• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பகுதி 11

Tharsan Thanu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
72
46
18
SRILANKA
பகுதி – 11



சுபாங்கியின் மனநிலையை அறிந்ததில் இருந்து பிரபாவதிக்கு ஏதோ கைக்கட்டு அவிழ்ந்தாற் போல இருந்தது...அதுவரை சிறியவர்களின் வாழ்வை சீர்ப்படுத்த எந்த வழியும் தெரியாமல் தவித்துக் கொண்டு இருந்தவர் இப்போது என்ன வழியில் அவர்களை சேர்த்து வைக்கலாம் என தீவிரமாக சிந்திக்கத் தொடங்கினார்..அதன் முதல்ப் படியாக சுபாங்கியை தனாவின் அறைக்கு அனுப்ப திட்டம் தீட்டினார்....



இந்த ஒரு மாத காலமாக சுபாங்கி கீழேயும் அவன் மேலேயுமாகத்தான் அவர்கள் நாட்கள் நகர்ந்துள்ளது...ஒருவரை ஒருவர் பார்க்கும் சந்தர்ப்பமே குறைவு....அப்படி இருக்கையில் எங்கிருந்து அவர்களுக்கிடையில் ஈர்ப்பு வருவது...இதுவே அருகில் இருந்தால்....எப்படியும் ஏதோ ஒரு தருணத்தில் இவள் நம் மனைவி என்ற உணர்வு அவனுக்கு வராமலா போகும்.......



தனது திட்டத்தை நிறைவேற்ற அன்றைய காலை உணவு நேரத்தை தெரிவு செய்தார் பிரபாவதி...



தனா உன்னிடம் சற்றுப் பேச வேண்டும்பா...
தோசையை பிய்த்து சட்னியில் தோய்த்துக்கொண்டிருந்த தனஞ்சயன் தாயை நிமிர்ந்து பார்த்தான்.

என்னம்மா ஏதாவது முக்கியமான விடயமா??


ம்ம் ..ஆமா தனா....ஆனால் ...இங்கே பேச முடியாது. சாப்பிட்டு முடித்தவுடன் என் அறைக்கு வா..... சுபிம்மா நீயும் தான்.

சரி அத்தை...

வழக்கத்துக்கு விரோதமாக ஓர் இறுகிய குரலில் உத்தரவிட்டுச் செல்லும் தாயின் முதுகை குழப்பத்துடன் பார்த்தவன் பின் பார்வையை சுபியிடம் திருப்பி உனக்கு ஏதாவது தெரியுமா?? என்பது போல் பார்த்தான்...


ஆமாம்....இவர் நயன பாசை புரிந்து பதில் கொடுப்பதற்காகத் தானே அவள் பிறப்பெடுத்திருக்கிறாள்....போடா டேய்.....


அவன் பார்வையை கருத்தில் எடுக்காது சுபாங்கி தன் உணவில் மிகவும் கவனமாயிருக்கவும்.... லேசான முறைப்புடன் “திமிர்டி” என்று முனுமுனுத்தவன்.......
தன் உணவை விரைந்து முடித்துவிட்டு அவளிடம் ..”.சீக்கிரம் வா” ....என்ற ஒரு அதட்டலுடன் தாயின் அறைக்குள் நுழைந்தான்.



தன் அறையில் ஈசி சாரில் சாய்ந்து கண்களை மூடியிருந்த பிரபாவதி மகனின் காலடி ஓசை கேட்டதும் கண்விழித்து “வாப்பா” என்றழைத்தார்....


என்னம்மா ?? என்ன முக்கியமாய்ப் பேச வேண்டும்..?


தனா நீ உன் மனதில் என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறாய்?? நீ என்ன செய்தாலும் நான் எதுவுமே கேட்கமாட்டேன் என்றா....??


தாயின் கேள்வியின் அர்த்தம் புரியாமல் புருவம் சுளித்தவன் ....புரியவில்லை... ?? என்றான் ஒற்றைச் சொல்லாக...


அவனின் கேள்விக்கு நேரடியாக பதில் கூறாமல் .....”இதோ பாரப்பா இந்த ஊரில் நம்ம குடும்பத்துக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது. நம் வீட்டு விடயங்கள் வெளியில் அலசப்படுவதை நான் அனுமதிக்க முடியாது” என்றார் பிரபாவதி அழுத்தமான குரலில்



தனஞ்சயனின் முகத்தில் சட்டென ஒரு அதிர்வு தெரிந்தது. விழிகள் லேசாக இடுங்க “அம்மா முதலில் புரியும்படி பேசுங்கள்??” என்ற அவன் குரலில் இப்போது ஒரு சிறு பதட்டம் ஓடியது.....


அவன் அன்னைக்கு இத்தனை நாட்களாக எந்த விடயம் தெரிந்துவிடக்கூடாது என்று மூடி மறைத்தானோ அது தெரிந்துவிட்டதா?? ஆனால் எப்படி..?? அதற்கு வாய்ப்பே இல்லையே !! மனதில் பல கேள்விகள் ஓட அன்னையின் பதிலுக்காக அவன் பதட்டத்துடன் காத்திருந்தால்...அவன் அன்னை வேறு சொன்னார்....



