• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பகுதி 16,17,18

Tharsan Thanu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
72
46
18
SRILANKA
இதழ்:- 16



கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் ஒரே நீர் மயம்.அந்த நீலநிற நீர்ப்பரப்பில் விழுந்து அவள் தத்தளித்துக் கொண்டிருக்கிறாள்.நீலநிற ஆழ்கடல் அவளை மெல்ல மெல்ல உள்ளே இழுத்துக்கொண்டிருக்கிறது.மூச்சுக்குழாய்களுக்குள் எல்லாம் நீர் புகுந்துவிட அவளுக்கு மூச்சுத் திணறுகிறது.மூச்சுக்காற்றுக்குத் தவித்தபடி அவள் மெல்ல மெல்ல மூழ்குகிறாள்.இதோ முற்றிலும் மூழ்கிவிடப்போகிறாள்.



இதற்கு மேல் தப்பமுடியாது என்றுணர்ந்து அவள் உடலும் மனமும் சோரும் போது சட்டென ஒரு உறுதியான கரம் அவள் கரத்தைப் பற்றி மேலே தூக்குகிறது.கரையோரம் அமரவைத்து அவளை ஆசுவாசப்படுத்துகின்றது.மிகவும் சிரமப்பட்டு கண்களை விளித்துப்பார்க்கிறாள்.அவள் எதிரே முகத்தில் கனிவுடன் நிலவன் நிற்கிறான். தண்ணீரை நீட்டி பருகச் சொல்கிறான்.கடல் நீரில் மூழ்கி உப்புநீரை பருகிய நாக்கும் தொண்டையும் வறண்டு போய் இருக்க அவன் கொடுத்த நீரை வாங்கி மளமளவென பருகுகிறாள்.



சற்று தெம்புவந்ததும் சுற்றிலும் பார்க்கிறாள்.அவனைத்தவிர அருகில் யாருமே இல்லை. அவளை சுற்றிலும் ஒரே நீர் நீர் நீர் மட்டும் தான்.பயத்துடன் அருகில் நிற்பவனை நிமிர்ந்து பார்த்து “பயமாய் இருக்கிறது அத்தான் “ என்கிறாள்.அவன் ஒரு மென்மையான புன்னகையுடன் நான் தான் உன் அருகில் இருக்கிறேன் இல்லையா? பின் எதற்கு பயம் என கேட்டு கனிவுடன் அவள் தலையை வருடுகிறான்.அந்த வருடலிலேயே இவளின் பயம் கரைந்து போகிறது.மிகவும் பாதுகாப்பான உணர்வொன்று இவளிடம் தோன்றுகின்றது.அதன் பின் அவள் அருகில் உறவினர்கள் எல்லாம் நிற்கிறார்கள் அவனை மட்டும் காணவில்லை.எங்கே போனான் என இவள் தவிப்புடன் சுற்றிலும் தேடுகிறாள்.அவன் தூரத்தில் தனியனாய் நடந்துகொண்டிருக்கிறான்.அந்த கணத்தில் அனைத்தும் மறந்து அவன் தனியே இருக்கிறான் என்பது மட்டுமே மனதில் பட “அத்தான் ...” என்ற கூவலுடன் அவனை நோக்கி வேகமாக ஓடுகின்றாள்.



இதோ அவனை நெருங்கிவிட்டோம் எனும் போது அவன் சட்டென நின்று அவளை திரும்பி நோக்குகின்றான்.அவன் கண்களில் சற்று முன்பிருந்த மென்மை இல்லை கனிவு இல்லை.மாறாக கண்களில் ஏதோ ஒரு தவிப்புடன் அவளை நோக்கி கூறுகின்றான்.”என்னை தொடராதே “ என்று.அவனின் விழிகளில் தெரிந்த தவிப்பைக்கண்டு உள்ளம் உருக இவள் அவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்கின்றாள்.அவ்வளவுதான் அவனுக்கும் இவளுக்கும் இடையே சட்டென நெருப்பு பற்றி எரிகிறது.



அதைக்கடந்து அவனை நெருங்கப் பார்க்கிறாள்.முடியவில்லை.கொழுந்துவிட்டெரியும் அந்த நெருப்பைக் கடக்க அவளால் முடியவில்லை.அந்த நெருப்பின் சுவாலைகளினூடே அவன் மீண்டும் தனியொருவனாய் நடந்து செல்வது தெரிகிறது.அந்த அக்கினியை கடந்து அவனிடம் செல்ல முடியாமல் மறுபுறம் நின்றுகொண்டே இவள் அவனை அழைக்கிறாள்.அவனோ அதை காதில் வாங்காமல் நடந்து கொண்டே இருக்கிறான்.தன்னை விட்டு விலகிப் போகின்றானே என்ற தவிப்புடன் ஓங்கி கத்துகிறாள் அத்தான்ன்ன்..................



அலறியபடியே விழித்தாள் பூவினி.அவள் உடல் முழுதும் வியர்வையில் குளித்திருந்தது. சற்றுநேரம் எதுவுமே புரியவில்லை அவளுக்கு.இருள் நிறைந்திருந்த அறையில் அவள் விழிகள் எதையோ துழாவ கைகள் அனிச்சையாய் அருகிலிருந்த விளக்கின் ஆழியை அழுத்தின. சட்டென அறை முழுதும் பரவிப்படர்ந்த வெளிச்சத்தில் அவளுக்கு தான் கண்டது கனவு என்பது உறைத்தது.ஆனாலும் பதட்டம் படபடப்பு குறையவில்லை.தொண்டை வறண்டு வலிக்க அருகிலிருந்த தண்ணீரை எடுத்துப் பருகினாள்.தாகம் தணிந்தது.ஆனால் தொண்டை வலி குறையவில்லை.கனவின் தாக்கம் என்று புரிந்தது.தொண்டை வலிக்கும் அளவுக்கு அலறியிருக்கிறாள்.



கடவுளே ..என்ன கனவு அது.கனவின் தாக்கம் அவளைவிட்டு அகலவில்லை.கடிகாரத்தைப் பார்த்தாள் நேரம் நான்கு என்று காட்டியது.மீண்டும் கட்டிலில் சென்று படுக்க கூட பயமாய் இருந்தது.அதற்கு மேல் தூக்கம் வரும் போலவும் தோன்றவில்லை.அறையின் மூலையில் இருந்த மெத்திருக்கையில் சென்று முடங்கினாள்.மனம் முழுதும் கண்ட கனவே நிறைந்திருந்தது.நேற்று நடந்த நிகழ்வுகளின் தாக்கம் தான் இந்தக் கனவு என்று புரிந்தது.



நேற்று அந்த மக்கள் சமுத்திரத்தில் சிக்குண்டு அவள் மயங்கப்பார்த்ததும் கை பற்றி அமர்த்தி நிலவன் உதவியது.பின் அவள் பயம் போக்க மென்மையாக பேசி அவள் தலை வருடியது.அதன் பின் சட்டென தன்னுணர்வு பெற்றவன் போல முகம் இறுக அவளைவிட்டு விலகியது என அனைத்தும் அவள் மனதில் மீண்டும் உலா வந்தன.நேற்று இரவு தூங்குவதற்கு முன்பும் இதையே சிந்தித்துக் கொண்டிருந்ததனால் தான் இப்படி ஒரு கனவு வந்ததென தோன்றியது.என்னதான் கண்டது அனைத்தும் கனவு என்பது தெளிவானாலும் அவள் மனதில் ஏதோ ஒரு தவிப்பு இருந்துகொண்டே இருந்தது.



