர்ந்து அவள் கதறி அழத் துவங்கி இருந்தாள். இன்றோடு தான் கட்டிக் காத்து வந்த கற்பு களவாடப் படப் போகிறது என நினைக்கவே தன் உயிர் போய்விடாதா என ஏங்கினாள்.

அவன் தன்னைவிட்டு விலகவே போவதில்லை எனத் தோன்ற, வாய்விட்டு அவள் கதறி அழ, அந்த அழுகை அவனை என்னவோ செய்தது. அவனது தாயின் அழுகையும், கண்ணீரும், பேச்சுக்களும், ஒரு நாள் அவர் நின்ற நிலையும் கண்முன் நிழலாட, அப்படியே இருந்தான்.

அவள் கழுத்தில் முகம் புதைத்து இருந்தவன், சட்டென நிமிர்ந்து அவளைப் பார்த்தான். ஒரு நொடி அந்த பார்வையில் வந்துபோன ஏதோ ஒன்று அவளை ஊடுருவியது. அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து அவள் பார்வையை மறைத்தது.

“ஷ்...ஷ்... அழாத... அழாத...” அவன் சொல்ல, அவளுக்கு அது எங்கே கேட்டதாம்? தன்னை நாசம் செய்யப் போகிறான் என்பதிலேயே அவள் இருக்க, வாய்விட்டே அழுது கொண்டிருந்தாள். அவனை அடித்து, பிராண்டி என காயம் கொடுக்கவும் செய்தாள். ஆனால் அவன் அதையெல்லாம் தூசிபோல் கடக்கையில் அதற்கு மேலே அவளால் முடியவில்லை.

எவ்வளவு நேரம் பெண்ணவளால் போராட முடியும்? சோர்வும், களைப்பும் சேர, அழுகையும் ஆற்றாமையுமாக பொங்கித் தீர்த்தாள்.

“ஏய்... இப்போ நான் உன்னை எதுவுமே செயலை. இப்போ நீ வாயை மூடப் போறியா இல்லையா? இல்லன்னா ஏதாவது செய்தால்தான் வாயை மூடுவியா?” அவன் போட்ட அதட்டலில், கத்தலில் தேகம் மொத்தமும் நடுநடுங்கிப் போனது.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,259
318
113
Chennai
அவன் முகம் தன் முகத்துக்கு நெருக்கமாக இருக்க, அந்த கோப முகமும், கனல் கக்கும் விழிகளும் அவனது பேச்சும், அவளை அப்படியே அடங்கிப் போகச் செய்தது. அதிலும் அவனது வார்த்தைகள் செவிகளுக்குள் நுழைந்து, மூளையை எட்டி, அதை அவள் புரிந்துகொள்ள சில பல நொடிகள் தேவைப்பட்டது.

அவள் கப்பென அடங்கிப் போக, “ஆனாலும் உன்னை எதுவுமே செய்யாமல் விடறது... நோ...” என்றவன் அவள் இதழ்களை மொத்தமாக கவ்வினான். அப்படி ஒரு ஆவேசமான முத்தம்... அவள் இதழ்கள் இரண்டும் மரத்துப்போய், ரத்தம் துளிர்த்துவிடும் அளவுக்கான முத்தம்.

அவன் ஈகோவுக்கு அந்த நொடி தீனிபோட்டே ஆகவேண்டிய நிலையில் இருப்பது அவளுக்குப் புரிந்தது. தன் கற்பு கொள்ளை போவதை விட, இதழ்களை அவன் கொள்ளையிடுவது எவ்வளவோ பரவாயில்லை எனத் தோன்ற அவனை விட்டுவிட்டாள். அவனது ஈகோ சமாதானப்பட்டாலே ஆயிற்று என அவளுக்குப் புரிய அடங்கிப் போனாள்.

அந்த அவன் முத்தத்தை ரசிக்க முயன்றாள். அவன்மேல் காதல் கொண்ட மனது அதைத்தான் செய்தது. ‘ஒரு கிஸ் கூட ஒழுங்கா பண்ணத் தெரியலை... எதுக்கு இப்படி கடிச்சு வைக்கறார்?’ என மனம் நினைக்க, நொந்து போனாள்.

