• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீராப்பகை தீர்வானது - 3.

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,332
872
113
Chennai
பகுதி – 3.

சர்வஜித் அன்றைக்கு தன் மருத்துவரைக் காண வேண்டிய நாள். ஆனால் அவரைச் சென்று காணும் அளவுக்கு அவனுக்கு நேரம் ஒத்துழைக்காமல் போனது. அவனது அட்டவணை அனைத்தும் ஹரீஷுக்குத் தெரியும் என்பதால் அவன் முன்னால் வந்து நின்றான்.

“சொல்லு ஹரீஷ்...” என அவன் சொன்னதே இவனுக்கு உறுமலாகத்தான் கேட்டது.

‘இவருக்கு பொறுமையாவே பேசத் தெரியாதா?’ கோடி முறையாக தனக்குள் கேட்டுக் கொண்டவன், அவனைப் பார்த்தான்.

“டாக்டர் அப்பாயின்மென்ட் இருக்கு...” தன் கையில் இருந்த ஐபேடில் பார்வையைச் செலுத்தியவாறே சொன்னான்.

‘சர்வஜித் மருத்துவரைப் பார்க்க செல்ல வேண்டுமே’ என உள்ளுக்குள் மனம் கிடந்தது தவித்தது. ஹரீஷைப் பொறுத்த வரைக்கும் அவன் வெளிப் பார்வைக்கு எத்தனை முரட்டுத் தனமானவனோ அதற்கு எதிராக உள்ளுக்குள் அத்தனை மென்மையானவன்.

ஆனால் சர்வஜித் வெளிப் பார்வைக்கு எத்தனை மென்மையானவனாக, கம்பீரமானவனாக, அழகனாக காட்சி அளிக்கிறானோ அதற்கு மாறாக மனதுக்குள் அத்தனை முரட்டுத் தனமானவன்.

‘இவர் மனதுக்குள் யோசிப்பதை கூட சாதாரணமாக யோசிக்க மாட்டாரோ?’ என தினமும் யோசித்து இருக்கிறான். அந்த அளவுக்கு சர்வஜித் அவனது செய்கைகளால் ஹரீஷை அப்படி யோசிக்க வைத்திருந்தான்.

ஹரீஷ் அவனிடம் வந்து சேர்ந்த கதையைச் சொல்வதாக இருந்தால் அதற்கு இன்னொரு கதையே எழுத வேண்டி வரும். அதை சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால், ஹரீஷ் தாயால் மட்டுமே வளர்க்கப்பட்டவன். தாயை கண் கலங்காமல் கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக சின்ன வயதிலேயே ஆர்மியில் சேர்ந்தவன்.

பதினெட்டாவது வயதில் கடைநிலை BSF சோல்ஜராக இணைந்து, தொலைதூரக் கல்வி வாயிலாக இரண்டு டிகிரி வாங்கியவன். அதோடு மிலிட்டரி பரீட்சையும் தொடர்ந்து எழுதி குறுகிய காலத்திலேயே டபிள் ஸ்டார் ரெஜிமென்ட் கேடருக்கு உயர்ந்தவன்.

எல்லாம் ஒரு நாள் நிறைவுக்கு வந்தது. அவனது தாய் இறந்த அந்த நாளை இன்றைக்கு கூட அவன் நினைத்துப் பார்க்க விரும்புவது இல்லை. அப்பொழுது அவன் விடுமுறைக்கு ஊருக்கு வந்து தாயோடு இருந்தான் என்பது மட்டுமே அவனுக்கு இருக்கும் ஒரே ஆறுதல்.

ஆனால் ஒரு சின்ன காய்ச்சல் என நினைத்த ஒன்று அவர் மூளையை பாதித்ததை அவன் எப்படி அறியாமல் போனான். நாளே நாள்... எல்லாம் முடிந்து போனது. அதற்குப் பிறகு எதிலும் அவனுக்கு பிடிப்பில்லை.

தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, வெட்டியாக சுற்றிக் கொண்டிருந்தான். அப்பொழுதுதான் எதேச்சையாக ஒரு நிறுவனத்துக்கு செக்யூரிட்டி வேலைக்கு ஆட்கள் வேண்டும் என்ற விளம்பரத்தைப் பார்த்தான்.