நேற்று நம் வீட்டுக்கு வந்த மூலைத்தெரு லஷ்மி கேட்கிறாள். உன் மகனும் மருமகளும் காதல் திருமணம் என்று கேள்விப்பட்டேன்...ஆனால் உன் மருமகள் வந்தநாள் தொட்டு உன்கூட கீழேயே தான் தூங்குதாமே...?? என்ன விடயம் என்று... இதற்கு நான் என்ன பதிலைக் கூறுவது தனா..??? என்றார் லேசான அழுத்தத்துடன்...



முதலில் தாயின் பேச்சு புரியாது சிறு புருவச் சுழிப்புடன் தூங்குவது......??? என்று இழுத்த தனாவிற்கு சட்டென விஷயம் விளங்க முதலில் அவன் முகத்தில் விஷயம் இவ்வளவு தானா எனும்படியான ஓர் நிம்மதியின் சாயலே ஓடி மறைந்தது.. ஒரு பெருமூச்சை சத்தமின்றி வெளியேற்றியவன் முகம் மறுகணமே ஏதோ சிந்தனையில் கோபத்தில் கறுக்க...



நம் உள்வீட்டு விடயம் எப்படிம்மா வெளியே போனது....முதலில் வேலைக்காரர்களைக் கூப்பிட்டு கண்டித்து வைக்க வேண்டும்....என்றான் கடுமையான குரலில்...
 

Tharsan Thanu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
72
46
18
SRILANKA
முட்டாள்த்தனமாய் உளறாதே தனா..... என்று அவனை அதட்டிய பிரபாவதி தொடர்ந்து இயல்பிற்கு புறம்பாய் ஒரு விடயம் நடந்தால் அனைவரும் இப்படி விசாரிக்கத்தான் செய்வார்கள். நேற்று நம் சமையல்காரி பாக்கியத்திடம் உங்கள் இருவருக்கும் கொஞ்சம் நேரம் சரி இல்லை அதனால் தான் சுபி கீழே என்கூட தங்குகிறாள் என்று பேச்சுப் போக்கில் சொல்வது போல சொல்லி சமாளித்து வைத்தேன். இனி அந்த பேச்சு அடங்கிவிடும் ...ஆனால்....

இப்படி ஒரு பேச்சு வந்த பின் இனியும் சுபி கீழே என்கூட தங்குவது நல்லதல்ல...இனி சுபி மேலே உன் அறையிலேயே தங்கிக் கொள்ளட்டும் என்றார் அழுத்தமான குரலில் முடிவாக.



தாயின் பேச்சைக் கேட்டு ஒரு கணம் எதுவும் கூறாது மௌனம் காத்தவன் பின் இதைப்பற்றி முதலில் உங்கள் சுபி என்ன நினைக்கிறாள் என்று கேளுங்கள் என்றான் யோசனையான குரலில்....


அப்போதுதான் அறையினுள் நுழைந்த சுபியின் செவிகளில் அவன் பேச்சு விழ ....அவள் முகம் லேசாகக் கடுத்தது....ரொம்பத்தான் அக்கறை!!!


ஆஹா...என்ன ஒரு தாராளம்..... என் எண்ணத்துக்கும் விருப்பத்துக்கும் தான் எவ்வளவு மதிப்புக் கொடுக்கிறீர்கள் ......அதை நினைக்கும் போதே புல்லரிக்குது ..... என்றாள் நக்கல் குரலில்...



அவளின் குத்தல் பேச்சில் வழக்கம் போல அவனுக்கும் கோபம் ஏற.....ஹ்ம்ம்... அதுதானே உன்னிடம் எல்லாம் என்னடி கேட்பது.......... நான் சொன்னால் அதை அப்படியே கேட்க வேண்டியது தான் உன் கடமை ..புரிந்ததா.........என்றவன்



.....ம்ம்....சீக்கிரம் உன் பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு மேலே என் அறைக்கு வா..என்றுவிட்டு ..ம்ஹும்...... உத்தரவிட்டுவிட்டு விரைந்து வெளியேறினான்.



செல்லும் அவனின் முதுகை வெறித்த சுபியின் விழிகள் கோபத்துடன் மின்னி பின் அவள் அத்தையிடம் பாய்ந்தன... அவளுக்கு சமாதானம் சொல்வதைப் போல் சிறு சிரிப்புடன் இமைகளை மூடித்திறந்தவர் சீக்கிரமே எல்லாம் சரியாகிவிடும் சுபிம்மா.. என்றார் இதமான குரலில்...

.


அங்கு வந்த அந்த ஒரு மாதத்தில் அன்று தான் சுபி முதன் முதலாக மாடிக்கு போகிறாள். பளிங்குத்தரையும் அலங்கார வேலைப்பாடுமாக எங்கும் பணச் செழுமை தெரிந்தாலும் அனைத்திலுமே ஒரு மங்கல் தன்மை தெரிந்தது..... கீழேயும் இதே போலத்தானே.....இங்கு நிறையவே மாற்றம் செய்ய வேண்டும்....மனதில் குறித்துக் கொண்டாள்.