என்னைத்தொடராதே என்று கனவில் அவன் கூறியபோது அவன் விழிகளில் தெரிந்த தவிப்பு அவ்வளவு தெளிவாக இப்போதும் அவள் மனக்கண்ணில் தோன்றியது.நேற்று வீடு வந்து சேர்ந்து காரைவிட்டிறங்கி அவள் உள்ளே வரும்போது நிலவன் அவள் அருகில் வந்து கூறியது நினைவு வந்தது.



இன்று கோவிலில் நான் உன்னிடம் நடந்துகொண்டது வெறும் மனிதாபிமானத்தில் தான்.அந்த இடத்தில் வேறு யார் இருந்தாலும் இதே போலத்தான் நடந்து கொண்டிருப்பேன்.எனவே அதற்கு தப்பர்த்தம் செய்யாதே.என்று இறுகிய குரலில் கூறிவிட்டு சென்றான்.



அது சரி தான்.ஆனால் இன்று காலையில் சேலையில் என்னைக் கண்டபோது போது பார்த்தீர்களே ஒரு பார்வை அதற்கு என்ன விளக்கம் கூறுவீர்கள். ஒருவேளை அந்த இடத்தில் வேறு யார் இருந்தாலும் இப்படித்தான் பார்த்திருப்பீர்களோ என்று கோபமாக கேட்கத்துடித்த நாவை அடக்கி வெறுமனே தோளைக் குலுக்கி விட்டு வந்துவிட்டாள்.



அவனிடம் ஏதோ முரண்படுவதாக அவளுக்கு நேற்றிலிருந்து தோன்றிக்கொண்டே இருக்கிறது.





நிலவன் பெரும்பாலும் உணர்வுகளை முகத்தில் வெளிப்படுத்தாதவன்.ஆனால் நேற்று ஒரே நாளில் அவனிடம் வெளிப்பட்ட பல்வேறு உணர்வுகளின் கலவைகள் அவளை முற்றிலும் குழப்பிவிட்டன.அதே சிந்தனையிலேயே இரவு நீண்டநேரம் ஆழ்ந்திருந்ததன் விளைவு தான் இப்படி ஒரு கனவு போலும்.





அன்று நிலவன் அவளிடம் நடந்து கொண்ட முறை அவளை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தியிருந்தது.



நீண்டநாளைக்கு பின் அவளின் பழைய அத்தானைக் கண்டுகொண்ட உணர்வு தோன்றியது அவளுக்கு. அவளுக்கு சிறுவயதில் இருந்தே கூட்டத்தில் சென்றால் ஒத்துவராது.வாந்தி மயக்கம் வரும்.அதன் காரணமாகவே கூட்டமாக இருக்கும் இடத்துக்கு அவளை அழைத்துச் செல்வதைத் தவிர்த்து விடுவர்.ஆனால் வருடத்தில் ஒருமுறை வரும் இந்த திருவிழாவுக்கு மட்டும் அவளை தவிர்க்க முடியாமல் அழைத்து செல்வர்.அப்படி ஒரு முறை சென்றபோது இவள் மயக்கம் வருவது போல் சோரவும் மற்றவர்கள் நீர் தெளித்து உதவ நிலவன் தான் ஒரு புளிப்பு மிட்டாயை அவள் வாயில் போட்டான்.அதனால் அவளுக்கு அன்று வாந்தி வரவே இல்லை.அத்துடன் சற்று தெம்பாய் வேறு உணர்ந்தாள்.அதனால் அதன் பிறகு இந்த திருவிழாவுக்கு போகும் போது கண்டிப்பாய் புளிப்பு மிட்டாய் எடுத்துக்கொண்டே செல்வாள்.அவள் மறந்தாலும் மேகலா கைவசம் வைத்திருப்பார்.
 

Tharsan Thanu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
72
46
18
SRILANKA
இந்த நான்கு வருட மேல்நாட்டு வாசத்தில் பூவினி உட்பட அனைவரும் அதை மறந்தே விட்டனர்.கோவிலுக்கு சென்று அவளுக்கு மயக்கம் வருவது போல இருக்கவும் தான் அவளுக்கு அது நினைவே வந்தது.இதற்க்கு மேல் முடியாது இதோ விழுந்துவிடுவோம் என்று அவள் எண்ணிய போது தான் நிலவன் அவளைப் பற்றி அமரவைத்து உதவினான்.புளிப்பு மிட்டாயையும் வாயில் போட்டான்.கூடவே அவளைக் கடிந்தும் கொண்டான்.அப்போது அவனிடம் தெரிந்த பதட்டம் அக்கறை கலந்த கோபம்.பூவினியை வியப்பில் ஆழ்த்தியது.அத்துடன்

அவள் கூட மறந்து போன விடயத்தை அவன் நினைவு வைத்திருக்கிறான்.நினைவு வைத்து அவளுக்கு தேவைப்படும் என்று புளிப்பு மிட்டாயையும் வாங்கி வைத்திருக்கிறான்.என்றால் அதற்கு என்ன அர்த்தம்.அவன் அவள் சம்பந்தப்பட்ட எதையும் மறக்கவில்லை என்றல்லவா அர்த்தம்??? பூரணமாக என்னை வெறுக்கும் அவனால் எப்படி என் சம்பந்தப்பட்ட விடயத்தை நினைவு வைத்திருக்க முடியும்.அது ஒரு சிறு விடயம் தான்.ஆனாலும் அதில் வெளிப்படுவது அவனின் அவள் மீதான அக்கறை அல்லவா??? அந்த அக்கறையின் பின் மறைந்திருப்பது அன்புதானே!!!!!





அது மட்டுமல்லாமல் அவளின் பயத்தைக் கண்டு எவ்வளவு மென்மையாக பேசி தலை வருடினான்.அப்படி பேசும் பொழுது அவன் குரலில் தெரிந்த பாசம் கண்களில் தெரிந்த விவரிக்க முடியாத மென்மையின் சாயல்.அவள் தலை வருடிய இதம்.

இது எல்லாமே அவன் கூறியது போல வெறும் மனிதாபிமானத்தால் வந்தது தானா..அந்த இடத்தில் என்னைத்தவிர வேறு யார் இருந்திருந்தாலும் இப்படித்தான் நடந்துகொண்டிருப்பானா.ம்ஹும்ம் இல்லை நிச்சயம் இல்லை.மயங்கி விழும் ஒருவருக்கு தண்ணீர் கொடுத்து உதவுவது வேண்டுமானால் மனிதாபிமானமாக இருக்கலாம் ஆனால் மென்மையாக தலையை வருடி ஆறுதல் சொல்வது எல்லாம் ம்ஹும்ம் ..அவனின் சுபாவத்திற்கு அது சாத்தியம் இல்லாதது.



இவை எல்லாவற்றையும் விட அன்று காலையில் அவன் அவளைப் பார்த்த பார்வை அதை எண்ணும் போது அவளுக்கு அப்போதும் உடல் சிலிர்த்தது.அவன் பார்வையில் தெரிந்த தாபம்.அது எப்படி சாத்தியம்.சற்றும் காதல் இல்லாமல் ஒரு பெண்ணை அப்படிப் பார்ப்பது சாத்தியமா!!!!!! அதுவும் அவள் அத்தானால் அது முடியுமா!!!!!!



இல்லை நிச்சயம் இல்லை.இதில் வேறு எதுவோ இருக்கிறது.அவள் மனம் உரக்கக் கூறியது.



