• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
தென்றல் - 6

ருத்ரனின் அமைதியை தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டாள் தென்றல்.

வார்த்தைகளால் அவனை விளாச ஆரம்பித்தாள்.

" என்ன ஃபாலோ பண்ண தானே ஆளை ஏற்பாடு பண்ணியிருக்கீங்க. இன்னைக்கு மட்டும் அல்ல. என் கல்யாண பேச்சை ஆரம்பிச்சதிலிருந்து‍, எங்க இரண்டு பேரையும் ஃபாலோ பண்ணியிருக்கீங்க. சரண் சொன்னான்
நான் தான் நம்பலை. என் புத்திய சொல்லணும். வேண்டாம்னு போனவங்க ஏன் என் வாழ்க்கையால வரப்போறாங்கனு நினைச்சுட்டேன்.

அதான் வேணாம்னு சொல்லிட்டீங்களே.அதோட என்ன விட்டுட வேண்டியது தானே. அப்புறம் என்னத்துக்கு என் வாழ்க்கையில் மறுபடியும் வந்தீங்க. என் வாழ்க்கை இப்படி புயலிலில் சிக்கி சின்னாபின்னமாக நீங்க தான் காரணம். ஏதோ ஒரு ரூபத்தில் உங்களால தான் எனக்கு பிரச்சினையே." என்று அவள் பாட்டுக்கும் ருத்ரனைப் பார்த்து, கை நீட்டாத குறையாக குற்றங்களை அடுக்கிக் கொண்டே போக.

ருத்ரனுக்கு பொறுமை மறைய, கோபம் தலைக்கேற ஆரம்பித்தது. " ஹேய்… வில் யூ ஷட் அப். கொஞ்சம் அமைதியாக இருந்தா ஓவரா பேசுற. நீ பெரிய உலக
அழகி. கல்யாணம் ஆனாலும் உன் பின்னாடி நான் சுத்த. நான் தான் வேணாம்னு சொல்லிட்டேன்னே அப்புறம் ஏன் உன் பின்னாடி சுத்தப் போறேன் மூளையே வேலை செய்யாதா?" ஏளனமாக அவளைப் பார்த்து வினவ.

"...."

" மேடமுக்கு என் மேல எவ்வளவு நல்ல அபிப்பிராயம். இன்னும் பொறுக்கினு சொல்லலை. அவ்வளவு தான்… இன்னும் ஒன்னும் பிரச்சனை இல்லை. உனக்கு, உன்னோட சரணுக்கும் என்னால என்னை பிரச்சனை வந்ததுனு சொல்லு. நான் சரி பண்ணி மறுபடியும் சேர்த்து வைக்கிறேன்." என்று அவளை ஆழப் பார்த்துக் கொண்டே ஆழம் பார்த்தான்.

" ஹவ் ஸ்மார்ட். நான் உங்கக் கிட்ட கேட்டேனா? என்னை சரணோட சேர்த்து வைக்க சொல்லி…எப்படி பேச்சை மாத்துறீங்க. இதோ இங்கே நிக்குறாரே இவர் யார்? இவரைப் பத்தி விசாரிக்கக் கூடாதுன்னு தானே பேச்சை மாத்துறீங்க. " என்று அவர்களுக்கு அருகில் தர்மசங்கடத்துடன் நின்றிருந்தவனைக் காட்டி வினவினாள்‌.

" உன்னோட எக்ஸ்டோட சேர்த்து வைக்க வேண்டாம்னா தட்ஸ் ஃபைன். சரண், சரண்ணு செல்லமா கூப்பிடவும் கொஞ்சம் சந்தேகமாக போயிடுச்சு. தென் இவரை நான் கூப்பிட்டது, என்னோட பிஸ்னஸ் விஷயத்திற்காக. அதற்கான விளக்கத்தை உனக்கு சொல்லணும்னு அவசியம் எனக்கில்லை. தென் ஒன் மோர் திங். என்னால தான் உன் முன்னாள் கணவனோடு பிரச்சனை வந்துச்சுன்னா, எனக்கு ரொம்ப சந்தோசம் தான். இது கேட்கும் போதே எனக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கு. உனக்கும் அப்படி தான்றது உன் முகத்திலே எழுதி ஒட்டியிருக்கு. நீ அதுக்காகவே எனக்கு முதல்ல நன்றி சொல்லணும். அதை விட்டுட்டு தேவையில்லாமல் பேசிட்டு இருக்க. முதல் இந்த இடத்தை விட்டு கிளம்பு." என்று எகத்தாளமாக அவளிடம் கூறினான் ருத்ரன்.

