• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ரமா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 11, 2023
Messages
57
பௌர்னமி நிலா மகள் ஊர்வலம் போக தன் அறையில் அமர்ந்து லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான் அகஸ்டின்.. தன் வேலையை முடித்தவன் புதிதாய் பள்ளியில் இணைந்தவர்களின் குறிப்புகளை பார்க்கத் தொடங்கினான்.

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே வந்தவனின் விழிகள் ஓரிடத்தில் நிலைகுத்தி நின்றது.. ஆம் அதில் அகல்யா புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.

அவள் உதட்டில் இருந்த புன்னகை கண்ணை நெருங்கவில்லை என்பதை ஆணவன் உணர நிறைய நேரம் பிடிக்கவில்லை.. ஆனால் எதுவோ அவனின் மனதை பாரமாய் அழுத்துவதை ஆடவனால் தடுக்க முடியவில்லை.

விழிகள் அந்த திரையிலிருந்து விலகுவதாய் இல்லை.. ஏதோ ஒரு மோன நிலைக்கு ஆட்பட்டிருந்தான் ஆடவன்.

மனதில் எதுவோ உந்தி தள்ள அந்த சிறியவனின் புகைப்படத்தையும் அகல்யாவின் புகைப்படத்தையும் பார்த்தவன் கண்கள் எதையோ தெரிந்து கொண்ட நிம்மதியில் அவனின் முகத்தில் மென்புன்னகை படர லேப்டாப்பை அணைத்து விட்டு பால்கனி ஊஞ்சலில் வந்தமர்ந்தான் ஆடவன்.

வானத்தில் தெரிந்த முழுநிலவு அவன் மனதினுள் இத்தனை நாளாய் அமிழ்ந்து கிடந்த பாரத்தை லேசாக்கியது.

மனதில் எதோ தீர்க்கமான முடிவுடன் அந்த நிலவை பார்த்துக் கொண்டிருந்தான் அகஸ்டின்.

அதே பௌர்னமி நிலவை வெறித்துக் கொண்டிருந்தாள் பெண்ணவள்.

ஏனோ நேற்றிலிருந்து அவளின் தமையனின் முகம் கண் முன்னே வந்து போய் கொண்டிருந்தது.. தான் அவனுக்கு பாரமாய் இருக்கக் கூடாது என்று தான் அவனை பிரிந்து வந்தாள்.. ஆனால் ஏனோ என்றுமில்லாமல் இன்று தமையனின் நினைவு பெண்ணவளை பலவீனப்படுத்தியது.

அவனுக்கு அழைக்கலாம் என்றாலும் அவன் வீட்டில் தன்னால் பிரச்சனை உருவாவதை பெண்ணவள் விரும்பவில்லை.. ஆதலால் அதை மறக்க முயன்றாளே தவிர முடியவில்லை அவளால்.

ஏன் அவள் யாருமில்லாத நிலையில் அனாதையாய் உணர்ந்தவளுக்கு எல்லாமுமாய் நானிருப்பேன் என வார்த்தைகளில் ஆறுதல் தந்தவன் அவளின் தமையன்... ஆறுதல் மட்டுமல்ல பாதுகாவலன் அவன்.. அவனின் பாசம் கானல் நீரில் முகிழ்த்த ஒளியாய் சுடர்விடும்.


உதிர சொந்தம் அல்ல..
பந்தம் தந்த சொந்தம் அவன்..
நிலையில்லாத பந்தத்தில் தவித்திருக்க..
நிரந்தரமான சொந்தத்தை தந்தவன் அவளின் தமையன்..


தன் தமையனை நினைத்து என்றும் பெருமை கொள்பவள் இன்றும் அவனின் பாசம் அவளுக்கு கர்வத்தினை கொடுத்தது தான்.

" எங்கேயிருந்தாலும் நீங்க நல்லாருக்கனும் அண்ணா.. எங்களை மறந்துட்டு உங்க வாழ்க்கையை நீங்க வாழனும்.. அது தான் அண்ணா நான் தூரமா வந்தேன்.. என்னை மன்னிச்சிருங்க அண்ணா.." என்று நிலவிடம் கூறினாள் தன் மன்னிப்பை.

ஆனால் அவளின் நினைவுக்கு சொந்தக்காரனோ கருணாகரனின் முன் நின்றிருந்தான்.. உடன் அவனின் மனைவி மதுமதியும்.

" என்னம்மா மது நீதான் இவனை இங்கே விட்ட... இப்போ நீயே கேட்குறே.. என்னாச்சி மா.." என்றான் கேள்வியாய் கருணாகரன்.

