• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீராப்பகை தீர்வானது - 24.

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,259
254
113
Chennai
பகுதி – 24.

சர்வஜித்துக்கும், வைஷாலிக்கும் திருமணம் முடிந்து முழுதாக மூன்று மாதங்கள் நிறைவடைந்து இருந்தது. வைஷாலியும், விசாலாட்சியும் இப்பொழுது கன்னியாகுமரி பங்களாவில்தான் இருந்தார்கள். அங்கே இருந்த ‘மால்’லை முழுதாக வைஷாலியின் பொறுப்பில் விட்டிருந்தான்.

அவளுக்குத் துணையாக ரூபியும், அவளது கணவன் ஹரீஷும் எப்பொழுதும் அவளுடனே இருந்தார்கள். ரூபி, ஹரீஷின் திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் கடந்து இருந்தது. அதுவும் வைஷாலியின் முயற்சியால் மட்டுமே அவ்வளவு சீக்கிரம் சாத்தியமாகி இருந்தது.

சர்வஜித் தன்னவளை தேனிலவுப் பயணத்துக்கு என அழைத்துச் சென்று கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு மேல் பல நாடுகளை அவளுக்கு சுற்றிக் காட்டினான். அவளிடம் ஒரே ஒரு கேள்விதான் கேட்டான்.

“உனக்கு எந்த நாட்டுக்குப் போகணும்?” அவன் கேட்டு வைக்க,

“நீங்கதான் ரொம்ப வித்தியாசமான ஆள் ஆச்சே... என்னை சர்ப்ரைஸ் பண்ணுங்க. உங்களுக்கு என்னை அவ்வளவு தூரம் சர்ப்ரைஸ் பண்ண முடியுதுன்னு நானும் பார்க்கறேன்” அவள் அவனைச் சீண்டவென்றே சொன்னாள்.

அதற்குப் பின் நடந்தவை எல்லாம்... அவள் யோசிக்கையிலேயே அங்கே வந்தாள் ரூபி. “ஷாலு... மால்’க்கு கிளம்பலாமா?” இருவருக்கும் இந்த அட்மின் வேலை புதியது என்றாலும், சீக்கிரமே பழகிக் கொண்டார்கள்.

அவர்களுக்கு உதவி செய்யத்தான் பலர் இருந்தார்களே. அப்படி இருக்கையில் அவர்களுக்கு வேலை பழக கடினமா என்ன? நூற்றைம்பது கடைகள், ஐந்து மல்டிப்ளக்ஸ் தியேட்டர்கள். ஒரு தளம் முழுக்கவே ப்ளே ஏரியா என அவர்கள் கவனிக்க நிறையவே இருந்தது.

கடைகளில் வரும் பிரச்சனைகளை அவர்கள் சமாளிக்க வேண்டிய தேவை இல்லை என்றாலும், தியேட்டர் அனைத்தும் சர்வஜித்தின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. அதை கவனிக்க மேனேஜர், சூப்பர்வைசர், கார்ட்ஸ் என இருந்தாலும், சில நேரம் இவர்களே நேரடியாக தலையிட வேண்டிய அவசியமும் இருந்தது.

“கிளம்பலாம் ரூபி... இன்னைக்கு காலையிலேயே ஒரு கம்ப்ளெயின்ட்” புலம்பலாகச் சொன்னாள்.

“இப்போவா? என்னவாம்?” ரூபி சலிப்பாக கேட்டாள். அங்கே வரும் நிறைய பிரச்சனைகள் கோபாலின் கையாட்களால் மட்டுமே வந்தது. அதையும் ஹரீஷ் அங்கே இருப்பதால் வெகு சுலபமாகவே கையாண்டு கொண்டிருந்தார்கள்.

“சீட்டுக்கு அடியில் எலி ஓடுச்சாம்?” வைஷாலி சொல்லிவிட்டு கடகடவென சிரித்தாள்.

“அதுக்கு ஏன்டி இப்படி சிரிக்கற?” புரியாமல் கேட்டாள்.

“இல்ல அந்த ஃபோன் வரும்போது ஹரீஷ் இங்கேதான் இருந்தாங்களா, அவங்ககிட்டே ஃபோனைக் கொடுத்துட்டேன். அவர் டீல் பண்ணார் பார்... செம ‘ஏ’ யா போச்சு” அவள் கண்ணடிக்க, ரூபி அவனை சூடாகப் பார்த்தாள்.

“உன் முன்னாடியேவா பேசினார்?” சின்னக் குரலில் கேட்டவள், அவனைப் பார்த்து பல்லைக் கடித்தாள். ஹரீஷ் புருவம் நெரிய அவளைப் பார்த்தவன், குழப்பமாக வைஷாலியையும் ஒரு பார்வை பார்த்தான்.

“லூசே என் முன்னாடி அப்படி பேசுவாரா? உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? அவர் மறைவாகத்தான் போய் பேசினார், நான்தான் அவங்களை இவர் எப்படி டீல் பண்றார்ன்னு தெரிஞ்சுக்க வேண்டி மறைந்து இருந்து ஒட்டுக் கேட்டேன். ஆனால் என் காதே கூசிப் போச்சுன்னா பார்த்துக்கோ” சின்னக் குரலில் சொல்லி இன்னுமே சிரித்தாள்.

“என் மானத்தை வாங்கணும்னே இவர் இதெல்லாம் பண்றார்” கடுகடுவென சொன்னாள்.