மாடி ஹாலில் காலடி வைத்தவள் அங்கு இருந்த அனைத்து அறைக் கதவுகளும் மூடப்பட்டிருக்க எந்த அறை அவன் அறை என குழம்பியபடியே ஹாலில் தயங்கி நிற்கவும் வேகமாக ஒரு அறைக்கதவை திறந்து. வெளியே வந்த தனஞ்சயன் அவளை சிறு கோபத்துடன் நோக்கி



ஏன் இங்கேயே விழித்துக் கொண்டு நிக்கிறாய்?? ஓஹோ மகாராணிக்கு வெத்தலை பாக்கு வைத்து அழைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்போ..?? என்றான் நக்கல் விரவிய குரலில்....



சுபிக்கு உள்ளே கடுத்தது.....ஏதோ முன்பே அவளுக்கு வீட்டை முழுதும் சுற்றிக் காட்டியவன் போல...நேரே வருவது தானே என்ற சிடுசிடுப்பு....அது தெரிந்தால் நான் ஏன் இங்கேயே பேக்கு மாதிரி நிக்கிறேனாம்.... மனதுக்குள் கறுவியவள் .....வெளியே.....



எனக்கு மூக்குச் சாத்திரம் பார்க்க தெரியாது என்றாள் அப்பாவியாக.....


அவன் அவள் கூறியது புரியாது என்ன?? என புருவம் சுழித்து வினவவும்....


இல்லை ..உங்கள் அறை எதுவென்று மூக்குச் சாத்திரம் பார்த்துக் கண்டுபிடிக்க எனக்கு மூக்குச் சாத்திரம் எதுவும் தெரியாது!!!!!!!!!! என்றாள்..மேலும் பணிவு நிரம்பிய குரலில்.....


தனஞ்சயனின் விழிகள் ஒரு கணம் மின்னின........... அடக்கிய முறுவலில் இதழோரம் துடிக்க பரவாயில்லை...இனியும் உனக்கு அது தேவைப்படாது ...என்றவன் இது தான் என் அறை உள்ளே வா ..என்று அழைத்துப் போனான்....


முன்னே வரவேற்பறையும் இரட்டைக் கட்டிலுமாக மிகப் பெரிய அறை தான்.... ஆனால் அறையில் எந்த இடத்திலும் ஒழுங்கு இல்லை... கண்டபடி இறைந்து கிடந்த நாளிதழ்களும் ...ஆடைகளும்....இவை எல்லாவற்றையும் விட அறையின் மூலையில் இருந்த மேசையில் இருந்த மதுப்புட்டியும்...ஒரு முறை அறையைச் சுற்றி விழிகளை ஓட்டியவள் முகத்தைச் சுழித்தாள்.



அவள் முகத்தையே கவனித்துக்கொண்டிருந்தான் போல ..... கேலியான ஒரு சிரிப்புடன் ஒரு ஆணின் அறை இப்படித்தான் இருக்கும்.... என்றான்...






ம்ஹும்...நிச்சயம் இல்லை..ஒரு சோம்பேறியின் அறை தான் இப்படி இருக்கும் என்றாள் சுபி சிறிது கடுப்புடன் சற்றும் பயமற்று....... தொடர்ந்து என் அப்பாவின் அறை எப்படி இருக்கும் தெரியுமா?? அதது அந்தந்த இடத்தில் வைக்கப்பட்டு.....ஒரு தூசி துரும்பு இல்லாமல்....பளிச்சென்று இருக்கும்...என்றாள் கர்வக் குரலில்.



அவள் பேச்சில் அதுவரை இலகுவாக இருந்த தனாவின் முகம் லேசாக இறுகியது..


ஓஹோ... உன் அப்பாவின் அறையை யார் சுத்தம் செய்வார்கள்??? அமைதியாக வினவினான்.

ஏன்..? அ... அம்மா....தான்.


நினைத்தேன்...... அந்தாள் எங்கே செய்யப்போகிறார். சரி..... தேவையில்லாத பேச்சு நமக்கு எதற்கு ....இப்போது என் அறையைச் சுத்தம் செய்வது உன் பொறுப்பு..... புரிகிறதா?? என்றான் அமர்த்தலாக.



என்னது...??? நானா....??


என்னது நீயா?? நீதானே என் பொண்டாட்டி..அப்போ நீதான் செய்ய வேண்டும்...


கொழுப்புத்தான்....உங்கள் மனதில் நீங்கள் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் அத்தான்..???
 
  • Like
Reactions: Admin 01

Tharsan Thanu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
72
46
18
SRILANKA
சுபியின் வினாவில் தனாவின் விழிகள் சட்டென பளிச்சிட.....
ம்ம்ம்ம்....இப்போது ...இந்தக் கணம் என்ன நினைத்தேன் என்றால்... நீ என்னை இப்படி அத்தான் என்றழைப்பது நன்றாக கேட்க இதமாக இருக்கிறது என்று நினைத்தேன்..... அதோடு நீ என்னை இப்படி உரிமையோடு அழைப்பதை உன் அப்பன் கேட்க நேர்ந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்றும் நினைத்தேன்.....என்றான் ஓர் விதமான குரலில்....



அவன் பேச்சில் அவனுடன் சண்டை போட வந்த விடயம் மறந்து சிலகணங்கள் அமைதியாய் நின்றாள் சுபாங்கி.... இவனுக்கு நான் அத்தான் என்று அழைப்பது பிடித்திருக்கிறதாமா...? அவனை உரிமையுடன் அப்படி அழைக்க அவளுக்கும் தான் பிடிக்கும்... சுபாங்கியின் இதழோரம் ஒரு முறுவல் மலர்ந்தது....