நேற்றைய நிகழ்வுகளில் இருந்து அவளுக்கு ஒன்று மட்டும் புரிந்தது.அது நிலவன் அவளை வெறுக்கவில்லை.அவன் அவள் மேல் கொண்ட பாசம் சற்றும் குறையவில்லை. இன்னும் அப்படியே தான் இருக்கிறது.அத்துடன் அவனுக்கு அவள் மேல் பாசம் மட்டுமல்ல வேறுவித ஈர்ப்பும் இருக்கிறது.அதற்கு அவன் பார்வையே சாட்சி.நிச்சயம் அதை காமம் என்று சொல்லிவிட முடியாது.காதலின்றி ஒரு பெண்ணை வெறும் காமமாக நோக்கும் ஈனத்தனம் அவள் அத்தானிடம் இல்லை.அவளை நோக்கிய போது அவன் விழிகளில் தாபத்துடன் காதலும் தான் தெரிந்தது.பார்வைகளை இனம் பிரித்து அறியமுடியாத அளவுக்கு அவள் ஒன்றும் இன்னும் சிறுபெண் அல்லவே!!!!!!!



ஆனால் அப்படி அவளைக் காதலிப்பவன் எதற்கு அவளை அவள் காதலை நிராகரித்தான்.அவள் மேல் வெறுப்பைக் காட்டினான்??? முன்பு மட்டுமல்ல அவள் நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் வந்த போதும் சற்றும் குறையாத அளவில் அதே வெறுப்பைத்தானே காட்டினான்.அது ஏன்????



ஆனால் ஒன்று அவன் தன்னுடைய வெறுப்பை நேரடியாக அவள் முகத்துக்குநேரே காட்டினான்.அது அவன் எந்த உணர்வுக்கொந்தளிப்பும் இல்லாமல் நிதானத்துடன் செய்தது.ஆனால் நேற்று அவன் வெளிப்படுத்திய உணர்வுகள் அவன் தன்னை மறந்து வெளிப்படுத்தியது.உணர்வுகளின் கொந்தளிப்பில் அதிர்ச்சியில் பதட்டத்தில் அவனை மீறி வெளிப்பட்டவை.நிச்சயம் அதில் பொய் இல்லை.



அப்படி....அப்படியாயின் அவனின் அவள் மீதான வெறுப்பின் வெளிப்பாடுகள் எல்லாம் நடிப்பா!!!!!!!!!!!! அப்படியென்றால் ...அவளிடம் அவளை வெறுப்பது போன்று நடிக்கவேண்டியதன் அவசியம் தான் என்ன!!!!!!!!!!!!!!!



பூவினிக்கு மீண்டும் தலை சுழன்றது.சட்டென அதை மனதின் ஓரம் ஒதுக்கினாள்.எது எப்படியோ அவளின் அத்தான் அவளை வெறுக்கவில்லை.அவனின் மனதில் அவள் மீதான பாசம் இருக்கிறது.காதலும் தான்.இப்போதைக்கு அவளுக்கு இது போதும்.மற்றதை பிறகு பார்த்துக்கொள்ளலாம்.





இது போதும் எனக்கு இது போதுமே...வேறென்ன வேண்டும் இது போதுமே.......



அவள் மனம் உற்சாக கீதம் இசைத்தது.
 

Tharsan Thanu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
72
46
18
SRILANKA
இதழ்:-17



நீண்ட நாளைக்குப் பிறகு மனம் மிகவும் உற்சாகமாக இருப்பதாகப்பட்டது பூவினிக்கு.இவ்வளவு நாளும் நெஞ்சை அழுத்திக்கொண்டிருந்த ஏதோ ஒரு பாரம் மனதை விட்டு விலகி மனம் லேசானதைப் போல காற்றில் பறப்பதைப் போல தோன்றியது.



மொட்டைமாடியின் கைப்பிடிச் சுவரின் மேல் சாய்ந்தவாறு அந்த காலைப் பொழுதின் அற்புத தருணத்தை ரசித்துக் கொண்டிருந்தாள். காலைத்தென்றல் இதமான குளிர்ச்சியுடன் சிலுசிலுவென்று முகத்தில் மோதி உடல் தழுவிச் சென்றது.சூரியன் முகில் போர்வைக்குள் இருந்து மெல்ல மெல்ல தலையை நீட்டி எழவா வேண்டாமா என சோம்பலுடன் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்க. தோட்டத்தில் பூத்திருந்த மலர்கள் எல்லாம் தம்மேல் அமர்ந்து கொண்டு கிளம்ப மாட்டேன் என பிடிவாதம் பிடிக்கும் பனித்துளிக் குழந்தைகளை மிரட்டி விரட்ட சூரியக் கணவனை விரைவில் வருமாறு தென்றல் மூலம் தூது சொல்லி தலையசைத்துக் கொண்டிருந்தன.



பனியில் குளித்து தென்றலில் தலை துவட்டிக் கொண்டிருந்த தோட்டத்து மலர்களை ரசித்திருந்தவளின் பார்வை தோட்டத்தில் நின்ற அந்தப் பெரிய மஞ்சள்ப்பூ மரத்தின் மீது பதிந்தது.அதில் கட்டியிருந்த ஊஞ்சலிலும் தான்.



பூவினியின் முகத்தில் புன்னகை அரும்பியது.அவள் கால்கள் மெல்லப் படியிறங்கி அந்த ஊஞ்சல் நோக்கி நடந்தது.அந்த தோட்டத்தில் அவளுக்கு மிகவும் பிடித்த இடம் அது.சந்தோசமோ துக்கமோ அவள் முதலில் சரணடைவது அந்த இடத்தில் தான்.ஏனெனில் அவளுக்கு தெரியும் அவள் அதில் அமர்ந்திருப்பதைக் கண்டால் நிலவனும் அங்கே வந்துவிடுவான் என்று.அவள் மகிழ்ச்சியில் இருந்தால்



என்ன வினி மேடம் ரொம்ப சந்தோசமாய் இருப்பது போலத்தெரிகிறதே. என்ன காரணமோ? என்று இலகுவாகப் பேசி அவளின் மகிழ்ச்சியில் தானும் பங்கெடுத்து அதை இரட்டிப்பாக்குவான். மாறாக அவள் ஏதாவது வருத்தத்தில் இருந்தால்



என்னடா முகம் இவ்வளவு சோர்ந்து தெரிகிறது என்று கனிவாகப் பேசி அவள் வருத்தத்திற்கானகாரணத்தை அறிவான். பெரும்பாலும் அவளின் சோக சம்பவங்கள் தாயிடம் வாங்கும் திட்டுக்கள் தான்.எனவே அதை அறிந்து அவளின் பிழைகளை சுட்டிக்காட்டி அவளை தன் தவறுகளை உணர வைப்பதுடன் வேறு ஏதாவது நகைச்சுவையாகப் பேசி அவளின் மனநிலையையும் மாற்றிவிடுவான்.



அவனுடனான பிரிவு நேர்ந்தபின் வினி இந்த ஊஞ்சலின் அருகில் கூட வருவதில்லை.அங்கு அமர்ந்தால் அவனின் ஞாபகங்கள் அதிகம் தாக்கும் என்பதோடு அவளின் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள இனி அவன் அங்கு வர மாட்டான் என்பதும் சேர்ந்து அவளை அந்த பக்கமே செல்ல விடாமல் செய்திருந்தது.