“அவர் உன் மானத்தை வாங்கறாரா?” வைஷாலி ஒரு மாதிரி குரலில் கேட்டு கண்ணடிக்க, குப்பென சிவந்து போனாள்.

“ஷாலு... ப்ளீஸ்டி... அதை எல்லாம் மறந்துடு” கெஞ்சினாள்.

“எதை மறக்கச் சொல்ற? நாங்க ஹனிமூன் போயிட்டு வந்த மறு நாள் என்னைப் பார்க்க வந்தவ செய்யற வேலையாடி அது?” அடிக்குரலில் கேட்டாள்.

“கர்த்தரே... அது ஏதோ உணர்ச்சிவசப்பட்டு...” சொல்லிக் கொண்டே வந்தவள், வைஷாலி பார்த்த பார்வையில் வாயை இறுக மூடிக் கொண்டாள்.

“ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுட்ட தான்” அவள் இன்னுமே பேச, அவள் இடுப்பில் நறுக்கென கிள்ளி வைத்தாள்.

“ஸ்... ஆ...” இடுப்பை தேய்த்துக் கொண்டவாறே அவள் அலற, விசாலாட்சி அங்கே வந்துவிட்டார்.

“அடடா... ரெண்டுபேரும் சேர்ந்தால் சின்னப்பிள்ளைகள் மாதிரி அடிச்சுக்க வேண்டியது. ஆளுக்கு ரெண்டு பிள்ளை பெத்துக்கற வயசாவுது, இன்னும் என்ன கிள்ளி விளையாடிகிட்டு இருக்கீங்க?” கோபமே இல்லாத குரலில் கோபம் காட்டினார்.

அவரது பேச்சில் இரு பெண்களுமே ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டார்கள். “அத்த, எனக்கு சீனியர் இவ இருக்கா. நீங்க என்ன என்னையும் இவ கூட கூட்டு சேர்க்கறீங்க?” ரூபி சொல்ல, இப்பொழுது அவள் இடுப்பை வைஷாலி கிள்ளி வைத்தாள்.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது... ரெண்டுபேரும் சீக்கிரமே பேரன் பேத்தியை பெத்துத் தர்ற வழியைப் பாருங்க. இப்போ உங்களுக்கு நேரமாகல? கிளம்பிப் போங்க...” அவர்களை விரட்டினார்.

ஹரீஷும், ரூபியும் கூட ஒன்றாக அவர்கள் வீட்டிலேயே தனிப் போர்ஷனில்தான் இருந்தார்கள். அந்த பங்களாவின் பக்கவாட்டில் விருந்தினர் அறைகள் என தனியாக இருக்க, அங்கேதான் இவர்கள் இருந்தார்கள்.

ஹரீஷ் தான் தனியாக வீடு பார்த்துக் கொள்வதாகச் சொன்ன பொழுது விசாலாட்சி தான் அதை அனுமதிக்கவில்லை. “உனக்கு இருபத்திநாலு மணி நேரமும் இவங்களோட இங்கேதான் வேலை. உன் பொண்டாட்டி வைஷாலி கூட வேலை பார்க்கப் போறா. இதில் தனியா எங்கே போற? எதுவும் வேண்டாம்...” அவர் முடிவாகச் சொல்லிவிட்டார்.

ஹரீஷும், ரூபியும் எவ்வளவோ பேசிப் பார்த்தும் அவர் அனுமதிக்கவே இல்லை. “உனக்கு தனியா வாழ்க்கையை அனுபவிக்கணும், எங்க கூட இருந்தால் அது டிஸ்டப் ஆகும்னு நீ நினைச்சா தாராளமா போ, நான் உன்னைத் தடுக்கலை” என்றவர் சென்றுவிட, அதற்கு மேலே அவர்கள் எங்கே போக? அதுவும் பெற்ற தாய்க்கு இணையாக அவர் பாசம் காட்ட, ஹரீஷ் அவரைவிட்டுச் செல்ல நினைக்கவே இல்லை.

பெண்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு ஹரீஷ் கிளம்ப முயல, “அச்சோ... ஃபோனை ரூமிலேயே விட்டுட்டேன். எடுத்துட்டு வர்றேன்” என்றவள் செல்ல, தன்னவளை ஹரீஷ் பிடித்துக் கொண்டான்.

“என்னை எதுக்கு முறைச்ச?” என்றவாறே காரின் மறுபக்கம் அவளை இழுத்துச் சென்றான்.

“ஃபோன்ல பேசும்போது அக்கம் பக்கம் பார்த்து பேச மாட்டீங்க? அதுவும் கெட்ட வார்த்தை எல்லாம் பேசி இருக்கீங்க?” அவள் கோபமாக கேட்க, அவனோ அவள் இதழில் பட்டென முத்தம் வைத்தான்.

“வெளியே வச்சு என்ன காரியம் பண்றீங்க?” ரூபி பதற, அவனோ மீண்டும் முத்தமிட, இந்தமுறை அவன் அவளைவிட்டு விலக மறுத்தான்.

“போகலாம்...” என்ற அவளது குரலில் பதறி அவனைத் தள்ளிவிட்டவள், தோழியின் அருகே வந்தாள். அவர்கள் இருவரும் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டார்கள். ஹரீஷின் பார்வை தன்னவளை தொட்டு மீள, ‘கண்ணை நோண்டிடுவேன்’ என்பதுபோல் அவளோ விழிகளை உருட்டினாள்.

