• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தேடல் - 01

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 11, 2023
Messages
57
வி கே குருப் ஆஃப் கம்பெனிஸ் அலுவலகமே பரபரப்பாக செயல்பட்டது. அன்று அந்த அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடைபெற்றது. ஆனால் இதில் எதுவும் கலந்து கொள்ளாமல் தனது போனில் free fire விளையாடி கொண்டிருந்தான் எல்லோராலும் வி கே என அழைக்கப்படும் விவேக் கண்ணா. வி கே குருப் பின் M.D. கருப்பும் இல்லாத சிகப்பும் இல்லாத மாநிறத்திற்கு சொந்தமானவன். ஆனால் பெண்களை மயக்கும் அழகுகிற்கு சொந்தமானவன். எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமானவன். எந்த அளவிற்கு நல்லவனோ அதே அளவிற்கு கெட்டவனும் கூட. தந்தையின் செல்வாக்கில் இல்லாமல் தனித்து நின்று இன்று பலகோடிகளுக்கு அதிபதி. சிரிப்பென்றால் என்னவென்றே அறியாத இதழ்கள். பெண்களை தூர நிறுத்தும் அசுர விழிகள். அவன் விழிகளை சந்தித்த எந்த பெண்ணும் அவனிடம் நெருங்க அஞ்சுவாள். பெண்களை மதிப்பவன் தான். ஆனால் அவர்களை தூரவே நிறுத்திடுவான். அதுவும் பணத்திற்காக அவனை அணுகும் பெண்களை தன் அசுர விழியால் கொன்றிடுவான். பெண்களின் தாய்மையை மதிப்பவன்.

எல்லாம் முடிந்ததும் வந்தவர்கள் கிளம்பும் நேரம் அவனிடம் வந்து "சாரி சார் தப்பான நீயூஸ் வந்துடுச்சு.. மன்னிச்சிருங்க.." என்றனர் அதிகாரிகள். அவனோ நக்கலான ஒரு புன்னகையுடன் "உங்கள அனுப்புனவங்ககிட்ட சொல்லுங்க மிஸ்டர்.ராகவன்.. அவங்க மோதறது சிங்கத்துக்கிட்ட.. இந்த வி கே நல்லவனுக்கு மட்டும் தான் நல்லவன் கெட்டவங்களுகக்கும் துரோகத்துக்கும் எமன்..கெட் லாஸ்ட் அவே ஃப்ரம் மை ஆஃபிஸ்.." என்று வேட்டையாடும் சிங்கமாய் கர்ஜித்தான் விவேக்.

அவனின் சிம்மக்குரலில் பயந்து அதற்குமேல் அங்கே நின்றால் தங்களது உயிர் தங்களுக்கு சொந்தமில்லை என்ற நிலையில் பின்வாங்கினர். அவர்கள் வெளியேறவே காத்திருந்தது போல அவசரமாக உள்ளே நுழைந்தான் வி கே யின் பி ஏ குருபரன்.

" பாஸ்.."

"ராக்கிய வரசொல்லு குரு.."

எஸ் பாஸ் அவனின் சொல்லிற்கு மறுவார்த்தை பேசாமல் அதை நிறைவேற்ற சென்றான்.

ராக்கி வி கே வின் நிழல் போன்றவன் அவனின் பாடிகார்ட் அவன் சொல்வதை செய்ய காத்திருக்கும் ஜித்தன்.


கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அனைவரும் வாசலில் தவமிருந்தனர் தங்களது மாவட்ட ஆட்சியரை வரவேற்க. ஆம் இன்று புதிய கலெக்டர் பதவியேற்க உள்ளார். அதற்கே இந்த வரவேற்பு அந்த அலுவலக ஊழியர்களும் அந்த பதவியின் மூலம் ஆதாயம் தேடும் முதலாளிகள் நின்றிருந்தனர்.