ஆனால் இன்று தான் நிலைமை மாறிவிட்டதே.இன்றும் அவன் வரப்போவதில்லைதான் ஆனால் அவன் மனத்தால் அவளை விட்டு விலகவில்லை என்பது அவளுக்கு தெரிந்துவிட்டதே.அவள் மனம் உற்சாகம் கொள்ள அந்த ஊஞ்சலில் அமர்வதற்காக அதை நோக்கி சென்றாள்.



அந்த மரத்தின் கீழ் தரை முழுதும் மஞ்சள்ப் பூக்கள் சொரிந்திருக்க அதன் மேல் பனித்துளிகளைத் தூவிவிட்டிருந்தது மேகம்.மெல்ல தன் காலணிகளைக் கழட்டி விட்டு பாதத்தை அந்த பூக்களின் மேல் வைத்தாள்.பனித்துளிகளின் குளுமை சிலீர் என்று உள்ளங்கால்களின் வழியாக உச்சிவரை பாய்ந்து உடலைச் சிலிர்க்கச் செய்ய அதை ரசித்தவாறு ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்துக்கொண்டிருந்தவளின் முன் திடீரென்று ஒரு உருவம் வெளிப்படவும் திடுக்கிட்டு பின்னால் நகர்ந்தவள் தடுமாறி விழப்போனாள்.



சட்டென தன் கரங்களில் அவளைத்தாங்கினான் மித்திரன்.அவளுக்கும் அவனுக்கும் இடையே காலைச் சூரியனின் ஒளிக் கதிர்கள் ஊடுருவ மரத்தில் இருந்து ஒருசில பூக்களும் அவர்கள் மேல் விழுந்தன.



விழுந்த அதிர்சியில் இருந்து மீளாமல் பூவினி திகைத்திருக்க. அவனோ ஹ்ம்ம்.............. என்று பெரிதாக பெருமூச்சுவிட்டு இதே

உன் இடத்தில் வேறொரு பெண் இருந்திருந்தால் இத்தனைக்கு என்னைச்சுற்றி நான்கு வெண்ணிற உடைத்தேவதைகள் “ல லா லாஆ......” அப்டின்னு பாட்டுப் பாடிட்டே வயலின் வாசிச் சிருப்பாங்க.உன் மூஞ்சிய பார்த்தா நாலு குட்டிச் சாத்தான் தான் சுத்தி நின்று அலறுற மாதிரி இருக்குடி என்றான் நக்கலான சிரிப்புடன்.



அப்போது தான் தன் அதிர்ச்சியில் இருந்து மீண்ட பூவினி.ஆத்திரத்துடன் போடா எருமை.எதுக்குடா இப்டி பிசாசு மாதிரி முன்னால வந்தாய்?? நீ பிசாசு மாதிரி இருந்துட்டு என் மூஞ்சியப் பாத்தா உனக்கு குட்டி சாத்தான் தான் நினைவுக்கு வருதா??



ஏய் என்னை எருமைன்னு சொல்லிட்டு நீ தான்டி எருமை மாதிரி இன்னும் என் கையிலையே தொங்கிட்டு இருக்க.அம்மாஆஆ ..என் கை உடையப்போகுது.போடுற சண்டையை கொஞ்சம் நிமிர்ந்து நின்னு போடுடி.



அவனைவிட்டு விலகியபடியே உடையட்டும்.நீ தான என்னை பயமுறுத்தி விழவைச்சே.அப்போ விழாமல் என்னைப் பிடிக்க வேண்டியதும் உன் பொறுப்புத்தான்.என்று பூவினி சிறுபிள்ளை போல் வாயடிக்க அதைக்கேட்டு புன்னகைத்த மித்திரனின் பார்வை எதேச்சையாய் அவளைத் தாண்டிச் சென்றது.அங்கு காலையில் தோட்டத்தில் நடைபயில வந்த கண்மணி அவர்கள் இருந்த நிலையைப் பார்த்து முகம் கொள்ளா பூரிப்புடன் உள்ளே செல்வது தெரிந்தது.அதைக் கண்ட மித்திரனின் இதழ்களில் சிறு

சிரிப்பு அரும்ப மெல்ல வினியை நோக்கி திரும்பினான்.



அப்போது வினியோ ச்சே..இந்த அதிகாலைல என்ன மாதிரி ஒரு இனிய மனநிலையில் இருந்தேன். இப்டி பிசாசு மாதிரி குறுக்கே புகுந்து என் மனநிலையையே மாத்திட்ட டா.குரங்கே என்று திட்டிக்கொண்டிருந்தாள்.





ஏய் என்ன நீ கொஞ்சம் கூட மரியாதை இல்லாம குரங்கு எருமை என்றெல்லாம் சொல்ற? டா போட்டு வேற பேசுற.முறைப் பையன் ஆச்சே என்று ஒரு மரியாதை வேண்டாம்.



ஹே..உனக்கு அப்படி வேற ஒரு நினைப்பு இருக்கா??? இந்த மூஞ்சிக்கு இந்த மரியாதையே அதிகம்.போடா என்றாள் ஆத்திரத்துடன்.அவளுக்கு தன் இனிய மனநிலையை கெடுத்துவிட்டானே என்ற கோபம்.



ஒ அப்படியா?? இரு அத்தையே வருகிறார்கள் கேட்டுச் சொல்கிறேன்?? எனக்கு இந்த மரியாதை போதுமா போதாதா என்று.என்றான் கிண்டலாக



நிஜமாகவே தாய் வந்துவிட்டாரோ.மரியாதை இல்லாமல் பேசுவதற்கு திட்டுவிழுமே என்று பயந்து திடுக்கிட்டு திரும்பியவள் யாருமே வரவில்லையென்பதை அறிந்து கொலைவெறியுடன் கீழே கிடந்த மரத்தின் உடைந்த தடி (குச்சி) ஒன்றை எடுத்துக் கொண்டு ஏன்டா காலங்காத்தாலேயே கழுத்தறுக்க உனக்கு நான் தான் கிடைச்சேனா.என்றபடி அவனை அடிக்கத்துரத்தினாள்.



ஏய் வேணாம்.வலிக்கும்.அத்தைக்கிட்ட சொல்லுவன்.மாமாகிட்ட சொல்லுவன்.பாட்டிக்கிட்ட சொல்லுவன் என்று அவளிடம் அகப்படாமல் அந்த மரத்தைச் சுற்றி ஓடியபடியே ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொருத்தரின் பேரைச் சொல்லி சிறுபிள்ளை போல் மிரட்டிக் கொண்டிருந்தவனைக் கண்டவளுக்கு கோபம் மறைந்து சிரிப்பு வர சிரித்தபடியே தடியைக் கீழே போட்டுவிட்டு அங்கிருந்த கல் இருக்கை ஒன்றில் அமர்ந்தாள்.மித்திரனும் சிரித்தபடியே அவள் அருகில் வந்து அமர்ந்தவன்.



எருமை மூச்சு வாங்குதுடி.ஆனால் இன்றைக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியமே இல்லை.அவ்வளவுக்கு ஓடி இருக்கிறேன் என்றான்.மூச்சு வாங்க சிரித்தபடி.



சட்டென கண்கள் கனிந்து முகம் இளக அவள் கைகளைப் பற்றியவன் வினி நான் ஒன்று சொல்லவா?? என்றான்.