அவனோ அதைக் கண்டு கண்களால் சிரிக்க, ரூபி வேகமாக முகத்தை திருப்பிக் கொண்டாள். அங்க அருகில் இருந்த வைஷாலி அவளையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருக்க, இவளோ பிடிபட்ட உணர்வில் விழித்தாள்.

“நீயாடி இது?” வைஷாலி தோழியிடம் கேட்டாள்.

‘மறுபடியும் இவகிட்டேயா சிக்கணும்?’ என நொந்து போனாள். அதே நேரம், இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடந்தது அவள் நினைவுக்கு வந்தது. வைஷாலியின் திருமணத்திற்குப் பிறகு, அவள் தேனிலவு சென்றுவிட ரூபி கொஞ்சம் தனிமையில் தவித்துப் போனாள்.

கூடவே சர்வஜித் ஹரீஷை தன் கண் முன்னால் வைத்து அடித்த பிறகு, ஹரீஷ் அவளை விட்டு கொஞ்சம் ஒதுங்கிக் கொண்டான். வைஷாலி ஊருக்குச் சென்றுவிட்ட பிறகு, அந்த பதினைந்து நாட்களில் ஹரீஷிடம் பேச எவ்வளவோ முயன்றாள்.

ஆனால் அதற்கு அவன் சந்தர்ப்பம் வழங்கவே இல்லை. இதற்கு இடையில் அவளுக்கு திருமணத்தை முடித்தே ஆகவேண்டும் என அவளது அப்பா ராமராஜன் சொல்லத் துவங்கி இருந்தார். கூடவே அவர் வரன்களை வேறு பார்க்க, தவித்துப் போனாள்.

அவள் ஹரீஷைக் காணாமலே போயிருந்தால் எப்படியோ? கண்டுவிட்ட பிறகும் அவன் கண்டுகொள்ளாமல் சென்றிருந்தால் எப்படியோ? ஆனால் அவன் தன்னிடம் நெருங்கி வருவதுபோல் இருக்க, அவள் மனதுக்குள் அத்தனை சலனம்.

அவன் தன்னிடம் எதையோ பேச நினைத்தானே, அது என்னவென்று முழுதாக கேட்டுவிடுவது என முடிவெடுத்தாள். வைஷாலியும் இங்கே இருந்து செல்லும் முன்னர் அவளிடம் அதைத்தான் அழுத்திச் சொல்லிவிட்டுச் சென்றாள்.

“உன்னால் அவரை மறக்க முடியாது ரூபி. அவரை மறந்துட்டேன்னு உன்னை நீயே ஏமாத்திட்டு இருக்க. அப்படி மறந்திருந்தால் உங்க அப்பா மாப்பிள்ளை பார்க்கிறேன் எனச் சொன்ன உடனேயே அதற்கு நீ சம்மதம் சொல்லி இருப்ப. இப்படி தவிச்சுகிட்டு உட்கார்ந்து இருக்க மாட்ட.

“அவரோட அத்தியாயத்துக்கு முழுசா ஒரு முடிவைக் கட்டாமல், மேலோட்டமா இருக்கும் இந்த கோபத்தை புடிச்சு வச்சுட்டு வாழ்க்கை முழுக்க கஷ்டப்படாத ரூபி. ஒருத்தர் மேலே நம்ம மனசு போயிடுச்சுன்னா, அந்த நினைப்பு நம்ம உயிர் உள்ள வரைக்கும் மறையாது.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,259
254
113
Chennai
“நீ அவரை தண்டிக்கிறதா நினைச்சு, உன்னை நீயே தண்டிச்சுக்கற ரூபி. எனக்கு உன்னைப்பற்றி நல்லா தெரியும்... சோ... நிதானமா யோசிச்சு நல்ல முடிவா எடு” எனச் சொல்லிச் சென்றாள்.

ரூபியும் நிறைய யோசித்தாள். தன்னால் ஹரீஷின் நினைப்பின்றி இன்னொருவனோடு வாழ முடியுமா என யோசிக்க, நிச்சயம் முடியாது என்ற பதிலே கிடைத்தது. அதற்குப் பிறகுதான் அவனிடம் பேசவே முடிவெடுத்தாள். ஆனால் ஹரீஷால் நின்று அவள் முகம் பார்த்து பேச முடியவில்லை.

அவள் முன்னால் சர்வஜித்திடம் இருந்து அடி வாங்கியது அத்தனை அவமானமாக இருந்தது. சர்வஜித் அடித்த காரணம் வேறாக இருக்கலாம். ஆனால்... அவன் வாங்கிய அடி நிஜம் ஆயிற்றே. ரூபி தான் அவளை தொல்லை செய்வதாக, அத்தனை மோசமாக சொல்லிவிட்ட பிறகு, அவன் எப்படி அவள் முகம் பார்க்க?

நாட்கள் சென்றுகொண்டே இருக்க, வைஷாலியின் திருமணம், அதைத் தொடர்ந்து மேலும் பத்து நாட்கள் ஹரீஷ் அவர்களோடு துணைக்கு எனச் சென்றுவிட்டான். எனவே அவளால் அவனிடம் பேசவே முடியவில்லை.

அவளது பதிலுக்காக அப்பா காத்திருக்க, அன்று அவர்கள் அனைவரும் இந்தியா திரும்பிய உடனேயே அவனைக் காணக் கிளம்பிவிட்டாள்.