முட்டாள்த்தனமாக எதையாவது செய்து, அவனை ட்ரிகர் செய்ய அவள் விரும்பவில்லை. கடைவிழியோரம் கண்ணீர் வழிய, இமைகளை அழுத்தமாக மூடிக் கொண்டாள். அவனாக அவளை விட்டு விலகும் வரைக்கும் அவள் எந்த ரிஸ்கும் எடுக்கவில்லை.

‘இது போதும்’ என அவன் முடிவெடுத்த பிறகு, அவள் இதழ்களை இறுதியாக கவ்வி சுவைத்துவிட்டு விலகி எழ, அப்பொழுதுதான் நிம்மதியாக உணர்ந்தாள். வேகமாக தன் அருகே இருந்த போர்வையால் தன்னை மறைத்துக் கொண்டாள். அவனைப் பார்க்காமல் வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

கண்ணீர் அதன் போக்கில் வழிய, இதழில் துளிர்த்த ரத்தத்தை தன் நாவால் துடைத்துக் கொண்டாள். அவன் அங்கே இருந்து சென்றுவிட்டால் பரவாயில்லை என உள்ளம் தவிக்க, அதை அவனிடம் சொல்ல முடியாமல் இதழை அழுத்தமாக இறுக மூடிக் கொண்டாள்.

தன் கற்பு தப்பிவிட்டது என சந்தோஷப்பட்டுக் கொள்வதா? இல்லையென்றால் இத்தனை வருடங்களாக தான் பொத்தி பாதுகாத்த தன் தேகத்தை அவன் மொத்தமாக பார்த்துவிட்டானே என வருந்துவதா? உள்ளமே மரத்துப்போன ஒரு நிலை.

“எழுந்து ட்ரஸ் மாத்திக்கோ...” அவன் சொல்ல, அவள் அசையவே இல்லை.

அவள் அசையாமல் போகவே, “நானே மாத்தி விடணும்னு எதிர்பார்க்கறியா?” அவன் ஒரு மாதிரி குரலில் கேட்க, எரிக்கும் விழிகளால் அவனைப் பார்த்தாள்.

“இப்போ நீ ட்ரஸ் மாத்தலைன்னா, நான் வேற மாதிரி முடிவெடுக்க வேண்டி இருக்கும். என்னை டெம்ப்ட் பண்ணாதே” அவன் பார்வை இப்பொழுது அவளை மேலிருந்து கீழாக போர்வையின் மீதாகவே வருடியது.

“நீ... நீ... நீங்க வெளியே போங்க...” நெஞ்சை முட்டிக்கொண்டு வந்தாலும் சொன்னாள்.

“ஓ... என் முன்னாடி ட்ரஸ் மாத்த மாட்ட?” என்றவன், “நான் கண்ணை மூடிக்கறேன்...” என்னால் அவ்வளவுதான் முடியும் என அவன் சொல்லாமல் சொல்ல, அதற்கு மேலே அவனிடம் வாதாட முடியாது என அவளுக்குப் புரிந்து போனது.

அவள் வேகமாக எழுந்து பரபரப்பாக ஆடை மாற்றிக் கொள்ள, அவன் இம்மியும் அசையாமல் அப்படியே அமர்ந்து இருந்தான். இமைகளை மூடிக் கொண்டு இருந்தானா? திறந்து வைத்திருந்தானா? என்ற ஆராய்ச்சிக்குள் எல்லாம் அவள் போக விரும்பவில்லை.

அவன் தன் முடிவை மாற்றிக் கொண்டிருக்கிறான் என்பதே அவளுக்கு நம்ப முடியாததாக இருந்தது. தற்கொலை எண்ணத்தைப் போல, காமமும் அந்த நொடி நேர உந்துதல் தானே, அந்த நொடியைக் கடந்துவிட்டால், மனத்தைக் கட்டுப்படுத்தி விட்டால் போதும். அந்த கட்டுப்பாடு அவனிடம் இருக்க, தெளிந்துவிட்டான்.

அவனுக்கு அருகே செல்வது ஆபத்து என உணர்ந்தாளோ என்னவோ, அவள் தூரமாகவே நின்றுகொண்டாள். அவனை நேருக்குநேர் பார்க்கவும் அவளால் முடியவில்லை. தேகம் இன்னுமே கூசிக் கொண்டிருக்க, மனம் ஓய்ந்து போனது.