அதை விசித்திரமாகப் பார்த்த தனஞ்சயன் ஹேய்ய்... என்ன என் பேச்சில் வழக்கம் போல உன் முகத்தில் எள்ளு வெடிக்கும் என்று பார்த்தால் நீயானால் புன்னகைத்துக்கொண்டிருக்கிறாய் ... உன் அப்பனைச் சொன்னதும் உனக்கு கோபம் வரவில்லை...?? என வினவினான்.



அவனின் வியப்பான கேள்வியில் அவளுக்கே உரிய குறும்புக் குணம் தலைதூக்க தன் புன்னகைக்கான காரணத்தை மறைத்து.....


ஹ்ம்ம்.... முன்பு வீட்டில் அப்பா உங்களைத் திட்டுவதை காது புளிக்கும் அளவுக்கு கேட்டேன்....இப்போது அப்படியே மாறி உல்ட்டாவாக நடக்கிறது என்று அதை நினைத்தேனா .... சிரிப்பு வந்துவிட்டது என்றாள் சுபாங்கி அவன் முகத்தைக் குறுகுறு விழிகளால் கூர்ந்தபடியே குரலில் சிரிப்பைத் தேக்கி....



அவள் எதிர்பார்த்தது போலவே அவன் முகம் கறுத்தது......ஒஹ்...அந்தாள் என்னை அப்படி என்ன சொல்லித் திட்டுவார்...?? என வினவினான். உணர்ச்சியற்ற குரலில்...


சுபாங்கியும் தயங்கவில்லை.... நீங்கள் ஒரு குடிகாரர்.... உங்களுக்கு இல்லாத கெட்ட பழக்கங்களே இல்லை.... பணக் கொழுப்பில் ஊதாரித்தனம் பண்ணிக்கொண்டு இருக்கிறீர்கள்... இன்னும்....



ஓஹோ..அவர் வந்து பார்த்தாராமா??? ஒரு மாதிரிக் குரலில் வினவினான் தனஞ்சயன்.


எ..என்ன???


அதான்....எனக்கு உலகில் உள்ள அத்தனை கெட்ட பழக்கங்களும் உண்டு என்பதை.....


அதுதான் அவர் ஒவ்வொரு வருடம் இங்கு வரும் போதும் நீங்கள் புதிது புதிதாக கற்றுக்கொண்ட நல்ல பழக்கங்களை அவர் முன்பே ஒத்திகை பார்ப்பீர்களே அது போதாதாமா.....உங்களைப் பற்றி தெரிவதற்கு.....


ஓஹோ......உன் அப்பா அனைத்தையும் வந்து வீட்டில் ஒப்பிப்பாராக்கும்....??


பின்னே நீங்கள் எவ்வளவு மோசமானவர் என்று எங்களுக்கு புரியவைக்க வேண்டாம்....??


நான் கெட்டவன் என்பதை உங்களுக்கு ஏன் டி புரிய வைக்க வேண்டும்......???


ம்ம்....உங்கள் நோக்கமே மாமன் மகளான என்னை வளைத்து திருமணம் செய்வது தானே!!! அதற்கான முயற்சிகளை நீங்கள் செய்தால் உங்களைப் பற்றி தெரிந்தால் தானே நான் விலகிப் போவேன்......


அவள் பேச்சைக் கேட்ட தனஞ்சயனின் முகம் பெரும் வியப்பைக் காட்டியது..........மறுகணமே ஹ ஹ ஹா........என்று வாய்விட்டுச் சிரித்தவன்.... சத்தியமாய் எனக்கு அப்படி எந்த எண்ணமும் முன்பு இருந்ததே இல்லடி.....என்றான் சிரிப்பினூடே..


ஹ்ம்ம்...அதுதான் அவளுக்கு தெரிந்த விடயம் ஆயிற்றே.....ஆனாலும்....


ஓஹோ...அப்படி எந்த எண்ணமும் இல்லாதவர் எதற்கு ஒவ்வொரு வருடமும் அப்பா இங்கு படையல் போட வரும் போதெல்லாம் அவரிடம் போய் என்னைப் பற்றி விசாரித்தீர்கள்....??


அவள் கேள்வியில் தனஞ்சயனின் இதழ்கள் ஒரு குறும்புச் சிரிப்பைச் சிந்தின.... அது வேறு விசயம்டி..... கிணத்துல விழுந்த உன்னை காப்பாற்றினேன் இல்லையா...அப்போது தானே உன்னை முதல் தடவை பார்த்தது...... அப்போது ரொம்பவும் மிரண்டு போய் என் கழுத்தை கட்டிக்கிட்டியா.....ரொம்ப அப்பாவி பயந்த சுபாவின்னு தோணிச்சு.....அது தப்புன்னு இப்போ புரியுது....அதைவிடு.... ஆனா



அடுத்த வருஷம் நீ வருவன்னு எதிர்பார்த்தேன்...சும்மா எப்டி இருக்கன்னு பார்க்க தோணிச்சு....ஆனா நீ வரல.....ஏதோ ஓர் உந்துதல்ல உன் அப்பாகிட்ட போய் கேட்டேன்...உங்க பொண்ணு எப்டி இருக்கான்னு....?? உன் அப்பன் போலவே நீயும் தப்பா நினைச்சிடாத....சும்மா ஒரு ஆர்வம்..அந்த அப்பாவி குட்டிப்பொண்ணு மேல...வேற எதுவும் இல்ல...