சர்வஜித்தின் பங்களாவுக்குப் பின்னால் இருந்த அவுட் ஹவுசில்தான் ஹரீஷ் தங்கி இருந்தான். எனவே அவனைக் காண வேண்டும் என வந்தவள், அவன் வீட்டுக்கு முன்னால் இருந்த கண்காணிப்பு கேமரா, செக்யூரிட்டி ஆட்கள் என இத்தனையை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

அவர்கள் எல்லாம் சாதாரண ஆட்களாக அவளுக்குத் தோன்றவில்லை. சிறு குழப்பமும், பயமுமாக அவள் கேட்டை நெருங்க, அவள் அங்கேயே தடுத்து நிறுத்தப்பட்டாள்.

“நான் ஏற்கனவே இங்கே வந்திருக்கேன்... வைஷாலியோட ஃப்ரண்டு ரூபி. நீங்க வேணா அவகிட்டே கேளுங்க...” அவள் சொல்ல, உள்ளே இருந்து ஒருவன் ஏதோ ஒலி எழுப்பவே மறு பேச்சின்றி அவளை உள்ளே அனுமதித்தான்.

ஆனால் அந்த சமிக்ஞைகளை எல்லாம் அவள் கவனிக்கும் நிலையில் இல்லை. தோழியின் உதவியோடு, ஹரீஷ் பின்னால் இருப்பது தெரியும் என்பதால், தன் வண்டியை நேராக அங்கே செலுத்தினாள்.

அவள் அழைப்பு மணியை அழுத்திவிட்டுக் காத்திருக்க, ஹரீஷ் வேகமாக வந்து கதவைத் திறந்தான். அவன் வீட்டு அழைப்பு மணிக்கு வேலை கொடுத்து பல மாமாங்கம் இருக்கும். ‘அப்படி இருக்கையில் யாராக இருக்கும்?’ என்ற யோசனையோடு வந்து கதவைத் திறந்தவன் சத்தியமாக ரூபியை அங்கே எதிர்பார்க்கவே இல்லை.

“ரூபி... நீங்க இங்கே?” என்றவன் அப்படியே வாசலை அடைத்துக் கொண்டு நின்று இருந்தான்.

“இப்படியே வாசல்ல வைத்தே பேசி அனுப்பிடுவீங்களா? இல்லன்னா உள்ளே கூப்பிடுவீங்களா?” அவள் கேட்க, சட்டென விலகி வழி விட்டான்.

அவள் எதற்காக வந்திருக்கிறாள்? எதற்காக இப்படி நின்று தன் முகம் பார்க்கிறாள்? என எதுவும் அவனுக்குப் புரியவில்லை. அதோடு அவளிடம் என்ன பேசுவது? எப்படிப் பேச்சைத் துவங்குவது என்றும் தெரியாமல் நின்று இருந்தான்.

அவன் அப்படியே நிற்க, “என்னவோ என்கிட்டே பேசணும்னு சொல்லிட்டே இருந்தீங்களே என்ன அது?” அவள் கேட்க, அவனுக்கு எல்லாம் மறந்துபோனதுபோல் இருந்தது. அவள் தன்னைத் தேடி வந்திருப்பதே அவனுக்கு அவள் மனதை உணர்த்துவதாக இருந்தது.

“என்னை கல்யாணம் பண்ணிக்கறியான்னு கேட்கத்தான் நினைச்சேன்” அவன் பட்டென போட்டு உடைத்துவிட, அவளுக்கு பேச்சே வரவில்லை.

“என்ன? என்ன கேட்டீங்க?” நம்ப முடியாமல் கேட்டாள்.

“ப்ளீஸ் என்னை கல்யாணம் பண்ணிக்கோ ரூபி. இந்த தனிமை எனக்கு ரொம்ப கொடுமையா இருக்கு. இந்த உலகத்தில் எனக்குன்னு யாருமே இல்லாமல் இப்படி அனாதையா நிற்கறது எனக்கு ரொம்ப வலிக்குது” என்றவனது குரல் கரகரத்தது.

“என்ன திடீர்ன்னு? அப்போ வேண்டாம்னு சொன்னதுக்கும், இப்போ வேணும்னு சொல்றதுக்கும் நடுவில் அப்படி என்ன மாற்றம் வந்திருக்கு?” அவன் திருமணத்திற்கு கேட்டது உள்ளுக்குள் தித்திக்க, முயன்று கேட்டாள்.

“உன் வயசு மாறி இருக்கு... என் வேலை மாறி இருக்கு” அவன் சொல்ல, புரியாமல் பார்த்தாள்.

“அப்போ அந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்ல ஒரே ஒரு காரணம்தான் என்கிட்டே இருந்தது. அது உன் வயசு... அப்போ உனக்கு மிஞ்சிப் போனால் இருபது வயசு இருந்து இருக்குமா? நான் மிலிட்டரியில் இருந்தேன். நான் இருந்த பிரிவில் எப்போவேணா என்ன வேணா நடக்கலாம்.

“அப்போ எங்க பெட்டாலியன் ஒரு மிகப்பெரிய ஆப்பரேஷனுக்கு ஏற்பாடு செய்துட்டு இருந்தாங்க. அப்படி இருக்கும்போது, உன்னை நான் கல்யாணம் பண்ணிட்டு, எனக்கு ஏதாவது ஒன்று என்றால் அதை நீ எப்படி ஹேண்டில் பண்ணுவன்னு எனக்குள்ளே ஒரு பயம், தயக்கம் இருந்தது.