அதுவும் நம்பிக்கையான, நேர்மையான, ரகசியம் பாதுகாக்கும், பல கலைகள் தெரிந்த ஒருவனை அவர்கள் தேட, அந்த வித்தியாசமான விளம்பரம்தான் அவனைக் கவர்ந்தது. அதற்கு அவர்கள் அறிவித்த சம்பளத்தொகை அவன் புருவத்தை உயரச் செய்தது.

‘நிச்சயம் அது ஒரு நேர்மையான இடமாக இருக்காது’ என்ற எண்ணம்தான் அவனுக்கு எழுந்தது. நேரடியாக வந்து பார்க்கச் சொல்லி அதில் குறிப்பிடப் பட்டிருக்க, ‘சும்மா சென்று பார்க்கலாம்’ என்ற எண்ணத்தில்தான் அங்கே சென்றான்.

முதல்நாள் அவர்கள் குறிப்பிட்ட அந்த இடத்துக்குச் சென்ற பொழுது, வந்திருந்தவர்களில் அடையாள அட்டைகளின் நகலை மட்டுமே பெற்றுக் கொண்டார்கள். கூடவே அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்ணை மட்டுமே வாங்கினார்கள்.

‘நீங்க செலெக்ட் ஆனால் தகவல் வரும்’ என சொல்லி அனுப்பி விட்டார்கள். சரியாக ஒரு மாதம் கடந்திருக்க, ஹரீஷ் தான் அப்ளை செய்ததையே மறந்தும் விட்டிருந்தான். அந்த நேரம், அவனது அலைபேசிக்கு ஒரு குறுந்தகவல் மட்டுமே வந்தது.

அதுவும் ஒரு செவன் ஸ்டார் ஹோட்டலின் பெயரும், அறை நம்பரும் மட்டுமே இருக்க, ‘மீட் மீ தேர்’ என்றும் இருந்தது. அதைவிட அடுத்த ஒருமணி நேரத்துக்குள் வந்து பார்க்கச் சொல்லி இருக்க, முதலில் அதைப் பார்த்தவன் கொஞ்சம் அசட்டையாகத்தான் விடுத்தான்.

‘இதென்ன இப்படி ஒரு மெஸ்சேஜ்? இது யாரு? எதுக்காக நான் அங்கே போகணும்?’ என்றுதான் நினைத்தான். ஆனால் அடுத்த நொடி அவனுக்கு பொறி தட்ட, செய்தி வந்த எண்ணுக்கு அழைத்தான்.

ஆனால் இணைப்பு கிடைக்காமல் போக, ‘செல்வதா? வேண்டாமா? ஏதும் சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாதே’ என பலவாறாக யோசித்தவன், ‘எப்படியும் நம்மை மீறி எதுவும் நடந்துவிடாது. என்னன்னு போய் பார்த்துடலாம்’ என முடிவெடுத்தவன் அங்கே சென்றான்.

செல்லும் முன்னர் தன் வீட்டுக்குச் சென்று அவன் நடத்திய ஆராய்ச்சியில் சில விஷயங்களை அவன் கண்டறிந்தான்.

அவர்கள் சொன்ன ஹோட்டலின் அறைக்குள் செல்லும் வரைக்கும் அவனுக்கு தயக்கம் தான். ஆனால் எப்பொழுது சர்வஜித்தை நேருக்கு நேராகப் பார்த்தானோ, அந்த நொடி அவனுக்குள் ஒரு எண்ணம் வலுப் பெற்றது.

“ஹரீஷ்... வெல்கம்...” என அழைத்த சர்வஜித், அங்கே தனக்கு எதிராக இருந்த இருக்கையை கை காட்டினான்.

ஹரீஷ் அதில் அமரவே, “ஹரீஷ் வயது இருபத்தி ஏழு, அம்மா சந்தான லட்சுமி, மிலிட்டரி மேன்... சொந்த ஊர், வளர்ந்த ஊர், இப்பொழுது அவன் இருக்கும் விலாசம்” என வரிசையாக அவன் சொல்லிக் கொண்டே போக, ஹரீஷ் அவனையே பார்த்தவாறு அப்படியே இருந்தான்.