ஆனா நான் கேட்டதும் உன் அப்பன் தாம் தூம்னு குதிக்க ஆரம்பிச்சுட்டான்.....என் பொண்ணப் பத்தி உனகென்னடா பேச்சு....அவளை பற்றி கேட்க நீ யாருடா..?? அப்படி இப்படின்னு.....



உன் அப்பாவை கோபப் படுத்தி பார்கிறதென்றால் தான் எனக்கு அல்வா சாப்பிடுற மாதிரி ஆச்சே.... அதனால அதுக்கு அப்புறம் உன் அப்பாவை எங்கே கண்டாலும் அவர கோபப்படுத்துரதுக்காகவே உன்னைப் பற்றி விசாரிப்பேன்.... ஆனா நிஜமா உன் முகம் கூட எனக்கு அப்புறம் மறந்து போச்சு .....உன் பேர சொன்னா உன் அப்பா கோபப்படுவார் எனக்கு அது போதும்.....அதனாலேயே உன் பேர சொல்லி அவர சீண்டுவேன்......


ஹ்ம்ம்...இதை தான் சொல்வாங்க போல பூனைக்கு கொண்டாட்டம் ...எலிக்கு திண்டாட்டம்னு.....

புரியலை ...??


பின்னே என்ன நீங்க பாட்டுக்கு அப்பாவைச் சீண்டுறதுக்காகவே என் பேர சொல்ல .....அப்பா என்னடான்னா நீங்க என் மேல வேற ஏதோ ஐடியால இருக்கீங்கன்னு நினைச்சு என்னை உங்க கண்ணுல காட்டக் கூடாதென்றே என்னை இந்த ஊருக்கு அதுக்குப்பிறகு அழைச்சுட்டு வரல தெரியுமா...???

 

Tharsan Thanu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
72
46
18
SRILANKA
விழிகள் மின்ன தனஞ்சயன் விசிலடித்தான்....சோ மகாராணி அதுக்கப்புறம் ஊருக்கு வராததின் ரகசியம் இதுதானா..?? ஆனால் இதில் நீ என்னைக் குற்றம் சொல்ல முடியாதும்மா...... நான் என்ன தான் பேசினாலும் உன் அப்பாவிற்கு உன்மேல் நம்பிக்கை இருந்தால் அழைத்து வந்திருப்பார்....அவருக்கு உன் மேல் நம்பிக்கை இல்லை அது தான் விஷயம் ....


சுபாங்கியின் விழிகள் வியப்பில் விரிந்தன....அவள் எண்ணமும் அதுதானே......அவள் தந்தைக்கு தெரியும் இந்த ஊரின் மேல் அவளுக்கு எவ்வளவு ஆசை என்று...... ஒவ்வொருமுறை அவள் கெஞ்சிய போதும் தனாவை காரணம் காட்டி மறுத்தாரே அவர் மகள் மேல் அவருக்கு நம்பிக்கை இருந்திருந்தால் அழைத்து வந்திருக்கலாம் தானே!!!!!!!!



என்ன இப்படி கண்ணை உருட்டுகிறாய்..???


இல்ல....நானும் அதைதான் நினைப்பேன்.....அப்பாவிற்கு என் மேல் நம்பிக்கை இல்லைன்னு......அவர் என்ன நம்பியிருந்தா..யார் என்ன பண்ணாலும் என் பெண் மாறமாட்டாள் என்ற நம்பிக்கை இருந்திருந்தா என்னை அழைச்சுட்டு வந்திருக்கலாம் என்று....



அவளை வியப்பாய் ஏறிட்டான் தனஞ்சயன்...... பரவாயில்லையே உன் அப்பாவின் தவறினைக் கூட ஒத்துக்கொள்கிறாய் ..??


ஹ்ம்ம்...அந்தவிடயத்தில் எனக்கும் அப்பா மேல் சிறு கோபம் உண்டு..யார் செய்தாலும் தப்பு தப்புதானே!!!


ஹ்ம்ம்....பரவாயில்லை.....உன் அப்பா போல நான் பிடிச்ச முயலுக்கு காலே இல்லன்னு முரட்டடியா பேசாம சரி பிழை அறிஞ்சு பேசுற....கொஞ்சம் நல்ல புத்தியும் இருக்கு தான் போல ...



ஹப்பா....வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷிப் பட்டம்......இவனிடம் ஒரு நல்ல வார்த்தை கேட்க அவள் அவனுடன் சேர்ந்து அவள் தந்தையைத் திட்ட வேண்டுமாமா...... ஆனாலும் அவள் ஒன்றும் இவனின் மனத்தைக் குளிர்விக்க அவள் தந்தையைக் குறைவாகப் பேசவில்லையே...