சிறிது நேரத்தில் ஹாரன் அடித்து வண்டியின் சத்தம் கேட்டது. முன்னால் போலிஸ் ஜீப்பும் பின்னால் அரசு வாகனம் வந்து நின்றது. அதிலிருந்து பெண் சிங்கமாய் கம்பீரமாக இறங்கினாள் ரூபவாஹினி. இருபத்தொன்பது அழகிய யுவதி. ஆகாய வண்ண காட்டன் புடவையும் காலர் வைத்த சட்டையும் நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் அவளை ஆணுக்கு நிகராக காட்டியது.

ஐ.ஏ.எஸ் ஆனதிலிருந்து வடமாநிலங்களில் பணியாற்றியவள். நேர்மைக்கு பெயர் போனவள். அவ்வளவு எளிதில் யாரையும் நம்பாதவள். தன் நிழலையும் சேர்த்து தான். அவள் வாழ்வில் பட்ட அடியும் அவமானமும் யாரையும் நம்ப அவள் மனம் அனுமதிக்கவில்லை. தமிழ்நாட்டிற்கு வர விருப்பமில்லை. ஆனால் இதுவரை சொன்ன பதிலை இனி சொல்ல முடியாது. தமிழ்நாடு வர பயம் என்று சொல்வதை விட பிடிக்கவில்லை. தனது கடந்த காலத்தை நினைக்க விரும்பவில்லை. அவளைப் பொறுத்தவரை அது முடிந்து போன ஒன்று. எங்கு சென்றாலும் அவளின் பணி காலம் ஆறுமாதம் மட்டுமே. அதற்கு மேல் அவளின் நேர்மைக்கு அரசியல்வாதிகளால் தாக்கு பிடிக்க முடியாமல் மாறுதல் வாங்கி தந்து விடுவார்கள். இனி அவளின் சேவை தமிழகத்தில். இங்கு எத்தனை நாளோ மாதமோ தெரியவில்லை.

எல்லோரின் வணக்கத்தையும் ஏற்றுக் கொண்டவள் அவர்களின் பரிசு பொருள் மற்றும் சால்வையை தடுத்து விட்டு எல்லோரிடமும் விடை பெற்றாள். யாரையும் தனிப்பட்ட முறையில் அவள் சந்திக்கவில்லை. அது அவளின் பணியில் இல்லை. ஆனால் எல்லோருக்கும் அவள் திமிரானவளே. அவள் அதை கண்டு கொள்ளவில்லை. அதை கண்டு கொண்டால் அவள் ரூபவாஹினியும் இல்லை. பியூனை அழைத்துக் தனக்கு தேவையானவற்றை கொண்டு வர செய்தாள்.


வி கே தனது வேலைகளை முடிக்கும் சமயம் அவனின் அறைக்கதவு தட்டப்பட்டது. அவனின் அனுமதியுடன் உள்ளே இருவர் வந்தனர். அவர்களில் ஒருவன் ஜிம்பாய் போல இருந்தான். அவன் தான் வி கே யால் ராக்கி என்று அழைக்கப்பட்டவன். இன்னொருவனோ ஜிம்பாயின் ஒரு பாதியாக இருந்தான். அவர்களின் பின்னே குருபரனும் வந்தான்.


அவர்கள் வந்ததும் ராக்கி யின் முகத்தை பார்த்தான் வி கே. அவன் பார்வையின் பொருளை உணர்ந்தவன் "மார்னிங் உங்க முன்னாடி இருப்பான் பாஸ்.." என்று பதிலளித்தான் ராக்கி.

அது ஒன்னுமில்லைங்க இன்னைக்கு அவனோட கம்பெனில ரெய்டு நடந்தது இல்ல அதுக்கு காரணமானவன தூக்க சொல்லிட்டான் வி கே.

ராக்கியின் அருகில்லுள்ளவன் மேல் பார்வையை பதித்தான் வி கே.. அவனின் பார்வையை உணர்ந்து இல்லையென்று உதட்டை பிதுக்கினான் அவன். இதுவரை ரௌத்திரம் பொங்கிய விழிகளில் இப்பொழுது ஏமாற்றம் தெரிந்தது. "விக்ரம் ஒரு சின்ன விஷயமும் கிடைக்கலையா.." என்றான் ஏமாற்றம் தாங்கிய குரலுடன்