“நான் யார்ன்னு தெரியுமா?” சர்வஜித் கேட்க,

“சர்வஜித், விப்ரூத் தீவானோட தத்துப் பிள்ளை. இப்போதைக்கு இந்தியாவையே வளைத்துப்போடும் வல்லமை உள்ள ஒரே ஆள். படைபலம், அரசியல் செல்வாக்கு எல்லாமே கொட்டிக் கிடக்கு” என சொல்லிக் கொண்டே வந்தவன், அவனையே ஆழம் பார்த்தான்.

அவனது மிலிட்டரி மூளை சர்வஜித்தைப் பற்றி வேகமாக ஆராய்ந்தது. அவனைப்பற்றி தனிப்பட்ட விதமான எதுவும் அவனுக்குத் தெரியவில்லை என்றாலும், பத்திரிகையில் வந்த செய்திகள் அனைத்தும் அவன் மூளைக்குள் படமாகவே ஓடியது.

“குட்...” என்ற சர்வஜித் நிதானமாக ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்துக் கொண்டான். அவனுக்கும் வேண்டுமா எனக் கேட்க, “எனக்கு இந்தப் பழக்கம் இல்லை” அவன் முடித்துவிட தோளைக் குலுக்கிக் கொண்டான்.

“என்கிட்டே வேலைக்குச் சேர்வதில் உங்களுக்கு ஏதும் தயக்கம் இல்லையே?” சர்வஜித் கேட்டு வைக்க, ஹரீஷ் எந்த பதிலையும் சொல்லவில்லை.

“நீங்க இல்லீகல் விஷயம் எல்லாம் செய்யலாம் என்ற கணிப்பு எனக்கு இருக்கு. ஆனாலும் எனக்குன்னு சில கொள்கைகள் இருக்கு” அவன் நிறுத்த, சர்வஜித் சிகரெட்டின் புகையை ஆழ்ந்து சுவாசித்து நிறுத்தியவாறு அவனைப் பார்த்தான்.

‘நீயே சொல்...’ என்பதுபோல் அவனைப் பார்த்தான்.

“நான் மிலிட்டரிக்காரன், ட்ரக்ஸ், ஆயுதம், மணி லாண்டரிங், கடத்தல் சம்பவங்கள் இப்படி எதையும் நான் செய்ய மாட்டேன். அதற்கு எல்லாம் துணை போகவும் மாட்டேன்” அவன் சொல்ல, சர்வஜித் தன் கையில் இருந்த சிகரெட்டை ஒரு மாதிரி ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

“குட்... அதையெல்லாம் நான் செய்யச் சொல்லவும் மாட்டேன்” அவன் சொல்ல, அதென்னவோ அவன் குரலில் இருந்த நேர்மையை, உண்மையை அவன் கண்டுகொண்டான்.

“நான் வேற என்ன செய்யணும்?” ஹரீஷ் அவனைப் பார்த்தான்.

“என்னை ப்ரொட்டெக்ட் பண்றதுதான் உங்க வேலை. என் ரகசியங்கள் எல்லாம் காக்கப்பட வேண்டும். நான் செய் எனச் சொல்லும் எதையும் செய்யணும்” அவன் சொல்ல, சில பல நிமிடங்கள் யோசித்தான்.

“நான் இதைச் செய்வேன்னு எப்படி நம்பறீங்க?” அவன் கேட்டு வைத்தான்.

“எனக்கு மனிதர்களைப் படிக்கத் தெரியும் ஹரீஷ்” அவன் சிகரெட்டின் இறுதிப் பகுதியை முழுதாக காலி செய்து நிறுத்த, அங்கே சில பல நிமிடங்கள் அமைதி நிலவியது.

“நான் சேர்ந்துக்கறேன்” அவன் சொல்ல, சர்வஜித் ஒரு சொடக்கு போட, எங்கே இருந்து ஒருவன் முளைத்தான் எனத் தெரியாமலே கையில் ஒரு ஃபயிலோடு அங்கே வந்தான். அதை அவன் ஹரீஷிடம் கொடுத்துவிட்டு மின்னலென மறைந்தும் போனான்.

“என்னைப்பற்றி இந்த உலகுக்குத் தெரியாத சில விஷயங்கள்” எனச் சொல்லி நிறுத்த, ஹரீஷ் அந்த ஃபயிலை நிதானமாகப் பார்வையிட்டான். பார்த்தவனின் கண்கள் விரிந்துகொண்டே செல்ல, ஒரு மாதிரி எச்சில் விழுங்கிக் கொண்டான்.