அவளும் சிறிது குழப்பத்துடன் ம்ம் எனவும்.அவள் கரத்தை விடுவித்துவிட்டு



வினி நான் ஒற்றைப் பிள்ளையாகவே அந்நிய தேசத்தில் வளர்ந்தவன்.சுற்றி சுற்றமும் இல்லை.சேர்ந்து பழக அருகில் சொந்தமும் இல்லை.நான் சிறுவயதில் இருந்தே அதிகம் உணர்ந்தது தனிமை தான் டி. எனக்கு சின்ன வயதில் இருந்தே பள்ளிக்கு போவது என்றால் அவ்வளவு பிடிக்கும்.அது ஏன் தெரியுமா?? படிப்பதற்காக அல்ல.அங்கு தான் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடலாம் என்பதால்.மீண்டும் வீட்டுக்கு வந்தால் கணனியுடன் என் அறைக்குள்ளேயே மூழ்கிவிடுவேன்.



ஏன் மித்து அருகில் நண்பர்களுடன் போய் சேர்ந்து விளையாட மாட்டீர்களா??



ஹ்ம்ம் அது ஒன்றும் நம் நாடு இல்லை வினி அயல்வீட்டு பிள்ளைகள் என்று சேர்ந்துவிளையாட பழக.அவர்கள் எங்களை விட முற்றிலும் வேறுபட்டவர்கள்.அவர்கள் பழக்க வழக்கங்களுக்கும் என்னதுக்கும் சரி வராது.காணும் இடத்தில் ஒரு சிறு புன்னகை ஹாய்!!!! ஹல்லோ!!!!!. அவ்வளவு தான் அயலவர்களுடனான உறவு.







ம்ம்ம் நான் ரொம்பவும் தனிமையாய் உணர்வேன்.அப்போது என் வீட்டு பல்கனியில் நின்று வேடிக்கை பார்ப்பேன்.எதிர்வீட்டு மாடியில் ஒரு வியட்நாம் குடும்பம்.அந்த குடும்பத்திலும் தாயும் தந்தையும் மாறி மாறி வேலைக்கு போவார்கள்.அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள்.ஒரு ஆணும் பெண்ணும்.அந்த பையனுக்கு என் வயது இருக்கும்.அவனுக்கு ஒரு குட்டித் தங்கை.ரோஜாப்பூ நிறத்தில் சப்பை முகமும் குண்டுக் கன்னமுமாக அழகாக இருக்கும்.அந்த அண்ணன் தங்கையை பத்திரமாக பார்த்துப்பான்.தங்கையை தூக்கி வைத்து வேடிக்கை காட்டுவான்.சில சமயங்களில் இவன் ஓட அந்த குட்டித் தங்கை தத்தி தத்தி இவனைத் துரத்தும்.அவனும் வேணுமென்றே அதனிடம் பிடிபட்டு அதனுடன் சேர்ந்து சிரிப்பான்.



எதிர் பால்கனியில் இருந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் எனக்கு மிகவும் ஏக்கமாய் இருக்கும் வினி.நமக்கு இப்படி விளையாட அன்பு காட்ட ஒரு குட்டித் தங்கை இல்லையே என்று.நான் நிறைய முறை வருந்தி இருக்கிறேன் வினி.இன்று வரை அந்த தங்கைக்கான ஏக்கம் என்னில் இருந்தது.
 

Tharsan Thanu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
72
46
18
SRILANKA
ஆனால் இப்போது இந்த நொடி அந்த ஏக்கம் நெஞ்சில் இருந்து மறைந்துவிட்டது.எனக்கு ஒரு தங்கை இருந்தால் எப்படி இருப்பாளோ அதே போல நீ இருக்கிறாய். என் கூட விளையாட சண்டை போட அன்பு செய்ய எனக்கு உன் வடிவில் ஒரு தங்கை கிடைத்துவிட்டாள் என்று தோன்றுகிறதுடி.எனக் கூறி பாச மிகுதியில் கண்கலங்க அவள் தலையை வருடி நீ என்னை உன் அண்ணனாக ஏற்றுக்கொள்வாயா வினி என்றான்.



சட்டென அவன் கையைப் பற்றி தோள் சாய்ந்த வினி.நீ சொன்ன அத்தனை ஏக்கமும் எனக்கும் இருந்தது மித்து.கூடப் படிக்கிற தங்கைகள் எல்லாம் அண்ணன் அது வாங்கி கொடுத்தான்.இது வாங்கி கொடுத்தான்.அங்கு அழைத்துச் சென்றான்.தப்பு பண்ணியதற்கு திட்டினான். டிவி ரிமோல்ட் க்கு சண்டை போட்டோம் அப்டி இப்டினு நிறைய கதை சொல்கையில் எனக்கும் ஏக்கமாய் இருக்கும்.



ஆனால் உன் அளவுக்கு நான் அதை அதிகமாய் தனிமையாய் உணரவில்லை ஏனென்றால் எனக்கு தான் அத்தான் இருந்தாரே.



அத்தான்?? யாருடி??



ஒ உனக்கு இன்னும் அறிமுகப்படுத்தவில்லையல்லவா?? நீ வந்து இரண்டு நாட்கள் தானே ஆகிறது.கூடிய சீக்கிரமே உனக்கு அவரை அறிமுகப்படுத்துகிறேன்.அவர் பெயர் தமிழ் நிலவன்.பெரியமாமாவின் மூத்த மகன்.



ஒ..அன்று கோவிலுக்கு வந்திருந்தாரா??



ம்ம் அன்று காலையில் கூட வீட்டுக்கு வந்தாரே.இதைக் கூறும் போதே வினியின் கன்னம் லேசாய் சிவப்பதை ஆச்சரியத்துடன் கண்டான் மித்திரன்.ஆனாலும் அதைக் கவனிக்காதவாறு காட்டி



ஒ என்னைக் கூட முறைத்துவிட்டுப் போனானே அவனா??என்று இயல்பாய் விசாரித்தான்.



அதைக்கேட்டு சிரிப்புடன் ம்ம் அவர் தான் என்றாள் வினி.



ஒ அவனைப்பார்த்தால் ரொம்பவும் இறுக்கமானவன் போல தோன்றுகிறதே.உன்னிடம் இயல்பாக பழகுவானா?



ம்ம் கொஞ்சம் அழுத்தம் தான்.ஆனால் ரொம்ப நல்லவன் தெரியுமா.எல்லோர் மீதும் ரொம்ப பாசமாக இருப்பான்.எங்கள் குடும்பத்தில் அவனுக்கு தனி மரியாதையே உண்டு.அவன் பேச்சுக்கு மறுப்பே கிடையாது.ஏனெனில் அவன் செய்கிற எதுவுமே பிழையாகாது என்கிற அபார நம்பிக்கை அனைவருக்கும் உண்டு.எங்கள் வீட்டு வாண்டுகளுக்கு அவர் தான் ஹீரோ. எல்லோரையும் விட எனக்கும் அவனுக்குமான நெருக்கம் சற்று அதிகம்.சின்ன வயதில் இருந்து என் கூட சண்டை போடுவது கூடச் சேர்ந்து விளையாடுவது.நான் தப்பு செய்தால் கண்டிப்பது.தேவையான சமயத்தில் அறிவுரை கூறுவது பாடம் சொல்லிக் கொடுப்பது.என்று என் தேவைகள் எல்லாத்தையும் பூர்த்தி செய்தான்.அதனால் நான் அதிகமாய் தனிமையை உணர்ந்ததில்லை.என்று கூறும் போதே அவள் குரல் குழைந்து கனிவதை வியப்புடன் பார்த்தான் மித்திரன்.