அவனை எழுந்து செல் எனச் சொல்ல மனம் உந்தினாலும், வாயை இறுக மூடிக் கொண்டாள். “நாளைக்கு உன் கைவிரலில் ஒரு நகம் கூட இருக்கக் கூடாது” அவன் உறும, வேகமாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவன் முகம், கழுத்து, கன்னம் என அவளது நகக் கீறல்கள் அத்தனையாக இருந்தது. ‘நீ செய்ததற்கு இதுவே குறைவுதான்’ என எண்ணியவள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“உன்மேல் நான் கை வச்சேனா?” அவன் கேட்க, ‘கையைத் தவிர, உன் உடம்பே என்மேலே பட்டுதுடா... அதுவும் உன் கண்ணு...’ இமைகளை மூடிக்கொண்டு, முகத்தையே திருப்பிக் கொண்டாள். அவன் நியாயத்தை கேட்க அநியாயமாக இருந்தது.

ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தவன், ஆழ்ந்து புகைத்தான். புகையை நிதானமாக வெளியேற்ற அவன் பக்கம் அவள் திரும்பவே இல்லை.

“இது அநியாயம்... தனியா இருக்கற பொண்ணுகிட்டே உங்க வீரத்தை காட்டுவீங்களா? நீங்க செய்தது எவ்வளவு பெரிய தப்புன்னு உங்களுக்குப் புரியவே இல்லையா? அங்கே இருந்த ட்ரஸ்ஸை எடுத்துப் போட்டது அவ்வளவு பெரிய தப்பா?” உள்ளம் பொறுக்காமல் கேட்டுவிட்டாள். தன் பேச்சு அவனை ட்ரிகர் செய்துவிடக் கூடாதே என்ற பயம் அடிமனதைப் பிரண்டினாலும் அவனிடம் சொன்னாள்.

“ஓ... ஆபீஸ்ல அத்தனைபேர் முன்னால் இதைச் செய்திருக்கணுமோ?” அவன் கேட்டுவைக்க, அதிர்ந்து விழித்தாள்.

“அத்தனைபேர் முன்னாடி ஒரு பொண்ணோட ட்ரஸ்ஸை கழட்டறது உங்களுக்கு சின்ன விஷயமா?” என்றவளுக்கு மனதே ஆறவில்லை.

“உண்மை என்னன்னு புரியாமல் வார்த்தையை விடாதே” அவன் இவ்வளவு பொறுமையாக பேசுபவனே கிடையாது ஆனாலும் அவளிடம் விளக்கம் கொடுத்தான். இதைச் செய்யவேண்டிய அவசியம் இல்லை என்றாலும் செய்தான். அவனுக்குள் ஒலித்த அந்த குரல் அவனைப் பேச வைத்தது.

“விஷயம் எதுவா வேணா இருக்கட்டும், நீங்க செய்தது தப்பு. அத்தனைபேர் முன்னாடி... இப்போ கூட என் மானமே போச்சு. இன்னும் கொஞ்ச நாளில் எனக்குக் கல்யாணம், இந்த நேரத்தில் இப்படி... உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா?” தன் கையறு நிலையைக் கொண்டு அவனிடம் சொல்ல, அதுவும் வேறு விதமாகவே போனது.

அவள் அமைதியாக இருந்திருந்தால் எப்படியோ? தனக்கு திருமணம் எனச் சொல்லிவிட, அவன் ‘ட்ரிகர்’ ஆனான். ‘இவளுக்குப் பிடிக்கவில்லை என்றாலும், அவனோட இவளுக்கு கல்யாணம்னு சொல்ல முடியுதா? விட மாட்டேன்’ அந்த நொடி முடிவெடுத்தான்.

“என்ன சொன்ன? என்ன சொன்ன? கல்யாணமா? மாப்பிள்ளை யார்... அந்த தெருப்பொறுக்கி முத்துப்பாண்டியா? அவனுக்கு இருக்கு... அவனுக்கு ஒரு சூப்பரான கல்யாணப்பரிசு ரெடி பண்ணிடுவோமா? ஒரே கல் ரெண்டு மாங்கா” அவன் சொல்ல, மிரண்டு விழித்தாள்.

அவளது மிரட்சியைப் பார்த்தவன், இதழ்களுக்குள் வன்மமாக புன்னகைத்தான். அவன் சொல்ல வருவது அவளுக்குப் புரியவே இல்லை. ஆனால் அவன் சொன்ன விஷயம் இன்னது என அவளுக்குத் தெரிய வந்த பொழுது அவளால் செயல்படவே முடியவில்லை.