தான் பிடித்திருப்பது புலிவால் என அவனுக்குப் புரிந்து போனது. அதை இப்பொழுது விட்டால் அது தன்னை அடித்து தின்றுவிடும் என்பது மிகத் தெளிவாகப் புரிந்தது. அதைக் கொன்று தப்பிவிடலாம் என்றால், அந்த புலிக்குத் துணையாக ஒரு புலிக் கூட்டமே துணையிருக்க, கூண்டுக்குள் அடைபட்ட நிலைதான் தன்னுடையது எனப் புரிந்தது.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கடந்திருக்க, அந்த ஃபயிலை மூடி அங்கே இருந்த டீபாவின்மேல் வைத்தான். “இத்தனை வருடம் இல்லாமல், திடுமென ஒரு பாடிகார்டின் அவசியம் என்ன வந்தது?” நிஜத்தில் அவனது நிலைக்கு தான் அவசியமே இல்லை என ஒரு எண்ணம்.

“நான் துவங்கப்போகும் யுத்தத்துக்கு எனக்கு படைத்தலைவன் அவசியம்னு தோணிச்சு. என் நிழல் உலகுக்குள் இருட்டில் இருந்து கத்தி வீசினால் கூட எப்படி தப்பிக்க வேண்டும் என எனக்குத் தெரியும்.

“இந்த யுத்தத்துக்காக, வெளிச்சத்தில் நிற்க வேண்டும் என்பதற்காக பதினைந்து வருடங்கள் இருட்டில் இருந்தவன் நான். இப்போ நான் இறங்கி செய்யணும்... எனக்கு நிம்மதி வேணும். அதைவிட நான் சந்தோஷமா இருக்க வேண்டிய நேரம் வந்துடுச்சுன்னு நினைக்கறேன்” அவன் பேசப் பேச, நிஜத்தில் ஹரீஷ் உறைந்துதான் போனான்.

அவன் கண்களில் சுடர்விட்ட அந்த ஜுவாலை... அவன் அடிமனதில் ஒரு திகிலைப் பரப்பியது மட்டும் உண்மை.

“வேற ஏதாவது கேட்கணுமா?” சர்வஜித் கேட்க, மறுப்பாக தலை அசைத்தான்.

“நான் எப்போ இருந்து வரணும்?” இருக்கையில் இருந்து எழுந்தவாறு கேட்டான்.

“வந்தாச்சு...” சர்வஜித் அவ்வளவுதான் சொன்னான். அடுத்த விரல் நொடிப்பில், அவனுக்கான உடை, அடையாள அட்டை, பிஸ்டல் துவங்கி அனைத்தும் அவன்முன் வைக்கப் பட்டது. வந்தவன் அங்கே இருந்த ஒரு கதவைக் கைகாட்ட, ஹரீஷ் அவனோடு சென்றான்.

அவன் செல்லும் நேரம், “ஹரீஷ்... நீ கொலை செய்ய மாட்டேன்னு சொல்லலை தானே?” அவனிடம் கேட்டான்.

அதைக் கேட்டவன் மெல்லியதாக புன்னகைத்துவிட்டு, “அது எனக்கு சுலபம்” ஹரீஷ் முடித்துவிட, சர்வஜித்தின் இமைகள் மேலேறி தன் வியப்பைக் காட்டியது. அத்தனை நேரத்தில் சர்வஜித் தன் உணர்வை முதல்முறையாக வெளிக் காட்டியதைக் கண்டான்.

அங்கே இருந்த கதவைத் திறந்துகொண்டு சென்றால், அது பக்கத்து அறையாக இருக்க, மற்றவன் திரும்பி நின்று கொண்டான். ஹரீஷ் உடை மாற்றியவன், பிஸ்டலையும் தன் முதுகின் பின்னால் வைத்துக் கொண்டான்.

அவன் வெளியே வருகையில், சர்வஜித்தும் வேறு உடை மாற்றி இருக்க, அவனது தோற்றம் கூட மாறி இருப்பது அவனுக்குப் புரிந்தது. அதைப் பார்த்தவன், ஒரு நொடி தடுமாறிப் போனான்.
 

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,332
872
113
Chennai
“போகலாம்” என்றவன் முன்னால் நடக்க, “ஒரு விஷயம்...” என ஹரீஷ் அவனைத் தேக்கினான்.