அவன் பேசிய எதற்கும் பதில் சொல்ல முடியாமல், அவனை முறைத்துப் பார்த்த தென்றல், அவன் இறுதியாக கூறியதற்கு மட்டும் தெளிவாக, " நான் ஏன் போகணும்? நான் இங்கே தான் இருப்பேன்." என்று வீம்பாக கூறியவள், அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துக் கொண்டாள்.

" தட்ஸ் ஃபைன். நான் கிளம்புறேன். பை." என்று அவளைப் பார்த்து, நெற்றியில் சல்யூட் அடித்து விட்டு அங்கிருந்து அகன்றான்.

அவன் அந்த மாலை விட்டு கிளம்பும் வரை தைரியமாக இருந்தவள், அதன்பிறகு கலங்கிப் போய் அமர்ந்து விட்டாள்.

ருத்ரன் பேசிச் சென்ற ஒவ்வொரு வார்த்தையும் அவளது இதயத்தை குத்தி கிழித்தது.

மன அமைதிக்காக இங்கே வந்தவளுக்கு, அது கிடைக்காமல் போகவே தளர்ந்த நடையுடன் வெளியேறினாள்.

காரில் உட்கார்ந்து இருந்த ருத்தரனும் வலியுடன் அவளைப் பார்த்துக் கொண்டிருக்க…

அருகில் இருந்தவன், " ஐ அம் எக்ஸ்ட்ரீம்லி ஸாரி ஸார். தப்பான நேரத்துல வந்துட்டேனா? பட் கேர்ஃபுலா தான் அவங்களை ஃபாலோ பண்ணேன்." என்றான்.

" அதெல்லாம் ஒன்னும் இல்லை. நீங்க திறமையான டீடெக்டிவ் தான். பட் ஷீ இஸ் மோர் க்ளவர்." என்று புன்னகைத்தான் ருத்ரன்.

" யெஸ் ஸார். நான் கவனமாகத்தான் ஃபாலோ பண்ணி இருந்தேன். பட் மேம் இவ்வளவு ஷார்ப்பா இருப்பாங்கன்னு நினைக்கலை. என்னுடைய கேரியர்ல ஃபர்ஸ்ட் டைம் இப்படி மாட்டிக்கிட்டேன்." என்று கூற.

ருத்ரனின் முகத்தில் மீண்டும் புன்னகை எட்டிப் பார்த்தது. " எல்லாத்துக்கும் ஃபர்ஸ்ட் டைம்னு ஒன்னு இருக்குல்ல ஷ்யாம் சார். இட்ஸ் ஓகே ரிலாக்ஸ்." என்றவன் மனதிற்குள், ' இந்த ஸ்மார்ட்னெஸ்ஸெல்லாம் முன்பே உனக்கு வந்திருக்கலாம் தென்றல். அப்படி மட்டும் இருந்திருந்தா உங்க அண்ணி சொல்ற எல்லாத்துக்கும் நீ தலையாட்டி இருக்க மாட்ட. தென் நீயும், நானும் இப்படி எதிரெதிர் திசையில் இருந்து இருக்க மாட்டோம்.' என்று எண்ணியவன் தலையை உலுக்கிக் கொண்டு அருகில் இருந்தவனை பார்த்தான்.

" அப்புறம் மிஸ்டர் ஷ்யாம். நான் பார்க்க சொன்ன மேட்டர் என்னாச்சு?" என்று அவன் எதற்காக, அவனது வேலையை போட்டு விட்டு மாலில் இவ்வளவு நேரம் காத்திருந்தானோ அந்த விஷயத்திற்கு நேரடியாக வந்தான்.