அவனின் குரலின் ஏமாற்றம் மற்ற மூவருக்கும் வருத்தத்தை கொடுத்தது.
வி கே யால் விக்ரம் என் அழைக்கப்பட்டவன் "நோ பாஸ்.. அவங்க எங்க போனாங்க என்ன ஆனாங்கன்னு எதுவும் தெரியல பாஸ்.. அவங்களோட போட்டோவும் கிடைக்கல பாஸ்.." என்று முடித்தான். அவனும் தான் என்ன செய்வான் பெயர் தெரிந்து ஆள் தெரிந்து அட்ரஸ் தெரிந்தாலே இப்பரந்த உலகத்தில் கண்டு பிடிப்பது கடினமே. ஆனால் இவை எதுவும் தெரியாமல் எவ்வாறு கண்டுபிடிக்க முடியும் வி கே சொன்ன சிறு சிறு அடையாளத்தை வைத்து.

விக்ரம் டிடெக்டிவ் ஏஜென்சி வைத்துள்ளான். வி கே யின் கல்லூரி கால நண்பன். வி கே வுக்க தேவையான தகவல்களை திரட்டி தருவது விக்ரமின் வேலை. எல்லா வேலைகளையும் முழுமையாக செய்து முடிக்கும் திறமையானவால் ஆறு வருடமாக விவேக் சொல்லும் வேலையை அவனால் முடிக்க முடியவில்லை. எங்கு சென்றாலும் ஆரம்ப புள்ளியிலேயே நின்றது.

அவர்கள் மூவரும் பேசி கொண்டிருக்கும் போது விவேக்கின் மொபைலில் டார்லிங் காலிங் என்று புன்னகையை வெளியிட்டது. அதை கண்டவன் கண்கள் கனிவுடன் மாறியது. அதை அட்டண்ட் செய்து காதில் வைத்தவனுக்கு அந்த பக்கம் சொல்லப்பட்ட செய்தி என்னவோ உடனே அவனின் பதில் "இன்னும் டென்மினிட்ஸ் தான் டார்லிங்.." என்று குருபரனை ஒரு பார்வை பார்த்தவன் மற்ற இருவரிடமும் தலையசைப்பால் விடைபெற்றான். அவன் கீழே வரவும் குருபரன் விவேக்கின் Ertica வை கொண்டு வந்து நிறுத்தவும் சரியாக இருந்தது. சில வேலைகளில் அவனுடைய காரை அவனே டிரைவ் பண்ணி கொண்டு செல்வதுண்டு. ஆனால் பல நேரங்களில் டிரைவர் தான். இப்பொழுது அவன் செல்வது அவனின் வீட்டிற்கு தான். இன்னும் பத்து நிமிடத்தில் அவன் அங்கே இருக்க வேண்டும். இல்லையெனில் அவனால் பதில் சொல்ல முடியாது அவனின் டார்லிங் இடம்.

அரைமணி நேரத்தில் வரும் இடத்திற்கு பத்து நிமிடத்தில் பறந்து வந்திருந்தான் அவன் டார்லிங் வார்த்தைக்காக தனது காரை போர்டிகோவில் நிறுத்தி இறங்கி பார்க்க‌ அவனின் தேவதை படிக்கட்டில் அமர்ந்திருந்தவள் தாவாயில் கைக்கொடுத்திருந்தாள். அவனுக்கு அவளை பார்த்தவுடன் சிரிப்பு தான் வந்தது. இப்பொழுது சிரித்தால் தனது தேவதையின் கோபத்தை தணிக்க இயலாது என்றறிந்தவன் அமைதியாய் அவளருகில் சென்றான்.

"டார்லிங்.." என்று மென்மையாய் அழைத்தான். வெளியிலும் அலுவலகத்திலும் ரௌத்திரத்தின் மருவுருமாய் இருப்பவன் அவனின் தேவதை முன்பு அடிமையாய் இருக்கவே விரும்புபவன்.

ஆனால் அவளோ தனது பிறை முகத்தை மறுபுறம் திருப்பி தனது கோபத்தை காட்டினாள்.