‘என்ன?’ என்பதுபோல் சர்வஜித் பார்க்க, “என்னை கண்காணிக்க வைத்திருக்கும் ரெண்டு பேர், என் ஃபோனை பக் செய்தது இது இரண்டும் இருப்பதில் எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால் என் வீட்டில் இருக்கும் நாலு ஹிடன் கேமராவையும் நீங்க எடுக்க சொல்லிட்டால் நல்லா இருக்கும்” ஹரீஷ் சொல்ல, சர்வஜித் கை தட்டினான்.

“இதை நீ எத்தனை நாளில் கண்டு பிடிக்கிறன்னு பார்க்கணும் என நினைத்தேன். யூ சர்ப்ரைஸ்ட் மீ மேன்... வில் டூ” என்றவன் அங்கே இருந்த மற்றவனைப் பார்க்க, அவன் சின்னதாக தலை அசைத்தான்.

அப்படி துவங்கியதுதான் இவர்களது பயணம். இன்று அது கிட்டத்தட்ட மூன்று வருடங்களைக் கடந்திருந்தது. சர்வஜித்தின் உள்ளும் புறமும் அறிந்தது யார் எனக் கேட்டால், கண்ணை மூடிக்கொண்டு ஹரீஷை சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு அவனது நிழலாகவே மாறிப் போனான் ஹரீஷ்.

சர்வஜித்தைப் பற்றி எதற்காகவும் ஹரீஷ் கவலைப்படுவதே இல்லை. அவன் கவலைப்படும் ஒரே விஷயம் அவனது பிபி. சாதாரணமாக ஒரு மனிதனுக்கு ரத்தக்கொதிப்பு வந்தால் எந்த அளவுக்கு இருக்குமோ, அதைவிட பல மடங்கு அதிகமாக சர்வஜித்தின் பிபி கொந்தளிக்கும்.

அதுவும் அவன் நிதானமாக ஒவ்வொரு விஷயமாக திட்டமிட்டு அடியெடுத்து வைத்துக் கொண்டிருக்க, அதில் வரும் தடைகளை அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவன் நகர்த்தும் ஒவ்வொரு காய்களையும் அவ்வளவு கச்சிதமாக நகர்த்த, அது தடைபடுகையில் அவனால் அவனையே கட்டுப்படுத்த முடியவில்லை.

அவனது பிபி எந்த அளவுக்கு செல்கிறது என அறிய வேண்டியே, அவனது கோபத்தை கொந்தளிப்பை குறைக்க, கட்டுக்கும் வைக்க வேண்டியே அவனது கையில் அந்த கைக்கடிகாரத்தை அணியச் சொல்லி அந்த மருத்துவர் சொல்லி இருந்தார்.

அது முதல்முறை ஒலி எழுப்பினாலே அவன் நிதானமாக வேண்டும் என சொல்லியும் இருந்தார். ஆனால் சர்வஜித் அதையெல்லாம் கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் போக, அவனுக்கு என்ன ஆகுமோ என்ற கவலைதான் ஹரீஷுக்கு அதிகம் இருந்தது.

மருத்துவரின் அப்பாயின்மென்ட் இருக்கவே, அதற்குச் செல்லாமல் சர்வஜித் ஒரு அவசர வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் வேலையில் இருப்பது புரிந்தாலும் அவனுக்கு நினைவூட்ட வேண்டியே வந்தான்.

“அப்பாயின்மெண்டை கேன்சல் பண்ணிடு” என்றவனது கை கடிகாரம் ‘பீப்...பீப்...’ என ஒலித்துக் கொண்டிருந்தது.

“இல்ல சார்...” அவனுக்கு மறுத்துச் சொன்னால் பிடிக்காது எனத் தெரிந்தே சொன்னான்.

“நான் சொன்னதைச் செய் ஹரீஷ்...” என்றவனது விரல்கள் அத்தனை வேகமாக மடிக்கணினியில் டைப் செய்து கொண்டிருந்தது. அதே நேரம் அவன் மேஜைமேல் இருந்த இன்டர்காம் ஒலிக்க, ஹரீஷ் இங்கே நிற்பதால், தன் மேஜையில் இருந்த தொலைப்பேசி அழைப்பது தெரிந்தது.