“உனக்கு அவ்வளவு பெரிய காயத்தை கொடுக்க நான் விரும்பலை. அதனால்தான் அந்த கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன். ஆனா வீட்டுக்கு வந்த பிறகுதான் அம்மா நடந்ததை எல்லாம் சொன்னாங்க. என் நினைப்பை உனக்குள்ளே வளர்த்ததைச் சொன்னாங்க.

“அப்போவே எனக்கு குற்ற உணர்ச்சியா போயிற்று. அந்த லீவ் முடிந்து, நாங்க எடுத்திருக்கும் ஆப்பரேஷன் வெற்றிகரமாக முடிந்தால் பிறகு வந்து உன்னைப் பார்க்கணும்னு நினைத்தேன். ஆனா அதுக்குள்ளேயே அம்மா தவறிட்டாங்க. அதை என்னால் தாங்கிக்கவே முடியலை. வேலையையும் விட்டுட்டேன்.

“என் அம்மா எனக்குன்னு பார்த்து வைத்த உன்னை மிஸ் பண்ணவே கூடாதுன்னு தோணிச்சு. உங்க வீட்டுக்கு வந்தேன்... நீங்க அங்கே இல்லை. எனக்கு எங்கே சென்று தேடன்னும் தெரியலை. மனசெல்லாம் வலி, விரக்தி... அப்படி இருக்கும்போதுதான் சர்வா சார்கிட்டே வேலைக்குச் சேர்ந்தேன்.

“தனியா இருக்கும்போது, கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைப்பு வரும்போது எல்லாம் உன் முகம்தான் எனக்கு ஞாபகம் வரும். என் அம்மா விட்டுப் போயிருந்த உன்னோட சில ஃபோட்டோஸ் தான் எனக்கு ஒரே ஆறுதல்.

“அப்படியும் உனக்கு அப்போவே மாப்பிள்ளை பார்த்துட்டு இருந்தாங்க. உனக்கு கல்யாணம் ஆகி, குழந்தைகளே இருக்கலாம்னு தோணும். ஆனாலும் உன்னை நினைக்கறதை நிறுத்த முடியலை. உன்னை இங்கே பார்த்தப்போ... சாரி...” என்றவன், அவளை இழுத்து இறுக கட்டி இருந்தான்.

‘அவன் எதற்காக மன்னிப்பு கேட்கிறான்?’ என அவள் யோசிக்கையிலேயே அவனது இதழ்கள் அவள் இதழ்களை கொள்ளையிடத் துவங்கி இருந்தது.

‘அவனை தடுக்க வேண்டும்’ என புத்தி கதறினாலும், அவனை விட்டு அவளால் விலக முடியவில்லை. இதழ் தீண்டியவனது கரங்கள், அத்தனை உரிமையாக தன் தேகத்தில் அத்துமீறத் துவங்க, எதிர்க்க வேண்டிய மனமும், உடலும் அவன் கரங்களுக்குள் உருகிப் போனது.

அவள் அவனை விலக்கித் தள்ளி இருந்தாலோ, சிறு எதிர்ப்பையாவது காட்டி இருந்தாலோ, கத்திக் கதறி உதவிக்கென யாரையாவது அழைத்து இருந்தாலோ அவன் நிச்சயம் விலகி இருப்பான். தன் ஆசையை நேசத்தை... அவள் தன் வாழ்வில் வேண்டும் என்ற விருப்பத்தை பிடிவாதமாக சொல்லத் துவங்கிய முத்தம் அது.

ஆனால் அவளது இணக்கத்தால்... அவளது எதிர்ப்பற்ற நிலையால் எல்லைகளைக் கடந்து போனது. தடுக்க வேண்டியவள் அனுமதிக்க, கட்டுப்பட்டாக வேண்டியவன் கரைகளைக் கடந்தான்.

அவளை அள்ளிக்கொண்டு தன் அறைக்குச் சென்று படுக்கையில் சரிந்தவன், முழுதாக அவளைக் கொள்ளையிட்டு முடிக்கும் வரைக்கும் ஓயவில்லை. அவன் தன்னை அழைத்துச் செல்வது தெரிந்தது, தன் ஆடைகளைக் களைவதும் புரிந்தது. தன் பொக்கிஷங்களை அத்தனை ஆக்ரோஷமாக, ஆர்வமாக, பேராசையாக கொள்ளையடிப்பதும் உணர முடிந்தது.

ஆனால் அவனைத் தடுக்க மனதில் கொஞ்சமும் பலமில்லை. உடல்வலு கொடுத்து தடுக்க, மனம் முயல வேண்டுமே. அதை விடுத்து, அவன் தேடலுக்கு வழி விட்டு, அவன் ஆசைக்கு இணங்கி, அவன் கொள்ளையிட மறுக்காமல் போனால், அவன் விலகுவானா என்ன?

அவள் இதழ்கள் இரண்டும் அவனை அத்தனை வேகமாக முத்தமிட்டு, அவள் கரங்கள் இரண்டும் அவனைத் தொட்டு உணர்ந்து, அவனை ஆரத்தழுவி அரவணைத்துக் கொண்டது. அவன் தன்னோடு ஒன்றாக கலந்த அந்த நொடி, குற்ற உணர்ச்சிக்கு பதில், மனதுக்குள் அப்படி ஒரு நிறைவு.

அவனை முழுதாக தாங்கிக் கொண்டு, இரவா பகலா எனத் தெரியாத நிலையில், தான் இருப்பது ஆகாயமா? பூமியா எனப் புரியாத குழப்பத்தில் அவனோடு ஆதியோடு அந்தமாக ஒட்டிக் கொண்டாள். அவனுக்கு ஈடுகொடுத்து, இசைந்து அவனோடு கலந்து களைத்துப் போனாள்.