" அது வந்து சார்." என்று குழப்பத்துடன் ஷ்யாம் ஆரம்பிக்க.

" என்ன அந்த ஆள். ரொம்ப நல்லவன், அமைதி. அவனுண்டு, அவன் வேலை உண்டுன்னு இருப்பான். சோ அவனால் எந்த பிரச்சினையும் வர சான்ஸ் இல்லை அதானே." என.

" எப்படி சார்? " என்று ஷ்யாம் ஆச்சரியமாக வினவ.

" இப்ப போனாங்களே மேடம். அவங்க என் கிட்ட சொன்னத முழுசா கவனித்திருந்தா நீங்களே கண்டுபிடிச்சு இருக்கலாம். இப்போ நீங்க ஃபாலோ பண்ணதை மட்டும் அவங்க மென்ஷன் பண்ணலை. அதுக்கு முன்னாடி அவங்க மேரேஜ் ஃபிக்ஸான போது அந்த ராம்சரணப் பத்தின டீடெயில்ஸ் கேட்டு இருந்தேன். அதையும் தானே சொல்லிட்டு போனாங்க." என்று உதட்டில் பூத்த ஏளனத்தோடு கூற.

" ஓ…" என்றான்.

" அப்போதும் இதே ஸ்டேட்மெண்ட் தான் கிடைச்சது. அதுல ஏமாந்துட்டேன். அதான் தென்றல் புயலாக மாறிடுச்சு." என்று முணுமுணுத்தான்.

" சார்…" என்று புரியாமல் ஷ்யாம் இழுக்க.

" தட்ஸ் ஃபைன். அதை விடுங்க ஷ்யாம். அந்த ஸ்டேட்மெண்ட்ல டவுட் வந்ததால் தான், நான் மறுபடியும் உங்கக் கிட்ட அந்த ப்ராஜெக்ட்ட கொடுத்தேன். பட் யூஸ் இல்லை." என்றவன் சிறிது நேரம் கண் மூடி யோசித்தான்‌.

திடீரென அவனது முகம் மலர்ந்தது. அவனையே பார்த்துக் கொண்டிருந்தான் ஷ்யாம்.

அடுத்து ருத்ரனினிடமிருந்து என்ன உத்தரவு வரப் போகிறது என்பது போல் காத்திருந்தான்.

" சரி உங்க ரிப்போர்ட்டை சொல்லுங்க ஷ்யாம்." என்று ருத்ரன் வினவ.

" சார்… ராம்சரண்ணுக்கு ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கிடையாது. வீடு… வீடு விட்டா ஆஃபிஸ். அவ்வளவு தான் சார். யாரிட்டையும் வம்பு வச்சுக்க மாட்டார். அவரோட அம்மா, அப்பாவும் அதே மாதிரி அமைதி தான். தங்கை வெளிநாட்டில அவங்க ஹஸ்பண்டோட இருக்காங்க. மேரேஜுக்கு வந்ததோட சரி. சோ அவங்களாலலையும் எந்த ப்ராப்ளமும் இல்லை."

" ஓ… வேற யாரும் அவங்க வீட்டுக்கு வர்றதில்லையா?" என்று யோசனையுடன் வினவ.

" நோ சார்‌. அவங்க பொண்ணோட கணவர் சைட் ரிலேட்டிவ்னு ஒருத்தர், அடிக்கடி வீட்டிற்கு வந்துட்டு போயிருக்கார்."

" தட்ஸ் ஃபைன். நீங்க அந்த ஆளோட ஆல் டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணிடுங்க. ஒன் வீக் போதுமா?." என்ற ருத்ரன் அவனை கூர்ந்து பார்க்க.

" இதுவே அதிகம் சார். அல்ரெடி அஸ்வினைப் பத்தி விசாரிக்க ஆரம்பிச்சுட்டேன். அது தான் அவர் பெயர் சார். இன்னும் கொஞ்சம் டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணிட்டு சொல்லாம்னு இருந்தேன்." என.