ஹரீஷ் இன்டர்காமை எடுக்காமல் போனால் மட்டுமே அவனுக்கு கால் டைவர்ட் ஆகும். இல்லையா ஹரீஷ் தான் கனெக்ட் செய்வான் என்பதால் சர்வஜித் ஹரீஷைப் பார்க்க, வேகமாகச் சென்று அந்த அழைப்பை ஏற்றான்.

இன்டர்காமில் தெரிந்த நம்பரைப் பார்த்தே, அழைப்பது செக்யூரிட்டி எனத் தெரிந்தது. “சொல்லுங்க...” அவன் குரல் கொடுக்கவே,

“சார்... டாக்டர் சார் வந்திருக்கார். உள்ளே அனுப்பவா?” அவர் கேட்டு வைக்க, இவன் சர்வஜித்தைதான் பார்த்தான்.

“அனுப்புங்க...” என்றவன் தொலைபேசியை வைத்துவிட்டு, ஒரு மாதிரி தயங்கி விஷயத்தை அவனிடம் சொல்லிவிட்டான்.

“என்ன?” என்றவனுக்கு அவசரமாக ஒரு காணொளி அழைப்பை செய்தாக வேண்டிய கட்டாயம். அந்த விஷயம் தெரிந்ததாலேயே ஹரீஷும் கொஞ்சம் தயங்கினான்.

“சார்... ஒரு பதினைந்து நிமிஷம் இருக்கு...” ட்ராவல் நேரமும் மிச்சம். மருத்துவரும் இங்கே இருக்கிறார் என்பதால் தயங்கினாலும் சொல்லிவிட்டான்.

“காட்... ஹெல் வித் யூ ஆல்...” கத்தியவன், தான் அனுப்ப வேண்டிய மெயிலை அனுப்பிவிட்டு விருட்டென எழுந்துவிட்டான்.

“அந்த கெமிக்கல் கம்பெனி விஷயம் இன்னைக்கு முடிஞ்சாகணும்” என்றவன் அறைக்குள் நடை பயின்றான். அவன் கரத்தில் ஒரு சிகரெட்டை கொடுத்த ஹரீஷ், மருத்துவரை அவன் அறைக்கு அனுப்ப வேண்டி விரைந்தான்.

சர்வஜித், ‘வேண்டாம், முடியாது, அவரை திருப்பி அனுப்பிவிடு’ என எதுவும் சொல்லாததே பெரிய ஆறுதலாக இருக்க கிட்டத்தட்ட ஓடினான். சர்வஜித் அந்த சிகரெட்டை பற்ற வைத்து ஆழ்ந்து சுவாசித்து, தன் நுரையீரலை நிரப்பிய நேரம், மருத்துவர் அவன் அறைக்குள் இருந்தார்.

தன் அறையில் இருந்த கண்ணாடி ஜன்னலின் திரையை விலக்கி, மும்பை நகரத்தை அந்த இருபதாவது மாடியில் இருந்து பார்த்தான். ஆம் பார்க்கவே செய்தான்... அதை ரசிக்கவோ, அந்த பரபரப்பை கவனிக்கவோ எதற்கும் அவனுக்கு பொறுமை இல்லை.

அவனது கை கடிகாரம் அவன் புகைப்பதாலோ என்னவோ தன்னை ரிலாக்ஸ் செய்துகொள்ள, அது அதன் ஒலியை குறைத்துக் கொண்டது. வந்த மருத்துவருக்கு நிச்சயம் ஐம்பது வயதுக்கு மேலே இருக்கலாம்.

நிதானமாக அவனை நெருங்கி, அவனை பரிசோதித்தவர், அவன் புஜத்தில் ஒரு ஊசி மருந்தை செலுத்தினார்.

“இவ்வளவு அழுத்தம் உங்க ஹெல்த்துக்கு நல்லது இல்லை சர்வஜித்” அவர் ஹிந்தியில் சொல்ல, அவன் அதைப் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

“ஸ்மோக் பண்ணா நீங்க ரிலாக்ஸ் ஆகற மாதிரி இருக்கலாம், ஆனால் அது உங்க உடல்நிலையை வேற விதத்தில் மோசமாக்கும். முடிந்த அளவுக்கு தியானம் பண்ணுங்க, மனசை ரிலாக்ஸா வச்சுக்கோங்க.