ஆனால் அதைக் கவனிக்காது தொடர்ந்து உன்னைப் பார்த்த உடனேயே எனக்கு உன் மேல் அப்படி ஒரு உணர்வு தான் எழுந்தது.அதனால் தான் முதல் முதல் நேரில் பார்க்கும் உன்னுடன் அப்படி வாயடித்தேன்.எனக்கு உன்னை ரொம்ப பிடித்திருக்கிறதுடா மித்து.அதற்காக என்னால் உன்னை அண்ணா என்றெல்லாம் அழைக்க முடியாது.மித்து என்று தான் அழைப்பேன்.அப்பப்போ டா போட்டும் அழைப்பேன்.அதையெல்லாம் நீ கண்டுக்க கூடாது சரியா?? என்றாள்.



மற்றதை மறந்து ஹ ஹ ஹா....என்று வாய் விட்டு சிரித்தவன் நீ மரியாதை தந்தால் தானடி ஆச்சரியம்.நீ இப்படிப் பேசுவதுதான் எனக்கும் பிடித்திருக்கிறது.இப்படியே பேசு நான் கண்டுக்கவே மாட்டேன்.ஆனால் அத்தை மாமா முன்னிலையில் கொஞ்சம் கவனமாவே இரு.என்றான் புன்னகையுடனேயே.



ஆமா மித்து இந்த மேகலாவோட பெரிய இம்சை டா.என்று அவள் சலிக்கவும்



அடிப்பாவி உனக்கு ரொம்ப கொழுப்பு தாண்டி.இரு அத்தைக்கிட்ட போட்டுக்கொடுக்கிறன்.என்றான் மிரட்டலாய்.



நீ தான் பாசமலர் அண்ணனாச்சே.அப்டிலாம் பண்ண மாட்டாய்.என்று கூறி அவள் புன்னகைக்கவும் தானும் முறுவலித்தவன்



உனக்கு நான் அண்ணன் மட்டுமல்ல வினி ஒரு நல்ல தோழனும் தான்.அதையும் நினைவு வைத்திரு.என்றான் மித்திரன் ஆழ்ந்தகுரலில்.



அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள் ஒருகணம் அவன் விழிகளை ஊடுருவி விட்டு. கண்சிமிட்டி சிரித்து கண்டிப்பா டா தோழா என்றாள்.



அவளின் பேச்சில் அவனும் சிரித்தபடியே எழ இருவரும் பேசியபடியே வீடு நோக்கி நடந்தனர்.



அன்று சற்று சீக்கிரமே எழுந்து உடற்பயிற்சி செய்துவிட்டு வியர்வை காய தன் அறையின் பல்கனியில் அமர்ந்து நாளிதழ் படித்துக்கொண்டிருந்த நிலவனின் பார்வை ஏதோ உந்துதலில் பூவினி வீட்டுத் தோட்டத்துக்கு பாய அங்கு பாதணிகளைக் கழட்டிவிட்டு வெற்றுப் பாதங்களை பனி முத்துக்கள் தூவிய மலர்விரிப்பில் வைத்து ரசித்து நடை பயின்ற பூவினி தென்பட்டாள்.



முதல்நாள் இரவு முழுதும் நீலவண்ண பட்டுப்புடவையில் தேவதை போல கனவில் தோன்றி இம்சித்தவளின் தொல்லையால் தான் அன்று அதிகாலையிலேயே விழித்திருந்தான் நிலவன். மீண்டும் காலையிலேயே பனியில் நனைந்த பனிப்பூ போல அவள் காட்சி கொடுக்கவும்.அவன் மனம் தடம்புரண்டது.அவளைப்பார்காதே பார்த்தால் உன் மனக்கட்டுப்பாடுகள் அனைத்தும் தகர்ந்துவிடும்,நேற்று நடந்ததை மறந்துவிட்டாயா??? அவள் வசியக்காரி உன்னை வசீகரித்து உன் சித்தத்தை தடுமாற வைத்துவிடுவாள்.அங்கு பார்க்கவே பார்க்காதே.என்று அபாய எச்சரிக்கை கொடுத்த மூளையை நான் இங்கிருந்து பார்ப்பது அவளுக்கு தெரியப் போகிறதா என்ன?? என்று காதல் மனம் அலட்சியப்படுத்த அவன் விழிகள் இரண்டும் அவள் மேலேயே பதிந்திருந்தது.



அப்போது தான் மித்திரன் வந்தான்.வந்தது மட்டுமன்றி அவள் குறுக்கே புகுந்து அவளைத்தடுமாற வைத்து ஏதோ திரைப்படக் கதாநாயகன் போல கைகளிலும் தாங்கிக்கொண்டான்.அந்த காட்சியைக் கண்ட நிலவனின் உள்ளே சுர் என்று கோபம் எழுந்தது.அதற்கு மேல் வினியும் அவனும் சிரித்து விளையாடியதையும் எல்லாவற்றுக்கும் மேல் வினி அவன் தோள் சாய்ந்ததையும் கண்டவன் நெஞ்சில் அவனையும் மீறி ஒரு வலி எழ கோபமும் இயலாமையுமாக அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான்.கையில் இருந்த நாளிதழ் தரையெங்கும் சிதறிப் பறந்தது.வேகமாகச் சென்று குளியல் அறையில் புகுந்துகொண்டவன் ஷவரைத் திறந்துவிட்டு அதனடியில் நின்றுகொண்டான்.



கொட்டிய செயற்கையருவி அவன் உச்சியில் விழுந்து உடல்தழுவி செல்ல அவன் கொதிப்பும் சற்று அடங்கி மெல்ல மெல்ல மனம் பேசத்தொடங்கியது.அவன் உள் மனம் கேட்ட



உனக்கு எதுக்குடா இந்த வைக்கோல் போர் நாயின் குணம்?? என்ற முதல் கேள்வியிலேயே அவன் அடங்கிவிட்டான்.



நிஜம் தானே அவள் தனக்கு இல்லை என முடிவெடுத்து அவளை விட்டு விலகியாயிற்று.அவள் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்று தானே அவன் ஆசைப்படுகிறான்.அவளுக்கு என்று ஒரு எதிர்கால வாழ்வு வேண்டுமல்லவா?? அது நிச்சயம் தன்னுடன் இல்லை எனும் போது அது வேறு யாரோ ஒருத்தனுடன் தானே அமையவேண்டும்.



அது ஏன் அந்த மித்திரனாக இருக்க கூடாது?? நான் எதற்கு அவன் அவளுடன் நெருங்கி பழகுவதைக் கண்டு பொறாமைப்படவேண்டும்..பார்க்க அழகாக இருக்கிறான்.நல்ல வேலையில் இருக்கிறான்.சம்பாதிக்கிறான்.இத்தனைக்கும் உரிமையுள்ளவன் வேறு.வினிக்கும் அவனைப் பிடித்திருக்கிறது.இல்லாவிட்டால் அவ்வளவு இயல்பாக அருகில் அமர்ந்து தோள் சாய்ந்து பேசுவாளா??



அவளுக்கு பிடித்தவனுடன் அவள் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையவேண்டும்.என்னையும் என்னால் அவள் பட்ட காயத்தையும் மறந்து அவள் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும்.அவள் வாழ்க்கையை வளப்படுத்தவேண்டியது அவன் கடமை அல்லவா?? அதைவிட்டு வீணாக எதற்கு கோபம் கொள்ளவேண்டும் என்று உள்மனம் பேசிய நியாய வார்த்தைகளில் அவன் அடங்கிவிட்டான்.