அதுவும் அன்று அலுவலகத்தில் அவள் வேலையாக இருக்க, அவளை எம்டி பார்க்க விரும்புவதாக உதவியாளன் வந்து சொன்னான். அதைக் கேட்ட உடனேயே நிஜத்தில் உள்ளுக்குள் அதிர்ந்து போனாள்.

அவள் ஒரு மாதிரி நிற்கவே, அவளைக் கலைத்த ரூபி, “என்ன ஷாலு... ஏன் ஷாக் ஆயிட்ட? அதான் எந்த பிரச்சனையும் ஆகலையே” தோழி சர்வாவை அடித்ததில் என்ன பிரச்சனை ஆகப் போகிறதோ எனப் பயந்தாள். ஆனால் அப்படி எதுவும் நடக்காமல் போகவே அவள் கொஞ்சம் நிம்மதியாக இருந்தாள்.

சர்வஜித் வைஷாலியின் வீட்டுக்குப் போனதோ, அவளிடம் அத்துமீறி நடந்துகொள்ளப் பார்த்ததோ எதுவும் ரூபிக்குத் தெரியாது. அதை வைஷாலி தோழியிடம் சொல்லவும் இல்லை. அது வெளியே சொல்லிக் கொள்ளும் அளவுக்கு நல்ல விஷயமா என்ன?

ஆனால் சர்வஜித்தைப் பற்றி தெரிந்தவளாக, அவன் தன்னை இத்தோடு விட்டுவிடுவான் என்ற நம்பிக்கையே அவளுக்கு இல்லை. அதுவும் இறுதியாக அவன் சொன்ன விஷயத்திலேயே அவளது மனம் உழன்று கொண்டிருந்தது.

‘என்னவோ பெருசா செய்யப் போறார்... என்ன அது?’ அவளுக்குள் ஓடிக் கொண்டிருந்தது இதுதான். அவள் பயந்தது போலவே, அவன் இப்பொழுது தன்னை அழைக்க, அவளுக்கு நெஞ்சுக்குள் நீர் வற்றிப் போனது.

“ம்... ஆமா... நான் பார்த்துட்டு வர்றேன்...” என்றவள் பின்னிக்கொண்ட கால்களை எட்டிப் போட்டு நடந்தாள். அங்கே செல்லவில்லை என்றால், அதற்கான விளைவுகள் வேறாக இருக்கும் என புத்தி சொல்லவே அதைச் செய்தாள்.

அவள் அறைக்குள் நுழைகையில் தன் சுழல் நாற்காலியில் அமர்ந்து அவன் புகைத்துக் கொண்டு இருந்தான். நெஞ்சுக்கூடு உலர்ந்து போக, அவன் முன்னால் நிற்கவே என்னவோ போல் இருந்தது. அவன் தன்னை எப்படிப் பார்ப்பான் என நினைக்கவே தேகம் கூசியது.

“அன்னைக்கு உனக்கு கல்யாணம்னு சொன்னல்ல... சோ... கல்யாணப்பரிசு ரெடி பண்ணி இருக்கேன். பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்றியா?” என்றவன் தன் மடிக்கணினியில் ஒரு பட்டனைத் தட்ட, எதிரில் இருந்த தொலைகாட்சி உயிர் பெற்றது.

அவன் சொன்ன விதமே வயிற்றில் புளியைக் கரைத்தது. ‘எதுவோ பெரிதாக வரப் போகிறது’ என அவளது உள்மனது சொல்ல, அதை பிசிறே இன்றி உண்மையாக்கினான் சர்வஜித்.

தொலைக்காட்சியில் காட்சிகள் விரிய, அது அவளது பாத்ரூம் என்பதை நொடியில் உணர்ந்து கொண்டாள். அடுத்ததாக அவள் உள்ளே வருவது, ஒவ்வொரு ஆடையாக... அதற்கு மேலே அந்த காட்சியைக் காண முடியாமல் போக, அங்கே இருந்த பேப்பர் வெயிட்டை எடுத்து அந்த தொலைக்காட்சியில் விசிறி அடித்தாள்.

அதன் திரை நொறுங்கிப் போக, “இதெல்லாம் அநியாயம்...” கண்ணீர் வழிய அவனிடம் சொன்னாள்.