அதே கேள்வி தான் துவாகரனுக்கும்.. கேள்வியுடன் தன்னவளை பார்த்தான்.

அவன் என்றும் எந்த சூழ்நிலையிலும் தன்னவளை வெறுத்ததில்லை.. கோபம் வருமே ஒழிய அதை தன்னவளிடம் காட்ட மாட்டான்.. அதை தனக்குள்ளே அடக்க பழகிக் கொண்டான்.

ஒரு பழமொழி உண்டு.. கணவன் மனைவி யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்தால் தான் அந்த இல்லறம் நல்லறமாய் மாறும்.. அதை தன் மனதில் ஏற்றுக் கொண்டவன் தன்னவளுக்காக தானே விட்டுக் கொடுத்து போக ஆரம்பித்தான்.

ஆனால் அதுவே அவர்களின் இல்லறம் மறைய காரணமானால் என்ன செய்வானோ.. இதோ இப்பொழுதும் தன் தங்கையின் மேல் உள்ள வெறுப்பை காட்டுவதற்கு தன்னையே பனயமாய் கொடுத்த தன்னவளை நினைத்து உள்ளம் மருகித்தான் போனான்.

ஏன் ஒரு அண்ணன் தங்கை பாசத்தை இவர்கள் உணரவில்லை.. இவர்கள் மட்டுமல்ல இந்த உலகத்தில் நிறைய பேர் அப்படித் தான் இருக்கிறார்கள்.

ஒரு ஆணும் பெண்ணும் பேசினால் அது தவறான ஒரு உறவைத் தான் கொண்டிருக்க வேண்டுமா..? ஏன் அது புனிதமான அண்ணன் தங்கை பந்தமாகவோ இல்லை அப்பா மகள் உறவாகவோ இருக்கக் கூடாதா என்ன..? இது தான் துவாரகனின் மனதினுள் ஓங்கி ஒலித்தது.

இது போல் சாதாரண ஒரு மனித மனநிலையில் தான் தன்னவளும் இது போல செய்கிறாள் என்று அறியாமல் இல்லை தான்.

ஆனால் இத்தனை வருடங்கள் என்னுடன் வாழ்ந்த வாழ்க்கையும் அல்லவா தவறாக பார்க்கிறாள்.. இந்த நினைவே ஆடவனுக்கு பெரிய மன வேதனையை தந்தது.

அப்பொழுது தான் மதுவின் குரலில் நிகழ்வுக்கு வந்தது.

"அது வந்து அண்ணா என் பையன் இவரை கேட்டு தொல்லை பன்றான் ணா.. தூங்க மாட்டேங்குறான்.. அது தான் இவரை கூட்டிட்டு போகலாம்னு வந்தேன்.. நீங்க கவலைப்படாதீங்க படாதீங்க அண்ணே அவ எங்க இருக்கான்னு தெரிஞ்ச உடனே நான் உங்களுக்கு சொல்றேன் அண்ணா.. இப்போ நான் இவரை கூட்டிட்டு போறேன்.." என்றாள் பவ்யமாய்.

கருணாகரனுக்கும் வேற வழி இல்லை.. இப்பொழுது இறுக்கினாள் நிச்சயம் இவள் நமக்கு சப்போர்ட் செய்ய மாட்டாள்.. இவனை விட்டு தான் பிடிக்க வேண்டும்..' என்று எண்ணியவன் தலையசைத்து அவனை அழைத்துச் செல்ல கூறினான்.

உயிர் உருகும் மனம் வேதனையுடன் தன்னவள் பின்னே சென்றான் துவாரகன்.

தன் மனைவிக்கு தன் தங்கையின் மேல் உள்ள சாதாரண கோபத்தை இவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள் அதன் கோபத்தை யாரிடமும் காட்ட முடியாமல் அமைதியை கையில் எடுத்தான் ஆடவன்.

வீட்டிற்குள் நுழைந்ததும் அவனின் கால்களை இரு பிஞ்சு கரங்கள் கட்டிக் கொண்டது.

தன் காலை கட்டிக் கொண்டவனை தன் உடல் வலியையும் பொருட்படுத்தாது தூக்கிக் கொண்டான் ஆணவன்.

ஆம் அவர்களின் மகன் தான் பிரக்யன். அபூர்வமாய் மலரும் குறிஞ்சி பூவாய் பனிரெண்டு ஆண்டுகள் கழித்து அவர்களின் தோட்டத்தில் மலர்ந்த மலர் அவன்.. தன் மகனின் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருப்பவன்.