அவனது மொத்த வேகமும் வடிந்த பிறகே, தான் செய்து வைத்திருப்பது இன்னது என அவனுக்குப் புரிந்தது. அவளை ஒரு மாதிரி இறுக கட்டிக் கொண்டவன், அவள் முகம் பார்த்தான்.

“நான் கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்... எனக்குள்ளே எப்படி இப்படி ஒரு கட்டுப்பாடு இல்லாத தன்மைன்னு தெரியலை. ஒரு வேளை உன்னோட பல வருஷமா கனவில் குடும்பம் நடத்தி, நாலு பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்புவதால் இருக்கலாம். தேங்க்ஸ் ரூபி. என்மேலே கோபம் இல்லையே?” அவளது இணக்கம் புரிந்தாலும், ஒரு நல்ல ஆண்மகனுக்குள் எழும் குற்றக் குறுகுறுப்பு அது.

“கோபமா? எதுக்கு? இப்போ நடந்ததில் சரி பாதி பங்கு எனக்கும் இருக்கு. என்ன சொன்னீங்க நாலு பிள்ளையா? போதுமா? இருந்தாலும் உங்ககிட்டே இருந்து ‘இதை’ நான் எதிர்பார்க்கலை.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,259
254
113
Chennai
நானுமே இப்படி நடந்துப்பேன்னு நினைக்கவே இல்லை” என்றவள் அவன் முகம் பார்க்க முடியாமல் அவன் நெஞ்சில் தன் முகத்தை மறைத்துக் கொண்டாள்.

“இருந்தாலும் நாம கொஞ்சம் அவசரப்பட்டுட்டோம்...” ஒரு கட்டுப்பாட்டோடு வளர்ந்த எந்தப் பெண்ணாலும் அதை இயல்பாக கடந்துவிட முடியாதுதான். ஆனால் தானுமே பிழை செய்துவிட்டு, அவனை மட்டும் குற்றவாளியாக்க அவள் விரும்பவில்லை.

“ரூபி... நான்...” அவன் முகம் பரிதவிப்புக்குப் போக, வேகமாகத் தெளிந்தாள்.

“ஷ்... இந்த மொமண்டை நாம கெடுத்துக்க வேண்டாமே ப்ளீஸ். நடந்துடுச்சு... இப்போ அடுத்து என்னன்னு யோசிப்போம்” என்றாள்.

“நாளைக்கே நான் உங்க அப்பாகிட்டே வந்து பேசறேன்” அவன் சொல்லிக் கொண்டிருக்க, அவர்கள் வீட்டு அழைப்பு மணி விடாமல் இசைத்தது.

கூடவே, “ரூபி... ரூபி...” என்ற வைஷாலியின் அழைப்பும், மெயின் கதவு திறக்கப்படும் ஓசையும் கேட்க, அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தார்கள்.

“இப்போ என்ன செய்ய? அவங்க உள்ளே வந்துட்டாங்க” அவன் பதற,

“முதல்ல நீங்க ட்ரஸ் மாத்திட்டு வெளியே போங்க... நான் பின்னாடியே வர்றேன்” அவள் சொல்ல, வேகமாக செயல்பட்டான். வைஷாலி வீட்டுக்குள் நுழையவும், ஹரீஷ் அறைக்குள் இருந்து வெளியே வரவும் சரியாக இருந்தது.

அவன் தன் முதுகின் பின்னால் அவசரமாக கதவைப் பூட்ட முயல, “ஹரீஷ்... ரூபி எங்கே? அவளை என்ன பண்ணீங்க? விலகுங்க” என்றவாறு அவனைத் தள்ளிவிட்டாள்.

“என்னங்க... நான் சொல்வதை ஒரு நிமிஷம் கேளுங்க...” அவன் தடுக்கும் முன்னர், அறைக்கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றிருந்தாள். போர்வையால் தன்னைப் போர்த்திக்கொண்டு ரூபி அவளைப் பரிதாபமாகப் பார்க்க, சட்டென தேங்கினாள்.

“ரூபி... நீ...” வேகமாக தோழியை ஆராய்ந்தாள். அவள் உள்ளே சென்றுவிட, ஹரீஷ் நிலைமையை இன்னும் மோசமாக்க விரும்பாமல், தள்ளிச் சென்றுவிட்டான்.

“ஷாலு... ஒரு ரெண்டு நிமிஷம் நீ வெளியே இரு... இப்போ வர்றேன்” அவள் முகம் பார்க்கத் தடுமாறி ரூபி சொல்ல, அங்கே அவளை அவன் கட்டாயப்படுத்தி எதையும் செய்து இருக்கவில்லை எனப் புரிய, அவளை முறைத்துவிட்டு அறைக்கு வெளியே வந்துவிட்டாள்.

அறைக்கதவை அவளும் சாற்றிவிட்டு வெளியே வர, ஹரீஷ் வேகமாக அங்கே இருந்து கிச்சனுக்கு நகர்ந்தான். செல்லும் முன்னர், “நான் காபி போடறேன்...” என்றவாறு கிட்டத்தட்ட ஓடினான்.

எந்த ஒரு ஆண்மகனும் சந்திக்கத் தயங்கும் ஒரு சூழ்நிலை. அதுவும் கையோடு பிடிபட்டிருக்க, முகத்தை கரங்களால் அழுத்தமாக துடைத்துக் கொண்டான். “ச்சே... ச்சே...” அவன் காலை தரையில் உதைத்தும் கொண்டான்.