குளியலறையை விட்டு வெளியே வரும் பொழுது நிலவனின் மனது ஏதோ ஒருவிதத்தில் சமனப்பட்டு தெளிந்திருந்தது.ஆனால் அந்த தெளிவு எத்தனை நாளைக்கு என்பது அவனுமே அறியாதவிடயம்.
 

Tharsan Thanu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
72
46
18
SRILANKA
இதழ்:-18



அம்மா........என்றபடி மாடியில் இருந்து குதித்தபடி படியிறங்கிய பூவினியைக் கண்டு உணவுமேசையில் கணவனுக்கு உணவுபரிமாறிக்கொண்டிருந்த மேகலாவும் பூவினிக்காக தட்டில் உணவுடன் உண்ணாமல் காத்திருந்த பத்மனும் புன்னகையுடன் தலைநிமிர்த்திப் பார்த்தனர்.



என்னடா வினுக்குட்டி இன்னைக்கு இவ்வளவு உற்சாகம்?? முகம் அப்படியே மகிழ்ச்சியில் ஜொலிக்கிறதே??



இதழ்களில் புன்னகையுடனே தந்தையை நிமிர்ந்து பார்த்தவள்.சொல்லத்தெரியலப்பா.மனசு பூரா சந்தோசமா இருக்கு என்றாள்.



பத்மனும் புன்னகையுடன் ரொம்பநாள் கழிச்சு உன் முகத்தில இந்த உற்சாகத்த பார்க்கிறமாதிரி இருக்குடா.எப்போவும் இதேபோல சிரிச்சுக்கொண்டே சந்தோசமா இருக்கணும் டா நீ. என்று கூறியவர்.



ஆக்காட்டு செல்லம் என்று கூறி வழக்கம் போல முதல் வாய் உணவை அவளுக்கு ஊட்டி விட்டார்.அதைக்கண்டு கேலியாக புன்னகைத்தபடியே வந்த மித்திரனுக்கு உதட்டைச் சுழித்து பளிப்புக்காட்டியபடி அவன் உட்கார கதிரையை (நாற்காலி) இழுத்துப் போட்டவள் அவன் அருகே தானும் அமர்ந்துகொண்டாள்.



தாய் சுடச் சுட தன் தட்டில் பரிமாறிய பால் ஆப்பத்தைப் பார்த்தவள் அம்மா தருக்கு ஆப்பம்னா பிடிக்கும்ல.இருங்க அவளுக்கு போன் பண்ணுகிறேன்.அவள் வந்ததும் அவளுடன் சேர்ந்து சாப்பிடுகிறேன்.



அவள் வருவாளோ தெரியவில்லையேடா.அழைத்துப்பார்.வராவிட்டால் வீட்டுக்கே எடுத்துச் சென்று கொடுத்துவிடு.



ம்ம் சரிமா.என்றபடி தாரணியை அழைத்தவளுக்கு அவளின் வரமாட்டேன் என்ற பதிலே கிடைத்தது.



ஏண்டி ?? என்றால்





உன் வீட்டில் இருக்கும் விருந்தாளிக்கு முன்னால் எல்லாம் என்னால் சாப்பிட முடியாது.நாகரீகம் பார்த்து அரைகுறைச் சாப்பாட்டில் எழ என்னால் முடியாதுப்பா.நீ என்ன பண்ணுகிறாய் பெரியம்மாவிடம் கூறி நிறைய பால்விட்டு ஆப்பம் சுட்டு வீட்டுக்கே எடுத்துவந்து கொடுத்துவிடு.சரியா என்றாள்.



அவள் பேச்சைக்கேட்டு சிரித்தபடி எல்லாம் என் நேரம் டி என்றவள் சரி எடுத்துவருகிறேன் என கூறி போனை வைத்தாள்.



மேகலா வருகிறாளா எனவும் இல்லையாம் மா.இவனோடு உட்கார்ந்து தன்னால் உண்ண முடியாதாம் என்று கூறி வினி குறும்பாக சிரித்தாள்.அதைக் கேட்ட மித்திரன் சிரிக்கவில்லை.மகாராணி என்னுடன் அமர்ந்து உண்ணமாட்டார்களாமா என்று அவன் மனதில் இனம் புரியா கோபம் எழ அதை முகத்தில் காட்டாமல் மறைத்து சாப்பாட்டில் கவனம் செலுத்தினான்.











வினி



என்ன மித்து??



நான் வந்து முழுதாக இரண்டு நாட்கள் ஓடியே போச்சு.இன்றைக்காவது நான் வந்த வேலையைப் பார்க்க வேண்டும்.என்னுடன் *******அந்த தொழிற்சாலைக்கு வர முடியுமா ??





இன்றைக்கா மித்து.



ம்ம் ஆமாம்.உனக்கு ஏதாவது முக்கிய வேலை இருக்கிறதா?



ஆமா.ஒரு சின்ன தொழில்முறைச் சந்திப்பு அதில் நான் கண்டிப்பாக கலந்துகொண்டே ஆகவேண்டும்.அது எனக்கு நல்ல அனுபவமாய் இருக்கும் என்று அப்பா சொன்னார்.அது பதினோரு மணிக்கு முடிந்துவிடும்.நீ ஒன்று செய் நேரே அலுவலகம் வந்துவிடு. துரைத் தாத்தாவிடம் சொல்லி வண்டியிலேயே வா.நாம் அங்கிருந்து நேரே போய்விடலாம் சரியா??



சரி வினி.அப்படியே செய்யலாம்



அவர்கள் பேசி முடித்த தருணம் வினிக்கா இன்று வெளியே போகலாமா?? நாங்கள் சேர்ந்து வெளியே போய் எவ்வளவு காலம் ஆகிவிட்டது என்று கேட்டபடியே தாரணி உள்ளே நுழைந்தாள்.



அவளைக்கண்டும் காணாதவன் போல் மித்திரன் மடிகணனியில் தலையை புதைத்துக்கொள்ள



வினியோ நாம் நாளை போகலாமா தரு.இன்று மித்து கூட வெளியே செல்லவேண்டும் என்றாள்.அவனின் அலுவலக விடயமாய் என்பதை சொல்ல மறந்துவிட்டாள்.



ஒ என்னைவிட இந்த நெட்டைக்கொக்கு வினிக்காக்கு பெரிதாகப் போய்விட்டானா என்று கோபம் வந்தாலும் அதை மறைத்து சரி வினிக்கா நான் கிளம்புகிறேன்.இன்னொருநாள் பார்க்கலாம் என்றவள் மறந்தும் மித்திரன் பக்கம் திரும்பவே இல்லை.



காரணம் இல்லாமலேயே இருவருக்கிடையிலும் கோபம் என்ற திரை விழுந்தது.இத்துணைக்கும் இருவரும் அதுவரை ஒரு வார்த்தை கூட பேசிக்கொண்டது இல்லை.

அவன் மேல் நீர் ஊற்றியதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தாரணி நினைத்தாள்.அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.இன்று கேட்டுவிடவேண்டும் என்று நினைத்து வந்தவள் கேட்க மனதில்லாமல் திரும்பிவிட்டாள்.அவள் மனம் பொருமியது.