தன் மகனை கட்டிக் கொண்டு தன் அறைக்குள் மகனுடன் நுழைந்து கொண்டான்.. அவனை பின் தொடர்ந்தாள் அவனின் மனைவி.

உள்ளே வந்தது தான் தாமதம் வார்த்தைகளால் வதைக்க தொடங்கி விட்டாள்.

" நீ என்ன தான் இப்போ நினைச்சிட்டு இருக்க.. அந்த கேடுகெட்டவ எங்க இருக்கான்னு உன்னால சொல்ல முடியுமா முடியாதா.. என்னோட வாழணும்னு நீ நினைச்ச அவ எங்கே இருக்கான்னு முதல்ல சொல்லுய்யா.. அவ உன்னை இந்த அளவுக்கு மயக்கி வச்சிருக்காளா.." என்று எண்ணெயில் போட்ட கடுக்காய் பொறிந்தாள்

தன் மனைவியின் சொற்களை கேட்டு தன் காதுகளை பொத்திக் கொண்டவன்,

"மது அவ என் தங்கச்சி.. நீ இப்படி பேசுறது சரியில்லை.. அவகிட்ட எவ்வளவு பாசமா இருந்த.. ஆனா இப்போ இப்படி பேசுறியே உனக்கு மனசு இருக்கா.. நீயும் ஒரு பொண்ணு தானே.." என்றான் வலியுடன்.

"ஆனா உன் கூட பொறந்த தங்கச்சி இல்லையே.. என்னவோ ஒரே வயத்துல இருந்து பொறந்த மாறி பாசமலர் படம் ஓட்ற நீ.. ஏன் நான் பொண்ணா என்னன்னு உனக்கு சந்தேகம் வந்துடுச்சா.. ஆமாய்யா நான் தானே உன் பிள்ளையை சுமந்தே.. இல்லை நான் இல்லாம நீயே பெத்துக்கிட்டியா.." என்று அதற்கு மேல் கேட்ககூடாத வார்த்தைகள் தான்.

அவளின் வார்த்தைகளில் தன் காதுகளை பொத்திக் கொண்டவன் அமைதியாய் குளியலைறைக்குள் புகுந்து கொண்டான்.

ஒரு பெண்ணே இன்னொரு பெண்ணை அசிங்கமாய் பேசக் கூடாத வார்த்தைகளை கேட்டவனின் மனம் வலிக்க தான் செய்தது.

"அம்மு இந்த பேச்சுலாம் கேட்க வேண்டாம்னு தான் இந்த அண்ணனை விட்டு போனியா டா... எங்கடா இருக்க குட்டி.. உன் மனசுக்கு நீ எங்க போனாலும் நல்லா தாண்டா இருப்பே.. நான் வணங்கும் அந்த கடவுள் உனக்கு எல்லா சந்தோஷத்தையும் கொடுக்கட்டும் டா அம்மு.. இந்த அண்ணனை மறந்திடாத அம்மு.." என்று தன் தங்கையிடம் மனதோரம் பேசிக் கொண்டான்.

இங்கே தன் வீட்டிற்கு வந்த ஆதவனை கண்டு அவனின் மனையாளும் மகளும் சேர்ந்தே முறைத்தனர்.

இருவரையும் கண்டவன், "என்னாச்சி இதுங்க ரெண்டும் முகமும் சரி இல்லையே.. எதாவது மறந்துட்டோமா என்ன..' என்று தன் நெற்றியில் கை வைத்து யோசிக்க ஆரம்பித்தான்.. ஆனால் எதுவும் விளங்கவில்லை ஆடவனுக்கு.. முடிவில் அவர்களிடமே சரணாகதி ஆனான்.

"ஏய் ஹனி என்னாச்சி டி எதுக்கு இப்போ ரெண்டு பேரும் முறைக்கிறீங்க. . ஆரா குட்டி ஏன்டா டாடிய முறைக்கிறீங்க.." என்றான் இருவரிடமும் சமாதாணமாய்.

அவனின் மகளோ அவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல்,

"போ பா நீ பேட் பா.." என்றாள் கிள்ளை மொழியில் சொல்லிவிட்டு விளையாட சென்றாள்.

" அடியே அவ என்னடி சொல்லிட்டு போறா.." என்றான் மனைவியிடம்.