அவனுக்கு மட்டுமா? வைஷாலிக்குமே இப்பொழுது அங்கே இருப்பதா? இல்லையென்றால் தன் வீட்டுக்குச் சென்றுவிடுவதா? எனப் புரியாத நிலை. அவளுக்குமே அத்தனை சங்கடமாக இருந்தது.

ரூபியும் தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு உடைமாற்றிவிட்டு வெளியே வந்தவள், தோழியை ஏறிட்டு பார்க்க முடியாமல் அப்படியே நின்றாள். “என்னடி ரூபி இது?” வேகமாகத் துவங்கியவள், அவள் முகத்தில் கலக்கத்தையும், சங்கடத்தையும் பார்த்துவிட்டு வாயை மூடிக் கொண்டாள்.

“ஷாலு... ப்ளீஸ்டி நீ என்னை தப்பா நினைச்சுடாதே... நான்... பேசத்தான்...” ஆரம்பித்தவள், தன்னவனை விட்டுக் கொடுப்பதுபோல் தோன்ற, அவளும் அமைதியானாள்.

“சரி... சரி... நான் எதையும் கேட்கலை. நீ... ஓகே தானே?” தன் முதலிரவும், தேகத்தின் அயர்ச்சியும், வலியும் நினைவுக்கு வரக் கேட்டாள்.

“ம்... ஆமா...” அவளால் இன்னுமே அவள் முகம் காண முடியவில்லை.

“ரூபி, என்னைப் பார்... நீங்க ரெண்டுபேரும் பொறுப்பானவங்க, வளர்ந்து ஒரு நிலையில் இருக்கறவங்க. என்னவோ டீனேஜில் தப்பு பண்ணிட்ட மாதிரி நீ குறுகிப் போக தேவை இல்லை.

“அதுக்காக நான் உன்னை சப்போட் பண்றேன்னு நினைக்காதே. ஆனா புரிஞ்சுக்க முடியுது. நான் அவர்கிட்டே பேசி, உங்க கல்யாணத்தை உடனே நடத்தி வைக்கறேன்” அவள் சொல்ல, ரூபிக்கு அத்தனை நிம்மதி.

“தேங்க்ஸ் ஷாலு... எங்கே நீ என்னை கேவலமா...” “வாயை மூடு லூசே... உன்னைப்பற்றி எனக்குத் தெரியாதா? எப்படியோ உன் மனசுக்குப் பிடித்த வாழ்க்கை உனக்கு அமைவதில் எனக்கு ரொம்ப சந்தோசம்” அவர்கள் பேசிக் கொண்டிருக்க, ஹரீஷ் ஒரு ட்ரேயோடு அங்கே வந்தான்.

அவர்களிடம் அதை நீட்ட, ஆளுக்கொரு கப்பை எடுத்துக் கொண்டார்கள். “ரூபி... மாப்பிள்ளை ஓகே தான்... நீ என்ன சொல்ற?” தோழியிடம் கேட்க, ஒரு நொடி புரியாமல் குழம்பி, அவள் சொல்ல வருவது புரிய, மூவருமே வெடித்து சிரித்தார்கள்.

அதற்கு மேலே எதையும் பேசி அவர்களை அவள் சங்கடப்படுத்த விரும்பவில்லை. ஆனால் அடுத்த இரண்டே வாரங்களில் அவர்களது திருமணத்தை நடத்தி முடித்துவிட்டே ஓய்ந்தாள். இதோ இப்பொழுது தன்னுடனே வைத்தும் கொண்டாள்.

இவர்கள் அலுவலகம் சென்றுகொண்டிருக்க, வழியில் செல்லும் வாகனங்களை எல்லாம் தடுத்து நிறுத்தி லட்டு கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அதைப் பார்த்த ரூபி, “உங்க மாமா வீட்டு ஆட்கள் மாதிரி இருக்கு ஷாலு” என்றாள்.

“அட ஆமா... ஹரீஷ்... கொஞ்சம் என்னன்னு விசாரிங்க” இப்பொழுது அவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளைப் பற்றி அவளுக்கு நன்றாகவே தெரியும். சர்வஜித்திடம் நேரடியாகவும் சரி, மறைமுகமாகவும் சரி எத்தனையோ விதமாக கேட்டு, போராடி, மோதி என அனைத்தும் தோல்வியிலேயே முடிந்து இருந்தது.

போலீஸ் கம்ப்ளெயின்ட் கொடுக்கலாம் என்றால் எந்த அடிப்படையில் கொடுப்பது என்ற கேள்வி முன்னால் நிற்க எதுவும் முடியவில்லை. சர்வஜித்தின்மேல் அப்படி ஒரு வன்மம் கொண்டு இருந்தார்கள்.

இவர்களது திருமண நாள் அன்று காணாமல் போன முத்துப்பாண்டி ஒரு மாதத்திற்கு முன்னர்தான் வீட்டுக்கு திரும்பி வந்திருந்தான். அதுவும் அவன் தெளிவில்லாத மனநிலையில் இருக்க, அவர்கள் குடும்பமே ஆடித்தான் போய்விட்டது.

அவன் காணாமல் போன இரண்டு மாதங்களும், அவனைத் தேடாத இடம் இல்லை. எப்படிச் சென்றானோ அப்படியே திடுமென வீட்டின் முன்னால் வந்து நின்றான். ஆளே பாதியாக கறுத்து, இளைத்துபோய் தாடியும் மீசையுமாக மனநலம் சரியில்லாதவனைப்போல் இருந்தான்.