“இந்த வயதுக்கு உங்களுக்கு இந்த அளவுக்கு பிபி அதிகரிப்பது பெரிய ஆபத்தில் கொண்டு போய் விடும். ஒர்க் டென்ஷன் உங்களுக்கு இருக்கலாம், ஆனால் இந்த அளவுக்கு இல்லை. நான் ஒரே ஒரு அட்வைஸ் கொடுக்கறேன்... சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கோங்க” அவர் சொல்ல, அவன் முகத்தில் அப்பட்டமாக ஒரு மறுப்பு தெரிந்தது.

“உங்களுக்குள்ளே என்ன அழுத்தம் இருக்குன்னு எனக்குத் தெரியலை. ஆனால் ஒன்று மட்டும் என்னால் உறுதியா சொல்ல முடியும், அது... உங்க மனசை தொடர மாதிரி, பாதிக்கற மாதிரி, இந்த வேலையையே மறக்க வைக்கற மாதிரி ஒரு பெண்ணைப் பாருங்க.

“அப்படி மட்டும் நீங்க பார்த்துட்டா... நான் அடிச்சு சொல்றேன்... உங்களோட இந்த பிபி அவங்களைப்பற்றி நினைத்தாலே குறையும். அவங்க பக்கத்தில் இருந்தால் மனசு லேசாகும்... நான் சொல்வதைக் கேட்க வேடிக்கையா இருக்கும். அது நிஜம்... ஃபயின்ட் யுவர் கேர்ல்...” என்றவர் தான் கையோடு கொண்டு வந்திருந்த மாத்திரைகளை அவன் மேஜைமேல் வைத்தார்.

“இந்த மாத்திரைகள் எல்லாம் ஒரு அளவுக்குத்தான் உங்களை கட்டுக்குள் வைக்கும். இதற்கு நீங்க பழகிட்டா நிலைமை கையை மீறிப் போவதை யாராலும் தடுக்க முடியாது. அவர் சொல்லிவிட்டு சென்றுவிட, அவர் சொன்னதைக் கண்டுகொள்ளாமல் தன் இருக்கையில் அமர்ந்தான்.

அந்த நொடி, சர்வஜித்தின் அறைக்குள் தேகத்தில் தீப்பிடித்த உணர்வில் நுழைந்தான் ஹரீஷ். அவன் கையில் பிடித்திருந்த அலைபேசியில் ஒரு சிவப்பு வண்ண முக்கோணம் ஒளிர, அது மின்னி மறைய அதைப் பார்த்த சர்வஜித்தின் கண்களில் நெருப்பின் ஜுவாலை.

“இது எப்படி நடந்தது?” என்றவன் அறைக்கு வெளியே ஓட, அவன் பின்னாலேயே தானும் ஓடினான். இருவரும் ஒன்றாக காருக்கு விரைய, மறு நிமிடம் கார் வேகம் பிடித்தது. அதற்குள் தன் அலைபேசியில் இருந்து யாருக்கோ அழைத்த சர்வஜித் வேகமாக கட்டளைகளைப் பிறப்பித்தான்.

மும்பை நெரிசலைக் கடந்து வீட்டுக்கு வர அரைமணி நேரம் ஆகி இருக்க, இருவரும் அண்டர்கிரவுண்ட்க்குச் சென்றார்கள். அங்கே ஏற்கனவே நால்வர் அமர்ந்து வேலை செய்து கொண்டிருக்க, சர்வஜித் தன் கண்ணையும், கரத்தையும் ஸ்கேன் செய்த மறு நொடி அங்கே இருந்த டிஜிட்டல் திரை ஒளிர்ந்தது.

அனைவரின் பார்வையும் அங்கே பதிய, அவனது அந்த இடத்துக்குள் நால்வர் நுழைய முயல்வது தெரிந்தது. “ஸ்டாப் தேர்...” சர்வஜித் குரல் கொடுக்க, அது அங்கே ஸ்பீக்கரில் ஒலிக்க, திடுமென கேட்ட குரலில் அந்த நால்வரும் திடுக்கிட்டார்கள்.

அவர்கள் சுற்றிலும் எதையோ தேட, இங்கே “இவங்க யார் என்னன்னு எனக்குத் தெரிஞ்சாகணும்” சர்வஜித் கட்டளை பிறப்பிக்க, அந்த நால்வரில் ஒருவன் பரபரப்பானான்.