அவன் மனைவியோ அவனை முறைத்து பார்த்து, "ஏன்டா உனக்கு நாங்க வீட்ல இருக்கறது ஞாபகம் இருக்கா இல்லயா டா.. நீ உன் மனசுல என்னடா நினைச்சிட்டு இருக்க நீ.. காலையில என்ன சொல்லிட்டு போன.." என்றாள் முறைத்தபடி.

அவனோ எத்தனை யோசித்தும் எதுவும் புரியாமல் எதுவும் நினைவில் வராமல் மண்டையை பிய்த்துக் கொண்டானே தவிர்த்து அவனுக்கு எதுவும் நினைவில் வரவில்லை.

தன் மண்டையை போட்டு கசக்கியவனை பெண்ணவளோ கொலைவெறியுடன் முறைத்தாள்.

' அய்யோ இவ பார்வையே சரியில்லையே.. என்னத்தை தான் அப்படி மறந்தோம்.. இன்னமும் தெரியலைன்னு சொன்னா ராட்சசி ரூமை விட்டு வெளியே தொரத்திடுவாளே.. அடேய் ஆதவா என்னடா பண்ணி வச்ச.. இந்த ராட்சசிகிட்ட என்ன சொன்னேன் தெரியலையே..' என்று மண்டையை தட்டி பலவிதமாய் யோசித்தவனை இதற்கு மேல் தாங்காது என்று அவனின் தர்மபத்தினியின் கண்களில் வெள்ளம் கரை புரண்டது.

அதை கண்டவன் தன்னவளிடம் சரணடைந்து விட்டான்.. அவளின் கோபத்தை தாங்கும் வல்லமை அவனிடம் உண்டு..ஆனால் அவளின் கண்களில் வழியும் கண்ணீரை தாங்கும் சக்தி அவனிடம் இல்லை.. ஆதலால் மொத்தமாக அவளிடம் சரணடைந்து விட்டான்.

" ஹனி இங்கே பாரு டா.. சத்தியமா வேலை டென்சனில மறந்துட்டேன் டா.. சாரி சாரி கண்ணம்மா.. மன்னிச்சிரு டா.. இப்போ நீ சொல்லு அதை நான் நிறைவேத்துறேன் டா.." தன்னவளின் தாவாயை பிடித்து கொஞ்சினான் ஆதவன்

"நீ போடா என்கிட்ட பேசாதே இன்னைக்கு என்னை எங்க அப்பாகிட்ட கூட்டிட்டு போறேன்னு சொன்னேன்.. ஆனா நீ மறந்துட்டே இல்லை.. போ உன் நினைப்புல சுத்தமா நான் இல்லை.." என்று சிறுபிள்ளையாய் தன்னவனிடம் கொஞ்சினாள்.

அப்பொழுது தான் தன்னவளிடம் காலை சொல்லவிட்டு சென்றதே நினைவில் வந்தது.

"அச்சோ சாரி சாரி கண்ணம்மா பட்டுமா..ஜஸ்ட் பைவ் மினிட்ஸ் டா பிரஷ் அப் ஆயிட்டு வந்துடறேன்.." என்று அவசர அவசரமாய் கிளம்ப போனான்.

அதனை கண்டு பெண்ணவளுக்கு அவனின் மேல் காதல் அதிகரித்ததே தவிர சுத்தமாய் குறையவில்லை.

இவன் என்னவன் என்ற கர்வத்துடன் கம்பீரமாய் கிளம்பி வந்தவனை காதலுடன் பார்த்தாள்.

அவளின் காதலில் எப்பொழுதும் போல் தன்னை தொலைத்தவன் கண்டித்து காற்றில் முத்தம் தந்தவன் அவளிடம் நெருங்கி விளையாடி கொண்டிருந்த தன் மகளை தூக்கி கொண்டு,

"மேடம் சைட் அடிச்சி முடிச்சிட்டீங்கன்னா கிளம்பலாமா.. மீதிய நைட் வந்து கன்டினியூ பண்ணலாம் டார்லிங்.." என்றான் கண்டித்து ரகசியமாய்.

அந்த ரகசியம் சொன்ன செய்தியில் பெண்ணவளின் முகம் குங்குமமாய் சிவந்து போனது.





நிழலை வருடும் நிஜம் தொடரும்..🌹


அடுத்து பாகத்துல பாக்கலாம் பட்டூஸ்.. போன பதிவுக்கு கமெண்ட் லைக் பண்ண செல்லம்ஸ்க்கு நன்றி.
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 31, 2022
Messages
36
ரொம்ப நல்லா இருக்கு இன்னைக்கு எபி 👌
 
Top