சொல்லப்போனால் சுபாங்கி தனாவை இவ்வளவு தீவிரமாக காதலிக்க அவள் தந்தையும் ஒரு வகையில் காரணம்.....சுபாங்கிக்கு இந்த ஊர் என்றால் கொள்ளைப் பிரியம்...ஆனால் என்று அவள் முதன்முதலில் தனஞ்சயனை சந்தித்தாளோ அதன் பின் அவளுக்கு இந்த ஊருக்கு வரும் வாய்ப்பு மறுக்கப்பட்டுவிட்டது.....ஆனால் தாயின் நினைவிடத்தில் படையல் போடுவதற்காக தவிர்க்க முடியாமல் ஒவ்வொரு வருடமும் அந்த கிராமத்துக்கு வரும் அவள் தந்தை ஒவ்வொருமுறையும் தனஞ்சயன் குறித்த ஏதாவது ஒரு புகாருடன் தான் திரும்புவார்.....





சுபாங்கியின் மனதில் அவன் மேலான வெறுப்பை வளர்ப்பதாய் நினைத்து ....இன்று அந்த பொறுக்கி வயல் வரப்பிலேயே காத்துக்கிட்டிருந்தான் மா...குடித்திருப்பான் போல பக்கத்தில் வந்தாலே சாராய நாற்றம் ......துணிச்சலுடன் வந்து என்னிடமே உங்கள் பெண்ணை அழைத்துவரவில்லையா என்று கேட்கிறான்..என்ன திமிர் பார்த்தாயா??? வந்த கோபத்தில் கண்மண் தெரியாமல் திட்டிவிட்டு வந்துவிட்டேன் என்பார்....



இப்படியே ஒவ்வொரு வருடமும் தனஞ்சயன் குறித்த ஏதாவது பேச்சு வரும்......அவர் பேசுவது என்னவோ மகளுக்கு அவன் மேல் வெறுப்பு வரவேண்டும் என்ற நோக்கத்தில் தான்..ஆனால் முதல் பார்வையிலேயே தனாவால் ஈர்க்கப்பட்டிருந்த சுபாங்கிக்கு தந்தையின் பேச்சு அவனும் அவளை விரும்புகிறான்..அவளைக் காண்பதற்காக துடித்துக்கொண்டிருகிறான் என்ற ஓர் மாயையை ஏற்படுத்துவது பாவம் அவருக்கு தெரியாது......தனாவைத் திட்டி தந்தை பேசுவதைக் கூட அவள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.....தந்தையின் வாயால் அவள் அறிந்த அவனின் தவறுகள் கூட அவளுக்கு ஏதோ மாயக்கண்ணனின் குறும்புகளாகவே தோன்றின......



உன்னை முழுதாய் நம்புகிறேன்..என்ற உணர்வை கொடுத்து அவர்களை அவர்கள் போக்கில் செயற்பட விட்டால் எந்த பிள்ளையுமே பெற்றவர்களை மீறிச் செல்லாது..ஏனெனில் பெற்றவர்கள் அதன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே அதைத் தவறான பாதைக்கு செல்லவிடாது......பெற்றவர்கள் பிள்ளைகளை முழுதாய் நம்ப வேண்டும் என்று இல்லை..பிள்ளைக்கு தெரியாமல் அதன் நடவடிக்கைகளை கண்காணிக்கலாம்....ஆனால் உன் மேல் எங்களுக்கு பூரண நம்பிக்கை உண்டு என்ற உணர்வை பிள்ளைக்கு கொடுக்க வேண்டும்.....



ஆனால் என்னதான் பாசமான தந்தையாய் இருந்தும் தர்மராஜ் அந்த விடயத்தில் தவறிவிட்டார்..அவர் நம்பிக்கை என்ற உணர்வை சுபிக்கு கொடுக்கவில்லை......அந்த ஊரின்மேல் அவள் கொண்ட பற்றுணர்ந்தும் அவர் அவளை அந்த ஊருக்கு அழைத்துச் செல்லவில்லை....எங்கே தனஞ்சயனைக் காதலித்துவிடுவாளோ என்று பயந்தார்...அவரின் அந்த செயலே சுபாங்கியின் மனதில் இருந்த தனா மீதான சிறு ஈர்ப்பை பெரும் பொறியாய் வளரச் செய்தது..... ஒருவேளை இதுதான் மா பிரச்சினை....கவனமாய் நடந்துகொள் என்ற அறிவுரையோடு அவர் அவளை அந்த ஊருக்கு அழைத்துச் சென்றிருந்தால்.....நான் உன்னை நம்புகிறேன் என்று அவளுக்கு உணர்த்தியிருந்தால்......தனா மீது பற்றிய சிறு பொறி அப்பா என்னை நம்புகிறார் அந்த நம்பிக்கைக்கு துரோகம் செய்யகூடாது என்ற ஓர் உந்துதலில் அவள் மனதில் அணைந்தும் போயிருக்கலாம்.....ஆனால் அவர் அந்த உணர்வினை அவளுக்கு அளிக்காததால் தனா மீதானா நேசத்தை நெஞ்சில் வளர்க்கையில் அவளுள் குற்றவுணர்ச்சி சிறிதும் தோன்றவே இல்லை....



தந்தையை மீறி போகக்கூடாது என்று எண்ணினாளே தவிர அவனை நேசிப்பது தவறு என்று எண்ணவே இல்லை....தந்தைக்கு பிடிக்காது என்று தோன்றினாலும்......அவர் தான் என்னை நம்பவே இல்லையே .....என்ற சிறு கோபமும் அவளுக்கு இருந்தது நிஜம்.....