பெரிய மகாராஜா அவர்.முகத்தைக் கூட பார்க்காமல் தலையை கணணிக்குள்ளே புதைத்துக்கொண்டு இருப்பாராம்.நாங்களே வலிய சென்று பேசவேண்டுமாம்.என்ன தான் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றாலும் வலிய சென்று எல்லாம் என்னால் பேசமுடியாது.அவன் முன்னால் நின்றுதானே வினிக்காவிடம் பேசினேன்.நிமிர்ந்து பார்த்து ஒரு புன்னகை செய்திருந்தால் கூட மன்னிப்பு கேட்டிருப்பேன்.மகாராஜாவுக்கு அது கூட முடியாதா??.திமிர் திமிர்.இவனிடமெல்லாம் எதற்கு மன்னிப்பு
 

Tharsan Thanu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
72
46
18
SRILANKA
கேட்கவேண்டும்.வேண்டுமென்றால் இன்னும் நாலு குண்டா தண்ணீரை அவன் தலையிலேயே கொட்டலாம்.தாரணி மனதுக்குள் அவனுக்கு மண்டகப்படி நடத்தினாள்.



அதை அறியாத மித்திரனோ தன் பங்குக்கு முன்னால் ஒருத்தன் உட்கார்ந்திருக்கிறானே மரியாதைக்காகவேனும் ஒரு வார்த்தை பேசுகிறாளா?? சரி அன்று தண்ணீரை கொட்டியதற்கு மன்னிப்பாவது கேட்டாளா? அதுவும் இல்லை.ஏதோ ஜடப் பொருள் போல அவனை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் போகிறாள்.என்று திட்டினான்.



இருவரின் மனதிலும் அடுத்தவர் தமக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.அது நடக்காததால் இருவருமே ஒருத்தரை ஒருத்தர் திட்டிக்கொண்டனர்.அந்த கோபத்தின் அடிப்படை எதுவென்பதை இருவருமே உணரவில்லை.





அன்று காலையில் தந்தையுடன் கிளம்பி அலுவலகம் செல்லும் போது வினி சற்று சிரத்தையுடன் தன்னை அலங்கரித்துக் கொண்டாள்.கருப்பு நிற பான்டையும் சாம்பல் நிற டாப்பையும் அணிந்தவள் ஒரு கருப்பு நிற நெட் சால்வையையும் கழுத்தில் சுற்றிக் கொண்டாள்.கண்ணுக்கு மையிட்டவள் நெற்றியின் நடுவில் ஒரு குட்டி கருநிறப் பொட்டை ஒட்டி கண்ணாடியில் பார்த்தாள்.மனதில் இருந்த உற்சாகம் அவள் முகத்தைப் பொலிவாக்கியதோ முகம் பளபளத்தது.இதழ்களில் முறுவலுடனேயே தந்தையுடன் கிளம்பினாள்.



அவள் எதிர்பார்த்தது போலவே அலுவலக வாயிலில் நிலவனின் கார் நின்றது.மனதில் உற்சாகம் பெருக தந்தையுடன் உள்ளே சென்றவள் அலுவலக அறையுள் நுழையும் போதே நிலவன் எதிர்ப்பட்டான்.ஆர்வத்துடன் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.வழக்கம் போல அவன் முகம் உணர்ச்சி தொலைத்து இருந்தது.முந்தைய நாளின் எந்த சுவடும் இல்லை அவன் முகத்தில்.அவளைக் கண்டுகொள்ளாமல் பத்மனிடம் தொழில் முறையாக ஏதோ பேசியபடியே நகர்ந்துவிட்டான்.



பூவினிக்கு அவன் செய்கையில் வருத்தம் தோன்றவில்லை.மாறாக கோபம் தான் தோன்றியது.எப்படி நடிக்கிறான் எருமை.இருடா எல்லாத்துக்கும் உனக்கு இருக்கு.என்று மனதில் பொருமியபடியே அவர்கள் பின்னால் நகர்ந்தாள்.



அன்று அந்த தொழில்முறைச் சந்திப்பு முடிந்து கான்பாரன்ஸ் ஹாலை விட்டு வெளியே வருகையில் வரவேற்பில் மித்திரன் காத்திருப்பதைக் கண்டவள் தந்தையிடம் கூறிவிட்டு அவனருகே நெருங்கி போலாமா மித்து? என்று கேட்கும் போதே பின்னால் காலடிச்சத்தம் கேட்டது.அவளுக்கு தெரியும் அந்த அழுத்தமான காலடிகள் நிலவனுடையது தான் என்று சட்டென மூளையில் நேற்றைய நிலவனின் கோபப்பார்வை மின்னல் வெட்ட நிதானமாக மித்திரனின் கரத்தைப் பற்றியவள் அத்தான் என்று அழைத்தாள்.நிலவன் வியப்புடன் திரும்பி பார்க்கவும்.இவர் என்னோட அத்தை பையன்.பெயர் மித்திரன்.சாப்ட்வேர் எஞ்சனியர் ஆ இருக்கார். மித்து இவர் தான் மிஸ்டர் நிலவன் நான் சொன்னேன்ல.பெரிய மாமா பையன் என்றாள் அந்த மித்துவில் சற்று கொஞ்சல் கலந்து அழைத்து.



மித்திரன் எதற்கு இவளுக்கு இந்த வேண்டாத வேலை இப்போது நான் என்ன செய்வது ஹல்லோ சொல்லி கை கொடுப்பதா?? நான் கை கொடுத்தால் அவனும் பதிலுக்கு கொடுப்பானா.அப்படி கொடுக்காவிட்டால் எவ்வளவு அசிங்கம்.நேற்றே அப்படி முறைத்துவிட்டு போனானே என்று மனதில் புலம்பியபடி அவனைப்பார்க்கவும்



நிலவனோ இயல்பாக முறுவலித்தபடி ஹல்லோ மித்திரன்.நானே உங்களை வந்து பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.மன்னித்துவிடுங்கள் நேற்று உங்களுடன் பேச முடியவில்லை என்று சரளமாக பேசி கை குலுக்கினான்.



மித்திரனுக்கோ மயக்கம் வராதகுறை.இருந்தும் சமாளித்துக்கொண்டு ப ..பரவாயில்லை நிலவன்.உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.இப்போது நான் அவசரமாக கிளம்ப வேண்டும் பிறகு சந்திப்போம் என்றான் விடைபெறும் முகமாக



நிலவனும் கண்டிப்பாக என்றபடியே ஒரு புன்னகையுடன் விடைபெற.அதுவரை நிலவனின் முகத்தையே ஒரு தேடலுடன் நோக்கிக் கொண்டிருந்த பூவினிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.அவன் முகத்தில் அவள் தேடிய கோபமோ பொறாமையோ எதுவுமே இல்லை.அவள் மனம் சோர்ந்தது.



அதுவரை இருந்த உற்சாகம் மறைந்து தன்னருகே சோர்ந்த முகத்துடன் வந்தவளைப் பார்த்த மித்திரன் என்னடி ஆச்சு என்றான்.



ஒன்றுமில்லை என்று முணுமுணுத்தபடி அவள் செல்லவும் யோசனையான பார்வையுடன் அவளைத்தொடர்ந்தவன்.ஏதோ தோன்றவும் சட்டென திரும்பி பார்த்தான்.அங்கே உள்ளே செல்லாமல் வரவேற்பின் ஓரத்தில் யாருடனோ பேசிக்கொண்டிருந்த நிலவனின் பார்வை அவர்களை ம்ஹும். அவளையே தொடர்ந்து கொண்டிருந்ததையும் தான் திரும்பி பார்ப்பதைக் கண்டவன் சட்டென பார்வையை திருப்புவதும் தெரிந்தது.



மித்திரனின் விழிகளில் எதையோ கண்டுகொண்ட பாவனையுடன்

குறும்பு புன்னகை தோன்ற உற்சாகமாக விசிலடித்தான்.