" தட்ஸ் ஃபைன். ஓகே ஷ்யாம். நீங்க உங்க வேலையை பாருங்க. தென் தென்றலுக்கு ஷேடோ போட்டுருக்கீங்க தானே. நம்பிக்கையானவங்களா?" என்று வினவ.

" எல்லோரும் கராத்தேலே நல்ல எக்ஸ்பர்ட். எந்நேரமும் அலர்ட்டா தான் இருப்பாங்க. ஆனால் தென்றல் மேடத்துக்கு இது எதுவும் தேவையில்லை சார். அவங்களே போன வாரம் ஒரு பொண்ணுக்கிட்ட வம்பு பண்ணவங்களை நல்லா வெளுத்து வாங்கிட்டாங்க." என்று கூற.

ருத்ரனின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

" அதுக்காக அலட்சியமாக இருந்துடாதீங்க. டேக் கேர் ஹெர். ஒரே ஆளை அனுப்பாமல், மாத்தி மாத்தி அனுப்புங்க. அமவுன்ட் பத்தி பிரச்சனை இல்லை. எவ்வளவு ஆனாலும் பரவாயில்ல. உங்களுக்கு கரெக்டா செக் வந்துடும். தென்றலோட பாதுகாப்பு ரொம்ப முக்கியம்."

" ஷ்யூர் சார்." என்ற ஷ்யாம் விடைப்பெற்ற பின்னும், அந்த மாலின் கார் பார்க்கிங்கில் இருந்து காரை கிளப்பாமல் யோசனையிலே இருந்தான் ருத்ரன்.

அவனுக்கு தென்றலின் பின்னே செல்ல வேண்டும் என்று ஆசை. ஆனால் அவனுக்கு இருந்த வேலைகள் அந்த ஆசையை தடை செய்தது.

அவனது கடமை அழைக்க… பெருமூச்சு விட்டவன் கடையை நோக்கி காரை ஓட்டினான்.

******************************
தென்றலோ மனதை சமன் செய்ய கடல் அன்னையை தேடிச் சென்றாள்.

வந்து வந்து கரையை தொட்டு விட்டுச் சென்ற அலையால் கூட அவளது மனதின் வேதனையைக் குறைக்க முடியவில்லை.

சற்று நேரம் நின்றவள், பிறகு அந்த மணலில் சென்று அமர்ந்தாள்.

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் நினைக்கக் கூடாது என்று எண்ணியிருந்த எண்ணங்களே மீண்டும் அவளது நினைவில் வந்து சென்றது.

'ஏன் ருத்ரன் என்னை வேண்டாம் என்று கூறினான். உண்மையான காரணத்தை நேரிடையாக கூறியிருக்கலாமே.' என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.

முதன் முதலாக அவன் அவளது மனதில் பதிந்த நிகழ்வு, அவளது நினைவில் வந்து போனது.

பள்ளிப் பருவ இறுதியில் அவளது மூத்த அண்ணன் திருமணம் நடந்தது. திருமண சடங்குகளில் ருத்ரனை சந்தித்த போதெல்லாம் அவளுக்கு ஒரு உணர்வும் தோன்றவில்லை.

திருமணம் முடிந்து சில மாதங்கள் கழித்து, அவர்கள் வீட்டு மாடிப்படியில், ருத்ரனின் கையணைப்பில் இருக்கும் போது, அவளது மனம் லேசாக தடுமாறியது.

அதற்கு காரணம், சற்று முன்பு பார்த்த கதிரவன் சங்கீதாவின் நெருக்கமாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால் அவளது தடுமாற்றத்தை சரியாகக் கண்டு கொண்ட சங்கீதா, கண்டிப்புடன் அவளுக்கு நிதர்சனத்தை மனதில் பதிய வைத்தாள்.

தென்றலும், அவளது மன தடுமாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு எதிர்காலத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தாள்.