“ஐ’ம் ஆன் இட்...” என்றவன் அந்த நால்வரின் முகங்களையும் வேகமாக சேர்ச் செய்தவன் நிமிர்ந்தான்.

“அப்துல் மாலிக், ரசீக் ரிஸ்வான், அக்தர் முஹம்மத், டேவிட் கான்வே” அவன் அவர்களது பெயரைச் சொன்னவன், அவர்களோடு தொடர்புடையவனையும் சொல்ல, சர்வஜித் முகத்தில் ஒரு தீவிரம் வந்து குடி கொண்டது.

அங்கே இருந்த சேட்டிலைட் ஃபோனை எடுத்தவன், சில எண்களை அழைத்துவிட்டு காத்திருந்தான்.

“வாவ் உஸ்தாத்... அட் லாஸ்ட்...” என்றவன் அந்தப்பக்கம் இடி இடியென சிரிக்க, சர்வஜித் நிதானமானான்.

‘இது எங்கே வைத்த மிச்சம்?’ வேகமாக கணக்குப் போட்டவனின் மூளைக்குள் மின்னல் வெட்டியது. ‘முஸ்தக்’ எண்ணியவனுக்கு அந்த நொடியே அவனைக் கொன்று போடும் வேகம்.

‘அவனை எப்படி கணிக்காமல் போனேன்?’ எண்ணியவனுக்கு தன்மீதே ஆத்திரம் வந்தது.

‘இது எதுவும் தன்னைத் தொடரக் கூடாது என்றுதான் அனைத்தையும் கணக்கு போட்டு கச்சிதமாக வெளியே வந்தான். அப்படி இருக்கையில்... ‘முஸ்தக்... முஸ்தக்...’ அவனை நினைக்கையிலேயே கையில் இருந்த கடிகாரம் அதற்கு மேலே ஒலிக்க முடியாமல் பட்டென தன் இயக்கத்தை நிறுத்தி இருந்தது.

அதைப் பார்த்த ஹரீஷுக்கு மனம் திக்கென அதிர்ந்தது. ‘அம்மாடியோ’ எண்ணியவன் வெளியே அப்படியே நின்று இருந்தான்.

“எல்லாத்தையும் நிறுத்திடு இம்ரான்... முடிந்ததை திரும்ப ஆரம்பிக்காதே” தன் கோபத்தை காட்டாத குரலில் சொன்னான்.

“நானாக முடிக்காத வரைக்கும் எதுவும் முடியாது உஸ்தாத்” இம்ரான் சொல்ல, “லோட் இட்...” சர்வஜித் கட்டளை பிறப்பிக்க, இம்ரானின் சிரிப்பு நின்று போனது.

“நான் முடிச்சது முடிச்சதுதான்” என்றவன், இங்கே இருந்தே எதையோ இயக்கியவன், குறி பார்த்து அங்கே இருந்த நால்வரையும் சுட்டு வீழ்த்தினான். அவர்களது அலறல் சத்தம் இம்ரானை எட்ட, “ஏய்... ஏய்... உஸ்தாத்...” அவன் கத்திக் கொண்டு இருக்கையிலேயே அழைப்பை கட் செய்தான்.

“ஹரீஷ் கிளம்பணும்...” அவன் சொல்ல, அவன் எங்கே செல்ல விரும்புகிறான் எனப் புரிந்து போனது. ஹரீஷ் அதை செய்யப் போக, சர்வஜித்தோ அடுத்தடுத்து செய்ய வேண்டியவற்றை வேகமாக திட்டமிட்டான்.

சர்வஜித் தன் ப்ரைவேட் ஜெட்டை தயார் செய்யச் சொல்ல, அடுத்த இரண்டு மணி நேரத்தில் அதில் பயணப்பட்டுக் கொண்டு இருந்தார்கள். அங்கே சென்று செய்ய வேண்டியவற்றை திட்டமிடத் துவங்கி இருந்தான் சர்வஜித் (உஸ்தாத்).

பகை முடிப்பான்.........
 

Thani

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 2, 2023
122
34
28
Deutschland
யப்பா ..!என்ன மாதிரியான மிரட்டல் எபிஇது.