ஏய்.......என்ன சிந்தனை....? மனம் சென்னைக்கு பறந்துவிட்டதா...??



தனாவின் கேள்வியில் திடுக்குற்று சுயநினைவுக்கு வந்தாள் சுபாங்கி ....அவள் இப்போது எண்ணியதை அவனிடம் சொன்னால் என்ன சொல்வான்....??


அவள் காதலை நம்புவானா..?? அல்லது என்ன திருமணம் தான் ஆகிவிட்டதே இனி என்ன செய்வது என்று வேறுவழியின்றி என்னை மயக்க ஏதாவது கதையளக்கிறாயா...?? நம்புவதற்கில்லை என்று உதட்டைச் சுழிப்பானா..???


அப்படி ஏதாவது சொன்னான் என்றால் அவளால் நிச்சயம் தாங்க முடியாது... அதோடு இதைச் சொல்வதற்கான சமயம் இதுவும் அல்ல....இன்று தான் முதன் முதலாக இவ்வளவு நேரம் எந்த சீண்டல் பேச்சும் இன்றி இயல்பாக உரையாடியிருக்கிறார்கள்....இப்படியே போனால் காலப்போக்கில் அவனுக்கும் அவள்மேல் ஈர்ப்பு தோன்றி நேசமாக மலர்ந்தால்..அதன் பின்பு வேண்டுமானால்.....

 

Tharsan Thanu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
72
46
18
SRILANKA
சரிதான்...மீண்டும் கனவுலோகமா...??


இ..இல்லை..... சும்மா யோசனை... என்று இழுத்தவளுக்கு சட்டென ஒன்று தோன்ற நான் ஒன்று கேட்கலாமா அத்தான் ?? என வினவினாள்....


அவளைக் கூர்ந்து பார்த்தவன்....... உன் வீட்டினர் யாரையும் சந்திக்க வேண்டும்..அவர்களுடன் பேச வேண்டும் என்று கேட்க மாட்டாய் என்று நம்புகிறேன்....என்றான் அழுத்தமான குரலில்....அப்படிக் கேட்காதே என்ற மறைமுகக் கட்டளை அதில் தொனித்தது.



உக்கும்.... கேட்டுட்டாலும் அப்படியே அதை நிறைவேற்றி விட்டுத்தான் அடுத்தவேலை பார்ப்பீர்கள் பாருங்கள்....அவ்வளவு நேரம் அவனுடன் பேசிய தைரியமோ என்னவோ சுபாங்கியும் நேரடியாகவே பேசினாள்...



தனாவின் முகத்தில் கோபத்துக்கு பதில் சிறு சிரிப்பு மலர்ந்தது... அப்போ நீ கேட்க வந்தது அதுவல்ல....சரி சொல்லு வேறு என்ன தெரியவேண்டும்......??



ம்ம்.....அது வந்து...........நீங்கள்....உங்களுக்கு என்மேல் வேறு எந்த எண்ணமும் இல்லை என்று தெரிகிறது.....இருந்தும் ஏன் இப்படி ஒரு திருமணம்...?? இந்த விரும்பாத திருமணத்தால் என் வாழ்க்கை மட்டுமல்ல உங்கள் வாழ்க்கையும் சேர்த்து தானே பாதிக்கப்பட்டிருக்கிறது.......??? ஒருவழியாய் இத்தனை நாளாய் மனதை உறுத்திய விடயத்தைக் கேட்டே விட்டாள்...



தனாவின் முகம் அதுவரை இருந்த இயல்பு தொலைத்து கருத்து இறுகியது...கண நேரம் மௌனம் காத்தவன் பின் ... இந்த திருமணம் என் தன்மானப் பிரச்சினை....சுபாங்கி என்றான் இறுகிவிட்ட குரலில்...


புரியவில்லை...??


ம்ம்ம்...ஒரு சபையில் வைத்து உன் அப்பன்..அதான் என் மாமன் ஒரு வார்த்தை சொன்னான்...... நான் அப்போது தான் அந்த மண்டபத்தின் உள்ளே நுழைகிறேன் உன் அப்பா அங்கு ஒரு சில பெரியவர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்....என்னைக் கண்டதும் ஒரு பெரியவர் தர்மா உன் மருமகன் வாரான்பா...என்றார்...



உன் அப்பாவிற்கு அந்த உறவுமுறையை ஏற்றுக்கொள்ளப் பிடிக்கவில்லை என்றால் அந்தப் பேச்சு காதிலேயே விழாதது போல் இருந்திருக்க வேண்டும்...ஆனால் அவர் என்ன சொன்னார் தெரியுமா..?? இவனா ???என் மருமகனா..?? என்றார் ஓர் எள்ளல் பார்வையோடு... அதையும் காதில் வாங்காத பாவனையோடு நான் கடந்து செல்ல முற்பட்டபோது .....