“இந்த உடம்பை யாரும் பார்த்துடக் கூடாதுன்னு தானே என்னை அத்தனைபேர் முன்னால் கை நீட்டி அடிச்ச. இப்போ இதை எல்லாருக்கும் போட்டுக் காட்டிட்டா?” அவன் சொல்ல, நீர் நிறைந்துவிட்ட விழிகளோடு அவனை வெறித்தாள்.

“அன்னைக்கு அவ்வளவு தூரம் செய்துமா உங்க கோபம் அடங்கலை?” தாங்க முடியாமல் கேட்டாள்.

“இல்லையே... ஐ படத்துல விக்ரம் சொல்ற மாதிரி, ‘அதுக்கும் மேலே’ செய்யத்தான் தோணுது” அவன் இரக்கமே இன்றி சொல்ல, அவளுக்கு தலையில் இடி விழுந்த உணர்வு. தன் கெஞ்சல்கள், மறுப்புகள் எதுவுமே வேலைக்கு ஆகாது என அவளுக்குப் புரிந்து போனது.

“இப்போ உங்களுக்கு என்னதான் வேணும்?” இதைத் தவிர அவள் அவனிடம் வேறு என்ன கேட்டுவிட முடியும்?

“இது ஒரு நல்ல கேள்வி...” என்றவன் சில பல நிமிடங்கள் பேசவே இல்லை.

“நீ அவனைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது” தோளைக் குலுக்கியவாறே சொன்னவன், ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டான். அத்தனை ஆழமாக அதைப் புகைத்தவன், அந்த புகையை வெளியிட அது அந்த வாசனை அவளை மயக்கியது.

அவன் தன் பதிலுக்காக காத்திருப்பது புரிய, “அது என் கையில் இல்லை” அதுதானே நிஜம். நிஜத்தில் எதுவுமே செய்ய முடியாது என அவளுக்குத் தெரியுமே.

“அது என் பிரச்சனை இல்லை” என்றவன் அசால்ட்டாக தோளைக் குலுக்கினான். அவளோ கையறு நிலையில் கதறிக் கொண்டிருந்தாள். அவள் மட்டும் என்ன விருப்பப்பட்டா அந்த திருமணத்துக்கு தயாராகி இருக்கிறாள்?

அவன் புருவம் நெரிய அவளைப் பார்த்திருக்க, “எனக்கு அந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை. ஆனா அந்த கல்யாணத்தில் இருந்து என்னால் தப்பிக்கவும் முடியாது. நீங்கதான் உங்களை ரொம்ப பெரிய ஆள்ன்னு சொல்லிக்கறீங்களே, நீங்களே இந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்தி என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க” என்றாள்.

அவள் அப்படிச் சொல்ல, அவன் கண்கள் ஒளிர்ந்தது. “என்ன சவாலா?” என்றவன், அந்த புகையை ரசித்தான், நிகோட்டினின் விறுவிறுப்பை சுவாசித்தான்.

“ஆமா... சவால்தான்...” கொஞ்சம் கூட பயமின்றி சொன்னாள். இங்கே அவன் ப்ளே செய்கிறானா? இல்லையென்றால் அவளா? என்றே புரியாத நிலை.

“நான் ஜெயிச்சுட்டா?” அவன் கேட்க,

“நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கறேன். உங்க ரகசியம் என்னை விட்டு எங்கேயும் போகாது. என் உயிரையே விடச் சொன்னாலும் நான் செய்யறேன்” அவள் சொல்லிக் கொண்டே போக, அவளையே ஆராய்சியாகப் பார்த்திருந்தான்.

அவனது குளிர்கண்ணாடிக்குப் பின்னால் அந்த விழிகள் அவளை ஆராய்வதை அவள் உணரவே இல்லை.

அவனை மடக்கிவிட்டதாக அவளும், அவளை வீழ்த்திவிட்டதாக அவனும் நினைக்க, நிஜத்தில் இங்கே யாரின் கணக்கு வென்றது என யாருக்குத் தெரியும்?

பகை முடிப்பான்.....
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,259
318
113
Chennai
adei sarva ippadi oru reaction ay expect pannala

அவனே கொஞ்சம் கோபக்காரன், அவன்கிட்டே போய் இப்படி வம்பு வச்சுகிட்டா அவனும் வேற என்னதான் செய்வான்?
 
  • Sad
Reactions: shasri