"டார்லிங்.. பேசமாட்டியா.. நீ சொன்ன மாறி டாடி டென் மினிட்ஸ் ல வந்துட்டேன் இல்லே.. பேசுடா மை பிரிசன்ஸ்.." என்று ஐந்து வயதான நிலவு பெண்ணிடம் கெஞ்சி கொண்டிருந்தான்.

இப்பொழுது இவனை பார்க்கும் யாரும் நம்பமாட்டார்கள் வி கே என்று அவனுக்கு யாரிடமும் கெஞ்சி கொஞ்ச தெரியாது. எதிரிக்கு சிம்ம சொப்பனம். எதிரிகளுக்கும் பிஸ்னஸ் வோல்டிலும் அவன் வி கே தான். ஆனால் அவனின் தாரகை முன்பு அவன் விவேக் கண்ணா.. வி கே இது அவனின் ரௌத்திர முகம்.. அவன் தாரகை முன்பு அவனின் கனிவான முகமே வெளிப்படும்.. எல்லோரையும் தனது விரலசைவில் ஆட்டிப்படைக்கும் ஆற்றல் படைத்தவனை தன் விரல் நுனியில் ஆட்டி வைப்பவள் தான் விவேக் கண்ணாவின் முழுநிலவு நேத்ர யாழினி.

விவேக் கண்ணாவின் உலகம் நேத்ர யாழினி மட்டுமே.. சில காரணங்களால் தனது குடும்பத்தை பிரிந்து உள்ளான். இது ஆறு வருடமாக அவனுக்கு அவனே கொடுத்துக் கொண்டே தண்டனை... அதை விரும்பி ஏற்றவனுக்கு வரமாய் வந்தவள் தான் நேத்ரா... அவனின் சந்தோஷம் முழுவதும் அவள் மட்டுமே.. தந்தையும் மகளுக்குமான உலகத்தில் யாரையும் நெருங்க விடாதவர்கள் இருவரும்.

"பொய் சொல்லாத டாடி.. நான் கால் பன்னலனா நீ வந்துருக்க மாட்டே.. நீ என்னை மறந்துட்ட.. என்கிட்ட பேசாத டாடி.." என்று தனது மழலை குரலில் மதுரகானமாய் இசைத்தாள் விவேக்கின் செல்ல மகள்.

" இல்லைடா பிரின்சஸ்.. டாடிக்கு இம்பார்டன்ட் மீட்டிங் இருந்துச்சிடா... அதுதான் டா லேட்.. டாடி என் டார்லிங் கிட்ட பொய் சொல்லுவனடா..." அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு கெஞ்சினான்.

ஆனால் அவன் மகளே கோபத்தை இழுத்து பிடித்து கொண்டிருந்தாள். இன்று சீக்கிரம் வந்து அவளை வெளியே அழைத்து செல்வதென்று காலையிலேயே தனது மகளிடம் வாயை விட்டுவிட்டான்... அதை அவன் அலுவலக பணிகளிடையே மறந்தும் போனான்... அவன் மறந்து போனாள் அவனின் தேவதையும் மறப்பாளா... அவன் மறந்ததன் விளைவு தனது மகளின் முன்பு கெஞ்சி கொண்டிருக்கிறான்.

சிறிது நேரத்தில் தனது மகளை சமாதானம் செய்து அவளை வெளியில் அழைத்து சென்றான்... அவன் மகளறியாமல் அவர்களை அவன் பாடிகார்ட்ஸ் தொடர்ந்தனர்... அவனின் செல்ல மகளுக்கு அவை பிடிப்பதில்லை... அவனுக்கு எதிரிகள் அதிகம்... அவனை தண்டிபதற்கு பதிலாக அவன் மகளை தண்டிக்க நினைத்தாள் அவனை உருத்தெரியாமல் அழித்நுவிடுவான்.. அதனால் எப்பொழுதும் அவளிறியாமல் அவளின் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தான்....
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 31, 2022
Messages
36
வி. கே தேடுறது ரூபவாஹினியவா?
குட்டிப்பொண்ணு விகேவ டாடி சொல்றாளே? அந்த பேபி வரமா வந்தவ அப்படின்னா? அப்போ நேத்ரயாழினி....?

சஸ்பென்ஸ் நெறைய இருக்கும் போல... 👌😍
 
Top