இன்னொரு பெரிசு என்னப்பா இப்படி சொல்கிறாய்..?? என்ன இருந்தாலும் உன் தங்கைச்சி மகன்..சொத்துபத்தும் உள்ளவன்.... உன் பெண்ணைக் கொடுப்பாய் என்றல்லவா நினைத்தேன் என்றார். அது உன் அப்பாவை சீண்டும் நோக்கிலேயே பேசப்பட்டது தான்.....அது எனக்கும் தெரியும்.....ஆனால் அதை உணர்ந்து உன் அப்பனும் அமைதியாய் இருந்திருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும்....



ஆனால் ......என்ற தனஞ்சயன் ஒரு கணம் பேச முடியாதவன் போன்று முகம் இறுக பேச்சை நிறுத்தினான்.....தன்னையே கட்டுப்படுத்துபவன் போல விழிகளை மூடித்திறந்தவன்.....பின் அதற்கு .....அத்தனை பேர் நிறைந்த சபையில் வைத்து உன் அப்பன் என்ன சொன்னான் தெரியுமா.....?? அதுவும் என் முகத்துக்கு நேரே.....



இவனே ஒரு சுத்தப் பொறுக்கி.....இவனுக்கு போய் என் மகளைக் கொடுப்பேனா....?? என் மகளுக்கு என் தங்கை மகன் ரிஷி இருக்கிறான்..டாக்டர் ..அவனைத் தான் மணமுடிப்பேன்...என் மகளின் நிழலை தொடும் அருகதை கூட இவனுக்கு இல்லை என்றார்....


அந்தக் கணம் ...அந்தக் கணம் முடிவு பண்ணினேண்டி....நீ தான் என் மனைவி என்று.....அதுவும் உன் அப்பா முன்னாலேயே உன்னைத் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்......முடிவெடுத்த நாளில் இருந்து உன்னை டார்கெட் பண்ணேன்.......சரியா மூணாவது மாசம் உன்னைத் தூக்கினேன்....



இப்போது அவன் முகத்தில் நினைத்ததைச் சாதித்த ஒரு கர்வப் புன்னகை ஒட்டிக்கொண்டது.....



ஹ்ம்ம்....ஆளாளுக்கு அவளை வைத்து பந்தாடியிருக்கிறார்கள். நுணலும் தன் வாயால் கெடும் என்பது போல அவள் தந்தையின் பேச்சே அனைத்துக்கும் காரணம்...


இதில் அவளின் மனதை அவளின் உணர்வுகளை யாருமே மதிக்கவில்லை....தனஞ்சயன் உட்பட...


அப்பா பேசியது தவறுதான்.....ஒத்துக்கொள்கிறேன்..ஆனால் இதில் நான் பண்ணின தப்பென்ன அத்தான்....??

சுபாங்கியின் நிதானமான கேள்வியில் தனஞ்சயன் உடல் ஒருகணம் அதிர்ந்தது....



சொல்லுங்கள்....இதில் என் தவறு என்ன..?? என் அப்பா பேசியது தவறுதான்......ஆனால் உங்களுக்கும் வாய் என்ற ஒன்று உள்ளது தானே!!!!!! அதிலும் சாட்டையாய் சுழலும் நாக்கும்.... அப்பாவின் பேச்சிற்கு பதிலாக....உன் பெண்ணை எவன்டா கட்டுவான்.....?? நீயே தந்தாலும் உன் பெண் எனக்கு வேண்டாம். போடா...என்று அலட்சியமாக சொல்லிவிட்டு போயிருக்கலாமே!!!!!!!!! அந்த ஒரு பேச்சு போதுமே உங்கள் தன்மானத்தை நிலைநாட்ட.....அதைவிட்டு எதற்கு இந்த கடத்தல் ...கல்யாணம்..எல்லாம்..??



அவளின் நியாயமான பேச்சில் தனாவின் முகம் சிறிது கன்றியது...ஆனால் உடனேயே ஓர் விதமான குரலில் ஆண்களின் மனம் உனக்கு தெரியாது சுபாங்கி....நாங்கள் சிலவிடயங்களில் இன்னும் ஆதிகால மனுசர்கள் தான்..உன் அப்பாவின் பேச்சு என்னைச் சீண்டியது....அது ஒரு சவாலாய் எனக்கு தோன்றியது..... சொன்னால் நம்புவாயோ என்னவோ உன்னை திருமணம் செய்யும் வரை நான் சரியாய் தூங்கியது கூட இல்லை தெரியுமா....?? ஏதோ ஒரு வெறி போல ......



ஹ்ம்ம்..சவால் விட்டது அப்பா...அதில் வென்றது நீங்கள்.....ஆனால் நான்..?? சொல்லுங்கள் அத்தான்....என் மனத்தைப் பற்றி அதன் உணர்வுகளைப் பற்றி சற்றாவது சிந்தித்துப் பார்த்தீர்களா??? நானும் ஒரு மனிதப்பிறவி தான் அத்தான்.....பேசிக்கொண்டிருக்கும் போதே அவளையும் மீறி ஒரு கேவல் வெடித்துவிட விம்மலோடு அங்கிருந்து வேகமாய் நகர்ந்தாள் சுபாங்கி.....அசைவற்று உறைந்து போய் அப்படியே நின்றிருந்தான் தனஞ்சயன்....



நானும் மனிதப்பிறவி தான் அத்தான்....அவள் வார்த்தைகள் மறுபடி மறுபடி அவன் காதினுள் எதிரொலித்தது.......

 
  • Like
Reactions: Mani and Admin 01