அவனை அழைத்து வந்து தலைமுடி, முகம் எல்லாம் திருத்தி எல்லாம் செய்த பிறகுதான், அவனது மனநிலை பிரண்டு இருப்பது தெரிந்தது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, இந்த ஒரு மாத சிகிச்சைக்குப் பிறகு சற்று தெளிந்து இருந்தான்.

அப்படி இருக்கையில் திடுமென இந்த கொண்டாட்டம் எல்லாம்... எப்படி? எதற்காக என அவளுக்குப் புரியவில்லை. ஹரீஷ் அவள் சொன்னவாறே வண்டியை ஸ்லோ செய்தவன், அந்த கட்சித் தொண்டன் அருகே சென்று நிறுத்தினான்.

“என்னப்பா விஷயம்?” ஹரீஷ் கேட்க, அந்த தொண்டனுக்கு வைஷாலியைத் தெரியாதா என்ன?

“பாப்பா... உங்களுக்கு விஷயமே தெரியாதா? நம்ம பெரியவருக்கு வாரிசு வரப் போகுது. அதுக்குத்தான் இந்தக் கொண்டாட்டமே. இந்தாங்க, இந்த ஸ்வீட் பாக்ஸை நீங்களே வச்சுக்கோங்க” என்றவாறு அந்த பெரிய லட்டு பாக்ஸை அப்படியே அவளிடம் கொடுத்துவிட்டான்.

“என்ன? நிஜமாவா? அக்கா என்கிட்டே சொல்லவே இல்ல?” என்றவாறு அத்தனை சந்தோஷமாக அதை வாங்கிக் கொண்டாள். கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கும் மேலாக ஒரு குழந்தைச் செல்வத்துக்காக ஜெயந்தி தவம் இருக்கிறாள்.

அதற்காக அவள் மேற்கொள்ளாத சிகிச்சைகளே இல்லை எனலாம். அதற்கு கைமேல் பலனாக இந்த சந்தோஷ செய்தி அவளை திக்குமுக்காடச் செய்தது. எதைப்பற்றியும் யோசிக்காமல் உடனே ஜெயந்திக்கு அவள் அழைத்துவிட்டாள்.

தான் அப்பா ஆகப் போகும் விஷயத்தைக் கொண்டாட விநாயகமும், அவனோடு வேலவனும் வெளியே சென்று இருந்தார்கள். கோபால் பெரிதான அன்னதானம், உதவிப் பொருட்கள் என வழங்க வெளியே சென்று இருந்தார்.

எனவே வீட்டில் அப்பொழுது ஆண்கள் யாரும் இருக்கவில்லை. இவளது அழைப்பை ஜெயந்தி உடனே ஏற்றாள். “அக்கா... வாழ்த்துக்கள்க்கா... என்கிட்டே சொல்லவே இல்லை பார்த்தீங்களா? நான் உங்களுக்கு அவ்வளவு அந்நியமா போயிட்டேனா?” உரிமையாக கோபித்துக் கொண்டாள்.

“வைஷாலி... உன்கிட்டே சொல்லாமலா? இப்போதான் கன்ஃபாம் ஆகி இருக்கு. ஒரு ரெண்டு மாசம் போகட்டும்னு சொன்னால் யார் கேட்டா? எனக்கு இப்போ மனசுக்கு திக்கு திக்குன்னு இருக்கு. ஏற்கனவே ஒன்றை முழுசா வாரிக் கொடுத்துட்டேன் இப்போ...” ஜெயந்தி கண் கலங்க, தவித்துப் போனாள்.

“ஹையோ அக்கா... சந்தோஷமா இருக்க வேண்டிய நேரத்தில் எதுக்காக இப்படி கண் கலங்கறீங்க? நீங்க பயப்படற மாதிரி எதுவுமே ஆகாது. இந்த குழந்தையை நீங்க சூப்பரா பெத்தெடுக்கப் போறீங்க பாருங்க” அவள் சொல்ல, அது நடக்கவே போவதில்லை என யார் இவளுக்குச் சொல்வது?

அதுவும் கோபாலின் குடும்பத்தையே கருவறுக்கும் வன்மத்தில் இருப்பவன் இந்த விஷயத்தைக் கேட்டால் என்ன செய்வான்? சர்வஜித்தின் ஆட்டம் இங்கே துவங்குமோ?

பகை முடிப்பான்....
 

kumarsaranya

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 14, 2025
17
16
3
Vellkovil
கோபாலுக்கும் சர்வாக்கும் இடையில என்ன பகை??கோபாலுக்கும் சர்வாவோட அப்பாவுக்கும் பழக்கம் இருக்குமோ???
 
  • Like
Reactions: Infaa

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,259
254
113
Chennai
கோபாலுக்கும் சர்வாக்கும் இடையில என்ன பகை??கோபாலுக்கும் சர்வாவோட அப்பாவுக்கும் பழக்கம் இருக்குமோ???

பெரிய பகை தான்.... அப்படியும் இருக்குமா? பார்க்கலாம்....
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,259
254
113
Chennai
hiyayo baby ya onum pannidatheenga

சர்வஜித் என்ன நினைக்கிறான் என்று யாராலும் கணிக்க முடியாதே...

என்ன செய்யலாம்?
 
  • Wow
Reactions: shasri