ப்ளஸ்டூ முடித்திருந்த அவளை, அடுத்து என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்று ஆளாளுக்கு அவளுக்கு உதவுகிறேன் என்று குழப்பிக் கொண்டிருக்க…

தென்றலோ படிப்பு விஷயத்தில் தெளிவாக இருந்தாள்.

அவளுக்கு ஆடிட்டர் ஆக வேண்டும் என்ற ஆசை. அதற்கு முதலில் பி.காம் படிக்கலாம் என்று எண்ணியவள், " அப்பா… நான் பிகாமே படிக்கிறேன்." என்று கூற.

சுகுமாரனோ, " சரி மா." என்றார்.

மனதிற்குள் நிம்மதி அடைந்தார்.' நல்லவேளை இன்ஜினியரிங் படிக்க வைங்கனு சொல்லை.' தென்றல் இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்று சொல்லி விட்டால் என்ன செய்வது என்று குழம்பிப் போயிருந்தார்.

மகளது படிப்பிற்காக செலவு செய்வதற்கு மகன்களிடம் கேட்பதில் அவருக்கு விருப்பம் இல்லை.

அதுவும் மூத்தமகன் காதலித்து பெரிய இடத்தில் பொண்ணு கட்டியதால், அவனிடம் எதற்காகவும் அவனிடம் கை நீட்டக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

அவரோ இப்பொழுது தான் மகளின் திருமணத்திற்காக சேர்த்துக் கொண்டிருந்தார்.

அவருக்குத் தெரியவில்லை ஒரு பெண்ணிற்கான பெரிய சேமிப்பு அவளது கல்வி என்பது தான். அதுமட்டுமல்லாமல் எந்த படிப்பை படித்தாலும் அதில் வேலை வாய்ப்பு இருக்கும் என்பதையும் அவர் அறியவில்லை.

சரி சும்மா வீட்டில் இல்லாமல் காலேஜுக்கு சென்று வரட்டும் என்று தென்றலை மூன்று வருட படிப்பில் சேர்ந்து விட்டார்.

தென்றலோ கல்லூரி வாழ்க்கையில் அமைதியாக அடி வைத்தாள். எப்போதும் போல் அமைதியாக கல்லூரிக்கு சென்று விட்டு அமைதியாகவே திரும்பி வந்தாள்.

அவளது கவனம் படிப்பில் மட்டுமே இருந்தது. இரண்டு வருடம் இப்படியாக செல்ல…

அவளது இரண்டாவது அண்ணன், அமுதனிற்கு திருமணத்திற்கு பெண் பார்க்க ஆரம்பித்திருந்தனர்.

அமுதனுக்கு வரன் கொண்டு வந்திருந்த ப்ரோக்கர், " பாப்பாவுக்கு எப்போ மாப்பிள்ளை பார்க்கட்டும்." என்று கேட்க.

சுகுமாரனோ, " இன்னும் ஒரு வருஷம் படிப்பு இருக்கு. தம்பிக்கு முடியவும் அப்புறமா பார்க்கலாம்." என்று முடித்து விட‌.

அங்கிருந்த தென்றலோ, மெல்ல தோட்டத்திற்கு நழுவினாள். அவளது மனதிலோ, ருத்ரன் வந்து போனான்

தொடரும்...
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,934
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️

தென்றல், ருத்ரனை விரும்பினது அவ பெரிய்ய அண்ணிக்கு பிடிக்காம ஏதோ கோல்மால் நடந்திருக்கு 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
 

Lakshmi murugan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 14, 2022
Messages
606
இவர்கள் கல்யாணம் நடக்காமல் போனதும் சங்கீதா கைங்கரியம் தானா.
 

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️

தென்றல், ருத்ரனை விரும்பினது அவ பெரிய்ய அண்ணிக்கு பிடிக்காம ஏதோ கோல்மால் நடந்திருக்கு 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
Thank you so much sis 💕
 

Viswadevi

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
317
இவர்கள் கல்யாணம் நடக்காமல் போனதும் சங்கீதா கைங்கரியம் தானா.
ஆமாம். நன்றி சகி ❤️
 
Top